அழகான ராட்சசியே!!!-14
அத்தியாயம்-14
அந்த வார விடுமுறை ஜாலியாக
கடந்திருக்க, அதில் ரீசார்ஜ் செய்து கொண்டவர்கள்
அடுத்த வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையை
உற்சாகத்துடன் துவக்கினர்..
மகிழனும் புத்துணர்ச்சியுடன் அலுவலகத்திற்கு
கிளம்பியவன் மனம் உற்சாகமாக இருக்க தனக்கு பிடித்த பாடலை முனுமுனுத்தவாறு காரை
ஓட்டி கொண்டிருந்தான்..
ஒரு சிக்னலில் கார் நின்றிருக்க, எதேச்சையாக திரும்பியவன் பார்வை அங்கு கண்ட காட்சியை கண்டு அதிசயித்து
நின்றது..
சிக்னலில் நின்றிருந்தாள் ஒரு பெண்..
சற்று தொலைவில் கண் தெரியாத ஒருவர் சாலையை
கடக்க தடுமாறி கொண்டிருப்பதை கண்டதும் அவசரமாக தன் ஸ்கூட்டியில் இருந்து
இறங்கியவள் வேகமாக ஓடி சென்று அந்த கண் தெரியாதவர் கை பிடித்து வேகமாக அழைத்து
சென்று சாலையின் மறுபக்கம் விட்டாள்:..
அது ஒரு குறைந்த நேரத்திலான சிக்னலின் நிறுத்தம்... பச்சை, சிவப்பு விளக்குகள் மிக குறைந்த நேரத்தில் மாறி மாறி வந்து கொண்டிருக்க, அந்த கண் தெரியாதவர் சாலையை கடக்க முடியாமல் நீண்ட நேரமாக தடுமாறி
வந்தார்..
நீண்ட நேரத்திற்கு பிறகே அந்த பெண்ணின்
உதவியால் அவரால் சாலையை கடக்க முடிந்ததால்
மனம் மகிழ்ந்து அந்த பெண்ணிற்கு நன்றி சொன்னார்.. அவளும் அதை ஏற்று
கொண்டு சிரித்தவாறு மீண்டும் வேகமாக தன் ஸ்கூட்டி அருகில் ஓடி வர, பச்சை விளக்கு வரவும் சரியாக இருந்தது..
தன் ஸ்கூட்டியை அடைந்தவள் அவசரமாக அதை
ஸ்டார்ட் பண்ணி வேகமாக பறந்து சென்றாள்..
அதை கண்ட மகிழனுக்கு ஆச்சர்யமாக இருந்தது..அங்கு
நிறைய பேர் நின்று கொண்டிருந்தார்கள் தான்..
சிக்னலில் சிவப்பு விளக்கை பார்த்ததும்
“சே..அதுக்குள்ள சிக்னல் வந்திடுச்சே..
இன்னும் எவ்வளவு நேரம் நிக்க வேண்டுமோ? “ என்று
முனுமுனுத்தவாறு அந்த இடைவெளியிலும் தங்கள் அலைபேசியை எடுத்து அதில் வாட்ஸ்அப்பில் ம் பேஸ்புக் லும் ஏதாவது புது அப்டேட்ஸ் வந்திருக்கா என்று
அவசரமாக ஆராய்ந்தனரே தவிர, அங்கு இருக்கும் மற்றவர்களை
யாரும் கண்டு கொள்ளவில்லை...
ஆனால் அந்த பெண் மட்டும் ஓடி சென்று
அவருக்கு உதவியது ஆச்சர்யமாக இருந்தது.. அதை விட ஆச்சர்யம்+ அதிசயம் அந்த பெண் அவன் அறிந்த
அந்த ராட்சசி, சண்டக்காரி சந்தியா என்பதுதான்..
எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு முதல் ஆளாக
வந்து நிற்பவள் இப்படி ஒரு கண் தெரியாதவருக்கு ஓடி சென்று உதவி செய்வதை கண்டு அதிசயமாகத்தான் தெரிந்தது.
அதோடு அன்று அன்பழகி சந்தியாவை பற்றி சொன்னதும்
நினைவு வந்தது..
நம்ம சந்தியா இருக்கிறாளே அவள் ஒரு அன்னை தெரசா மாதிரி.. இந்த
கம்யூனிட்டி செர்விஸ், சோஸியல் செர்விஸ் னு
சொல்வாங்களே அதில் எல்லாம் கொஞ்சம் ஆர்வ கோளாறு அதிகம்..
அதில ஒன்னுதான் அனாதை ஆசிரமத்தில இருக்கிற
ஒரு பொண்ணை அடாப்ட் பண்ணி அவளுக்கான படிப்பு செலவையெலலாம் அவளே பார்த்து
கிட்டு வர்ரா.. வாரா வாரம் அந்த பொண்ணை பார்க்க போய்டுவா
“அப்படி என்றால் இவள் நல்லவளா இல்லை
கெட்டவளா ? “ என்றான் தன்னையும் மறந்து
“ஹ்ம்ம்ம் தெரியலையேடா..... “ என்றது அவன்
மனஸ்..
அதை கேட்டு மகிழன் சிரித்து கொள்ள பின்னால்
இருந்த வாகனங்கள் அவசர கதியில் ஹார்ன் ஐ ஒலிக்க விட்டனர்..
அப்பொழுது தான் நினைவு வந்தது.. பச்சை விளக்கு வந்து சில நொடிகள்
கடந்தும் அவன் சந்தியா பற்றிய ஆராய்ச்சியில் தன் காரை உயிர்பிக்க மறந்திருந்தான்..
அதை கண்டு கடுப்பானவர்கள் சத்தமாக ஒலி எழுப்ப, அவசரமாக தன் காரை ஸ்டார்ட் பண்ணி
வேகமாக நகர்த்தினான்..
பின்னால் இருந்தவர்கள் இவனை கடந்து
செல்லும்பொழுது சைடில் பார்த்து தலையில்
அடித்து கொண்டு இவனை பார்த்து முறைத்தவாறு சென்றனர்...
“போங்கடா டேய்.. இந்த 10 செகண்ட் வீணா போச்சுனா என்னவோ பத்தாயிரம் கோடி லாஸ் ஆன மாதிரி
தலையில அடிச்சிகிறானுங்க.. “ என்று சிரித்தவாறு காரை ஓட்டி சென்றான்..
“சே... எல்லாம் இந்த ராட்சசியால வந்தது.. நேர்லதான்
என்னை மாட்டி விடறானா இப்ப இவளை பற்றி நினைச்சாலே வில்லங்கமாதான் வருது.. சரியான ஏழரைதான்
போல.. “ என்று சிரித்து கொண்டே காரை ஓட்டினான் மகிழன்..
“ஹோப்
யு ஆல் ரிமெம்பர் டார்வின் பரிணாம கொள்கை.. அதில் அவர் என்ன சொல்றார் னா எந்த
உயிரினம் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி தன்னை மாற்றி கொள்கிறதோ அந்த உயிரினம்தான்
நிலைத்து வாழும்...எதால மாற்றத்தை அடாப்ட் பண்ண முடியலையோ அந்த உயிரினம் அழிந்து விடும்..
உதாரணத்துக்கு டைனசர்ஸ்.. எவ்வளவு பெரிய
விலங்கு.. ஆனால் அதால அந்த காலத்தில் வந்த பருவ மாற்றத்தை ஏற்று கொள்ள முடியாததால் நாளடைவில் அழிந்து
விட்டன..
இதனால் நான் என்ன சொல்ல வர்ரேனா சேன்ஞ் இஸ்
கான்ஸ்டன்ட்..நாம அதுக்கு தகுந்த மாதிரி நம்மள மாத்திக்கணும்.... “ என்று தன்
பேச்சை நிறுத்தினார் அந்த டெவ் டீம் ன் டைரக்டர் கோதண்டம்..
அது ஒரு பெரிய கான்பிரண்ஸ் அறை.. அனைவரும் அன்று
காலை அலுவலகம் வந்திருக்க, 11 மணி அளவில் அவசரமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு பண்ணி இருந்தான் மனோகர்..
“என்னடா இது?.. காலங்காத்தாலே
இப்படி அவசர கூட்டத்தை கூட்டியிருக்காங்களே..
என்னவா இருக்கும்? “ என்ற ஆர்வத்துடன் அனைவரும் அந்த அறைக்கு சென்றிருக்க, மனோகரின்
மேனேஜர், அந்த
ப்ராஜெட் ன் டேரக்டர் கோதண்டம் மாற்றத்தை பற்றி லெக்சர் அடித்து கொண்டிருந்தார்...
சந்தியா கேங் பொறுப்புடன் அந்த மீட்டிங் ஐ அட்டென்ட் பண்ணி
கொண்டிருக்க, சில நிமிடங்கள் பொறுமையாக என்ன
சொல்கிறார் என்று கவனித்து வந்த அன்பு, பின் சந்தியாவிடம்
திரும்பி,
“ஏன்டி. சந்தி... நாம ஐ.டி லதான
இருக்கோம்..இந்த கோது எதுக்கு இப்படி ஜுவாலஜி கிளாஸ் எடுத்து கிட்டிருக்கார்.. “
என்று சந்தியாவின் காதை கடித்தாள் அன்பு
“ஹா ஹா ஹா அது ஜுவாலஜி இல்லடி.. பாட்டணி..
டார்வின் பரிணாம கொள்கை பாட்டணியில் தான் வரும்.. “ என்று நக்கலாக சிரித்தாள் சந்தியா..
“ஹீ ஹீ ஹீ எதுல வந்தா என்ன டீ? நமக்கு மேட்டர்தான் முக்கியம்.. என்ன சொல்ல வர்ரார் அந்த கோது.. எனக்கு ஒன்னும் புரியலை.. நீதான்
சொல்லேன்.. “ என்றாள் அன்பழகி சலித்து கொண்டே
“ஹீ ஹீ ஹீ.. உனக்கு புரியற மாதிரி
சொல்லணும்னா Zee தமிழ் ல கொஞ்ச நாள் முன்னாடி வருமே
ஒரு விளம்பரம்.. மாற்றம் ஒன்றே மாறாதது னு ஜோ கூட சிரிச்சுகிட்டே சொல்வாங்களே.. “ என்று
சொல்ல
“ஆங்.. ஆமா டி.. நான் கூட
பார்த்திருக்கேன்.. அப்ப நம்ம கம்பெனிய மாத்திட்டு டீவி. சேனலா மாத்த போறாங்களா? ஐயோ.. அப்ப நம்ம டெஸ்ட்டிங் டீம் என்னாவது? “
என்றாள் அன்பு கலக்கத்துடன்..
“ஹே.. நிறுத்து டீ.. உடனே உன் ஒப்பாரிய
ஸ்டார்ட் பண்ணிடாத.. இது டீவி சேனலா மாத்தற மாற்றம் இல்லை.. நம்ம ஆர்க் ல ஏதோ சேன்ஞ்
வருதாம்.. அதுக்குத்தான் முன்னாடியே இவ்வளவு பில்டப் கொடுக்கிறார் நம்ம கோது...”
“ஓ.. அப்படி என்ன சேன்ஞஸ் வருதாம்? “
“ஹ்ம்ம் அத கேட்க முதல்ல விடுடி... உனக்கு
விளக்கம் சொல்றதில அவர் லெக்சர் ஐ கேட்க முடியலை
.. “ என்று முறைத்த சந்தியா மீண்டும் கோதண்டத்தின் சொற்பொழிவை
கவனிக்க ஆரம்பித்தாள்..
அதில் அவர்கள் ஆர்க் ல் மாற்றம்
வந்திருப்பதாகவும் டெவ் டீம் மற்றும் டெஸ்ட் டீம் இனி ஒரே துறையில் வரப் போவதாகவும்
இருவருக்குமே ஒரே மேனேஜர் என்றும் விளக்கி கொண்டிருந்தார்..
அதை கேட்ட அன்பு
“அதான பார்த்தேன்... நமக்கு புது மேனேஜர்
வந்து ஆறு மாசம் ஆச்சே,… எங்கடா இன்னும் மாற்ற காணோமேனு.
கரெக்ட் ஆ காதுல விழுந்த மாதிரி இன்னைக்கு மாத்திட்டானுங்க.. “ என்று முகத்தை நொடித்தாள்
அன்பழகி
“ஹீ ஹீ ஹீ அவங்க சேஞ்சஸ் கொண்டு வந்தால்
உனக்கென்ன டி? நாம் எப்பவும் செய்யற வேலைய செஞ்சுதான் ஆகணும்.. “
“ஹ்ம்ம் அதுக்கில்ல டீ ... இப்பதான் வினித் கிட்ட
கொஞ்சம் ரெபோ ஆச்சு.. அவரும் நம்ம டீம் ல இருக்கிற ஒவ்வொருத்தரையும் நல்லா புரிஞ்சுகிட்டார்..
இப்ப அப்ரெய்சல் டைம்.. இந்த நேரத்துல மேனேஜரை
மாற்றினால் புதுசா வரப் போகும் மேனேஜருக்கு
நம்மல பற்றி தெரிந்து இருந்தால் தான் நமக்கு திறமைக்கு தகுந்த மாதிரி அவர் ஹைக் கொடுப்பார்..
இப்ப போய் திடீர்னு புது மேனேஜரை போட்டா
அவருக்கு எப்படி நம்மள பற்றி தெரியுமாம்? என்னதான் வினித் நம்மலை பற்றி சொன்னாலும் புது மேனேஜர்
க்கு நம்மல பற்றி கொஞ்சமாவது தெரிந்தால் தான் மனசுல அதிக ஹைக் கொடுக்கிற எண்ணம்
வரும்..“
“ஹ்ம்ம் நீ சொல்றதும் கரெக்ட் தான் டி.. இதை
கேட்டால் அந்த கோது மறுபடியும் டார்வின் பரிணாம கொள்கையை முதல்ல இருந்து ஆரம்பிப்பார்..
நாமெல்லாம் மாற்றத்துக்கு தகுந்த மாதிரி
மாத்திக்கணும்னு மறைமுகமா முன்னாடியே சொன்னார் இல்ல.. சோ.. திரும்பவும் இத கேட்டு அவர்கிட
இந்த மொக்க லெக்சரை கேட்க முடியாது..
உன் தலைவிதி எப்படியோ அப்படியே ஆகட்டும்...
“ என்று பெறுமூச்சு விட்டாள் சந்தியா..
அவர்களுடன் இணைந்து அமர்ந்து இருந்த அபர்ணா,
“ஹே சந்தி.. அப்படீனா இனி நீங்களும் நாங்களும் ஒரே குடும்பம் டீ..நாமெல்லாம் சிப்ளிங்ஸ் மாதிரி
டீ.. எங்க தல உனக்கு அண்ணா மாதிரி.. “ என்று சிரித்தாள் அபர்ணா..
அதை கேட்டு சந்தியா முறைக்க,
“ஓ.. அண்ணா வேண்டாமா? அப்படீனா அவர் உனக்கு அத்தை பையனா வச்சுக்க.. டெவ் டீம் அன்ட் டெஸ்ட்
டீம் எல்லாம் ஒரே குடும்பம் ஆய்ட்டம் டீ.. இனிமேல் நீங்க எங்க தல சொல்றதைத்தான்
கேட்கணும்.. என் மேனேஜர் வேற னு வாய் சவடால் விட முடியாது.. “ என நக்கலடித்து
சிரித்தா அபர்ணா..
அதை கேட்டு கடுப்பான சந்தியா
“ஹே போதும் அடங்கு டீ ஆப்பு...ரொம்ப ஓவரா
ஆடாத.. “ என்று முறைத்தாள்..
பின் மேலும் சில மாற்றங்களை விளக்கி கூறிய
கோதண்டம்
“எனி குவஸ்டின்ஸ் ? “ என்று பார்க்க, சந்தியா ஏதோ கேட்க வர, மற்ற இரு பெண்களும் அவள்
வாயை பொத்தி கொண்டனர் அவள் ஏடாகூடமா ஏதாவது கேட்டு விடக்கூடாதே என்ற அக்கறையில்...
அடுத்த அரை மணி நேரத்தில் அந்த பேச்சு
முடியவும் கூட்டம் கலைந்து சென்றது..
மனோகர் மகிழன் மற்றும் வினித் ஐ அழைத்து இரண்டு
டீம் ஐயும் ஒன்றாக இணைப்பது பற்றியும் அந்த டீமில் கொண்டு வரப் போகும் சில மாற்றங்களை பற்றி டிஸ்கஸ் பண்ணினான் மனோகர்.
மகிழனுமே புது ப்ராஜெக்ட் ஐ எப்படி இயக்குவது, மற்றும் தன் ஸ்ட்ராடஜியை முன்பே மாற்ற திட்டமிட்டிருந்தவன் இப்பொழுதும்
டெஸ்ட் டீம் ஒரே துறையில் வந்து விட்டதால்
அவன் நினைத்திருந்த மாற்றங்களை மனோகரிடம் விளக்கினான்.. மனோகருக்கும் அது பிடித்து
விட அதையே பின்பற்ற சொன்னான்..
இரண்டு டீம் ஐயும் ஒன்றாக இணைப்பதற்கான
வேலைகளை மனோகர் அன்றே ஆரம்பித்து விட்டான்.
மகிழனுமே அந்த டீமில் இருந்த ஒவ்வொருவரையும் தனித்தனியாக சந்தித்து அவன் கொண்டு வர
இருக்கும் மாற்றத்தை சொல்லி அவர்களுடைய கருத்துக்களை கேட்டான்..
டெஸ்ட் டீமிலும் அவன் ஒவ்வொருவராக சந்தித்து
பேசி அவர்கள் கருத்துக்களை கேட்டு குறித்து கொண்டான்..
ஆனால் சந்தியாவை மட்டும் அவன் சந்திக்க
வில்லை.. அன்பழகியிடம் கூட பேசி
இருந்தான்..
அதை கண்ட சந்தியா உள்ளுக்குள் அவனை திட்டி
கொண்டே
“இந்த ஹீரோ என்னை கூப்பிடலைனா உடனே நான் ஒன்னும் அவன் மீட்டிங்கிற்காக ஏங்கி கொண்டிருக்க
வில்லை.. என்கிட்ட ஐடியா கேட்கலைனா அவனுக்குத் தான் நஷ்டம்.. எனக்கென்ன வந்தது ? “ என்று தலையை சிலுப்பி கொண்டவள்
வழியில் மகிழனை சந்திக்கும் பொழுதெல்லாம் அவனை முறைத்து கொண்டே சென்றாள்...
அன்று மதிய இடைவேளைக்கு பிறகு அனைவரும் மும்முரமாக வேலை பார்த்து கொண்டிருக்க, திடீரென்று அந்த தளத்தில் குத்து பாட்டு ஒலிக்க, அனைவரும்
தங்கள் லேப்டாப் ல் இருந்து தலையை தூக்கி
பாடல் வந்த திசை பக்கம் பார்த்தனர்..
அங்கு ஒரு குழு அந்த பாடலுக்கு நடனம் ஆட தயாராகி
கொண்டிருந்தனர்...
பாடல் இன்னும் வேகமாக ஒலிக்க, அந்த குழுவில் இருந்த ஆண்கள்
மற்றும் பெண்கள் இணைந்து அந்த பாடலுக்கு டான்ஸ் ஆட,
அனைவரும் எழுந்து நின்று அதை பார்த்து ரசித்தனர்..
அதை கண்ட மயில்வாகணன்
“என்னக்கா
இது? இப்படி திடீர்னு வந்து இங்க டான்ஸ் ஆடறாங்க
“என்றான் சந்தியா அருகில் அமர்ந்து இருந்த மயில் ஆச்சர்யமாக பார்த்து
“ஹீ ஹீ ஹீ இதுக்கு பெயர் ஃப்ளாஸ் மாப் ( Flash
mob) வாகனம்.. இப்படி பப்ளிக் ல இல்லைனா மக்கள் அதிகம் கூடற இடத்துல
திடீர்னு நின்னுகிட்டு இருக்கிறவங்க எல்லாம்
சேர்ந்து டான்ஸ் ஆடுவது... இது ஒரு
அட்ராக்சனுக்காக...இதுக்கு பின்னாடி என்னவோ சொல்ல போறாங்கனு அர்த்தம்..
சரி வா.. நாமலும் போய் ஆடலாம்.. “ என்று அவன் கை பிடித்து இழுத்தாள் சந்தியா
“ஐயயோ.. எனக்கும் டான்ஸ்க்கும் ரொம்ப தூரம்
கா... அதெல்லாம் எனக்கு வராது.. நீங்க போய் ஆடுங்க..” என்று வேகமாக தன் கையை உருவி
கொண்டான் மயில்..
“டேய்.. இன்னும் அந்த அக்காவை விடலையா...
இன்னைக்கு இருக்கு உனக்கு.. “ என்று முறைத்தாள் சந்தியா..
“ஹீ ஹீ ஹீ..சாரி.. அக்... சந்தியா..திடீர்னு
பேசினால் அப்படித்தான் வருது.. நானும்
மாற்ற முயற்சி செய்துகிட்டுதான் இருக்கேன்..சின்ன வயசுல எல்லார்கிட்டயும்
மரியாதையா பேசணும்னு எங்க அப்பத்தா அடிச்சு அடிச்சு சொல்லி கொடுத்த பழக்கங்கிறதால்
அவ்வளவு சீக்கிரம் விட முடியலை.. “ என்று அசடு வழிந்தான்.. .
அவர்கள் பேசி கொண்டிருக்கும் பொழுதே அடுத்து
ரஜினியின் தர்பார் படத்தில் இருந்து சும்மா கிழி பாடல் ஒலிக்க, அதற்கு மேல் தன்னை கட்டு படுத்த முடியாமல் அடுத்த நொடி அந்த குழுவில்
இணைந்திருந்தாள் சந்தியா...
நான்தாண்டா இனிமேலு
வந்து நின்னா தர்பாரு
உன்னோட கேங்கு
நான்தாண்டா லீடு...
என்ற பாடல் சத்தமாக ஒலிக்க, அந்த பாடலுக்கு தகுந்த மாத்ரி சந்தியா ஸ்டைலாக குத்து பாட்டு பாடி டான்ஸ்
ஆட , அந்த தளமே அதிர்ந்தது..
அவள் ஆட்டத்தை கண்டு மற்றவர்கள் வழி விட்டு
ஓரமாக நின்று கொள்ள, கடைசியில் சந்தியா மட்டும்
யாரையும் கண்டு கொள்ளாமல் ரசித்து ஆடினாள்..
பாடலின் முடிவில் சும்மா கிழி கிழி
.. என நாக்கை மடித்து அவள் ஆடி முடிக்கவும் அனைவரும் விசில் அடித்து கை தட்டி ஆரவாரத்துடன்
ஆர்பரிக்க, சந்தியாவும் வெட்க பட்டு கொண்டே ஓடி
வந்து தன் கேங் உடன் நின்று கொண்டாள்..
அந்த குழுவின் நடனத்தை கண்டு கொண்டிருந்த
மகிழனுக்கும் சந்தியாவின் டான்ஸ் ஐ கண்டு ஆச்சர்யமாக இருந்தது..
“என்னடா இந்த வாயாடி சண்டைதான் நல்லா போடுவானு பார்த்தால்
டான்ஸ் ம் கூட நல்லா தான் ஆடறா..மல்ட்டி டேலன்டட் போல.. “ என்று மனதுக்குள் மெச்சி கொண்டான் அவனையும் மறந்து .
ஆட்டம் முடிந்திருக்க, அடுத்த செய்தியாக அந்த வார இறுதியான வெள்ளிகிழமை அன்று வருகிற புத்தாண்டு
மற்றும் பொங்கல் விழாக்களை முன்னிட்டு
கல்ச்சுரல் போட்டிகளும், மற்றும் கொண்டாட்டங்களும் இருப்பதால் அனைவரும் அனைத்து போட்டிகளிலும்
பங்கெடுத்து கொள்ள வேண்டும்
மற்றும் வெள்ளிகிழமை அனைவரும் அவர்களுடைய
பாரம்பரிய உடையில் ( ethnic wear) வர வேண்டும் என்றும் அறிவித்தனர்..
ஐ.டி இல் பல நிறுவனங்களில் இந்த மாதிரி கொண்டாட்டங்களும் அப்பப்ப இருக்கும்..
. சில முக்கியமான விழாக்களை பெரிய அளவில் ம் கொண்டாடுவர்.. ஒரு ரிலாக்சேசனுக்காக..
அதனால் இந்த மாதிரி கொண்டாட்டங்களை அனைவருமே
ஆவலுடன் எதிர்பார்ப்பர்..டெவ் மற்றும் டெஸ்ட் டீம் ஒன்றாக இணைந்த பிறகு வரும்
முதல் பங்சன் இது என்பதால் அந்த நாளை அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்தனர்..
நாட்கள் நகர, அந்த வாரம் அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்த வெள்ளிகிழமையும் வந்தது..
அனைவருமே அன்று பாரம்பரிய உடையில்
வரவேண்டும் என்றதால் மகிழன் டீம் ல் இருந்த தமிழ்நாட்டை சேர்ந்த ஆண்கள் அனைவரும்
பட்டு வேட்டியும் பட்டு சட்டையும் அணிந்து வரவேண்டும் என சொல்லி இருந்தனர்..
காலையில் அலுவலகம் கிளம்ப பட்டு வேட்டி
மற்றும் சந்தன கலர் சில்க் சட்டையில் வேட்டியை மடித்து ஒரு கையில் பிடித்து கொண்டே மாடியில் இருந்து
துள்ளலுடன் இறங்கி வந்தவனை கண்டதும்
சிவகாமி அதிசயித்து நின்றார்..
மதுவுமே அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள்...
அவனும் சிரித்து கொண்டே தன் அன்னையின்
அருகில் வர, அவனை கண்ட சிவகாமி
“டேய்... சின்னவா.. அப்படியே கல்யாண மாப்பிள்ளை
கணக்கா இருக்கடா... என்னடா விசேசம்.. என் மருமகளை யாருக்கும் தெரியாம ரகசிய
கல்யாணம் எதுவும் பண்ணிக்க போறியா?
டேய் அப்படி எதுவும் பண்றதா இருந்தா
சொல்லிடுடா.. நானே சாட்சி கையெழுத்து போட வந்திடறேன்.. “ என்று சிரித்தார் சிவகாமி
“ஹீ ஹீ ஹீ.. நான் ஏன் மா அந்த மாதிரி
திருட்டுதனமா கல்யாணம் பண்ண போறேன்? ஊரையெல்லாம்
கூட்டி பெருசா தான் கல்யாணம் பண்ணுவேன்.. இது ஆபிஸ் ல இப்படி வர சொல்லி இருக்காங்க
மா..
அதான் இந்த கெட்டப். எப்படி
இருக்கு? “ என்றான் பார்வையை உயர்த்தி..
“உனக்கென்னடா ராஜா மாதிரி இருக்க.. இப்பயே இழுத்துட்டு போய் மணமேடையில் உட்கார
வச்சுடலாம்னு இருக்கு..
டேய்..மகிழா.. உனக்கு கல்யாண கலை
வந்திடுச்சு டா ... எனக்கென்னவோ உனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகிடும் னு இருக்கு..
அந்த வேலன் பொண்ணை பார்த்து வச்சுட்டானு நினைக்கிறேன்..வேணும்னா பார்.. நீ
இன்னைக்கே என் சின்ன மருமகளை பார்க்க போற..
“ என்று ஆருடம் சொன்னார் சிவகாமி சிரித்து கொண்டே.
“ஹா ஹா ஹா .. உங்க வாக்கு பலிக்கட்டும்
மா... அப்படியே கண்டு புடிச்சிட்டனா அதுக்கு அடுத்து முகூர்த்தத்துலயே தாலி கட்டிட
மாட்டேனாக்கும்.. “ என்று சிரித்து கொண்டே
அலுவலகம் கிளம்பி சென்றான்...
சிவகாமியும்
“முருகா... இந்த பெரியவனுக்கு அமைஞ்ச மாதிரியே
சின்னவனுக்கும் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கொடுத்துடு..
எனக்கு என்னவோ அந்த சந்தியா பொண்ணே புடிச்சிருக்கு.. அவளையே எப்படியாவது என் சின்ன
மருமகளாக்கிடேன்.. “ என்று அவசரமாக வேண்டி
கொண்டார்...
ஒரு முக்கியமான
மீட்டிங் ல் தன் டீம் ற்கு புது ப்ராஜெக்ட் ன் டிசைனை விளக்கி கொண்டிருந்தான்
மகிழன்...
அப்பொழுது ஜல் ஜல் என்ற மெல்லிய கொலுசொலி
அவன் காதை அடைந்தது.. அந்த ஓசையை கேட்டதும் அதை எங்கயோ முன்பே கேட்டதை போல இருந்தது..அந்த ஒலி அவன் உள்ளே ஏதோ
ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது..
தனக்கு மிகவும் பழக்கபட்ட ஓசை போல
இருந்தது.. ஆனால் எங்கே எப்படி என்று புரியவில்லை..
அந்த அறையில் இருந்த மற்றவர்கள் அவனையே பார்த்து கொண்டிருப்பது தெரியவும்
அவசரமாக சுதாரித்து கொண்டவன் தான் விளக்கி கொண்டிருந்ததை தொடர, சில நொடிகளில் மீண்டும் அதே
கொலுசொலி...
அந்த ஒலி மீண்டும் அவன் உள்ளே மாற்றத்தை கொண்டு வர அதற்கு மேல் அவனால் அந்த மீட்டிங் ல்
கான்சென்ட்ரேட் பண்ண முடியவில்லை..
அந்த கொலுசொலிக்கு சொந்தக்காரியை இப்பவே
பார்க்கவேண்டும் போல துடித்தது அவன் உள்ளே...
ஆனால் மற்றவர்கள் அங்கிருக்க எப்படி சென்று பார்ப்பது? என்று யோசித்து கொண்டிருக்க, மீண்டும் அந்த ஒலி அந்த அறையின் வெகு அருகில் கேட்க, அந்த சூழ்நிலை மறந்து தன்னை மறந்து
“எக்ஸ்க்யூஸ் மீ கைஸ்.. “ என்றவன் வேகமாக எழுந்து
அந்த அறைக்கு வெளியில் வந்து சுற்றிலும் தேடி பார்க்க, அந்த ஒலி நின்று போயிருந்தது..
அவசரமாக கண்களால் ஆராய்ந்து பார்க்க, யாரும் அங்கு இல்லை.. எல்லாருமே அவங்கவங்க வேலையில் பிசியாக இருந்தனர் ..
யாரும் நடந்து கொண்டிருக்கவில்லை...
மீண்டும் அறைக்கு திரும்பி வந்தவன் தன்
மீட்டிங் ஐ தொடர்ந்தாலும் அந்த ஓசை
மட்டும் அவன் மனதில் ஒலித்து கொண்டே இருந்தது..
மதிய உணவு இடைவேளை
வந்திருக்க, மகிழன் அவன் டீம் உடன் கேப்டீரியாவிற்கு
சென்றான்..
மதியம் கொண்டாட்டம் என்பதால் அந்த அலுவலகமே கல்யாண வீடு போல காட்சி அளித்தது..
எல்லாருமே அவரவர் மாநிலத்தின் பாரம்பரிய
உடையில் வந்திருந்தனர்.. அனைவர் முகத்திலும் அப்படி ஒரு மகிழ்ச்சி..
என்னதான் மாடர்ன் உலகில் எப்பொழுதும் ஜீன்ஸ்
ம் டீசர்ட்ம் டாப்ஸ் ம் அணிந்து வந்தாலும் இந்த மாதிரி பாரம்பரிய உடையை அணிவதில் மனதுக்குத்தான் எத்தனை
மகிழ்ச்சி...
அந்த மகிழ்ச்சியைத்தான் அனைவரும்
கொண்டாடினர்..ஆண்கள் ஓர கண்ணால் பெண்களை சைட் அடித்து கொண்டிருக்க, பெண்களோ ஓர கண்ணால் பார்க்காமல் நேரடியாகவே
ஆண்களை பார்த்து ஜொல்லு விட்டு கொண்டிருந்தனர்...
அதுவும் மகிழனை கண்டதும் அந்த கேப்டீரியாவே
திரும்பி அவன் பக்கம் பார்த்தது..
நடக்க ஏதுவாக வேட்டியை மடித்து கட்டி கொண்டு
இருந்தவன் அதை பிரித்து விடாமல் அப்படியே அங்கு வந்திருக்க, அவனின் வசீகர தோற்றத்திலும் ஆறடி உயரத்திலும் ஆளை கவிழ்க்கும் கம்பீர தோற்றத்திலும்
தலை சுற்றி போன பெண்கள் அவனையே இமைக்க மறந்து பார்த்தனர்..
அதை கண்ட அஜய் ம் ப்ரவீன் ம்
“தல.. இதுக்குத்தான் நாங்க உங்க கூட வர மாட்டோம்னு
சொன்னோம்.. பாருங்க.. எல்லாரும் உங்களையே சைட் அடிக்கறாளுங்க.. ஒரு ஆறுதலுக்காக
கூட எங்க பக்கம் யாரும் திரும்ப மாட்டேங்கிறாளுங்க..
எப்படி தல? இப்படி பாடி பில்டர் மாதிரி இருக்கீங்க...
இனிமேல் எங்க போனாலும் முன்னாடியே சொல்லிடுங்க.. அந்த பக்கமே நாங்க வரலை.. “ என்று புலம்பி கொண்டிருக்க, அதை கேட்ட மகிழன் லேசாக வெட்க
பட்டான்..
அதை கண்டதும் அருகில் இருந்த பெண்கள் இன்னும் ஓ வென்று கத்த, அவனுக்கே கூச்சமாகி
போனது
“சே.. பிசாசுங்க.. எப்படி இப்படி பப்ளிக் ஆ
சைட் அடிக்கிதுங்க.. அடக்கம் ஒடுக்கமா இருக்காளுங்களானு பார். நாமதான் வெட்கி தலை குனியனும்
போல இருக்கு.. “ என்று உள்ளுக்குள் திட்டி
கொண்டே தன் உணவை வாங்கி கொண்டு தன் டீம் இருந்த டேபிலில் வந்து அமர்ந்து கொண்டான் மகிழன்...
வாய் அந்த டேபிலில் இருந்தவர்களுடன் பேசி கொண்டிருந்தாலும் அவன்
காது மட்டும் அந்த கொலுசொலிக்காக தவம்
இருந்தது...
ஆனால் அந்த கொலுசொலி மீண்டும் கேட்கவே இல்லை..
தன் உணவை முடித்தவன் வழக்கம் போல மாடி படி
வழியாக செல்ல கதவை திறந்து கொண்டு வர, அதே நேரம்
மேல் இரண்டாவது தளத்தில் இருந்து அந்த கொலுசின் ஓசை மீண்டும் அவன் காதை
தீண்டியது..
அவசரமாக விழித்து கொண்டவன் மேல பார்க்க, அந்த ஒலி அதுக்கு அடுத்த தளத்தில் இருந்து வந்தது...வேகமாக தாவி படிகளில்
ஏறியவன் இரண்டாவது தளத்தின் கீழ் படியை அடைய, அந்த தளத்தில்
இருந்த கதவை திறந்து கொண்டு அந்த பெண் வெளியேறி இருந்தாள்..
அவள் முகம் முதலில் அந்த தளத்திற்கு உள்ளே சென்றிருக்க பின்னால் அவள் எடுத்து வைத்த
பாதம் மட்டும் அவன் கண்ணுக்கு தெரிந்தது..
அந்த வெண்ணிற பாதமும் அதை சுற்றி மருதாணி வைத்திருந்த
அடையாளமாக செக்க சிவந்திருந்த பாதத்தில் அந்த மெல்லிய கொலுசு தழுவி கொண்டிருக்க, அதில் இருந்த ஓசைதான் காலையில் இருந்து அவனை இம்சித்து வருகிறது என புரிந்தது..
அந்த பட்டு பாதத்தை மட்டும் கண்டவன் உள்ளே
பெரும் மாற்றம்.. அந்த பாதம் அவனுக்கு முன்பே பழகியதை போல இருந்தது..
அந்த பட்டு
பாதத்தில் அவன் முரட்டு இதழ்களை பதிக்க அதில் அந்த முகம் தெரியாத பெண்ணின்
முகம் நாணத்தில் சிவக்க, அவள் முகத்தை கையில் ஏந்தி முத்தமிட துடித்தது அவன் உள்ளே..
அவனுள் ஒவ்வொரு அணுவிலும் ஏதோ மாற்றம் நிகழ, அப்படியே
சுவற்றில் சாய்ந்து கொண்டவன் தன்னுள்ளே நிகழும் மாற்றத்தை அணு அணுவாக ரசித்தான்...
“யாரவள்? இப்படி
சின்ன கொலுசில் என் மனதை இப்படி கொள்ளை
அடித்து விட்டாளே..!! .இவள்தான் நான் தேடும் என்னவளா? இவள்
பாதம் கண்டே என்னுள் ஏதோ மாற்றம் நடக்கிறதே...
அவள் முகம் பார்க்க தவிக்கிறதே...யாரவள் ? “ என்றவன் சில நொடிகள் கண் மூடி ரசித்திருந்தவன் பின் ஏதோ நினைவு
வந்தவனாக அவளை பார்க்கும் ஆர்வத்தில் வேகமாக மாடி ஏறி அந்த தளத்திற்கு உள்ளே வர, அங்கு யாரும் நின்றபடி தென்படவில்லை.. யாரும் நடந்தற்கான அறிகுறியும் இல்லை..
எல்லாருமே அமர்ந்து அவர்கள் வேலையை செய்து
கொண்டிருந்தனர்..சற்று தொலைவில் சில பெண்கள் நின்று ஏதோ அரட்டை அடித்து
கொண்டிருந்தனர்.. எல்லா பெண்களுமே அன்று சேலை அணிந்தும் அதற்கான அணிகலன்களை அள்ளி பூட்டி
கொண்டும் வந்திருந்தனர்..
அவசரமாக சில பெண்களின் கால்களை பார்க்க, எல்லாருமே கொலுசு அணிந்திருந்தனர்..
“சே.. இதில் எந்த பெண் என்று எப்படி கண்டு பிடிப்பது? அதுவும் இப்படி ஒவ்வொருத்தியையும் உற்று பார்த்தால் நல்லா தர்ம அடிதான்
கிடைக்கும்...
முருகா, எப்படியாவது
அவளை எண் கண்ணில் காட்டிவிடு .. “ என்று அவசரமாக வேண்டி கொண்டான் மகிழன்..
அதற்கு பிறகு அவன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை..
காது அந்த கொலுசொலிககாக காத்து கொண்டிருந்தது.. அதற்கு பிறகு சில மீட்டிங்
லும் கவனம் செலுத்த முடியாமல் போய் விட
முயன்று தன்னை கட்டு படுத்தி கொண்டிருந்தான்..
Comments
Post a Comment