அழகான ராட்சசியே!!!-16

 


அத்தியாயம்-16

சே..எவ்வளவு தைர்யம் அவனுக்கு?..எல்லாரும் அவனை நல்லவன் வல்லவன் னு புகழ்ந்ததை வச்சு நானும் அவனை போய்  நல்லவன் னு நினைச்சிருந்தால் இப்படி அவன் புத்தியை காட்டிட்டானே..

எவ்வளவு தைர்யம்? .. இந்த சந்தியா இடுப்புலயே கை வச்சிட்டானே... அவனை எல்லாம் ஒரு அறையுடன் நிறுத்தி இருக்க கூடாது.. துபாய் ல செய்யற மாதிரி நடு ரோட் ல நிக்க வச்சு சுடணும்... ராஸ்கல்.. “ என்று பல்லை கடித்தாள் சந்தியா... 

மகிழன் மற்றும் சந்தியா பங்கு பெற்ற ஃபேஷன் ஷோ நிறைவு பெற்றதும் அந்த மேடையை ஒட்டி இருந்த அறைக்குள் சென்ற சந்தியா அவசரமாக வெளி வர, அதே நேரம் மகிழன் உள்ளே வர, அவள் கால் தடுக்கி கீழ விழாமல் இருக்க மகிழன் அவள் இடையை பிடிக்க, அதில் வெகுண்டவள் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்...

அறைந்தவள் கோபம் கொப்புளிக்க, வேகமாக அங்கிருந்து வெளியேறியவள் அருகில் இருந்த ரெஸ்ட் ரூமிற்குள் புகுந்தவள் அங்கு இருந்த கண்ணாடியில் தன்னை பார்த்து கொண்டு மகிழனை திட்டி கொண்டிருந்தாள்..

அவள் கோபம் , ஆத்திரம் எல்லாம் சேர்த்து இல்லாத வார்த்தையெல்லாம் தேடி பிடித்து அவனை திட்டினாள் அவள்  ஆத்திரம் தீர...ஆனாலும் அவள் மனம் அடங்காமல் உள்ளே கொதித்து கொண்டிருந்தது...

மகிழன் அவளை அணைத்த பொழுது அவளுமே சில நொடிகள் மயங்கி அவனுடன் ஒன்டி கொண்டதை சந்தியா உணரவில்லை..அதை உணர்ந்திருந்தால் பின்னால் வரும் பல மன கஷ்டத்துக்கும் பெறும் வேதனையும் அனுபவிக்காமல் சுபமாக போயிருக்கும் அவள் வாழ்க்கை..

ஆனால் அப்பொழுது இருந்த ஆத்திரத்தில் கோபத்தில் அதையெல்லாம் உணரும் நிலையில் இல்லை அவள்.. அவள் மனம் எல்லாம் வெறுப்பை சுமந்து மகிழனை தன் ஆத்திரம் தீர திட்டி கொண்டிருந்தாள் சந்தியா..

ங்கு மகிழனோ படு உற்சாகமாக இருந்தான்..

அந்த வாயாடி, ராட்சசிதான் தன்னவள் என்று கண்டு கொண்டதும் கொஞ்சமும் தயங்காமல் யோசிக்காமல்  அடுத்த நொடியே அவன் இதயத்துக்குள் நுழைந்து அவன் இதயம் முழுவதையும் ஆக்ரமித்து, அசைக்க முடியாதவாறு சிம்மாசனம் இட்டு அமர்ந்து விட்டாள் சந்தியா...

அதனால் தான் அவள் ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்த பொழுதும் வழக்கம் போல வரும் கோபம் அவனுக்கு வர வில்லை.. மாறாக உதட்டில் பெரிதாக புன்னகை பூத்தது...

"கண்டு கொண்டேன்.. கண்டு கொண்டேன்..

என்னவளை கண்டு கொண்டேன்.. "

 

என்று உல்லாசமாக பாடியவாறு தன் கன்னத்தை மெல்ல வருடியவாறு அந்த மேடையின் முன்பகுதிக்கு சென்றான்..

அங்கு சென்றதும் கண்கள் தானாக சந்தியாவை தேடியது.. அவள் இல்லை அந்த கூட்டத்தில்.. பின் தன் டீம் அமர்ந்திருந்த பகுதிக்கு செல்ல, அனைவரும் அவனுக்கு கை குலுக்கி

“சூப்பர் தல.. கலக்கிட்டீங்க... “ என்று பாராட்டினர்.. அவனும் லேசாக வெட்க பட்டு சிரித்தவாறு  அங்கு சென்று அமர்ந்தான்..

சிறிது நேரத்தில் அனைத்து நிகழ்ச்சிகளும் முடிந்திருக்க, ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கும் நிகழ்ச்சி ஆரம்பமானது..

முதலாவதாக சிறந்த நிகழ்ச்சிக்கான பர்ஸ்ட் ப்ரைஸ் ஃபேஷன் ஷோ க்கு வழங்க, அந்த அணியினர் ஓ வென்று கத்தி ஆர்பரித்தவாறு மேடைக்கு ஓடினர்.. கூடவே மகிழனையும் இழுத்து கொண்டு சென்றனர்..

ஆனால் அவன் கண்களோ மீண்டும்  சந்தியாவை தேடியது... அவள் இன்னும் வந்திருக்கவில்லை..

“எங்க போய்ட்டா..?  ஒரு வேளை நான் அவளை கட்டி பிடித்ததுக்கு ரொம்ப கோபமா இருக்காளா? “ என்று எண்ணியவாறு மேடைக்கு செல்ல அங்கு எல்லாருமே சந்தியாவை தேடினர்... சிலர் அவள் எண்ணுக்கு அழைத்தனர்.. ஆனால் அவள் யாருடைய அழைப்பையும்  ஏற்கவில்லை..

அதற்கு மேல காத்திருக்க முடியாததால் அந்த அணியினர் ஒன்றாக சேர்ந்து பரிசை வாங்கி கொண்டு மீண்டும் ஒரு முறை ஆர்ப்பரித்தவாறு தங்கள் அணியுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டனர்...

பின் அந்த ஷோவில் பெஸ்ட் பேர் க்கான பரிசை மகிழன் மற்றும் சந்தியாக்கு என அறிவிக்க, பார்வையாளர் பக்கம் இருந்து பலத்த கரகோஷம்..

அனைவரும் தல...  தல...  தல.. என்று கத்தி ஆர்பரிக்க, சந்தியா கேங் சந்தியா... சந்தியா... என கூச்சலிட, மேடையில் நின்றிருந்த மகிழனுக்கோ  கூச்சமாக இருந்தது.. அவனும் பார்வையாளர் பக்கம் பார்த்து  கை அசைக்க, மீண்டும் ஓ வென்று கத்தினர் பெண்கள்..

அனைவருக்குமே தங்கள் கல்லூரி நாட்களை கண் முன்னே கொண்டு வந்தது அந்த  நிமிடம்..

கல்லூரியில் தான் இந்த மாதிரி ஆட்டம் பாட்டம், விசில் சத்தம் என மாணவர்கள் எந்த கவலையும் இன்றி பட்டாம் பூச்சிகளாக சுற்றி திரிவர்..

கல்லூரி முடித்து அடுத்த நிலையான எம்ப்ளாய் என்ற பாத்திரத்துக்கு வந்ததும் அவர்கள் வாழ்வே மாறி விடும்..

கல்லூரியில் எந்த ஒரு கவலையும் இன்றி சிறகடித்து பறந்தவர்களுக்கு உடனேயே அவர்கள் சிறகை வெட்டி கூட்டுக்குள் அடைத்த மாதிரி வேலைக்கு சேர்ந்த உடனேயே காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரைக்கும் வேலை செய்ய வேண்டும் என்று உட்கார்த்தி விட, பின் அதுவே சில நேரம் லேட் நைட் ஆகவும் நீண்டு விட, தங்கள் வசந்த காலத்தை  எல்லாம் தொலைத்து விட்டதாக தோன்றும்...

இந்த மாதிரி விழாக்கள் கொண்டாட்டங்கள் என வரும் பொழுது மட்டும் எல்லாருமே தங்களை மறந்து தங்கள் கல்லூரி நாட்களுக்கு சென்று விடுவர்.. அதனாலயே  இந்த ஆட்டம் பாட்டம் விசில் சத்தம் என தூல் பறக்கும் இந்த கொண்டாட்டத்தின் பொழுது..

அந்த நிறுவனத்தின் மேனேஜ்மென்ட் ம் அதை என்கரேஜ் பண்ணுவர் அவர்களுடைய எம்ப்ளாய்ஸ்க்கு ஒரு மாற்றம் வேண்டி..

இன்று காலையில் இருந்தே கலை கட்டிய அந்த அலுவலகம் இப்பொழுது அந்த விழாவின் நிறைவு பகுதியில் இருக்க, அனைவருமே படு உற்சாகமாக அந்த விழாவை என்ஜாய் பண்ணி கொண்டிருந்தனர்..

அடுத்து பெஸ்ட் பேர் பரிசுக்காக மகிழன் மேடையில் நின்றிருக்க, அந்த அறிவிப்பாளர் சந்தியாவை அழைத்து கொண்டிருந்தார்... மைக் ல்  அவள் பெயர் அழைக்க படுவது ரெஸ்ட் ரூமில் இருந்த சந்தியாவுக்கும் கேட்டது தான்..

ஆனால் ஏனோ  அவளுக்கு அந்த மங்கி மகியின் முகத்தை பார்க்க பிடிக்க வில்லை..அதுவும் அவனுடன் இணைந்து அந்த பரிசை வாங்க சுத்தமாக பிடிக்கவில்லை..

அதனாலயே தன் பெயர் அழைத்ததும் வெளி வர துடித்த தன் கால்களை மிரட்டி அடக்கியவள் அங்கயே நின்று கொண்டாள்..

சிறிது நேரம் காத்திருந்த பிறகும் சந்தியா வராததால் அந்த  பரிசை மகிழனுக்கே கொடுத்து அவனுக்கு கை குலுக்கி வாழ்த்து சொன்னார் அந்த நிறுவனத்தின் எம்.டி..

அவனும் புன்னகைத்து அவருக்கு  நன்றி சொல்லி அந்த பரிசை வாங்கி கொண்டு மேடையை விட்டு இறங்கினான்..

மனம் எல்லாம் சந்தோஷத்தில் மிதந்தது மகிழனுக்கு.. அதுவும் பெஸ்ட் பேர் என அவர்களை தேர்வு செய்திருக்க அவன் உள்ளம் துள்ளி குதித்தது...

ஆனால் சிறு வருத்தம் சந்தியா அங்கு வராதது...

“என்மேல இன்னும் கோபமா இருப்பா போல இருக்கு... இருக்கட்டும்.. எங்க போய்ட போறா.. சீக்கிரம் அவளை வழிக்கு கொண்டு வந்திடலாம்.. “ என்று சிரித்து கொண்டான்..

அவன் அறியவில்லை அவளை மலை இறக்குவது  அவ்வளவு சுலபமான வேலை இல்லை என்று...

டுத்ததாக மற்ற தனிநபர்  போட்டிகளில் வெற்றி  பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.. சந்தியா சில போட்டிகளில் வெற்றி பெற்றிருக்க, மீண்டும் சந்தியாவின் பெயரை அந்த அறிவிப்பாளர் ஏலம் விட, அதற்கு மேல் சந்தியாவால் தன்னை கட்டு படுத்த முடியவில்லை..

“அந்த மங்கிக்காக நான் ஏன் பயந்து ஒளியணும்?. ஆக்சுவலா அவன் தான் தப்பு பண்ணினான்.. அவன் தான் என்னை பார்த்து ஒளியணும்.. நான் ஏன் ஓளியணும்? “ என்று அவள் அறிவு எடுத்துரைக்க, அடுத்த நொடி மேடையை நோக்கி ஓடி சென்றாள்..

அவளை கண்டதும் எல்லாரும் மீண்டும்  ஓ வென்று  கத்தினர்..

அவளும் சிரித்து கொண்டே மேடைக்கு சென்று அவளுக்கு கொடுத்த  பரிசை வாங்கி கொண்டு பார்வையாளர் பக்கம் பார்க்க அங்கு ஓரமாக நின்று கொண்டிருந்த மகிழன் தான் முதலில் பட்டான்..

அவனை கண்டதும் ஒரு எரித்து விடும் பார்வை வீச, அவனோ  அழகாக கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான்..

அதில் இன்னும் கொதித்தவள் தன் பார்வையை மாற்றி கொண்டு வேகமாக மேடையை விட்டு இறங்கினாள்..

 கீழ வரவும் ஓரத்தில் நின்று கொண்டிருந்த மகிழனை தாண்டி தான் அவள் செல்ல வேண்டும்.. அவனை கடக்கும் பொழுது

“கன்கிராட்ஸ் பேபி.. “ என்று அவள் காதில் கிசுகிசுத்தான் அவளுக்கு மட்டும் கேட்குமாறு..

அதை கேட்டு சடக்கென்று திரும்பியவள் அவனை ஒரு உஷ்ண பார்வை பார்க்க, அவனோ முன்பு போலவே கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான்..

அதை கண்டவள் உள்ளுக்குள் படபடக்க, அவசரமாக தன் பார்வையை மாற்றி  கொண்டவள் வேகமாக முன்னே சென்று விட்டாள்..

கொஞ்சம் தள்ளி சென்றதும் அவள் கேங் அன்பு, அபர்ணா, மயில் என அனைவருவும் ஓடி வந்து அவளுக்கு கை குலுக்கி வாழ்த்து சொல்லினர்..

“எங்கடி போன இவ்வளவு நேரம்? இந்த  ஆபிஸே உன்னை காணாமல் உன் பெயரைத்தான் ஏலம் விட்டுகிட்டிருந்தாங்க.. “என்று முறைத்தாள் அன்பு..

“ஹீ ஹீ ஹீ.. நான் வராததால் எல்லாரும் யார் அந்த சந்தியா?  யார் அந்த  சந்தியானு தேடியிருப்பாங்க இல்ல.. இந்த சந்தியா இப்ப பாப்புலர் ஆய்ட்டா இல்லை.. அதுக்குத்தான் கொஞ்ச நேரம் மறைஞ்சு இருந்தேன்..” என்று கண் சிமிட்டினாள்..

“அடிப்பாவி.. பாப்புலர் ஆக இப்படி கூட தில்லு முல்லு பண்ணலாமா? “ என்று வாயை பிளந்தாள் அன்பு.. சந்தியாவும் சிரித்தவாறு கொஞ்ச நேரம் தன் வட்டத்தினருடன கலாய்த்து சிரித்து பேசி கொண்டிருந்தாள்..

அவளின் மலர்ந்த சிரிப்பையே அப்பப்ப பார்த்து ரசித்தான் மகிழன்..

அவன் பார்வை அடிக்கடி தன் பக்கம் வருவதை ஓர கண்ணால் கண்டு கொண்ட சந்தியா குழம்பி போனாள்..

“நல்லாதான இருந்தான் இந்த மங்கி..எப்பவும் என்னை கண்டால் முறைச்சு கிட்டு இருப்பவன் ஏன் இப்படி லுக் விடறான்? இன்னைக்கு என்னாச்சு? எல்லாமே தப்பு தப்பா சொதப்பறானே.. வாட்ஸ் ராங் வித் ஹிம்? “ என்று எண்ணியவள் அதற்கு பிறகு மகிழனை மறந்து விட்டு தன் அரட்டையில் ஐக்கியமானாள்...

ஆனாலும்  அன்று மாலை அலுவலகம் விட்டு தன் ஸ்கூட்டியில் வீடு திரும்பியவளுக்குள் மகிழனை பற்றிய சிந்தனை தான்..

“ஏன் அப்படி நடந்து கொண்டான்? என்னிடம் எப்பவும் முறைத்து கொண்டு இருப்பவன் இன்று ஏன் அப்படி பார்த்து வச்சான்? அதுவும் கண் சிமிட்டி வேற? “ என்று பாதி அவனை திட்டியும் பாதி அவனை பற்றி யோசித்து கொண்டும் தன் வீட்டை அடைந்தாள் சந்தியா....

வீடு திரும்பிய மகிழனுமே மந்திரிச்சு விட்ட கோழியை போல ஒரு மார்க்கமாக சுத்தி கொண்டிருந்தான்..

வழக்கமாக வெள்ளிகிழமை மாலையில் அலுவலகத்தில் இருந்து திரும்பியதும் ரெப்ரெஸ் ஆகி,  தன் குடும்பத்தினருடன் பேட்மிண்டன்  விளையாடுவான்..

ஆனால் இன்று அப்படி அவர்களுடன் இணைந்து விளையாடாமல் நிகிலன் மற்றும் மதுவை விளையாட சொல்லி விட்டு தோட்டத்தில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்...

தன் பேத்தியை தூக்கி கொண்டு அங்கு வந்த சிவகாமியும் தன் இளைய மகன் முகத்தில் தெரிந்த ஏதோ ஒரு வித்தியாசத்தை கண்டு கொண்டார்..

அவன் அருகில் வந்தவர் அங்கு இருந்த மற்றொரு இருக்கையில் அமர, வழக்கம் போல அந்த குட்டி மகிழனிடம் தாவ, அவளை ஆசையோடு அள்ளி கொண்டவன் அவள் பட்டு கன்னத்தில் முத்தமிட்டான் சிரித்தவாறு..

அவனையே சில நொடிகள் உற்று பார்த்த சிவகாமி

“என்ன சின்னவா? ஏதோ யோசனையா இருக்க போல ? என்னாச்சுடா? “ என்றார் அக்கறையுடன்..

அதில் விழித்து கொண்டவன்

“ஆங்.. அதெல்லாம் ஒன்னும் இல்லமா.. சும்மா தான்  உட்கார்ந்து இருக்கேன்.. “ என்று சமாளித்தான்..

“இல்லையே.. நீ இப்படி அமைதியா அதுவும் எதையோ யோசிக்கிற மாதிரி உட்கார்ரவன் இல்லையே.. எங்கயோ இடிக்குதே.. “ என்றார் அவனை ஆராய்ந்தவாறு..

“இடிக்கவும் இல்லை பொடைக்கவும் இல்லை... சும்மா சும்மா அந்த சிவகாமி தேவி மாதிரி எல்லாரையும் சந்தேகத்துடன் பார்க்காதிங்க.. “ என்றான் முறைத்தவாறு...

“அதானா.. நீ யோசிக்கிற அழகை பார்த்தால் இந்த மகிழ்மதி கோட்டைக்கு சின்ன மகாராணியைத் தான் கூட்டிகிட்டு வரப்போறியோனு நினைச்சேன்..  என் சின்ன மருமகள் கிட்ட கவிழ்த்திட்டனு நினைச்சேன்.. ஏன் டா அப்படி எதுவும் ஆகலையா? “ என்றார் ஆர்வமாக...

“நான் உன் சின்ன மருமகளை கண்டுபுடி.... “ கண்டு புடுச்சிட்டேன் என்று சொல்ல வந்தவன் பாதியில் நிறுத்தி கொண்டான்..

தன் அன்னையிடம்  சந்தியாவை  பற்றி சொன்னால் இப்பவே பார்க்கணும் என்று கிளம்பி விடுவார்..

முதல்ல அந்த ராட்சசி கிட்ட என் லவ்  ஐ சொல்லி அவள் சம்மதம் வாங்கிய பிறகு தான் வீட்டில் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தவன் தான் சொல்ல வந்ததை பாதியில் நிறுத்தி கொண்டான்...

அவரும் அவன் ஏதோ சொல்ல வர,  ஆர்வமாக அவனை  பார்க்க, அவன் அசட்டு சிரிபை சிரித்தான்..

“என்னடா சின்னவா? . ஏதோ சொல்ல வந்த. பாதியில் முழுங்கிட்ட.. “ என்றார் தன் ஏமாற்றத்தை மறைத்து கொண்டு..

“ஹீ ஹீ ஹீ சீக்கிரம் உன் சின்ன மருமகளை கண்டு புடிக்கலாம் னு  சொல்ல வந்தேன் மா.. “ என்றான் அசட்டு சிரிப்புடன்..

“சரி தான்.. நீ கண்டு புடிக்கிற வேகத்தை பார்த்தால் உனக்கு 60 ஆம் கல்யாணத்துக்கு கூட பொண்ணை கண்டு புடிக்க மாட்ட போல இருக்கு.. பேசாம நான் சொல்ற பொண்ணை கட்டிக்க டா.. “ என்றார் அவனை ஆர்வமாக பார்த்தவாறு..

“நீங்க எப்ப சொன்னீங்க.. இதுவரை அப்படி யாரையும் சொல்லலையே?

“ஹீ ஹீ ஹீ .. என மனசுக்குள்ள ஒரு பொண்ண நினைச்சு வச்சிருக்கேன் மகிழா.. நம்ம குடும்பத்துக்கு ஏத்தவ..நம்ம மதுவோட பிரண்ட் தான்.. பேசாம அவளையே ஓகே பண்ணிடலாமா? “ என்றார் தன் மகனை ஆர்வத்துடன்   எதிர்பார்த்தவாறு..

நேற்று இது மாதிரி அவர் சொல்லி இருந்தால் ஒரு வேளை பொண்ணை பார்க்கலாம் என்று சொல்லி இருப்பான்.. ஆனால் இன்றோ அவன் இதயத்தில் அந்த ராட்சசி குடியேறி விட, இப்பொழுது தன் அன்னை சொன்னதை ஏற்கும் நிலையில் இல்லை அவன்..

“இல்ல மா... இப்ப எனக்கு ஒரு புது ப்ராஜெக்ட் ஸ்டார்ட் ஆகி இருக்கு.. அடுத்த ஒரு  மாசத்துக்கு பயங்கர பிசியா இருக்கும்..அதனால இன்னும் ஒரு மாசம் கழிச்சு இந்த பொண்ணு தேடற வேலையை வச்சுக்கலாம்.. அதுவரைக்கும்  என்கிட்ட தொண தொணக்காம இருங்க..” என்றவன் அந்த பேச்சை அதோடு முடிக்கும் விதமாக தன் அண்ணன்  மகளிடம் விளையாட ஆரம்பித்தான்..

ஆனால் உள்ளுக்குள் இன்னும் ஒரு மாதத்தில் அவளின் சம்மதத்தை வாங்கி விட வேண்டும்.. இல்லைனா இந்த சிவகாமி மாதா திரும்பவும் நச்சரிக்க ஆரம்பிச்சுடுவாங்க.. “ என்று எண்ணி கொண்டான்... 

ன்று இரவு உணவை முடித்து தன் அறைக்கு திரும்பிய மகிழன் தன் படுக்கையில் படுத்து கொண்டே தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தான்...

கைகள் தானாக வாட்ஸ்அப்பை ஓபன் பண்ண, அவன் டீம் க்கான குரூப் ல் அன்றை விழாவுக்கான புகைப்படங்களை அனுப்பி இருந்தனர்.. அதிலும் மகிழன் சந்தியா இணைந்து நடந்து வந்த வீடியோவும் வெளியிட்டு இருந்தனர்..

அதை ஓட விட்டு பார்த்தவன் அப்படியே அசந்து போனான்.. அதில் இருவருமே புன்னகைத்தவாறு அவள் கையை பிடித்து கொண்டு வருவதை  காணும் பொழுது அப்படியே ரியலாக இருந்தது...

அவன் ஆணிற்கான கம்பீரத்துடன் அவள் கை பிடித்து நடக்க, அவளுமே பெண்மைக்கான மென்மையும் லேசாக வெட்கமும் கலந்து அவன் கை பிடித்து இணைந்து நடந்து வந்திருந்தாள்...

அதை  பார்க்கும் பொழுது உண்மையிலயே இருவருமே பெர்பெக்ட் மேட்ச் ஆக இருந்தது. இருவரும் இணைந்து பார்வையாளரை பார்த்து நின்று புன்னகைத்த புகைப்படமும் வெளி வந்திருக்க, அனைவரும் இருவரையும் சேர்த்து வைத்து கமெண்ட் பண்ணி இருந்தார்கள்...

சிலர் “மேட் பார் ஈச் அதர்..” என்று கமெண்ட் பண்ணி இருக்க, மகிழனுக்குள் மகிழ்ச்சி குமிழ் இட்டது..

அந்த புகைப்படத்தில் இருந்த சந்தியாவை மட்டும் பெரிது படுத்தி பார்த்தான் மகிழன்...

இத்தனை நாளாக அவளை ஒரு எதிரியாக பாவித்து வந்ததால் அவன் கண்ணுக்கு தெரியாத அவளின் அழகும் குறும்பு புன்னகையும் இப்பொழுது அவன் பார்வைக்கு வந்தது...

அழகான வட்ட முகம்.. பிறை போன்ற நெற்றி..வில்லாக வளைந்திருந்த புருவங்கள்..  அதை அழகாக திருத்தி  கண்ணுக்கு மை இட்டிருந்தாள்.. எடுப்பான கூரான நாசி..

காஷ்மீர் ஆப்பிள் போன்று உருண்டிருந்த  குன்டு கன்னங்கள்.. அதில் அவனை சுண்டி இழுக்கும் அழகான கன்னத்து குழி..நாக்பூர் ஆரஞ்சை போன்று திரண்டிருந்த அவள் இதழ்கள்.. என்று ஒவ்வொன்றாக ரசித்தவன் அவள் இதழில் சொக்கி நின்றது அவன் பார்வை...

அழகாக  சிவந்த உதடுகள் அதுவும் இன்று லிப்ஸ்டிக் போட்டிருக்க இன்னும் எடுப்பாக எடுத்து காட்டியது..

அவளின் திரண்ட இதழ்களை கைகளால் வருட தவித்தது அவன் உள்ளே..

இன்று மாலை  அவள் கீழ சரிய ஆரம்பிக்கவும் அவள் இடையை பிடித்து தன்னோடு சேர்த்து அணைத்தது நினைவு வர, அந்த சுகம் இப்பொழுதும் ஒவ்வொரு அணுவிலும் பரவியது மகிழனுக்கு...

அவளின் கொடியிடையை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து கொள்ள துடித்தது அவன் உள்ளே..

அருகில் இருந்த தலையணையை எடுத்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டவன்

“ஐ லவ் யூ பேபி... ஐ லவ் யூ வாயாடி.. ஐ லவ் யூ கேடி.. ஐ லவ் யூ மை ஸ்வீட் அன்ட் அழகான ராட்சசி....” என்று உருகியவன் அந்த தலையணைக்கு முத்த மழை பொழிந்தான்..

பின் மெல்ல அந்த  தலையணையை அணைத்தவாறே தன்னவளை கண்டு கொண்டதில்   நிம்மதியாக உறங்கி போனான்...

 

அவன் நிம்மதி நிலைக்குமா? அவளும் அவனை புரிந்து கொள்வாளா? வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!