அழகான ராட்சசியே!!-18
அத்தியாயம்-18
சந்தியா தன் தந்தையின் கழுத்தில் கையை போட்டு கொண்டு
அவரிடம் செல்லம் கொஞ்சி கொண்டிருக்க, அவரோ அவர் பெயரை
அவள் மாற்றி அழைத்ததை திருத்தி கொண்டிருந்தார்...
“ஹா
ஹா ஹா.. மிஸ்டர் மணிவேல்.. இந்த வேல்மணி ன்ற பெயர் உன் பொண்டாட்டி பெயருக்கு செட்
ஆகலை.. ருக்மணி வேல்மணி னு கூப்பிட்டா என்னவோ மணி மணி னு மணி விக்கற மாதிரி இருக்கு...
ஆனால்
ருக்மணி மணிவேல் னு சொல்லி பாருங்க.. பெர்பெக்ட் மேட்ச் ஆகுது.. உன் பொண்டாட்டி
பெயரின் முடிவு உங்க பெயரின் தொடக்கம்.. இது சூப்பரா இல்லை ? “ என்று
கண்ணடித்தாள்...
“அடியேய்...
முதல்ல அப்பாவை பெயர் சொல்லி கூப்பிடறதை
நிறுத்துனு சொன்னா நீ எப்படி எல்லாம் அவர்
பெயரை மாற்றி சொல்லி கூப்பிடறதுனு
ஆராய்ச்சி நடத்தி கிட்டிருக்க..
இவரும்
உன்னை கண்டிக்காம அரும மக பெயரை தப்பா
கூப்பிடறதுதான் குறை மாதிரி சிலிர்த்துக்கிறார்... “ என்று முறைத்தார் ருக்மணி...
“ஹீ
ஹீ ஹீ .. நோ டென்ஷன் ருக்கு..டென்ஷன் ஆனா ஆய்சு குறையுமாம்... அப்புறம் நீ அல்ப ஆய்சுல
போய்ட்டினா என் செல்ல அப்பாவுக்கு துணையா எனக்கு ஒரு சித்தியை தேடணும்..
எனக்கு
மாப்பிள்ளை தேடற நேரத்துல போய் எனக்கு சித்தியை தேடற மாதிரி வச்சிடாத.. என் செல்ல
ருக்கு இல்ல.... “ என்று எட்டி தந்தையின் மறுபக்கம் அமர்ந்து இருந்த தன் அன்னையின் கன்னத்தை பிடித்து செல்லமாக
கிள்ளி இருபக்கமும் ஆட்டி சிரித்தாள்
சந்தியா...
அவள்
கையை தட்டி விட்டு கோபமாக முறைத்தார் ருக்மணி..
“வாவ்...
கோபத்துல தான் நீ செமயா இருக்க ருக்கு..அதான் என் அப்பத்தா உன்னை வெளில கட்டி
கொடுக்க விடாம 19 வயசுலயே உன்னை அமுக்கி
என் அப்பாக்கு கட்டி வச்சிருச்சு போல..
அப்பத்தா
பிரில்லியன்ட் தான்.. இல்ல மணிவேல்.. “ என்று தன் தந்தையை இழுத்தாள்..
“ஆமாமாம்...
இந்த ரதியை கொத்திகிட்டு போக மன்மதனுங்க வரிசையில நின்னானுங்க... என் ஆத்தா உடனே
இவள தூக்கிட்டு வந்து எனக்கு கட்டி வச்சுதாக்கும்..
நீ
வேற பாப்பா.. கல்யாணத்தப்ப மூக்கை ஒலுக்கி கிட்டு கை சூப்பி கிட்டு இருந்தாள் உன்
அம்மா..
அப்ப
நான் இங்க பட்டணத்துல வேலைக்கு சேர்ந்ததால இங்கயே நல்ல அழகான பொண்ணை பார்த்து
கட்டிகிட்டா அப்புறம் இவளை யார் கட்ட
போறாங்க னு என் ஆத்தா பயந்து போய் தான் விரல் சூப்பிகிட்டிருந்த இவள புடிச்சு என்
தலையில கட்டி வச்சாங்க..
ஏதோ
என் ஆத்தா மனசு வச்சதால தான் இன்னைக்கு உன் ஆத்தா க்கு வாழ்க்கை கிடைச்சுது..
இல்லைனா
அப்பயே நானும் மாடர்னா ஒரு பொண்ணை பார்த்து கட்டியிருப்பேன்... “என்று கண்
சிமிட்டி சிரித்தார்..
“ஆமாமாம்..
சொல்லிகிட்டாங்க.. இவர் பெரிய மன்மதன்.. அப்படியே பட்டணத்து இளவரசிங்க எல்லாம் இவர
கட்டிக்கறேனு வந்து வரிசையில நின்னாங்களாக்கும்..
சாமி
கும்பிட ஒரு தேங்காய உரிச்சிகிட்டு வா னு சொன்னா குடுமியையும் பிச்சுட்டு மொட்டை
தேங்காய கொண்டு வந்தவர்.. அதை சரியா புடிச்சு உடைக்க கூட தெரியாது உன்
அப்பனுக்கு..
எல்லாம்
நான் வந்ததுக்கப்புறம் தான் சொல்லி கொடுத்தேன்..இன்னுமும் உங்க அப்பனால தேங்காயை
சரியா புடிச்சு உடைக்க வருமானு கேள் டீ...
ஏதோ
என் அத்தையும் மாமாவும் அவங்களோட உத்தம புத்திரன் பட்டணத்துல சேர்ந்து கெட்டு
போய்டுவான்.. அவனுக்கு ஒரு கால் கட்டு போடணும்னு என் வீட்ல வந்து புலம்பினனால தான்
என் அப்பாவும் அந்த சின்ன வயசுலயே எனக்கு
கல்யாணத்தை பண்ணி வச்சு இங்க தள்ளி விட்டுட்டார்..
இல்லைனா
பெரிய ராஜகுமாரன் னே என்னை தேடி வந்திருப்பானாக்கும்.. “ என்று முகத்தை நொடித்தார்
ருக்கு
இப்படியாக
இருவரும் மாறி மாறி இருபக்கத்து அருமை பெருமைகளை
கூறி சண்டையிட்டு கொண்டிருக்க, அவர்களின் சண்டையை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தாள் சந்தியா...
“எப்படியோ..
இந்த வார வீக் என்ட் ஐ சூப்பரா, ஜெகஜோதியா, செம என்டெர்டெய்னிங் ஆ ஸ்டார்ட் பண்ணியாச்சு..
சந்தியா... நீ கலக்குடி.. “ என்று காலரை தூக்கி விட்டு கொண்டாள்...
சிறிது
நேரம் இருவரும் சண்டை இட்டவர்கள் வாய்
வலிக்க,
இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து கொண்டு பின் தங்கள் சண்டைக்கு காரணமான செல்ல மகளை
பார்க்க அவளோ வாயை பொத்தி குலுங்கி
சிரித்து கொண்டிருந்தாள்..
அதை
கண்ட ருக்மணி கடுப்பாகி
“ஏன்டி..இப்படி
காலங்காத்தாலயே இந்த மனுசன் கிட்ட என்ன கோர்த்து விட்டுட்டியே.. நீ
உருப்படுவியா.... “ என்று முறைத்தார்..
“ஹீ
ஹீ ஹீ மிஸ்டர் மணிவேல்... உங்க பொண்டாட்டியை அடக்கி வைங்க.. நானா சண்டையை
ஆரம்பித்தேன்? ..உங்களை பெயர் சொல்லி சொன்னால்
அவங்களுக்கு ஏன் கோபம் வருதாம்? ... அதை முதல்ல கேளு மணி.. “
என்று சிணுங்கினாள்..
அதை
கேட்டு அவர் சிரித்து கொண்டிருக்க,
“என்னது
மணியா?
ஏன் டி இப்படி எல்லாம் படுத்தற.. நீ உன் அப்பனை பேர் சொல்லி கூப்பிடறதை யாராவது
கேட்டால் என்ன நினைப்பாங்க ? ..
என்ன
புள்ளையை வளர்த்தி வச்சிருக்கா கொஞ்சம் கூட மரியாதை தெரியாம னு என்னையத்தான்
திட்டுவாங்க...
இன்னொரு
தரம் அவர பேர் சொல்லி கூப்பிடு.. உன் வாய்ல யே சூடு வைக்கிறேன்.. “ என்று மீண்டும்
கோபமாக முறைத்தார் ருக்மணி...
“ஹீ
ஹீ ஹீ.. அகெய்ன் நோ டென்ஷன் ருக்கு.. பி ஹேப்பி ஆல்வேஸ்.. நான் என் அப்பா பெயரை
சொல்வது என்ன அவ்வளவு பெரிய குத்தமா?
பெயர்
சொல்ல பிள்ளை இல்லைனு தான என் அப்பத்தா உன்னை கோவில் கோவிலா இழுத்துகிட்டு போய்
மடிபிச்சை எடுத்து, முட்டி போடவச்செல்லாம்
பிரார்த்தனை பண்ண வச்சாங்க..
அதான்
அந்த வேல்ஸ் உங்க இரண்டு பேர் பெயரை
சொல்லவும், அதுக்கும் மேல மேட்ச் ஆகாத உங்க இரண்டு பேர் பெயரையும்
மேட்ச் பண்ணி வைக்கவும் என்னை அனுப்பி வச்சிருக்கான்..
நான்
அந்த வேலன் உங்களுக்கு கொடுத்த வரமாக்கும்... அவனோட செல்ல பிரண்ட் நான் ஆக்கும்..வரத்துல பிறந்த
சாமியோட குழந்தை நான்.. என்னை நீ ஒன்னும் பண்ண முடியாது..
எனக்கு
மட்டும் நீ சூடு வச்ச, அது அப்படியே உனக்கே திருப்பி வரும்.. அது மட்டும் அல்ல.. இந்த ஊர்ல இருக்கிற எல்லார்
வாய்லயும் சூடு படும்..
ஏன்னா
நான் கடவுளோட குழந்தை..இல்லை இல்லை.. கடவுளே
நானாக அவதரித்திருக்கிறேன்... “
என்று மீண்டும் காலரை தூக்கி விட்டு
கொண்டு கையை நீட்டி அருள் பாவிக்கும் விதமாக வைத்து கொண்டு கண்ணை மூடி அவள்
சொன்ன விதம் அவள் பெற்றோர் இருவருக்கும் சிரிப்பை வரவைத்தது....
ஆனாலும்
தன்னை மறைத்து கொண்ட ருக்மணி
“ஹே
திருடி... இது தமிழ் பாடத்துல வர்ர சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த கதை தான..
அடிப்பாவி... அதை அப்படியே காப்பி அடிச்சு இங்க ஊத்திகிட்டு இருக்கியா..?? “ என்று முறைத்தார்
“ஹீ
ஹீ ஹீ.. யூ ஆர் சோ ஸ்மார்ட் ருக்கு.. இப்பதான் இந்த ஜீனியஸ் சந்தியாவோட அம்மானு
கொஞ்சமா ப்ரூப் பண்ணி இருக்க..
வாட்
அ மெமரி..!! நீ அந்த காலத்துல ஸ்கூல் ல
படிச்சதெல்லாம் அப்படியே நியாபகம்
வச்சிருக்க.. சான்ஸ்லெஸ் ருக்கு.. “ என்று சிரித்தாள் சந்தியா
“போதும்
நிறுத்து டீ.. நான் ஒன்னும் அந்த காலத்துல படிக்கல.. ஒரு 25 வருசம் முன்னாடி
படிச்சது தான்.. ஆனாலும் என் மனசுல அப்படியே நிக்குது.. “
“ஹீ
ஹீ ஹீ .. அது உன் மனசுல நிக்குதோ இல்ல
படுத்துச்சோ.. ஐ டோன்ட் கேர். நீ படிச்ச கதை சிவனோடது.. நான் சொல்றது அவன் பெத்த
புள்ளை வேல்ஸ் உடையது..
சோ..
இது வேற கதை.. பிள்ளை கதை அப்பா கதை ஆகாலாம்.. ஆனால் அப்பா கதை பிள்ளை கதை ஆகாது.. எச்சச்ச எச்சச்ச
கச்சச்ச கச்சச்சா..... “ என்று சிரித்தாள் சந்தியா...
“ஷப்பா...
இப்பயே கண்ணை கட்டுதே.. இன்னும் இரண்டு நாளைக்கு உன்னை வச்சு எப்படி சமாளிக்க
போறனோ ?
ஏன்டி..
ஸ்கூல் எல்லாம் சனிக்கிழமையும் வைக்கிற மாதிரி
உன் ஆபிஸையும் சனிக்கிழமையும் வச்சிருக்கலம இல்லை.. அட்லீஸ்ட் உன் தொல்லை
இன்னொரு நாளாவது குறைஞ்சிருக்குமே.. “ என்றார் ருக்மணி நக்கலாக சிரித்தவாறு...
“ஹீ
ஹீ ஹீ.. ருக்கு.. ருக்கு... உன்னால இரண்டு
நாளே வச்சு சமாளிக்க முடியலையே.. எங்க
மேனேஜர் அஞ்சு நாள் வச்சு எப்படி சமாளிப்பாராம்?
அவர்
எப்படா இந்த சனி ஞாயிறு வரும்.. எங்க கிட்ட இருந்து தப்பிச்சுக்கலாம்னு பார்த்து
கிட்டிருக்கார்.. விட்டா இன்னும் ஒரு நாள் எக்ஸ்ட்ராவா லீவ் கொடுத்து வீட்லயே
இருந்துக்கங்கனு சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை.. “ என்று சிரித்தாள்..
“ஹ்ம்ம்
பாவம் டீ.. உங்க மேனேஜர்... “ என்று ருக்மணியும் இணைந்து சிரித்தார்..
அவர்கள்
இருவரின் பேச்சை கேட்டு புன்னகைத்தவாறு தன் வேலையில் மும்மரமாக இருந்தார்
வேல்மணி..
அதை
கண்ட சந்தியா
“என்ன
மணிவேல்..? அப்படி சின்சியரா என்ன பார்த்துகிட்டிருக்க ? “ என்று அவர் கையில் இருந்த கவரை வேகமாக
பிடுங்கி உள்ளிருந்ததை எடுக்க, அதை கண்டு கண்களை அகல
விரித்தாள் சந்தியா...
அனைத்தும்
விதவிதமான ஆண்களின் புகைப்படங்கள்..
அதை
கண்டு புரியாமல் முழித்தவள்
“என்ன மணி இதெல்லாம் ? “ என்றாள் குழப்பத்துடன்..
“ஹா
ஹா ஹா.. அதுவா பாப்பா...உன்னை கட்டிக்கப் போற அந்த துரதிஷ்டக்கார மாப்பிள்ளை தான்... யார் அந்த அன் லக்கி
பெல்லோனு நானும் உன் அம்மாவும் தேடி பார்த்துகிட்டிருக்கோம்.. “ என்று சிரித்தார்
மணி..
“வாவ்...!! நிஜமாவா மணி ? என்ன உனக்கு திடீர்னு ஞானோதயம் வந்திருக்கு ?
ஓ..
அப்ப எனக்கு பொறுப்பு வந்திருச்சா ? நான் உங்க கல்யாணத்துக்கான தகுதி தேர்வுல பாஸ் ஆகிட்டேனா? “ என்றாள் கண்களை அகல வரித்து
ஆச்சர்ய பார்வையுடன்..
“ஹீ
ஹீ ஹீ.. அது இந்த ஜென்மத்துல நடக்காதுனு தெரிஞ்சு போச்சு பாப்பா.. நானும் போன
இரண்டு வருசமா பார்த்துகிட்டு தான இருக்கேன்.. உனக்கு இன்னும் பொறுப்பு வந்த
மாதிரியே இல்லையே.. இன்னும் விளையாட்டு பிள்ளையா தான் இருக்க.. “ என்றார்
வருத்தமாக..
“தென்
எப்படி மனசு மாறின மணி? என் பிரண்ட் வேல்ஸ் வந்து உன்
மண்டையில அடிச்சு சொன்னானாக்கும் உன் பொண்ணுக்கு காலாகாலத்துல கல்யாணத்தை பண்ணி வை
னு.. “ என்று சிரித்தாள்..
“ஹ்ம்ம்ம்
நீ சொல்றதும் கரெக்ட் தான்.. ஆனா உன் பிரண்ட் வேலன் வரலை.. என் பிரண்ட் சண்முகம் தான் என் மண்டையில அடிச்சு சொன்னான்..
“ என்று சிரித்தார்..
“வாட்..? நம்ம சண் அங்கிளா? அவர
எப்ப பார்த்திங்க ?“ என்றாள் ஆச்சர்யமாக..
“ஹ்ம்ம்ம்
நேற்று அவனை எதேச்சையா பார்த்தேன்.. ரொம்ப நளைக்கு அப்புறம் மீட் பண்ணினது. இரண்டு
பேரும் ப்ரியா இருந்ததால பீச்க்கு போனோம்.. அப்பதான் உனக்கு கல்யாணத்துக்கு
பார்த்துகிட்டிருக்கேனானு கேட்டான்..
இல்லை..
இன்னும் உனக்கு கொஞ்சம் பொறுப்பு வரட்டும். அதுக்கப்புறம் கல்யாணத்தை பண்ணி
வைக்கலாம்னு இருக்கேன் னு சொன்னேன்.. அதை
கேட்டுட்டு நக்கலா சிரிக்கறான்..
“டேய்
வேல்.. இந்த காலத்து பொண்ணுங்களுக்கு பொறுப்பு வந்துதான் கல்யாணம் பண்ணனும்னா அது
இந்த கடல் ல அலை அடித்து ஓய்ந்த பிறகு குளிக்ககிறதுக்கு சமம்...
இந்த
அலையும் ஓயாது..நாமளும் குளிக்க முடியாது..
அது மாதிரி நம்ம பொண்ணுங்களுக்கு பொறுப்பும் அவ்வளவு சீக்கிரம் வந்திடாது..
அதனால
பொறுப்பு வந்து கல்யாணத்தை பண்றதை விட
கல்யாணத்தை பண்ணு.. பொறுப்பு தானா
வந்திடும்.. நம்ம மதுவை பார்த்த இல்லை.. கல்யாணத்தப்ப விரல் சூப்பி கிட்டு
இருந்தா..
இப்ப
அந்த குடும்பத்தோட மூத்த மருமகளா எவ்வளவு பொறுப்பா நடந்துக்கறா.. என்னாலயே நம்ப
முடியலை.. என் பொண்ணா இப்படி மாறிட்டானு...
அதனால
காலாகாலத்துல கல்யாணத்தை பண்ணி வை..
சந்தியா குட்டி அதெல்லாம் கற்பூர புத்தி.. டக்குனு குடும்ப பொறுப்பை எடுத்துக்குவா... என்று சொல்லி சிரித்தான்..”
“ஹீ
ஹீ ஹீ.. பார்த்திங்களா. உங்க பிரண்ட் உங்களை விட எவ்வளவு ஸ்மார்ட் னு.. சும்மா
உங்க மண்டைல அடிச்ச மாதிரி நச்சுனு இல்ல சொல்லி இருக்கார்... இதைத் தான் நானும்
இரண்டு வருடம் முன்னாடி இருந்து சொல்லி கிட்டிருக்கேன்..
எனக்கு
ஒரு கல்யாணத்தை பண்ணி வைங்கனு..
கேட்டிங்களா? இன்னைக்கு சண் அங்கிள் சொன்னதும்
மண்டையை அட்டறீங்க.. “ என்று முகத்தை நொடித்தாள் சந்தியா...
அவளை
ஆச்சர்யமாக பார்த்து வாயை பிளந்தார் ருக்மணி..
“ஏன்
டீ. பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் னா வேண்டாம்னு சொல்லுவாங்க..
நானெல்லாம்
எனக்கு தெரிஞ்ச, சிறுவயதில் இருந்தே பார்த்து
பழகிய மூஞ்சியான என் மாமன் பையன் உன்
அப்பாவை கட்டிக்கவே மறுத்து கல்யாணம் வேண்டாம்னு என் ஆத்தா கிட்ட அத்தனை
ஆர்ப்பாட்டம் பண்ணினேன்...
நீ
என்னடான்னா கொஞ்சம் கூட கூசாம வெட்கம் இல்லாம கல்யாணத்தை பண்ணி வை னு சொல்ற.. “ என்று முறைத்தார்
ருக்மணி..
“ஹீ
ஹீ ஹீ ருக்கு.. நீ பொறந்து வளர்ந்த காலம் வேற.. நான் பொறந்த காலம் வேற..
நானெல்லாம் மில்லேனியல் (millennial) ல இருக்க வேண்டியது. கொஞ்சம் முன்னாடி பிறந்திருந்தாலும் நானும் மில்லேனியல் தான்...
மில்லேனியல்
எல்லாம் வேற லெவல் ருக்கு... சொல்ல முடியாது.. இனிமேல் நாங்கதான் மாப்பிள்ளைக்கு
தாலி கட்டினாலும் கட்டுவோம்..” என்று கண்
சிமிட்டி சிரித்தாள்..
“அடிப்பாவி. விட்டா நீ அதையும் செஞ்சாலும் செய்வ... பாவம் யார் வந்து உன்கிட்ட மாட்ட போறாங்களோ..!! என் வருங்கால மருமகனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. “ என்று பாவமாக சொல்லி சிரித்தார் அவள் அன்னை...
Comments
Post a Comment