அழகான ராட்சசியே!!-19
அத்தியாயம்-19
அதே நேரம் தன் வீட்டில் தன் குடும்பத்தாருடன் அமர்ந்து
காலை உணவை சாப்பிட்டு கொண்டிருந்த மகிழனுக்கு புரை ஏறியது..
அவன்
தலையை தட்டிய சிவகாமி
“ஏன்
டா.. இப்படி பனமரம் மாதிரி
வளர்ந்திருக்கியே.. ஒழுங்கா அள்ளி சாப்பிட கூட தெரியாது? இப்படியா மூக்குல
ஏறுகிற மாதிரி அவசரமா சாப்பிடுவ? “ என்று முறைத்தார் சிவகாமி..
“ஹீ
ஹீ ஹீ.. இது நான் அவசரமா சாப்பிட்டதால வந்தது இல்ல சிவகாமி தேவி... என் மாமியார்
என்னை நினைச்சுகிட்டாங்க போல..அதான்.. “
என்று கண் சிமிட்டி சிரித்தான் மகிழன்..
“என்னது
மாமியாரா?? வழக்கமா இந்த மாதிரி புரை ஏறினா
வரப்போற பொண்டாட்டி நினைச்சு கிட்டா... அப்படீனு தான சொல்வாங்க... நீ என்ன மங்கி
கதையை மாத்தற? “ என்றாள் அகிலா யோசித்தவாறு...
“ஹீ
ஹீ ஹீ...நானெல்லாம் வேற லெவல் அகி குட்டி..அதான்...
ஆக்சுவலா
என் பொண்டாட்டி கிட்ட மாட்டிகிட்டு என் மாமனாரும் மாமியாரும் இப்ப
முழிச்சுகிட்டிருப்பாங்க..எப்படா கல்யாணத்தை
பண்ணி என் பொண்டாட்டியை என்கிட்ட
தள்ளி விட்டுடலாம்னு நினைச்சுகிட்டிருப்பாங்க..
கூடவே
அந்த பரிதாப பட்ட மாப்பிள்ளைக்கு ஆழ்ந்த
அனுதாபங்கள்.. “என்றும் நினைச்சு கிட்டிருப்பாங்க..அதான் எனக்கு புரை ஏறுது “ என்று சிரித்தான்..
“ஓ..
அப்படீனா உன் பொண்டாட்டி கன்பார்ம் ஆ சொர்ணாக்கா தானா? “ என்றாள் அகிலா
குறும்பாக சிரித்தவாறு..
“ஹீ
ஹீ ஹீ 200% உன் சின்ன அண்ணி ஒரு கேடி, ரவுடி,
வாயாடி தான்...” என்று சிரித்தான்..
அதை
கண்டு நிகிலனும் மதுவும் கண்ணால் ஜாடை சொல்லி சிரிக்க, சிவகாமி யோசனையுடன்
“டேய்
சின்னவா... நீ கொடுக்கிற பில்டப் ஐ பார்த்தால் என் சின்ன மருமகளை கண்டுபுடிச்சிட்ட போல இருக்கே..யார்டா அது? “என்றார் குறுகுறு
பார்வையுடன் நமட்டு சிரிப்புடன்..
அதை கேட்டதும் அதிர்ந்தவன்
“க்கூம்...
க்கூம்... “ என்று மீண்டும் மூக்கில் புரை ஏற, இப்பொழுது அவனாகவே தன் தலையை தட்டி
கொண்டான்..
“ஆஹா..
மகிழா.. நீயே வாயை கொடுத்து
மாட்டிகிட்டயே.. இந்த சிவகாமி தேவி நீ பேசறையெல்லாம் கரெக்ட் ஆ நோட் பண்ணி
பாய்ன்ட் ஐ புடிச்சிட்டாங்களே.. போலீஸ்காரனை பெத்த ஆத்தானு ப்ரூப் பண்றாங்களே..
எதையாவது
சொல்லி சமாளி.. இல்லைனா இந்த மாதாஜியை புடிச்சு வைக்க முடியாது..“ என அவசரமாக
அறிவுறுத்தியது அவன் மனஸ்..
அவனும்
வேகமாக யோசித்தவன்
“ஹீ
ஹீ ஹீ. அதெல்லாம் ஒன்னும் இல்ல மா... சும்மா ஒரு ப்ளோல வந்தது.. எல்லாரும்
கொடுக்கிற சாபத்தை வச்சி எனக்கே அப்படி தோனிடுச்சு.. மத்தபடி நத்திங்... “ என்று
அசட்டு சிரிப்பை சிரித்தான்..
“இல்லையே
மகி... நீங்க அடிச்சு சொன்னதை வச்சு பார்த்தால் கன்பார்ம் ஆ யாரையோ பார்த்து
வச்சுட்ட மாதிரி இல்ல இருந்தது..கரெக்ட் தான மாமா... “ என்று நிகிலனையும் கூட்டு சேர்த்தாள் மது..
“ஆஹா..
அடுத்து போலீஸ்காரன் பொண்டாட்டியும் களத்துல குதிச்சிட்டாளே உன்னை இன்வெஸ்டிகேசன்
பண்ண.. போலீஸ்காரன் ஆத்தாவையும் அவன் பொண்டாட்டியை கூட எப்படியாவது சமாளிச்சிடலாம்..
இந்த
மிஸ்டர் என்கவுன்டர் போலீஸ்காரன் உன்னை குறுக்கு விசாரணை செய்தால் நீயே
எல்லாத்தையும் உளறிடுவ..
அதனால்
முதல்ல இங்க இருந்து எஸ் ஆகிடு மகழா.. “என மனஸ் அவசர ஆலோசனை வழங்க
“ஹீ
ஹீ ஹீ அதெல்லாம் ஒன்னும் இல்ல மது.. அப்படி எதுனாலும் மூத்த மருமக உன்கிட்ட தான்
பர்ஸ்ட் சொல்வேனாக்கும்.. இப்ப எனக்கு கொஞ்சம் அவசர வேலை இருக்கு..
அப்ப
நான் உத்தரவு வாங்கிக்கறேன்.. நீங்க எல்லாரும்
பொறுமையா சாப்பிடுங்க.. “ என்று
அவசரமாக எழுந்து சென்று கையை கழுவினான் மகிழன்..
“டேய்..சாப்பாட்டுல பாதியில் எழுந்து போகாதடா.. “என்று சிவகாமி கத்த
அதை காதில் வாங்காமல் வேகமாக மாடிக்கு சென்று தன் அறையில் புகுந்து
கொண்டான்...
அதை
கண்ட மற்றவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து
நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டனர்...
சந்தியா வீட்டில் இன்னும் ஆட்டம் கலை கட்டியது..
“என்
வருங்கால மருமகனுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.. “ என்று பாவமாக சொல்லி சிரித்தார்
ருக்மணி... அவள் அன்னையை முறைத்தாள்
சந்தியா..
“என்ன
ருக்கு.. இப்பயே உன் மருமகன் கட்சி சேர்ந்துட்ட போல இருக்கு..என் அப்பா எப்பவும்
என் கட்சிதான்.. நினைப்புல வச்சுக்க..
சரி..
எனக்கு வாழ்க்கை பட போகும் அந்த அடிமை யாரா இருக்கும்..? பார்க்கலாம்..
“ என்றவள் தன் கையில் இருந்த புகைப்படங்களை பார்வை இட, பார்க்கும் புகைப்படம் ஒவ்வொன்றையும்
குறை சொல்லி வந்தாள்..
“மூக்கு
சரியில்லை. இவனுக்கு மீசை சரியில்லை, இவனுக்கு மீசையே இல்லை, இவன் தலை சொட்டை, உயரம் குட்டை, இவன் குடிகாரன், ,
கோபக்காரன், இவன் சொங்கி.. “ என ஒவ்வொன்றாக ரிஜக்ட்
பண்ணி புகைப்படத்தை அருகில் இருந்த டீபாயில் போட்டு கொண்டிருந்தாள்..
கடைசியில்
இருந்த ஒரே ஒரு புகைப்படத்தையும் பார்த்தவள் அதுக்கும் குறை சொல்லி நிராகரித்தவள்
“என்ன
மணி? ..
இரண்டு வருசமா எனக்கு மாப்பிள்ளை பார்க்க என்று வெயிட் பண்ணினியே.. ஒன்னு
கூடவா நல்லதா கிடைக்கலை.." என்று
முறைத்தாள்..
"பாப்பா..
இது உனக்கே நியாயமா இருக்கா ? .. உனக்காக நான் மாமியார் இல்லாத ஒத்த பையனா இருக்கிற மாப்பிள்ளையா தேடி
புடிச்சு கொண்டு வந்திருக்கேன்..
இப்படி
எல்லாத்தையும் புடிக்கலைனு சொல்லிட்டியே..” என்று முறைத்தார் மணி..
“வாட்? மாமியார் இல்லாம
அதுவும் ஒத்த பையனா ? நோ வே.. அந்த லைப் சுத்த போர் மிஸ்டர் மணிவேல்..முதல்ல உங்க செர்ச்
க்ரைட்டீரியாவை( criteria) மாத்துங்க..
எனக்கு
தினமும் சண்டை போட மாமியார் வேணும்.. மாமியார் கிட்ட போரடிச்சால் சண்டை போட
நாத்தனார் இருக்கணும்.. அதுவும் போரடிச்சால் சண்டை போட ஓரகத்தி இருக்கணும்..
அப்புறம்
நான் மூத்த மருமகளா மட்டும் போய்டக் கூடாது.. மூத்த மருமகள் னா
ரெஸ்பான்ஸிபிலிட்டீஸ் ஜாஸ்தியாம்.. அதனால இரண்டாவது பையனா இருந்தால் பெட்டர்..
அப்புறம்
அவனுக்கு பிரியாணி செய்ய தெரியணும்.. செய்ய தெரியலைனா தினமும் அவனே சொந்த காசு போட்டு எனக்கு
பிரியாணி வாங்கி தரணும்..
எல்லாத்தையும்
விட முக்கியம் என் பொண்ணு செல்வியை பத்தி
சொல்லிடுங்க..அவளை நான் இப்ப பார்த்துக்கற மாதிரியே எப்பவும் பார்த்துப்பேன்..
முடிஞ்சால்
கல்யாணத்துக்கு பிறகு அவளையே சட்டபடி அடாப்ட் பண்ணி என் கூட வச்சுகிட்டாலும்
வச்சுப்பேன்...
இத்தனை
கன்டிசனும் பொருந்தர மாதிரியான இ.வா வா பாருங்க.. “ என்று சொல்லி முடித்து மூச்சு
வாங்கினாள்..
அதை
கேட்டு ருக்மணி மற்றும் வேல்மணிக்கு தலை சுற்றியது...முதலில் சுதாரித்த ருக்மணி
“ஏன்டி...
இப்ப இருக்கிற பொண்ணுங்க எல்லாம் மாமியார் , நாத்தனார் இல்லாத வீடா பார்க்க
சொல்றாங்க.. நீ என்னடான்னா மாத்தி சொல்ற? உலகம் உனக்கு புரியலையா ? “ என்றார்
யோசனையாக..
“ஹீ
ஹீ ஹீ... ருக்கு.... அது ஏன் னா ...... ? என் வழி தனீஈஈஈஈஈஈ வழி.... “ என்று ரஜினி ஸ்டைலில் இழுத்து கையை
ஆட்டி சொல்லியவள் சிரித்து கொண்டே எழுந்து
தன் அறைக்கு செல்ல , ருக்மணி தலையில் அடித்து
கொண்டார்..
தன்
மகளின் இந்த சிறு பிள்ளைத்தனமான பேச்சும் நடவடிக்கையும் அவருக்கு வயிற்றில் புளியை
கரைத்தது..
தன்
கணவனை பார்த்தவர்
“என்ன
மாமா.. இப்படி சொல்லிட்டு போறா.. நீங்களும் எதுவும் சொல்லாம அமைதியா இருக்கீங்க?” என்றார் சிறு கவலையுடன்..
“ம்ஹூம்..
நான் சொன்னா அப்படியே உன் பொண்ணு கேட்டுட்டாலும்... எல்லாம் உன்னால் தான்
டி.. இப்படி செல்லம் கொடுத்து அவள
கெடுத்து வச்சிருக்க...” என்று முறைத்தார்...
“ஆமா...
அவ ஏதாவது தப்பு பண்ணினா மட்டும் என் பொண்ணு.. இல்லைனா அவ உங்க பொண்ணு ஆய்டறா? “ என்று முகத்தை நொடித்தவர்
“சரி
அதை விடுங்க.. இவ போடற கன்டிசனுக்கு தகுந்த மாதிரி மாப்பிள்ளை கிடைப்பாங்களா? அப்படியே
கிடைத்தாலும் இவ பண்ற கொடுமைக்கு அடுத்த வாரமே டைவர்ஸ் வாங்கிட்டு ஓடிடுவான்..
பேசாம
என் அண்ணன் பையனுக்கே முடிச்சிடலாம் மாமா.. நம்ம சொந்தம் னா அவனை எப்படி வேண்டும்
என்றாலும் மிரட்டலாம்.. பாதியில் கல்யாணத்தை
முறிச்சுகிட்டு ஓட மாட்டான்..”
“ஆமா.. உன் அண்ணன் பையன் அப்படியே பெரியயயய
கலெக்டர் வேலையில் இருக்கற மாதிரி பீத்திக்காத.. உன் அப்பன் பண்ணின தொழிலை நான் பார்க்கறேன் பேர்வழினு ஊரை
சுத்திகிட்டு திரியறான்...
அந்த பட்டிகாட்டுல போய் என் பொண்ணு வாழறதா? சே.. சே.. அவ படிப்புக்கும் இப்ப பார்க்கிற வேலைக்கும் அவள் சம்பளம் என்ன தெரியுமா? அவளை போய் அந்த மஞ்சள் காட்டுல அலைய சொல்றியா? நீ
மட்டும் இங்க பட்டணத்துல சொகுசா இருப்ப? “ என்று முறைத்தார்..
“ம்க்க்கூம்ம்.
ரொம்பத்தான்..இந்த சீமையில் இல்லாத புள்ளைய பெத்துட்டார்.. பார்க்கலாம் எப்படிபட்ட
மகராசனை தேடி புடிக்கிறீங்க னு.. “என்று
முகத்தை நொடித்தார் ருக்மணி..
“நான்
ஏன் டி தேடி புடிக்கணும்..? என் பொண்ணு அழகுக்கும்
அறிவுக்கும் அந்த ராஜகுமாரனே என் வீடு தேடி வந்து பொண்ணு கேட்பான் பார்.. எழுதி
வச்சுக்க.. “ என்றார் சத்தமாக..
மீண்டும்
அவருக்கு முகத்தை சுளித்து பழிப்பு காட்டி முறைத்தவர் சமையல் அறைக்குள் புகுந்து
கொண்டார் ருக்மணி..
வேல்மணியும்
சந்தியா நிராகரித்த புகைப்படங்களை எல்லாம்
சேகரித்து வைத்துவிட்டு பின் சண்முகம் கொடுத்த அந்த கல்யாண புரோக்கரின் எண்ணிற்கு
அழைத்தார்...
புரோக்கரும்
வாயெல்லாம் பல்லாக
“சொல்லுங்க
சார்.. எத்தனை போட்டோஸ் ஓகே பண்ணி இருக்கீங்க.. உங்க லிஸ்ட் ஐ சொல்லுங்க.. அடுத்து
பொண்ணு பார்க்க ஏற்பாடு செய்திடலாம். “ என்றார் உற்சாகமாக
“அது
வந்து... பொண்ணு வேற சில கன்டிசன்ஸ் போடறா சார்.. அதனால நான் சொல்ற கன்டிசன்ஸ் க்கு மேட்ச் ஆகிற மாதிரி
இருக்கிற ஜாதகத்தை மட்டும் அனுப்பி
வைங்க..
பார்த்துட்டு
சொல்றேன்.. “ என்றவர் சந்தியா போட்ட
கன்டிசன்ஸ் ஐ பட்டியலிட ஆரம்பித்தார்..
வேல்மணி சொல்லி முடித்ததும் மறுமுனையில் மயங்கி விழுந்திருந்தார் அந்த புரோக்கர்...
Comments
Post a Comment