அழகான ராட்சசியே!!-20

 


அத்தியாயம்-20

ந்த வார விடுமுறை வழக்கம் போல மகிழ்ச்சியாக முடிந்திருக்க, அடுத்த நாள் திங்கள் கிழமை உற்சாகத்துடன் அலுவலகம் கிளம்பி சென்றான் மகிழன்..

தன் காதலை,  தன்னவளை உணர்ந்து கொண்டதில் இருந்தே அவனுள் ஒரு வித உற்சாகம் குமிழிட்டு கொண்டிருக்கிறது தான்.. அதுவும் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் அவனவளின் புகைப்படத்தை பல ஆயிரம் முறை பார்த்து விட்டான்..

அவளை அவள் முகத்தை பர்க்கும் பொழுதெல்லாம் அவனுள்ளே இனம் புரியாத பரவசம்..அவளை நேரில் பார்க்க வேண்டும்.. கோபத்தில் முறைக்கும் அவள் இதழ்களை பார்த்து ரசிக்க வேண்டும் என தவித்தது அவன் உள்ளே..

ஆனாலும் தன்னை கட்டுபடுத்தியவன் தன் உள்ளே பொங்கும் அந்த மகிழ்ச்சியை வெளியில் தெரியாமல் மறைப்பது தான் கஷ்டமாக இருந்தது..

சில முறை தானாக சிரித்து கொண்டிருப்பதை கண்டு கொண்ட அகிலாவும் மதுவும் அவனை விசாரிக்க, அவனோ  ஒன்றுமில்லை .சும்மா ஒரு ஜோக்குக்கு சிரிச்சேன் என்று சொல்லி சமாளித்தான்...

எப்படியோ இரண்டு நாட்களை ஓட்டியவன் இன்று காலை எழுந்ததுமே பரபரப்பாக கிளம்பியவன் தன் வீட்டில் யாரிடமும் மாட்டாமல் கிளம்பி அலுவலகத்துக்கு ஓடி வந்து விட்டான்...

காரை பார்க்கிங் ல் விட்டு விட்டு அதே துள்ளலுடன் படி ஏறி தன் தளத்திற்கு வந்தவன் பார்வை தானாக சந்தியாவின் இடத்திற்கு சென்றது... வழக்கம் போல அவள் இன்னும் வந்திருக்க வில்லை..

உதட்டில் ஒரு புன்முறுவலுடன் வழியில் சந்தித்தவர்களுக்கு எல்லாம் தலை அசைத்து  காலை வணக்கத்தை  சொல்லி தன் இருக்கைக்கு சென்றான்...

தன் மடிக்கணினியை திறந்து அன்றைய செட்யூலை பார்த்தவன் மெல்ல தன்னவளை பின்னுக்கு தள்ளி வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்...

இன்றும் காலையில் சில மீட்டிங் இருந்தது அவனுக்கு.. சில அவன் அட்டென்ட் பண்ணுவதும் சில அவன் பிரசென்ட் பண்ண வேண்டியும் இருந்ததால் அதுக்கான பிரிபரேசனில் மூழ்கி போனான்...

ணி 11 ஐ தாண்டி சில நிமிடங்கள் ஆகி இருக்க,  தன் முந்தைய மீட்டிங் ஐ முடித்து விட்டு வேகமாக இரண்டாவது தளத்தில் இருந்த அந்த கான்ப்ரென்ஸ் அறைக்கு வேகமாக வந்தான் மகிழன்..

புது ப்ராஜெக்ட் ஐ பற்றி விளக்குவதற்காக  டெவ் டீமிற்கும் டெஸ்ட் டீமிற்கும் சேர்த்து இந்த மீட்டிங் ஐ அரேஞ் பண்ணி இருந்தான் மகிழன்.. ஆனால் முந்தைய மீட்டிங் கொஞ்சம் இழுத்து விட, அதிலிருந்து வெளி வந்து வேகமாக இந்த மீட்டிங் அறைக்கு வந்திருந்தான்..

மற்றவர்கள் முன்பே அங்கு வந்திருந்து அவனுக்காக காத்து கொண்டிருந்தார்கள்..

“சாரி கைஸ்... லாஸ்ட் மீட்டிங் கொஞ்சம் இழுத்துருச்சு.. “ என்று சொல்லியவாறு  வேகமாக உள்ளே நுழைந்த மகிழன் தன் மடிக்கணினியை அந்த அறையின் முன்னால் இருந்த பிரசென்டர் க்கான இடத்தில் வைத்து உயிர்பித்தான்..

அவன் பிரசென்ட் பண்ண போகும் பிரசென்டேசனை ஓபன் பண்ணி அதை சேர் பண்ணியவன் அப்பொழுது தான் அந்த அறையில் அமர்ந்து இருந்தவர்களை ஒரு முறை பார்வையிட்டான்..

கிட்ட தட்ட ஐம்பது பேர் அங்கு அமர்ந்து இருந்தனர்.. பொதுவாக அவர்களிடம் பார்வையை செலுத்தி லேசாக புன்னகைத்தவன் பார்வை கடைசி வரிசையில் அமர்ந்து இருந்த சந்தியாவை கண்டதும் ஸ்தம்பித்து நின்றது...

இரண்டு நாட்களாக பார்க்க துடித்த முகத்தை நேரில் காணவும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.. அதுவும் இன்று அவள் ஒரு இளமஞ்சள் நிற டாப்ஸ் ம் அதற்கு பொருத்தமான லெக்கின்ஸ் ம் அணிந்திருந்தாள்..

அவள் கேங் அன்பு, அபர்ணா, மயில் அனைவருடன் கடைசி இருக்கையில் அமர்ந்து இருந்தவள் அவர்களுடன் ஏதோ சொல்லி சிரித்து கொண்டிருந்தவள் மகிழன் உள்ளே வந்ததும் அதை  அடக்கி கொண்டிருக்க, முன்பு சிரித்ததின் அடையாளமாக அவள் இதழ்கள் இன்னும் புன்னகையை தேக்கி இருந்தன...

அவளும் இந்த மீட்டிங் ல் இருப்பாள் என எதிர்பார்த்திராததால் அவளை கண்டதும் ஒரு நொடி அவன் இதயம் எகிறி குதித்தது...

அவளையே ரசித்து பார்த்தவன் உள்ளே படபடப்பாக இருக்க அவன் நாக்கு ஒட்டி கொள்ள, அதற்கு மேல் ப்ளாங்க்  ஆகி போனான் மகிழன்..

அவன் என்ன பேச வேண்டும் என்பதெல்லாம் மறந்திருக்க, சில நொடிகள் முழித்து கொண்டு நின்றான் அனைவர் முன்னும்...

சில நொடிகளில் தன்னிலை உணர்ந்தவன், தன்னை சமாளிக்க வேண்டி

“எக்ஸ்க்யூஸ் மீ கைஸ்.. “ என்றவன் தன் அலைபேசியை எடுத்து யாரிடமோ பேச வேண்டும் என்பதை போல அவசரமாக வெளியேறி சென்றான்..

அதை கண்ட சந்தியா உதட்டை வளைத்து ஏளனமாக சிரித்தாள்..

அவளுக்குமே இன்று காலையில் அலுவலகம் வந்ததில்  இருந்தே  படபடப்பாக இருந்தது..

கடந்த வெள்ளிகிழமை சம்பவத்திற்கு பிறகு அதை தூக்கி போட்டு விட்டு அந்த வார விடு முறையை உற்சாகத்துடன் கழித்தவள்  இன்று அலுவலகம் வந்த பொழுது தான் மீண்டும் அந்த சம்பவம் நினைவு வந்தது..

அந்த மங்கியை இன்னைக்கு பார்க்கவே கூடாது என்று வேண்டி கொண்டே  தன் இடத்திற்கு வந்தவள் 11 மணிக்கு  மகிழன் மீட்டிங் இருப்பதை கண்டவளுக்கு ஏதோ ஒரு மாதிரி இருந்தது..

“சே.. இவனை பார்க்கவே கூடாதுனு வந்தால் இவன் மீட்டிங் தான் முதல்ல இருக்கு... ஐயோ.. ஒரு மணி நேரம் அந்த மூஞ்சியையே பார்க்க வேண்டுமா? வேல்ஸ் இது என்ன சோதனை... “ என்று உள்ளுக்குள் புலம்பியவாறு தன் வேலையை ஆரம்பித்தாள்..

அதே போல மீட்டிங் ஆரம்பிக்க அனைவரும் வந்து அமரவும் அவளும் வேற வழியில்லாமல்  தன் வட்டத்துடன் அங்கு வந்திருந்தாள் .. வழக்கம் போல கடைசி வரிசையில் சென்று  அமர்ந்தவள் உள்ளேயும் படபடக்க அதை  மறைக்க தன் நண்பர்களுடன் ஏதேதோ பேசி சமாளித்தாள்...

அப்படி பேசி சிரித்து கொண்டிருக்கும் பொழுது தான் மகிழன் உள்ளே வந்தான்.. அவனை கண்டதுமே அவன் தன்னை இறுக்கி அணைத்ததும் அவள் இடையில் அவன் கை ஊர்வலம் வர ஆரம்பித்ததும் நினைவு வர, உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தாள்..

“ஆல் இஸ் வெல்... “ என்று தனக்குள்ளயே பல முறை சொல்லி தன்னை கட்டுக்குள் கொண்டு வர, அதே நேரம் அவன் பார்வை அவளிடம் வந்து குத்திட்டு நின்றதை கண்டதும் மீண்டும் கொதிக்க ஆரம்பித்தது...

அவனை முறைத்தவாறே அவள் இருக்க அடுத்த சில நொடிகளில் அவன் வெளியேறி  இருந்தான்..

அதை கண்டு உதட்டை சுளித்து தன் தோளை குலுக்கி ஏளனமாக சிரித்தாள் சந்தியா..

வெளியில் வந்த மகிழனுக்கோ இன்னும் இதயம் படபடவென்று  அடித்து கொண்டது..வேகமாக அருகில் இருந்த ரெஸ்ட் ரூம் ல் புகுந்து கொண்டவன் மெல்ல தன்னை ஆசுவாச படுத்தி கொண்டிருந்தான்...

ஓரளவுக்கு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன்

“சே... என்ன இது ? இப்படி மோசமா நடந்துக்கறேன் ?.. இது அலுவலகம்.. இங்க நான் ஒரு ஆர்கிடெக்ட்.. அதை தாண்டி எந்த ஒரு உணர்வும் என்னை பாதிக்க கூடாது... “ என்று மனதில் உருபோட்டான்.. 

“அவள் யாரோ... இங்கு அவள் ஒடு டெஸ்டர்.. அவ்வளவுதான்... அதற்கு மேல் எதையும் நினைக்க கூடாது மனமே.. “ என்று தன் இதயத்துக்கு இன்ஸ்ட்ரக்சன்ஸ் கொடுத்தவன் ஓரளவுக்கு தன்னை கட்டுக்குள் கொண்டு வந்தவன் மீண்டும் வேகமாக  வெளி வந்து அந்த கான்ப்ரன்ஸ் அறைக்கு சென்றான்..

மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் சாரி சொல்லி தன் பிரசென்டேசனை ஆரம்பித்தான்... ஓரளவுக்கு அதில் வெற்றியும் அடைந்தான்.. எல்லாரையும் பொதுவாக பார்த்து விளக்கி கொண்டிருந்தவன் பார்வை சந்தியாவை மட்டும் மறக்காமல்  தவிர்த்தது....

ஒரு வழியாக தன் பிரசென்டேசனில் மூழ்கி விட, பாதியில் சில பேர் அவர்களுடைய சந்தேகங்களை கேட்க ஆரம்பிக்க அவர்களுக்கு விளக்கம் சொல்லும் வகையில் பழைய மகிழன் திரும்பி இருந்தான்..

எப்படியோ சமாளித்து அந்த மீட்டிங் ஐ வெற்றிகரமாக முடித்தான்.. அனைவரும் எழுந்து அவனுக்கு அருகில் வந்து  தேங்க்ஸ் சொல்லி வெளியேறினர்..

கடைசி வரிசையில் அமர்ந்து இருந்த சந்தியா அன்ட் கோ வும் அருகில் வர, இதுவரை  அமைதியாக இருந்த அவன் இதயம் மீண்டும் லப் டப் என வேகமாக துடிக்க ஆரம்பித்தது...

உடனே தன் மடிக்கணினியில் ஏதையோ  பார்ப்பதை போல தலையை குனிந்து கொண்டான்.. சந்தியாவும் அவன் அருகில் வந்ததும் யாரும் அறியாமல் அவனை மீண்டும் ஒரு உஷ்ண பார்வை பார்த்து விட்டு சென்றாள்..

தலையை கீழ குனிந்திருந்தாலும் ஓரக் கண்ணால் அவளை பார்த்து கொண்டே தான் இருந்தான்.. அவள் அவனை முறைத்து விட்டு செல்வதை கண்டதும்

“ஸப்பா... சரியான கண்ணகி தான் போல.. இப்படி முறைக்கிறா..முறைச்சே ஆளை எரிச்சிடுவா போல.. இன்னும் வெள்ளிகிழமை நடந்ததை மறக்கலையோ?  “ என்று எண்ணினான்

“ஹ்ம்ம் எப்படி மறப்பா? நீ மறக்கற மாதிரியா பண்ணி வச்ச? “ என்று முறைத்தது அவன் மனஸ்..

உடனே அவன் உதட்டில் குறுநகை தவழ, மெல்லிய வெட்கத்துடன் சிரித்து கொண்டான் மகிழன்...!  

“என்ன தல.. தானா சிரிக்கறீங்க.. எங்ககிட்டயும் சொன்னா நாங்களும் சிரிப்போம் இல்ல.. “ என்றவாறு உள்ளே நுழைந்தனர் அஜய், ப்ரவீன் மற்றும் சிலர்...

அடுத்த  மீட்டிங் அதே அறையில்  டெவ் லீட் உடன் என்பதால் முந்தைய  மீட்டிங் முடியவும் மகிழன் அங்கயே நின்று  கொண்டான்.. மற்றவர்கள் வெளியேறி  சென்றதும்  அடுத்த மீட்டிங் ல் கலந்து கொள்பவர்கள் மட்டும் சிறு பிரேக் எடுத்து கொண்டு மீண்டும்  உள்ளே  நுழைந்தனர்..

மகிழன் தனியாக சிரித்து கொண்டிருப்பதை கண்ட அஜய் அவனை ஓட்ட, மீண்டும் மகிழன் வெட்க பட்டு சிரித்தவாறு தன் தலையை பின்னால் தடவி கொண்டு

“நத்திங். அஜய்.. ஜஸ்ட் ரிமெம்பர்ட்  ஒன் ஜோக் கேம் இன் வாட்ஸ்அப்.. “ என்று சொல்லி சமாளித்தான்...

“தல... அந்த ஜோக் ஐ  முதல்ல எங்களுக்கும் பார்வாட் பண்ணுங்க.. நாங்களும் சிரிப்போம் இல்ல..நம்ம ஆபிஸ் குரூப்ல எப்ப பார் ஆபிஸ் மேட்டரை பார்த்து பார்த்து போர் அடிக்குது..கொஞ்சம் ஜாலியான மேட்டரையும் பார்வார்ட் பண்ணுங்க தல... ” என்று  சிரித்தான்..

அவனை முறைத்த மகிழன் அடுத்து தன் டிஸ்கஷனை ஆரம்பிக்க அதன் பிறகு நேரம் ஓடி சென்றது...

திய உணவு இடைவேளைக்கு பிறகு நான்கு மணி அளவில் மீட்டிங் எதுவும் இல்லாமல் கொஞ்சம் ரிலாக்ஸ்ட் ஆக தன் இருக்கையில் அமர்ந்து இருந்தான் மகிழன்...

அவன் பார்வை எதேச்சையாக தன் டெஸ்க் மேல் படற, அங்கு அவனுக்கும் சந்தியாக்கும்  சேர்த்து கொடுத்திருந்த பெஸ்ட் பேர்க்கான பரிசின் மேல் படர்ந்தது..

இது அவளுக்கும் சொந்தமானது தான்... எனவே அதை அவளிடம் கொடுக்க எண்ணி முதன் முதலாக ஸ்கைப் ல் அவள் பெயரை தேடினான்..

சந்தியா என செர்ச் பாண்ணவும் பல சந்தியாக்கள் வந்திருக்க, அதில் இதழ் விரிய காலையில் மலர்ந்த ரோஜாவை போல சிரித்து கொண்டிருந்த அவனவளின் புகைப்படம் தாங்கி இருந்த கான்டாக்ட்  ஐ பார்த்ததும் அவன் இதயம் மீண்டும் துள்ளி குதித்தது..

அந்த புகைப்படத்தில் இன்னும் கொஞ்சம் சிறு பெண்ணாக இருந்தாள்.. முகத்தில் குறும்பும் கண்ணில் சிரிப்பும் உதட்டில் ஒரு ஏளன புன்னகையும் மின்ன மலர்ந்து சிரித்திருந்தாள்..

அது ஒரு இரண்டு வருடம் முன்பு எடுத்ததாக இருக்க வேண்டும் என எண்ணியவன் அதை தன் லேப்டாப்பில் சேவ் பண்ணி கொண்டான்...

பின் அவளை எப்படி அழைப்பது என அடுத்த குழப்பம்.. இதுவரை அபீஸியல் தவிர வேற எதுவும் அவளிடம் ஏன் மற்றவர்களிடம் கூட அந்த அலுவலகத்தில் பேசியதில்லை அவன்..

ரோகிணி ஏதாவது பெர்சனலாக பேச வந்தால் கூட அவன் தடுத்து விடுவான்.. அப்படி பழகியவன் இன்று முதல் முறையாக தன் உள்ளம் காதலில் நிரம்பி வழிய அதை கட்டு படுத்த முடியாமல் திணறினான்...

அவளை அழைக்க, அவளிடம் பேச தயக்கமாக இருந்தது...

அந்த ஸ்கைப் வின்டோவை திறந்து வைத்திருந்தவன் அவளை எப்படி  அழைப்பது, அதோடு எப்படி பேசுவது  என்ன பேசுவது என மனம் முரண்டு பண்ண, மெல்ல தன்னை சமாளித்தவன் வெறும் “Hi... “  என்று டைப் பண்ணி அனுப்பினான்...

தன் வேலையில் மும்முரமாக இருந்த சந்தியா திடீரென்று மகிழன் என்ற பெயரில் ஸ்கைப் மெசேஜ் வந்திருக்க ஒரு நொடி திகைத்து ஷாக் ஆனாள்..

இதுவரைக்கும் இருவருமே ஸ்கைப் ல் சேட் பண்ணியதில்லை.. இருவரும் பார்க்கும் பொழுது பெரும்பாலும் முறைத்து கொள்வதோடு சரி.. மற்றபடி ப்ராஜெக்ட் சம்பந்தமாக இருவருக்கும் நேரடியாக வேலை செய்யும் வாய்ப்பு இல்லாததால் இருவரும் இதுவரை சேட் பண்ணியதில்லை..

இன்று முதல் முதலாக  அவனிடம் இருந்து ஹாய் என வரவும் முதலில் திகைத்து அதிர்ந்தவள் பின் சமாளித்து கொண்டு

“இந்த மங்கி எதுக்கு எனக்கு பிங் பண்றான்? இவன் பிங் பண்ணினால் நான் உடனே ரெஸ்பான்ஸ் பண்ணனுமாக்கும்? நான் ஒன்னும் பதில் சொல்ல மாட்டேன் போடா.. எதுவானாலும் வேணும்னா நேர்ல வந்து கேள்.. “ என்று  உள்ளுக்குள் முறுக்கி கொண்டவள் அவன் மெசேஜை தவிர்த்து விட்டு  தன் வேலையில் கவனம் செலுத்தினாள்..

ஆனால் கண்கள் மட்டும் அந்த ஸ்கைப் வின்டோ லயே இருந்தது.. அடுத்ததாக என்ன செய்தி வரும் என்று ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தாள்..

அவள் பதிலுக்காக காத்திருந்த மகிழன் சில நிமிடங்கள் ஆகியும் அவளிடம் இருந்து  எந்த பதிலும் வராமல் போக,

“சரியான அழுத்தக்காரி தான் போல.. ஒரு ஹாய் க்கு ரிப்ளை பண்றாளா பார்... டேய் மகிழா...மெய்யாலுமே இந்த புள்ளதான் உனக்கு வேணுமா?

பேசாம இந்த ஆஃபர் ஐ ரிஜக்ட் பண்ணிட்டு வேற நல்ல சாந்த சொரூபிணியா குடும்ப குத்து விளக்கா, புஸ்வானம் மாதிரி இல்லன நம்ம மதுகுட்டி மாதிரி ஒரு புள்ளைய தேடேன்...

இவள பார்த்தா ஜான்சி ராணி  மாதிரி, படபடக்கும் பட்டாசா.. ம்கூம் சாதாரண பட்டாசு கூட  இல்ல ஆட்டோ பாம் போல இருக்கா.. அன்னைக்கு வாங்கின அடியே இன்னும் வலிக்குது எனக்கு..

திரும்பவும் ஏதாவது முயற்சி செய்யறேன் னு போய் மாட்டிக்காத.. அப்புறம் தர்ம அடிதான் கொடுப்பா.. அதனால் உன் முடிவை திரும்ப ஒருமுறை மறு பரிசீலனை செய்யேன்..

பேசாம நம்ம ரோ வையே ஓகே பண்ணிடேன்.. அந்த புள்ள  எவ்வளவு அமைதியா,  சாந்தமா உனக்காக காத்துகிட்டிருக்கு.. அத கட்டிகிட்டா உன் வாழ்வு சொர்க்கமாகும்..

இந்த சண்டக்காரிய கட்டிகிட்ட தினமும் ஜாக்கிசான் படம் தான் உன் வீட்ல.. சொல்லிட்டேன்.. புத்தியா பொழச்சுக்க.. “ என்று புலம்பியது அவன் மனஸ்..

“ஹா ஹா ஹா.. நோ வொர்ரீஸ் மனஸ்... நான் ஒரு தரம் முடிவு  எடுத்துட்டா  என் பேச்சை நானே கேட்க மாட்டேன்.. ஏன் அந்த ஆண்டவனே வந்தாலும் அதை  மாத்திக்க மாட்டேன்.. “ என்று  விரல் நீட்டி ரஜினி ஸ்டைலில் ஆக்சன் பண்ணினான் மகிழன்...  

“நீ வேணா பார்... அந்த ஜான்சி ராணியோ, ராணி மங்கம்மாவோ அவளை  எப்படி அடக்கி ஒடுக்கி  என் வழிக்கு கொண்டு வர்ரேனு பார்.. எப்பவும் முரட்டு குதிரையை அடக்கி அதில சவாரி செய்யறது தான் கிக் அன்ட்  திரில் மனஸ்...வெய்ட் அன்ட் ஸீ... “ என்று  சிரித்தான் மகிழன்..

“டேய்..டேய்..டேய்.. போதும் நிறுத்து..நீ முதல்ல ஒரு சாதாரண குதிரை பக்கத்துல போய்ருக்கியா? அட்லீஸ்ட் அது தாடையை தான்  தடவி இருக்கியா? உன் அப்பா உன்னை குதிரை பக்கம் தூக்கிட்டு போனாலே கண்ணை இறுக்க மூடிகிட்டு போக மாட்டேனு அடம்புடிச்சு அழுது ஆர்பாட்டம் பண்ணின ஆள் நீ..

நீ போய் குதிரையை அதுவும் முரட்டு குதிரையை அடக்க போற.. இத நான் நம்பணும்..” என்று நக்கலாக சிரித்தது அவன் மனஸ்..

“ஹீ ஹீ ஹீ.. அதெல்லாம் ஒரு ப்ளோல வர்ரது மனஸ்.. நீ அதெல்லாம் கண்டுக்காத.. சரி வா..  என் டார்லிங் ரிப்ளை எதுவும் பண்ணினாளானு பார்க்கலாம்..” என்றவன் அந்த ஸ்கைப் வின்டோவை பார்க்க, சந்தியா அவனுக்கு பதில் எழுவும் அனுப்பி இருக்கவில்லை...

“ராட்சசி.. பார் ஏதாவது பதில்  அடிச்சாலானு.. ஹ்ம்ம் சரி .நம்ம முயற்சியை கை விடாமல்  அடுத்த மூவ் ஐ பார்க்கலாம்.. “ என்றவன் மீண்டும் அந்த வின்டோவை ஓபன் பண்ணியவன்

Your prize is at my desk. Please come and collect.” என்று அனுப்பினான்..

உடனேயே அவளிடம் இருந்து பதில் வந்தது

I don’t need.” என்று பதில் அனுப்பியவள் கூடவே ஒரு டெவில் இமோஜியையும் அனுப்பி இருந்தாள்..

அதை  கண்டவன் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான்..அதை கண்ட மனஸ் கடுப்பாகி

“டேய்.. அவ உன்னை திட்டி முறைத்து  டெவில் பொம்மையை அனுப்பி இருக்கா.. அதுக்கு எதுக்கு இப்படி குதிக்கிற? “ என்று முறைத்தது மனஸ்..

“ஹீ ஹீ ஹீ .. டியர் மனஸ்.. இதெல்லாம் காதலர்க்கு மட்டும் தெரியும் ரகசியம்... சாமியாரான  உனக்கு  இந்த ட்ரிக் எல்லாம் தெரியாது.. “ என்று சிரித்தான்..

அதை கேட்டு மனஸ் மீண்டும் முறைக்க

“ஓகே ஒகே..முறைக்காத டியர்...  அந்த ரகசியத்தை சொல்லிடறேன்... இப்ப நான் அனுப்பின மெசேஜ் க்கு என் டார்லிங் உடனே பதில் அனுப்பினா இல்லை.. அப்படீனா என்ன அர்த்தம் ? “ என்றான் தன் புருவத்தை  உயர்த்தி கேள்வியாக...

ஹ்ம்ம்ம் என்ன அர்த்தம்? “ என்றது மனஸ் யோசனையாக

“ஹா ஹா ஹா அவ என்னையேதான் நினைச்சுகிட்டிருக்கா மனஸ்..என் சேட் வின்டோவை தான் இவ்வளவு நேரமா  பார்த்துகிட்டு இருந்திருக்கா.. அதான் நான் அனுப்பியதும் உடனே பதில் வந்தது..எப்புடீடீடீ “ என்று தன்  காலரை தூக்கி விட்டு கொண்டான் மகிழன்...

“என்னமோ பண்ணித் தொலை.. எனக்கு என்னவோ நீ இன்னும் நல்லா அவ கிட்ட வாங்க போறனு கன்பார்ம் ஆகிடுச்சு...அதை கண் குளிர காணத்தான  போறேன்.. “ என்று சிரிக்க, அதற்கு முறைத்தான் மகிழன்..

அவள் அனுப்பி இருந்த பதிலுக்கு அவனும் ஏதோ டைப் பண்ணி கொண்டிருக்க, அந்த நேரம் மனோகர் அங்கு வந்தான்.. அவனை கண்டதும் உடனே தன் ஸ்கைப் சேட் வின்டோவை அவசரமாக மூடினான்..

அருகில் வந்த மனோ,

“ஹாய்.. மகி.. ப்ரியா? கேன் வி கேவ் எ காஃபி ?” என்று அழைக்க அவனுக்கு மறுத்து சொல்ல முடியாமல்

“ஸ்யூர் மனோ.. லெட்ஸ் கோ.. “ என்று மனமே இல்லாமல் சந்தியா உடனான உரையாடலை பாதியில் விட்டு விட்டு தன் இருக்கையில் இருந்து எழுந்து மனோ உடன் நடந்தான் கேப்டீரியாவை நோக்கி..

செல்லும் வழியில் வழக்கம் போல அவன் கண்கள் சந்தியா இருக்கைக்கு தாவி சென்றது..

அருகில் இருந்த மயில் இடம் ஏதோ சொல்லி சிரித்து கொண்டிருந்தாள் சந்தியா..

மகிழன் அவளை பார்த்து கொண்டே ஒரு பாக்கெட்டில் கையை விட்டு கொண்டு மறு கையால் தன் பின்னந்தலை கேசத்தை தடவியவாறு ஓர கண்ணால் அவளை பார்த்து கொண்டே மனோவுடன் நடக்க, அதே நேரம் சந்தியாவும்  எதேச்சையாக திரும்பியவள் மகிழனை காண ஒரு நொடி உள்ளுக்குள் படபடத்தது..

ஆனால் அடுத்த நொடி தன்னை சமாளித்தவள் அவனை பார்த்து முறைக்க, அவனோ  குறும்பு சிரிப்புடன் தன் தலையை பின்னால் தடவியவாறு குறும்பாக கண் சிமிட்டிவிட்டு மனோ உடன் சென்றான்..

துக்கு அடுத்து வந்த நாட்கள் நேரம் இறக்கை கட்டி பறந்தது.. புது ப்ராஜெக்ட் ற்காக மனோகர் புது  டீம் ஐ பார்ம் பண்ணுவதில் பிசியாக இருந்தான். டீம் மெம்பர்களை தேர்ந்தெடுப்பதில் மகிழனையும் அவனுடன் இணைத்து கொள்ள, மகிழனுக்கு வேலை கழுத்து வரை இருந்தது..

அதில் பிசியானவன் தற்காலிகமாக தன் மனதில் முளைத்த  புது காதலை ஒதுக்கி வைத்திருந்தான்..ஆனால் வழியில் சந்தியாவை சந்திக்கும் பொழுதெல்லாம் அவள் அவனை  முறைப்பதும் அதற்கு  அவன் குறும்பாக கண் சிமிட்டி செல்வதும் தொடர்ந்து கொண்டு தான் இருந்தது...

ஒரு வழியாக  புது ப்ராஜெக்ட் ஆரம்பிப்பதற்கான எல்லா வேலையும் முடிந்திருக்க, அந்த வார இறுதி வெள்ளிகிழமை அன்று  மனோ புது டீம் ஐ அழைத்து அவர்களை அறிமுக படுத்தி வினித் ஐ அந்த டீம் மேனேஜராகவும் மனோ  மேற்பார்வை பார்ப்பதாகவும் அறிவித்தான்...

மகிழன் அந்த புது ப்ராஜெக்ட் ன் சீப் ஆர்கிடெக்ட் என்றும் அறிவித்தான்..

முக்கிய மாற்றமாக, சந்தியாவும் மயில் ம் புது ப்ராஜெக்ட் ல் இருக்க அன்பு மட்டும்  பழைய ப்ராஜெக்ட் லயே நின்று விட்டாள்..

அந்த மீட்டிங் முடிந்து அனைவரும் தங்கள்  இருக்கைக்கு திரும்பி இருக்க, அன்பு மட்டும் பழைய ப்ராஜெக்ட் ல் நின்று விட்டதை  அறிந்ததும் அன்பு புலம்ப, சந்தியா அவளை சமாதான படுத்தினாள்.

“இதுக்கு ஏன் டீ இப்படி ஒப்பாரி வைக்கிற.. வேற ப்ராஜெக்ட் னாலும் எல்லாரும் இங்க தான இருக்க போறோம்.. நான் என்னவோ கல்யாணம் ஆகி என் புருசன் வீட்டுக்கு போற மாதிரி இப்படி ஒப்பாரி வைக்கிற ? “ என்று சிரித்தாள் சந்தியா...

“ஹ்ம்ம் உனக்கு என்னடி மா??.. நீ ஈசியா சொல்லிட்ட.. இந்த பழைய ப்ராஜெக்ட் ல் எதுவும் டவுட் னா நான் உன்கிட்ட தான கேட்பேன்.. இப்ப நீ வேற ப்ராஜெக்ட்க்கு போய்ட்டினா  நான் போய்  யார் கிட்ட கேட்பேன்..?  “ என்று மீண்டும் ஒப்பாரி வைக்க

“அடச்சீ. முதல்ல புலம்பறதை நிறுத்து..நான் புது ப்ராஜெக்ட் க்கு போனாலும் உடனே பழைய  ப்ராஜெக்ட் ஐ மறந்திட மாட்டேன்..எனக்கு நீ வேலை பண்றதும்  தெரியும் டீ.. நானே உனக்கு சொல்லி தர்ரேன்..

எனக்கு என்னவோ அந்த மங்கி வேணும்னே சதி பண்ணி நம்மளை பிரிச்சுட்டான் னு நினைக்கிறேன்..

எனக்கும் அவனுக்கும்  ஒரு கணக்கு பாக்கி இருக்கு.. அதை  தீர்க்க, இப்படி பழி வாங்கறான்.. வாங்கட்டும்.. எவ்வளவு தூரம் போவானு நானும் பார்க்கறேன்.. “ என்று  பல்லை கடித்தாள் சந்தியா...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!