அழகான ராட்சசியே!!-21
அத்தியாயம்-21
அன்று மாலை அலுவலகம் முடிந்து அனைவரும் கிளம்பி
சென்றிருக்க , மகிழன் கொஞ்சம் வேலை பாக்கி இருக்க, அலுவலகத்திலயே
தங்கி வேலையை மும்முரமாக செய்து கொண்டிருந்தான்..
ஒரு
வழியாக 7 மணி அளவில் எல்லாம் முடிந்திருக்க, இருக்கையில் இருந்து எழுந்து தன்
கைகளை நீட்டி நெட்டி முறித்தவாறு கண்களை சுழல விட்டான்..
நீண்ட
நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து கணினியில் வேலை செய்வது கண்களுக்கு பாதிப்பு என்பதால்
மணிக்கொரு முறை எழுந்து நின்றோ சிறிது
தூரம் அலுவலகத்தில் நடந்தோ ரிலாக்ஸ் பண்ணுவது அவன் வழக்கம்..
அதே
போல இப்பொழுதும் எழுந்து நின்றவன் கண்களை சுழல விட, தொலைவில் சந்தியாவும் தன் வேலை முடித்து
வீட்டிற்கு கிளம்ப ஆயத்தமாகி கொண்டிருந்தாள்..
அவள்
கேங் யாரும் அங்கு இல்லை.. முன்னரே கிளம்பி சென்றுவிட்டனர் போலும் என்று எண்ணியவன்
அவள் கிளம்புவதை கண்டதும் அவசரமாக தானும் தன் மடிக்கணினியை அணைத்து தன் பேக்கில்
வைத்து கொண்டு அவளுடன் செல்ல ஆயத்தமானான்..
அவன்
தயாராகும் முன்னரே அவள் எக்சிட் கதவை திறந்து கொண்டு மாடி படிகளில் இறங்க
ஆரம்பித்து இருந்தாள்..
அதை
கண்டவன் வேகமாக நடக்க, இல்லை கிட்ட தட்ட ஓடினான் அவளை பிடிக்க..
அவனும்
படிகளில் இறங்க அதற்குள் அவள் வேகமாக இறங்கி கொண்டிருந்தாள்..அவளை பிடித்து
விட வேண்டும் என்று இரண்டு இரண்டு படிகளாக தாவி இறங்கியவன் அவள்
கடைசி கீழ் தளத்தை அடைய இருக்க அவளை தடுக்கும் விதமாக
“ஹலோ....
“ என்றான்..
அவள்
காதில் அவன் அழைத்தது விழுந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் அவள் மேலும் நடக்க,
“ஹலோ
தியா.... “ என்றான் சத்தமாக.
இந்த
முறை அவன் குரலை கேட்டதும் நின்றவள் திரும்பி பார்க்க, அதற்குள் மகிழன்
வேகமாக இறங்கி ஓடி வந்து கொண்டிருந்தான்..
அவன்
கிட்ட தட்ட அவள் அருகில் வந்ததும் தன் புருவங்களை
உயர்த்தி என்ன? என்று பார்வையால் வினவினாள்.. அவனை பார்த்து முறைக்கவும் தவறவில்லை..
“ஷப்பா..
என்னா ஸ்பீட்.. இந்த மாதிரி மாடி படி இறங்கும்
போட்டி வைத்தால் உனக்குத் தான் பர்ஸ்ட் ப்ரைஸ்.. “ என்று அவளை
குறுகுறுவென்று பார்த்து அசடு வழிந்து சிரித்தான் மகிழன்..
அவன்
பார்வை அவளுக்கு புதிதாக இருந்தது.. இந்த மாதிரி இதுவரைக்கும் அவன் யாரிடமும்
வழிந்து நின்று அவள் பார்த்ததில்லை..
“இப்ப
எதுக்கு இந்த மாதிரி வழியறான்? “ என அவசரமாக யோசித்தவள்
“ஹலோ
மிஸ்டர் மங்கி... வழிஞ்சது போதும்.. துடச்சுக்கங்க... என்ன மேட்டர்? இப்ப எதுக்கு
என்னை நிறுத்தினிங்க? “ என்றாள் முறைத்தவாறு..
“அடப்பாவி..
மகிழா.. இதுவரைக்கும் எந்த புள்ள கிட்டயாவது இப்படி வழிஞ்சு நின்னிருக்கியா? பார்.. அத கூட இந்த
ரவுடி கண்டு புடிச்சிட்டா.. இப்படியா பப்ளிக் ஆ ஜொல்லு விடுவ? “ என்று அவன் தலையில் ஒரு கொட்டு
வைத்தது அவன் மனஸ்..
அதை
அசால்ட்டாக தவிர்த்தவன்
“உன்
ப்ரைஸ் இன்னும் என் க்யூபிக்கல் லயே இருக்கு..வந்து எடுத்துக்க.. “ என்றான்
புன்னகைத்தவாறு ஏதாவது பேச வேண்டுமே என்று எண்ணி..
“அது
ஒன்னும் எனக்கு வேண்டம்.. “ என்று முகத்தை சுளித்தாள் சந்தியா..
“ஏன்? அன்னைக்கு நீ தான்
நல்லா பெர்பாம் பண்ணின.. ஆக்சுவலா உன்னுடைய பெர்பார்மன்ஸ் னால தான் நம்ம ஷோ ஹிட்
ஆச்சு.. அதனால அந்த ப்ரைஸ் உன்கிட்டதான் இருக்கணும்.. “என்று அவளை புகழ்ந்து
தள்ளினான்..
“ஹலோ...
போதும் ஐஸ் வச்சது.. ஏற்கனவே மார்கழி பனில ரொம்ப குளிருது.. உங்க ஐஸ் ல இன்னும்
குளிர் எடுத்து நடுங்க போறேன்.. “ என்று முறைத்தவள்
“அந்த
ப்ரைஸ் ஒன்னும் எனக்கு வேண்டாம்..நீங்களே
வச்சுக்கங்க.. ”
“ஏன்
வேண்டாம்..? காரணத்தை சொல்..” என்றான்
மகிழனும் விடாமல்..
“வந்து.. எந்த ப்ரைஸ் ம் நாம வாங்கி பத்திர படுத்தி
வச்சுக்கறது அந்த நிகழ்ச்சியின் ஞாபகமா
வைத்து கொள்வதற்காக.. என்னை பொறுத்தவரை அந்த ஃபேசன் ஷோ நிகழ்ச்சி மறக்க
வேண்டியது.. அதனால எனக்கு ப்ரைஸ் வேண்டாம்.. “ என்றாள் வெறுப்பாக
அவள்
ஏன் வேண்டாம் என்கிறாள் என்று காரணம் புரிந்து விட, அவளை
மடக்க எண்ணி பேச்சை வளர்த்தான்
“ஏன்
அந்த ஷோவை மறக்கணும்? .. எவ்வளவு சூப்பரா இருந்தது தெரியுமா? “ என்றான்
உள்ளுக்குள் பொங்கிய சிரிப்பை கஷ்ட பட்டு அடக்கி கொண்டு..
“ஹ்ம்ம்
ஷோ எல்லாம் நல்லாதான் இருந்தது.. ஆனால் அதுக்கு பிறகு நடந்தது தான் நான் மறக்க
விரும்பறேன்.. “ என்றாள் அதே முக சுளிப்புடன்..
“ஓ..
ஷோக்கு பிறகு அப்படி என்ன நடந்துச்சு ? “ என்றான் மீண்டும் எதுவும் தெரியாதவன் போல.
“ஹ்ம்ம்
ஒரு எருமை வந்து என்னை உரசிடுச்சு.. அதோட அருவருப்பு இன்னும் என மனசை விட்டு போகலை.. “ என்றாள்
முறைத்தவாறு..
“ஹா
ஹா ஹா .. அன்னைக்கு பங்சன் ல அத்தனை பேர் இருக்க உன்னை மட்டும் தேடி வந்து அந்த
எருமை உரசிச்சினா அப்ப அந்த எருமைக்கு உன்னை ரொம்ப புடிச்சிருச்சு னு
அர்த்தமாக்கும்.. “ என்று குறும்பாக
சிரித்தான்..
“ஹ்ம்ம்
புடிக்கும் புடிக்கும்.. அடுத்த தரம் அந்த
மாதிரி எதுவும் நடந்துச்சு அந்த உரசின
கையை உடைத்து அடுப்புல
வச்சுடுவேன்..ஜாக்கிரதை.. “
என்றாள் கோபம் கொப்புளிக்க..
“ஒகே..ஓகே..
சில் பேபி..எதுக்கு இவ்வளவு டென்ஷன்? ஓவர் டென்ஷன் உடம்புக்கு ஆகாதாம்.. அதுவும் ஐ.டி ல இருக்கிறவங்களுக்கு
இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆகாதாம்.. “ என்று
சிரித்தான்..
“ஹலோ
மிஸ்டர் மங்கி. நான் ஒன்னும் உன் உபன்யாசத்தை கேட்க வரலை..எனக்கு நேரமாச்சு.. நான் கிளம்பறேன்.. “
என்று முன்னால் நகர ஆரம்பிக்க, இரண்டே எட்டியில்
அவளை கடந்து அவளுக்கு முன்னால் வந்து அவள் வழியை மறைத்தவாறு நின்று கொண்டான் மகிழன்...
அதை
கண்டு திகைத்தவள்
“ஏய்..
இப்ப எதுக்கு வழியை மறைக்கிற? .. நான் வீட்டுக்கு போகணும்.. “ என்று முறைத்தாள்..
“ஹ்ம்ம்
போகலாம் பேபி.. முதல்ல நீ அந்த ப்ரைஸை
வாங்கிக்க ஒத்துக்க.. அப்ப வழியை விடறேன். “என்றான் அவளை ஒரு மார்க்கமாக
பார்த்தவாறு..
அவன்
அவளை பேபி என்று அழைத்ததும் அவள்
பக்கத்தில் இப்படி அருகில் நெருங்கி நிக்கவும் கண்டவள் அதுவரை தெரியாத படபடப்பு வந்து ஒட்டி கொண்டது
அவளிடம்..
ஆனாலும்
தன்னை மறைத்து கொண்டவள்
“முதல்ல
அன்னைக்கு நடந்துகிட்டதுக்கு சாரி சொல்லுங்க.. அதுக்கப்புறம் நான் அந்த
ப்ரைஸை வச்சுக்கறதா வேணாமானு
யோசிக்கிறேன்.. “ என்றாள் இடுப்பில் கை வைத்து முறைத்தவாறு..
“வாட்? சாரியா? எதுக்கு சாரி ? “ என்றான் தன் புருவங்களை உயர்த்தி
“ஹ்ம்ம்
அன்னைக்கு... “ என்று சொல்ல வந்தவள் அன்று நடந்த சம்பவம் நினைவு வர, அவன் மார்பின் மீது அவள் சாய்ந்திருந்த
அந்த சில நொடிகளும் அவன் அவளை இறுக்கி அணைத்து அவள் இடையில் அவன் கை ஊர்வலம்
வந்ததும் நினைவு வர,
தானாக அவள் கன்னம் சிவக்க ஆரம்பித்தது..
ஆனால்
அடுத்த நொடியே தன்னை கட்டுபடுத்தியவள்
“ஹ்ம்ம்
அன்னைக்கு வந்து என்னை இடுச்சீங்க இல்ல..
அதுக்குத்தான்... “ என்று கார பார்வை பார்த்தாள்..
அவள்
முகத்தில் வந்த அந்த நொடி பொழுது வெட்க சிவப்பை கண்டு கொண்டவன் உள்ளுக்குள் துள்ளி
குதித்தான்..
“ஆஹா..
பொண்ணு வெட்க படறதை பார்த்தால் அவளுக்கும்
எனக்கு மாதிரியே சம்திங்.. சம்திங்... “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டவன் அந்த
தைர்யத்தில் இன்னும் கொஞ்சம் அவளுடன் விளையாண்டு பார்க்க எண்ணி
“ஹா
ஹா ஹா அது இடிக்கறது இல்லை பேபி.. கட்டி பிடிக்கிறது..வாட் எ ஸ்வீட் அன்ட் அன்பர்க்கெட்டபில்
முமென்ட்..!! " என்று கண்ணை மூடி
அந்த நிமிடத்தை மீண்டும் அனுபவித்தான்..
அதில்
கடுப்பானவள்
"ஹலோ
மங்கி.. மைன்ட் யுவர் வோர்ட்ஸ்.. இந்த மாதிரி எல்லாம் பேசாதிங்க.. "
என்று முறைத்தாள்..
"ஹா
ஹா ஹா அன்று என் மீது நீ வந்து விழுந்த அந்த நொடி அப்படியே சிலிர்த்து
போய்ட்டேன்.. இப்ப நினைத்தாலும் அப்படியே சிலிர்க்குது..
இன்னொரு
சான்ஸ் கிடைக்குமா? " என்று அவன் முடிக்கும் முன்னே
"யூ
பொறுக்கி ராஸ்கல்.... " என்று தன்
கையை ஓங்கி இருந்தாள் அவன் கன்னத்தை நோக்கி..
ஆனால்
இந்த முறை இதை எதிர்பார்த்தவன் லாவகமாக ஓங்கிய அவள் கையை பிடித்து கொண்டவன்
"என்
கன்னத்தை தொட்டு பார்க்க உனக்கு ஆசைனா
நேரடியா சொல்லு பேபி.. ஐம் ஆல்வேஸ் வெயிட்டிங்..
இந்த
பொன்னான பட்டு கரங்கள் என் கன்னத்தில் பட
நான் கொடுத்து வச்சிருக்கணும்.. கமான்.. ஸ்லாப் மீ.." என்று அவள் கையை அவன் கன்னத்தில் வைக்க எடுத்து செல்ல
அவன் கன்னத்தின் அருகில் வரவும் டக்கென்று
தன் கையை உருவி கொண்டாள் சந்தியா..
"ஹா
ஹா ஹா.. அவ்வளவு பயமா? என் கன்னத்தை தொட.. " என்று குறும்பாக சிரித்தான் மகிழன்..
"ஹலோ..
எனக்கு ஒன்னும் பயமில்லை.. கண்டதையும் தொட்டு என் கையை அழுக்காக்கி கொள்ள எனக்கு
ஆசை இல்லை.. சரி வழி விடுங்க. நான் போகணும்.. " என்றாள் சற்று இறங்கிய
குரலில்
"ஹ்ம்ம்
நீ அந்த ப்ரைஸ் ஐ வாங்கிக்க,, நான் வழி விடறேன்..
" என்று மீண்டும் அதிலயே வந்து நின்றான்
"ஐயோ
முருகா... இது என்ன கொடுமை.. எனக்கு வேண்டாம்னா வச்சுக்க வேண்டியது தான.. சரி
என்கிட்ட சாரி சொல்லுங்க.. அப்ப அதை வாங்கிக்கறேன்.. " என்றாள் அவளும்
பிடிவாதமாக..
"நான்
எதுக்கு சாரி சொல்லணும் பேபி? எனக்கு உரிமையானவளை
என் பொண்டாட்டியைத்தான கட்டி புடிச்சேன்.. அதுக்கு எதுக்கு சாரி? " என்றான் புருவங்களை உயர்த்தி..
அவன்
சொன்னதன் அர்த்தம் புரிய சில நொடிகள் ஆனது சந்தியாக்கு. அதை புரிந்து கொண்டதும்
இன்னும் கோபமானவள்
"வாட்
நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங்..?? " என்று மீண்டும் கை
ஓங்கியவள் அவன் சற்றுமுன் அவன் கன்னத்தை தொட ஆசை னா தொடு என்று சொன்னது நினைவு வர
உடனே தன் கையை இறக்கி கொண்டாள்..
"ஹா
ஹா ஹா.. அது..... பரவாயில்லையே.. என்
பொண்டாட்டி நான் ஒரு தரம் சொன்னதை உடனே மெமரில வச்சுகிட்டு அப்படியே
நடந்துக்கறா... மகிழா .. நீ ரொம்ப கொடுத்து வச்சவன் டா.. “ என்று தன் பக்கம் கையை நீட்டி அவனை புகழ்ந்து
சொன்னான்..
“ஹலோ..
என்ன பேச்சு இது... முதல்ல இந்த மாதிரி பேசறதை
நிறுத்துங்க.. “ என்று
முறைத்தாள்..
“ஓகே..
டார்லிங்.. நான் நேரடியாகவே மேட்டர்க்கு வர்ரேன்..ஐம் இன் லவ் வித் யூ.. எப்ப, எப்படி , எங்க வச்சு நீ என் மனசுக்குள்ள வந்தனு எனக்கு தெரியலை.. ஆனால் இப்ப என்
இதயம் முழுவதும் நீதான்... உன்
ஆட்சிதான்..
என்
மனசுக்குள்ள வந்த அன்னிக்கே என் பொண்டாட்டியாவும் ஆய்ட்ட..
அந்த
உரிமையிலதான் நான் அன்னைக்கு என்னையும் மீறி
கொஞ்சம் அத்து மீறி நடந்து கிட்டேன்.. யாரிடமும் மயங்காத நான் உன்னிிடம்
மட்டுமே என் மனம் சரணடைந்து விட்டது..
நீதான்
என்னவள்.. எனக்கானவள்.. ஐ லவ் யூ தியா... ஐ லவ் யூ சோ மச்.." என்றவன் அவள்
முன் ஒத்த காலை மடக்கி மண்டி இட்டு அவள்
காதலை யாசித்தான்..
“நான்
கிப்ட் எதுவும் ரெடியா வாங்கி வைக்கலை.. தெரியலை.. நானே இந்த நொடி இப்படி என் காதலை சொல்லுவேன் னு எதிர்பார்க்கலை.. அதான் கிப்ட் எதுவும் வாங்கலை..
பட்
ஸ்டில் என்னுடைய இந்த எளிய காதல் பரிசை
ஏற்று கொள் கண்மணி.. " என்றவன் அவள் கை பிடித்து அவள் கையில் மெல்ல இதழ்
பதித்தான்..
சந்தியாவோ
அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்...
அவன்
என்ன பேசுகிறான் என்ன செய்கிறான் என புரிய சில நொடிகள் ஆனது..அவன் செய்கையின்
அர்த்தம் புரிய, உடனே முகத்தில் கோபம் கொப்புளிக்க
"ஹலோ..
உங்களுக்கு என்னை புடிச்சா உடனே நானும்
பல்லை இளிச்சுகிட்டு உன் பின்னாடி வந்திருவேனா? அதுக்கு வேற எவளையாவது பார்.. உன் காதல்
மொழி, இந்த பசப்புக்கெல்லாம் மயங்க மாட்டா இந்த சந்தியா..
இந்த
உலகத்திலயே நான் வெறுக்கிற முதல் ஆள் நீதான்.. உன்னை எப்பவும் எனக்கு
பிடிக்காது..ஐ ஹேட் யூ.. ட்ரை யுவர் லக் வித் அதர் கேர்ள்.. குட் லக்.. "
என்று
பொரிந்து தள்ளியவள் வழியை மறித்தவாறு தன் முன்னே மண்டி இட்டு அமர்ந்து இருந்தவனை
பிடித்து வேகமாக தள்ளி விலக்கியவள் வேகமாக படிகளில் இறங்கி சென்றாள்....
“ஹா ஹா ஹா... இந்த ஜென்மத்துல நீதான் என் பொண்டாட்டி பேபி.. அதை யாராலும் மாத்த முடியாது.. எழுதி வச்சுக்க...இப்பதான் உன்னை இன்னும் ரொம்ப ரொம்ப பிடிக்குது... ஐ லவ் யூ.. லவ் யூ பொண்டாட்டி.. ஹேவ் எ குட் வீக் என்ட்.. " என்று மெல்ல அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லி சிரித்தான் மகிழன்....
Comments
Post a Comment