நிலவே என்னிடம் நெருங்காதே!!-11

 


அத்தியாயம்-11

திரதன் கல்லூரி செல்ல தொடங்கி இருந்தான்...

ஆரம்பத்தில் தன் தாத்தாவின் மீது இருந்த வெறுப்பால் விருப்பமின்றி கடமைக்காக கல்லூரிக்கு சென்று வந்தவன்  கொஞ்ச நாட்களில் அந்த படிப்பும் பிடித்து விட்டது..

அவன் பள்ளியில் உடன் பயின்ற மாணவர்கள் சிலரும் அங்கு வேறு பிரிவில் சேர்ந்திருக்க, அவர்களை கண்டதும் பழைய பள்ளி உற்சாகம் திரும்பி விட, ஓரளவுக்கு விருப்பபட்டு கல்லூரிக்கு சென்று வர ஆரம்பித்தான்...

கூடவே  கல்லூரி முடிந்ததும்  கோயம்புத்தூரில் இருக்கும் தங்கள் அலுவலகத்திற்கு சென்று விடுவான்... அவனை அப்படி வர வைத்திருந்தார்  தேவநாதன்..

அதிரனுக்கு அவருடைய டெக்ஸ்டைல் பிசினஸ் ஐ பிடிக்கவில்லை என்றாலும் கட்டாயப்படுத்தி அவனை அங்கு வரவைத்தார் தேவநாதன்.. அவரும் அவன்  கூடவே இருந்து கொண்டு  அந்த டெக்ஸ்டைல் பிசினஸ் ஐ பற்றி அவனுக்கு சொல்லிக் கொடுத்தார்...

அந்த தொழிலை அவர் எப்படி ஆரம்பித்தார்.  எப்படி திட்டமிட்டு அதை முன்னுக்கு  கொண்டு வந்தார் என்று விளக்கி  கூற அதை கேட்ட அதிரதனுக்கு மலைப்பாக இருந்தது தன் தாத்தாவை எண்ணி..

அவரை பெர்சனலாக பிடிக்கவில்லை என்றாலும் இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இந்த  தொழிலை பார்த்துக் கொள்ளும் அவர் திறமையை உள்ளுக்குள் எண்ணி வியந்து தான் போனான்..

ஆனாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவரை காணும்பொழுதெல்லாம் அவன்  முகத்தை திருப்பிக்கொண்டான்.. வேண்டா வெறுப்பாக அவர் சொல்வதை கேட்பவன் போல காட்டி கொண்டான்..

தேவநாதனும் தன் பேரனின் குணம் தெரிந்ததால் உள்ளுக்குள் சிரித்து கொண்டே அவனுக்கு புரியும் வகையில்,  எப்படி சொன்னால் அவனுக்கு அந்த தொழில் மீது ஆர்வம் வரும் என்று புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல விளக்கி கூறினார்...

தேவநாதன் அந்த தொழிலை வெறும் லாபத்திற்காக மட்டும் நடத்திக் கொண்டிருக்கவில்லை...

வெறும் லாபத்திற்காக என்றால் விவசாயத்தை மட்டும் பார்த்தாலே போதும்.. இயற்கை வேளாண்மையில் தேவநாதன் மிகவும் பிரசித்தி பெற்றவர்.. அந்த பகுதி மக்கள் எல்லாருமே அந்த ஜமீன் நிலத்தில் விளையும் காய்கறிகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

தரமானதாகவும் விலையும் குறைவானதாக இருக்க, மார்கெட்டுகளில் மக்கள் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை விரும்பி வாங்க, அவருக்கு நல்ல லாபம் கிடைத்தது...

கூடவே ஜமீன் சொத்துக்களும் இன்னும் பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சம்பாதித்து வைத்திருந்தார் தான்..

ஆனால் அவர் எண்ணம் எல்லாம் பல குடும்பங்கள் இந்த டெக்ஸ்டைல் தொழிலை நம்பி இருக்கின்றனர்.. அவர்களை கைவிட்டு விடக்கூடாது என்பதுதான்...  

ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் கைத்தறி தொழில்  பிரதான தொழில்களில் ஒன்று...அங்கு கைத்தறி நெசவை குடிசை தொழிலாகவும் செய்து வருகின்றனர்...

அந்த பகுதிகளில் பருத்தி நன்றாக விளைவதால் அதை வைத்து நூல் எடுத்து துணிகளாக (fabric) மாற்ற வீட்டிலயே கைத்தறிகள் வைத்து  இருக்கின்றனர்..

சிலர் இன்னும் நவீன முறையில் இயந்திரங்களை(powerloom)  பயன்படுத்தி ஆடை நெய்து அதை சந்தைகளில் விற்று வருகின்றனர்.. ரெடிமேட் ஆடைகள் தயாரிப்பதிலும் இந்த பகுதி மக்கள் ரொம்பவும் பிரபலம்..   

விவசாயத்தை போலவே இந்த தறியில்  வேலை செய்யும் மக்களுக்கும்  உரிய பலன் கிடைப்பதில்லை.. இந்த தறியில் வரும் கைத்தறி புடவைகள் பலவகையான ஆடைகள் சரியான முறையில் விற்க தெரியாமல் அங்கு வரும் ஏஜென்ட் குறைந்த விலையில் வாங்கி சென்றனர்

தேவநாதன் இந்த டெக்ஸ்டைல் பிசினஸ் ஐ ஆரம்பித்ததும் முதல் கட்டமாக இந்த குடும்பங்களை சந்தித்து பேசினார்..அங்கு உற்பத்தியாகும் துணிகளை அவருடைய மில்லுக்கு நேரடியாக கொள்முதல் செய்துகொள்வதாக கூற அந்த பகுதி மக்களுக்கு ரொம்பவும் சந்தோஷம்..

இதுவரை அவர்களுடைய உழைப்பை உறிஞ்சிக் கொண்டே அடிமட்ட விலைக்கு வாங்கி சென்ற முகவர்களை நிறுத்திவிட்டு தேவநாதனை  நம்பி அவர்களுடைய தயாரிப்பை அவர் மில்லுக்கே அனுப்பி வைத்தனர்..

தேவநாதனும் அதிக லாபத்தை பார்க்காமல் அந்த  குடும்பங்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்று நியாயமான விலை கொடுத்து வாங்கினார்..

ஆடைகளாக வருவதை அப்படியே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தும் துணிகளாக  கொள்முதல் செய்வதை பனியன், நைட்டி, திரைச்சீலைகள் என்று பலவகை ஆடைகளாக மாற்றி ஏற்றுமதி செய்தார்...

முதலில் ஆடைகளாக கொள்முதல் செய்வதை வெளிநாடுகளில் ஏற்றுமதி செய்யும் பிசினஸ் ஆக தன் மகனை முன் நிறுத்தி ஆரம்பித்தார்..

.பின் மற்றவர்கள் அவர்கள் தயாரிக்கும் பேப்ரிக் ஐயும் கொள்முதல் செய்ய சொல்லி கட்டாயபடுத்த, அதற்கென்று சொந்தமாக ஒரு மில்லையும் ஆரம்பித்தார்...

தையல் கலை தெரிந்த பல பெண்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தரவும் நெசவு தொழிலாளர்களுக்கு உதவுவதற்கும் அந்த மில் ஐ ஆரம்பித்தார்..படிப்படியாக அந்த மில்லில் பல பிரிவுகளை கொண்டுவந்தார்..

அவருடைய தொழிற்சாலையிலயே பல வகை ஆடைகளை தயாரித்து ஏற்றுமதி செய்வதால் நல்ல லாபமும் கிடைத்தது.. அதைக் கொண்டு தொழிலை விரிவு படுத்த பயன்படுத்திக் கொண்டார்..  

இன்று கோயம்புத்தூர் ல் நம்பர் ஒன் டெக்ஸ்டைல் பிசினஸ்மேன் ஆக  உருவாகியிருந்தார் தேவநாதன்...

தன் மகனுக்காக ஆரம்பித்தது என்றாலும் அந்த தொழிலில் நெடுமாறன் அவ்வளவாக ஈடுபாடு காட்டாததால் அவரே  முன்னின்று பார்த்துக் கொண்டார்.. இதுவரை நன்றாகவே நடத்தி வந்து விட்டார்..

இப்பொழுது அவர் கவலை எல்லாம் அவர் உருவாக்கிய இந்த சாம்ராஜ்யம் அவரோடு அழிந்து போய் விடக்கூடாது... கூடவே இந்த தொழிலை  நம்பியிருக்கும் பல குடும்பங்களும் தொடர்ந்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் என்பதுதான்...

அதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தவர் சிந்தனையில்  வந்தவன் தான் அதிரதன்... தனக்கு அடுத்து அவனால்தான்  இந்த  தொழிலை திறம்பட நடத்த  முடியும் என்று முடிவு செய்தார்

அதனாலயே தன் பேரனை அவனுடைய பத்தாம் வகுப்பில் இருந்தே அதற்காக தயார் படுத்தி வருகிறார்..

ஆனால் அவர் செய்த தவறு தன்னுடைய எதிர்கால திட்டத்தை தன் பேரனிடம் விளக்கி கூறாமல் விட்டு விட்டார்...

அவன் வளர்ந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று அசால்ட்டாக இருக்க அவனும் பாரிஜாதத்தின் திட்டத்தால் அவரின் மூளை சலவையால் தன் தாத்தாவை எதிரியாக பார்க்க ஆரம்பித்தான்..  

அவன் ஓரளவுக்கு வளர்ந்து நின்றதும் தேவநாதன் தன் திட்டத்தை பற்றி விளக்க முயல, அவனோ அவர் பேசுவதை காதிலயே வாங்க வில்லை..

விடலை பருவத்தில் அவன் தாத்தா சொல்வது செய்வது எல்லாமே அவருடைய ஆளுமையை காட்டத்தான் என்ற தவறான கருத்து அவன் மனதில் பதிந்து போனது...

அவர் முயற்சி தோழ்வியில் முடிய, பேரன் வளர்ந்தால்  தன்னை பற்றி புரிந்து கொள்வான்  என்று மீண்டும் அவன் போக்கிலேயே விட்டு விட அதிரதன் மனம் மாறாமல் இருக்குமாறு பாரிஜாதம் பார்த்துக் கொள்ள தாத்தா பேரன் இருவருக்குமே அந்த கண்ணுக்கு தெரியாத விரிசல் அப்படியே நின்றுவிட்டது...

அதை அந்த விரிசலை மேலும் மேலும் பெருசாக்க முயன்றார் பாரிஜாதம்.. அதற்கு தகுந்தார் போல் தேவநாதன் தன் பேரனை கட்டாயப்படுத்தி அவன் மறுக்க மறுக்க டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் ல் சேர்த்துவிட அவனுக்கு இன்னுமே  கொதித்துப் போனான்..

ஆனாலும் வேற வழியில்லாமல்  தாத்தாவின் கட்டளைக்கு பணிந்து கல்லூரி சென்று வந்து கொண்டிருக்கிறான்..

இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தன் தாத்தாவின் அலுவலகத்தையும் கவனித்துக்கொள்ள ஆரம்பித்திருந்தான்..  

முதலில் ஏனோ தானோ என்று அந்த அலுவலகத்திற்கு சென்று வந்தவன் தேவநாதன் சாமர்த்தியமாக ஒவ்வொன்றாக சொல்லிக் கொடுக்க அவனுக்கும் அந்த தொழிலில் விருப்பம் வந்துவிட்டது..

சிறுவயதிலிருந்தே எல்லா  துறையிலும் ஆர்வம் இருக்க அனைத்தையும் கற்றுக் கொள்ள துடிப்பவன் அதிரதன்...

அதனால் இந்த டெக்ஸ்டைல் பிசினஸை பற்றியும் விரைவிலேயே கற்று கொண்டான்..கூடவே தேவநாதன் தொழிலில் இருக்கும் நெளிவு சுளிவுகளையும் தற்போதைய போட்டியாளர்களை பற்றியும்  விளக்கி சொன்னார்..

உள்ளுக்குள் இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டாலும் தொழிலில் அவன் தாத்தாவை குருவாக நினைத்து அவர் சொல்லுவதை எல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டான் அதிரதன்...  

அவனுடைய இரண்டாம் வருட முடிவில் தானாகவே அந்த  தொழிலில் இன்னும் ஆர்வத்துடன் இன்வால்வ் ஆகினான்..

தொழிலில் சில புதிய நவீன முறைகளை   தன் தாத்தாவிடம் பரிந்துரைக்க அவருக்கும் மிகவும் சந்தோஷம்.. ஆனாலும் தன் பேரனை நேரடியாக புகழ்ந்து பேசாமல் சபாஷ் என்று தட்டிக் கொடுக்காமல் எட்டி நின்று அவன் சொன்ன வழிமுறைகளை அமல்படுத்தினார்...

அதில் இன்னுமே லாபம் அதிகமானது... தன்னுடைய ஐடியாவை அவன்  தாத்தா பயன்படுத்தியதை கண்டும் அதனால் இன்னும் லாபம் அதிகமானது கண்டும் மகிழ்ந்து போனவனுக்கு அவனை அறியாமலயே அந்த தொழிலில்  ஆர்வம் அதிகமானது...

அதனால் தன் முழு கவனத்தையும் அந்த தொழிலில் ஈடுபடுத்தினான்.. நான்கு ஆண்டு முடிவில் அந்த தொழிலை முழுவதுமாக கற்றுக் கொண்டான் அதிரதன்..

தேவநாதனுக்கும் பெரும் மகிழ்ச்சி...

அவர் விருப்பப்படியே தன் பேரன் வளர்ந்து நிக்கிறான் என்று மீசையை முறுக்கி விட்டு கொண்டார்…!  


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!