நிலவே என்னிடம் நெருங்காதே!!-14

 



அத்தியாயம்-14

டுத்து ஒரு மாதம் செமஸ்டர் லீவ் விட்டிருந்தார்கள்...

அடுத்த வாரம் ஒரு திருமணத்திற்காக தேவநாதன் குடும்பத்துடன் கோயம்புத்தூர் வந்திருக்க காரில் பின் இருக்கையில் அமர்ந்து இருந்த அமுதினி எதேச்சையாக வெளியில் சாலையை பார்க்க திகைத்து போனாள்..

அவனே தான்... அன்று அவளை காப்பாற்றிய சூப்பர் மேன்.. ஹீரோ.. அவள் காருக்கு பக்கவாட்டில் ராயல் என்பில்ட் புல்லட்டில் அமர்ந்து இருந்தான்..

இன்று வெய்யில் தாக்காமல் கண்ணுக்கு கூலர் அணிந்திருந்தான்.. வாயில் சுவிங்கத்தை மென்று கொண்டிருந்தான் போல..

நீல நிற ஜீன்ஸ், ரவுன்ட் நெக் உடைய டீசர்ட்.. அதன் வழியே அவனின் உடற்பயிற்சி செய்வதால் திரண்டிருந்த விரிந்த மார்பு, பரந்த முதுகு என்று பார்க்க கம்பீரமாக அதே சமயம் கேசுவலாக அமர்ந்து இருந்தான் அந்த புல்லட்டில்..

அமுதினி அவசரமாக கார் கண்ணாடியை கீழிறக்க, அதற்குள் சிக்னலில் பச்சை விளக்கு எரிய ஆரம்பிக்க அடுத்த நொடி அந்த இடத்தில் இருந்து பறந்திருந்தான்..

அமுதினிக்கு ஏமாற்றமாக இருந்தது

“சே.. ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாமல் போய்ட்டனே..” என்று உள்ளுக்குள் புலம்பியவள் வெளியிலயே வேடிக்கை பார்த்து வந்தாள்..

யாழினி ஏதேதோ சொல்லி கதை அடித்து கொண்டு வர, அதெல்லாம் காதில் விழுந்தாலும் அவள் கருத்தில் படவில்லை..

அன்றிலிருந்து கோயம்புத்தூர் வரும்பொழுதெல்லாம் சாலையில் தேடி பார்ப்பாள்.. ஆனால் அதற்கு பிறகு அவனை பார்க்க முடியவில்லை..

ரண்டு வாரம் கழித்து மீண்டும் கோயம்புத்தூரில் அவர்களுக்கு சொந்தமான அந்த ஜவுளி கடைக்கு வந்திருந்தாள்.

வீட்டில் போரடிக்க, பெண்களை தாத்தா அழைத்து வந்து கடையில் விட்டு விட்டு அவர்களுக்கு பிடித்த ஆடைகளை எடுத்துக்க சொல்லிவிட்டு அவர் வேலையை பார்க்க சென்றிருந்தார்..

அமுதினியும் யாழினியும்  அவர்களுக்கு தேவையான ஆடைகளை பார்த்து கொண்டே வந்தனர்....

அப்பொழுது எதேச்சையாக அமுதினி பில் கவுண்டரை பார்க்க, அங்கு நின்றவனை கண்டதும் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்... அவள் உள்ளே படபடக்க, வேகமாக அவன் அருகில் செல்ல முயல அவள் தங்கை யாழினி  எட்டி அவள் கையை பிடித்து கொண்டு அவள் தேர்வு செய்திருந்த சுடிதார் நன்றாக இருக்கிறதா என்று கேட்டு கொண்டிருந்தாள்..

அவள் கையை விடுவிக்க இழுத்தாலும் யாழினி விடாமல் பிடித்து கொள்ளாமல், அவளுக்கு அது நல்லா இருக்கு என்று சொல்லி அவள் கையை விலக்கி கொண்டவள் பில் கவுண்டரை பார்க்க அங்கு இல்லை அவன்..

ஏமாற்றத்துடன் வெளியில் பார்க்க அந்த கடையின் நுழைவாயில் வழியாக வேக நடையுடன் வெளியேறி சென்று கொண்டிருந்தான் அவன்..

அவன் வேக நடைக்கு இவள் ஓடி  இல்லை பறந்து சென்றால் கூட அவனை புடிக்க முடியாது  என உறைக்க அவன் செல்வதையே ஏமாற்றத்துடன் பார்த்து கொண்டிருந்தாள்..

அதற்கு பிறகு இரண்டு மூன்று முறை இப்படியே தூரத்தில் இருந்து பார்த்து விட்டாள்.. ஆனால் அவனிடம் சென்று  பேசத்தான் முடியவில்லை... எப்படியும் நழுவி விடுகிறான்..

எப்படியாவது அவனை சந்தித்து நன்றியை சொல்லிவிட வேண்டும் என்று எண்ணி கொள்ள

“என்ன அம்மு? வெறும் நன்றி மட்டும்தானா? நன்றி சொல்லவா இப்படி ஓடி ஓடி அந்த நெட்டைய தேடற? “ என்று அவள் மனஸ் கண் சிமிட்டி சிரிக்க அவளுக்கோ திக் என்றது..

ஆமாம் இல்ல.. .வெறும் நன்றி சொல்ல நான் ஏன் அவனை இப்படி தேடனும்.. ? அப்ப இது வெறும் நன்றிக்காக மட்டும் இல்லையா? “ என்று  யோசிக்க ஆரம்பிக்க, அதற்குமேல் யோசிக்க முடியாமல் கண்ணை இறுக்க மூடி கொண்டாள் அமுதினி..

தற்கு பிறகு கல்லூரி திறந்து விட, மீண்டும் உற்சாகத்துடன் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தாள் அமுதினி...

முதல் நாளில் அவள் கேங்கில் ஒருத்தியை பிடித்து வைத்து கொண்டு எல்லாரும் ஓட்டி கொண்டிருந்தார்கள்.. அமுதினியும் ஆர்வத்துடன் என்ன என்று விசாரிக்க, பார்த்தால் கழுத்தில் பளபளக்கும் தாலி கயிற்றுடன் கல்லூரிக்கு வந்திருந்ந்தாள் அவள்..

இது எப்படி என்று அமுதினி மீண்டும் மற்றொரு தோழியை துருவி தெரிந்து கொண்டது இதுதான்..

அது ஒரு காதல் கல்யாணமாம்.. ஆறுமாதமாக அந்த பெண் காதலிக்கிறாளாம்.. திடீர்னு அவள் வீட்டுக்கு தெரிஞ்சு பிரச்சனை ஆகிடுச்சாம்.. உடனே வீட்டை விட்டு ஓடிப்போய் கல்யாணம் பண்ணிகிட்டாளாம்..

அவர்கள் உயிருக்கு ஏதாவது ஆபத்து என்றால் அவள் பெற்றோர்கள்தான் காரணம் என்று போலிஸ் ல் கம்ப்லெய்ன்ட் கொடுத்து விட, அவள் பெற்றோர்களும் அதற்குமேல் விட்டு விட்டார்களாம்..

இப்பொழுது அவள் மாமியார் வீட்டில் இருந்து கல்லூரிக்கு வந்திருக்கிறாள்.. அந்த கதையும் அவள் காதலித்த கதையும் கண்கள் பளபளக்க, கன்னத்தில் வெட்கத்துடன் தன் தோழிகளுக்கு சொல்லி கொண்டிருக்க அதை எல்லாம் கேட்ட அமுதினிக்கு ஆச்சர்யமாக இருந்தது..

“காதலுக்காக பெத்தவங்களை விட்டு போவாங்களா? அதுவும் அவங்க மேலயே போலிசில் புகார் கொடுக்கும் அளவுக்கு..!!  அப்படி என்றால் அந்த காதல் எவ்வளவு ஆழமானது? “ என்று காதலை பற்றி யோசிக்க, அவள் பார்த்திருந்த காதல் படங்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன..

அப்படி என்றால் நானும் காதலித்து பார்க்கவேண்டும்  என்று அந்த பேதை பெண்ணுக்கு கொஞ்சமாய் ஆசை எட்டி பார்க்க அடுத்து யாரை காதலிப்பது என்று யோசிக்க அடுத்த நொடி அவள் கண் முன்னே வந்து குதித்தான் அந்த நெடியவன்...

அவன் முகத்தை கண்டதும் திடுக்கிட்டு திகைத்து போனாள் அமுதினி..

“அன்று தியேட்டரில் அந்த நிக்ழ்ச்சி நடந்து இத்தனை நாட்கள் ஆகியும் அந்த ஒரு நிமிட சந்திப்பு இன்னும் மறக்காமல்  அவள் மனதில் ஆணி அடித்த மாதிரி இருக்கிறது என்றால் அதற்கு பெயர் என்னவாம்? இதைத்தானே காதல் என்று திரைப்படங்களில் காட்டுகிறார்கள்..

அப்படி என்றால் நான் அவனை காதலிக்கிறேன்... யெஸ் ஐம் இன் லவ்.. “ என்று  தனக்குள்ளே சொல்லி பார்த்து குதித்து கொண்டாள் அமுதினி..

ன்றிலிருந்து கல்லூரிக்கு வரும்பொழுதும் போகும் பொழுதும் சாலையின் இரு பக்கத்திலும் ஆர்வமாக பார்த்து கொண்டே வந்தாள்..

அவள் நடையில் ஒரு துள்ளலும் முகத்தில் ஒரு ரகசிய சிரிப்பும் அடிக்கடி கண்ணாடி பார்ப்பதும் தானாக சிரித்து கொள்வதும் என அமுதினி பெரிதும் மாறிப் போனாள்..

மற்றவர்களுக்கு வித்தியாசமாக தெரியாவிட்டாலும் அவள் அறையில் அவளுடனேயே  இருக்கும் யாழினி கண்டு கொண்டாள் தன் அக்காவின் மாற்றத்தை.. தன் அக்காவை நோன்டி கேட்க, அவளோ ஒன்றும் இல்லை என்று மலுப்பி விட்டாள்..

அடுத்து தன் காதலை எப்படி அவனிடம் சொல்வது என்று யோசித்து கொண்டிருந்தாள்.. முதலில் அவன் யாரென்றே தெரியவில்லை.. அவன் பெயர் கூட தெரியாது.. அப்படி இருக்க எப்படி காதலை சொல்வது என்று யோசிக்க ஆரம்பித்தாள்..

முதலில் இது காதல்தானா என்ற சந்தேகமும் கூடவே எழுந்தது.. அந்த நேரம் அருகில் தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த திரைப்படத்தில் இருந்து ஒலித்தது அந்த பாடல்..

உன் பேரே தெரியாது உன்னை கூப்பிட முடியாது

நான் உனக்கோர் பேர் வைத்தேன் உனக்கே தெரியாது

அந்த பேரை அறியாது அட யாரும் இங்கேது

அதை ஒரு முறை சொன்னாலே தூக்கம் வராது

அட தினந்தோறும் அதை சொல்லி உன்னை கொஞ்சுவேன்

நான் அடங்காத அன்பாலே உன்னை மிஞ்சுவேன்....

 

என்ற நா.முத்துக்குமாரின் அருமையான பாடல் ஒலித்து கொண்டிருந்தது...   

அதை கேட்டதும் அவள் மனம் சிறகடித்து பறக்க ஆரம்பித்தது அந்த நெடியவனின் நினைவில்...

அதுவும் அதுக்கு அடுத்து ஒருத்தனை பிடித்து விட, பத்து செகண்ட் போதும்.. ஊர் பேர் தெரியாமலயே காதலிக்கலாம் என்ற ரீதியில் அந்த கதாநாயகி சொல்லும் டயலாக் ஓடி கொண்டிருக்க அதையும் கேட்டதும் கொஞ்சம் குழப்பமாக இருந்ததும் ஒடிப் போனது அமுதினிக்கு..

மனதில் முடிவே செய்துவிட்டாள் அவன்தான் அவளவன் என்று.

மேலும் இரண்டு வாரம் ஓடியிருக்க அன்று புதுப்படம் ரிலீஸ் ஆகி இருக்க, அமுதினி கேங் படம் பார்க்க கிளம்பினர்.. எப்பவும் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அமுதினி நானும் வருகிறேன் என்று கிளம்ப அவள் தோழிகள் மயக்கம் போடாத குறைதான்..

அவளை குறுகுறுவென்று பார்க்க அவளோ தன்னை மறைத்து கொண்டு

“இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்... ட்ரெய்லர் லயே நல்லா இருந்தது.. அதுதான்... இன்னைக்கும் என்னோட ட்ரீட்.. “ என்று  சொல்லி அவர்களை சமாளித்து அவர்களுடன் சென்றாள்..

இடைவேளையின் பொழுது அவளாகவே எல்லாருக்கும் ஸ்நாக்ஸ் வாங்கி வருவதாக எழுந்து செல்ல, எல்லாரும் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தனர்..

அன்று போலவே இன்றும் தனக்கு வேண்டியதை சொல்லிவிட்டு ஓரகண்ணால் அந்த பகுதியை அளந்து கொண்டிருந்தாள் அவன் எங்கேயாவது இருக்கிறானா என்று பார்க்க..

ஆனால் எங்கும் அவனை காணவில்லை..

“ஒருவேளை ஸ்ப்டைர் மேன் மாதிரி எனக்கு ஆபத்துனா மட்டும்தான் வருவானோ? “ என்று யோசித்து கண்ணை மூடி திறக்க, அடுத்த நொடி இமைக்க மறந்து நின்று விட்டாள்..

அவனேதான்.. அதே நெட்டையேதான்..அவள் அருகில்.. அவளின் வெகு அருகில் நின்று கொண்டிருந்தான்.  அவனை கண்டதும் ஆச்சர்யத்தில் கண்கள் விரிய அவனை பார்த்து கொண்டிருக்க அவனோ இவள் ஒருத்தி இருப்பதையே கண்டு கொள்ளாமல் கடைக்காரரிடம் அவனுக்கு வேண்டியதை சொல்லி வாங்கி கொண்டவன் வேக நடையுடன் அங்கிருந்து நகர்ந்து சென்றான்..

சிலை போல நின்றிருந்தவள் அப்பொழுதுதான் சிலைக்கு உயிர் வந்ததை போல அவனை விட்டு விடக்கூடாது என்று அவரசமாக கையில் இருந்த ஸ்நாக்ஸ்  பாக்சுடன் அவன் பின்னாலயே ஓடினாள்..

“சார்... சார்..சார் ஒரு நிமிஷம்.... “ என்று அழைத்தவாறு அவன் பின்னால் ஓட, அவனோ தியேட்டர் உள்ளே செல்லும் வழியை அடைந்தவன் இவள் குரல் கேட்டு திரும்பி பார்க்க, இவள் வேகமாக ஓடி வருவதை கண்டு நின்று விட்டான்..

அவன்  அருகில் வந்ததும் மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்க

“ஹப்பா.. என்ன சார் இது..  இப்படி நடக்கறீங்க? ஏதோ ரன்னிங் ரேஸ் ல போற மாதிரி இந்த நடை.. “ என்றாள் சிரித்தவாறு..

அவனும் வெண்பற்கள் தெரிய பளீரென சிரிக்க, அதில் அப்படியே உருகி போனாள் பெண்ணவள்..

வரிசையாய் அடுக்கி வைத்ததை போல அழகான பல் வரிசை.. அவள் அண்ணனுக்கும் இப்படித்தான் இருக்கும் அவன் சிரிக்கும் பொழுதும் இன்னும் கம்பீரமாக இருக்கும்..

“ஹலோ மிஸ்.. .எத்தன மார்க் போட்டிங்க..?  பார்க்க சுமாரா இருக்கேனா? இப்படி பப்ளிக்கா சைட் அடிக்கறீங்க? “ என்று சிறு வெட்கத்துடன் நெழிந்தவாறு கூற அவளுக்கோ திடுக்கிட்டவள் கன்னங்கள் சூடேற, முகம் எல்லாம் செம்மை ஆகி போனது..

ஒரு நொடி அவளையே ரசித்து பார்த்தவன் அடுத்த நொடியில் பார்வையை மாற்றி கொண்டு

“என்ன மிஸ்.. எப்படி இருக்கிங்க..?  இன்னைக்கு யாராவது வாலாட்டினாங்களா? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு..

அதை கேட்டு அவளுக்கு இன்னும் வெட்கமாகி விட இல்லை என்று தலை அசைத்தாள்..

“குட்...அப்புறம் மிஸ்... “ என்று இழுக்க,

“அமுதினி... என் பெயர் அமுதினி.. “ என்றாள் தயக்கத்துடன்..

“அ மு தி னி... ஸ்வீட் நேம்.. சொல்லும் பொழுதே அமுதை போல  இனிக்குது.. “ என்றவன்

“ஐம் ரஞ்சன்.. “ என்று கை நீட்டினான் கை குலுக்குவதற்காக..

ஒரு நொடி திகைத்தவள் அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல்  ஒரு கையை நீட்டி இருந்தாள்..

அவள் கையை பிடித்து மென்மையாக குலுக்கி விட்டு விட அவளுக்கோ அவன் தொட்ட இடம் குறுகுறுத்தது..

“ஒகே அமுதினி.. படம் ஆரம்பிக்க போறாங்க.. சீ யூ .. டேக் கேர்.. “ என்று சொல்லி புன்னகைத்தவாறு உள்ளே செல்ல முயல எங்கிருந்து அவ்வளவு தைர்யம் வந்ததோ.. டக்கென்று கேட்டிருந்தாள்..  

“மிஸ்டர் ரஞ்சன்.. உங்க போன் நம்பர் சொல்லுங்க... “ என்றாள் அவசரமாக..

அவளுக்கே ஆச்சர்யம் அதிர்ச்சி.. தானா இப்படி தைர்யமக முன் பின் தெரியாதவனின் போன் நம்பரை கேட்டது என்று..

ஆனால் அவன் எதுவும் கோவித்து கொள்ளாமல் அவன் எண்ணை சொல்லிவிட்டு செல்ல, அவள் அதை திரும்ப திரும்ப சொல்லி பார்த்து கொண்டே வந்தவள் இருக்கைக்கு வந்ததும் கையில் இருந்த ஸ்நாக்ஸ் ஐ எல்லாம் தோழிகளிடம் கொடுத்தவள் அவசராக தன் அலைபேசியை எடுத்து அந்த எண்ணை பதிவு செய்து கொண்டாள்.. 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!