அழகான ராட்சசியே!!-24


 

அத்தியாயம்-24

டுத்த வாரமும் வழக்கம் போல பரபரப்பாக சென்று கொண்டிருந்தது..

எல்லாருக்குமே கழுத்தளவு வேலை இருக்க மூச்சு விடக்கூட நேரம் இல்லாமல் அனைவரும் கடிவாளம் இட்ட குதிரை போல தங்களுக்கு அசைன் பண்ணி இருந்த வேலையில் கவனத்தை  செலுத்தி மூழ்கி போயினர்...

அன்று புதன்கிழமை..

மதியம் அனைவரும் உணவை முடித்து தங்கள் வேலையை ஆரம்பிக்க, அந்த தளத்தின் நடுவில் வந்து நின்ற மனோகர் அனைவரையும் கை தட்டி தன் அருகில் அழைத்தான்..

அனைவரும் எழுந்து அவன் அருகில் வர,

“ஹாய் கைஸ்.. உங்களுக்கு எல்லாம் ஒரு குட் ந்யூஸ்..என்னனு கண்டுபுடிங்க ? “ என்றான் சிரித்தவாறு...

“குட் ந்யூஸ் னா?  என்ன நீங்க பேப்பர் போட்டுட்டீங்களா பாஸ்? “ என்றான் கூட்டத்தில் ஒருவன்..

அவனை பார்த்து முறைத்த மனோகர்,

“ஏன்டா ? நான் என்ன உங்களுக்கு அவ்வளவு தொல்லையாவா இருக்கேன்? “ என்றான் பாவமாக..

“சேச்சே.. அவ்வளவு தொல்லை இல்ல பாஸ்.. ரொம்ப ரொம்ப தொல்லை..பயங்கர டெரரா இல்ல ஹிட்லரா ஸ்ட்ரிக்ட் ஆபிஸரா இருக்கீங்க..பாஸ்”  என்றான் மற்றொருவன் தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்டு..

“ஹ்ம்ம்ம் உங்களுக்கெல்லாம் அப்படி இருந்தால் தான் நான் பொழப்பை ஓட்ட முடியும்.. அதனால் நீங்க எதிர்பார்க்கிற அந்த குட் ந்யூஸ் அவ்வளவு சீக்கிரம் வராது..எல்லாரும் என் கூடத்தான் குப்பை கொட்டியாகணும்.. நோ சாய்ஸ்.. எனி அதர் கெஸ்? “ என்றான் சிரித்தவாறு..

“என்ன பாஸ்.. நம்ம டீம் க்கு புதுசா இளசா  ஏதாவது பொண்ணுங்க வர்ராங்களா? “ என்றான் அஜய் சிரித்தவாறு..

அதை கேட்டு அவனை பார்த்து மீண்டும் ஒரு முறை முறைத்தான் மனோ..

“சே.. அதுவும் இல்லையா? அப்ப என்னவா இருக்கும்? “ என்று தன் தாடையில் கை வைத்து யோசிக்க,

“பாஸ்.. இந்த வருடம் ஹைக் அதிகமா தர்ரீங்களா? “ என்றாள் அன்பு ஆர்வமாக..

அருகில் இருந்த மற்றொருத்தி

“இல்ல பைனான்ஸ் இயர் என்ட் மார்ச் மன்த் பக்கமா  வருது இல்ல.. அதனால போனஸ் பற்றி சொல்ல போறார்.. “ என்று குதித்தாள்..

“சேச்சே.. நம்ம ஆபீஸ்ல அதெல்லாம் அவ்வளவு ஈஸியா தூக்கி கொடுத்திட மாட்டாங்க. இது வேற என்னவோ ? “ என்றான் மற்றொருவன்..

இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றை சொல்லி கலாய்க்க, சிறிது நேரம் பொறுத்த மனோ

“ஓகே கைஸ்.. இதுக்குத்தான் உங்களை எல்லாம் பேசவே விடக்கூடாதுங்கறது.. எல்லாரும் அவங்கவங்க மனசுக்குள்ள இருக்கிறதை எல்லாம் வெளில கொட்டறீங்க..அதை எல்லாம் கேட்டா  நான் இன்னைக்கே ஹாஸ்பிட்டல் ல அட்மிட் ஆக வேண்டி இருக்கும்..

சோ லெட்ஸ் ஸ்டாப்.. நான் சொல்ல வந்த குட் ந்யூஸ் என்னன்னா இந்த வார  இறுதி நாளான வெள்ளிக்கிழமை அன்று டீம் அவுட்டிங் போகப் போகிறோம்.. நீங்க ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருந்தீங்க இல்ல..

அதான் கடைசியா இந்த குவார்ட்டர் க்கு மேனேஜ்மென்ட் அப்ரூவ் பண்ணி இருக்காங்க.. அதனால்  நீங்க எல்லாரும் அதில் கலந்து கொள்ள வேண்டும்.. லெட்ஸ் என்ஜாய் யுவர் டே.." என்று சொல்லி புன்னகைத்தான்..

டீம் அவுட்டிங் என்றால் அன்று அனைவருக்கும் வேலை இல்லை.. ஒரு நாள் முழுவதுமே வெளியில் எங்காவது சென்று ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆட்டம் போடுவர்..

மனோ அந்த டீம் அவுட்டிங் ஐ பற்றி  அறிவித்ததை நம்பாமல்

“பாஸ்.. நிஜமாகவேதான் சொல்றீங்களா? இல்ல இது கனவா?  “ என்ற அஜய் பக்கத்தில் நின்றிருந்த ப்ரவீன் கையை கிள்ள, அவன் ஆ வென்று அலறினான்...

“ப்ரவீன் மச்சான் கத்தறான்.. அப்ப இது கனவல்ல நிஜம் தான்..யெஸ்... “ என்று தன் கையை மடக்கி பின்னுக்கு இழுத்து சந்தோஷத்தில் எம்பி குதிக்க, மற்றவர்களும் ஓ வென்று கூச்சலிட்டு  கத்தினர்..

அந்த கூட்டத்தில் நின்றிருந்த சந்தியாவோ வாயில் விரலை வைத்து வேகமாக விசில் அடித்தாள்...

மனோ அனைவரையும் அழைத்து  பேச ஆரம்பித்த பொழுது மகிழன் அங்கு இல்லை.

வேற ஒரு ப்ராஜெக்ட் ல் ஏதோ இஸ்யூ என்று அவனை பிடித்து கொண்டனர்.. அதை பிக்ஸ் பண்ணி முடித்தவன் அப்பொழுதுதான் அந்த இடத்திற்கு வந்து கொண்டிருந்தான்...

தொலைவில் வரும்பொழுதே விசில் சத்தம் கேட்க, ஆர்வமாக அந்த  தளத்தில் பார்க்க, அப்பொழுதுதான் சந்தியா  வாயில் விரலை வைத்து விசில் அடித்து கொண்டிருந்தாள்.. அதை  கண்டதும் ஒரு நிமிடம் திகைத்து நின்றான் மகிழன்...

“இந்த கேடிக்கு விசில் எல்லாம் அடிக்க தெரியுதே..!! இன்னும் என்னத்தை யெல்லாம் கத்து வச்சிருக்காளோ..! பயங்கர கேடிதான்.. மகிழா..  உன் வாழ்க்கை அமோகமா, ஜெக ஜோதியா இருக்கும் போ.. “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே அந்த இடத்திற்கு வந்தான்...

எல்லாரும் உற்சாகத்துடன் இருக்க இறுதியில் இந்த அவுட்டிங் ஐ மகிழன் பொறுப்பேற்று நடத்துவார்...என்று மனோ சொல்ல எல்லாரும் மீண்டும் ஒரு முறை ஓ வென்று கத்தினர்...

அப்பொழுது அங்கு வந்த மகிழனை பார்த்ததும்,

“தல... கலக்கிடலாம்.. “ என்று அனைவரும்  கத்த அவன் பார்வை தானாக சந்தியாவிடம் சென்றது..

அவளோ அதிர்ந்து போய் இருந்தாள்..

“இந்த மங்கி எடுத்து நடத்தற இந்த  அவுட்டிங் ல் நான் கலந்துக்கறதா ? “ என்று முரண்டு பண்ணியது அவள் மனம்..

அவள் உற்சாகம் எல்லாம் வடிந்து விட, முகம் தொங்கி விட்டது.. அதே நேரம் அவள் முகத்தில் வந்து போன மாற்றத்தை கண்ட மகிழன் யோசனையுடன் அவளை பார்க்க, அவளோ அவனை பார்த்து அதே முறை முறைத்தாள்..

அங்கு நிறைய பேர் இருந்ததால் அவள் முறைப்பதற்கு வழக்கம் போல அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்ட முடியாமல் திணறினான் மகிழன்..

ன்று மதியமே டீம் அவுட்டிங் ற்கான ஏற்பாட்டை ஆரம்பித்து விட்டான் மகிழன்..

மகிழன் எல்லாருக்கும்  மெயில் அனுப்பி யார் வருகிறார்கள் என சம்மதம் கேட்டு லிஸ்ட் எடுக்க, அனைவருமே வருவதாக ஒத்து கொள்ள சந்தியா மட்டும் எந்த  பதிலும் அனுப்பி இருக்க வில்லை...

மாலை வரை பார்த்தவன் அவளிடம் இருந்து எந்த  பதிலும் வராமல் போக ஸ்கைப் ல் அவளை பிங் பண்ணினான்..

வழக்கம் போல ஹாய் என்று அனுப்பி இருக்க அவளோ அவனுக்கு பதில் எதுவும் அனுப்பவில்லை..

சிறிது நேரம் பார்த்தவன் “கேன் யூ மீட் மி? “ என்று அனுப்ப

“பார் வாட்? “ என்று உடனே திருப்பி பதில் அனுப்பினாள்..

“இட்ஸ் அபீஸியல்.. கம் அன்ட் மீட் மி “ என்று சற்று கோபமாக பதில் அளித்துவிட்டு அருகில் இருந்த சிறிய  டிஸ்கஷன் அறைக்கு சென்றான்..

அவளும் எழுந்து நின்று பார்க்க அவன் அருகில் இருந்த அறைக்கு செல்வதை கண்டவள் தன் கணினியை தூக்கி கொண்டு அந்த அறைக்கு சென்றாள்..

அங்கு சென்றவள் லேசாக கதவை தட்ட

“யெஸ் கம் இன்..” என்றான் சற்று இறுகிய முகத்துடன்..

அதை கண்டவளுக்கு உள்ளுக்குள்  லேசாக நடுங்கியது.. இந்த மாதிரி அவன் இறுகிப் போய் அவள் பார்த்ததில்லை.. எப்பவுமே ஒரு இலகிய நிலையுடன் தான் இருப்பான் மகிழன்..

 முதல் முறையாக அவன் இறுகி இருக்க அதை கண்டதும் அவள் மனதை பிசைந்தது..

ஆனாலும் தன்னை மறைத்து கொண்டவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தவள்

“யெஸ் மங்கி..”  என்று சொல்ல வந்து தன் நாக்கை கடித்து கொண்டவள்

“சொல்லுங்க மகிழன்.. “ என்றாள்...

“ஆமா..  புது ப்ராஜெக்ட் வேலை எப்படி போய்கிட்டிருக்கு? .. டெஸ்ட் கேஸ் பிரிபரேசன் எல்லாம் நல்லா போய்கிட்டிருக்கா? எனி கிளாரிபிகேசன்ஸ்? “ என்றான்..

“அடப்பாவி.. இத கேட்கவா தனியா கூப்பிட்ட? .. அதான் ஸ்டேட்டஸ் மீட்டிங் ல  டெய்லியும் ரிப்போர்ட் பண்றனே.. “ என்று  மனதுக்குள் திட்டியவள்

“யெஸ்..  ஆல் ஆர் கோயிங் வெல் அன்ட் ஆன்ட்ராக்.. நோ கிளாரிபிகேசன்ஸ்..”என்றாள் அவனை நேராக பார்த்தவாறு...

“ஹ்ம்ம் வெரி குட்.. சரி.. நீ ஏன் டீம் அவுட்டிங் க்கு வரலை? “ என்றான் நேரடியாக

“அப்படி வா வழிக்கு.. இதை கேட்கத்தான் தனியா கூப்டானா? திருடன்..” என்று உள்ளுக்குள் செல்லமாக திட்டிக் கொண்டவள்

“நாட் இன்ட்ரெஸ்டட்.. “ என்றாள் ஒரு வரியில்

“அதான்.. ஏன் னு கேட்கறேன்.. நீ தான டீம் அவுட்டிங்  வேணும்னு மனோ கிட்ட கேட்ட.. உனக்காகத்தான் நான் மேனேஜ்மென்ட் கிட்ட பேசி இந்த ஆப்சைட் அரெஞ் பண்ணினேன்.. இப்ப எதுக்கு வர மாட்டேங்கிற? “ என்றான் சிறு எரிச்சல் + கடுப்புடன்..

“ஹலோ.. நான் வர்ரதும் வராததும்  என்னுடைய இஷ்டம்.. நீங்க ஒன்னும் என்னை கம்பெல் பண்ண முடியாது.. மைன்ட் இட். “ என்று முறைத்தாள் சந்தியா..

அதற்குள் அவன் கோபம் தலைக்கேற, முயன்று தன்னை கட்டுபடுத்தியவன்

“வெல்.. நான் இதை  ஆர்கனைஸ் பண்றதால தான நீ வர மாட்டேங்கிற. சரி நான் வரலை.. நீ போய் என்ஜாய் பண்ணு.. “என்றான் தன் கோபத்தை கட்டுபடுத்தி

“யாரும் எனக்காக விட்டு கொடுக்க வேண்டாம்.. ஆக்சுவலா வர்ர சண்டே எனக்கு மேரேஜ் என்கேஜ்மென்ட்.. அதுக்கு தயாராகணும்.. அவுட்டிங் வந்திட்டு ஏதாவது  உடம்புக்கு வந்திடுச்சுனா? அம்மா அனுப்ப மாட்டாங்க.. “ என்றவள் ஓரக்  கண்ணால் மகிழனை பார்த்தாள்..

அவள் எதிர் பார்த்த மாதிரியே அவன் முகத்தில் ஒரு பலத்த  அதிர்ச்சி வந்து போனது.. அதை கண்டு துள்ளி குதித்தாள் சந்தியா..

“வாடா மங்கி.. என்கிட்டயா சவால் விடற.. உன்னை எப்படி ஆட்டி வைக்கிறேன் பார்.. “என்று கொக்கரித்தாள்..

சந்தியா சொன்னதை கேட்ட மகிழனோ அதிர்ந்து போய்

“வாட்? என்ன உளறர ? “என்றான் முகம் சிவக்க

“நான் ஒன்னும் உளறலை மிஸ்டர் மகிழன்... நடக்க போவதை சொன்னேன்..” என்று நக்கலாக சிரித்தாள் சந்தியா..

உடனே அவன் கை முஷ்டி இறுக உடல் விரைக்க, பல்லை கடித்து தன் கோபத்தை  கட்டு படுத்தியவன்

“அப்ப உண்மையிலயே என் காதல் உனக்கு புரியலையா தியா? நிஜமாகவே  உனக்கு என்னை பிடிக்கலையா? “ என்றான் அடிபட்டவனாக

அதை கண்டு சந்தியாவுக்கே பாவமாக இருந்தது.. அவன் முகத்தை  அப்படி பார்க்க அவளுக்கே மனதை பிசைந்தது..

“பேசாமல் உண்மையை சொல்லி விடலாமா?.. நிச்சயம் எல்லாம் எதுவும் இல்லை.. சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் என்ற உண்மையை..” என்று அவசரமாக யோசித்தாள்..

“ஆனால் அப்ப நான் அவன் காதலை ஏத்துக்கிட்டதா ஆய்டும்.. அப்பனா  அவன் ஜெயிச்சிடுவான்.. இந்த  சந்தியா அவன் கிட்ட தோத்துடுவா.. இல்லை..இல்லை..  இன்னை  வரைக்குமே என் இடுப்பை பிடிச்சதுக்கு அவன்  சாரி கேட்கவே  இல்லை..

அதுக்கு இந்த  மங்கிக்கு சரியான பாடம் கற்பிக்கணும்.. இப்படியே கொஞ்ச நாள் வேதனை  படட்டும்.. “ என்று தன் மனதை கல்லாக்கி கொண்டவள்

“லுக் மகிழன்.. நான் அப்ப சொன்னது தான் இப்பவும்.. நான் இந்த உலகத்துல வெறுக்கிற முதல் ஆள் நீங்கதான்.. ஐ ஹேட் யூ.. எப்பவும் என் மனம் உங்க  பக்கம் சாயாது... “ என்றாள் முயன்று வரவழைத்த  வெறுப்புடன்..

“ஏன் தியா? .. அப்படி என்ன தப்பு செய்தேன் நான்? என்னை ஏன் இந்த  அளவுக்கு வெறுக்கிற? ஆரம்பத்துல நமக்குள்ள முட்டிகிட்டது  எல்லாம் ஒரு ஆக்ஸிடென்ட்.. அதை  வைத்து என்னை கெட்டவனாக எதிரியாக பார்க்காத...

நான் உன்னை புரிந்து கொண்ட அடுத்த நொடியே என் மனதில் வந்து விட்டாய்.. அதெல்லாம் செல்ல சண்டைங்க மாதிரி.. அதை வைத்து என்னை வெறுக்காத..என்னை,  என் காதலை ஏற்றுக்கொள்..  “என்றான் கெஞ்சலுடன்..

“ஹ்ம்ம் ஒருத்தரை பார்த்த உடனே பிடிப்பதும் பிடிக்காததும் தானா தோன்றும்.. அந்த  வகையில் எனக்கு ஏனோ  உங்களை பார்த்த உடனேயே பிடிக்காமல் போய் விட்டது..

அதனால் இந்த காதல் கத்தரிக்காய் னு எதுவும் உளறாமல் வேற ஒரு நல்ல பொண்ணா பாருங்க.. உங்க அழகுக்கும் அறிவுக்கும் தான் நிறைய பொண்ணுங்க வரிசையில் வந்து  நிற்பதா சொல்வீங்களே..

அதுல ஏதாவது ஒன்னை ஓகே பண்ணி வாழ்க்கையை என்ஜாய் பண்ணுங்க மகிழன்.. என்னை விட்டுடுங்க.. “ என்றாள் இறங்கிய குரலில்..

“ப்ளீஸ் தியா.. இன்னொரு தரம் நான் சொன்னதை கன்சிடர் பண்ணேன்.. என்னை இப்ப பிடிக்கவில்லை என்றாலும் போக போக பிடித்துவிடும்.. ஆனால் நான் உன்னை சின்சியரா லவ் பண்றேன்.. ஐ லவ் யூ தியா... “ என்றான் கண்ணில் மின்னும் காதலுடன்..

“இல்ல மிஸ்டர் மகிழன்.. அது மட்டும் என்னால் முடியாது..." என்றாள் பிடிவாதமாக..

அதை கேட்டவன் தலையில் கை வைத்து கொண்டு  அமர்ந்து கொண்டான்.. அவன் உடல் மீண்டும் விரைக்க கை முஷ்டி இறுக அவன் உள்ளுக்குள் வேதனை படுவது அவளுக்கு தெரிந்தது..

ஆரம்பத்தில் அதை கண்டு அவள் மனம் துள்ளி குதித்தாலும் ஏனோ  அது நீண்ட நேரம் நிலைக்க வில்லை.. அவன் வருந்துவதை வேதனை படுவதை கண்டு அவளுக்கு கஷ்டமாக இருந்தது..

சிறிது நேரம் மகிழன் தன் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து இருக்க, அவளோ அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.. பின்

 "ஒகே .. அபீஸியலா பேச  எதுவும் இல்லைனா நான் கிளம்பறேன்..” எனறு எழுந்தாள் சந்தியா..

“ஒரு நிமிசம் தியா..." என்றவன் தலையை நிமிர்த்த அவன் கண்கள் சிவந்து இருந்தன.. அவன் கோபத்தை யெல்லாம் கட்டு படுத்தியதில் கோபம் கண்களுக்கு ஏறி இருந்தது புரிந்தது..

அவளை ஒரு வெறியுடன் பார்த்தவன்

"லுக் தியா...  நீயும் என்னை விரும்பறனு எனக்கு தெரியும்..  எனக்கு இரண்டு நாள் டைம் கொடு..அதை நிரூபித்து காட்டறேன்.. " என்றான் இறுகிய முகத்துடன்..

அவன் சவால் விடும் தோரணையை கண்டவள் இதுவரை அவனுக்காக கொஞ்சம் இறங்கி வந்த அவள் மனம் மீண்டும் கிடுகிடுவென மலை ஏறி மேல அமர்ந்து கொண்டது..

"அது மட்டும் உங்களால் முடியாது.. முடிஞ்சால் நிரூபித்து காட்டுங்க.. " என்று இவளும் சவால் விட்டாள்..

"அப்ப என் மேல உனக்கு லவ் இல்லை ?.. என்னைக் கண்டால் உனக்கு உள்ளே படபடனு அடிச்சுக்கலை?  “ என்றான் அவள் கண்களை நேராக பார்த்து..

ஒரு நொடி அதிர்ந்து போனாள் சந்தியா.அவன் சொன்னதெல்லாம் அவளுக்குள் நடப்பதுதான்..

ஆனால் அதுக்காக அது தான் லவ் னு எப்படி சொல்வது? என அவள் மனம் முரண்ட

“அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது.. நீங்களே எதையாவது கற்பனை பண்ணி கிட்டு உளறாதிங்க.. "என்று முறைத்தாள்..

"சரி.. அப்ப என் மேல் லவ் இல்லைனா நீ ஏன் டீம் அவுட்டிங் க்கு  வரமாட்டேனு சொல்ற? "

“அதான் சொன்னேனே... எனக்கு நிச்சயம் .. அதனால.. "

"ஸ்டாப் இட்... சும்மா ஒரு பொய்யை சொல்லி உன்னையை நீயே ஏமாத்திக்காத தியா... மனோ டீம் அவுட்டிங்  னு சொன்ன உடனே குதிச்சதும் விசில் அடிச்சதும் நீதான்..

அப்ப துள்ளி குதிச்சவ அடுத்து  நான்தான் இதை ஆர்கனைஸ் பண்றேனு தெரிஞ்ச உடனே ஏன் பின் வாங்கற?..

அப்ப என்கிட்ட உனக்கு பயம்.. எங்க உன் மனதை  என்கிட்ட சொல்லிடுவியோனு பயம்.. " என்றான் நக்கலாக சிரித்தவாறு..

“ஹலோ.. எனக்கு எதுக்கு பயம்..?  நீ இத ஆர்கனைஸ் பண்ணினா எனக்கு என்ன  வந்ததாம்? “ என்று சிலிர்த்து கொண்டு  தோளை குலுக்கினாள்..

“ஹ்ம்ம் அப்ப தைர்யமானவளா இருந்தா  இந்த அவுட்டிங் ல கலந்துக்க.. " என்றான் உதட்டை வளைத்து ஏளனமாக சிரித்தவாறு..

“அவ்வளவுதான.. சரி நான் வர்ரேன்.. ஆனால் நீங்க என்ன திட்டம் போட்டு என்னை மடக்க முயன்றாலும் அது எல்லாம் ப்ளாப் தான் ஆகும்... தெரிஞ்சுக்கங்க..”

"ஹா ஹா ஹா திட்டம் எல்லாம் போட வேண்டாம் பேபி.. என் லவ் உண்மைனா நீயே என்னை தேடி தானா வருவ...கண்டிப்பா வருவ.. அப்படி இல்லைனாலும் வர வைப்பான் இந்த மகிழன்... " என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான்..

அவளுக்கே ஆச்சர்யம்... சற்று முன் அவ்வளவு இறுகி போய் இருந்தவனா இவன் என்று  நம்பவே முடியவில்லை...  நிமிடங்களில் தன்னை முற்றிலும் மாற்றி கொண்டிருந்தான்..

 “ஹ்ம்ம் பார்க்கலாம்.. ஆல் தி பெஸ்ட்..அப்புறம் என் பெயர் ஒன்னும் தியா இல்லை.. சந்தியா... கால் மி அஸ் சந்தியா..“ என்று முறைத்தவாறு தன் கணினியை எடுத்து கொண்டு அந்த அறை கதவை திறந்து கொண்டு  வேகமாக வெளியேறினாள் சந்தியா....

அவள் சென்றதும் அதுவரை  சிரித்து கொண்டிருந்தவன் முகத்தில் வேதனை அப்பி கொண்டது...

“இவள் தெரிந்துதான் பேசுகிறாளா ?  இல்லை தெரியாமல் உளறுகிறாளா?

அவள்  உண்மையிலயே என்னை லவ் பண்ணலையா? இல்லையே என்னை பார்க்கும் பொழுதெல்லாம் படபடக்கும் அவள் கண்கள் அவளுக்கும் என் மீது ஆர்வம் விருப்பம் இருப்பதைத்தான் காட்டுகிறது..

ஆனால் அவள் ஈகோ தான் அவளை தடுக்கிறது.. என்னை ஏற்று கொள்ள மறுக்கிறாள்.. “என்று சரியாக அவளை கணித்து இருந்தான்..

“ஹ்ம்ம் எப்படியாவது இந்த இரண்டு நாட்களில் என் மீதான அவள்  காதலை உணர வைத்துவிடவேண்டும்.. மற்றபடி அவ சொல்லும் நிச்சயம் எல்லாம் கதைதான்..”  என தனக்குள் சொல்லி கொண்டான்...

எப்படி அவளை அவள் காதலை உணர வைப்பது என்று யோசித்து மண்டையை பிய்த்து கொண்டான்..

பிறகு அந்த அவுட்டிங் அரேஞ்மென்ட் ல் பிஸியாகி போனான் மகிழன்...

டுத்த  நாளும் மீண்டும் அனைவரையும் அழைத்து வெள்ளிக்கிழமை  டீம் அவுட்டிங்  பிளானை அனைவருக்கும்  விளக்கினான் மகிழன்..

அலுவலகத்தில் இருந்தே பேருந்து ஏற்பாடு செய்திருப்பதால் அனைவரும் அலுவலகத்துக்கு  வந்து அங்கிருந்து பேருந்தில் செல்லலாம் எனவும் இரண்டு பேருந்துகள் ஏற்பாடு செய்திருந்தான்..

ஒவ்வொருவருக்கும் எந்தெந்த பேருந்து என ஒதுக்கி இருக்க அந்த லிஸ்ட் ஐ கொடுத்து  மற்றும் மற்ற நிகழ்ச்சிகளையும் விளக்கினான்..

நீண்ட நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் அவுட்டிங் என்பதால் அனைவரும் ஆவலுடன் வெள்ளிக்கிழமையை எதிர் நோக்கினர்..

வெள்ளிக்கிழமை...

காலையிலயே மகிழன் படு உற்சாகமாக இருந்தான்.

“இன்று  எப்படியாவது  என் காதலை  அவள் ஏற்று கொள்ள வைக்க வேண்டும் .. “ என்று உறுதி செய்து கொண்டான்..

மாடியில் இருந்து கிழிறங்கி வர, மது பூஜை  முடித்து கற்பூர தட்டை எடுத்து கொண்டு பூஜை அறையில் இருந்து வெளியில் வந்தாள்.. மகி வருவதை  கண்டதும் அவனிடம் தட்டை  நீட்டியவள்

“ஆல் தி பெஸ்ட் மகி.. “ என்று சிரித்தாள்..

“தேங்க்ஸ் மது..” என்றவன் அவள் நீட்டியிருந்த தட்டில் இருந்த விபூதியை எடுத்து கீற்றாக நெற்றியில் வைத்து கொண்டான்.. சில நொடிகள் கழித்தே  அவள் எதற்கு ஆல் தி  பெஸ்ட் சொன்னாள்  என்று புரியாமல்

“ஹே.. மது.. நீ எதுக்கு இப்ப ஆல் தி பெஸ்ட் சொல்ற? “என்றான் குழப்பமாக

“ஹீ ஹீ ஹீ.. நீ எதுக்கு தேங்க்ஸ் சொன்னியோ அதுக்குத்தான்.. “ என்று  கண் சிமிட்டினாள் நமட்டு சிரிப்புடன்..

“வர வர எல்லாரும் ஒரு மார்க்கமாதான் சுத்திகிட்டிருக்காங்க.. எதாவது  கேள்வி கேட்டால் நேரா  பதில் சொல்லாமல் சுத்தி வளச்சு சொல்றது..இல்லையா நம்மளையே பதில் கேள்வி கேட்கறது...  “ என்று புலம்பி கொண்டே தன் அன்னையிடம் சொல்லி விட்டு தன் காரை எடுத்து  வேகமாக கிளப்பினான்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!