நிலவே என்னிடம் நெருங்காதே!!-18

 


அத்தியாயம்-18

“எந்த காதல் உங்களுக்கு பிடிக்காதோ அதே காதலைத்தான் நான் பண்ணப்போறேன்.. உங்கள் கௌரவத்துக்கு பங்கம் வர்ற மாதிரி ஒருத்தியைத்தான் லவ் பண்ணப்போறேன்... உங்களுக்கு பிடிக்காத ஒருத்தியை இந்த ஜமீனுக்கு மருமகளாக்கி காட்டறேன்..”

என்று தன் தாத்தாவிடம் சபதம் செய்து சிங்கமாய் உறுமி விட்டு அந்த ஜமீனை விட்டு வெளியேறினான் அதிரதன்..

அடுத்து நேராக அவன் சென்று நின்றது சென்னையில் அவன் நண்பர்கள் வசிக்கும் வீட்டில்..

அதிரதன் எம்.பி.ஏ படித்து கொண்டிருக்கும் பொழுதே அவனுக்கு நெருங்கிய நண்பர்களானவர்கள் அபினவ் மற்றும் அஸ்வின்... அவனை போலவே மற்ற இருவருக்கும் சொந்தமாக தொழில் தொடங்கவேண்டும் என்ற லட்சியம் இருந்ததால் படித்து கொண்டிருக்கும் பொழுதே அதற்காக திட்டமிட ஆரம்பித்தனர்..

ஆனால் எடுத்தோ கவிழ்த்தோம் என்று எடுத்த உடனேயே தொழிலில்  இறங்காமல் படிப்படியாக செயல்படுத்த திட்டமிட்டனர்.. அதிரதன் ஏற்கனவே அவன் தாத்தாவின் டெக்ஸ்டைல் தொழிலை பொறுப்பேற்று நடத்தி கொண்டிருந்தாலும் அவனுக்கு பின்னால் இருந்து தாத்தா தேவநாதன் மறைமுகமாக அவனை வழி நடத்தி வருவது அவனுக்கும் தெரியும்...

ஆனால் அவன் கற்று கொண்டது டெக்ஸ்டைல் பிசினஸ்.. அதே நடைமுறைகளை மென்பொருள் நிறுவனத்தில் பயன்படுத்த முடியாது. அதற்கு வேற மாதிரியான பயிற்சி  வேண்டும் என்று திட்டமிட்ட நண்பர்கள் இன்னும் கொஞ்சம் தங்கள் அனுபவத்தை வளர்த்து கொள்ளவேண்டும் என்று முடிவு செய்து மற்ற இருவரும் சென்னையில் ஒரு புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தனர்..

அதிரதன் கோவையிலயே தங்கி தன் தாத்தாவின் தொழிலை பார்த்து வந்தான்.. வார விடுமுறைகளில் நண்பர்கள் மூவரும் இணைந்து அவர்கள் திட்டத்தை அலசி ஆராய்ந்து அதற்கான பயிற்சிகளையும் எடுத்து  கொண்டிருந்தனர்..

எப்படியும் அடுத்த வருடத்தில் தனியாக தொழிலை தொடங்குவது என்று திட்டமிட்டிருந்தனர்..

ஆனால்  திடீரென்று அதிரதன் தங்கள்  முன்னே வந்து நிற்க எந்த ஒரு குறுக்கு விசாரணையும் செய்யாமல் தன் நண்பனை அரவணைத்துக் கொண்டனர் அவன் நண்பர்கள் இருவரும்..

அவர்கள் இருவரும் அடுக்குமாடி  குடியிருப்பில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருக்க அதிரதனும்  அவர்களுடனே தங்கிவிட்டான்..

தாத்தாவிடம் சண்டையிட்டு வந்த நெருப்பு இன்னும் உள்ளுக்குள் சுழற்றி அடித்துக் கொண்டிருக்க அதன் தாக்கத்தால் அன்றே வெகுண்டு எழுந்தான்..

அவர் முன்னால் தான் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற வெறி அவனை தூங்க விடாமல் செய்திருக்க, அன்று இரவு முழுவதுமே இணையத்தில் தேடிக் கொண்டிருந்தான்..

ஏற்கனவே சிறிய முதலீட்டில் சிறு தொழிலாக ஆரம்பிக்க திட்டமிட்டு இருந்ததால் நண்பர்கள் மூவரும் கலந்து ஆலோசித்து அடுத்த நாளே தொழிலை தொடங்கி விட்டனர்..  

முதலாவதாக தற்பொழுது ட்ரென்டில் இருக்கும் இணையதளம் வடிவமைப்பதை ஆரம்ப புள்ளியாக கொண்டு ஆரம்பித்தனர்.. மற்ற இரு நண்பர்களும் தங்கள் வேலையை இன்னும் கொஞ்சம் நாட்கள்  தொடர்வதாகவும் அதிரதன் ஆரம்பத்தில் பார்த்து கொள்வதாக திட்டமிட்டிருந்தனர்...

அதிரதன் வேறு துறையில் படித்திருந்தாலும் ஆரம்பத்தில் இருந்தே அவனுக்கு கணினியில் நாட்டம் அதிகமாக சென்று விட, நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் மென்பொருள் சம்பந்தமான லேட்டஸ்ட் டெக்னாலஜி அனைத்தையுமே கற்று வைத்திருந்தான்..

ஒரு சில இணைய தள மாடல்களையும் முன்பே உருவாக்கி வைத்திருந்தான்.. அதனால் அதை வைத்து முதலில்  தொடங்கலாம்.. கூடவே இணையத்தில் விளம்பரம் செய்து குறைந்த விலையில் புதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு இணையதளத்தை வடிவமைத்துக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தனர்..

மற்ற இரு நண்பர்களும் கடந்த இரண்டு வருடமாக தொழில் தொடங்க வேண்டும் என்று சேமித்த பணம்  ஓரளவு இருக்க அதை வைத்து இணையத்தில் விளம்பர படுத்துவது, மற்றும் மற்ற முதலீட்டுக்கு பயன படுத்தி கொண்டு தொழிலை ஆரம்பிக்கலாம் என்று திட்டமிட்டனர்..

அப்பொழுதுதான் அதிரதனுக்கு உறைத்தது.. அவனும் இரண்டு வருடமாக அவனுக்கு என்று ஒரு சம்பளத்தை எடுத்து கொண்டு அதை சேமித்து வைத்திருந்தால் அவன்  கையிலும் கொஞ்சம் பணம் இருந்திருக்கும்..

அவன் பங்குக்கு அதை முதலீடாக செய்திருக்கலாம்.. மாறாக தங்கள் தொழில் என்று  எதையும் அவனுக்காக எடுத்துக் கொள்ளாமல் விட்டிருந்தான்.. இப்பொழுதும் அவன் கையில் ஏடிஎம் கார்டு கிரெடிக் கார்ட் என  இருந்தாலும் அது எல்லாம் அவன் தாத்தாவிற்கு சொந்தமானது..

அதில் இருந்து பணத்தை எடுக்க அவனுக்கு மனம் வரவில்லை.. அவன் தன்மானம் இடம் கொடுக்கவில்லை.

அதனால் தன் நண்பர்களிடம் அவன் வொர்க்கிங் பார்ட்னராக சேர்ந்து கொள்வதாக வேதனையுடன் சொல்ல, அவர்களும் அவனுக்கு  ஆறுதல் சொல்லி அவனை சியர்அப் பண்ணி உற்சாக படுத்தினர்..

அடுத்து வேலையை தொடங்கலாம் என்று எண்ண அப்பொழுது தான் அவன் கையில் லேப்டாப் இல்லை என்று புரிந்தது..

தாத்தாவிடம் சீறி விட்டு வரும் அவசரத்தில் அவனுக்கு சொந்தமான எதையும் எடுத்துவரவில்லை.. எடுத்து வர பிடிக்கவில்லை.. அதனால் அடுத்த நேரம் அணிய சட்டை கூட இல்லாமல் அனைத்தையும் விட்டுவிட்டு வந்து விட்டான்...

நல்ல வேளையாக அவன் உருவாக்கி இருந்த சில இணையதள மாடல்கள் மற்றும் மொபைல் அப்ளிகேசன் மாடல்களை முன்பே நண்பர்களுக்கு அனுப்பி வைத்திருந்ததால் அவர்களிடம் இருந்து அதை எடுத்து கொள்ளலாம் என்று நிம்மதி அடைந்தான்.

அடுத்து மூவரும் வெளியில் கிளம்பி சென்று அவனுக்கு குறைந்த விலையில் ஒரு லேப்டாப் ம் மற்றும் அவனுக்கு சில ஆடைகள் வாங்கி வந்தனர்..நண்பர்களின் உதவியை எண்ணி நெகிழ்ந்து போனான் அதிரதன்.. 

டுத்த நாள் நண்பர்கள் இருவரும் தங்கள் வேலைக்கு சென்றுவிட, அதிரதன் தன் லேப்டாப் ஐ எடுத்து வைத்து தன் வேலையை ஆரம்பித்தான்.. முதலாவதாக இணையத்தில் விளம்பரம் செய்தான்.. அடுத்து எங்கெல்லாம் தேவை இருக்கிறது என்று தேடிபார்த்தான்...

கூடவே அவர்கள் தொழிலுக்கு ஒரு தளத்தை உருவாக்க ஆரம்பித்தான்...

ஒரு வாரம் ஓடிச்சென்றிருக்க, அவன் கொடுத்திருந்த விளம்பரத்துக்கு எந்த ஒரு ரெஸ்பான்ஸ்ம் வரவில்லை..அதை கண்டு கொஞ்சம் மனம் தளர்ந்தாலும் அவன் தாத்தா சொல்லி கொடுத்திருந்த பாடம் நினைவு வந்தது..

எதிலும் பாசிட்டிவ் அப்ரோச் இருக்கணும்.. எந்த ஒரு செயலில் இறங்கினாலும் முழு மனதோடு ஈடுபடணும்.. கடைசி வரைக்கும் நின்று போராட வேண்டும் என்று அவனுக்கு சொல்லி கொடுத்திருந்தார்...

அவரை பிடிக்கவில்லை என்றாலும் அவர் போதித்த பாடங்கள் அவனுக்கு அவ்வபொழுது அவன் மனதில் வந்து நிற்கும்.. அதனால் மனம் தளராமல் எப்படி ஒரு தொழிலை ஆரம்பிப்பது வெற்றிகரகமாக நடத்துவது என்றெல்லாம் இணையத்தில் தேடி கொண்டிருந்தான்..

மேலும் பத்து நாட்கள் கடந்திருக்க, அதிரதனுக்கு கொஞ்சமாக நம்பிக்கை குறைய ஆரம்பித்தது...

“இதெல்லாம் வேலைக்கு ஆகாது.. இப்ப எல்லாம் இந்த மாதிரி வெப் டிசைன் பண்ணுவதற்கு எத்தனையோ நிறுவனங்கள் வந்துவிட்டன.. அதில் பெயர் தெரியாத தங்களுக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும் ?  என்று  மனம் தளர்ந்தான்..

இது நாள் வரை கஷ்டம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்தவன்... ஆனாலும் கஷ்டபடுபவர்களை காண்பித்து அதையும் அவனுக்கு பழக்கி இருந்தார் அவன் தாத்தா..

கையில் காசு இல்லாமல் நண்பர்களின் தயவில் எத்தனை நாட்கள் ஓசியில் தங்கி இருப்பது என அவன் மனம் அரிக்க ஆரம்பித்தது...பேசாமல் நானும் அவர்களை போலவே ஒரு வேலைக்கு சென்றுவிடலாமா என்று யோசித்தான்..

“அப்படி சென்று விட்டால் நானும் பத்தோடு பதினொன்றாக ஆகி விடுவேன்..என்னால் ஒரு புகழ்பெற்ற சக்ஸஸ்புல் பிசினஸ்மேன் ஆக வரமுடியாது.. அப்ப நான் அந்த தேவநாதன் ஜமீன்தாரிடம் தோற்றதை போல ஆகி விடும்..

இல்லை.. நான் தோற்க மாட்டேன்.. இந்த அதிரதன் ஜெயிக்க பிறந்தவன்.. போரில் எத்தனை பேர் எதிரிகள் இருந்தாலும் அவர்களை எல்லாம் வீழ்த்தி வெற்றி பெறும் வல்லமை படைத்தவன்.. ஆப்ட்ரால் ஒரு பெரியவர்.. அவரை ஜெயிக்க முடியாதா? “ என்று தலையை சிலுப்பி கொண்டான்..   

ன்று ஞாயிற்றுகிழமை..

எப்பொழுதும் காலையில் உற்சாகத்துடன் எழுந்து காலை உடற்பயிற்சியை செய்து முடிப்பவன் இன்று படுக்கையிலிருந்து எழுந்திருக்கவே மனமில்லாமல் சுருண்டு  படுத்துவிட்டான் அதிரதன்..  

அவன் மனம் அவன் உடைய ஜமீனை சுற்றி வந்தது.

அவன் வீட்டிலிருந்து கிளம்பி வந்த அடுத்த நாளே தன் சிம் ஐ எடுத்து வைத்துவிட்டு வேற ஒரு எண்ணை வாங்கி கொண்டான்.. தன் வீட்டில் இருப்பவர்கள் தன்னை தொடர்பு கொள்ள கூடாது என்று.. 

இந்த பத்து நாட்களில் அவன் மனம் எத்தனையோ முறை அவன்  பெற்றோர்களையும்  அவன் தங்கைகளையும் சுற்றி சுற்றி வந்தது.. அதுவும் அமுதினி என்ன பண்ணுகிறாள் என்று தெரிந்து கொள்ள துடித்தது அவன் உள்ளே..

அங்கு இருக்கும் ஒரு நண்பன் மூலம் எல்லாரும் நலமாக இருக்கிறார்கன் என்று தெரிந்து கொண்ட பிறகு அவனுக்கு  கொஞ்சம் நிம்மதியாக இருந்தது..

இன்று காலையில் அவன் மனம் மீண்டும் தன் குடும்பத்தை சுற்றி வந்தது..  அவர்களையெல்லாம் பார்க்க வேண்டும் போல ஆவலாக இருந்தது..ஆனால் அடுத்த நொடி அவன் தாத்தா செய்த தந்திரம் கண்முன்னே வர,  உடனே இறுகி போனான்...

வேகமாக எழுந்தவன் தன் கோபத்தை எல்லாம் திரட்டி தன் காலை ஓட்டத்தில் காண்பித்தான்.. உள்ளே கொதித்து கொண்டிருக்க, அந்த கோபம் அடங்கும்  வரை கண் மண் தெரியாமல் ஓடி கொண்டிருந்தான்..

வீட்டிற்கு திரும்பி வந்தும் தன் நண்பர்களிடம் சரியாக பேசவில்லை..அன்று முழுவதுமே மூட் அவுட் ஆக இருந்தவனை அவன்  நண்பர்கள் வற்புறுத்தி அன்று கடற்கரைக்கு அழைத்துச் சென்றனர்..

அவனும் ரிலாக்ஸ்ட் ஆக இருக்கும் என்று எண்ணி கிளம்பி சென்றிருந்தான்.. கடற்கரையில் ஆளுக்கொரு கடலையை வாங்கி கொண்டு நண்பர்கள் மூவரும் அமர்ந்து கொண்டு கடலை ரசித்தபடி பேசிக்கொண்டிருந்தனர்...

அவனும் நண்பர்களின் பேச்சுக்கு  ம் சொல்லி கொண்டிருந்தாலும் அவன் மனம் முழுவதும் அடுத்து என்ன செய்வது என்றே யோசித்து கொண்டு இருந்தது..

“எப்படியாவது ஜெயிக்க வேண்டும்.. என் தாத்தாவின் முன்னால் ஜெயித்துக் காட்ட வேண்டும்.. அவரின் தயவு  இல்லாமல் ஜெயித்து காட்ட வேண்டும்.. அதற்கு  ஒரு சிறு துரும்பு கிடைத்தால் கூட போதும்.. அதை பற்றி கொண்டு முன்னேறி விடலாம்.. ஆனால் அந்த சிறு துரும்பை கண்டுபிடிப்பதே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறதே..”  என்று தொய்ந்து போனான்..

அப்பொழுது தான் தாத்தா சொன்ன எடிசன் கதை நினைவு வந்தது..

“ஆயிரம் முறை அவருடைய கண்டுபிடிப்புகள்  தோற்று போயின.. அவரை சுற்றி இருந்தவர்கள் அவரை கிண்டல் செய்தாலும் மனம் தளராமல்  முயற்சி செய்ய கடைசியில் அவர் லட்சியத்தை அடைந்து விட்டார்..

இன்று எல்லார் வாழ்விலும் ஒளியேற்றும் மின்விளக்குகளில் இன்றும் நாம் அவரை நினைத்துக்கொண்டிருக்கிறோம்.. “ என்று சொன்னது  நினைவு வர,  தலையை சிலுப்பி கொண்டவன் மீண்டும் தன்னைத்தானே ரீசார்ஜ் செய்து கொண்டான்..

அதே நேரம் அவன் அலைபேசி ஒலிக்க அதை எடுத்து பார்த்தவன் புது எண்ணாக இருக்க,

“நமக்கு யார் போன் பண்ணுவது? இந்த எண்ணை யாருக்கும் கொடுக்க வில்லையே அதுக்குள் இந்த தாத்தா என்னை தேடி கண்டுபிடித்து விட்டாரா? என்ற யோசனையுடன் அலைபேசியை எடுத்து காதில் வைக்க அதில் சொன்ன செய்தியை கேட்டு துள்ளி குதித்தான் அதிரதன்...

அவன் முகத்தையே ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் முகத்தில் வந்து போன சந்தோஷ ரேகையை கண்டதும் ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தனர்... அதிரதன் பேசி முடித்து தன் அலைபேசியை அணைத்ததும்

“யாஹுஹுஹுஹு.. " என்று எழுந்து நின்று கையை மேல விசிறி அந்த கடற்கரையில் எம்பி மேல குதித்தான்..

அவன் அருகில் அமர்ந்து இருந்த அவன் நண்பர்களும் வேகமாக எழுந்து

“என்னாச்சு டா? என்று  விசாரிக்க, அவன் ஆன்லைனில் கொடுத்திருந்த விளம்பரத்தை பார்த்து ஒருவர் அவனை அழைத்திருந்தார்..

அவர் நடத்தி வரும் ஒரு சிறு ஆடை விற்கும் நிறுவனத்திற்கு இணையதளம் வடிவமைத்து தர சொல்லி கேட்டிருந்தார்..

இப்பொழுதெல்லாம் இணையத்தின் மூலமாகவே எல்லாரும் விற்க ஆரம்பித்து இருந்ததால் அவர் கடைக்கும் அது மாதிரி ஒன்று வேண்டும் என்றும் அதிரதன் சொல்லி இருந்த விலை அவருக்கு உகந்ததாக இருக்க அவனை அழைத்ததாக சொல்லி முடித்தார்...

அவனும் மகிழ்ந்து போய் கொஞ்சம் குறைத்தே பண்ணி தருவதாக சொல்லி அவரை ஒத்துக்க வைத்திருந்தான்... அவன் சொல்லிய செய்தியை கேட்டு அவன் நண்பர்களுக்கும் உற்சாகம் தொற்றி கொண்டது..

உடனே அதிரதனை தூக்கி சுற்றினர் சந்தோஷத்தில்...!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!