நிலவே என்னிடம் நெருங்காதே!!-19

 


அத்தியாயம்-19

டுத்த நாளில் இருந்து ரொம்பவும் பிசியாகி விட்டான் அதிரதன்.. ஏற்கனவே அவனுடைய டெக்ஸ்டைல் நிறுவனத்திற்கு அவனே டிசைன் செய்து வைத்திருந்த  மாடலை பயன்படுத்தி இரண்டே நாளில் அவர் சொன்ன மாதிரிக்கு வடிவமைத்து கொடுத்துவிட அவருக்கும் முழு திருப்தி..

அதற்கான பணத்தை கொடுத்து விட அதை கண்டு துள்ளி குதித்தனர் நண்பர்கள் மூவரும்.. அதுவும் அதிரதனுக்கு அந்த பணத்தை கண்டதும் அப்பொழுதுதான் உழைப்பதின் அருமை பெருமை புரிந்தது..

கஷ்டபட்டு உழைத்து அதற்கான பலனை அனுபவிக்கும்பொழுது கிடைக்கும் திருப்தி, சந்தோஷம் மன நிறைவு என்ற அனைத்து விதமான உணர்வுகளையும் அனுபவித்தான்..

அவன் தாத்தா பிசினசில் லட்சகணக்கில் டர்ன் ஓவர் பண்ணி இருக்கிறான்.. பல கோடிகளுக்கான ஒப்பந்தங்களை அனாயசமாக முடித்திருக்கிறான்.. அப்பொழுதெல்லாம் கிடைக்காத ஒரு திருப்தி தன் சொந்த உழைப்பில் சில ஆயிரங்கள் மட்டுமே என்றாலும் அதுவே அவனுக்கு பல கோடிக்கு சமமானதாக இருந்தது...

தன் முதல் வாடிக்கையாளர் முதல் ப்ராஜெக்ட் வெற்றிகரமாக முடிந்து விட அதற்கு பிறகு இன்னும் உற்சாகத்துடன் செயல்பட ஆரம்பித்தான்..

அவர் மூலமாகவே அந்த பகுதியில் இருக்கும் மற்ற சில சிறு வணிகர்களின் தொடர்பு கிடைக்க, அவர்களை எல்லாம் அவனே நேரில் சென்று சந்தித்து இணையதளத்தின் பயன்களையும் அதை உருவாக்குவதற்கு குறைந்த செலவு இருந்தால் போதும் என்று விளக்கி கூற அதன் மூல ஒரு சில ப்ராஜெக்ட் கள் கிடைத்தன..

இப்பொழுது அலுவலகம் முடிந்து வந்ததும் அவன் நண்பர்களும் அவனுடன் இணைந்து கொள்ள மூவரும் மும்முரமாக இந்த தொழிலில் இறங்கினர்.. வார விடுமுறையையும் அவன் நண்பர்கள பயன்படுத்தி கொள்ள, அடுத்த ஆறு மாதங்களிலயே ஓரளவுக்கு நல்ல வருமானம் வர ஆரம்பித்தது...

இணையதளம் மட்டும் அல்லாமல் சில மொபைல் அப்ளிகேசன்ஸ் டெவலப் பண்ணி தருவது என  ஆரம்பித்து மென்பொருளில் இன்னும் பல சேவைகளை தொடங்கி இருந்தனர்...

ஓரளவுக்கு நல்ல வருமானம் வர ஆரம்பித்தாலும் அதோடு திருப்தி அடையாமல் அதை அடுத்த நிலைக்கு எடுத்து செல்ல பாடுபட்டனர்...

ருநாள் இரவு நண்பர்கள் மூவரும் மொட்டை மாடியில் நின்றுகொண்டு தங்கள் தொழிலை பற்றி பேசி கொண்டிருக்க, அப்பொழுதுதான் அவர்கள் முறைப்படி ஒரு நிறுவனமாக தங்கள் தொழிலை பதிவு செய்ய வேண்டும்..

அதுக்கு அடுத்து எல்லா வகையான மென்பொருள்களை  தயாரிக்கும்  நிறுவனமாக இதை பெரிதாக்க வெண்டும் என்று திட்டமிட அதற்கு முதல் கட்டமாக நிறுவனத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தனர்..

நிறைய பெயர்கள் அதிரதன் நண்பர்கள் சொன்னாலும் எதுவும் அவன் மனதில் பதியவில்லை.. அப்பொழுது வானத்தை அண்ணாந்து பார்க்க அன்று பௌர்ணமி நிலவு தகதகத்து கொண்டிருந்தது..

அந்த நிலா பொண்ணு வெட்கத்துடன் இவனை பார்த்து கண் சிமிட்டி சிரிப்பதை போல இருக்க, அந்த நிலாவை கண்டதுமே அவன் மனதில் அப்படி ஒரு அமைதி, நிம்மதி பரவியது..

சிறு வயதில் இருந்தே நிலா என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்..

அதனாலயே பௌர்ணமி அன்று  மாடியில் பால்கனியில் அமர்ந்து கொண்டு தாத்தாவிடம் கதை அடித்து கொண்டே அந்த நிலாவை பார்த்து ரசித்து கொண்டிருப்பான்...

அவரும் நிலா பற்றிய நிறைய கதைகளை சொல்லி இருக்கிறார்.. தன் மனதில் அடித்த புயலால்  கடந்த ஆறுமாதமாக அந்த நிலாவை பார்த்து ரசிக்க முடியாமல்  போய்விட்டது இப்பொழுது தான் உறைத்தது..

கன்னி பெண்ணாய் நாணத்துடன் அவனையே பார்த்து சிரித்து கொண்டிருந்த  அந்த நிலா பொண்ணை ரசித்தவன் மனதில் உதித்ததுதான் அந்த பெயர்..

நிலா சாப்ட்வேர் சொல்யூசன்ஸ்....

நண்பர்களுக்கும் அந்த பெயர் பிடித்துவிட, அடுத்த நாளே அதை பதிவு பண்ணி விட்டனர்.

அவன் நிலா பொண்ணு வந்த நேரம் அடுத்தடுத்து சில ப்ராஜெக்ட் களும் வந்துவிட, அடுத்த மாதத்தில் இருந்து அவன் நண்பர்க்ளும் தங்கள் வேலையை விட்டு விட்டு ப்ராஜெக்ட் ல் ஈடுபட ஆரம்பித்தனர்...

அடுத்து குறைந்த சம்பளத்தில் சில தெரிந்த நண்பர்களையும் வேலைக்கு அமர்த்தி கொள்ள, பிறை நிலவாய் இருந்த நிலா சாப்ட்வேர் சொல்யூசன்ஸ் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பித்தாள்...

மூன்று நண்பர்களின் கிட்டதட்ட இரண்டு வருட கடின உழைப்பால் இரண்டு வருடத்தில் முழு நிலவாக வளர்ந்து மலர்ந்து நின்றாள் நிலா சாப்ட்வேர் சொல்யூசன்ஸ்..

இப்பொழுது தங்களுக்கு என்று  ஒரு அலுவலகத்தை அமைத்து கொண்டு ஆயிரம் பேருக்கு மேல் வேலை செய்யும் ஒரு நடுத்தர மென்பொருள் நிறுவனமாக வளர்ந்து இருந்தது..

அதை கண்டதும் அதிரதனுக்கு பெருமையாக இருந்தது.. ஓரளவுக்கு தன் தாத்தாவை ஜெயித்துவிட்டதை போல இறுமாப்பாக, கர்வமாக இருந்தது... மனதிற்குள் அடித்து கொண்டிருந்த புயல் கொஞ்சம் ஓய்ந்தது போல இருந்தது...

ஆனாலும் முழுவதுமாக ஓய்ந்து விடவில்லை.. இன்னுமே  ஓரத்தில் அவன் செய்து வந்திருந்த சபதம் கனன்று கொண்டேதான் இருந்தது..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!