நிலவே என்னிடம் நெருங்காதே!!-21

 


அத்தியாயம்-21

டுத்த நாளில் இருந்து வழக்கம் போல அவன் அலுவலக வேலையில் பிசியாகிவிட அடுத்துவந்த ஒரு வாரம் அவ்வபொழுது அந்த மெலுகு சிலையின் நினைவுகள் வந்து போனாலும் வேலை பிசியில் அதை பின்னுக்கு தள்ளிவிட்டான்..

அந்த வார இறுதியில் அவளே  அவனை அழைத்திருந்தாள்.. அவளின் அழைப்பை கண்டதும் துள்ளி குதித்தான் அதிரதன்.. அடுத்து அவள் அவனை பார்க்கவேண்டும் என்று அழைக்க, அடுத்த அரை மணி நேரத்தில் அவள் முன்னால் இருந்தான்..

அவளும் சுத்தி வளைக்காமல் இந்த ஒருவாரமாக அவனை பார்க்காமல் தவிப்பாக இருந்ததாக உருகி குழைந்து பின் அவனிடம் அவள் காதலை புரபோஸ் பண்ண அவனோ இன்ப அதிர்ச்சியில் திக்கு முக்காடி போனான்..

அவன் நண்பர்களிடம் விசாரித்து அவளை பற்றி முன்னரே இன்னும் கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தான்... அவர்கள் வேலை செய்த அலுவலகத்தில் தான் அவளும் பணியாற்றுகிராள்..

அந்த அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு அவள் ஒரு கனவு கன்னி. இவள் கடைக்கண் பார்வைக்காக அத்தனை பேர் ஏங்கி தவம் இருக்க, ஆனால் யாருக்கும் இதுவரை கமிட் ஆகவில்லை அவள்..

தாராளமாக அனைவருடனும் கலந்து பழகினாலும் ஒரு எல்லைக்குள் எல்லாரையும் நிறுத்தி விடுவாள் என்று அவளை பற்றி நல்லவிதமாக சொல்லி இருந்தனர்..

அப்படி அத்தனை பேர் முயன்றும் அவர்களுக்கு கிடைக்காதவன் ஒரே வாரத்தில் தன்னிடம் காதலை புரபோஸ் பண்ண அவனுக்கு அந்த வானத்தையே வச படுத்தியதை போல பெருமையாக கர்வமாக இருந்தது..

கூடவே இருவரின் ஜோடி பொருத்தமும் சூப்பராக இருந்ததாக எல்லாரும் பாராட்டி சொல்லி இருக்க, தான் வளர்ந்து பெரிய பிசினஸ் மேனாக நிற்கும் பொழுது இவள்  என்னருகில் இருந்தால் இன்னும் வெய்ட் ஆக இருக்கும்..

“முகேஸ் அம்பானிக்கு ஒரு நிதா(Nita) மாதிரி அதிரனுக்கு இந்த நிலா.. கூடவே என் தாத்தாவையும் சவாலில் ஜெயித்து விடலாம்... இப்படி பட்ட ஒரு மெலுகு சிலையை தேவதையை  பார்த்தால் அந்த ஜமீனே அதிசயித்து பார்க்க போகிறது.. “ என்று அவசரமாக கணக்கிட்டவன் உடனேயே அவள் காதலை ஏற்று கொண்டான்...

அதன் பிறகு காதல் ஜோடியாக அந்த சென்னையை சுற்றி வந்தனர் இருவரும்.. காதல் மயக்கத்தில் இருந்தாலும் அதிரதன் தன் தொழிலில் கவனமாக இருந்தான்..

அதனால் வார விடுமுறையில் ஞாயிற்றுகிழமை மதியம் அரை நாள் மட்டும் அவளுக்காக ஒதுக்கி அவளுக்கு பிடித்த இடத்துக்கெல்லாம் அழைத்து சென்று அவளை உற்சாக படுத்தி அவனும் உற்சாகமாக செலவிட்டான் அந்த நாட்களை...

டுத்த ஆறு மாதத்தில் அவர்கள் காதல் இன்னும் வளர்ந்திருக்க, அடுத்து சாந்தினி அவனை அவன் வீட்டிற்கு அழைத்து செல்ல சொன்னாள்..

அவன் ஒரு ஜமீன்தார் வாரிசு என்று சொல்லி இருக்க, அவன் வீட்டு மக்களை எல்லாம் பார்க்கவேண்டும், அந்த ஜமீனை பார்க்க வேண்டும் என தலை சரித்து மையலுடன் பலமுறை கெஞ்சி கொஞ்சி கேட்டு கொண்டிருந்தாள்..

அதிரதன் அப்பொழுது பிசினஸ் லும் ஒரு நிலையான இடத்தை பிடித்திருந்தான்..

பல வாடிக்கையாளர்கள் உள்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் அவனுக்கு ப்ராஜெக்ட்கள் கிடைத்திருக்க, கிட்டதட்ட தொழிலில் தான் ஜெயித்து விட்டதாக காலரை தூக்கி விட்டு கொண்டான்..

ஆனால் அதற்கு அவன் கொடுத்த விலை மூன்று வருடங்கள் அவன் குடும்பத்தை பிரிந்து இருந்தது... ஆம்.. கிட்டதட்ட மூன்று வருடங்கள் ஆகிறது அவன் குடும்பத்தை பிரிந்து வந்து..

அவர்கள் யாரும் தொடர்பு கொளளத வண்ணம் அவன் கான்டாக்ட் எண்ணை மாற்றிவிட்டான்.. ஆனால் உள்ளூரில் இருக்கும் அவன் நண்பர்கள் மூலமாக அங்கு நடப்பவற்றை தெரிந்து கொண்டுதான் இருந்தான்..

அவன் தங்கையும் அவளுக்கு பிடிக்காத திருமணத்தை எதிர்த்து பெரிதாக எதுவும் துவண்டு விடவில்லை என்று தெரிந்ததும் கொஞ்சம் நிம்மதியுடன் தன் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டான்..

ஆனால் அவன் தாத்தா செய்த குள்ள நரித்தனம் மட்டும் அவன் உள்ளே எரிந்து கொண்டே இருந்தது.. அவரை அடிக்க வேண்டும்.. அவருடையை தலைக்கனத்தை அழிக்கவேண்டும் என்று நேரம் பார்த்து கொண்டிருந்தான்..

அவரிடம் சவால் விட்ட மதிரி அவர் தயவு இல்லாமல் இதோ தொழிலில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தாயிற்று.. இனி இதை மேலும் வளர்ப்பதில் சிக்கல் இருக்காது... அடுத்து அவரிடம் சவால் விட்டமாதிரி அவனும் காதலித்து கொண்டிருக்கிறான்...

அவனுடைய நிலா பொண்ணை அழைத்து சென்று  அவர் முன்னே நிறுத்தி இவள்தான் இந்த ஜமீனின் மருமகள் என்று சொன்னால் அவர் முகம் எப்படி போகும் அவர் மீசை எப்படி துடிக்கும்... அவர் ஆணவம் எல்லாம் அழிந்து போனதை போல துவண்டு போய்விடுவார்...

அதை பார்க்கவேண்டும் என்ற ஆசை அவன் உள்ளே வெகுண்டு எழுந்தது. கூடவே தன் குடும்பத்தையும்  பார்க்கவேண்டும் என்ற ஏக்கம் தலை தூக்க, அடுத்து வந்த லாங் வீக் என்ட் ல் சாந்தினியை அழைத்து கொண்டு ஜமீனுக்கு சென்றான் அதிரதன்...

மூன்று வருடங்களுக்கு பிறகு திரும்பி வந்திருந்த தன் மகனை கண்டதும் அவன் பெற்றோர்களுக்கு பெரும் மகிழ்ச்சி... மனோகரி அவனை கட்டி கொண்டு அவன் கன்னம் வருடி தழுதழுத்தாள்..

அவன் தங்கைகள் இருவரும் ஓடி வந்து அவனை கட்டி கொண்டு மகிழ்ச்சியில் பூரித்தனர்... அனைவரும் அவன் அருகில் மெலுகு சிலை போல ஒய்யாரமாக நின்று கொண்டிருந்த சாந்தினியை கண்டதும் வாயை பிளந்து பார்த்தனர்...

அவள் தான் அந்த வீட்டு மருமகள் ஆகப்போகிறாள் என்று சொன்னதும் அனைவரும் அதிர்ந்து போயினர்.. இதற்கு தாத்தா சம்மதிக்க மாட்டாரே... அடுத்து அனைவர் பார்வையும் அமுதினி பக்கம் சென்றது..

அவள் காதலையே தாத்தா ஏற்று கொள்ளாமல் பிரித்து விட்டார்.. அந்த துக்கம் தாளாமலயே இன்னும் துடித்து வருகிறாள் அமுதினி. அந்த வலி மறையும் முன்னே இவன் இப்படி ஒரு ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறானே என்று திக் என்றது அனைவருக்கும்..

நெடுமாறன் தன் மகனை தனியாக அழைத்து புத்தி கூற அவனோ அவன் தந்தைக்கு திருப்பி அட்வைஸ் பண்ணினான்...

பெண்கள் அனைவருக்கும் சாந்தினியை பிடித்துவிட, அதுவும் இப்படி வழவழுவென்று தொட்டால் அவளுக்கு வலிக்குமோ என்று தோன்றும் வகையில் மென்மையாக இருந்த அவளின் வழவழ சருமத்தையும் சினிமா நடிகை போல எல்லா பாகங்களும் அம்சமாக இருக்க நின்று இருந்தவளை அனைவருக்கும் உடனே பிடித்துவிட்டது..

தன் அண்ணனின் கம்பீரத்துக்கு இவள் பெர்பெக்ட் மேட்ச் என தோன்ற உடனேயே அவன் தங்கைகள் அவளிடம் ஒட்டி கொண்டனர்.. மனோகரிக்கும் அவளை பிடித்துவிட்டது..

“எப்படி என் மருமகள்? பேரழகி... “  என்று எல்லாரிடமும் பெருமை அடித்து கொள்ளலாம் என்று பூரித்து போனாள்..

ஆனால் பாரிஜாதத்திற்குதான் உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா என்ற கதை ஆகி போனது..

“பேசாமல் அவன் இங்கயே இருந்திருந்தாலாவது எப்படியாவது அவன் மனதை மாற்றி அவர் பேத்தியை இந்த ஜமீனின் மருமகளாக்கி இருக்கலாம்..

அந்த கிழவனிடம் இருந்து பிரித்து வைப்பதாக எண்ணி அவனை கண்ணுக்கு எட்டாத தூரம் அனுப்பி வைக்க அவனோ இப்படி ஒரு மேனா  மினுக்கியை இழுத்துகிட்டு வந்திட்டானே !

இப்ப எப்படி இவளை பிரித்து என் பேத்தியை இந்த ஜமீனுக்கு கொண்டு வருவது? “ என்று கவலையுடன் யோசிக்க ஆரம்பித்தார்...

ன்று மாலை வெளியில் சென்றுவிட்டு வீடு  திரும்பி இருந்த தேவநாதன் முன்னே வந்து நின்றான் அதிரதன்..

கூடவே அவனுடைய நிலா பொண்ணு அந்த மெலுகு சிலையும் சிரித்தவாறு நின்றிருந்தாள் .. இருவரையும் ஒரு நொடி கூர்ந்து கவனித்தவர் அடுத்த  நொடி உதட்டில்  புன்னகை தவழ

"வாப்பா...பேராண்டி... இப்பயாவது உனக்கு குடும்பம் ஒன்னு இருக்குனு நினைவு வந்ததா? “ என்றார் சிரித்தவாறு...

அவனோ அவரை முறைத்தவாறு பதில் எதுவும் சொல்லாமல் அவரை நேராக பார்த்தவன்

“தாத்தா.... இது நிலா....என் காதலி... எனக்கு மனைவி ஆகப்போகிறவள்.. இந்த ஜமீனின் மருமகள்... “ என்றான் மிடுக்குடன்..

மீண்டும் அவர்கள் இருவரையும் ஒரு நேர்பார்வை பார்த்தவர் முகத்தில் புன்னகை தவழ,

“மகிழ்ச்சி.. மிக்க மகிழ்ச்சி... வணக்கம் அம்மணி...இங்க எல்லாம் சௌகர்யமா இருக்கா ?  “ என்று கை கூப்பி வணக்கம் சொன்னவர் அவளிடம் சிரித்து பேசி நலம் விசாரித்து பின் தன் மீசையை நீவி விட்டு கொண்டே தன் பேரனை பார்த்து குறும்பாக கண் சிமிட்டிவிட்டு குறுநகையுடன் நகர்ந்து சென்றார்..

அதை கண்ட அதிரதன் மயக்கம் போடாத குறைதான்...

அவளை அவன் நிலாவை அவன் காதலியை கண்டதும் வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பார்... அவனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளுவார்..  என்று எதிர்பார்த்து வந்தவனுக்கு அவர் சிரித்த முகமாக அவளை வரவேற்றதும் அவளிடம் நலம் விசாரித்ததும் கண்டு தலை சுற்றியது..

பத்தாதற்கு அன்று இரவு உணவின் பொழுது உணவு மேஜையில் சாந்தினியிடம் அவர் சிரித்து சிரித்து பேசியதும் அடுத்து வந்த நாட்களில் நிலா உடன் கேரம், ரம்மி என்று அவரும் சேர்ந்து விளையாடியதையும்  கண்டதும் இன்னும் குழம்பி போனான்....

“இவர் என்ன சொல்ல வருகிறார்.. அப்ப நான் காதலிப்பத்தில் அவருக்கு வருத்தம் இல்லையா? ஜமீனுக்கு பொருத்தமே இல்லாதவளை மணப்பதில் அவருக்கு  ஒன்னும் கோபமில்லையா?  என்று பலநூறு கேள்விகள் அவன் உள்ளே..

ஆனால் அதற்கு விடை தெரியாமல் முழித்து கொண்டும் தன் தாத்தாவையே உன்னிப்பாக கவனித்து வந்தான்..

அப்படி கவனித்ததில் ஒன்றை மறந்து விட்டான் அந்த ஜமீன்தாரின் பேரன்..

அது புலி பதுங்குவது பாய்வதற்கு என்று..அந்த காலத்தில் பெயர் போன சாணக்கியனின் ராஜ தந்திரத்தை...

சமயத்திற்கு தகுந்த மாதிரி புலியாக பதுங்கி பாய்வதும் குள்ள நரியாக மறைந்து இருந்து தந்திரத்தை காட்டவும் தெரிந்தவர் அவன் தாத்தா தேவநாதன் ஜமீன்தார் என்ற உண்மையை உணர மறந்திருந்தான்..

அது தெரிந்திருந்தால் அவனும் அதுக்கு தகுந்த மாதிரி காயை நகர்த்தி இருப்பான்... ஆனால் எதிரிக்கு தன்னுடைய மூவ் பற்றி தெரியாமல் ஆடுவதுதான் சதுரங்கத்தின் பெரிய சிறப்பு..

அந்த ஆட்டத்தைத்தான் அந்த ஜமீன்தார் ஆடி கொண்டிருந்தார்.. அவரை எதிரியாக பாவிக்கும் தன் பேராண்டிக்கு அவருடைய மூவ் பற்றி தெரியாமல் அவனை குழப்பி கொண்டே தன் ஆட்டத்தை ஆடிக் கொண்டிருந்தார் தேவநாதன் ஜமீன்தார்...!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!