நிலவே என்னிடம் நெருங்காதே!!-23

 


அத்தியாயம்-23

ன்று இரவு , இரவு உணவை முடித்துவிட்டு தங்கள் அறையில் படுக்கையில் அமர்ந்து அலைபேசியை நோண்டி  கொண்டிருந்தாள் நிலவினி..மனதில் தேவநாதன் சொல்லியதே ஓடி கொண்டிருந்தது..  

மணி பத்தை தாண்டியதும் அறைக்கு திரும்பி இருந்தான் அதிரதன்..

உள்ளே வந்தவன் நேற்றை போலவே குளித்துவிட்டு ஒரு கையால் தலையை துவட்டியவாறு வெளிவர, அவள் கண்கள் தானாக அவன் பக்கம் செல்ல முயன்றன.. ஆனால் அடுத்த நொடி நேற்று அவன் திட்டியது நினைவு வர, வலுக்கட்டாயமாக தன் கண்களை இழுத்து தன்னிடமே வைத்து கொண்டாள்..

அவனும் ஒரு கையால் தலையை துவட்டியவாறே வந்தவன் ஓரக்கண்ணால் அவளை பார்த்தவாறு வெளிவந்தவன்.. நேற்றை போலவே இன்றும் அவள் பார்வை தன்னிடம் வரும் என்ற எதிர்பார்ப்பும் சிறு குறுகுறுப்புமாய் அவளையே பார்த்திருந்தவனுக்கு முதல் ஏமாற்றம்..

மறந்தும் அவன் பக்கம் திரும்பவில்லை அவள்..

அதை கண்டு அவன் உள்ளே கொதிக்க ஆரம்பித்தது..

“சரியான திமிர் பிடிச்சவ.. “ என்று மனதுக்குள் திட்டியவாறு கட்டிலின் அருகில் வர, அதே நேரம் அவனின் அலைபேசி செல்லமாய் சிணுங்கியது..

அந்த சிணுங்களில் இருந்தே யாரென்று புரிந்துவிட, உதட்டில் மலர்ந்த சிரிப்புடன் வேகமாக அழைப்பை ஏற்று காதில் வைத்தவன் நேற்றை போலவே இன்றும் ஒரு தலையணையை  எடுத்து முதுகுக்கு பின்னாலும் ஒன்றை மடியில் வைத்து கொண்டு தன் நிலா பொண்ணுடன் கொஞ்ச ஆரம்பித்தான்...

இடை இடையில் ஓரக்கண்ணால் பக்கவாட்டில் படுக்கையில் அமர்ந்து இருந்தவளின் மீது அவன் பார்வை தழுவி சென்றது...

நேற்றை போலவே அவன் கொஞ்சி பேசுவதற்கு நிலவினியின் முகம் வாடி, இறுகிப்போகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருக்க, அவளோ மலர்ந்து சிரித்து கொண்டிருந்தாள் தன் அலைபேசியை பார்த்தவாறு..

நிலவினி அவன் குளியல் அறையில் இருந்து வெளி வந்ததுமே அவனையேதான்  ஓரக் கண்ணால் பார்த்து கொண்டு இருந்தாள்..

ஆனால் கைகள் மட்டும் அலைபேசியில் விளையாண்டு கொண்டிருக்க, கண்கள் அதன் மீது படர்ந்து இருந்தாலும் ஓரப் பார்வை மட்டும் தனக்கு கணவனாகியவனின் மீதே இருந்தது..

அதுவும் அவனுடைய காதலி அழைத்ததும் அவன் முகம் எப்படி மாறுகிறது? கண்கள் கதை பேசுகின்றனவா? “ என்று ஓரக்கண்ணால் ஆராய்ந்தாள்..

ஆனால் தாத்தா சொன்ன மாதிரியே அழைப்பு வந்ததும் அவன் இதழ்கள் விரிந்தாலும் அது காதலால் விரியவில்லை என புரிந்தது...

யாரையோ ஜெயித்துவிட்ட ஜெயிக்க போகிற வெற்றி புன்னகை தான் அது...

அதே போல அவன் கண்களிலும் காதல் ஒன்னும் கசிந்து உருகிவிடவில்லை.. மாறாக அவள் எப்படி முகம் மாறப்போகிறாள்? எப்படி இறுகி போகிறாள்  என்று பார்க்கும் ஆர்வம் + ஆவல் மட்டுமே அந்த கண்களில்..

அதனால்தான் அவன் அலைபேசியில் கொஞ்சி கொண்டிருந்தாலும் நொடிக்கொரு தரம் அவன் பார்வை அவளிடம் வந்து மீண்டதை அவளும் கண்டு கொண்டாள்..

“அப்படி என்றால் தாத்தா சொன்னதுதான் உண்மை.. இவன் காதலிக்கவே இல்லை.. தாத்தாவை ஜெயிக்கவேண்டும் என்றுதான் காதல் என்ற போர்வையை போர்த்தி கொண்டிருக்கிறான்..அந்த தேவநாதன் பீஸ்மரை சாய்க்க, காதல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து இருக்கிறான்..

அப்படி என்றால் நான் யாரையும் பிரிக்கவில்லை.. மாறாக ஒரு நல்லவனை,  இந்த சுத்து பட்டுக்கு படி அளக்கும் தேவநாதன் ஜமீன்தார் வாரிசை அவர் பேரனை புதை குழியில் இருந்து மீட்டெடுக்கவே வந்திருக்கிறேன்..

அதுதானே  அவள் தாத்தா அவளிடம் கேட்டு கொண்டதும்.. காதல் என்ற மாயையில் இருந்து தெளிய வைத்து இவனை வெளி கொண்டு வரவேண்டும்.. “  என்று எண்ணி கொண்டவள் அவன் புறம் திரும்பாமல் தன் அலைபேசியிலயே பார்வைய பதித்து இருந்தாள்..

அவனோ சிறிது நேரம் தன் நிலா பொண்ணை கொஞ்சி குழைந்தவன் தன் பக்கத்தில் அமர்ந்து இருந்தவளிடம் இருந்து எந்த ஒரு ரியாக்சனும் வராமல் போக சப்பென்றாகியது..

அதற்கு மேல் வேண்டும் என்றே அழைப்பில் எதிரில் இருந்தவளிடம் செயற்கையாக கொஞ்ச மனம் வரவில்லை.. ஆனால் சாந்தினியோ விடாமல் காதல் போதையில் பிதற்றி கொண்டிருந்தாள்..

எப்பொழுதுல் சொல்லும் உடனே பார்க்கவேண்டும். கட்டி அணைக்க வேண்டும் என்பன போன்ற வழக்கமான பிதற்றல்கள் தான் காதை அடைத்தன அவனுக்கு...

தன் அலைபேசியை பார்த்து கொண்டிருந்த நிலவினி திடீரென்று களுக் என்று கிளுக்கி சிரித்தாள்..

அன்று மருத்துவமனையில் தாத்தாவின் அறையில் இருந்து ஒலித்த அதே சிரிப்பொலி..

வெள்ளி சதங்கையை உருட்டி விட்ட மாதிரி மனதை வருடும் சிரிப்பாக இருக்க, அதிரதன் நேராக நிமிர்ந்து அவளை பார்க்க அவளோ தன் அலைபேசியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருந்தாள்...

இதழ் விரிந்த மலர்ந்த சிரிப்பும், கண்களும் அந்த சிரிப்பில் கலந்து கொள்ள, அரிசி பற்களை காட்டி பளீர் என்று  பளிச்சிடும் சிரிப்பை கண்டதும் தன்னையும் மறந்து ஒரு நொடி ரசித்திருந்தான் அதிரதன்..

அடுத்த நொடி தன் தலையை உலுக்கி கொண்டு முகத்தை கடுகடுவென்று  வைத்து கொண்டு தன் அலைபேசியை ம்யூட்ல் போட்டுவிட்டு

“ஏய்...... “ என்று உறுமினான் அவளை பார்த்து...

அவளோ அவனை கண்டு கொள்ளாமல் தன் அலைபேசியை பார்த்து கொண்டிருக்க அதில் கடுப்பானவன் மீண்டும்

“ஏய்... உன்னத்தான்......... “ என்றான் குரலை உயர்த்தி..

மெதுவாக விழி உயர்த்தி அவனை நேர் பார்வை பார்க்க, அவளின் அந்த மெது மெதுவான் பார்வை திருப்பலும் இமை தாழ்ந்திருந்த குடை விரிந்து கண் மலர்கள் மலர்ந்து சிரிப்பதும் கண்டு திகைத்து போனான்....

இத்தனை நாட்களாக தன்னை கண்டால் அவளிடம் வரும் ஒரு அச்சம் நடுக்கம் இப்பொழுது இல்லை.. ரிசப்ஷனில் கூட அவன் அருகில் நிக்க தயங்கி அவளே தள்ளி நின்று கொண்டது நினைவு வந்தது..

அப்படி தள்ளி நின்றவள் தன்னை கண்டு அஞ்சியவள் இன்று அந்த அச்சம் துளியும் இல்லாமல் நேர் பார்வை பார்த்து அவனை எதிர்கொள்ள கொஞ்சம் திகைத்துத்தான் போனான்...

நிலவினியோ அவனுக்கு பிடிக்காத திருமணத்திற்கு, அவன் காதலை பிரிக்க தான் காரணமாகி விட்ட குற்ற உணர்வில் இருந்ததால் இதுவரை அவனை கண்டு கொஞ்சம் பயந்து கொண்டிருந்தாள்..

ஆனால் இப்பொழுது அவன் ஒன்னும் காதலிக்க வில்லை என்ற உண்மை புரிந்து விட, கூடவே அவனை அந்த பட்டணத்துக்காரியிடம் இருந்து மீட்டெடுக்க திட்டமிட்டவள் அவனுடன் சகஜமாக உரையாட வேண்டும் என்று திட்டமிட்டிருந்தால் இப்பொழுது அவனை கண்டு அஞ்சி நடுங்காமல்   மெதுவாக இதழ் திறந்தவளோ அவனை நேராக பார்த்து  

“என்னையவா கூப்பிட்டிங்க?. நான் கூடா யாரோ ஒரு ஏய் ஐ கூப்பிட்டிங்கனு நினைச்சேன்... பை தி வே என் பெயர் நிலவினி.. என்னை எல்லாரும் நிலானு கூப்பிடுவாங்க.. என் பெயரை நீட்டி கூப்பிட கஷ்டமாக இருந்தால் மற்றவர்கள் கூப்பிடுவது போல நிலா னே கூப்பிடலாம்... “ என்று அமைதியாக  சொல்லி அழகாக புன்னகைத்தாள்..

அந்த புன்னகை இன்னும் அவனை யோசிக்க வைத்தது..

அவனுடைய நிலா பொண்ணை போல இது மயக்கும் புன்னகை இல்லை... நட்பாக அன்பாக. ஏதோ ஒன்று ஆனால் மனதை வருடும், மனதில் பதியும் புன்னகையாக மனதை சாந்த படுத்தும் புன்னகையாக இருக்க, ஒரு நொடி வியந்தவன் மீண்டும் முகத்தை இறுக்கி கொண்டு

“உன் பெயர் என்னவாக இருந்தால் எனக்கென்ன? உன் பெயரை சுருக்கி கூப்பிட்டு கொஞ்ச ஒன்னும் நான் இல்லை.. அப்படி ஒரு நினைப்பு உனக்கு வேண்டாம் அதை முளையிலயே கிள்ளி எறிந்து விடு... எனக்கு ஏற்கனவே என் நிலா பொண்ணு இருக்கிறாள்... “ என்று அதே பாட்டை பாட அவளோ காதில் விரலை விட்டு ஒரு முறை ஆட்டி கொண்டாள் அமைதியாக

அதை கண்டு இன்னும் கொதித்தவன்

“ஏய்.. நான் பேசுவது அவ்வளவு எரிச்சலாக இருக்கா.. ? “ என்று திருப்பி கத்த

“இதோ பாருங்க.. நான் பாட்டுக்கு என் வேலையை பார்த்துகிட்டிருந்தேன்.. எதுக்கு என்னைய கூப்பிட்டு வச்சு இப்படி லெக்சர் அடிக்கறீங்க.. அங்க உங்க நிலா பொண்ணு இன்னும் லைன்ல இருக்காங்க பாருங்க... போய் கொஞ்சுங்க... “ என்று  மிடுக்காக பதில் அளித்தவள் தன் அலைபேசியை மீண்டும் பார்வை இட்டாள்..

அவனுக்கோ இன்னும் கொதித்தது.. எவ்வளவு திமிர் அவளுக்கு.. என்று திட்டி கொண்டே மீண்டும் தன் அலைபேசியை காதில் வைக்க அங்கு சாந்தினியோ அவனிடம் குழைய ஏனோ அது செயற்கையாக  இருப்பதை போல இருந்தது அவனுக்கு...

அவன் இருந்த மன நிலையில் அதை எல்லாம் கேட்டு எரிச்சலாக வந்தது..

ஆனாலும் நிலவினியை வெறுப்பேற்ற அவனும் இன்னும் கொஞ்சம் அந்தரங்கமாக கொஞ்சி பார்க்க நிலவினியோ அதை எல்லாம் காதில் வாங்கி கொள்ளவே இல்லை.. மாறாக இன்னும் கலகலவென்று மலர்ந்து வெடித்து  சிரிக்க, இந்த முறையும் கடுப்பானவன்

“ஏய்... எதுக்கு இப்படி சிரிக்கிற? இது என்ன சந்தக்கடையா? இப்படித்தான் சத்தமா சிரிப்பியா?  “ என்று சீறி விழுந்தான்...

“ஹா ஹா ஹா ... வடிவேல் காமெடி.. ரொம்ப சூப்பரா இருக்கு... நீங்களும் பார்க்கறீங்களா? “ என்று தன் அலைபேசியை அவனிடம் காட்டினாள்..

“அப்புறம் இன்னொரு தரம் என்னை ஏய் னு கூப்பிட்டிங்க நான் பதில் சொல்ல மாட்டேன்..எனக்கும் அழகா பேர் வச்சிருக்காங்க.. சுருக்கியோ நீட்டியோ எப்படி வேணா கூப்பிடுங்க.. ஆனால் நோ ஏய்..ஒ.கே?.” என்று லேசாக முறைத்துவிட்டு ஆள்காட்டி விரலை நீட்டி மிரட்டியவள் பார்வையை வெடுக்கென்று திருப்பி கொள்ள அதிரதனோ இன்னும் திகைத்து போனான்..

அவளின் அந்த லேசான முறைப்பும் முக திருப்பலும்  வித்தியாசமாக புதிதாக இருந்தது அவனுக்கு..

இதுவரை யாரும் அவனிடம் அப்படி முறைத்ததில்லை..முகத்தை திருப்பியதில்லை..  கல்லூரியில் படிக்கும்பொழுதும் கல்லூரி பெண்களுக்கு அவன்தான் ஹீரோ.. கனவு நாயகன்..எத்தனையோ லவ் லெட்டர்கள் வந்து குவிந்திருக்கின்றன..

தொழில் உலகத்திலும் பல பெண்களை சந்தித்திருக்கிறான்...அவனுடைய அலுவலகத்திலும் அவன் செல்லும் பல கான்ப்ரென்ஸ் என்று எங்கு சென்றாலும் பெண்கள் கூட்டம் அவன் மீது மொய்க்கும்..

பார்வையாலயே அவனை மயக்க முயல்வர்... அவன் நிலா பொண்ணு கூட அத்தனை பேர் அவள் மீது காதல் கணைகளை ஏவிய பொழுதும் அவள் அவனிடம் மட்டுமே மயங்கி இருந்தாள்.. இன்னும் மயங்கி கிடக்கிறாள்..

அவளுடன் பழகிய இத்தனை நாட்களில் ஒரு நாள் கூட அவனிடம் முகம் திருப்பியதில்லை..அவனை முறைத்தது இல்லை..  

பேபி என்று  கொஞ்சல் மாறாமல் தான் அவனை அழைத்து கொஞ்சி வருகிறாள்..

அப்படி இருக்க, இடையை இறுக்கி பிடித்தால் ஒடிந்து விழுந்து விடுபவள் போல் இருக்கும் இந்த ஒல்லி குச்சி என்னை மிரட்டுகிறாளே..! ரொம்பவும் தைர்யம் தான்.. “ என்று உள்ளுக்குள் நக்கலடித்தவன் அவளை முறைத்து விட்டு அலைபேசியில் தன் பேச்சை தொடர்ந்தான்..

“இல்லை.. இந்த முறை மறுமுனையில் கொஞ்சி கொண்டிருந்தவளுக்கு வெறும் ம் போட்டு கொண்டிருந்தான்... ஆனால் பார்வை என்னவோ பக்கத்தில் இருப்பவளிடமே ! அடுத்து அவளை எப்படி மட்டம் தட்டுவது, பால் நிலா போல பளபளக்கும் அவள் முகத்தில் சந்திர கிரகணத்தை கொண்டு வருவது எப்படி என்று தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான்..

அதே நேரம் நிலவினியின் அலைபேசி ஒலிக்க, அதன் திரையில் ஒளிர்ந்த பெயரை கண்டதும் உதட்டில் தானாக புன்னகை மலர அதை அட்டென்ட் பண்ணியவள்

“சொல்லுடி ஆனந்தி.. எப்படி இருக்க? “ என்றாள் சந்தோஷத்துடன் நிலா..

“ஹோய்.. புதுப்பொண்ணு... இந்த கேள்விய நான் கேட்கணும்... நானெல்லாம் அப்படியேதான் இருக்கேன்.. நீதான் புதுசா கல்யாணம் ஆகி அடுத்த லெவலுக்கு புரமோசன் ஆகி போய்ருக்க.. நீ சொல்லுடி எப்படி  இருக்க?

அப்புறம் ஜமீன்தார் எப்படி இருக்கார் ? “ என்றாள் நக்கலாக சிரித்தவாறு...

ஆனந்தி- நிலவினியின் பள்ளித்தோழி.. நண்பர்கள் வட்டம் என்று பெரிதாக இல்லை என்றாலும் ஆனந்தியிடம்  மட்டும் கொஞ்சம் நெருங்கி பழகுவாள் நிலா...

அவளும் ஏதாவது ஒன்று என்றால் நிலாவிடம் தான் புலம்புவாள்.. நிலாவின் திருமணத்திற்கு வந்து விட்டு சென்ற பிறகு இன்று தான் அவளை அழைத்திருக்கிறாள்..

ஆனந்தி ஜமீன்தார்  என்று சொல்லி கேட்டதுக்கு

“ஜமீன்தாரா? யாரது ?  “ என்று நிலா வாய்விட்டு யோசிக்க

“ஹா ஹா ஹா உன் புருஷன் தான் டி.. ஜமீன்தார் ஐயா பேரன் ஜமீன்தார் தான.. ஒரு வேளை சின்ன ஜமீன் னு கூப்பிடணுமோ? “ என்றாள் நக்கலாக சிரித்தவாறு..

அதை கேட்டு நிலாவும் புன்னகைக்க

“சொல்லுடி .. எப்படி இருக்கார் ? உன்னை நல்லா பார்த்துக்கிறாரா? உனக்கு புது இடம் எல்லாம் செட் ஆய்டுச்சா ? நல்லா சந்தோஷமா இருக்கியா ? “ என்று அக்கறையுடன் விசாரித்தாள் ஆனந்தி...

தனக்காக அக்கறையுடன் விசாரிக்க ஒரு ஜீவன் இருக்கே என்று அப்பொழுதுதான் உறைத்தது நிலாவுக்கு..

ஆனந்தத்தில் கண்ணோரம் கரிக்க, வார்த்தை வராமல் தொண்டை அடைத்து கொண்டது.. ஆனாலும் நொடியில் சமாளித்தவள் முன்னால் விழுந்த முடியை ஒதுக்கி விட முயல எதேச்சையாக கை பட்டு அவள் அலைபேசியில் இருந்த ஸ்பீக்கர் ஆன் ஆகியது..

ஆனந்தி கேட்டதுக்கு நிலா அமைதியாக இருக்க

“ஹலோ.... லைன் ல இருக்கியாடி?  என்று கத்தினாள்.. அதற்குள் சுதாரித்து கொண்டவள்

“ஹ்ம்ம் சொல்லு டி.. “ என்றாள் நிலா குரல் கொஞ்சம் இறங்கி இருக்க...

“ஹலோ.. மூன்...  நீதான் சொல்லனும்... நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை.. உன்னை உன் புருஷன் நல்லா பாத்துக்கறாரா? “ என்று மீண்டும் கேட்க, நிலாவின் பார்வை தானாக அருகில் படுக்கையில் அமர்ந்து கொண்டு தன் அலைபேசியில் இன்னும் சிரித்து பேசி கொண்டிருந்தவன் பக்கம் சென்றது...

உடனே முகத்தில் ஒரு விரக்தி புன்னகை பரவியது..

“ஹ்ம்ம்ம் சூப்பரா பாத்துக்கறார் டி.. என்னை தரையிலயே நடக்க விடறதில்லை.. அப்படி உள்ளங்கையில் வச்சு தாங்கறார்.... “ என்று கொஞ்சம் குரலை உயர்த்தி  அவன் காதிலும் விழுமாறு சொன்னாள் நிலா..

அதை கேட்ட அதிரதன் ஒரு முறை அவளை யோசனையாக பார்த்துவிட்டு பின் தன் தோள்களை குலுக்கி விட்டு கொண்டு மீண்டும் தன் பேச்சை தொடர்ந்தான்..

ஆனால் அவன் செவிகளும் பார்வையும்  மட்டும் இவளிடமே! 

“ஓ.. சூப்பர் டீ.. அப்ப இனிமேல் உனக்கு கவலை இல்லை.. எப்படியோ ஜமீன்தார் வீட்டு மருமகள் ஆகிட்ட... இனிமேலாவது நீ சந்தோஷமா இரு.. “ என்று மனம் நிறைந்து வாழ்த்தியவள் அதற்கு பிறகு இருவரும் சிறிது நேரம் சிரித்து பேசி கொண்டிருக்க, அங்கு அதிரதனுக்கோ பற்றி கொண்டு எரிந்தது.

“அவளை அழ வைக்கவேண்டும்.. அவன் கொடுக்கும் டார்ச்சர் தாங்காமல் அவள் தானாகவே ஓடிவிடவேண்டும் என்று எண்ணி இருந்தால் இவள் என்னவோ இப்படி சிரிச்சு சிரிச்சு பேசிகிட்டிருக்காளே..

இது தாப்பாச்சே... இப்படியே விட்டால் அப்புறம் இந்த ஜமீனே பிடித்து போய்விடும் என்னை விட்டு செல்லமாட்டேன் என்று சொல்லி விட்டால் முதலுக்கே மோசமாகிடும்..

இவள் என்னுடைய டைவர்ஸ்க்கு ஒத்து கொண்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் கையெழுத்து போட்டால் தான் ம்யூட்சுவல் பிரிவில் சீக்கிரம் விவாகரத்து கிடைக்கும்.. “ என்று  அவசரமாக யோசித்தவன் அவளை அடுத்து எப்படி வருத்துவது என்று யோசித்து கொண்டிருந்தான்

மறுமுனையில் இருந்தவளோ  அப்பொழுதுதான் அவனுக்கு அலைபேசியிலயே முத்தமிட, அதில் எரிச்சலானவன்

“ப்ளீஸ் நிலா.. நான் நாளைக்கு கால் பண்ணறேன்.. இப்ப போன வைக்கறேன்.. “ என்று அவள் பதிலுக்கு கூட காத்திராமல் அழைப்பை துண்டித்தான்..

பின் நிலவினி பக்கம் திரும்பியவன்

“ஏய்... “ என்று  மீண்டும் உறுமினான்..

அவளோ அவன் பக்கமே திரும்பாமல் மீண்டும் அலைபேசியை நோண்டி கொண்டிருக்க, சற்று முன் அவளை ஏய் என்று அழைக்க வேண்டாம் என்று சொல்லியது நினைவு வர,

“ஏய்.... நி...ல வி னி...... “ என்று ஒவ்வொரு எழுத்தாக இழுத்தான்...

அதை கேட்டு விலுக்கென்று நிமிர்ந்தவள் உதட்டில் உறைந்த புன்னகை மாறாமல்

“பரவாயில்லையே ஜமீன்தாரே... நான் சொன்னதை மறக்காமல் நினைப்புல வச்சுகிட்டு என் பெயரை சொல்லி அழைக்கிறாரே... “ என்றாள் இதழ் விழிய சிரித்தபடி...

“வாட்? ஜமீன்தாரா ? “ என்றான் தன் புருவத்தை உயர்த்தி...

“ஹா ஹா ஹா.. உங்க தாத்தா ஜமீன்தார் தான.. உங்கப்பாவும் ஜமீன்தார்.. அப்பனா நீங்களும் ஜமீன்தார் தான.. அதைத்தான் சொன்னேன் ஜமீன்தாரே.. “ என்று திருப்பினாள் மிடுக்காக..

“ஏய்... நான் ஒன்னும் ஜமீன்தார் இல்லை.. எனக்கு அந்த உரிமையும் எதுவும் வேண்டாம்னுதான் எல்லாத்தையும் விட்டுட்டு போய்ட்டேன்.. என்னை அப்படி கூப்பிடாத.. “ என்று முறைத்தான்..

“ஓ.. சரி.. அப்ப வேற எப்படி கூப்பிடறது? அந்த காலத்துல கட்டின புருஷனை கூப்பிடற மாதிரி அத்தான்.. நாதா.. னு.. கூப்பிடவா? இல்ல இப்போ ட்ரென்ட் படி மாமா , டார்லிங் னு கூப்பிடவா?”  என்று கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள் நிலா..

அதை கண்டு மீண்டும்  திகைத்து போனான் அதிரதன்..

கடந்த இரண்டு நாட்களில் அமைதியாக அவன் வரும்பொழுது தலையை குனிந்து கொண்டு அவனை பார்க்கவே அஞ்சி கொண்டிருந்தவள் இன்று தனக்கு சரிக்கு சமமாக வாயாடுவதை கண்டு திகைத்து போனான்...

“ஒரே நாளில் எப்படி இப்படி மாறினாள்?  எல்லாம் அந்த தாத்தாவின் ட்ரெயினிங் ஆ இருக்கும்.. “ என்று அடுத்த நொடி அவன் தாத்தாவின் மீது இருக்கும் ஆத்திரம் தலை தூக்க, முகத்தை இறுக்கி கொண்டவன்

“ஏய்... நான் தான் நீ எனக்கு பொண்டாட்டியே இல்லை என்கிறேன்... அப்புறம் என்ன என் பொண்டாட்டி மாதிரி எனக்கு செல்ல பெயர் வைத்து கூப்பிட யோசிச்சு கிட்டிருக்க. “ என்று பொரிந்தான்..

“இதோடா.. ஜமீன்தார்க்கு இவ்வளவு கோபம் வருது...!  பாத்துங்க.. இவ்வளவு கோபம் உடம்புக்கு ஆகாதாம்..அப்ப நீங்களே ஒரு பேரை சொல்லுங்க.. நான் அப்படியே கூப்பிடறேன்.. “ என்று பாவமாக முகத்தை வைத்து கொண்டாள்..

அந்த பால் நிலா முகத்தில் நொடியில் வந்து போகும் பல விதமான பாவணைகளை கண்டு இன்னும் திகைத்து போனான்...

அதற்குமேல் அவளிடம் வாதிட முடியாமல்

“சே...நைட் வீட்ல நிம்மதியா தூங்க கூட முடியலை.. இனிமேல் பேசாம ஆபிஸ் ல இருந்துக்க வேண்டியதுதான்... “ என்று தன் அலைபேசியை தூக்கி கட்டிலில் எறிந்து விட்டு கட்டிலில் இருந்து இறங்கி பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியில் சென்று நின்று கொண்டான்....

அந்த பால்கனி கைப்பிடி சுவற்றில் தன் இரண்டு கைகளையும் ஊன்றி ஆழமாக மூச்சை எடுத்து விட்டு கொண்டான்.. அப்பொழுது வீசிய தென்றல் அவன் முன் உச்சி முடியை கலைத்து சீண்ட அதில் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தவன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு நடக்க ஆரம்பித்தான்..

ஏதோ உந்த மேல அண்ணாந்து பார்க்க, அங்கே பௌர்ணமி நிலா ஜொலித்து கொண்டிருந்தது..

எப்பொழுதும் பௌர்ணமி நிலா என்றால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும்... தன் தாத்தாவின் மடியில் அமர்ந்து கொண்டு எத்தனை கதை பேசி இருக்கிறான்..

இன்று அந்த நிலவை நிமிர்ந்து பார்க்க, அந்த வட்ட வடிவ நிலவில் எப்பொழுதும் வரும் அவன் நிலா பொண்ணின் முகம் வரவில்லை இன்று.. அதற்கு பதிலாக சற்று முன் கை விரல் நீட்டி அவனை மிரட்டி கண் சிமிட்டி குறும்பாக சிரித்த நிலவினி முகம் தெரிய திடுக்கிட்டு போனான்..

“என்ன இது? இந்த திமிர் பிடித்தவள் முகம் தெரிகிறது..?  “ என்று அதிர்ந்து யோசிக்க அவளிடம் இருந்த மாற்றங்கள் மீண்டும் கண் முன்னே வந்தது..

“நேற்று இல்லாத மாற்றம் எப்படி இன்று திடீர் என்று..?  அப்படி என்றால் அந்த குள்ள நரி சாணக்கியன் தாத்தா கூட சேர்ந்துகிட்டு இந்த ஒல்லிகுச்சியும் ஏதோ திட்டம் போட்டிருக்கிறாள்..அதில் ஒன்றுதான் என்னிடம் வாயாட ஆரம்பித்து இருக்கிறாள்..

அப்படியே என்னை அவள் பக்கம் இழுக்கும் முயற்சிதான் இது.. இந்த அதிரதன் அதுக்கெல்லாம் மயங்க மாட்டான் என்று காட்டுகிறேன் இரண்டு பேருக்கும்..  

இவள் என்ன மாய மந்திரம் செய்தாலும் எனக்கு என் நிலா பொண்ணுதான் பொண்டாட்டி.. இது உறுதி.. வெய்ட் அன்ட் சீ... “ என்று தனக்குள்ளே உறுதி செய்து கொண்டான் அதிரதன்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!