அழகான ராட்சசியே!!-35



அத்தியாயம்-35

 

ன் அறைக்கு உள்ளே வந்தவன் கதவைத் தாளிட்டு அடுத்த நொடி தன் மனைவியை இழுத்து இறுக்க அணைத்து  அவள் இதழில் அழுந்த  முத்தமிட்டான் நிகிலன்..!   

அதைக் கண்ட மதுவும் கிறங்கி போய் இமைகள் படபடக்க தன் கணவனின் அழுத்தமான முத்தத்தை ரசித்து இருந்தாள்..  

சிறிது நேரம் கழித்து தன் மனைவியை விட்டவன்  அவள் இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன்

“ஹே ஹனி.. எதுக்குடி என்னை அப்படி பார்த்தஎன்ன பார்வை டீ அது? அப்படியே ஆளை கவிழ்த்தது.. " என்று குறும்பாக சிரித்தான் நிகிலன்..

மதுவும் தன் கணவனின் மார்பில் வாகாக சாய்ந்து கொண்டவள்  பின் திரும்பி அவன்  அணிந்திருந்த சட்டை  பட்டன்களை ஒவ்வொன்றாக கழட்ட ஆரம்பித்தாள்.. அவனும் ஆர்வத்துடன்

“சொல்லுடி..  எதுக்கு அப்படி சிரிச்ச? நீ என்னை எதுக்கு அப்படிப் பார்த்து வச்ச? “  என்று மீண்டும் ஆர்வத்துடன் கேட்டான்..

மதுவும் பதிலேதும் சொல்லாமல் சிரித்தவாறு அவன்  அணிந்திருந்த சட்டை  பட்டன்களை எல்லாம் கழட்டி விட்டு  அவன் கையைத் தூக்கி சட்டையை கழட்டி ஹேங்கரில் மாட்டிவிட்டு திரும்பி வந்தாள்..

கட்டிலில் அமர்ந்து இருந்தவன் எட்டி மதுவின் கையை பிடித்து இழுத்து மீண்டும் மடியில் கிடத்தி அணைத்துக் கொண்டவன்

“இப்ப சொல்ல போறியா?  இல்லையா? “  என்று மிரட்டினான்..  

உடனே அவளும் சிரித்துக் கொண்டே

“ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே? “  என்றாள்

“நீ எது சொன்னாலும் சரியாகத்தான் இருக்கும்.. சொல்லுடா..  “  என்று ஊக்கப் படுத்தினான்..  

“வந்து ... நான் மகிழன் ரூம்ல தனியா சிரிச்சுகிட்டு இருந்தத பார்த்ததும் உங்களுக்கு எதுவும் கோபம் வரலையா?  எங்களை எதுவும் தப்பா நினைக்க தோணலையா? “  என்றாள் சிறு தயக்கத்துடன்..

அதைக் கேட்டவன் முகம் இறுக ஆரம்பித்தது...

“ஷட்அப்  மது.. என்ன பேச்சு பேசுற..  உன்னை போய் நான்  ஏன் தப்பா நினைச்சுக்க போறேன்..  நீயும் மகிழனும் எப்படி பழகுறீங்க னு எனக்கு தெரியாதா?  இது என்ன புதுசா? “  என்று கோபத்தில் சிடுசிடுத்தான் நிகிலன்...

அதைக் கண்டவளுக்கு உள்ளுக்குள் பெருமையாக இருந்தது..

“இப்படி ஒரு புருஷன் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்.. “ என்று பெருமை பட்டு கொண்டவள் அவனை கொஞ்சம் சீண்டி பார்க்க நினைத்தவள்

“ஹப்பா... என் புருஷனுக்கு எவ்வளவு கோபம் வருது?  அப்படியே பழைய விருமாண்டிய  பார்க்கிற மாதிரி இருக்கு.. “  என்று அவன் மீசையைப் பிடித்து செல்லமாக இழுத்தாள்..

அதைக் கண்டவன் உடனே கோபம் குறைந்து போக மெல்ல வெட்கப்பட்டு சிரித்தான் நிகிலன்..

அதைக் கண்டவள் இன்னுமே சொக்கிப் போனாள் மது...  

“ரொம்ப க்யூட்டா இருக்கீங்க சிவி.. என்  க்யூட் விருமாண்டி..  அப்படியே பார்த்துகிட்டே இருக்கணும் போல.. “ இருக்கு என்று அவன் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளினாள்..

அவனும் வெட்கப்பட்டு சிரித்தவாறு அவளின் முகத்தை கைகளால் அளந்தவாறு

“நீயும் தான் டீ.. எப்பவும் என்னை கட்டி இழுக்கற.. ஆனாலும் இன்னைக்கு  என்னவோ ரொம்பவுமே  க்யூட்டா இருக்க டி பொண்டாட்டி.. ஒரு மாதிரி வேற பார்த்து வைக்கிற? என்ன ஸ்பெஷல் ? அத சொல்ல மாட்டேங்குறயே..”  என்று செல்லமாக கோபித்து அவளின் இதழை ஆசையாக  வருடினான்..

உடனே மதுவும்

“ஹ்ம்ம்ம் பரவாயில்லையே.. நான் இன்னைக்கு எக்ஸ்ட்ரா சந்தோஷமா இருக்கறத  கரெக்டா கண்டுபுடிச்சிட்டீங்களே.. தேறிட்டீங்க.. “ என்று சிரித்தவள்

“நான்  ஏன் இன்னைக்கு இவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னா?  நம்ம வீட்டுக்கு சீக்கிரமே புதுசா ஒரு ஆள் வரப் போறாங்க.. அதான்... “ என்று கண் சிமிட்டி  சிரித்தாள்..  

அதைக் கேட்டவன் உள்ளம் துள்ளி குதிக்க,

“ஹே.. நிஜமாகவா டீ.. எனக்கு இன்னொரு குட்டி தேவதை வரப் போகிறாளா? " என்று ஆர்வத்துடன் அவளை பார்க்க, அதில் கன்னம் சிவந்தவள்  

“ஐய...  ரொம்பத்தான் பேராசை..  இன்னும் உங்க இளவரசிக்கு ஒரு வருஷமே முடியல.. அதுக்குள்ள இன்னொரு குட்டி இளவரசி வேணுமாக்கும்.. “  என்று கழுத்தை நொடித்தவள்

“அதெல்லாம் மூணு வருஷத்துக்கு அப்புறம் தான்.. சுசிலா அத்தை ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லிட்டாங்க.. “  என்று செல்லமாக முறைத்தாள்..

நிகிலனும்  சிரித்துக் கொண்டே

“சரி..  சரி .. அப்போ வேற யாரு புதுசா  வரப் போறா? “  என்றான் யோசனையாக...

“அது சரி..  நீங்க யோசிக்கிறத பார்த்தா இப்போதைக்கு கண்டு புடிக்க மாட்டீங்க.. நானே சொல்லிடறேன்.. “என்றவள் சந்தியாவை மகிழனுக்கு  பார்த்து   இருப்பதை சொன்னாள்..

கூடவே மகிழன் சந்தியாவை விரும்புவதையும் சொல்ல நிகிலன் ஆச்சரியப் பட்டான்..

“பாருடா... கடைசியில இந்த மங்கி கூட காதல் வலையில் விழுந்திட்டானே..  ஓ.. அதுக்குத்தான் அன்னைக்கு ஒரு நாள் சந்தியாவை பற்றி ஆர்வமா  விசாரித்தானா?  அன்னைக்கு நீ எதுக்கோ கூப்பிட்டதனால  அந்த பேச்சை விட்டுட்டு எழுந்து போய்ட்டேன்..  

இல்லைனா நான் அன்னைக்கே  இவனை  கண்டுபிடித்து இருக்கலாம்.. “ என்று சிரித்தான் நிகிலன்..  மதுவும் இணைந்து சிரித்தவள்

“உங்களுக்கு இதுல  சம்மதமா? “  என்று தன் கணவனை ஆர்வமாக பார்த்தாள்..

“இதுல என் சம்மதம் என்ன  இருக்கு டீ..  அம்மாவும் மகிழனும் ஓகே சொன்னா எனக்கும்  ஓகே டா.. அதுவும் உன் பிரண்டே இரண்டாவது மருமகளாக வருவது டபுள் ஓகே தான்.. “  என்று சிரித்தான்..  

அதற்குப் பிறகு சிறிது நேரம் தன் கணவனிடம் கதை அடித்தவள் பின் மதிய உணவு நேரம் நெருங்க அவனை அழைத்துக் கொண்டு மதிய உணவை சாப்பிட கீழ  வந்தனர்.. நிகிலனும் ஒரு டீஷர்ட்டை எடுத்து  அணிந்து கொண்டு தன் மனைவியுடன் கீழே இறங்கி வந்தான்..

ஏற்கனவே சிவகாமி, அகிலா மற்றும் மகிழன் டைனிங் டேபிலில் அமர்ந்து பேசி கொண்டிருக்க மதுவை கண்டதும் கண்சிமிட்டி குறும்பாக சிரித்தான் மகிழன்..  அதை கண்டதும் மீண்டும் கன்னம் சிவக்க, அவனை முறைத்தவள் உணவு மேஜைக்கு சென்றாள்..

அனைவருக்கும் உணவைப் பரிமாறியவள் மீண்டும் மகிழன் சந்தியா திருமண விஷயத்தை ஆரம்பித்தாள்.. இப்பொழுது எல்லாருக்குமே சம்மதம் என்க, உடனே மது சிவகாமியிடம்

“அத்த.. அப்ப நாம இப்பவே போய் சந்தியா வீட்ல பேசலாமா? “  என்றாள்  ஆர்வமாக..

சிவகாமியும் சம்மதிக்க மது தன் தந்தையை அழைத்து சந்தியா வீட்டிற்கு வரச் சொல்லி விட்டு தன் மாமியாரை அழைத்துக் கொண்டு சந்தியா வீட்டிற்கு சென்றாள்..

துவை கண்டதும் ஆர்வத்துடன் வரவேற்றார் ருக்மணி..வேல்மணியும் அப்பொழுது அங்கே இருக்க அவருக்கும்  மதுவையும் அவள் மாமியார் மற்றும் சண்முகத்தை காண மகிழ்ச்சியாக இருந்தது..

ருக்மணி அனைவருக்கும் குடிக்க கொடுத்த பிறகு மது  கண்ணால் தன் தந்தைக்கு ஜாடை காட்ட உடனே சண்முகம் அதை புரிந்துகொண்டு

“டேய் வேலு.. நம்ம சந்தியா குட்டிய மதுவோட கொழுந்தனார்க்கு பார்க்கலாம் னு  கேட்கறாங்க... சின்ன மாப்பிள்ளை சாப்ட்வேர் கம்பெனியில  பெரிய வேலையில இருக்கார்..  கை நிறைய சம்பளம்..

தனியா ஒரு ப்ளாட் கூட வாங்கியிருக்கிறார்..சந்தியாவை நல்லா பாத்துக்குவார். என்ன உனக்கு ஓகேவா? “  என்றார் சண்முகம்..

அதைக் கேட்டு திகைத்துப் போன வேல்மணி ஏதோ யோசிக்க, உடனே மது

“என்ன அங்கிள் யோசிக்கிறீங்க? நாங்க சந்தியாவை  நல்லா பாத்துக்குவோம்.. மகி.... “  என்று சொல்ல வந்து பின் மாற்றி கொண்டு

“என் கொழுந்தனார் நல்ல டைப் அங்கிள்.. என் மாமியாரை பத்தி சொல்லவே வேண்டாம்... சந்தியாவை  நல்லபடியா பார்த்துக்கறது எங்க கடமை..  நீங்க யோசிக்காதீங்க.. “  என்று தன் பக்கத்தை விளக்கிச் சொன்னாள்..  

அதைக் கேட்ட வேல்மணியும்

“அடடா உன் புகுந்த வீட்டை பற்றி எனக்கு தெரியாதா மது குட்டி..  உன்னை எப்படி வச்சிருக்காங்கனு  பார்க்கையிலயே தெரியுதே அந்து வீட்டு மனுஷங்களோட பெருமை..

நான் அதை பத்தி எல்லாம் யோசிக்கலடா..  எல்லாம் உன் பிரண்ட் ஐ பத்திதான் யோசிச்சுகிட்டிருக்கேன்.. அவ உங்க வீட்டுக்கு செட் ஆவாளா? நாளைக்கு அவளால உனக்கு ஒரு பிரச்சனை வந்திட கூடாது பார்.

அவள் இன்னும் விளையாட்டு பிள்ளையா இருக்காளே.. ஒரு பொறுப்பா இவ்வளவு பெரிய குடும்பத்துல மருமகளா போய் செட் ஆவாளானுதான் யோசிச்சுகிட்டிருக்கேன்..”  என்றார்..

அதை கேட்ட சிவகாமிக்கு அவரை உடனே பிடித்து விட்டது.. தன் மகள் ராஜ குமாரி என்றும் அவள் தப்பே செய்தாலும் அதை பூசி மொழுகி தலையில் தூக்கி வைத்து கொள்ளும் பெற்றோர்களுக்கு மத்தியில் தன் மகளின் குணத்தை அப்படியே சொல்லும் அவரின் நேர்மையும் அவர் தன் மகள் மேல் வைத்திருக்கும் பாசமும் புரிய ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது சிவகாமிக்கு..

அந்த வேலன் சரியான பொண்ணைத்தான் காட்டி இருக்கிறான் என உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டார்.. அவர் சொன்னதை கேட்ட மது   

“அங்கிள்.. அதெல்லாம் அவளை பத்தி எங்களுக்கு தெரியும்.. அத்தைக்கும் அவளை ரொம்ப புடிச்சிருக்கு..  உங்களுக்கு சம்மதமானு மட்டும் சொல்லுங்க..சந்தியாவோட சம்மதத்தை வாங்கறது என் பொறுப்பு.. “   

அதை கேட்டு சிவகாமியை பார்த்தவர்

“உங்களைப் பத்தி எல்லாம் சண்முகம்  நிறைய சொல்லியிருக்கிறான் மா..  அந்த மாதிரி ஒரு வீட்டுல என் பொண்ணு வாழ்க்கைப் பட்டு  போக கொடுத்து வச்சிருக்கணும்..  எனக்கு சம்மதம் தான்.. ஆனால் பாப்பாவ நினைச்சாதான் யோசனையா இருக்கு..அவ இதுக்கு என்ன சொல்வானு தெரியலையே..  “  என்றார் தாடையை தடவியவாறு

அதைக் கண்ட மது ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே

“அங்கிள்... சொன்னா எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க..  வந்து.. என் கொழுந்தனாரும் சந்தியாவும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறாங்க.. ரெண்டு பேருமே ஒரே ஆபீஸ்ல தான் வேலை செய்றாங்க.. எங்களுக்கு இப்பதான் தெரிய வந்தது.. அதுதான் உடனே உங்க சம்மதத்தை கேட்க கிளம்பி வந்துட்டோம்.. “  என்று சிரித்தாள் மது..

அதைக் கேட்டு மணிஸ்  தம்பதியினர் அதிசயத்தில் வாயை பிளந்தனர்..

“என்னது?  பாப்பா லவ் பண்றாளா?  அதெல்லாம் கூட அவளுக்கு வருமா? “  என்று சிரித்தார் வேல்மணி..

உடனே ருக்மணியும்  

“ஓ.. அதுதான் அன்னைக்கு மாப்பிள்ளை பத்தி ஏதோ உளற வந்தாளா? ..” என்று சிரித்தார்..

“என்ன ஆன்ட்டி  சொல்றீங்க?  சந்தியா ஏற்கனவே மகியை  பற்றி சொல்லியிருக்காளா? “  என்றாள் மது ஆர்வமாக

“நேரடியா சொல்லல மதுகுட்டி.. ஆனால் பேச்சு வாக்கில என் மருமகன் என்று நான் சொல்ல வந்த பொழுது உன் மருமகனை பத்தி பேசாத..என்று என் வாயை அடைத்தாள்

அப்போது தான் ஏதோ விஷயம் இருக்கு என்று துருவி கேட்டேன்..  அதற்குள் என்னை பேச்சை மாற்றி விட்டாள்.. “  என்று சிரித்தார் ருக்மணி..

“பாத்திங்களா.. பாத்திங்களா.. அப்ப சந்தியா கண்டிப்பா என் கொழுந்தனார் ஐ லவ் பண்றா.. ஆனால் அதை அவள் ஒத்துக் கொள்ள மாட்டேங்கிறா..”  என்று சிரித்தாள்.

அதைக் கேட்ட வேல்மணி மீண்டும் யோசனையானார்..

ஹ்ம்ம் அப்ப எப்படி மது இந்த கல்யாணத்தை நடத்துவது? “  என்றார் யோசனையாக..

“அங்கிள்.. சந்தியாவை பத்தி எனக்கு நல்லா தெரியும்.. இந்த கல்யாணத்தை அரெஞ்ட் மேரேஜ் மாதிரி,  நீங்க பார்த்த மாப்பிள்ளை மாதிரி நடத்தினா கடைசி வரைக்கும் அவள் மனம் அவளுக்கு தெரியாமலே போய்டும்..

அதனால் அவளுக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்து அவள் மனதை அவள் புரிந்து கொள்ள வைக்க வேண்டும்..”  என்றாள்  மது சிரித்தவாறு..

“என்னது?  ஷாக் ட்ரீட்மென்ட் ஆ? “  என்று அனைவரும் அதிர்ந்தனர்..

“ஆமாம்.. அவளுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால் தான் அவள் வெளியில் வருவாள்.. “  என்றவள் உடனே தன் திட்டத்தை விளக்கினாள்.. அதைக் கேட்டு மீண்டும்  யோசனையான வேல்மணி

“மது நீ சொல்ற மாதிரி பாப்பா ஒத்துகிட்டா பரவாயில்லை.. ஆனால் மாப்பிள்ளையை பிடிக்கலைனு ஏதாவது முரண்டு பண்ணினால்?  உங்களை எல்லாம் கூப்பிட்டு வச்சு அவமானப்படுத்திய மாதிரி ஆகிடும் இல்லையா.. “  என்றார் வேல்மணி

அதைக் கண்டு அதுவரை அமைதியாக இருந்த சிவகாமி

“இருக்கட்டும் அண்ணா..  என் சின்ன மருமகள் பத்தி எனக்கு நல்லாவே தெரியும்..அவளுக்கு கண்டிப்பா என் பையன புடிக்கும்...அப்படியும் என் பையனை புடிக்கலைன்னு சொல்லிட்டா, நாங்க சும்மா உங்கள எல்லாம் பார்க்க வந்த மாதிரி இருந்துட்டு போகட்டும்..

நாங்க ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டோம்.. என் மூத்த மருமக சொல்ற மாதிரி தான் செஞ்சு பார்ப்போமே.. “  என்றார் சிவகாமி சிரித்து கொண்டே..  

அதைக் கேட்டு வேல்மணி ரொம்பவுமே மகிழ்ந்து போனார்.. அதைவிட உரிமையாக தன்னை அண்ணா என்று அழைக்க சிவகாமியை அவருக்கு உடனே பிடித்து விட்டது.. அவர் வாயெல்லாம் பல்லாக அப்படியே ஆகட்டும் தங்கச்சி என்று உரிமையுடன் அழைக்க ஆரம்பித்தார்..

“ஆனாலும் ஒரு சின்ன கோரிக்கை.. பாப்பாவை நான் கொஞ்சம் செல்லமா வளத்துட்டேன்.. வாய் கொஞ்சம் அதிகமா பேசுவா.. உங்க வீட்ல வந்து ஏதாவது அதிகமா பேசினாலும் அதையெல்லாம் பொறுத்துக்கோங்க.. “  என்று சொல்ல அதை கண்ட சிவகாமியும் உடனே 

“அடடா..  என் சின்ன மருமகளை பத்தி எனக்கு தெரியாதா ணா..சின்ன வயசுல நான் அப்படிதான் டபடப னு  வாயாடிப்பேன்.. சந்தியாவை பார்க்க எனக்கு என்னையே பார்க்கிற மாதிரி இருக்கு.. அதனால நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க.. என் மருமகளை  நாங்க நல்லா பத்திரமா பாத்துக்குவோம்.. “என்று சிரித்தார்..

அதைக் கேட்டதும் நிம்மதியாக இருந்தது மணீஸ் தம்பதியர் இருவருக்கும்.. அதன்பின் சிறிது நேரம் ஊர் கதைகளை எல்லாம் பேசிவிட்டு நாளை நடக்கப் போகும் நாடகத்துக்கு ஒரு முறை ஒத்திகை பார்த்து விட்டு கிளம்பி சென்றனர்...

துதான் டீ நடந்தது.. என்று நேற்றைய கதையெல்லாம் சொல்லி முடித்தாள் மது..  அதைக்கேட்ட சந்தியா மலைத்து போனாள்..

“அடிப்பாவி மந்தி... நீ தான் இத்தனைக்கும் காரணமா? என்னையவே முட்டாள் ஆக்கி கதற வைக்கிற அளவுக்கு நீ பெரிய ஆள் ஆகிட்ட? ..” என்று செல்லமாக முறைத்தாள்..

“ஹீ ஹீ ஹீ நானும் வளர்ரேனே  சந்தி... நான் இப்ப இந்த குடும்பத்தோட மூத்த மருமகளாக்கும்..  எனக்கும் பொறுப்பு ஜாஸ்தி ஆயிடுச்சு இல்லை.. “  என்று தன் இல்லாத காலரை  தூக்கி விட்டு கொண்டாள் மது..

அடிங்க... “ என்று சந்தியா அவளை அடிக்க வர மது வேகமாக  எழுந்து  சிரித்து கொண்டே அவள்  கைக்கு கிடைக்காமல் நழுவினாள்..

அப்பொழுது அறை கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த ருக்மணி

“என்ன? இன்னும் ரெண்டு பேரும்  பேசி முடியலையா?  அதான் ரெண்டு பேரும் ஒரே வீட்டில தான  இருக்கப் போறீங்க.. இனிமேல் விடிய விடிய உட்கார்ந்து கதை பேசுங்க..இப்ப வாங்க..  சம்மந்தி கிளம்புவதற்கு ரெடி ஆயிட்டாங்க.. “ என்று இருவரையும் பார்த்து சொல்லி விட்டு வெளியில் சென்றார் ருக்மணி..

ஜோடியாக கையை பிடித்து கொண்டு சிரித்து கொண்டே வரவேற்பறைக்கு வந்த இருவரையும் அவரவர் கணவன்கள் ஆசையாக காதலாக பார்த்து ரசித்தனர்..

அதைக் கண்ட இரு பெண்களும் கன்னம் சிவக்க வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டனர்.. அதன்பின் எல்லோரும் விடைபெற்றுச் செல்ல முயல சந்தியா திடீரென்று நிகிலனை அழைத்தவள்

“மாம்ஸ்... என் புருஷனை என் கல்யாணம் முடியற வரைக்கும் பத்திரமா பாத்துக்கோங்க.. போன கல்யாணத்துல பாதியில் ஓடி போன மாதிரி இந்த தடவையும் எங்கேயாவது எஸ்கேப் ஆகிட போறாரு..

அவரை பத்திரமா  பார்த்துக்கிட்டு  கல்யாணத்தன்று கூட்டிகிட்டு வந்து என் கழுத்தில தாலி கட்டற  வரைக்கும் பத்திரமா பாத்துக்கற பொறுப்பு உங்களோடது..” என்று சீரியஸாக சொன்னாள்..

அதைக் கேட்ட நிகிலன்

"கவலையை விடு சந்தியா அவன் தான் எங்கேயுமே தப்பிச்சு போக முடியாத ஆயுள் சிறையில தானா வந்து  விழுந்திட்டானே.. அதிலிருந்து அவன் தப்பித்து எல்லாம்  போக முடியாது.. "  என்று  சொல்லி சிரித்தான்..

சந்தியா அதைக் கேட்டு நிகிலனை முறைக்க அடுத்த நொடி அவள் பார்வை அவளையும் அறியாமல் மகிழனிடம் செல்ல, அவள் எதிர்பார்த்த மாதிரியே அவளின் முறைத்த இதழையே தாபத்துடன் பார்த்து கொண்டிருந்தான் மகிழன்..

சந்தியா தன்னை முறைத்து பார்ப்பது தெரிந்ததும் உடனே வழக்கம் போல கண் சிமிட்டி குறும்பாக சிரித்து உதடு குவித்து முத்தமிட்டான் மகிழன்..  

அதைக் கண்டவள்  உடனே முறைப்பது நின்று போக கன்னங்கள் சிவக்க மகிழனை செல்லமாக முறைத்தாள்.. ம்ம்அதை கண்டு மகிழனும் சிரித்துக் கொண்டே தன் கையால் சூப்பர் என்று ஆக்ஷன் பண்ணினான்...

“ஷ் அப்பா இவங்க தொல்ல தாங்க முடியலையே... கிடைச்சா சைக்கிள் கேப்பிலையும் ரொமான்ஸ் பண்றாங்களே.. “  என்று அகிலா  நீட்டி முழக்க, உடனே சந்தியா அவளை  அடிக்க ஓடினாள்..

அவள் கைக்கு கிடைக்காமல் வெளியில் ஓடிப் போய் காரின் அருகில் நின்று கொண்டு சந்தியாவுக்கு பழிப்பு காட்டி சிரித்தாள் அகிலா...

மற்றவர்களும் எப்படியோ இவர்களின் நிச்சயம் நல்லபடியாக முடிந்ததே என்று  நிம்மதியுடன்  சிரித்து கொண்டே விடை பெற்று சென்றனர்..... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!