அழகான ராட்சசியே!!-37(pre-final)

 


அத்தியாயம்-37

கிழன் மற்றும் சந்தியா வரவேற்பு விழாவிற்கு வந்திருந்த  அனைவர்களும் வந்து மணமக்களை  வாழ்த்தி செல்ல இறுதியாக  தானா சேர்ந்த கூட்டத்தின் உறுப்பினர்கள் மேடையேறினர்..

அதுவரை அனைவரையும் வரவேற்று கொண்டிருந்த நிகிலன் இப்பொழுது தன் நண்பர்கள் குடும்பத்துடன் மதுவையும் அழைத்து கொண்டு  மேடைக்கு வந்தான்..

ஆதி,  வசீகரன் மற்றும் நிகிலன் முன்னால்  வர அவர்களைத் தொடர்ந்து பாரதி பனிமலர் மற்றும் மதுவந்தினி  பின்னால் வந்தனர்..பனிமலர் க்கு  இது நான்காவது மாதம் என்றாலும் வீட்டில் இருக்காமல் அவளும் இந்த திருமணத்திற்கு வர வேண்டும் என்று அடம் பிடித்து வந்திருந்தாள்..

நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்தவர்கள் மேடைக்கு வருமுன்னே ஒருவரை ஒருவர் கலாய்த்து கொண்டு சிரித்து பேசி கொண்டு இருந்தனர்..நண்பர்கள் மூவருமே அவர்கள் மனைவியின்  அலங்காரத்தில் மெய்மறந்து அவர்களை அவ்வபொழுது  ஓரக்கண்ணால் பார்த்து சைட் அடித்து கொண்டிருந்தனர்..

மூன்று பெண்களும் அதுவரை மீதி இருந்த கதைகளை பேசி கலாய்த்து முடித்ததும் இறுதியாக மேடை ஏறினர்..

மேடைக்கு வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தி தங்கள் பரிசினை கொடுத்தனர்..அவர்களும் நன்றி சொல்லி வாங்கி கொள்ள, ஆதி மகிழனிடம் கை குலுக்கி

“வெல்கம் டூ அவர்  குடும்பஸ்தர்கள் சங்கம் மகி..எப்படியோ இத்தனை நாட்கள் வாழ்க்கையை என்ஜாய் பண்ணிட்டு கடைசியில வந்து நம்ம சந்தியா கிட்ட மாட்டிகிட்டியே.. “ என்று சிரித்தான்..அதை கேட்ட சந்தியா முறைத்து

“ஆதி மாம்ஸ்... திஸ் இஸ்  நாட் ஃபேர்..உங்க பொண்டாட்டி பண்ற கொடுமை மாதிரி எல்லாம் நான் ஒன்னும் என் புருஷனை படுத்த மாட்டேனாக்கும்..நம்ம ஹார்ட் மெக்கானிக் மாம்ஸ் ஐ பாருங்க.. அவரோட ஜில்லு எத்தனை அடிச்சாலும் தாங்கி கிட்டு அதே வசீகர புன்னகையோடு எவ்வளவு அமைதியா அடக்க ஒடுக்கமா இப்பவும் பொண்டாட்டிக்கு பயந்து கிட்டே நிக்கறார்..

உங்களை பாரதி இத்தன போடு போட்டாலும் இன்னும் அடங்க மாட்டேங்கிறீங்களே.. பாரதி நீ சரியில்ல.. “ என்று சிரித்தாள் சந்தியா..

“ஆஹா... இதுதான் தவளை  தன் வாயாலயே கெடும்ங்கிறது... நீ ஏன் மா சும்மா இருக்கிற என் பொண்டாட்டியை சீண்டி விடற? “ என்று பயந்தவன் போல நடித்தான் ஆதி...

“ஹா ஹா ஹா அது அந்த பயம் இருக்கட்டும் மாம்ஸ்.. “ என்று சந்தியா சிரிக்க அவள் அருகில் வந்த பாரதி அவள் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி

“வாயாடி... உன் வாயை மட்டும் அடக்கவே முடியல டீ... கல்யாண பொண்ணா கொஞ்சமாவது அடக்க ஒடுக்கமா நிக்கறயா? “ என்று சிரித்தாள்...

“ஆமாம் பாரதி... எனக்கு என்னவோ இப்பதான் ரொம்ப பேசறானு இருக்கு.. “என்று சிரித்தவாறு பனிமலரும் சந்தியாவின் கன்னத்தை பிடித்து கிள்ள,

“ஹலோ போலீஸ் மாம்ஸ்...உங்க பொண்டாட்டியை சைட் அடிச்சது போதும்...அந்த மந்தி என்னவோ அவதான் கல்யாண பொண்ணு மாதிரி சிங்காரிச்சுகிட்டு நிக்கறா.. விட்டா எங்களுக்கு பதிலா நீங்க தாலி கட்டிடிவீங்க போல இருக்கு...

உங்க பொண்டாட்டிய அப்புறம் தனியா வச்சு ஸ்பெஷலா கவனிங்க.. இப்ப இந்த பச்ச புள்ளைய இரண்டு டெரரிஸ்ட் கொடுமை படுத்தறாங்களே.. ஏன் னு கேட்க மாட்டீங்களா? “ என்றாள் பாவமாக முகத்தை வைத்து கொண்டு..

அதை கண்டு நிகிலன் அவசரமாக தன் பார்வையை மதுவிடம் இருந்து மாற்றி கொண்டு  வெட்கபட்டு அசட்டு சிரிப்பை சிரிக்க, ஆதி மகிழனை பார்த்து

“டேய் மகி...என் பொண்டாட்டி சொல்ற மாதிரி உன் பொண்டாட்டி இந்த வாய் அடிக்கிறாளே.. எப்படி சமாளிக்க போற? “ என்று சிரித்தான்.. 

மகிழனும் சிரித்தவாறு

“அதுக்குத்தான் என்னோட சீனியர்ஸ்  என் அண்ணன்கள் மூணு பேர் இருக்கீங்களே...அப்பப்பா உங்ககிட்ட டிப்ஸ் கேட்டுக்க வேண்டியதுதான்.. அதுவும் வொர்க்கவுட் ஆகலைனா என்  மாமனார் காலை பிடிக்க வேண்டியதுதான்..

என் மாமியாரை என் மாம்ஸ் எப்படி  கண்ட்ரோல் பண்ணி வச்சிருக்கார் னு டிப்ஸ் கேட்டுக்க வேண்டியதுதான்.. “  என்று சொல்லி கண் சிமிட்டி சிரித்தான்.. 

அப்பொழுது அங்கே வந்த ருக்குமணி மேடையின் கீழ இருந்து மகிழனை பார்த்தவர்

“என்ன மருமகனே !! என் பெயர் அடிபடுது?  என்ன விஷயம்? “ என்று இடுப்பில் கை வைத்து முறைக்க, அப்படியே சந்தியாவே அவனை பார்த்து முறைப்பதை போல இருந்தது...

“ஆத்தி.. இப்ப தெரியுது.. இவ எங்க இருந்து இந்த முறைக்கிறத கத்துகிட்டானு.. அந்த மனஸ் சொன்ன மாதிரி குடும்பமே டெரர் குடும்பம் போல.. “ என்று உள்ளுக்குள் புலம்பியவன்

“ஹீ ஹீ ஹீ ஒன்னும் இல்ல அத்த.. சும்மாதான்..உங்களை பத்தி பெருமையா புகழ்ந்து கிட்டிருந்தேன்...  நீங்க போய் வர்ர்வங்கள கவனிங்க.. “ என்று  அசட்டு சிரிப்பை சிர்த்தான்..அதை கண்ட சந்தியாவும் நமட்டு சிரிப்பை சிரிக்க, மற்றவர்களும்  சிரித்தவாறே

“பரவாயில்லையே மகி...  மாமியார்க்கு நல்லாவே ஜால்ரா  அடிக்க கத்து வச்சிருக்க..உன் பொண்டாட்டிய விட, உன் மாமியாரையும் சேர்த்து சமாளிக்கணும் போல..கொஞ்சம் குஷ்டம் தான்..  “ என்று சிரித்தாள் பாரதி...

அதை கேட்டு சந்தியாவுக்கு புசு புசுவென்று கோபம் வர, அவள் முகம் சிவப்பதை கண்டு கொண்ட மகிழன்

“ஐயயோ.. அண்ணீஸ்... தாய்குலங்களா.. தெய்வங்களே.. போதும் இதுவரைக்கும் நீங்க கலாய்ச்சதெல்லாம்... ஏதையாவது சொல்லி என் பொண்டாட்டிய ஏத்தி விட்டுட்டு போய்டாதிங்க..

அப்புறம் அவளை மலை இறக்கறது கஷ்டம்..என்னை ஆள விட்டுங்க..  “ என்று தன் இரு கைகளையும் மேல தூக்கி பெரிய கும்பிடு போட, அதுவரை அமைதியாக சிரித்து கொண்டிருந்த வசி

“பரவாயில்லையே மகி..நீ தேறிட்ட.. ஒரு குடும்பஸ்தன் ஆகிறதுக்கு எல்லா தகுதியும் உனக்கு வந்திடுச்சு.. இதே ஸ்ட்ராடஜியை பாலோ பண்ணு.. உன் வாழ்க்கை சூப்பரா இருக்கும்…“ என்று சிரிக்க

“டாக்டர் மாம்ஸ்.... யூ டூ?.. நீங்கதான் குட் மாம்ஸ்.. நீங்க வீட்ல பாலோ பண்றத அப்படியே என் புருஷனுக்கும் சொல்லி கொடுங்க.. “ என்று சந்தியா முறைத்து  சிரிக்க மற்றவர்களும்  சிரித்துக் கொண்டே வரிசையில் நின்று கொண்டனர்  போட்டோ செஸ்ஸனுக்கு...

வசீகரன் ரிசப்ஷனுக்கு வந்திருந்த அதே புகைப்படக்காரர் மற்றும் வீடியோ கவரேஜ் என்பதால் பாரதியை கண்டதும் அடையாளம் கண்டு கொண்டு அவர்கள் சிரிக்க, பாரதியும் சிரித்தவாறு

“ப்ரோ.. அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும்... எங்களை மட்டும் தனியா போகஸ் பண்ணி சூப்பரா எடுக்கணும்..என்ன புரிஞ்சுதா?  “ என்று சொல்லி சிரித்தாள்..

“கண்டிப்பா மேடம்... போட்டோ சூப்பரா வரும் பாருங்க..” என்று அவர்களும் சிரித்தவாறு போட்டோ எடுக்க ரெடியாக, மேடையின் ஒரு பகுதியில் இருந்த படிகளின் வழியாக தாவி ஏறி  ஆதி மற்றும்  பாரதியின்  மகள் கார்த்தியாயினி வேகமாக அவர்களை நோக்கி ஓடி வந்து ஆதியின் காலை கட்டி கொள்ள, ஆதி சிரித்தவாறு  உடனே குனிந்து அவளை தூக்கி அவளின் பட்டு கன்னத்தில் முத்தமிட்டு தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்..

கார்த்தியை தொடர்ந்து  நிகிலன் அன்ட் மது வாரிசு நித்திலாவும் அந்த படிகளில் தன் குட்டி கால்களை வைத்து மெல்ல ஏற முயன்று கொண்டிருந்தாள்..

அதை கண்ட நிகிலன் உடனே ஓடிப் போய் தன் மகளை தூக்க முயல, பாரதி எட்டி அவன் கையை பிடித்து நிறுத்தி

“மாம்ஸ்... இருங்க.. உங்க பொண்ணு மேல எப்படி ஏறி வர்ரானு பார்க்கலாம்.. “ என்று சிரித்து கொண்டே அவனை பிடித்து நிறுத்தி கொண்டாள்..

அனைவரும் சிரித்து கொண்டே அந்த குட்டியையே பார்த்து கொண்டிருக்க, அவளும் விடாமல் முயன்று தன் கைகளை படிகளில் ஊன்றி  மெல்ல மெல்ல அடி எடுத்து வைத்து அந்த படிகளில் ஏற, இங்க நிகிலனுக்கோ பிபி ஏறி கொண்டிருந்தது..

“ஹே விடு பாரதி.... என் பிரின்ஸஸ் கீழ விழுந்திட போறா.. “ என்று முறைத்து  பாரதி கையை விலக்க முயல, பாரதியோ அவனை விடாமல் பிடித்து கொண்டு

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது மாம்ஸ்... ஒரு நிமிஷம் அமைதியா இருங்க.. பார்க்கலாம் உங்க இளவரசி எப்படி மேல ஏறி வர்ரானு..” என்று சிரித்தவாறு அவன் கையை விடாமல் பிடித்து கொண்டாள்...

எல்லோரும் ஆர்வத்துடனும் சிறு பயத்துடனும் பார்த்து கொண்டிருக்க, அடுத்த சில நொடிகளில் அந்த படிகளில் முழுவதும் ஏறி முடித்து நிமிர்ந்தவள் வெற்றி  களிப்பில் சிரித்தவாறு  தன் தந்தையை நோக்கி வேகமாக ஓடி வந்தாள் நித்திலா குட்டி..

பத்து மாதத்திலயே நடக்க ஆரம்பித்து இருந்தவள் அடுத்து இரண்டு வாரமே ஆகி இருக்க, அதற்குள் இவ்வளவு வேகமாக ஓடி வருவதை கண்டு அனைவருக்கும் ஆச்சர்யமே..

மது அணிந்திருந்த புடவைக்கு மேட்ச் ஆக, அதே கலரில் அழகான பட்டு பாவாடை சட்டை அணிந்து அவள் இடுப்பிலும் ஒரு குட்டி ஒட்டியானமும் நெத்தி சுட்டியும் அணிந்திருக்க, தன் பிஞ்சு கால்களில் வேகமாக எட்டி வைத்து ஓடி வருவதை காண ஒரு குட்டி தேவதை ஓடி  வருவதை போலவே இருக்க, அனைவரும் அதிசயித்து இமைக்க மறந்து அந்த குட்டியையே  பார்த்து கொண்டிருந்தனர்..

அந்த புகைப்படக்காரரும் வீடியோவும் அவளின் சின்ன சின்ன அசைவுகளை பத்திரமாக பதிவு செய்து கொண்டிருந்தனர்..

அந்த குட்டி,  மேடையில் பாதி தூரம் வந்து கொண்டிருக்கையில் கண்ணில் நீர் மல்க, அதற்குமேல் தன்னை கட்டு படுத்த முடியாமல் பாரதியின் கையை உதறி விட்டு இரண்டே எட்டியில் தன் மகளை அடைந்தவன் அவளை அப்படியே தூக்கி தலைக்கு மேல் சுற்றி பின் அவள் பட்டு கன்னத்தில் முத்தமிட்டு அவளை தன் மார்போடு சேர்த்து  அணைத்து கொண்டான் நிகிலன்...

அவளும் தன் தந்தையின் கழுத்தை சுற்றிலும் கையை போட்டு கொண்டு கிளுக்கி சிரிக்க, அதை கண்டவன் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பும், பெருமையும்..

“வாவ்... சூப்பர் மாம்ஸ்.. புலிக்கு பிறந்தது பூனையாகுமா? உங்கள மாதிரியே உங்க பொண்ணும் பெரிய ஆளா வரப்போறா.. அடுத்த IPS ஆபிசர் ரெடி.. “ என்று பாரதியும் அந்த குட்டியின் பட்டு கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ள, அவளோ வெட்கபட்டு சிரித்தவாறு தன் தந்தையின் தோளில் முகம் புதைத்து கொண்டாள்...

அவளை கண்டு ஆதியின் கையில் இருந்த கார்த்தியும் சிரித்தவாறு அவள் தந்தையின் கழுத்தை கட்டி கொள்ள, ஆதி மற்றும் நிகிலன் இருவரும் பெருமையுடன் தங்கள் மகள்களை கைகளில் தூக்கி கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர்...

அதை கண்ட வசியின் பார்வை ஏக்கத்துடன்  தானாக பனிமலரிடம் செல்ல, அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்து கொண்டவள் அவளும் கண் சிமிட்டி குறும்பாக சிரித்தாள்..

பின் அனைவரும் மீண்டும் ஒரு முறை மணமக்களை வாழ்த்தி, சிரித்தவாறே  கீழே இறங்கி சென்றனர்..

ஒரு வழியாக விருந்தினர் எல்லாருமே மேடைக்கு  வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு சென்றிருக்க , அருகிலிருந்த ஆர்கெஸ்ட்ரா குழுவினர் மணமக்கள் இருவரின் கையில் மைக் ஐ கொடுத்து பாடச் சொல்லி அழைத்தனர்

உடனே இருவரும் கையில் மைக் ஐ  வாங்க, கீழ இருந்த அவனுடைய அலுவலக கேங்

“தல... அன்று நீங்களும் சந்தியாவும்  பஸ் ல பாடின  பாட்டு இரண்டையும் சேர்த்து ஒன்னா பாடுங்க... “ என்று  கத்த, மகிழனும் வெட்கபட்டு சிரித்து கொண்டே

எனக்கென ஏற்கனவே பிறந்தவள் இவளோ ??

இதயத்தை கயிறு கட்டி இழுப்பவள் இவளோ?

ஒளி சிந்தும் இரு கண்கள்...

உயிர் வாங்கும் சிறு இதழ்கள்...

என்னுள்ளே என்னுள்ளே ஏதேதோ செய்கிறதே…

அது என்னென்று அறியேனடி...

என்று உருகி பாட, உடனே சந்தியாவும்

உனக்கென உனக்கென பிறந்தேனே..

உயிரென உணர்வென கலந்தேனே...

இதயத்தை இதயத்தில் இழந்தேனே

இமைகளில் கனவுகள் சுமந்தேனே !!!

 

என்று வெட்க பட்டு  சிரித்தவாறு பாடி முடிக்க, எல்லாரும் எழுந்து நின்று கை தட்டி ஆரவரித்தனர்..

அனைவரின் கை தட்டல் ஓசை அடங்கவும் அதற்கு பிறகும்  அந்த கேங் விடாமல்

“தல... அடுத்து எங்களுக்காக அழகான ராட்சசியே பாடுங்க.. “ என்று கண் சிமிட்டி சிரித்தனர்.. அதை கேட்டு அதிர்ந்த மகிழன்

“டேய் அஜய்.. இப்பதான் ஒரு கேங் என்னைய கலாய்ச்சு கீழ இறங்கி போய்ருக்காங்க.. நீ பாட்டுக்கு எதையாவது பாட சொல்லி என் பொண்டாட்டி பாட்டுக்கு முறுக்கி கிட்டு போய்ட போறா...நான் நாளைக்கு காலையில தாலி கட்டற வரைக்கும் கொஞ்சம் அடக்கி வாசிக்கணும் டா... “ என்று  சொல்லி சிரித்தான்..

“தல.. நம்ம சந்திதான... அவ முறுக்கிகிட்டு போனாலும் உங்க தம்பிங்க நாங்க இருக்கோம்.. தேடி புடிச்சு தூக்கிட்டு வந்து மேடையில உட்கார வச்சுட மாட்டோம்.. இவ்வளவு நாள் எங்க அண்ணி யார்னு தெரியாம இருந்தது.. இப்பதான் தெரிஞ்சுடுத்தே.. இனிமேல் நோ வொர்ரீஸ்.. சும்மா பாடுங்க...

அம்மா சந்தியா...இல்ல இல்ல சந்தியா அண்ணியாரே... எங்களுக்காக இந்த பாட்டை பாட, உன் புருஷனுக்கு பர்மிஷன் கொடுமா தாயே... “ என்று  ப்ரவின் இழுக்க சந்தியாவும் அவர்களை முறைத்தவாறே மகிழனிடம்  கண்ணால் பாட சொல்லி சைகை செய்ய, கீழிருந்து அதை கண்டு கொண்டவர்கள்

“ஹப்பா... தல...  திஸ் இஸ் நாட் ஃபேர்.. கழுத்துல தாலி ஏறதுக்கு முன்னாடியே உங்களை இப்படி ஆட்டி வைக்கிறாளே... “ என்று சிரிக்க, மகிழனும்

“டேய்.. .அடங்குங்கடா... நான் பாடிடறேன்...மேல ஏதையாவது பேசி ஏழரையை கூட்டிடாதிங்க.. “ என்று  சிரித்தவாறு தன் அலைபேசியை எடுத்து அதில் அந்த பாடலின் லிரிக்ஸ் ஐ திறந்தவன் தன் வசீகர குரலில் பாட ஆரம்பித்தான்..

ஆர்கெஸ்ட்ரா குழுவினர் பின் பாட்டும் கோரஸ் வரிகளும் சேர்ந்து பாட, மகிழன் அழகாக ஏற்ற இறக்கத்துடன் அந்த பாடலை பாட, சந்தியாவுமே அதில் மயங்கி பெண் குரல் வரும் இடங்களில் அவளும் இணைந்து பாடினாள்..  

மகிழன்:

அழகான ராட்சசியே !!!

அடி நெஞ்சில் குதிக்கிறியே !!

முட்டாசு வாா்த்தையிலே

பட்டாசு வெடிக்கிறியே !!

அடி மனச அருவாமனையில் நறுக்குறியே..!!

 

சந்தியா: 

 

அருகம்புல்லுக்கு அறுக்கத் தொியுமா?

கொழந்த குமாி நான் ஆமா.. !!

அயிர மீனுதான் கொக்க முழுங்குமா அடுக்குமா ??

 

வெளிய பூத்து நீ உள்ள காய்க்கிற

கடலக்காடு நீ ஆமா..!!

உயிர உாிச்சு நீ கயிர திாிக்கிற

சுகம் சுகமா.. !!!

 

மகிழன்:

கிளியே !!  ஆலங்கிளியே !!

குயிலே !!  ஏலங்குயிலே !!

 

அழகான ராட்சசியே !!

அடி நெஞ்சில் குதிக்கிறியே !!

அடி மனச அருவாமனையில் நறுக்குறியே

 

இருவரும் இணைந்து அந்த பாடலை ரசித்து முழுவதும் பாடி முடிக்க, மீண்டும் ஒரு பலத்த கைதட்டல் அந்த மண்டபத்தை நிறைத்தது..

இறுதியாக மகிழனின் பேவரைட்  சாங் ஆன ஒரு  பொய்யாவது சொல் கண்ணே பாடலையும் பாட சொல்லி வம்பு பண்ண, மகிழனும் தன் தொண்டையை கணைத்து கொண்டு சிறிது தள்ளி வந்து தன் ஒற்றை காலை மடக்கி அமர்ந்து சந்தியாவை பார்த்து “ஒரு  பொய்யாவது சொல் கண்ணே.. “ என்ற பாடலை அவள் காதலை யாசித்து பாடினான்..

ஒரு பொய்யாவது சொல் கண்ணே...

உன் காதலன் நான் தான் என்று

அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் !!!

 

பூக்களில் உன்னால் சத்தம்...

அடி...  மௌனத்தில் உன்னால் யுத்தம்

இதைத் தாங்குமா என் நெஞ்சம்?

இதைத் தாங்குமா என் நெஞ்சம் ?

 

இன்றும் அந்த பாடலை தன்னவளுக்காக உருகி பாடினான்.. அதில் தெரிந்த அவனுடையை பீலிங்ஸ் ஐ  கண்டு சந்தியாவின் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது...

 அவளையும் மீறி ஓடிச்சென்று அவனை  இறுக்கி அணைத்து கட்டிக் கொண்டாள்..

அதில் இன்பமாய் அதிர்ந்தவன் மெல்ல எழுந்து  அவனுமே அவள் முன் உச்சி  நெற்றியில் மெல்ல முத்தமிட்டு அவளை தன்னோடு சேர்த்து மென்மையாக அணைத்து கொள்ள,  அனைவரும் ஓ வென்று கத்தினர்...

சந்தியாவிற்கு அப்போதுதான் உரைத்தது அவள் நின்று கொண்டிருப்பது மேடை என்று..  உடனே கன்னங்கள் சிவக்க, அவனிடமிருந்து விலகி வெட்கப் பட்டு சிரித்தவாறு தலையை குனிந்து கொண்டாள்..

டுத்ததாக டான்ஸ் செஸ்ஸன் ஆரம்பித்தது... எல்லாரும் குத்து பாட்டு   போட்டு டான்ஸ் ஆட அந்த அரங்கமே அதிர்ந்தது...

மற்றவர்கள் ஆடுவதை பார்த்து சந்தியாவும் ஆட துடிக்க, மகிழன் அவளை முறைத்தவாறு அவள் கையை விடாமல் பிடித்து கொண்டான்.. சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் அவன் கையை விலக்கி கொண்டு கீழ இறங்கி வந்து ஆட, மகிழனும் வேற வழியில்லாமல் இறங்கி வந்து அவளுடன் இணைந்து கொண்டான்...

வசீகரன் விழாவை போலவே இந்த விழாவிற்கும் மது, பாரதி இணைந்து  ஆட, கூடவே வசீகரன் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் பனிமலரும் கூட சேர்ந்து மெதுவான ஸ்டெப்சில் ஆட, இப்பொழுது சந்தியாவும் சேர்ந்து கொள்ள, அந்த அரங்கமே அதிர்ந்தது...

மூன்று நெட்டைஸ் உடன் மகிழனும் சேர்ந்து கொள்ள, அந்த நான்கு ஜோடிகளுமே பூரிப்புடன் அந்த அரங்கத்தை  அதிர வைத்தனர்.. கூட ஆபிஸ் கேங் ம் சேர்ந்து கொள்ள, இன்னும் அதிர்ந்தது..

 இறுதியாக எல்லாரும் ஆடி களைத்து விட, மறுநாள் திருமணம் என்பதால் அத்தோடு முடித்து கொள்ள சொல்லி பெரியவர்கள் மிரட்ட, மனமே இல்லாமல்   அனைவரும்  மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றனர்..

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன்  அந்த ரிசப்ஷன் இனிதாக முடிந்தது..

டுத்த நாள் காலை திருமணம்..

அதிகாலை முகூர்த்தம் என்பதால் சீக்கிரமே எழுந்து திருமணத்திற்கான சடங்குகள் ஆரம்பிக்கப்பட்டன..  

முதலில் மணமகனுக்கான  சடங்குகள் நடந்து கொண்டிருக்க பட்டு வேஷ்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்து  அந்த ஐயர் சொல்லும் மந்திரங்களை சொல்லிக் கொண்ட ஓரக் கண்ணால் மணமகள் அறையை பார்த்த வண்ணமே இருந்தான் மகிழன்...  

அவனை அதிகம் காக்க வைக்காமல் சிறிது நேரத்தில் சந்தியாவும் வெளியில் வந்தாள்..

நேற்று மது அணிந்திருந்ததை போலவே இன்னும் கொஞ்சம் கிராண்ட் ஆக, இளந்தளிர் பச்சை நிறத்தில் பிங் கலர் பார்டர் வைத்த பட்டுப்புடவையும் அதற்கு பொருத்தமாக கற்கள் பதித்து வேலைப்பாடு செய்திருந்த பிங் நிற ப்ளவுசும் அணிந்து தலையை குனிந்த படியே  மது அவளை அழைத்து கொண்டு வர, அவளையே  இமைக்க மறந்து பார்த்திருந்தான்..

மெல்ல நடந்து வந்து அவன் அருகில் அமர, அந்த நொடி மகிழனுக்கு எப்படி உணர்வது என்று புரியவில்லை.. விண்ணில் பறப்பதை போல இருந்தது அவளின் அருகாமை..

அவளையே நேரடியாக காதலுடன் பார்த்து கொண்டிருக்க, அவளோ இவன் பார்ப்பது தெரிந்தும் உள்ளே படபடக்க தன் தலையை நிமிர்த்தாமல் இன்னுமே குனிந்து கொண்டு மணமகளுக்கான சடங்குகளை செய்து கொண்டிருந்தாள்...

பின் மணமக்களுக்கான சடங்குகளும் முடிய ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற சத்தம் போட, அந்த மாங்கல்யத்தை கையில் எடுத்தவன் பெரியவர்களுடன் ஆசியுடன் தன் மனம் கவர்ந்தவளின் சங்கு கழுத்தின் அருகில் கொண்டு வந்தான்..

அவளும் மெல்ல விழிகளை உயர்த்தி தன் கண்களால் சம்மதம் சொல்ல, மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் மகிழன் தன் மனம் கவர்ந்தவளின் கழுத்தில்  அந்த மாங்கல்யத்தை கட்டி பெருமையுடன் இரண்டு முடிச்சிட,  ஏற்கனவே அங்கு தயாராக நின்று கொண்டிருந்த அகிலா மூன்றாவது முடிச்சிட்டு அவளை தன்னவளாக்கி  கொண்டான் மகிழன்..

அதன் பின் எல்லா சடங்குகளும் முடிய பெரியவர்களின் காலில் விழுந்து வணங்கினார்..

நிகிலன் நமது இல்லத்திலிருந்து வந்திருந்த  பெரியவர்களை அங்கேயே தங்க வைத்து காலையிலும் அவர்களை தயார் படுத்தி அங்கு அழைத்து வந்திருந்தான்.. அவர்களை எல்லாம்  மேடைக்கு வரவைத்து மகிழன்  மற்றும் சந்தியாவை அவர்கள் காலில் விழுந்து வணங்க சொன்னான்..

மணமக்கள் இருவரும் அந்த பெரியவர்கள் காலில் விழுந்து வணங்க,  அவர்களும் மகிழ்ந்து போய் மணமக்களை தொட்டு தூக்கி அவர்கள் தலையில் கை வைத்து ஆசீர்வதித்தனர்..

அந்த பெரியவர்களின் மனம் குளிர வாழ்த்தியதை கண்டு சந்தியா மற்றும் மகிழன்  இருவருக்குமே மனம் நிறைந்திருந்தது..

அதன்பின் இன்னும் சில சடங்குகள் முடிய, மணமக்களை அகிலா, மது, அன்பு என கூட இருந்து வம்பு இழுக்க, சந்தியாவும்  அவர்களுடன் கலாய்த்து பேச,  நேரம் ஓடிப்போனது..  

மதியம் அனைவரும்  மணமகன் வீட்டிற்கு வந்திருந்தனர்.. வலது காலை எடுத்து வைத்து உள்ளே வந்த தன் சின்ன மருமகளை ஆசையுடன் கட்டிக் கொண்டார் சிவகாமி.. அவளை பூஜை அறைக்கு அழைத்து சென்று  அந்த வேலனுக்கு முன்னாள் சந்தியாவை  விளக்கேற்ற வைத்து பூஜை செய்ய வைத்தார்..

மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் அந்த வேலனுக்கு தீபாராதனை காட்டி அனைவருக்கும் கொடுத்தாள் சந்தியா...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!