நிலவே என்னிடம் நெருங்காதே!!-27

 


அத்தியாயம்-27

"கை கொடுங்க தாத்தா... " என்று தேவநாதனின் ஒரு கையை பற்றி இழுத்து குலுக்கி கிளுக்கி சிரித்தாள் நிலவினி...

அதிகாலையிலயே எழுந்து குளித்து முடித்து பனியில் சிலிர்க்கும் இளம்ரோஜாவை போல கன்னம் குழிய சிரித்து கொண்டிருந்தவளை கண்டதும் அவர் மனதுக்குள் அப்படி ஒரு நிம்மதி நிறைவு இனிமை வந்து சேர்ந்தது தேவநாதனுக்கு.

அவள் உற்சாகம் அவரையும் தொற்றி கொள்ள .உதட்டில் தானாக புன்னகை அரும்ப

“வா டா.. நிலா மா.. என்ன காலையிலயே இவ்வளவு ப்ரெஸ்ஸா உற்சாகமா இருக்க.? என்ன விசேஷம்? ஒருவேளை உன் புருஷன் உன் பக்கம் சாஞ்சுட்டானா? “ என்று  கண் சிமிட்டி குறும்பாக சிரித்தார்..

“ஆமாம்.. அந்த நெட்ட கொக்கு என் பக்கம் சாஞ்சுட்டாலும்.. “ என்று  வாய்விட்டு சொல்லி கழுத்தை ஒரு பக்கமாக நொடித்தாள்

“என்ன அம்மணி..!  என் பேரனை என் முன்னாடியே நெட்ட கொக்குனு சொல்ற? “ என்றார் செல்லமாக அதட்டியவாறு..

“ஹீ ஹீ ஹீ ஓ நெட்ட கொக்குனு சொல்ல கூடாதா தாத்தா? அப்ப ஒட்டக சிவிங்கினு வச்சுக்கலாமா? இது ஓகே வா தாத்தா?  “ என்று அவளும் பதிலுக்கு கண் சிமிட்டி சிரித்தாள்..

“ஹா ஹா ஹா... காலங்காத்தாலயே இந்த கிழவனை வம்பு இழுக்கனே கிளம்பிட்ட போல இருக்கு அம்மணி.. சரி சொல்லு.. என்ன விசயம்? எதுக்கு என் கைபை பிடிச்சு குலுக்குன? “ என்றார் அவரும் சிரித்தவாறு...

“நான் ஒரு மடச்சி. சொல்ல வந்ததையே மறந்துட்டேன் பாருங்க.. “ என்று தன் தலையில் தட்டி கொண்டவள் இன்னும் அவரிடம் நெருங்கி வந்து ரகசியமாக பேச ஆரம்பித்தாள்..

“தாத்தா.... நீங்க அந்த பட்டணத்துக்காரி..... ம்.... அவ பேர் என்ன? “ என்றாள் தாடையில் கை வைத்து யோசித்தவாறு..

“ஹ்ம்ம்ம்ம் என்னமோ சொன்னானே... “ என்று அவரும் யோசித்தவர்

“ஆ.....வந்திருச்சு.... சா... ந்..... தி.....னி.... “ என்று ஒவ்வொரு எழுத்தாக இழுத்து கூறியவர்

“பேரை பார் சாந்தினியாம் சாந்தினி... வேணும்னா முதல் எழுத்தையும் கடைசி எழுத்தையும் சேர்த்து முதல் எழுத்தில் ஆ னாவை எடுத்துட்டு சனி னு வேணா கூப்பிடலாம்... நிஜமாலுமே என் பேரனை புடிச்ச சனிதான் அவ... விடாமல் இல்ல தொங்கிகிட்டு இருக்கா... “ என்றார் ஒரு வெறுத்த பார்வையுடன்...

“ம்ம்ம் சில் தாத்தா... இதுக்கு எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆறிங்க... எவ்வளவு பெரிய ஆள் அந்த சனியே ஆனாலும் அதை ஓட ஓர விரட்டிடலாம்... டோன்ட் ஒர்ரி...” என்று அவர் கையை மெல்ல அழுத்தி கொடுத்தாள் நிலா...

“ஹ்ம்ம்ம் அந்த நம்பிக்கையில் தான் இருக்கேன் நிலா மா... அதுவும் உன்னால அந்த பிசாசை ஓட்டிவிட முடியும்னுதான் உன்னை இந்த ஆட்டத்துல கொண்டு வந்திருக்கேன்...ஆனா நீ என்னமோ நேத்து திருப்பி கிட்டு போனியே... “ என்றார் பாவமாக..

“தப்புதான் தாத்தா.. நான் அப்படி போய்ருக்க கூடாது.. எதுனாலும் உங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டிருக்கணும்.. இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்.. அதுக்கு அவசியமும் இல்லை னுதான் தோணுது.. “ என்றாள் சிரித்தவாறு..

“என்ன அம்மணி சொல்ற? புரியலையே...” என்றார் அவளை யோசனையாக பார்த்தவாறு.

“ஹ்ம்ம் நேத்து அவரை பத்தி நீங்க சொன்னது நூத்துக்கு நூறு சரிதான் தாத்தா... “

“எவரை பத்தி.... ? “ என்று வேண்டும் என்றே சீண்டினார் தாத்தா...

“ஹ்ம்ம் நீங்க எவரை பத்தி செத்த முன்னால பேசினிங்களோ.. அதே அவரை பத்திதான்.. “ என்று அவளும் சளைக்காமல் திருப்பியவள்

“அவர்..... உங்க பே...ர....ன்..... “ என்று அழுத்தி சொன்னவள்

அந்த பட்டணத்துகாரி.. அதான் அந்த சனியை காதலிக்கவே இல்லைனு சொன்னிங்க இல்ல.. அது உண்மைதான் தாத்தா... நேற்று நைட் அவர் அவளிடம் கொஞ்சும் பொழுது பார்த்தேன்... நீங்க சொன்ன மாதிரியே அதில் துளியும் காதல் இல்லை.. அவர் கண்ணுல கூட காதல் ஒன்னும் பொங்கி வரலை..

மாறா என்னை வெறுப்பேத்துவதிலும் என் முகம் வாடி நான் அவர் காலை புடிச்சிகிட்டு எனக்கு வாழ்க்கை கொடுங்கனு கெஞ்ச வைக்கவேண்டும் என்ற வெறிதான் இருந்தது..

நான் விட்டுடுவேணா..!. அவர் பேச்சை கண்டுக்காதவ போல இருந்துகிட்டேன்.. அதை கண்டு உங்க பேரன் முகம் இஞ்சி தின்ன மங்கியாட்டம் ஆய்டுச்சு.... “ என்று கிளுக்கி சிரித்தாள்..

அதை கேட்டு தேவநாதனும் நகைத்தவர்

“ஹ்ம்ம்ம் என் பேரனையே மங்கினு சொல்லிட்ட... ரொம்பவும் தைர்யம்தான் அம்மணி உனக்கு.. அவன் காதுல மட்டும் விழுந்துது அவ்வளவுதான்.. “ என்று செல்லமாக எச்சரித்தவர்

“நான்தான் சொன்னேனே..... சரி.. அடுத்து என்ன செய்ய போற? “ என்றார் ஆர்வமாக.

“ஹ்ம்ம்ம் தெரியல தாத்தா... ஏதாவது செய்யலாம்.. நீங்கதான் ஐடியா கொடுங்களேன் என்றாள் யோசனையாக..

தேவநாதனும் தன் மீசையை நீவி விட்டுக் கொண்டே யோசித்தவர்

“நிலா மா.. அவன் பக்கம் இருக்கிற அடுத்த பவரான காய்களை தூக்கிடேன்... “   என்று கண் சிமிட்டினார்..

“பவரான காய்களா? அது என்ன தாத்தா? “ என்றாள் யோசனையாக

“ஹ்ம்ம் இப்ப நம்ம ஆட்டத்தில நம்ம அணியில் நானும் நீயும் தான் இருக்கோம்..  ஆனால் அவன்  பக்கம் நிறைய பேர் இருக்காங்க.. என்னைக் கேட்டால் அவனும் என்னுடன் மோதுவதற்கு உன்னைத்தான் ராணியாக எண்ணிக் கொண்டிருப்பான்..

அப்போ ராணிக்கு அடுத்த பவர்புல்லான காய் குதிரை தான.. அவனுக்கு இரண்டு பக்கமும் குதிரை மாதிரி இருந்து சப்போர்ட் பண்ணுவது அவனுடைய ரெண்டு தொங்கச்சிகளும்.. அதனால அவனை ஜெயிக்க வேண்டும் என்றால்    அந்த ரெண்டு குதிரையையும் உன் பக்கம் கொண்டு வந்துவிடு..

என் பேத்திகள் இருவருக்கும் அண்ணன் என்றால் உயிர்..அவனுக்கும் அதே போல தான் தங்கச்சிகள் னா பாசம் அதிகம்.. இந்த குட்டிங்க என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்டுக் கொள்வான்..அதனால் முதலில் அவங்களை உன் பக்கம் இழு.. “  என்று ஐடியா கொடுத்தார் தேவநாதன்..

“வாவ் சூப்பர் தாத்தா.. இது நல்லா இருக்கே..  ஆனால் அவங்க ரெண்டு பேரும் என்னை பார்த்தாலே முறைச்சிக்கிட்டே போறாங்களே.. அது ஏன் தாத்தா? என்னை கண்டால் அவங்களுக்கு பிடிக்கவில்லையா? நான் அவங்களை முன்ன பின்ன பார்த்ததில்லையே..அப்புறம் எப்படி என் மேல் கோவப்பட முடியும்? “ என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்..

“அது ஒன்னும் இல்ல அம்மணி.. என் மருமகளை போலவே என் பேத்திகளுக்கும் அந்த பட்டணத்துக்காரியை அவங்க அண்ணனுக்கு கட்டி வைக்கலைனு  கோபம்..  அந்த பளபளப்புக்காரி   அவங்களையும் மயக்கி வைத்திருந்தாள்.. அந்த புள்ள இங்க வந்திருந்தப்பயே  அண்ணி அண்ணி னு பின்னாடியே  சுத்தினாங்க...

அவங்க அண்ணன் விரும்பியவளை கட்டி வைக்காமல் உன்னை கொண்டு வரவும் அவங்க அண்ணன் கஷ்டபடறதை,  கோபமா முறைச்சுகிட்டு சுத்தறானே அதை பார்க்கவும் அதுக்கு காரணமான உன்மேல அவங்க கோவம் திரும்பிடுச்சு..

அதுதான் உன்னைக் கண்டால் முகத்தை தூக்கிக் கொண்டு போகிறார்கள்..  எல்லாம் சீக்கிரம் சரியாகிடும் நிலா மா.. நீதான் எல்லாத்தையும் சரி பண்ணனும்... “ என்றார் நம்பிக்கை கலந்த புன்னகையுடன்..  

“சரி தாத்தா..  டன்...செஞ்சுடலாம்.. அது சரி தாத்தா.. அவங்களை எப்படி வழிக்கு கொண்டு வருவது?  அதுக்கும் ஒரு ஐடியா கொடுங்களேன்..” என்று யோசனையாக அவரை  பார்த்தாள்.... அவரும் சற்று நேரம் யோசித்தவர்  

“நிலா... இந்த சின்ன குட்டி யாழி இருக்காளே.. அவளுக்கு சாப்பாட்டுல பைத்தியம்..  விதவிதமா எது செஞ்சாலும் நல்லா ரசிச்சு சாப்பிடுவா.. அப்புறம் பெரியவ  அம்முக்கு மேக்கப் னா உசுரு.. விதவிதமா மேக்கப் போட்டுக்க ரொம்ப பிடிக்கும்.. இத வச்சி ஏதாவது செய்ய முடியுமானு பார்... “ என்றார் மீசையை தடவியபடி..

"ஹ்ம்ம் டன் தாத்தா... இது போதும்.. இத வச்சே உங்க பேரனுடைய ரெண்டு குதிரைகளையும் நான் மடக்கிடறேன்..." என்று சிரித்தாள்.

“வெரி குட்.. ஆல் தி பெஸ்ட்..அம்மணி.. " என்று அவளுக்கு கை குலுக்க, அதே நேரம் தன் காலை ஓட்டத்தை முடித்து கொண்டு வீட்டிற்கு திரும்பி இருந்த அதிரதன் தோட்டத்தில் இருவரும் நின்று கொண்டு சிரித்து பேசி கொண்டு இருந்ததை கண்டு அவன் முகம் இறுக ஆரம்பித்தது...

உடனே நேற்று இரவு அவனிடம் அவள் நேருக்கு நேராக எதிர்த்து பேசியதும் நினைவு வந்தது..இரண்டு நாள் தன்னிடம் பயந்து கொண்டு அடங்கி இருந்தவள் நேற்று அப்படி சிரித்து பேச, இதற்கு பின்னால் இருப்பது யார்? எதோ சதி திட்டம் தீட்டுகிறார்கள் என்ற சந்தேகம் இருந்தது..

ஏற்கனவே அவன் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருக்கிற நெருப்பில் இன்னும் எண்ணெய்யை ஊற்றுவது போல இருவரும் சிரித்துக் கொண்டு நிற்க அவனுக்கு இருந்த சந்தேகம் விலகியது...

தன் எதிரிகள் தனக்கு எதிராக சதி பண்ணி  கொண்டிருப்பது  உறுதியானது..  உடனே

"என்னதான் இந்த ரெண்டு கூட்டு களவானிங்களும் கூடி கூடி பேசி சதி பண்ணினாலும் இந்த அதிரதன் சிக்க மாட்டான்...கழுவுகிற மீனில் நழுவுகிற மீன்.. அதுவும் விலாங்கு மீன் இந்த அதிரதன் என்று காட்டுகிறேன் இருவருக்கும்.. " என்று உதட்டோரம் வளைந்த ஒரு நக்கல் மற்றும் ஏளன பார்வையுடன் வேகமாக மாடி ஏறி தன் அறைக்கு சென்றான் அதிரதன்..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!