நிலவே என்னிடம் நெருங்காதே!!-29

 



அத்தியாயம்-29

ன்று இரவு உணவு மேஜையில் கூடியிருந்தனர் அனைவரும்..

நிலாவும் அவள் இருக்கையில் அமர்ந்து இருந்தாள்.. உணவு மேஜையில் இருந்த பதார்த்தங்களை பார்க்கவும் அனைவர் கண்களும் வியப்பில் விரிந்தன..

வழக்கமாக இருக்கும் ஐட்டங்கள் மாறி எல்லாமே புதுவித உணவு வகைகளாக இருந்தன.. அதுவும் யாழினிக்கு சொல்லவே வேண்டாம்.. அவள் நாக்கில் ஏற்கனவே அருவி கொட்ட ஆரம்பித்து இருந்தது..

அதேநேரம் அலுவலகத்திலிருந்து அதிரதன் திரும்பி இருந்தான்.. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் அலுவலகத்தில் எல்லாருமே சீக்கிரம் கிளம்பி வீட்டிற்கு சென்றிருந்தனர்.. அவனுக்கு வீட்டிற்கு வர பிடிக்காமல் எல்லா வேலையும் இழுத்து போட்டு செய்ய, அதுவும் முடிந்துவிட்டது..

பிறகு தன் நண்பர்களுடன் அவனுடைய சென்னை அலுவலகத்தை பற்றி விசாரித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.. அதற்குமேல் நேரத்தை நகர்த்த முடியாமல் போரடித்து போக உடனே வீட்டிற்கு கிளம்பி இருந்தான்..

எப்பொழுதும் தாமதமாக வரும் அண்ணன் அன்று சீக்கிரம் வந்துவிட, அவளை கண்டதும் இரண்டு தங்கைகளும் முகம் மலர்ந்தனர்.. அவனும் அவர்களை பார்த்து புன்னைகைத்துக் கொண்டே உள்ளே வர அடுத்த நொடி யாழினி எழுந்து தன் அண்ணன் அருகில் ஓடிச் சென்றாள்..

அவள் அணிந்திருந்த பட்டு பாவாடையை  விரித்து ஒரு சுற்று சுற்றி காண்பித்தவள்

"நான் எப்படி இருக்கேன் அண்ணா? " என்றாள் கண்களை கொட்டி ஆவலாக அவன் முகம் பார்த்தவாறு..

அவளை உற்றுப் பார்த்தவன் அவள் முகத்தில் தெரிந்த வித்தியாசத்தையும் பெரிதாக விரிந்திருந்த புன்னகையையும் கண்டு ஆச்சரியப்பட்டவாறு

“வாவ் சூப்பரா இருக்கடா யாழிகுட்டி..அப்படியே குட்டி தேவதை வானத்தில் இருந்து இறங்கி வந்த மாதிரி இருக்கா என் தங்கச்சி.. “  என அவளை தன்னோடு சேர்த்து மெல்ல அணைத்துக் கொண்டான்..   

அவளுக்கோ இன்னும் தலை சுற்றி போனது.. பெருமையுடன் சிரித்து கொண்டவள் தன் அண்ணன் மார்பின் மீது சாய்ந்து கொண்டு

“தேங்க்ஸ் ணா.. “ என்று எக்கி அவன் கன்னத்திலும் முத்தமிட்டாள்..

அதில் சிலிர்த்து போனவன் அவள் தலையை செல்லமாக ஆட்டி

“ஆமா டா குட்டி.. என்ன ஸ்பெஷல்.. மேக்கப் எல்லாம் போட்டு ஜொலிக்கிற? “ என்றான் சிரித்தவாறு..

“நத்திங் னா... சும்மாதான்.. “ என்றாள் வெட்க பட்டு சிரித்தவாறு.

“ஹ்ம்ம் யார் டா செல்லம்.. உனக்கு இவ்வளவு அழகா மேக்கப் போட்டுவிட்டது? “ என்றான் தங்கையின் வெட்கத்தை ரசித்தவாறு...

“அண்ணிதான் போட்டுவிட்டாங்க... “ என்று  சொன்னவள் பாதியில் நாக்கை கடித்து கொண்டாள்.. அவனுக்கு தன் அண்ணியை பிடிக்காதே என்று தெரிந்ததும் அவசரமாக தன் அண்ணன் முகம் பார்த்தாள் தவிப்புடன்..

தன் அக்காவை போல தன் அண்ணனும் எதுவும் தன்னை திட்டிவிடக்கூடாதெ என்ற சிறு அச்சத்துடன்..

அதை கேட்ட அதிரதன் ஒரு நொடி முகம் இறுக,பார்வை தானாக அங்கு அமர்ந்திருந்தவள் மீது பட்டு திரும்ப, அடுத்த நொடி தன் தங்கையின் முகத்தில் இருந்த தவிப்பை கண்டு தன்னை தளர்த்தி கொண்டவன் மெல்ல புன்னகைத்தவாறு

“சரி டா.. நான் போய் ரெப்ரெஸ் ஆகிட்டு வர்றேன்... நீ போய் சாப்பிடு.. “ என்றவாறு  வேகமாக மாடி ஏறி சென்றான்...

அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் வேற ஒரு இலகுவான உடைக்கு மாறி துள்ளலுடன் இரண்டு இரண்டு படியாக தாவி ஏறி சென்றான்...

அதற்குள் மற்றவர்கள் உணவை சாப்பிட ஆரம்பிக்க, நிலா மட்டும் உண்ணாமல் உணவை அழந்து கொண்டிருந்தாள்.. அதை கண்ட தேவநாதன் அவள் பக்கமாக மெல்ல சாய்ந்து

“என்ன நிலா பொண்ணே... உன் புருஷனுக்காக வெயிட்டிங் ஆ? “ என்று கண் சிமிட்டி சிரித்தார்..

“போங்க தாத்தா... “ என்று செல்லமாக சிணுங்க அதே நேரம் மாடியில் இருந்து அதிரதன் இறங்கி வரும் சத்தம் கேட்டது.. அவள் கண்கள் தானாக மாடிக்கு இழுக்க, அவள் மனமோ அவனை பார்க்காதே என்று அதட்டி கண்களை பிடித்து வைத்தது....

வேகமாக வந்தவன் தன் தாத்தாவின் பக்கம் பார்த்து முறைத்துவிட்டு பின் தங்கை மற்று அன்னையை பார்த்து முறுவலித்தவன் ஏதோ பேசி கொண்டே அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து உணவை உண்ண ஆரம்பித்தான்...

அதன் சுவை இன்று வித்தியாசமாக இருக்க, தட்டில் பொன்னி  வைத்த எல்லா பதார்த்தங்களையும் ருசி பார்த்தவன் விரும்பி சாப்பிட்டான்..

தன் அன்னையை பார்த்தவன்

“சூப்பர் மா... எல்லா ஐட்டம்ஸ் ம் சூப்பரா இருக்கு... இதை எல்லாம் பண்ணின பொன்னி அக்காவுக்கு தங்க காப்பு செஞ்சு போடணும்.. “ என்றான் உற்சாகமாக...

அதை கண்டு அனைவருக்குமே ஆச்சர்யமாக இருந்தது..

அவனின் அவசர திருமணத்திற்கு பிறகு யாரிடமும் அவன் சிரித்து பேசவில்லை இதுவரை.. கடுகடுவென முகத்தை இறுக்கி கொண்டு உடலை விறைத்து கொண்டும்  தலையை தூக்கி கொண்டு காட்டில் உறுமும் சிங்கமாக உறுமி கொண்டு இருந்தான்..

அவனின் இறுகிய தோற்றம் கண்டு அவன் தங்கைகளே அவனிடம் அருகில் செல்ல தயங்கினர்.. அப்படி இருந்தவன் இன்று உல்லாசமாக உற்சாகமாக உணவை ரசித்து சாப்பிட்டு கொண்டே அளவளாவ, எல்லாருக்கும் மனம் நிறைந்து இருந்தது..

அதற்கு இடையூறாக வந்து சேர்ந்தது யாழினியின் வார்த்தைகள்..

அவள் அண்ணன் சமையல் செய்யும் பொன்னியை பாராட்ட உடனே முந்திரி கொட்டையாக முந்தி கொண்டவள்

“அண்ணா... நீ வளையல் போடணும்னா அண்ணி கை அளவு எடுத்துக்கோ... ஏனா இதை  செய்ததெல்லாம் அண்ணிதான்... உனக்கு தெரியுமா? ஈவ்னிங் அண்ணி கேக் பண்ணி இருந்தாங்க .. அப்புறம் அது பேர் என்ன அம்மு? “ என்று தன் அக்காவை பார்க்க அவளோ பார்வையால்  ஜாடை சொல்லி எதுவும் சொல்லாதே என்று தடுக்க அதை கண்டு கொள்ளாமல் யாழினி யோசித்து கொண்டு இருக்க

தேவநாதன் முந்தி கொண்டு

“அது முந்திரி கொத்துடா சின்ன குட்டி.. “ என்று எடுத்து கொடுத்தார்..

“ஆங்.. அதே.. அதே..அதேதான்..  சூப்பரா இருந்தது ணா... “ என்று ஒரு இரண்டு நிமிடம் தன் அண்ணி புகழ் பாட, தேவநாதனோ நிலாவை பார்த்து

“எப்பூடி?  என்று புருவத்தை உயர்த்தி கண்ணால் சிரிக்க, அங்கு அதிரதனோ உள்ளுக்குள் கொதித்து கொண்டிருந்தான்..

அவளை எப்படியாவது இந்த ஜமீனில் இருந்து விரட்டி விடலாம் என்று பார்த்தால் இவள் என்னடாவென்றால் சமையல் அறைக்குள் நுழைந்து விட்டாளே..! பத்தாததற்கு தன் செல்ல தங்கையை அவள் பக்கம் இழுத்து விட்டாளே என்று எரிச்சலுடன் ஓரக்கண்ணால் பார்க்க அதே நேரம் தேவநாதன் நிலா பார்வை பரிமாற்றங்களை கண்டு கொண்டான்..

“அப்படி என்றால் இதுவும் இவளின் திட்டமா? என்னை மயக்க என் தங்கை வழியா முயல்றாளாக்கும்..!  அது ஒரு நாளும் நடக்காது.. இதை முளையிலயே கிள்ளணும்.. “ என்று  அவசரமாக யோசித்தவன்

“சே.. யார் யார் எல்லாம் சமையல் செய்யணும் னு விவஸ்தை இல்லாம போச்சு.. வாயில வைக்க முடியலை.. பொன்னி அக்கா.. இனிமேல் உங்களை தவிர யாரும் சமையல் அறை பக்கம் செல்ல கூடாது.. இனிமேல் நீங்கதான் சமைக்கணும்.. “ என்றவன் பாதி சாப்பாட்டில் வேகமாக எழுந்து அருகில் அமர்ந்து இருந்தவளை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தவன் புயலென தன் அறைக்கு சென்றான்...

அதுவரை பூவாக மலர்ந்திருந்த நிலா முகம் உடனே இருண்டு போனது.. அவளின் முகவாட்டத்தை கண்ட தாத்தா

“ஆட்டத்தில் இதெல்லாம் சகஜம் அம்மணி.. இந்த மாதிரி எத்தனையோ தடைகள், சூறாவளிகள் ஏன் சுனாமியே கூட வரும்.. அதுக்கெல்லாம் மனம் தளர்ந்து விடக்கூடாது.. நம்ம இலக்கு லட்சியம் என்னவோ அதுல கவனமா இருக்கோணும்..

உன் புருஷன் நம்ம ஆட்டத்தை கண்டுகிட்டான்.. அதனால்தான் முதல்ல ரசிச்சு சாப்பிட்டவன் அப்புறம் பிடிக்கலைனு கையை உதறிவிட்டு போய்ட்டான் உன்னை வெறுப்பேத்த..

இதெல்லாம் கண்டு பயந்துக்காத.. தாத்தா நான் இருக்கேன்...சீக்கிரம் அடுத்த மூவ் க்கு ரெடியாகலாம்.. “ என்று கண் சிமிட்டி சிரித்தார்..

அவளும் தன்னை சமாளித்து கொண்டவள்

“டன் தாத்தா... “ என்று கட்டை விரலை யாருக்கும் தெரியாமல் உயர்த்தி காட்டி கண் சிமிட்டி சிரித்தாள்..

ரவு உணவை முடித்து விட்டு பொன்னிக்கு எல்லாம் எடுத்து வைக்க உதவி செய்தவள் பின் மாடியில் தங்கள் அறைக்கு வ்நதாள்..

அதிரதன் வழக்கம்போல படுக்கையில் காலை நீட்டி அமர்ந்து கொண்டு தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்தவள் அவனை கண்டு கொள்ளாமல் நேராக உள்ளே சென்றவள் அவள் படுக்கையை எடுத்து தரையில் விரிக்க,

“ஏய்...... எதுக்காக இந்த ட்ராமா..... ? “ என்றான் நக்கலாக..

அவளோ அதை கண்டு கொள்ளாமல் தன் படுக்கையை விரிப்பதில் கவனத்தை வைத்திருந்தாள்..

ஏய்... உன்னைத்தான்................... “ என்று மீண்டும் எரிச்சலுடன் உரைக்க, அப்பொழுதும் அவள் திரும்பவில்லை..

மீண்டும் நேற்று அவள் ஏய் என்று அழைக்கவேண்டாம் என்று சொல்லி இருந்தது நினைவு வர,

“சரியான திமிர் பிடிச்சவ... திரும்பறாளா னு பார்.. இவ பேரை சொல்லி கூப்பிட்டாதான் திரும்புவாளாம்.. பெரிய மஹாராணி.. “ என்று  உள்ளுக்குள் பொரிந்தவன் தன் ஆத்திரத்தை அடக்கி கொண்டு

“உன்னத்தான்..... நி.......ல......வி.......னி........... “ என்று மீண்டும் இழுத்து அழைத்தான்..

அதை கேட்டு விலுக்கென்று திரும்பியவள்

“என்னையவா கூப்பிட்டிங்க...ஜமீன்தாரே !! நான் கூட யாரையோ ஏய் ஐ கூப்பிட்டிங்கனு நினைச்சேன்.. “ என்று கன்னம் குழிய சிரித்தாள்..

அதில் கடுப்பானவன்

“அது ஒன்னுதான் குறைச்சல்.. சரி அத விடு.. ஆமா எதுக்கு இந்த ட்ராமா? எதுக்காக என் தங்கைகிட்ட நெருங்கி பழகற? அப்புறம் எதுக்காக இந்த குக்கிங் ட்ராமா எல்லாம்? “ என்றான் நக்கலாக...

அவளோ அசராமல்

“ஹீ ஹீ ஹீ.. எல்லாம் உங்களை மயக்கத்தான் ஜமீன்தாரே ! .. உங்க தங்கச்சியை முதலில் மயக்கி என் பக்கம் இழுத்துட்டா அந்த குட்டியை வைத்து உங்களை மயக்கிடலாம் இல்லையா.. உங்களை மயக்கி என் கைக்குள்ள போட்டுகிட்டு இந்த ஜமீனுக்கு ஒரு வாரிசை பெத்து கொடுக்கத்தான்.. எப்படி என் திட்டம்? “ என்று தன் புருவத்தை உயர்த்தி கண் சிமிட்டி சிரித்தாள் நிலா..

அதை கண்டு திகைத்து போனான் அதிரதன்...

கொஞ்சம் கூட அசராமல் அவனை நேருக்கு நேராக பார்த்து அவள் வெளிப்படையாக பேச ஒரு நொடி வாய் அடைத்து போனான்... அவனின் திகைத்த விழிகளை ஒரு நொடி தன்னையும் மறந்து ரசித்தவள்

“என்ன ஜமீன்தாரே.. நீங்க திட்ட நினைத்தை நான் சொல்லவும் திகைச்சு போய்ட்டிங்களாக்கும்..?  எப்படியும் இதைத்தானே சொல்லி திட்டுவிங்க.. அதான் உங்களுக்கு எதுக்கு சிரமம் னு நானே உங்க டயலாக் ஐ சொல்லிட்டேன்..

கரெக்ட் ஆ சொன்னேனா? இதுதான் பதிவிரதை என்பதாம்..புருஷன் மனசுல நினைக்கிறத பொண்டாட்டி அப்படியே செய்வாங்களாம்.. இது மாடர்ன் ஜெனரேஷன் இல்லையா.. நினைக்கிறது மட்டும் இல்ல.புருஷன் திட்டறது கூட பொண்டாட்டிக்கு அப்படியே தெரியுமாம்..

எப்பூடி !! நானும் ஒரு நல்ல பொண்டாட்டினு ப்ரூப் பண்ணிட்டனா? “ என்று சிரிக்க, அவளின் பேச்சை கேட்டு கடுப்பானவன்

“ஏய்.. போதும் நிறுத்து.. விட்டா பேசிகிட்டே போற.. இப்படி எல்லாம் பேசி என்னை உன் பக்க இழுத்துவிடலாம் என்று மட்டும் கோட்டை கட்டாத.. அது ஒரு நாளும் நடக்காது.. அப்புறம் சொன்னியே பொண்டாட்டி..   எந்த நிலையிலும் எப்பொழுதும் நீ அதுக்கு தகுதியானவ இல்லை.. “ என்று இன்னும் பொரிந்து தள்ளினான்..

அவளோ தன் காதில் விரலை விட்டு ஆட்டியவள்

“ஷ் அப்பா... போதும் ஜமீன்தாரே...இதே டயலாக் ஐ கேட்டு கேட்டு காது புளிச்சு போய்டுச்சு..வேற எதாவது புதுசா சொல்லுங்க இன்ட்ரெஸ்டிங் ஆ வாது இருக்கும்..

ஆமா... இந்நேரம் உங்க நிலா பொண்ணுகூட இல்ல கொஞ்சி கிட்டு இருப்பிங்க.. இன்னைக்கு உங்க நிலா உங்களுக்கு அப்பாய்ன்ட்மென்ட் கொடுக்கலையா?

ஓ.. இன்னைக்கு ஃப்ரைடே இல்ல.. நீங்க உங்க நிலா பக்கத்துல இல்லாததனால் அந்த நிலா வேற ஒரு வானத்தை தேடி போய்ட போகுது..எந்த பார்ட்டியிலாவது வேற யார் கூடயாவது ஒட்டிக்க போகுது.. சீக்கிரம்  போன போட்டு புடிச்சு வச்சுக்கங்க.. “ என்று உதட்டை வளைத்து நக்கலாக சிரித்தவள் விரித்து வைத்திருந்த படுக்கையில் படுத்து கொண்டு தன் அலைபேசியை நோண்ட ஆரம்பித்தாள்..

“சே... “  என்று கையால் படுக்கையை குத்தியவன்

“திமிர் பிடிச்சவ... சீக்கிரம் இவளுக்கு சரியான பாடத்தை கற்பிக்கிறேன்... “ என்று உறுமியவன் தன் அலைபேசியை எடுத்தான்..

அப்பொழுதுதான் நிலவினி சொன்னது நினைவு வந்தது.. இந்நேரம் நிலா பொண்ணு அழைத்திருப்பாள்.. இன்று ஏன் அழைக்கவில்லை என்று யோசித்தவாறு அவளை அழைக்க அந்த அழைப்பு முழுவதும் அடித்து நின்று போனது..

திரும்பவும் அழைக்க, திரும்பவும் ஏற்கபடவில்லை. அதில் கொஞ்சம் டென்ஷன் ஆனவன் தொடர்ந்து முயற்சிக்க, சற்று நேரத்தில் அழைப்பை ஏற்றவள்

“ஹே.. பேபி.... நான் பிஸியா இருக்கேன்.. அப்புறம் கூப்பிடறேன்.. “ என்றாள் மெதுவாக கிசுகிசு குரலில்...

அவள் பேசும்பொழுதே பின்னால் இருந்து கேட்ட இரைச்சலும் மேற்கத்திய இசையும் அவள் பார்ட்டியில் இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லியது அவனுக்கு..

உடனே அதிர்ந்தவன்

“நிலா... நீ இப்ப எங்க இருக்க ? “ என்றான் பற்களை கடித்தபடி..

“ஒரு பார்ட்டியில் இருக்கிறேன் பேபி.. என் டீம் மேனேஜரோட பார்ட்டி.. எல்லாருமே வந்திருக்கிறோம்..சூப்பரா இருக்கு.. நீதான் மிஸ்ஸிங்.. நீ இருந்தா எவ்வளவு சூப்பரா இருக்கும் தெரியுமா?

ஆனாலும் என் டீம் லீட் கம்பெனி கொடுக்கறான்.. அத்தூ..... யு நோ... என்னை அழைத்து என் கூட டான்ஸ் ஆடினான்... அவனும் உங்களை மாதிரியே சூப்பரா டான்ஸ் ஆடறான் தெரியுமா? இட்ஸ் அமேஸிங்... ஐ என்ஜாய்ட்.. ஒகே பேபி.. நெக்ஸ்ட் சாங் ஸ்டார்ட்டர்ட்.. நான் அப்புறமா பேசறேன்..

பை.. ஸ்வீட் ட்ரீம்ஸ்.. லவ் யூ.. உம்மா.... “ என்றவள் அவசரமாக அழைப்பை துண்டித்தாள்..

அதை கேட்டதும் உள்ளுக்குள் அதிர்ந்து போனான் அதிரதன்..

அவள் தான் இல்லாமல் பார்ட்டிக்கு சென்றிருக்கிறாள் என்பதே அவனுக்கு உவப்பானதாக இல்லை... அதை விட அவள் வேற ஒருவனுடன் டான்ஸ் ஆடுகிறாள்.. அதுவும் அவன் தன்னை போலவே ஆடுகிறான் என்று  அவள் சிலாகித்து சொல்லவும் தூக்கி வாரி போட்டது..

அதிரதன் அவளுடன் எப்படி ஆடுவான் என்று  அவனுக்கு தெரியும்..இது மாதிரி பார்ட்டிகளில் சாந்தினி தன்னவள் தனக்கானவள் என்ற உரிமையில் அவளிடம் கொஞ்சம் தாராளமாக நெருக்கம் காட்டி ஆடுவான்..

அவளுக்கும் அப்படி இழைந்து ஆடினால்தான் பிடிக்கும்.. அப்படி இருக்க, அந்த அவனும் அதே மாதிரி அவளை கட்டி பிடித்து இடையில் கை போட்டு அவளை தொட்டு தடவி ஆடுவதை போல கற்பனை விரிய அடுத்த நொடி குமட்டி கொண்டு வந்தது அவனுக்கு..

தனக்கு சொந்தமானவள் எப்படி இன்னொருத்தன் கூட நெருக்கமாக ஆடலாம் என்று எரிச்சலாக வர, மீண்டும் அவளை அழைத்தான். ஆனால் அவள் அலைபேசியை அணைத்து வைத்திருந்தாள்..

அதை கண்டு இன்னும் உள்ளுக்குள் கொதித்து போனான்..  படுக்கையில் படுத்து இருந்தாலும் ஓரக் கண்ணால் தன் கணவனையே பார்த்து கொண்டிருந்தவளுக்கு அவன்  அந்த சாந்தினியிடம் பேசிய விதமும் அதற்கு பிறகு அவன் முகம் மாறிய விதமும் என்ன நடந்திருக்கும் என்பதை படம் பிடித்து காட்டியது அவளுக்கு...

அவனை மீண்டும் சீண்ட எண்ணி

“என்ன ஜமீன்தாரே! நான் சொன்னது சரியா? உங்க நிலா வேற ஒரு வானத்தை தேடி போய்டுச்சா? “ என்று நக்கலாக சிரிக்க

“வில் யூ ப்ளீஸ் ஷட் அப்... “ என்று கத்தியவன் தன் கையில் இருந்த அலைபேசியை தூக்கி எறிந்தவன் வேகமாக எழுந்து பால்கனிக்கு சென்றான்..

அவன் கத்தலையும் அவன் முகம் இறுகியதையும் கண்டு நிலவினிக்கு உள்ளுக்குள் வலித்தது..

அவனுக்கு ரொம்பவும் வேதனையை கொடுக்கறோமோ என்று  ஒரு நொடி தன் கணவனுக்காக வருத்தபட்டாள்.. ஆனால் அடுத்த நொடி தாத்தா சொன்ன அறிவுரை நினைவு வந்தது..

கசக்கும் என்றாலும் குழந்தைக்கு கட்டாயபடுத்தி மருந்தை கொடுத்தால்தான் நோய் சரியாகும்..வலிக்குமே என்று அஞ்சி காயத்தை கீறி குணபடுத்தாமல் விட்டால் அது புரையோடி போய்விடும்..

அதனால் ஆரம்பத்தில் அவனுக்கு வலிக்கத்தான் செய்யும் நிலா மா.. ஆனால் அதுக்காக பின் வாங்கிடாத..அவன் அந்த மாய வலையில் இருந்து வெளி வரும்வரை உன் முயற்சியை தொடர்ந்து செய்.. “

என்று சொல்லி இருந்தது நினைவு வர, அவளும் தன்னை சமாளித்து கொண்டவள் படுக்கையில் படுத்து கண்ணை மூடி கொண்டாள் அடுத்த மூவ்  என்ன என்று யோசித்தவாறு.....!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!