பூங்கதவே தாழ் திறவாய்-1
அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்..!! Merry Christmas!!!!
இந்த நன்னாளில் ஒரு புதிய கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன். இந்த நாவல் ஏற்கனவே ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது.
ஒலி வடிவில் கேட்டு மகிழ, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க...நன்றி!! அன்புடன் பத்மினி செல்வராஜ்.
பூங்கதவே தாழ் திறவாய் - ஆடியோ நாவல்..!
முன்னுரை:
உண்மையான காதல் இறுதியில் எவ்வாறு வெற்றியைப் பெறுகிறது என்பதை விளக்கும் சிறிய சஸ்பென்ஸ் உடன் ஒரு இனிமையான காதல் கதை இது.
இந்த கதை ஒரு வித்தியாசமான தம்பதியினரைப் பற்றியது. அவர்கள் வெவ்வேறு திசையில் பயணித்தாலும் இறுதியில் எவ்வாறு தங்கள் காதலை உணர்ந்தனர் என்பதை உணர்த்த வருகிறது இந்த காதல் கதை.
ஹீரோ அபிநந்தன். ஒரு சிறந்த தொழிலதிபன். தனது அத்தை மகள் மாயாவுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டான். இருப்பினும் அவன் அவள் மீது அக்கறை காட்டவில்லை.
அவனது அத்தை அவனது திருமணத்தை விரைவில் நடத்தும் படி அவனை நெருக்கிக் கொண்டிருந்தார். ஆனால் அபிநந்தனுக்கு அந்த திருமணத்தில் விருப்பம் இல்லாமல் போய்விட, திருமண நாளை தாமதப்படுத்தினான்.
இதற்கிடையில் அவன் தனது புதிய அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண் தீக்சாவை சந்தித்தான். தீக்சா ஒரு தைரியமான மற்றும் பிடிவாதமான பெண்
முதல் பார்வையில் அபி அவளால் ஈர்க்கப்பட்டான். இருப்பினும் அபி மற்றும் தீக்சா இடையேயான சில ஆரம்ப சந்திப்புகள் சண்டையுடன் முடிவடைந்தன. அபி அவளுக்கு அதிக வேலை கொடுத்து அவளை சித்திரவதை செய்ய விரும்பினான். ஆனால் தீக்சா தனது ஷிப்டைத் தாண்டி வேலை செய்ய மறுத்துவிட்டாள்.
அபிநந்தன் அவளை மட்டம் தட்ட, ஒரு வாய்ப்பை தேடிக் கொண்டிருந்தான். இதற்கிடையில் தீக்சா ஏற்கனவே திருமணமானவள், அவள் கர்ப்பமாக இருக்கிறாள் என்பது பின்னர் அபிநந்தனுக்கு தெரிய வந்தது. தீக்சா வயிற்றில் வளரும் குழந்தை மீது அபிக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது.
அதனால் தீக்சாவையே சுற்றி வருகிறான். ஆனால் தீக்சா அபிநந்தனை வெறுத்து ஒதுக்குகிறாள். அபிநந்தன் ஏன் தீக்சாவையே சுற்றி வந்தான்? தீக்சா ஏன் அபிநந்தனை வெறுத்தாள்? தெரிந்து கொள்ள இந்த கதையை தொடர்ந்து படியுங்கள்.
இந்த கதையும் உங்கள் மனதுக்கு பிடித்த இனிய காதல் கதைதான். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்...Happy Reading !!! அன்புடன் பத்மினி செல்வராஜ்
இதழ்-1
விண்ணைத்தொடும் அளவுக்கு உயரமாக நின்றிருந்த அந்த வணிக
கட்டிடத்தின் போர்டிகோவில் வழுக்கி கொண்டு
வந்து நின்றது அந்த சொகுசு கார்...
அந்த
காரின் செலுமையே அதில் வந்திருப்பவன் எப்படிபட்டவன் என்பதை உணர்த்த, அங்கு தயாராக காத்திருந்த வாலட் பார்க்கிங் உதவியாளர் ஒருவன் வேகமாக அந்த
காரின் அருகில் ஓடி வந்தான்...
அவனை
கண்டதும் காரின் உள்ளே ஓட்டுனர் இருக்கையில் இருந்தவன் தன் சீட் பெல்ட்டை தளர்த்தி
விடுவித்து பின் அந்த இன்ஜினை நிறுத்தி
அதில் இருந்த சாவியை எடுத்தான்....
பின்
கார் கதவை திறந்து கொண்டு இறங்கியவன் தன் அருகில் வந்து பவ்யமாக நின்று கார் சாவியை
வாங்க நீட்டி இருந்த தட்டில் தன் சாவியை
போட்டான்...
பின்
கை அடங்கும் அளவில் இருந்த தன் நோட்புக் கம்யூட்டர் இருந்த அந்த குட்டி பிரீப்கேசை
எடுத்து கொண்டு தன் சட்டையில் மாட்டி வைத்திருந்த அந்த கூலரை எடுத்து ஸ்டைலாக அணிந்து கொண்டு அந்த
கட்டிடத்தை நோக்கி நடந்தான்....
ஆறடிக்கும்
மேலான உயரம்..அவன் வேக நடைக்கு தகுந்த மாதிரி
அலை அலையாக அசைந்தாடும் கேசம்.. தீர்க்கமான கண்கள்.. கூரான நாசி..
கச்சிதமாக நறுக்கிய மீசை..
உதட்டில்
ஒரு கம்பீரமும் சிறிது கர்வமும் குடிகொண்டிருக்க, பார்க்கும் ஆண்கள் பொறாமை படவும்
பெண்கள் மயங்கி நிக்கும் தோற்றத்தில் இருந்தான்...
அவனின்
கம்பீர நடையை கண்டு அந்த கட்டிடத்தின் நுழை வாயிலில் அதுவரை அமர்ந்திருந்த வாயில் காவலாளி வேகமாக எழுந்து நேராக நின்று சல்யூட் ஒன்றை வைத்தான்...
அந்த
நெடியவனும் இலேசாக தலை அசைத்து லிப்ட் இருக்கும் பகுதிக்கு நடந்தான்....
அவன்
நடக்கும் அழகை கண்டு அங்கிருந்த பெண்கள் திரும்பி பார்த்து வியந்தனர்....
நேராக
லிப்ட் ஐ அடைய, அது அப்பொழுதுதான் கீழ வந்திருந்தது... மற்றவர்கள் அடித்து பிடித்து
உள்ளே செல்ல , அவன் மெதுவான நடையுடன் கடைசியாக உள்ளே சென்றான்...
அங்கிருந்த
பெண்கள் சிலர் ஆவலாக அவனை ரசித்து பார்க்க, அதை கண்டு அவன் உதட்டோரம்
ஏளனமாக வளைந்தது...
தன்
பாக்கெட்டில் வைத்திருந்த ஐ-போனை எடுத்து அவசரமாக தனக்கு வந்திருந்த மெசேஜ்களை
பார்வையிட்டான்....
அதற்குள்
அவன் இறங்க வேண்டிய தளம் வந்திருக்க, தன் ஐ-போனை மூடி மீண்டும் பாக்கெட்டில் வைத்து கொண்டு தன் பிரீப்கேசுடன்
லிப்ட் ஐ விட்டு வெளியேறினான்...
அதுவரை
அவனை கண்ணாலயே பருகியவர்கள் ஒரு ஏக்க பெருமூச்சை விட்டனர்....
இப்படி
ஒருவன் தனக்கு கணவனாக கிடைத்தால் எப்படி
இருக்கும்?? என்று கற்பனை பண்ணிய சில பெண்கள்
தங்கள் கனவு நாயகன்களின் லிச்ட் ல் அந்த நெடியவனையும் சேர்த்து கொண்டனர்...
லிப்ட்
ஐ விட்டு வெளியில் வந்தவன் அங்கு இருந்த அலுவலகத்தின் கதவை திறந்து கொண்டு உள்ளே
சென்றான்...
நேராக
ரிசப்சனுக்கு சென்று தன்னை அறிமுகபடுத்தி கொள்ள, அந்த ரிசப்சனிஸ்ட்
உடனே வேகமாக எழுந்து மார்ச் பாஸ்ட் ல் அட்டேன்சனில் நிற்பதை போல நின்று அவனுக்கு வணக்கம் சொன்னாள்..
அவனும்
புன்னகைத்து ஏற்று கொண்டு தனக்கு வேண்டிய தகவலை விசாரிக்க, அந்த பெண் கை நீட்டி
அவன் செல்ல வேண்டிய வழியை காட்டினாள்....
அந்த
பெண்ணிற்கு நன்றி சொல்லி தன் வேக நடையை தொடர்ந்தான்.. அந்த பெண்ணோ இன்னும்
அதிர்ச்சி விலகாமல் அவன் செல்வதையே பார்த்து கொண்டிருந்தாள்...
சிறிது
தூரம் சென்றதும் தாமஸ்( Managing
Director) என்று எழுதி இருந்த அந்த அறையின் முன்னே நின்றவன் இலேசாக கதவை தட்ட, உள்ளிருந்து
“Yes.. Come in…” என்ற கம்பீர
குரல் வந்தது....
அந்த
குரலின் கம்பீரத்தை கண்டு அதிசயித்தவாறு அந்த கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றான்
அந்த நெடியவன்....
அங்கு
MD சீட்டில்
அமர்ந்து ஏதோ பைலை புரட்டி கொண்டிருந்தவர் அந்த நெடியவனை கண்டதும் கண்கள் விரிய
எழுந்து நின்றார்....
60
வயதிலும் இன்னும் சுறுசுறுப்பாகவும் குரலில் அதே அதிகார கம்பீர குரலையும் கண்டு
திகைத்தான் அந்த நெடியவன்...
எழுந்து
நின்றவர் வேகமாக முன்னே வந்து
“அடடா...
அபி.. வா வா... உனக்காகத்தான் காத்துகிட்டிருக்கேன்... அது என்ன என்கிட்ட பெர்மிசன்
கேட்டுட்டு உள்ள வர்ர.. நீ எப்ப வேணாலும் வரலாம்... நோ பெர்மிசன் ரிகுயர்ட்... “
என்று அவனை கட்டி கொண்டு தோளோடு அணைத்து கொண்டார்....
அவனும்
அவரை அணைத்து பின் புன்னகைத்தான்...
பின்
இருவரும் அறையின் உள்ளே நடக்க, பார்வையாளர் பக்கம் இருந்த இருக்கையில் அமர போனான் அந்த அபி....அதை கண்டவர் உடனே
“நோ...
நோ.. அபி ... இது நீ உட்காரும் சீட் இல்ல... இங்க வா.. “ என்று அவன் கையை பிடித்து அழைத்து சென்று முன்பு அவர் அமர்ந்து இருந்த இருக்கையில், MD சீட்டில் அவனை உட்கார வைத்தார்......
“இனிமேல்
நீ உட்கார வேண்டிய சீட் இது தான்... சீட் மட்டும் இல்லை.. இந்த ரூம், இந்த ஆபிஸ், இதில் இருக்கும் என் எப்ளாய்ஸ் எல்லாமே
இனிமேல் உன் பொருப்பு தான்.... “ என்று சிரித்தார்....
அந்த
நெடியவனும் புன்னகைத்து எழுந்து அவர் பாதம் தொட்டு பணிய, அதில் நெகிழ்ந்தவர்
“God bless you மை
டியர் சன்...” என்று குனிந்து அவனை தூக்கி தலையில் கை வைத்து ஆசிவதித்தார்... பின்
அவனை மேலிருந்து கீழாக ஒரு முறை அளவிட்டவர்
“அப்படியே
உங்கப்பா கபிலனை பார்க்கற மாதிரியே இருக்கு டா... 30 வருசம் முன்னாடி உன் அப்பன்
என்கிட்ட வந்தப்போ இதே மாதிரி தான் இருந்தான்..
அப்பொழுதுதான்
பிசினசை ஆரம்பித்து இருந்தான்.. என்கிட்ட தான்
முதல் ஆர்டர் கேட்டு வந்தது.... அப்ப இருந்த அவனுடைய சுறுசுறுப்பையும் , பிசினசை நல்ல நிலைக்கு கொண்டு வரணும்னு இருந்த ஒரு வேகத்தையும் கண்டதும் அவனை எனக்கு பிடித்து
விட்டது.....
அதில்
ஆரம்பித்த எங்கள் நட்பு அவன் பெரிய அளவில் வளர்ந்த போதும் நான் இந்த சின்ன கப்பெனியையே ஓட்டி கிட்டு இருந்த போதும் என்னை மறக்காமல் என்னுடன் நட்பு பாராட்டியவன்
கபிலன்....
அதே
வேகம்,
சுறுசுறுப்பு உன் கிட்டயும் இருக்கு அபி... நீயும் உங்கப்பா மாதிரி இந்த பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தில் கொடி கட்டி பறக்கணும்...
இன்னும் நிறைய வெற்றிகளை எட்டணும்.. நிறைய பேர் க்கு வாழ்வு கொடுக்கணும்... “
என்றார் நெகிழ்ந்து போய்....
“கண்டிப்பா..
அங்கிள்..எல்லாம் உங்க ஆசிர்வாதம் .... “ என்று புன்னகைத்தான் அபி...
“ஹ்ம்ம்
இதெல்லாம் கூட இருந்து பார்க்க உன் அப்பாவும் அம்மாவும் உன் கூட இல்லை... “ என்று
இலேசாக கண் கலங்க அந்த நெடியவனுக்குமே இலேசாக கண் கலங்கியது..
அதற்குள்
தன்னை கட்டு படுத்தி கொண்டவன்
“அதற்கு
பதிலாதான் நீங்க இருக்கீங்களே அங்கிள்.. நீங்களும் என் அப்பா மாதிரிதான்.. எனக்கு இந்த தொழிலை கத்து கொடுத்து
எனக்கு கைட் பண்ணியதில் நீங்களும் ரொம்பவே உதவி செய்திருக்கீங்க...
அதே
மாதிரி இனிமேலும் என் கூட நீங்க இருந்து
எனக்கு கைட் பண்ணனும்... “ என்றான் சிரித்தவாறு...
“ஹ்ம்ம்ம்ம்
கண்டிப்பா மை டியர் சன்... “ என்று சிரித்தார் அவரும்...
அப்பொழுது
அறையை தட்டிவிட்டு பணியாள் இரண்டு டம்ளரில் பழச்சாற்றை கொண்டு வந்து வைக்க, அதை எடுத்து
பருகியவாறு தொழிலை பற்றி பேச ஆரம்பித்தனர்....
சில
நிமிடங்கள் தாமஸ் அந்த கம்பெனியை பற்றி விளக்கி கொண்டிருக்க, அதை கவனமாக கேட்டு கொண்டிருந்தான்...
பின் அவர் சில பைல்களை எடுத்து அவனுக்கு காட்டினார்...
அவனும்
தனக்கு சில சந்தேகங்கள் இருந்ததை அவரிடம் கேட்டு தெளிவு படுத்தி கொண்டான்..
பின்
11 மணி அளவில்
“ஓகே..
அபி... இன்னும் ஏதாவது சந்தேகம் இருந்தாலும் நீ கேள்.. இப்ப நாம் மீட்டிங் போகலாமா...
11 மணிக்கு எல்லா எம்ப்ளாய்ஸ் ஐ யும் ஒன்றாக அழைத்திருக்கிறேன்..” என்றார்....
“ஸ்யூர்
அங்கிள்.. “ என்று அவனும் எழ, இருவரும் சிறிது தூரம் நடந்து அங்கு இருந்த ஒரு கான்பிரன்ஸ் ஹால் உள்ளே
நுழைந்தனர் ...
அங்கு
ஏற்கனவே தொலிளார்கள் எல்லாம் ஒன்று கூடி இருக்க, தாமஸ் ஐ கண்டதும் அனைவரும்
எழுந்து நின்றனர்...
அவரும்
புன்னகைத்தவாறு அனைவரையும் அமர சொல்லி தன்
பேச்சை ஆரம்பித்தார்...
“பிரண்ட்ஸ், ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்கும்..
என்னால் இந்த அலுவலகத்தை முன்பு மாதிரி நிர்வகிக்க முடியவில்லை...அதனால் நம் அலுவலகத்தை
அபி குரூப் ஆப் கம்பெனிஸ் இடம் ஒப்படைத்து
விட்டேன்....
இனிமேல்
இந்த அலுவலகத்தின் பொறுப்பு அவர்களையே சேரும்...
இவன்....
என்று சொல்ல வந்து இவர்... தான் மிஸ்டர்
அபிநந்தன்.. இனிமேல் உங்களுடைய புது MD. He is a successful business man..
அதனால்
அவருடைய தலைமையின் கீழ் இந்த அலுவலகம் இன்னும் நன்றாக வளரும் என்பதில் சந்தேகமில்லை.....நீங்களும்
நிறைய பயனை அடைவீர்கள்..
இதுவரை
எனக்கு அளித்த ஆதரவை போன்று
அபிநந்தனுக்கும் நீங்கள் ஆதரவு அளித்து இந்த அலுவலகம் மேலும் மேலும் வளர துணை நிற்க வேண்டி கேட்டு கொள்கிறேன்...
இதுவரை
எனக்கு உதவி புரிந்து என்னுடன் பயணித்த
அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. God
bless all… “ என்று தன் பேச்சை முடித்தார்....
பின்
அந்த நெடியவன் அபிநந்தன் எழுந்து நிமிர்ந்து நின்று மைக்கை கையில் வாங்கி அங்கு இருந்தவர்ளை
எல்லாம் ஒரு ஆழ்ந்த ஊடுருவும் பார்வை பார்த்தான்....
அந்த
பார்வையிலயே தெரிந்தது அவன் ஒரு பெரிய பிசினஸ் மேன்.... யாரும் அவ்வளவு சீக்கிரம் அணுக முடியாத
கடினமானவன் என்று....
அவன்
தோற்றத்தை கண்டு மலைத்து நின்றனர் சில பெண்கள்.. அதோடு அவன் லிப்ட் ல் வரும் பொழுது
இருந்த சில பெண்களும் இப்பொழுது தங்களுக்குள் ஏதோ சொல்லி கொண்டனர்....
தாமஸ்
ஐ போலவே அபிநந்தனும் அனைவருக்கும் வணக்கம் சொல்லி , கூடவே அவர்களுடைய ஆதரவை கேட்டு கொண்டான்....
கூட்டத்தில்
சிலர் கேள்வி கேட்க, அவர்களுக்கு பொறுமையாக பதில் அளித்தான்...
அங்கு
கூடி இருந்தவர்களின் முக்கிய பயமே புது
நிர்வாகம் எப்படி இருக்குமோ என்பதுதான்...
பொதுவாக
இந்த மாதிரி நிர்வாகம் கை மாறும்பொழுது நிறைய வேலை இழப்பு, சம்பளம் குறைப்பு என்று பல மாற்றங்களை கொண்டு வருவது வழக்கமான ஒன்றாகும்....
அதனால்
அதற்கு அஞ்சி இருந்தவர்கள் அதை பற்றி கேட்க அவர்களுக்கெல்லாம் பொறுமையாக விளக்கினான்
அபிநந்தன்...
“நீங்க
பயப்படற மாதிரி எதுவும் இல்லை.. இந்த கம்பெனி முன்பு எப்படி இயங்கியதோ அதே போலத்தான்
இருக்கும்... சில மாற்றங்கள் வரலாம்...
ஆனால்
அதற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.. “ என்று சொல்லி மீண்டும் அவர்களுக்கும் தாமஸ் க்கும்
நன்றி சொல்லி தன் உரையை முடித்தான்...
அவன்
பதிலும் பதில் அளித்த விதமும் அனைவருக்கும்
பிடித்து விட்டது..
கொஞ்சம்
கூட தான் ஒரு மல்ட்டி மில்லினர் என்ற
பந்தா இல்லாமல் தனக்கு கீழ் இருப்பவர்களை ஏளனமாக எண்ணாமல் ஒவ்வொருத்தரும் கேட்ட கேள்விகளுக்கு
அவர்களுக்கு தகுந்த மாதிரி விளக்கியது
எல்லோர் மனதிலும் ஒரு நிம்மதியை கொடுத்தது...
நிர்வாகம் மாறப்போகிறது என்ற உடனே அனைவரும் அஞ்சி இருந்தனர்..
அதுவும்
தாமஸ் எப்பொழுதும் அவர்களை கடிந்து கொண்டதே இல்லை.. அதே மாதிரி பெரும் இலாபம்
சம்பாதிக்கணும் என்று ஆளாய் பறக்கவும்
இல்லை.. இருப்பதை சமாளித்தால் போதும் என்றுதான் இந்த அலுவலகத்தை நடத்தி வந்தார்...
அவருக்கு
ஒரே மகள்... அவளும் திருமணம் முடித்து வெளிநாடு சென்றிருக்க, தன் மனைவியும் இறந்து
விட, தாம்ஸ் க்கு இந்த அலுவலகத்தை நடத்துவதில் விருப்பம்
இல்லை...
அவருக்கு
தன் மகளுடனே சென்று விட வேண்டும் என்று
இருந்தது...
ஆனாலும்
இத்தனை நாளாக வளர்த்து வந்த இந்த அலுவலகத்தை, அதுதான் அவருக்கு மகன் போல.. தன் மகனை விட்டு செல்ல அவருக்கு மனம் வரவில்லை..
அதோடு
அதில் வேலை செய்யும் தொழிலாளர்களை பாதியில் அம்போனு விட்டு செல்லவும் அவருக்கு மனம் வரவில்லை... எத்தனை குடும்பங்கள் இந்த அலுவலகத்தை நம்பி இருக்கின்றன....
அதனாலயே
இதை பேருக்காக நடத்தி வந்தார்.. ஆனாலும் இப்பொழுது போட்டி நிறுவனங்கள் நிறைய வந்து
விட,
நஷ்டத்தில் தான் போய் கொண்டிருந்தது...
அதனாலயே
தன் நண்பன் மகனான அபிநந்தனை சந்தித்து அவனை வற்புறுத்தி இந்த அலுவலகத்தை விற்று விட்டார்....
அவன்
முதலில் மறுக்க, தன் மகனை வேறு ஒருவருக்கு கொடுக்க விருப்பமிலலை. தெரிந்தவர்கள் என்றால்
நன்றாக பார்த்து கொள்வர்.
அதனால்
தான் அபியை அனுகு தாக சென்டிமென்ட் ஆக பேசவும் அவனும் ஒத்து கொண்டான்....
தாமஸ்
டிசைன்ஸ் அன்ட் இன்டீரியர்ஸ் என்று பெயரிட்டிருந்த அந்த அலுவலகத்தை அபி டிசைன்ஸ்
அன்ட் இன்டீரியர்ஸ் என்று பெயர் மாற்றி லீகல் ஆக எல்லா பார்மாலிட்டிஸ் ம் முடிய , இதோ... இன்று முதல் தன் பொறுப்பை அபிநந்தனிடம் கொடுத்து விட்டார் தாமஸ்...
மீண்டும் ஒருமுறை அந்த அலுவலகத்தை சுத்தி பார்த்து விட்டு அவனை மீண்டும் ஒரு முறை வாழ்த்தி விட்டு கனத்த மனதுடன் அந்த அலுவலகத்தை விட்டு சென்றார் தாமஸ்...!
Comments
Post a Comment