பூங்கதவே தாழ் திறவாய்-2

 


இந்த நாவல் ஏற்கனவே ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. 

ஒலி வடிவில் கேட்டு மகிழ, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க...நன்றி!! அன்புடன் பத்மினி செல்வராஜ்.


பூங்கதவே தாழ் திறவாய் - ஆடியோ நாவல்..!


இதழ்-2

 

தாமஸ் சென்றதும் அபியும் மதிய உணவை முடித்து விட்டு அவர் கொடுத்திருந்த பைல்களை எல்லாம் ஆராய்ந்தான்...

அதில் சில சந்தேகங்கள் இருக்க, அங்கிருந்த அழைப்பு மணியை அழுத்தி   மேனேஜரை அழைத்தான்...

அழகான பேன்ட் சர்ட் அணிந்து அதன் மேல் மெல்லிய கோட் அணிந்திருந்த ஒரு இளம்பெண் கதவை தட்டிவிட்டு உள்ளே வந்தாள்...

“யெஸ் சார்.. “ என்று  பவ்யமாக அவன் முன்னே நின்றாள்..

தாமஸ் ஏற்கனவே அவளை  அறிமுக படுத்தியிருக்க, அவளை நேராக பார்த்தவன்

“ஜெசி... இந்த பைல் எல்லாம் யார் மெயின்டெய்ன்  பண்றாங்க.. இதில் ஒரு சின்ன கிளாரிபிகேசன்.. “ என்றான் அபி...

இதெல்லாம் தாமஸ் சாரோட  PA தான் மேனேஜ் பண்றா சார்... இன்று லீவ்.. உங்களுக்கு என்ன சந்தேகம்னாலும்  நாளைக்கு கேட்டுக்கலாம்... “ என்றாள் கொஞ்சும் குரலில்...

“அதோடு சார்...  நீங்க இன்னைக்கு ட்யூட்டியில் ஜாயின் பண்றதா சொல்லி யாரையும் லீவ் போடக்கூடாது னு ஸ்ட்ரிக்டா ஆ தாமஸ் சார் சொல்லி இருந்தார்...

அப்படியும் இந்த PA மட்டும் லீவ் எடுத்திட்டா... “ என்று அவள் மேல் இருந்த பகையை தீர்த்துக்க போட்டு கொடுத்தாள் ஜெசி....

“ஹ்ம்ம்ம்ம் ஒகே.. நானே பேசிக்கிறேன்...” என்றவன் அவளை அனுப்பி வைத்தான்...

பின் மீண்டும் ஏதோ  இன்னும் கொஞ்சம் விவரம் கேட்க ,  ஜெசி அவன் அறைக்கும் அவள் டெஸ்க்  க்கும் மாறி மாறி ஓடி கொண்டிருந்தாள்...

அவன் கேட்ட தகவலை கண்டு அவளே ஆச்சர்யபட்டு போனாள்.. ஒரே நாளில்  அந்த  அலுவலகத்தின் முழு நடைமுறையும் தெரிந்து கொண்டு  நிறைய குழறு படிகளையும் கண்டறிந்திருந்தான்...

அவனை மெச்சி கொண்டவள் ஒவ்வொரு  முறையும் அவன்  அறைக்கு செல்லும் பொழுதும் அவள் உள்ளே சில்லென்று சிலிர்த்தது....

அதனாலயே அவன் எத்தனை முறை அழைத்த பொழுதும் சலிக்காமல் முன்னால் போய் நின்றாள்....

ரு வழியாக மாலை 7 மணி அளவில் தனக்கு வேண்டிய  எல்லா தகவல்களையும் திரட்டியவன் அந்த  அலுவலகத்தில் கொண்டு வரும் மாற்றங்களையும்  மனதில் திட்டம் இட்டு அதை  டிக்டேட் பண்ண தன்னுடைய பெர்சனல் அசிஸ்டென்ட் ஐ தேட, அவள்  இல்லாததால் கடுப்பானான்....

“புது MD வரப்போறார் னு தெரிந்தும் லீவ் போட்டிருக்கா னா எவ்வளவு கேர்லெஸ் பெல்லோ... முதல்ல இந்த PA வை மாத்தணும்.. “  என்று  மனதுக்குள் திட்டி கொண்டவன் பின் தன் பிரீப்கேசை எடுத்து கொண்டு தன் அறையை விட்டு வெளியேறினான்....

சென்னை  டிராபிக் ல் நீந்தி அவன் வீட்டை அடைய இரவு மணி 9 ஆகி இருந்தது....டயர்டாக இருப்பதாக சொல்லி வெரும் பால் மட்டும் குடித்து விட்டு தன் அறைக்கு சென்றவன் இரவு உடைக்கு மாறி கட்டிலில் பொத்தென்று விழுந்தான்....

இன்று முழுவதும் இருந்த  வேலை பழுவில் அசதியில் படுத்த உடனே கண்களை  மூட

 ஹா ஹா ஹா.... என்ற பெண்ணின் சிரிப்பொலியும் அதை தொடர்ந்து “நந்தன் என் நாதன்... “ என்ற கொஞ்சலான குரலும் அவன் காதில் ரீங்காரமிட்டது...

திடுக்கிட்டு விழித்தவன் சுற்றிலும் பார்க்க யாரும் அங்கு இல்லை.... மீண்டும் கண்களை  மூட மீண்டும் அதே குரல் ஒலித்தது...

இது இன்று மட்டுமல்ல,, கடந்த ஒரு வாரமாகவே இதே குரலும் இதே சிரிப்பொலியும் கேட்டு கொண்டே இருக்கிறது..

அந்த குரலும் அந்த சிரிப்பும் அவன் இதயத்தை  மயிலிறகாக  வருட, அந்த  சுகத்திலயே கண் அயர்ந்தான் அபிநந்தன்...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!