என்னுயிர் கருவாச்சி-13


 


அத்தியாயம்-13

 

ன் அத்தை மகன் சந்தோஷ் மீது ஊத்துவதாக நினைத்து, ராசய்யா மீது மஞ்சதண்ணியை கொட்டிவிட, அதைக்கண்டு அதிர்ச்சியுடன் பேந்த விழித்தாள் பூங்கொடி...!

சொட்ட சொட்ட மஞ்சள் நீரில் நனைந்தவாறு நின்றிருந்த  ராசய்யாவும், அவள் தண்ணியை தன் மீது கொட்டி விட்டாளே என்று  கொஞ்சமும் கோபம் கொள்ளாமல், அவளைப் பார்த்து உல்லாசமாக ஈஈஈ என்று இளித்து வைத்தவன்  

“என்ன அத்த மவளே..!  இந்த மாமன் மீது இம்புட்டு ஆசையா?  ஒரு குடத்து தண்ணிய,  கடைசி தெரு வரைக்கும் தூக்கிட்டு வந்து ஊத்தியிருக்க.?  

அதுவும் வாய் நிறைய வரிசையா என்னை மாமானு வேற கூப்பிட்டுபுட்ட... இன்னைக்கு மழை கொட்டோ கொட்டுனு கொட்டப்போகுது...

என்ன இப்பவே பரிசம் போட வரவா? என்று அவளை மேலிருந்து கீழாக பார்வையால்  மேய்ந்தவாறு கோணலாக சிரிக்க,  அதற்குள் சமாளித்துக் கொண்ட பூங்கொடி, அவனை முறைத்து பார்த்தவள்,

“ம்க்கும்...நினப்புதான் பொழப்ப கெடுத்துச்சாம்... நான் ஒன்னும்  உன் மேல மஞ்சத்தண்ணிய ஊத்தல...”  என்று சிடுசிடுத்தாள் பூங்கொடி.  

“அப்ப வேற யாரு மேல ஊத்த வந்தியாம்?“ என்றான் இடுங்கிய கண்களுடன்.

“பட்டணத்தில இருந்து வந்திருக்கும்  என் அத்தை மவன் சந்தோஷ் மேல...”  என்றாள் அவளும் மிடுக்குடன். கூடவே என் அத்தை மவன் என்பதை அழுத்திச் சொன்னாள் பூங்கொடி.

“எந்த அத்தை? பக்கத்து ஊர்  பையன  இழுத்துக்கிட்டு போய் கண்ணாலம் கட்டிக்கிட்ட அந்த சொத்தையா? ஆமா இத்தனை நாளா வீட்டுக்குள்ள சேத்தாமத்தானே  இருந்தாரு உங்கப்பா...  

இப்ப எப்படி சேத்துக்கிட்டாரு?  என்று நக்கலாக கேட்க, அதைக்கேட்டு கோபம் பொங்கி வந்தது பூங்கொடிக்கு.

அதுவும் பக்கத்து ஊர்  பையன  இழுத்துக்கிட்டு போய் கண்ணாலம் கட்டிக்கிட்ட அத்தை என்ற ராசய்யாவின் அடைபொழியை கேட்டு கடுப்பானாள்.

கொஞ்சமாக நாகரிகம் வளர்ந்து வரும் அந்த கால கட்டத்திலயே காதலிப்பது தவறு...காதல் கல்யாணம் கூடாது என்று எதிர்ப்பு இருக்க, முப்பது வருடத்துக்கு முன்னரே வீட்டை எதிர்த்துக்கொண்டு, வீட்டிற்கு தெரியாமல் தான் காதலித்தவனுடன் ஓடிச்சென்ற சாந்தா அத்தையை நினைத்து அவ்வபொழுது ஆச்சர்யமாக இருக்கும்  பூங்கொடிக்கு.

அவ்வளவு தைர்யமா? இல்லை அந்த மாமா வை அத்தை அவ்வளவு லவ் பண்ணினாரா? அதுவும் பாசமாக வளர்த்த பொறந்த வீட்டை தூக்கி போட்டுவிட்டு காதலனுடன் சென்றுவிட்டார் என்றால் எப்படிபட்ட காதல் அவருடையது என்று ஆச்சர்யமாக இருக்கும் அவளுக்கு

அப்படிபட்டவரை ராசய்யா கேவலமாக சொல்லவும் கோபம் பொங்கி வந்தது இளையவளுக்கு.  

ணிகாசலத்தின் சித்தப்பா மகள்தான் சாந்தா...!  

அண்ணா அண்ணா வென்று அவர் மீது உயிரையே வைத்திருந்தவள்... தணிகாசலமும் அப்படித்தான்.

ஆனால் எல்லாம் இந்த காதல் வரும் வரைதான்.

பக்கத்து  ஊரை சேர்ந்த வெங்கட்,  திருவிழா பார்க்க பூங்கொடியின் ஊருக்கு வந்தவன், சாந்தாவை கண்டதும் அவள் மீது காதல் கொண்டு அவளையே சுற்றி சுற்றி வந்து அவள் மனதை கலைத்து எப்படியோ காதல் வலையில் விழ வைத்து விட்டான்.

விளைவுதன் வீட்டுக்கு தெரியாமல் ஒருநாள் வெங்கட் உடன் ஓடிப் போய் விட்டார். அதனால் அவள் குடும்பத்துக்கும், அவளுடைய அண்ணன் என்ற முறையில் தணிகாசலத்துக்குமே பெரிய தலை குனிவு ஆகிப்போனது.

அதிலிருந்து சாந்தாவை ஒதுக்கி வைத்து விட்டனர்.

இப்பொழுது எப்படியோ சமாதானம் ஆகிவிட, இந்த ஊர் திருவிழாவுக்கு தன் குடும்பத்தோடு வந்து இருந்தாள் சாந்தா...!

அவளுக்கு ஒரே மகன் சந்தோஷ்.

இஞ்சினியரிங் முடித்துவிட்டு ஒரு பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தில் கை நிறைய சம்பாதிக்கிறான்.

பூங்கொடியின் வீட்டுக்கு வந்ததுமே எல்லாருடனும் கலகலப்பாக பேசி சிரித்தான். அதுவும் பூங்கொடியிடம் கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துக்கொண்டு அவளை கலாய்ப்பதும், கிண்டல் கேலி செய்து காலை வாருவதுமாய் கலகலப்பாக இருந்தது பூங்கொடியின் வீடு.

அவன் தன்னை கலாய்ப்பதற்கு பழிவாங்க வேண்டும் என்றே அவன் மீது மஞ்சத்தண்ணியை ஊத்த வேண்டும் என்று  அவனை  துரத்திக்  கொண்டு வந்திருந்தாள் பூங்கொடி. 

தவறிப்போய் ராசய்யா மீது ஊத்திவிட, அதிலயே கடுப்பாகி இருந்தவள், இப்பொழுது ராசய்யா  தன் அத்தையை ஏளனமாக சொல்ல, அதில் இன்னுமாய் கடுப்பாகி கொதித்தவள்,

“அதெல்லாம் எங்க குடும்ப விஷயம்... நாங்க இன்னைக்கு அடிச்சுக்குவோம்... நாளைக்கு சேர்ந்துக்குவோம்... உனக்கென்ன வந்தது? “ என்று வெடுக்கென்று கேட்டு தன் கழுத்தை வெட்டினாள்.  

“ஹ்ம்ம்ம் எனக்கு ஒன்னும் இல்லதான்.  ஆமா... என்ன பண்றான் உன் திடீர் அருமை அயித்த மவன்..? என்றான் எரிச்சலுடன்.  

“மெட்ராஸ் ல பெரிய வேலையில் இருக்கிறார்...கை நிறைய சம்பளம்... சொந்தமா வீடு வாங்கி இருக்கார்...”  என்றாள்  பெருமையுடன் ஓரக்கண்ணில் ராசய்யாவை  பார்த்து அளவெடுத்தவாறு.

அவள் எதிர்பார்த்த மாதிரியே ராசய்யாவின் முகம் இஞ்சி தின்ன மங்கியைப் போல மாறிப்போனது. அதைக்கண்டு

“யெஸ்... இத... இத...இதத்தான் எதிர்பார்த்தேன்...

டேய் கருவாயா...! உன் வீக் பாய்ன்ட் இப்ப எனக்கு தெரிஞ்சிடுச்சு... உனக்கு சந்தோஷ் மீது பொறாமை.. நான் அவனை பற்றி பெருமையா சொல்றதே உனக்கு கசந்து வழியுதா? அப்ப நான் அவனோடு நெருக்கமா பழகினா உனக்கு எப்படி இருக்கும்...?  

இரு..இரு... உன்னை எப்படி படுத்தறேன் பாரு...” என்று உள்ளுக்குள் நக்கலாக சிரித்து ஒரு அவசர கால திட்டத்தை தீட்டிக்  கொண்டாள் பூங்கொடி.

பூங்கொடி சந்தோஷை பற்றி சொல்லியதும் ஏனோ ராசய்யாவுக்கு கடுப்பாக வந்தது.

“ஓகோ...  பணத்தைப் பார்த்ததும் பல்ல இளிச்சுக்கிட்டு அவன் மேல மஞ்ச தண்ணி ஊத்த வந்துட்டியாக்கும்..”  என்று பூங்கொடியை நக்கலாக பார்த்தான் ராசய்யா.  

அதைக் கேட்ட பூங்கொடிக்கு இன்னுமாய் கோபம் பொங்கி வந்தது.  

“ஆமா... அப்படித்தான் னு வச்சுக்க. நான் அவன பார்த்து பல்ல  இளிக்கிறேன்.. இல்ல அவன சைட் அடிக்கிறன்...உனக்கு என்ன? நீ  உன்  வேலையை பாத்துக்கிட்டு போ...”  என்று சுள்ளேன்று எரிந்து விழுந்தாள் பூங்கொடி.

“ஏய் கருவாச்சி....பட்டணத்து பசங்களை எல்லாம் நம்பக்கூடாது டி...அவன் முழியே சரியில்ல. நீ அவன் பக்கத்துல நிக்கிறப்ப அப்படியே  உன்னை முழுங்கிடறவனை  மாதிரி பார்த்து வைக்கிறான்...அவன் கிட்ட இருந்து நீ கொஞ்சம் தள்ளியே நில்லு...” எச்சரித்தான் ராசய்யா.

அவளின் நல்லதுக்குத்தான் சொன்னான் ராசய்யா... ஆனால் கோபத்தில் கொதித்து கொண்டிருந்தவளுக்கு அது புரியவில்லை.

ராசய்யாவை  எப்படியாவது மட்டம் தட்ட  வேண்டும்...அவன் சொல்றதுக்கு எதிர்மறையாக சொல்லி அவன் வாயை அடைக்க வேண்டும் என்று சிலிர்த்துக் கொண்டவள்,

“ஹலோ மிஸ்டர் நல்லவரே...அவர் என்னை சைட் அடிச்சா என்ன தப்பு?. கட்டிக்கிற முறைதானே...பார்த்துட்டு போகட்டும்... உனக்கு ஏன் எரியுதாம்? “ என்றாள் நக்கலாக.

என்னாது? அவனைப் போய் கட்டிக்க போறியா? “ என்றான் அதிர்ச்சியோடு.

ஏனோ... அந்த சந்தோஷ் ஐ பார்த்ததுமே பிடிக்கவில்லை ராசய்யாவுக்கு. அவன் பூங்கொடி வீட்டுக்கு சொந்தக்காரன் என்று தெரியும் முன்னே இன்று காலை கோவிலில் நின்று கொண்டு அங்கு வரும் பெண்களை எல்லாம் விரசமாய் பார்த்துக் கொண்டிருந்தான் சந்தோஷ்.

அதைக்கண்ட ராசய்யாவுக்கு கோபம் வர, நேராகவே அவனிடம் சென்று அவன் யாரென்று விசாரித்தவன் இப்படி எல்லாம் பொம்பள புள்ளைகளை பார்ப்பது தப்பு என்று ஜாடை மாடையாக எச்சரித்து வைத்திருந்தான்.

ஆனால் அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை.

அதுவும் பூங்கொடியிடம் கொஞ்சம் அதிகமாகவே உரிமை எடுத்துக்கொண்டது... அவளை தொட்டு பேசுவதிலும், ஒட்டி உரசி நிற்பதிலும் தெரிந்தது.

அதைக்கண்டு ராசய்யாவுக்கு எரிச்சலாக வர, பல்லை கடித்தவன் அதற்குமேல் அங்க நிக்க முடியாமல் பண்ணையார் வீட்டுக்கு சென்றுவிட்டான்

அவனைப் போய் பூங்கொடி கட்டிக்கிற முறை என்று சொல்லவும் அதிர்ச்சியாகி போனது. அவளை முறைத்தபடி

“அவனைப் போயா  கட்டிக்க போற? என்று மீண்டும்  கோபத்துடன் கேட்க,

“ஆமா...அவரை கட்டிக்கிட்டாதான் என்ன தப்பு..?   

எங்க அக்கா வீட்டுக்காரர்  மாதிரி நல்ல வேலையில் இருக்கிறார். சொந்தமா வீடு இருக்கு. இப்படி  ஒருத்தனத்தான்  கட்டிக்குவேன். பின்ன உன்ன மாதிரி  வெட்டிப்பயலவா  கட்டிக்குவேன்...”

என்று ராசய்யாவை ஏளனமாக பார்த்து அருவருப்பாய் முகத்தை சுளிக்க, அதைக்கண்டு ராசய்யாவுக்கு கோபம் பொங்கி வந்தது.

அவள் தன்னை இளக்காரமாக சொன்னதைக் கூட பொறுத்துக்கொண்டவன், அந்த சந்தோஷ் ஐ உயர்த்தி சொன்னது தான் பிடிக்கவில்லை. கோபம் பொங்கி வர,

“ஏய்...யாரை பாத்து  வெட்டிப்பய ன்ற? என்று முறைத்தான் ராசய்யா.  

“இதோ...ஆறடி உயரத்துல, வாட்ட சாட்டமா, செஞ்சு வச்ச கருப்பண்ண சாமி மாதிரி நிக்கறியே...உன்னத்தான்... எரும மாடு மாதிரி வளர்ந்து நிக்கறியே... உனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?

படிப்புதான் இல்ல. அட்லீஸ்ட் உழைச்சு சம்பாரிச்சு சேர்த்து வச்ச துட்டை எல்லாம் போட்டு இந்த வீணாப்போன புல்லட் ஐ வாங்கி ஓட்டுவதற்கு பதிலா, அதை ஏதாவது ஒன்னுல  முதலீடு செய்து,  மேல சம்பாதிச்சு இருக்கலாம் இல்ல.

அதுக்கு  துப்பு இல்ல. வெட்டிப்பயனு சொன்னா மட்டும் கோபம் பொத்துகிட்டு வருது...!

எப்ப பாரு... ரௌடி  மாதிரி நாலு பேர அடிச்சுகிட்டு,  ரௌடித்தனம் பண்ணிக்கிட்டு இருக்க.  பத்தாதற்கு குடி வேற...”  என்று படபடவென்று பொரிந்து தள்ளினாள் பூங்கொடி.

அதுவரை அவள் உள்ளே எரிந்து கொண்டிருந்த ராசய்யா மீதான அதிருப்தியை  எல்லாம் இன்று சந்தர்ப்பம் கிடைக்கவும் வார்த்தையால் கொட்டி தீர்த்து விட்டாள் பூங்கொடி.

அதைக்கேட்டு ராசய்யா இன்னுமாய் கோபம் தலைக்கேற, பல்லை கடித்தவன் ,தன் கை முஷ்டியை இறுக்கி,  ஏய் என்று அவள் கன்னத்தை நோக்கி கையை ஓங்கி இருந்தான்  

அப்பொழுதுதான் அவள் செய்த தவறு  மண்டையில் உறைத்தது பூங்கொடிக்கு.

“ஐயயோ... இவன் எப்படி போனால் எனக்கென்ன?  நான் ஏன் இவனை திட்டி  தொலைய வேண்டும்? இப்படி  இவனை கோபப்படுத்த வேண்டும்? உனக்கு அறிவே இல்ல பூவு...”  என்று தன்னைத்தானே திட்டிக் கொண்டவள்,  அவன் அடிக்க வரவும், தன் கண்களை இறுக்க மூடிக் கொண்டாள்.

அவளின் அச்சம் நிறைந்த முகத்தை கண்டதும்,  ஓங்கிய கை அவள் கன்னத்தை தொடும் முன்னே, சுதாரித்து  அப்படியே நிறுத்திக் கொண்டான் ராசய்யா.  

ஆனாலும் அவன் கோபம் குறையாமல் இருக்க, ஓங்கிய கையை,  தன் கை முஷ்டியை இறுக்கியவன் பக்கத்தில் இருந்த குட்டிசுவற்றில் ஓங்கி குத்த, அவன் அடிக்கு தாங்காமல்  அந்த சுவர்  இடிந்து பொலபொலவென்று  விழுந்தது.  

அதைக் கண்டு அதிர்ந்து போனவள், அவனை எரிக்கும் பார்வை பார்த்துவிட்டு கிழ இருந்த தன்  குடத்தை எடுத்துக்கொண்டு தன் வீட்டை நோக்கி நடக்க, அதற்குள்  தன் கோபத்தை தணித்து கொண்டவன்

“ஏய்... பூவு.. நில்லு...” என்று எட்டி அவள் கையை பிடித்து நிறுத்த முயன்றான் ராசய்யா...

அவளுக்கு அந்த சந்தோஷ் ஐ பற்றி சொல்லி மீண்டும் ஒரு முறை எச்சரிக்கலாம் என்று அவளை பிடித்து நிறுத்த முயல, ஏற்கனவே அவன் மீது கோபத்தில் இருந்தவள், இப்பொழுது தன் கையை வேறு அவன் பிடித்துவிட, இன்னுமாய் கோபம் கொண்டவள், அடுத்த கணம் தன்னை மறந்து அனிச்சையாய் அவளின் மற்றோரு கரம் உயர்ந்து அவன் கன்னத்தில் இறங்கி இருந்தது.

“கையை விடுடா பொறுக்கி ராஸ்கல்.... “ என்று உருமியவள்,  ஓங்கி அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள்  பூங்கொடி.

அதைக் கண்டு அப்படியே சிலைபோல அதிர்ந்து போய் நின்று விட்டான் ராசய்யா…!    


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!