நிலவே என்னிடம் நெருங்காதே-36




 அத்தியாயம்-36

ன் அறைக்கு எரிச்சலுடன் திரும்பியிருந்த அதிரதன் படுக்கையில் படுத்துக் கொண்டு தலைக்கு அடியில் கையை மடித்து வைத்துக் கொண்டு மேலே விட்டத்தைப் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்தான்..

அவன் சிந்தனை எல்லாம் அந்த ஜமீன்தார் சற்றுமுன் சொல்லிய திட்டத்தையே அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது..

ஒருவேளை இதில் தனக்கு எதிராக சதி எதுவும் இருக்குமோ என்று பல கோணங்களில் ஆராய்ந்தான்..

அதனை தெளிவு படுத்திக் கொள்ள தன் அலைபேசியை எடுத்து அதில் இருந்த அவர்களுடைய பிசினஸ் வாடிக்கையாளர் புரஃபைலை திறந்து அதில் தாத்தா சொன்ன அந்த அமெரிக்கா டேவிட் உடனான கம்யூனிகேஷன் களை அவசரமாக பார்வையிட்டான்..  

அதில் ஐந்து மாதம் முன்பாகவே அவன் தாத்தா இந்த பயணத்தை பற்றி குறித்து வைத்திருந்தார்.. இந்தியா வரவேண்டும் என்ற டேவிட்டின் விண்ணப்பம் வந்திருந்த மின்னஞ்சலை அதில் வைத்திருந்தார்..

அதை  திறந்து பார்த்தவன்

“அப்படி என்றால் இந்தப் பயணம் அவர் முன்பே திட்டமிட்டது.. என் திருமணம் மூன்று  வாரங்கள் முன்புதான்  திட்டமிட்டார்..  அப்படி என்றால் அந்த அமெரிக்கா கப்புல் இங்கு வருவதற்கு தாத்தா எதுவும் சதி செய்திருக்கவில்லை.. “  என்று தன்னைத் தானே  தேற்றிக் கொண்டான் ..

ஆனால் யானைக்கும் அடி சறுக்கும் என்பதை போல தான் அதிபுத்திசாலி தனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று எண்ணி கொண்டிருந்தவன் ஒன்றை கவனிக்க தவறி  இருந்தான்..

அதை கவனித்து இருந்தால் பின்னால் அவனுக்கு வந்திருக்கும் சில பல சிக்கல்களை தவிர்த்திருக்கலாம்.. ஆனால் என்ன செய்ய? இது அந்த ஜமீன்தார் என்ற  சாணக்கியர்  ஆடும் ஆட்டம் ஆச்சே... தன்னுடைய மூவ் பற்றி எதிரிக்கு தெரிய விடுவாரா என்ன?

ந்த அதிகாலை பொழுது,  கதிரவன் எழுந்து கொள்ள மனமில்லாதவனாய் இன்னும் போர்வைக்குள் சுருண்டு கொண்டிருக்க ஆடி கார் ஒன்று அந்த ஜமீனின் முன்பு வழுக்கி கொண்டு வந்து நின்றது...

உள்ளே இருந்து அனைவரும் ஆவலுடன் வாசலுக்கு விரைய, ஓட்டுநர் இருக்கையில் இருந்து அதிரதன் இறங்கி காரை சுற்றிக் கொண்டு பின்னால் வந்து கதவை திறந்து விட அதனுள்ளே இருந்து ஒரு வெள்ளைக்கார தம்பதியினர் கீழிறங்கினார்..

பெரிய அரண்மணை போல இருந்த அந்த ஜமீன் மாளிகையை ஆவலுடன் பார்த்தனர் இருவரும்...

தலைமுடி கூட வெள்ளையாய்,  வெள்ளை வெளேரென்று ஒருவரை ஒருவர் நெருங்கி நின்று கொண்டு ஒருவர் கைக்குள் மற்றொருவர் கையை விட்டு கொண்டு அந்த ஜமீனை ஆவலுடன் பார்த்து கொண்டிருந்தவர்களையே ஆவலுடன் பார்த்தனர் மற்றவர்கள்...

இதுவரை தன் அண்ணன் தான் இந்த உலகத்திலயே உயரமானவன் என்று எண்ணி கொண்டிருந்த யாழி குட்டி அங்கு நின்றிருந்த அந்த வெள்ளைக்கார இளைஞனின் ஆறரை அடிக்கும் மேலான உயரத்தை கண்டு வியந்து போனாள்..

கூடவே அவன் அருகில் குட்டை கவுன் அணிந்து அதன் கழுத்து பகுதி  முன்புறம் நன்றாக கீழறங்கி பார்ப்பவர்களை ஒரு வித ஆவலுடன் திரும்பி பார்க்கும் விதத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக உடை அணிந்திருந்த அந்த வெளிநாட்டு யுவதியை இன்னும் ஆர்வத்துடன் பார்த்து கொண்டிருந்தாள் யாழி.. 

அவர்கள் கீழிறங்கி நின்றதும் நிலவினி  அங்கு தயாராக வைத்திருந்த ஆரத்தி தட்டை எடுத்து சென்று அவர்கள் இருவரையும் ஒன்றாக நிக்க வைத்து ஆரத்தி எடுத்து அவர்களுக்கு பொட்டு வைத்து அவர்களை பார்த்து நட்பாக புன்னகைத்தவள் அதை கொட்டுவதற்காக நகர்ந்து இருக்க, அதிரதன் அவர்கள் அருகே வந்து

“வெல்கம் டு அவர் ஜமீன் மிஸ்டர் ஸ்டீபன் அன்ட் நடால்யா.. “ என்று இடைவரை குனிந்து அவர்களை வரவேற்க, அந்த ஸ்டீபன் ம் சிரித்து கொண்டே

“தேங்க்யூ சோ மச் அதி... “  என்று அவனை கட்டி அணைத்து கொண்டான் அந்த ஸ்டீபன்..  அவனை அடுத்து நின்று கொண்டு இருந்த அந்த குட்டை கவுனும்   

“நைஸ் டூ மீட் யூ அதி டார்லிங்... “  என்று புன்னகையுடன் அதிரதனை கட்டி அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்...

ஆரத்தியை கொட்டி விட்டு திரும்பிய நிலாவின் கண்ணில் இந்த காட்சி பட்டது..

ஏனோ அவளுக்கு உள்ளுக்குள் எரிச்சலாக இருந்தது.. ஒரு நொடி முகம் கருத்து விட முகம் சுருங்கி போனது.. அதேநேரம் அதிரதன் பார்வை எதேச்சையாக நிலாவிடம் வர, அவளின் பௌர்ணமி போன்ற ஜொலித்த முகத்தில் திடீர் அமாவாசையாய் ஒரு நொடி வந்து போன அந்த இருளை , முக சுருக்கத்தை கண்டு கொண்டான்.. .

அவளின் நொடிப்பொழுது முகமாற்றத்தை கண்டு கொண்டவனுக்கு  உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது...

அப்பொழுது தேவநாதன் முன்வந்து அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு அவர்களை வரவேற்க அந்த தம்பதியினர் இருவரும்  அவர்கள் பாணியில் அவரையும் கட்டியணைத்து முத்தமிட்டனர்..  

பின் நெடுமாறன் மற்றும் மனோகரி முன்வந்து அவர்களை அறிமுகப்படுத்த அவர்களிடம் ஏதோ ஆங்கிலத்தில் கேட்க மனோகரி கல்லூரிக்கு  சென்று  பயின்றவர் என்பதால் அவர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் பதிலளித்தார்..

அதே நேரம் நிலாவும் அங்கு வந்து நிக்க, தேவநாதன் நிலாவையும் அறிமுகப்படுத்தினார்..

முதலாவதாக நின்றிருந்த நடால்யா நிலாவை கட்டியணைத்து முத்தமிட அவளுக்கோ வெட்கமாக கூச்சமாகவும் இருக்க நெளிந்து கொண்டே புன்னகைத்தவாறு விலகி கொண்டாள்.

அடுத்து ஸ்டீபனும் ஹாய் என சொல்லி அவளை கட்டி அணைக்க வர அடுத்த நொடி திடுக்கிட்டு அதிர்ந்து போய் அவசரமாக ஒரு அடி பின்னால் வைத்து நகர்ந்து கொண்டவள் இருகரம் குவித்து வணக்கம் என்றாள்..

அதை கண்டு அதிரதனுக்கு சிரிப்பு பொங்கிக் கொண்டு வந்தது... ஓரக்கண்ணால் அவன் சிரிப்பை கண்டவள்  யாருமறியாமல் அவனை முறைத்து வைத்தாள்..

அந்த இளைஞனும் நிலாவின் தயக்கத்தை புரிந்து கொண்டவன்

“ஐம் சாரி சிஸ்டர்... ஐ பர்காட் யுவர் வே ஆப் வெல்கமிங்.. “ என்று சிரிக்க அதிரதனுக்கு  அப்பொழுதுதான் உறைத்தது..

“இவளுக்கு ஆங்கிலம் தெரியுமா?  இந்த ஸ்டீபன் பேசுவதெல்லாம் அவளுக்கு புரியுமா?  இவ  ஏதோ ஒரு பட்டிக்காட்டிலிருந்து வந்தவள்  என்றுதானே தாத்தா சொன்னார்..

அப்படி என்றால் கண்டிப்பாக ஏபிசிடி மட்டும்தான் படித்திருப்பாள்..  பார்க்கலாம்.  இந்த கபுல் இடம் எப்படி மொக்க வாங்கப் போகிறாள்.. “  என்று எண்ணி சிரித்து கொண்டவன் அவளையே ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தான்...

ஸ்டீபன் பேசியதற்கு அவளும் கொஞ்சம் தயங்க அதை கண்டு அதிரதன் துள்ளி கொதித்தான்...அடுத்த நொடி

“இட்ஸ் ஓகே ப்ரோ.. வெல்கம் டு அவர் ஜமீன்.. தாத்தா சொன்னார்கள் நீங்க எங்கள் கலாச்சாரத்தை விரும்புவதாகவும் இங்கு இருக்கும் பொழுது அதை பின்பற்றுவதாகவும்...

அதற்கு ஆரம்பம்தான் இந்த பயிற்சி...உங்களுக்கு எங்கள் கலாச்சாரத்தை கற்று கொடுக்க ஆரம்பமாகத்தான் நான் விலகி நின்றேன்..

எங்களுடைய கலாச்சாரத்தில் ஒரு பெண்ணை அவள்  கணவனைத் தவிர மற்றவர்கள் யாரும் இந்த மாதிரி கட்டி அணைப்பதில்லை அது நட்பு ரீதியாகவே என்றாலும்..  

கை குவித்து வணக்கம் சொல்வோம்.. இப்பொழுது சற்று முன்னேறி கை குலுக்கும் பழக்கமும் எங்கள் கலாச்சாரத்தில் சேர்ந்துவிட்டது.. ஆனால் இந்த கட்டியணைப்பது மட்டும் இன்னும் வரவில்லை..

ஒரு சிலர் அலுவலகம் நிமித்தமாக அப்படி நடந்து கொண்டாலும் இன்றுமே இதை நாங்கள் தவிர்த்துதான் வருகிறோம்... அதைத்தான் நீங்கள் முதலில் பின்பற்ற வேண்டும்..

ஆண்கள் மட்டுமன்றி பெண்களும் திருமணமான ஒரு ஆணை கட்டி அணைக்க கூடாது.. “ என அந்த யுவதிக்கும் ஒரு குட்டு வைத்து  அழகாக ஆங்கிலத்தில் எந்த ஒரு தடையும் இல்லாமல் கோர்வையாக பேச அதை கேட்டு அதிரனுக்கோ மயக்கம் வந்தது..

“பட்டிக்காட்டிலிருந்து வந்தவளுக்கு எப்படி இவ்வளவு நன்றாக பேசுகிறாள் ? “ என ஆச்சர்யமாக இருந்தது..   

அதே நேரம் அந்த ஸ்டீபன் அவளை அணைக்க வந்ததற்கு அவள் அதிர்ந்து பின்வாங்கி நின்றதைக் கூட அவள் ஒத்துக்கொள்ளாமல் அவர்களுக்கு கலாச்சாரத்தை பற்றி சொல்லிக் கொடுப்பதாக  மாற்றி விட்டாளே..!  கெட்டிக்காரி தான்.. !! “  என்று உள்ளுக்குள் மெச்சிக் கொண்டான்...

அந்த தம்பதிகள் இருவரும் அவள் சொன்னதை புரிந்து கொண்டதன் ஆர்த்தமாக

“தேங்க்யூ மிஸஸ்.... “  என்றும் அவள் பெயரை எப்படி சொல்வது என்று புரியாமல் யோசிக்க அவளே நிலவினி அதிரதன் என்று தன் கணவனை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கண் சிமிட்டி சொன்னாள்.. 

அவள் கணவனாக தன் பெயரையும் சேர்த்து சொல்லியவளை ஒரு எரிக்கும் பார்வை பார்த்தான்.. அவளோ மீண்டும்  குறும்பாக கண் சிமிட்டி சிரிக்க, அந்த தம்பதியர்க்கு நிலவினி என்ற பெயர் வாயில் வராமல்  தடுமாற நில்லா..? என்க, அதை கேட்டு  அனைவரும் சிரிக்க, அவர்களும் தர்ம சங்கடமாய் நெளிந்தவர்கள்

“ஓ சாரி....இந்த பெயரை சொல்ல வரவில்லை.. வாட் டஸ் தட் மீன்? " என்று அவள் பெயரின் அர்த்தத்தை கேட்க அவர்களையே இதுவரை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்த யாழி முந்தி கொண்டு மூன் என்றாள் வானத்தை கை காட்டி..

“ஓ மூன்?  தட்ஸ் நைஸ் நேம்.. தென் ஐ வில் கால் யூ அஸ் மூன்.. இஸ் தட் ஒகே சிஸ்? " என்றான் பாவமாக.

அவளும் தலை அசைத்து இட்ஸ் ஒகே என்று சம்மதிக்க, அவர்களும் சிரித்தவாறு ஜமீன் உள்ளே வந்தனர்...

வேலையாட்கள் காரிலிருந்து எடுத்து வந்த அவர்கள் பொருட்களை அவர்களுக்கு என்று ஒதுங்கியிருந்த அறையில் கொண்டு சென்று வைத்தனர்..

ஜமீன் உள்ளே வந்த இருவரும் வரவேற்பறையை பார்த்ததும் அதிசயித்தனர்..

பெரிய விளையாட்டு மைதானத்தை  போல விஸ்தாரமாக இருந்தது அந்த வரவேற்பறை.. ஜமீன் மாளிகைக்கே உரித்தான கம்பீரத்திலும் அழகிலும் கலை நயத்துடணும் மிளிர்ந்தது அந்த மாளிகை..

வரவேற்பு பகுதியில் ஆங்காங்கே ஜமீன் பாரம்பரிய அலங்கார விளக்குகள் தொங்கிக் கொண்டிருக்க தமிழர்களின் பழங்காலத்தின் கலை பொருட்களும் கைவினை அலங்கார பொருட்கள் ஆங்காங்கே வீற்றிருக்க அதை எல்லாம் ஆர்வமாக சுற்றி பார்த்தனர்...

வரவேற்பறையில் இருந்து மாடிக்கு செல்ல இரண்டு புறமாக படிகள் அமைக்கபட்டு அதன் சுவற்றில் அந்த ஜமீனின் மூதாதையர்கள் புகைப்படங்கள் அழகாக வீற்றிருந்தன...

மாடியில் நடுநாயகமாக தேவநாதன் தந்தை பூமிநாதன் மிடுக்குடன் புன்னகைக்க, அந்த புகைப்படத்தை  பார்க்கையிலயே உயிர்ப்புடனும் அவரே நேரில் நின்று புன்னகைப்பதை போல மனதை கவர்ந்தது...

அதையெல்லாம் பார்க்கும்பொழுதே அந்த ஜமீனின் பெருமையும் அதன் வழிவந்தவர்கள் இன்றைய தலைமுறையினர் நாங்கள் என பெருமையும் கர்வமும் தானாக அந்த ஜமீனின் வாரிசுகளுக்கு தோன்றிவிடும்... 

அந்த புகைப்படங்களை பார்த்து ரசித்தவாறு மாடியில் ஏறி கொண்டிருந்தவர்கள் அந்த மாடிப் படிகள் கூட தேக்கில் செய்திருக்க, அதன் மீதும் பலவகையான சித்திரங்கள் இருக்க, எல்லாமே கலை நயம் மிக்கதாக அழகுடன் மிளிர, அதை அனைத்தையும் ஆர்வத்துடன் ரசித்து பார்த்தனர் அந்த தம்பதியினர்..

அதிரதன் அவர்களை அழைத்துச் சென்று அந்த ஜமீனை சுத்திக் காட்டினான்..ஒவ்வொரு அறையையும் பெரிய அளவில் அலங்காரத்துடன் மிளிர்ந்தது..

இரண்டு அடுக்காக இருந்த அந்த மாளிகையை முழுவதும் அவர்களுக்கு சுற்றி காட்ட, அவர்களும் ஆர்வத்துடன் ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டனர்..

பின் அந்த தம்பதியர் இருவரும் தங்கள் அறைக்கு சென்று ரெப்ரெஸ் ஆகி வந்தவர்கள் காலை உணவுக்கு டைனிங் டேபிளுக்கு வர அங்கு சுடச்சுட நம் பாரம்பரிய உணவான இட்லி இருந்தது...

அவர்களுக்கு  தகுந்த மாதிரி காரம் கம்மியாக பலவிதமான சட்னிகளை செய்ய வைத்திருந்தாள் நிலா..

அதை கண்டு முகத்தை சுளித்தான் அதிரதன்.. அவள் அருகில் வந்தவன்

“ஏய்... பட்டிக்காடு... உன்ன மாதிரியே பட்டிக்காட்டிலிருந்து வந்தவங்கனு நினைச்சுகிட்டு அமெரிக்காவில் இருந்து வந்தவர்களுக்கு இட்லியை அவித்து வைத்திருக்க...

இதுதான் அவர்கள் சாப்பிடும் உணவா? அவர்களுக்கு தகுந்த மாதிரி சான்ட்விட்ச், இல்லை ப்ரெட் ல டிப்ரன்ட் ஆ ஏதாவது பண்ணி இருக்கலாம் இல்ல..

உன் அருமை தாத்தா  என்னமோ அவர்கள் சாப்பிடும் பழக்கவழக்கம் எல்லாம் உணக்கு தெரியும்.. அது மாதிரி செய்து கலக்குவ னு பீத்திகிட்டார்..

நீ என்னடான்னா உன் வீட்ல சாப்பிடறதையே இவர்களுக்கும் செஞ்சு வச்சிருக்க? பாவம் இதை சாப்பிட்டு எப்படி முழிக்க போகிறார்களோ? அடுத்த ப்ளைட் புடிச்சு அமெரிக்காவுக்கே ஓடினாலும் ஓடிடுவாங்க... “ என்று திட்ட ஆரம்பித்து பின் நக்கலாக முறைத்தான்..

அவளும் அவனை முறைத்தவள்

“ஜமீன்தாரே.... இதுதான் அவசர குடுக்கை னு சொல்றது.. அவர்களுக்கு பிடிக்குதா இல்லையா, ப்ளைட் புடிச்சு ஓடப் போறாங்களா இல்லை என் கை வண்ணத்தில் மயங்கி இன்னும் ஒரு வாரம் ப்ளைட் டிக்கெட் ஐ போஸ்ட்போர்ன் பண்ணுகிறார்களா? என்று பொறுத்திருந்து பாருங்க...

வெய்ட் அன்ட் சீ... “ என்று அவளும் நக்கலாக சிரித்தவள் அவர்கள் அருகில் சென்று ஜமீன் பாரம்பரியத்திலான விருந்தினர்களுக்கான தட்டை எடுத்து வைத்து இட்லியை பரிமாறினாள்..

கூடவே அதன் பெருமைகளை பட்டியலிட்டாள்..

அகில உலகில் இட்லியை மிக சிறந்த காலை உணவாக அங்கீகரித்ததையும் எந்த விதமான நோயாளிகளுக்கு இட்லியே முதல் ஆகாரம் என்று இட்லியின் அருமை பெருமைகளை  இன்னும் விளக்கி சொல்ல, அவள் விளக்கி சொன்னதிலயே ஆர்வமான ஸ்டீபன் புன்னகைத்து

“எங்களுக்கும் தெரியும் மூன்... நாங்களும் இதை இந்திய உணவகத்தில் சாப்பிட்டு இருக்கிறோம்... எங்கள் பகுதியிலும் நாங்களும் அடிக்கடி இந்திய உணவகத்திற்கு செல்வது உண்டு..

ஓரளவுக்கு எல்லா இன்டியன் டிஸஸ் ம் டேஸ்ட் பண்ணி இருக்கிறோம்..ஐ லைக் இன்டியன் புட் எஸ்பெஷலி திச் ரைஸ் கேக்.. “ என்று ஆங்கிலத்தில் சொல்லி சிரித்தவன் அவர்கள் பாணியில் ஸ்பூனால் எடுக்காமல் கையால் அதை பிட்டு வாயில் வைத்தான்..

அந்த இட்லியும் மென்மையாக இருக்க,  அதற்கு பொருத்தமாக காரம் குறைந்து இருந்த பல வகையான சட்னியையும் டேஸ்ட் பார்த்த அந்த தம்பதியினர் இருவருமே

“வாவ்... திஸ் இஸ் டெலிசியஸ்.. சோ சாப்ட் அன்ட் டேஸ்டி.. “ என்று ரசித்து சாப்பிட, அதிரதனோ மானசீகமாக தலையில் அடித்து கொண்டான்..

“நம்ம ஊரில் இன்றைய தலைமுறையினர் இட்லி என்றால் அலறி ஓட, அதற்கு பதிலாக பீட்ஸா, ஓட்ஸ்,  சான்ட்விச், பான் கேக் என்று வெளிநாட்டு முறைக்கு மாறி கொண்டிருக்க அவர்களோ நம்ம உணவை ரசித்து பாராட்டுகிறார்களே..! “  என்று இருந்தது...

அவர்கள் ஆர்வத்துடன் சாப்பிடுவதை கண்ட நிலா அதிரதனை நேராக பார்த்து

“எப்பூடி ? “  என்று புருவத்தை உயர்த்தி பார்வையால் நக்கலாக பார்த்து சிரித்தாள்..

அவனும் திருப்பி முறைத்தவன் முகத்தை திருப்பி கொண்டான்..

இட்லியை ஒரு பிடி பிடித்தவர்கள் இட்லியுடன் கூடவே எண்ணெய் இழுக்காத மெதுவடை சேர்ந்து கொள்ளவும்  அதையும் ருசித்து சாப்பிட்டவர்கள் அதுவும் ரொம்பவே பிடித்துவிட்டது என்று அவர்கள் அதை பாராட்டி சொல்ல இப்பொழுது தேவநாதன் பார்வை பெருமையாக  அதிரதனிடம் சென்றது..

அவரின் பார்வையை எதிர் கொண்டவன்

“ஏற்கனவே அவளுக்கு பெருமை தாங்கல.. இந்த தாத்தா வேற என்னை நக்கலாக பார்க்கறார்.. அவளுக்கு இன்னும் கிரீடம் வச்ச மாதிரி ஆகிபோகும்... இதை எப்படி நிறுத்துவது? “ என்று அவசரமாக யோசித்தவன் தன் தாத்தாவின் பார்வைக்கு மீண்டும் ஒரு முறைப்பை பதிலாக்கியவன்  முகத்தை நொடித்து தலையை திருப்பிக் கொண்டான்..

சாப்பிட்டு முடித்ததும் அவர்களை ஓய்வெடுக்கச் சொல்லி அவர்கள் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு  மதிய சமையலை ஆரம்பித்தாள் நிலவினி..  

செட்டிநாடு முறையில் மதிய உணவு தயாரான பிறகு மீண்டும் ஒருமுறை திருப்தியுடன் எல்லாம் சரி பார்த்தவள் தன் அறைக்கு திரும்பி வந்திருந்தாள்..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!