நிலவே என்னிடம் நெருங்காதே-38


 

அத்தியாயம்-38

கோயம்புத்தூர் மருதமலை முருகன் கோயில்:   

ந்நிதானத்திற்கு முன்னால் இருந்த மண்டபத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது அக்னி..

அதன் பக்கவாட்டில்  அமர்ந்து இருந்த ஐயர் திருமணத்திற்கான மந்திரத்தை சொல்லி கொண்டிருந்தார்.. அந்த அக்னியை பார்த்தவண்ணம் அமர்ந்து இருந்த மணமக்கள் அந்த ஐயர் சொல்லும் மந்திரத்தை ஒரு வித ஆர்வத்துடன் கவனித்து கொண்டிருந்தனர்..

அவர் செய்ய சொல்லி சைகை செய்த சில முறைகளை அவர்களும் செய்து கொண்டிருந்தனர்...

வழக்கமாக கோயிலில் திருமணம் என்றாலே திருமணத்திற்கு வருபவர்கள் மட்டும் அல்லாது அந்த கோயிலுக்கு வழிபாட்டுக்கு என வந்திருக்கும் பக்தர்களும் அந்த திருமணத்திற்கு அழைக்காமலயே வந்திருந்து ஆர்வமாய் நின்று மணமக்களை கண்டு ரசித்து விட்டு கூடவே அந்த திருமணத்தையும் பார்த்து செல்வர்...  

இன்றும் அப்படித்தான்.. அங்கு திருமணம் நடப்பதை அறிந்து  மணப்பெண்ணை பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த திருமணத்தை பார்க்க வந்த அனைவருக்கும் ஒரு பெரிய ஆச்சர்யம் காத்திருந்தது...

அங்கு அமர்ந்து இருந்த மண்மக்களை பார்த்ததும் ஆச்சர்யத்தில் வாயை பிளந்தனர்..

அப்படி ஆச்சர்யபடும் வகையில் அந்த திருமணத்தில் என்ன வித்தியாசம் என்று நாமளும் தான்  பார்க்கலாமே..!   

சுற்றி நின்ற கும்பலை விலக்கி விட்டு உள்ளே பார்வையை செலுத்தினால் என்ன ஆச்சர்யம். !

அங்கு மணமக்கள் கோலத்தில் அமர்ந்து ஆர்வத்துடன் அங்கு நடப்பதை கவனித்து கொண்டிருந்தது நம்ம வெள்ளைக்கார நெட்டை கொக்கு ஸ்டீபன் மற்றும்  குட்டை கவுன் லியா..!

ஸ்டீபன் பட்டு வேஷ்டி சட்டை அணிந்து பார்ப்பதற்கு நம்ம தமிழ் பையனை போலவே மாறி இருந்தான்.. என்ன கலர்தான் நம்ம ஊர் கலருக்கு செட் ஆகவில்லை.. ஆனால் நம் வேஷ்டி சட்டை அணிந்ததும் அப்படி ஒரு மாப்பிள்ளை களை அவனிடத்தில்..

கூடவே அந்த பின்ச் நிற வெட்கமும் அவனுக்கு இன்னும் அழகாய் அமைந்து இருந்தது..  

அவனுக்கு கொஞ்சமும் சளைக்காமல் அருகில் அவனை ஒட்டி அமர்ந்து இருந்த மணமகள் லியாவும் பெரிய ஜரிகை வைத்த காஞ்சிபுரம் பட்டு புடவையும் அதற்கு பொருத்தமான ஜமீன் பாரம்பரிய வைர நகைகளும் காதிலும் கூட நீண்டு தொங்கும் பெரிய கம்மல் என நம்ம ஊர் தமிழ் பொண்ணாக மாறி இருந்தாள்..

இவள்தான் நேற்று ஒரு குட்டை கவுனும் கழுத்து கீழிறங்கிய டாப்ஸ் ம் கண்ணுக்கு குளிர்கண்ணாடியும்  அணிந்து ஜமீன் முன்னால் ஸ்டைலாக வந்து இறங்கிய மாடர்ன் வெள்ளைக்கார அழகி என்று  சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்..

அந்த அளவுக்கு உடையும்  தோற்றம் முற்றிலும் மாறி இருந்தது.. உடை மட்டுமா? நடையும் பாவனையும் கூட மாறிவிட்டிருந்தது..

நமது பாரம்பரிய பட்டு  புடவையை நேர்த்தியாக கட்டவும் அந்த புடவைக்கே உரித்தான   வெட்கமும் அழையா விருந்தாளியாக ஓடி வந்து  ஒட்டிக்கொண்டது அந்த வெள்ளைக்கார யுவதியிடமும்...

இருவரும் ஒருவித சிலிர்ப்புடன் முகத்தில் சிறு வெட்கத்துடன் புன்னகைத்தவாறு அந்த  ஐயர் செய்வதை பார்த்துக் கொண்டிருந்தனர்..

அவர்களுக்கு இணையாக பட்டு வேஷ்டி சட்டையில் ஸ்டீபன் அருகில்  கம்பீரமாக அமர்ந்திருந்த அதிரதன் அந்த ஐயர் சமஸ்கிருதத்தில் சொல்லிக் கொண்டிருக்கும் மந்திரத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தான்..  

அவர்களும் அதிரதன் சொல்வதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..  அவன் மொழி பெயர்ப்பதற்கு வசதியாக அந்த ஐயரும் மந்திரத்தை வழக்கம் போல  அவசர அவசரமாக சொல்லாமல்  நிதானமாக சொல்லிக் கொண்டிருந்தார்...

அதிரதன்  சமஸ்கிருதம் பயின்றிருந்ததால் அவர் சொல்லும் மந்திரங்களை அழகாக மொழி பெயர்த்து சொல்லி கொண்டிருந்தான்.. அதை கவனத்துடன் கேட்டு கொட்டிருந்த அந்த தம்பதியினருக்கு பெரிய ஆச்சரியம் !

அந்த மந்திரத்தில்  சொல்லியிருக்கும் செய்திகள் கிட்டத்தட்ட உறுதிமொழி போன்றது..

வழக்கமாக அவர்கள் முறையில் சர்ச் ல்  திருமணம் நடைபெறும் பொழுது  மணமக்கள் இருவரையும் முன்னால் நிறுத்தி அந்த திருமணத்தை நடத்தி நடத்தி வைப்பவர் இருவரிடமும் வாக்குறுதியை உறுதிமொழியை  வாங்கிக் கொண்டு இருவரையும் கையெழுத்திட வைத்து மோதிரம் மாற்றிக்க வைத்து ஒரு அரை மணி நேரத்தில்  திருமணம் முடிந்திருக்கும்..

ஆனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக அவர்களை கீழ அமரவைத்து இத்தனை சடங்குகளை செய்து கொண்டிருக்க அதையெல்லாம் பார்த்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது..

வேறு வேறு இடத்தில் பிறந்திருக்கும் இரு உள்ளங்களை  இணைத்து வைக்கும் வைபோகம் அல்லவா!

கூடவே  இந்த திருமணத்தில் கணவனுக்கான நெறிமுறைகளும் மனைவிக்கான  கடமைகளும் நிறையவே சொல்லப்பட்டிருந்தன..  

அதிலும் குறிப்பாக இன்ப துன்பங்களில் இருவரும் ஒன்றாக  பங்கெடுத்துக் கொள்ள வேண்டும்.. கணவனுக்கு மனைவியும் மனைவிக்கு கணவனுமாய்  கடைசிவரை ஒருவரை ஒருவர் பிரியாமல் சேர்ந்து வாழ வேண்டும் என அந்த மந்திரங்களில் சொல்லியிருக்க அதை ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டிருந்தான்  அதிரதன்...

ஆரம்பத்தில் அதை எல்லாம் வெறும் வாய்  வார்த்தைகளாக சொல்லிக் கொண்டிருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக அவனும் அதன் அர்த்தத்தை உள்வாங்க ஆரம்பித்தான்..  

அவனுடைய திருமணத்தில் இதையெல்லாம் கவனிக்க அவனால் முடியவில்லை..

தன்னை இக்கட்டில் நிக்க வைத்து கழுத்தில் கத்தி வைக்காத குறையாக அவனை மிரட்டி அந்த மணமேடையில் உட்கார வைத்த அவன் தாத்தாவை  துவம்சம் செய்யும் கோபத்தில் அல்லவா அன்று அந்த மணமேடையில் அமர்ந்திருந்தான்..  

அதனால் ஐயர் என்ன சொன்னார்?  என்ன செய்தார்? என்று எதுவும் அன்று  அவன் கருத்தில் படவில்லை.. ஆனால் இன்று ஆற அமர  அமர்ந்து ஒவ்வொரு மந்திரமாக சொல்லிக் கொண்டிருக்க அதன் ஒவ்வொரு அர்த்தமும் புரிய அவனுக்குள்  ஏதோ ஒரு குற்ற உணர்வு தோன்றியது...

ஏன்டா இந்த திருமணத்தை நடத்த ஒத்துக் கொண்டோம் என்று இப்பொழுது எரிச்சலாக வந்தது...

இதற்கெல்லாம் காரணமானவளை ஓரக்கண்ணால் நிமிர்ந்து பார்க்க அங்கே இளமஞ்சள் நிற பட்டுப் புடவையும் மிதமான ஒப்பனைகளுடன்  இன்னொரு மணமகளாய் நின்றிருந்தாள் அவன் மனையாள் நிலவினி..

அவள் பார்த்து நின்றது அந்த மணமக்களை என்றாலும் அவள் ஓரப் பார்வையோ நொடிக்கொரு தரம் தன்னவனிடம் வந்து வந்து மீண்டு சென்றது..

அதுவும் மாப்பிள்ளைக் கோலத்தில் அவனும் ஸ்டீபனுக்கு அருகில் அமர்ந்து அந்த மந்திரத்தை சொல்லி கொண்டிருக்க, அவனையே இமைதட்டி ரசித்து பார்த்து கொண்டிருந்தாள் நிலா..

தன் திருமணத்தின் பொழுது முறுக்கி கொண்டு உடலை விறைத்து கொண்டு அமர்ந்து இருந்தவன் இன்று வெகு இயல்பாய் இலகு தன்மையுடன் முகத்தில் சின்ன புன்னகையுடன் அமர்ந்து இருக்க, அவளுக்கு என்னவோ அவனே மணமகனாய் அமர்ந்து இருந்ததை போல இருந்தது...

அவசரமாக தன்னை மணமகள்  இடத்தில்  அமர்த்தி வைத்து அவளுடைய திருமணத்தை மீண்டும் ஒரு முறை மனதில் நடத்திக் கொண்டிருந்தாள் நிலா..  

அவள்  முகத்தில் அப்படி ஒரு பரமசிவம்.. உள்ளுக்குள் சிலிர்ப்பு..

எதேச்சையாக நிமிர்ந்து பார்த்த அதிரதன்,  பூரிப்புடன் முகம் விகாசிக்க, உதட்டில் உறைந்த புன்னகையுடன் மணமகள் அருகில் நின்றிருந்தவளை கண்டதும் திகைத்து போனான்..

இமைக்க மறந்து ஒரு நொடி அவளையே பார்த்திருந்தான்..   அதற்குள்  அவன் உள்ளே இருந்த மற்றொரு மனம் விழித்துக் கொண்டு அவன் தலையில் நங் என்று ஒரு குட்டு வைத்து அவன் பார்வையை திருப்ப வைத்தது....

அவனும் தலையை உலுக்கி கொண்டு பார்வையை திருப்பி கொண்டான்.. ஆனாலும் அவன் கண்கள் அவனுக்கு அடங்காமல் அடிக்கடி அவள் பக்கமே சென்று நின்றது...

கூடவே அந்த மந்திரங்கள் வேறு இப்பொழுது எரிச்சலை கூட்டியது...

“ஒருவேளை இந்த சதிகாரி வேண்டும் என்றே இந்த திருமணத்தை நடத்த வைத்திருப்பாளோ? நான் இப்படி எல்லாம் அவஷ்தை  படவேண்டும் என்று தான் இந்த திருமணத்தை ஏற்பாடு பண்ணினாளோ?

இதுவும் என்னை அவள் பக்கம் இழுக்கும் ஒரு விதமான   சதியோ ? “  என்று அவன் மனம் அவசரமாக இந்த திருமணம் பேச்சு ஆரம்பித்த புள்ளியை நோக்கி பாய்ந்தது..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!