நிலவே என்னிடம் நெருங்காதே-40

 


அத்தியாயம்-40

ன்று அதிகாலையில் இருவரையும் எழுப்பி தயராக வைத்து இருவருக்கும் அலங்காரம் செய்து இதோ மணமேடையில் அமர வைத்திருந்தனர்..

அவர்களும் ஒவ்வொன்றையும் ஆர்வத்துடன் செய்து கொண்டிருக்க, அதிரதன் இந்த திருமணத்தை  அமெரிக்காவில் இருந்த அந்த தம்பதியினர் இருவர் பெற்றோர்களும் லைவ் ஆக பார்க்கும்படி தன் நண்பர்களை வைத்து டெலிகாஸ்ட் பண்ணி கொண்டிருந்தான்..

தங்கள் பிள்ளைகளின் இந்த திருமணத்தை கண்டு அந்த பெற்றோர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி.. அவர்களும் ஆர்வத்துடன் அதை ரசித்து இருந்தனர்..

எல்லா சடங்கும் முடிய மஞ்சள் தாலி கயிற்றை ஸ்டிபன் கையில் கொடுக்க அதை எப்படி கட்டவேண்டும் என்று முன்பே சொல்லி இருந்ததால் அவனும் அதை வாங்கி மனம் கொள்ளா பூரிப்புடன் தன் மனைவிக்கு அணிவித்தான்....

லியாவும் வெட்கத்துடன் அதை வாங்கி கொள்ள சுற்றி இருந்தவர்கள் எல்லாரும் அட்சதை  தூவி புன்னகையுடன் மணமக்களை வாழ்த்தினர்..

அதன் பிறகும் ஒவ்வொரு சடங்கிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்..

நம் வழக்கபடி மாலை மாற்றி கொண்டு இருவரும் கை பிடித்து அக்னியை வலம் வந்து அம்மி மிதித்து ஸ்டீவ் அந்த வெள்ளி மெட்டியை தன் மனைவிக்கு அவள் பாதம் பெற்றி அணிவிக்க, இருவருக்குமே அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது..

அனைவருமே அந்த தம்பதியினரின்  ஆர்வத்தையும் ஒவ்வொரு சடங்கிலும் முழு ஈடுபாட்டுடன் கலந்து கொண்டதையும் கண்டு பூரித்தனர்..

நிலாவுக்கோ தன் திருமணத்தையே இன்னொரு முறை நேரில் பார்ப்பது போல இருந்தது... அவள் திருமணத்தின் பொழுது இதெல்லாம் சரியாக அனுபவிக்க முடியவில்லை... இருவருமே ஆட்டி வைக்கும் பொம்மை போல அல்லவா அன்று அந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்...

ஆனால் இன்று???

இன்று என்னவாம்?? என்று குறும்பாக சிரித்தது நிலாவின் மனஸ்...

இன்றும் ஒன்றுமில்லை.. என்று தன் மனஸ் ன் தலையில் ஒரு குட்டு வைத்து அடக்கினாள் உள்ளுக்குள் படபடப்புடன்..

மனதை அடக்கினாலும் கண்கள் அடங்க மறுத்து அந்த கோபக்காரனிடமே தஞ்சம் அடைந்தது...

சிரித்த முகமாக அந்த தம்பதியினருக்கு ஒவ்வொரு சடங்காக விளக்கி கொண்டிருந்தான் அவன் மணவாளன்..

இதுவரை அவனை தங்கள் அறையில் மட்டுமே இரவில் அருகில் பார்த்திருக்கிறாள் நிலா.. மற்ற நேரங்களில் பெரும்பாலும் அவன் வீட்டில் இருப்பது இல்லை.. அப்படியே இருந்தாலும் அவனை பார்ப்பதை தவிர்த்து விடுவாள்.

இரவு நீண்டநேரம் கழித்தே அவன் அறைக்கு திரும்பி வருவான்.. அப்படி வரும்பொழுது ஏதாவது அவளை சீண்டி வம்பு இழுத்துவிட்டு படுத்து விடுவான்...

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக முழு நேரமும் அவள் உடனேயே இருக்கிறான்.. அந்த தம்பதியினரின் விருப்பத்திற்காக தன் அலுவலக வேலையை ஒதுக்கிவிட்டு அவர்களுடனே இருக்கிறான்..

அவனின் ஒவ்வொரு அசைவும் ஏனோ அவளுக்கு பிடித்திருந்தது...

இதுவரை அவனை யாரோ ஒருவன் எனக்கும் அவனுக்கும் சம்மந்தமில்லை என்று தள்ளி வைத்து பார்த்திருந்த மனம் எப்பொழுது அவன் பக்கம் சாய்ந்தது என்று இன்னுமே அவளுக்கு புரியவில்லை...

ஆனால் சாய்ந்துவிட்டது என்பதுதான் உண்மை.. இல்லை என்றால் அந்த சின்ன குட்டியின் முத்தத்திற்கு அவள் ஏன் அவள் அண்ணனை தேட வேண்டும்..

அன்று பார்த்த முத்த காட்சியில் அவள் ஏன் கிறங்கி நிக்க வேண்டும்.. அவனை கண்டதும் ஏன் மயங்கி போய் அவன் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டிருக்கவேண்டும்.

பெண்ணின் மனதில் ஒருவன் இடம் பிடிக்காமல் இதெல்லாம் அந்த பெண்ணுக்குள் தோன்றாது.. அப்படி என்றால் ??

“நான் அவன் பக்கம் சாய்ந்து விட்டேனா? “ என்று அவளுக்குள் கேட்க அவள் உயிர்வரை சென்று மீட்ட அனைத்து அணுக்கலும் ஆமாம் என்று  சந்தோஷ கூச்சலிட்டது...

அதை கண்டு கன்னம் சிவக்க,

“இது எப்படி சாத்தியம்? நான் ஒன்றும் அவனை கணவனாக நினைக்க வில்லையே... அவனும் என்னை இன்னுமே எதிரியாகத்தான் பாவிக்கிறான்.. அப்படி இருக்க என் மனம் எப்படி அவன் பக்கம் சென்றது?

இதுதான் மஞ்சக்கயிறு மேஜிக் என்பதா? கணவன் என்று வந்துவிட்டால் பெண்கள் மனம் தானாகவே கணவனிடம் தஞ்சம் அடைந்து விடும் என்பார்களே அது போலவா?

என்று தனக்குள்ளே ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க அவள் கண்கள் மட்டும்

“நீ என்னவோ செய்து கொள்.. நான் என் ஆளை சைட் அடித்து கொள்கிறேன்..”  என்று கண் சிமிட்டிவிட்டு தன்னவனை ஆசையாக அள்ளி பருகி கொண்டிருந்தது..

எதற்கோ சிரித்த முகத்துடன் எதேச்சையாக திரும்ப , அங்கு கண்களில் ஒருவித காதலுடன் தன்னையே ரசித்து பார்த்து கொண்டிருந்தவளை கண்டதும் ஒரு நொடி திகைத்து போனான் அதிரதன்..

அவளின் அந்த பார்வையில் அப்படியே கவிழ்வதை போல இல்லை அவனை கட்டி இழுப்பதை போல இருக்க, அவனை அறியாமலயே ஒரு பெருமையும் ஆண்மகனுக்கான அந்த கர்வமும் அவன் உள்ளே பரவ சிறு வெட்கமும் ஓடி வந்து குடி கொண்டது அவன் முகத்தில்..

பொண்டாட்டி தன்னை ரசித்து பார்த்தால் எந்த கணவனுக்குத்தான் பெருமையாக இருக்காது.. அந்த ஒரு பெருமையிலும் பூரிப்பிலும்தான் இருந்தான் ரதன் அப்பொழுது..

ஆனால் அந்த பூரிப்புக்கு பரவசத்திற்கு ஆயுட்காலம் ஒரு நொடி தான்..

தன்னையே காதலுடன் பார்த்து கொண்டிருப்பவளை கண்டவன் பார்வை அடுத்த நொடி அவள் அருகில் நின்று  சிரித்து கொண்டிருந்த அவன் தாத்தாவை பார்த்ததும் உடனே அவர் பண்ணின தில்லு முல்லு,  அவனை மடக்கி திருமணம் செய்து வைத்தது என எல்லாம் கண் முன்னே வந்து நின்றன..

கூடவே அதுவரை மறந்து இருந்த அவன் நிலா பொண்ணின் கொஞ்சல் முகமும் கண் முன்னே வர, உடனே திடுக்கிட்டு விழித்து கொண்டான்...

உடல் இறுக அதுவரை இருந்த இலகு தன்மை மறைந்து விட முகத்தை கடுகடுவென்று  வைத்து கொண்டு அங்கு நின்றிருந்த இருவரையும் பார்த்து ஒரு கோப பார்வையை பார்த்து வைத்தான்..

சற்றுமுன் வரை அப்படி அம்சமாய் கம்பீரமாய் சிரித்து கொண்டிருந்தவன் திடீரென்று  உடல் இறுக,  முகம் கடுகடுக்க மாறுவானேன் என்று  அவசரமாக யோசித்தவளுக்கு உண்மை புரிந்தது..

“அவன் இன்னும் பழசை மறக்கவில்லை... அவளை இன்னும் எதிரியாகத்தான் பார்க்கிறான்.. “ என்று புரிய வேதனையாக இருந்தது..

அவளின் நிலையை புரிந்து கொண்ட தாத்தாவும் அவள் தோள் தொட்டு மெல்ல அழுத்தி கொடுத்து கண்களால் ஜாடை சொல்லி அவளை சமாதானம் படுத்தினார்.

ஒரு நொடி வாடி இருந்த அவள் முகம் அவரை கண்டதும் அடுத்த நொடி தோளை குலுக்கி கொண்டு இயல்பாகி போனாள். தன்னை இயல்பாக்கி கொண்டாள்..இயல்பாக இருப்பதாக காட்டி கொண்டாள் நிலா...

மீனுக்கு திரும்பிய  மணமக்களை அத்தோடு விட்டு விடாமல் திருமணத்திற்கு பிறகு இருக்கும் மணமக்களுக்கான் விளையாட்டுக்களையும் விளையாட வைத்தனர்...

அந்த தம்பதியர் மட்டும் அல்லாமல் அந்த ஜமீனில் உள்ள அனைவருமே அன்று முழுவதும் மகிழ்ச்சியாக இருந்தனர்...

சமீபத்தில் நடந்து முடிந்திருந்த ஜமீன் பேரனின் திருமணத்தில் இல்லாத கொண்டாட்டத்தை,  விட்டு போயிருந்த உற்சாகத்தை,  அந்த மனக்குறையை இன்று தீர்த்து கொண்டனர்..

அதிலும் இத்தனை நாள் உடலை விறைத்து கொண்டும் முகத்தை இறுக்கி கொண்டும் உறுமி கொண்டிருந்த அதிரதன் அன்று முழு உற்சாகத்துடன் வளைய வர, அதை கண்டே மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது..

எல்லா ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களும் முடிந்திருக்க, இரவு உணவும் கலகலப்பாக முடிய, மணப்பெண்ணை முதல் இரவுக்காக அலங்கரித்து கொண்டிருந்தனர் நிலாவும் யாழியும்..

லியா வும் வந்திருந்த இந்த மூன்று நாட்களில் நிலாவுடன் நல்ல தோழியாக பழகி இருந்தாள்... கொஞ்சம் கொஞ்சம் தமிழும் பேச ஆரம்பித்து இருந்தாள்..

திருமணத்தை அடுத்து வரும் இந்த சம்பிரதாயத்தையும் மணமக்கள் இருவருக்கும் விளக்கி இருக்க, அவர்களும் இன்னும் ஆர்வத்துடன் கேட்டு கொண்டனர்..

கூடவே இந்த திருமண ஏற்பாட்டை முடிவு செய்த உடனே அவர்கள் இருவரையும் தனித்தனி அறையில் பிரித்து வைத்து விட்டாள் நிலா...

திருமணம் முடியும் வரை நோ டச்சிங்.. நோ கிஸ்ஸிங். என்று குறும்பாக சொல்லி இருவரையும் வேற வேற அறையில் தங்க வைத்துவிட்டாள் நிலா...

மேலும் லியாவுக்கு துணையாக நிலாவும் அவள் அறையிலயே தங்கிவிட்டாள்..

நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் கட்டி தழுவ முடியாமல் அந்த தமபதியினர் தவித்தாலும் இதுவும் ஒரு வித வித்தியாசமான அனுபவமாக இருக்க அவர்களும் அதை மனம் விரும்பி ஏற்று கொண்டனர்...

இரண்டு நாட்களுக்கு பிறகு இருவரையும் தனிமையில் சந்திக்க என்று இந்த முதல் இரவை ஏற்பாடு செய்திருந்தனர்.. கிட்டதட்ட இந்த மூன்று நாட்களில் கொஞ்சமாக நம் கலாச்சாரத்திற்குள் வந்திருந்தவர்களுக்கு எல்லாமே வித்தியாசமாகவும் பிடித்தும் இருந்தது..

ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து ரசித்தனர்..

அதுவும் ஸ்டீபன் தங்கி இருந்த அறையில் நிலாவின் ஏற்பாட்டின் படி படுக்கையில் மலர் அலங்காரம் செய்திருக்க, அவனுக்கு வேஷ்டியை சுத்தி விட்டு அவனை கிண்டல் அடித்தவாறு அதிரதன் அவன் அறையில் விட்டு வர, ஸ்டீபனுக்கு அந்த அறையும் அதன் அலங்காரம் அந்த சூழல் எல்லாவுமே ரொம்பவும் பிடித்து போனது..

சிரித்து கொண்டே ஸ்டீபன் அறையில் இருந்து வெளிவந்த அதிரதன் மாடியில் இருந்து கீழ பார்க்க அப்பொழுது தான் நிலா லியாவை அலங்காரம் செய்து வெளியில் அழைத்து வந்தாள்...

அவளுமே மெல்லிய அலங்காரத்தில் லியாவுடன் நின்றிருக்க, ஏனோ அவன் மனம் தறிகெட்டு ஓடியது..

இமைக்க மறந்து ஒரு நொடி அவளையே பார்த்திருந்தான்.. அவளோ கன்னம் குழிய சிரித்தபடி லியாவை ஏதோ கிண்டல் அடித்து கொண்டிருக்க, அதற்கு லியாவும் நிலாவின் இடுப்பில் கிள்ளி செல்லமாக சிணுங்க அதை கண்ட அதிரதனுக்கு ஆச்சர்யமாக இருந்தது..

“வெட்கம் என்றால் என்னவென்று அறியாத இந்த வெளிநாட்டு லியாவையும் இப்படி நம்ம ஊர் பொண்ணு மாதிரி மாற்றி விட்டாளே இந்த பட்டிக்காட்டுக்காரி... கெட்டிக்காரிதான்.. “ என்று உள்ளுக்குள் மெச்சி கொண்டே தன் அறைக்கு சென்று விட்டான்...

லியாவை பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க சொல்லி அவள் கையில் பால் சொம்பை கொடுத்து ஸ்டீபன் அறைக்கு அழைத்து சென்று  விட்டுவிட்டு துள்ளலுடன் கீழ வந்தாள் நிலா..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!