பூங்கதவே தாழ் திறவாய்-10
இதழ்-10
நாட்கள் கடந்து செல்ல , தீக்சாவுக்கு அது 9 ஆவது மாதம் ஆரம்பித்து
இருந்தது...
அவள்
வயிறு இப்பொழுது நன்றாக வெளியில் தெரிய ஆரம்பித்தது..
அபிநந்தன்
இந்த கம்பெனியை வாங்கிய பிறகு அப்ளை பண்ணிய முதல் பெரிய ஆர்டர் கிடைத்து விட
எல்லாருக்கும் மிக்க மகிழ்ச்சி.. அனைவருக்கும் ஸ்வீட் கொடுத்து கொண்டாடினான்...
இதனால்
இந்த கம்பெனிக்கு பெருத்த இலாபம் ஈட்டி தரும்
என்று கூறி அதுக்கு உதவிய அனைவருக்கும்
நன்றி சொன்னான்.. tbd
குறிப்பாக
தீக்சாவை தனியாக அழைத்து அவளால்தான் இந்த ஆர்டர் கிடைத்தது என்று கூறி அவளுக்கு நன்றி சொல்ல அவளோ Its my duty என்று தன் தோளை குலுக்கிவிட்டு ஒரு புன்னகை கூட
சிந்தாமல் சென்று விட்டாள்...
இவளை
புரிஞ்சுக்கவே முடியலையே... என்றவாறு அவனும் விட்டு விட்டான்...
முதலில்
அவளை கண்டதும் அவள் திமிரை அடக்கி காட்ட
வேண்டும்..அவளை தனக்கு கீழ் மண்டியிட வைக்க வேண்டும் என்று வேகம் இருந்தது
அபிநந்தனுக்கு...
ஆனால்
ஏனோ அவனால் அப்படி செய்ய முடியவில்லை... அவள் திமிரையும் நேருக்கு நேர் நின்று
முறைத்து பார்க்கும் அந்த நேர்மையும் கண்டு ரசிக்கத்தான் முடிந்தது...
அதை
விட அவள் திருமணம் ஆனவள்.. கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் ஏனோ அவள் மீது
கொஞ்சம் இருந்த காழ்ப்பு உணர்வும் இருந்த இடம் தெரியாமல் ஓடி மறைந்து விட்டது...
முன்பு
சில நாட்கள் மட்டும் இந்த அலுவலகத்திற்கு வந்து சென்றவன் இப்பொழுது எல்லாம் தினமும் இந்த அலுவலகத்திற்கு
வருவது வாடிக்கை ஆகி விட்டது....
முழு
நேரம் இங்கு இல்லையென்றாலும் காலையில் நேராக
இங்கு வந்துவிட்டு தான் மற்ற அலுவலகங்களுக்கு செல்வான்....
அவன்
வேலையே இல்லை என்றாலும் இங்கு தினமும் வருவதற்கான
காரணம் அவன் மட்டுமே அறிந்த ஒன்று...
அவன்
அறைக்கு வந்ததும் தீக்சாவை ஏதாவது காரணத்தை சொல்லி அவன் அறைக்கு அழைப்பான்... அவள் வந்ததும்
அவன் பார்வை அவள் வயிற்றை தடவி செல்லும்....
சரியாக
அந்த நேரம் மட்டுமே அவள் குழந்தையும் மகிழ்ச்சியில் குதிப்பாள்... இது ஏதோ ஒரு டெலிபதி மாதிரி அவன் பார்வைக்கு மட்டுமே
அவள் குழந்தை ரெஸ்பான்ஸ் பண்ணுவது கண்டு தீக்சாவிற்குமே ஆச்சர்யமாக இருந்தது...
அதனால்
அவன் தன் வயிற்றை பார்ப்பது தெரிந்தும் இப்பொழுதெல்லாம் அவனை முறைக்காமல் கண்டு கொள்ளாமல்
விட்டு விட்டாள்...அவன் அவள் வயிற்றை தவிர மற்ற எந்த ஒரு தப்பான பார்வையும் அவள்
மீது இல்லாதததால் அவளும் விட்டு
விட்டாள்...
ஆனால்
எப்பொழுதாவது சுடிதார் அணிந்து வரும் நாட்களில் மட்டும் அவன் பார்வை ஏமாற்றத்தை
தழுவும்.. ஆனலுமே அவன் பார்வை அந்த பகுதிக்கு சென்று வரும்...
தீக்சாவை
பற்றி தெரிந்ததால் மற்றவர்கள் யாரும்
இப்படி தினமும் அபிநந்தன் அவளை அழைத்து பேசுவதை கண்டு எந்த ஒரு தவறான பேச்சும் பேசுவதில்லை..
அதுவும்
அவள் அவனுடைய PA என்பதால் வேலைக்காக
சென்று பார்த்து விட்டு வரவேண்டி
இருக்கும் தான் என்று எண்ணிக்கொள்வர்.. ...
அதோடு
இப்பொழுது அந்த அலுவலகத்திற்கு சில புதிய ப்ராஜெக்ட்ஸ் கிடைத்திருக்க , எல்லோருமே
உற்சாகத்துடன் தங்கள் வேலையில் கவனம் செலுத்த அடுத்தவங்களை பத்தி வம்பு பேச நேரம்
இல்லாமல் போனது....
அபிநந்தன்
தீக்சாவை அழைத்து பேசுவதை போலவே
ஜெசியிடமும் தினமும் அன்றைய நடப்பை விளக்கியும் நேற்று நடந்தவற்றை கேட்டும் தெரிந்து
கொள்வான்...
அவன்
அழைக்கும் நேரத்தில் ஜெசிக்கு உள்ளுக்குள் சிலிர்த்து போவாள்.... ஆனால் அவள்
திட்டமிட்டபடி அவனை எப்படி மயக்குவது என்றுதான் தெரியவில்லை...
கிளாமரான
ஆடைக்கு அவன் மயங்கவில்லை... கொஞ்சி பேசினாலும் ஒரு தீர்க்கமான பார்வையில் அவளை
தள்ளி நிறுத்தி விடுகிறான்...
ஒரு
முறை வெக்கம் விட்டு வீக் என்ட் எங்கயாவது போகலாம் என்று அழைக்க, அவனோ கோபமாகி திருப்பி
அவளுக்கு அட்வைஸ் பண்ணி அதோடு வார்ன்
பண்ணி விட்டு விட்டான்...
அதனால்
ஜெசிக்கு அடுத்து எப்படி காயை நகர்த்துவது என்று தெரிய வில்லை... ஆனாலும் நல்ல ஒரு
சந்தர்ப்பத்திற்காக காத்து கொண்டிருந்தாள்....
அபிநந்தன்
தன் வேலை முடிந்ததும் பின் சிறிது நேரத்தில்
அவன் சென்று விடுவான்...
ஆனால்
செல்லுமுன் மீண்டும் ஒரு முறை அவன் அறையில் இருந்து தீக்சாவின் வயிற்றை பார்த்து விட்டுதான்
செல்வது வழக்கம்...
ஏனோ
அவள் வயிற்றை பார்க்கும் பொழுது அதில் உள்ளே இருந்த அந்த குட்டி தேவதை அவனை பார்த்து சிரிப்பதை போல இருக்கும்.. உடனேயே
மனமெல்லாம் ஒரு பரவசமும் புது உற்சாகம் பரவும்..
இது
ஏன் என்று இதுவரை அவன் ஆராய்ந்ததில்லை... ஆனால் அந்த சுகம் பிடித்து
விடவே அவள் அறியாமல் அந்த குழந்தையுடன் மனதுக்குள்ளயே கொஞ்சி பேச ஆரம்பித்து
இருந்தான்...
“இது
தவறு .. அவள் அடுத்தவன் மனைவி.. அவளை பார்க்க கூடாது..” என்று அறிவு
எடுத்து சொன்னாலும் அது மனசுக்கு கேட்பதில்லை.. அது பாட்டுக்கு அதன் கடமையை செய்தது...
அன்று இரவு
வீட்டிற்கு வந்தவனை காஞ்சனா பிடித்து கொண்டார்....
“மாப்பிள்ளை....
இன்னும் எத்தன நாளைக்கு மாயா இப்படியே உங்களுக்காக
காத்துகிட்டிருப்பா.. சீக்கிரம் ஒரு முடிவு எடுங்க... “ என்றார் அவனை ஆராயும்
பார்வையுடன்..
“ஹ்ம்ம்
சரிங்க அத்தை... “ என்று தலை ஆட்டினான்
அபிநந்தன்...
“நேற்றே
நான் போய் நம்ம குடும்ப ஜோசியரை பார்த்துட்டு வந்தேன்.. இன்னும் ஒரு மாசத்துல ஒரு
முகூர்த்தம் இருக்காம்.. அதிலயே கல்யாணத்தை வச்சுக்கலாமா?? “ என்றார்
ஆர்வமாக..
அதை
கேட்டவன் ஒரு மாசம் என்றால் தீக்சாவிற்கு
குழந்தை பிறக்கும் நேரம் என்று மனதில் கணக்கிட்டான்...
காஞ்சனா
இன்னும் தன் முகத்தையே பார்த்து கொண்டிருக்க
“அத்தை....இன்னும்
ஒரு மூன்று மாசம் போகட்டும்.. புதுசா வாங்கின கம்பெனியை இன்னும் கொஞ்சம் முன்னுக்கு கொண்டு வரணும்...
அது
நல்ல இலாபகரமா ரன் ஆச்சுனா அப்ப ரிலாக்சா
ஆய்டுவேன்... அப்புறம் கல்யாணத்தை
வச்சுக்கலாம் ..” என்றான் ஏனோ அப்போதைக்கு தன் அத்தையை சமாளிக்க எண்ணி...
“ஹ்ம்ம்ம்
என்னவோ பா.. இதயே தான் தினமும் சொல்லிகிட்டிருக்க... அதோடு உங்க அப்பா அம்மா இறந்து
ஒரு வருசத்துக்குள்ள எந்த நல்ல காரியம்னாலும் பண்ணிடனுமாம்...
அதை
விட்டா அடுத்து மூன்றாவது வருசம் தான் பண்ண முடியுமாம்... நம்ம
ஜோசியர்தான் சொன்னார்....இன்னும் இரண்டு மாசம்தான் இருக்கு உங்க பெற்றோர்களின்
நினைவு நாள் வர....
அதனால
சட்டு புட்டுனு வேலையை முடிச்சிட்டு இன்னு இரண்டு மாசத்துல வர கடைசி முகூர்த்தத்துலயாவது
கல்யாணத்தை வச்சுக்க சரி சொல்லுங்க மாப்பிள்ளை.. “
பாவம்
மாயாவும் உங்களுக்காக இத்தனை வருசமா காத்துகிட்டிருக்கா....உங்களையே
புருசனா நினச்சு மனசுக்குள்ளயே வாழ்ந்து கிட்டிருக்கா...
அவள்
பேசும் பொழுதெல்லாம் என் புருசன் என்றுதான் பெருமையா சொல்லிகிட்டிருக்கா.. அவளுடைய
பிரண்ட்ஸ் எல்லார்கிட்டயும் அப்படியே
சொல்லிகிட்டிருக்கா...
உங்கப்பா
அம்மா இருந்திருந்தா இந்த கல்யாணம் எப்பவோ நடந்திருக்கும் ..
நிச்சயம்
பண்ணின கையோட அவங்களும் மேல போய் சேர்ந்துட்டாங்க.. இப்பா எல்லாம் அப்படியே நின்னு
போச்சு..” என்று பெருமூச்சு விட்டார் காஞ்சனா....
அவனுக்குமே
தன் பெற்றோர்களின் இறப்பு கண் முன்னே வர, சில நொடிகள் மனதில் வேதனை வந்து போனது.....
ஏதோ
யோசனை வர, காஞ்சனா அபியை பார்த்து
“மாப்பிள்ளை...
நீங்க வேற எந்த பொண்ணையும் மனசுல நினைக்கிலயே??...ஒருவேளை
அதனால்தான் கல்யாணத்தை தள்ளி போடறீங்களா?? “ என்றார் ஆராயும் பார்வையுடன்...
அவர்
அப்படி கேட்கவும் ஏனோ அவன் கண் முன்னே தீக்சா வந்து சிரித்தாள்...
அதை
கண்டதும் திடுக்கிட்டவன்
“சே...
அவ ஒரு கல்யாணம் ஆன பொண்ணு.. அவ எப்படி என் நினைப்புல வரா??.. இப்படி ஒரு
எண்ணம் என் மனசுல இருக்கிறது தெரிஞ்சாலே செருப்பை கழட்டி அடிச்சிட்டு வேலைய விட்டே போய்டுவா..
“ என்று யோசித்தவன்
“அப்படி
எல்லாம் யாரும் இல்லை அத்தை... “ என்றான்..
“இப்பதான்
என் வயித்துல பாலை வார்த்தீங்க மாப்பிள்ளை.... அப்ப சீக்கிரம் உங்க வேலைய முடிச்சிட்டு கல்யாண வேலை ஆரம்பிச்சுடலாம்.. “ என்றார்
மகிழ்ச்சியுடன்..
அவனும்
சரியென்று தலை அசைத்து பின் தன் அறைக்கு சென்றான்...
கட்டிலில்
படுத்தவனுக்கோ உறக்கம் வரவில்லை...
அத்தை
சொன்ன விசயத்தை யோசிச்சு பார்த்தான்... அவன் மாயாவை திருமணம் செய்வது சரிவருமா?? என்று யோசிக்க
ஆரம்பித்தான்
“எனக்கு
மாயாவை பார்க்கிறப்போ ஏன் எதுவுமே தோன மாட்டேங்குது?? அவள் அப்பப்ப ஏடாகூடமா ட்ரெஸ்
பண்ணிகிட்டு அவன் முன்னே வரும் பொழுது அதெல்லாம்
தப்பாக கூட பார்க்க தோணலையே.... அவளை ஒரு சின்ன பெண்ணாகத்தான் பார்க்க முடிகிறது...
அவளை
மணக்க ஒத்து கொண்டதே தன் பெற்றோர்கள் அந்த மாயாவை விரும்பி அவனுக்காக நிச்சயம்
செய்ததால்தான்...
சிறு வயதில் இருந்தே தன் அன்னைக்கு மாயா என்றால் ரொம்ப
பிடிக்கும்.. பெண் குழந்தை இல்லாத வீட்டில் அவளைத்தான் செல்லம் கொஞ்சி
கொண்டாடுவார் அவன் அன்னை....
அதனால்தான்
அவளை எனக்காக மணக்க நிச்சயம் செய்திருக்க வேண்டும்...ஆனால் அந்த மாயாவை பார்க்கும்
பொழுது என் மனைவியாக போகிறவள், எனக்கானவள் என்ற எந்த உணர்வுமே என் உள்ளே எழவில்லையே...
ஆனால்
அந்த தீக்சா??
“அன்று
எதேச்சையாக அவள் கை தன் மேல் பட்டபொழுது அப்படியே சிலிர்த்து போய்விட்டதே... மனமெல்லாம் புதுவெள்ளம்
பாய்ந்தோடுகிறதே... ஏன் என் பார்வை அவள் வயிற்றில வளர்ர குழந்தையையே சுத்தி சுத்தி வருது?? அப்படி என்ன இருக்கு அவகிட்ட??.
என்
மனம் அவளையே சுத்திவர என்ன காரணம்?? எனக்கு அவளைத்தான் பிடிச்சிருக்கா?? Am I in
love with her?? “ என்று அவனையே
கேட்க உடனேயே ஆமாம் என்று பல குரல்கள் அவன் உள்ளே ஓலமிட்டன...
அதை
கேட்டு திடுக்கிட்டவன்
“ஆனால்
இது சரிவராதே... அவள் இன்னொருத்தனின் மனைவி.. அவளை எப்படி நான் ?? ......
என்
மனசால நினைப்பது கூட தப்பாச்சே.... என்
புத்தி ஏன் இப்படி போனது??” என்று தலையை பிடித்து கொண்டான்...
பின்
எழுந்து பால்கனிக்கு சென்று நடை பயில ஆரம்பித்தான்...
கால்
வலிக்க நடந்தவன் திரும்பி வந்து மெத்தையில் விழுந்தவனுக்கு எப்பொழுதும் கேட்கும்
அந்த குரல் இப்பொழுது கேட்கவில்லை..
அந்த
பெண்ணின் சிரிப்பும் அந்த இனிய குரலும்
எங்கே போச்சு?? என்று ஆழ்ந்து யோசிக்க அந்த குரலுக்கு பதிலாக தீக்சாவின் முகம் வந்து சிரித்தது.....
அதை
கண்டு மேலும் அதிர்ந்தவன்
“இல்லை... இது ரொம்ப தப்பு... எனக்காக என் பெற்றோர்கள் நிச்சயம் பண்ணின மாயா இருக்கிறாள்... அவளுக்கும் அவள் கணவன் இருக்கிறான்... இதை வளர விடக்கூடாது .. என்ன செய்யலாம்?? “ என்று அவசரமாக யோசித்தான்....
“ஹ்ம்ம்ம் அவளை பார்ப்பதனாலதானே அவள் முகம் கண்ணில் வருகிறது... இனிமேல் அவளை பார்க்கவே கூடாது... அவளை பார்ப்பதால்தான் இவ்வளவு தொல்லை... “ என்று ஒரு முடிவு செய்து உறங்க முயன்று பின் நீண்ட நேரம் கழித்தே உறங்கி போனான் அபிநந்தன்..!
Comments
Post a Comment