பூங்கதவே தாழ் திறவாய்-11




 இதழ்-11

 

பிநந்தன்  முடிவு செய்த மாதிரி அடுத்த இரண்டு நாள் அபி டிசைன்ஸ் அலுவலகத்திற்கு செல்லவில்லை... அங்கு நடப்பவைகளை ஜெசியிடம் கேட்டு தெரிந்து கொள்வான்....

தீக்சாவிடம் மெயில் அனுப்ப சொல்லி, முடிந்த வரை  மின் அஞ்சல் வழியாக அனைத்தையும் கண்காணித்து வந்தான்...

மேலும் மற்ற அலுவலகங்களில் தன் கவனத்தை செலுத்த வேலை  இருக்கும் நேரங்களில் பிசியாக இருப்பதால் தீக்சாவை நினைக்காதவன் கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் அவன் மனம் தீக்சாவிடம் சென்று  நின்றது..

அவளை  விட அவள் வயிற்றில் இருந்து அவனை பார்த்து சிரிக்கும் அந்த குட்டி தேவதையிடம்  சென்று  நின்றது அவன் மனம்...

இரவு படுக்கையிலும் அதே தொல்லைதான்... கண்ணை மூடினாலே அந்த தீக்சாவும் அவள் குழந்தையுமே கண் முன்னே வந்து சிரித்தனர்...

முதல் இரண்டு நாள் அவளை பார்க்காமல்  சமாளித்தவன் மூன்றாவது நாள் பைத்தியம் பிடிக்கிற மாதிரி ஆகிவிட, கார் நேராக அபி டிசைன்ஸ் நோக்கி சென்று நின்றது...

காரை நிறுத்தியவன் ஒரு துள்ளலுடன் லிப்ட் ற்கு  கூட காத்திருக்காமல்  மாடி படிகளில் தாவி  ஏறி சென்றான்...

தன் அறையை அடைந்ததும் அந்த  திரையை விலக்கி வெளியில் பார்க்க அதுவும் தீக்சா அமர்ந்திருந்த அந்த இடத்தை பார்க்க அவனை ஏமாற்றாமல் அவள் அங்கு இருந்தாள்....

ஏதோ வேலையில் மும்முரமாக இருக்க, இன்று சேலை அணிந்திருந்தாள்..

அதை சரியாக இடையில் மூடாததால் அவள் வயிற்று பகுதி நன்றாக தெரிய, அதன் வழியே ஆசையாக பார்க்க  அந்த குட்டி தேவதை இவனை பார்த்து  சிரிப்பதை  போல இருந்தது....

அதை கண்டதும் அவன் உள்ளே இனம் புரியாத  பரவசம் ஊற்றெடுத்தது...

அந்த குட்டி தேவதையை  ஏனோ  தொட்டு பார்க்க துடித்தன  அவன் கரங்கள்...

அப்பொழுது அவன்  அலைபேசி ஒலிக்க உள்ளே சரியாக சிக்னல் கிடைக்கவில்லை என்று தன் அறையை விட்டு வெளியில் சென்றான்...

“ஹலோ....”  என்று  அழைத்து பேச அவனுடய ஹலோ என்ற குரலை கேட்டதும் அதுவரை  உறங்கி கொண்டிருந்த அந்த குட்டி மீண்டும் குதித்து எழுந்தாள்...

டந்த இரண்டு நாட்களாக தீக்சா  அவள் வயிற்றில் அசைவு எதுவும் இல்லை என்று கண்காணித்து வந்தாள்... இரண்டு நாட்களாக எந்த அசைவும் இல்லாமல் போக தீக்சாவுக்கு கொஞ்சம் பயமாகவே இருந்தது...

அதனாலயே பயந்து போய் காலையில் முதல் வேலையாக மருத்துவ மனைக்கு சென்று  டாக்டரை பார்த்து  எல்லாம் சரியாக இருக்கிறது என்று  மைதிலி உறுதியாக சொன்ன பிறகே கொஞ்சம் நிம்மதியாக இருந்தது அவளுக்கு...

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக அமைதியாக இருந்தவள திடீரென்று குதிக்கவும் அதிசயித்தவள் தலையை நிமிர்ந்து பார்க்க அங்கு அபிநந்தன் போனில் யாரிடமோ பேசி கொண்டிருந்தான்....

உடனே தன் வயிற்றின் அசைவுக்காண காரணம் புரிந்தது...  

அது புரியவும் கண்ணில் வேதனை வந்து போனது...

தன் பேன்ட் பாக்கெட்டில் கையை விட்டு கொண்டு கம்பீரமாக நுனி நாக்கு ஆங்கிலத்தில் சீரியசாக தொழிலை பற்றி ஏதோ விளக்கி கொண்டிருந்தவனையே ஒருவித ஏக்கமாக  பார்வை பார்த்தவள் மீண்டும் ஒரு வெறித்த  பார்வை பதித்து பின் தலையை குனிந்து கொண்டாள்....

அவள் கண்ணின் ஓரம் இலேசாக நீர் திரண்டிருக்க, அதை குனிந்தவாறே சுண்டி விட்டாள்...

அலைபேசியில் பேசி கொண்டிருந்தாலும் அவளையே ஓரக் கண்ணால் பார்த்து கொண்டிருந்தவனுக்கு இன்னும் குழப்பமாகி போனது...

தன்னை கண்டதும் அவள் முகத்தில் வந்த அந்த பார்வை..

“ஷப்பா..   என்ன பார்வை அது??... ஒரு வித ஏக்கம், ஆசை,  காதல் னு அத்தனை உணர்ச்சிகளையும் கலந்து  அந்த பார்வையில் தெரிந்ததே...”

அவளின் அந்த பார்வை அவன் உயிர் வரை சென்று பரவியது போல இருந்தது அவனுக்கு...

ஆனால் அடுத்த நொடியே அது வெறித்த பார்வையாக மாறிவிட்டது.... பின் அதுவும் மாறி சாதாரணமாகிவிட்டாள்...

“எதனால் இப்படி?? இல்லை என் கண்ணுக்குத்தான் இப்படி தெரிகிறதா?? அன்று முதல்  நாள் என்னை பார்த்த பொழுதும் இதே போலத்தான்.. முதலில் ஆசையாக பார்த்தவள் பின் வெறித்து பார்த்தாள்... ஏன் அப்படி பார்க்கிறாள்?? “ என்று புரியாமல் ரொம்ப குழம்பி தவித்தான் அபிநந்தன்...

பின் வேலை வந்துவிட, தன் ஆராய்ச்சியை நிறுத்தியவன் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தான்...

பின் வேற ஒரு புது ஆர்டருக்கு தீக்சாவை தன் அறைக்கு அழைக்க, ஒன்பதாவது மாதம் என்பதால் அவள் கொஞ்சம் சிரமப் பட்டுதான் நடந்து வந்த மாதிரி இருந்தது அவனுக்கு ....

அதை கண்டதும் அவன் மனசு ஏனோ  தவித்தது.. அவளை அப்படி நடக்க கூட விடாமல் தாங்கி  கொள்ள வேண்டும் என்று தவித்தது அவன் மனம்...

“என்னாச்சு தீக்சா?? எப்படி இருக்கு உடம்புக்கு??.. வேணும்னா நீ இப்பயே லீவ் போட்டுக்கோயேன்.. “ என்றான் அக்கறையாக..

அதை கேட்டவள் மீண்டும் ஒரு வெறித்த பார்வையை அவன் மீது செலுத்தி

“சொல்லுங்க மிஸ்டர் அபிநந்தன்...  என்ன டீடெய்ல்ஸ்   வேணும்??.. “ என்றாள் அவனை நேராக பார்த்து முகத்தில் எதையும் காட்டாமல்

“இராட்சசி...ஏதாவது வாயை திறந்து சொல்றாளா பார்... அதிகமா  எதுவும் கேட்டால்  மிஸ்டர் அபிநந்தன்  என்று  சொல்லி என்னை தள்ளி வச்சுடறா...சரியான அழுத்தக்காரி...  “

என்று  மனதுக்குள்  புலம்பியவன் ஒரு  ஆழ்ந்த பெருமூச்சை எடுத்து விட்டு அடுத்த புராஜெக்ட்டிற்கான பிளானை டிஸ்கஸ் பண்ணினான் அவளுடன்...

தியம் வழக்கம் போல தீக்சா புவனாவுடன்  கேப்டீரியாவில அமர்ந்து பேசி கொண்டிந்தாள்... எதேச்சையாக அந்த பக்கம் வந்த அபி தீக்சா எதையோ சொல்லி கொண்டிருக்க காதை  தீட்டி வைத்து கொண்டான்...

“என்னது இந்த வாரம் சன்டே வா?? “ என்றாள் புவனா..

“ஆமாம் புவனா.. ரொம்ப சிம்பிளா வீட்ல வச்சு தெரிஞ்சவங்க மட்டும் தான் வரப்போறாங்க... நானும் இந்த மாதிரி எல்லாம் வேண்டாம்னு சொல்லி பார்த்துட்டேன்... அம்மா கேட்கறதா இல்லை...

அதனால அவங்க திருப்திக்காக சிம்பிளா வளைகாப்பு நடத்தறாங்க... எனக்கு நெருங்கிய பிரண்ட் னா அது நீ  மட்டும்தான்.. அதனால நீ கண்டிப்பா சன்டே பங்சனுக்கு வந்திடனும்.. “ என்றாள் தீக்சா இலேசாக சிரித்தவாறு...

அவள் அந்த மாதிரி சிரித்தே பார்த்திராதவன் அவளை முதல் முறையாக சிரித்து பார்க்கவும் மெய் மறந்து போனான்...

“இவள் இலேசாக சிரித்ததற்கே கொள்ளை அழகா இருக்காளே.. இன்னும் வாய் விட்டு சிரிச்சா எப்படி இருக்கும்?? “  என்று  மனதுக்குள் சொல்லி கொண்டான்...

பின் மீண்டும் அவர்கள் உரையாடலை மறைந்து நின்று கேட்க ஆரம்பித்தான்... 

“கண்டிப்பா தீக்சா... நீ உன் வீட்டு அட்ரசை கொடு.. உன் வளைகாப்புக்கு நான் வந்திடறேன்... ஜாம் ஜாம் னு கலக்கிடலாம்... “ என்று சிரித்தவள்

“ ஆமா..  உன் ஹஸ்பன்ட் வர்ராரா?? “  என்றாள் புவனா...

அதுக்கு அவள் என்ன  சொல்ல போகிறாள் என்று  ஆர்வமாக காதை தீட்டி வைத்துக் கொண்டான் அபிநந்தன்....

சிறிது யோசித்தவள்

“வரலாம்... எதுவும் முடிவா சொல்லலை புவனா ... லீவ் கிடைக்கலைனார்... பார்க்கலாம்.. “ என்று  பெருமூச்சு விட்டாள் தீக்சா..

அதை கேட்டதும் அவனுக்கு ஏனோ  ஏமாற்றமாக இருந்தது... அவள் கணவன் மீது பொறாமை வந்தது...

“எவ்வளவு அதிர்ஷ்டக்காரன் அவன்.... இப்படி ஒரு பொண்டாட்டிய விட்டுட்டு காசு பெருசு னு துபாய்ல போய் உட்கார்ந்திருக்கானே... கூடவே இருந்து அவளை பார்த்துக்க வேண்டாம்....

என்னோட பொண்டாட்டியா இருந்தா அவளை  தரையில நடக்க கூட விட்டிருக்க மாட்டேன்...என் உள்ளங்கையில் வச்சு தாங்கி இருப்பேன்..

சே.. இப்படி ஆள் மாறி போய்ட்டியே தீக்சா..!!!  பேசாம அவன டைவர்ஸ் பண்ணிட்டு என்கிட்ட வந்திடேன்.. உன்ன ராணி மாதிரி  பார்த்துக்கறேன்... “ என்று உள்ளுக்குள் புலம்பினான் அபிநந்தன்...

“ஹ்ம்ம்ம்... இதில் ஒரு வார்த்தை கூட அவள் முன்னால் சொல்ல முடியாது... பார்வையிலயே என்னை எரிச்சிடுவா....இராட்சசி...  “ என்று உள்ளுக்குள் சிரித்து கொண்டே  நகர்ந்தான்...

டுத்த வாரம் ஞாயிற்று கிழமை..

காலையில் எழும் பொழுதே  ஏதோ ஒரு மாதிரி இருந்தது அபிநந்தனுக்கு....

ஏனோ மனம் பாரமாக இருந்தது... காலை  ஓட்டமும் ரசிக்கவில்லை இன்று.. வீட்டிற்கு திரும்பி வர, மாயா வந்து அவன் மேல் விழுந்து ஏதோ கொஞ்சி பேச,  அதுவும் எரிச்சலாக வந்தது அவனுக்கு...

அவளை விலக்கி நிறுத்தி சுள்ளென்று  எரிந்து விழுந்தான்..

கொஞ்ச நேரம் ஆனதும் எதிலுமே கவனம் செலுத்த முடியவில்லை அவனால்.... ஏன் இப்படி இருக்கு?? என்று ஆராய, அப்பொழுதுதான் தீக்சா புவனாவிடம்  சொன்னது நினைவு வந்தது..

அவளுக்கு இன்று  வளைகாப்பு விழா... தன்னை பார்த்து சிரிக்கும் அந்த குட்டி தேவதையை சுமப்பவளுக்கு வளையல் அடுக்கும் விழா... என்பது நினைவு வந்தது... 

உடனே அவளை பார்க்க வேண்டும் என மனம் துடித்தது..

அந்த குட்டி  தேவதையையும்  பார்க்கவேண்டும் என அவன் மனம்  துடிக்க , சிறிது நேரம் தன்னை கட்டுபடுத்தியவன் அதற்கு மேல் முடியாமல் அவளை பார்க்க முடிவு செய்தான்...

தன்னுடைய அலுவலகத்தின் வெப் சைட்டிற்கு சென்று அவளுடைய  எம்ப்ளாய்(employee)  புரபைலை ஒபன் பண்ணி  அதில் இருந்த தீக்சாவின் முகவரியை எடுத்து கொண்டவன் வேகமாக வெளியேறி சென்றான்...

காஞ்சனாவும் மாயாவும் ஒருவரை ஒருவர் பார்த்து ஜாடையால் பேசி கொண்டனர்...

தீக்சாவின் முகவரிக்கு சென்றவன் காரை நிறுத்திவிட்டு அவள் வீடு இருந்த  அந்த மாடிக்கு ஏறி சென்றான்...

தீக்சாவின் வீட்டில் வளைகாப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன... அவளுக்கு அலங்காரம் செய்து மனையில்  உட்கார வைத்திருந்தார்கள்..

பக்கத்து போர்சன் சில சுமங்கலி பெண்கள் மற்றும் புவனா மட்டுமே அங்கு இருந்தனர்....

மாப்பிள்ளை எப்பொழுது வருவார் என்று  பரிமளம் திரும்ப திரும்ப தீக்சாவிடம்  கேட்டு கொண்டிருக்க, 

“முடிஞ்சால் இன்னைக்கு வர்ரேன் னு  சொன்னார் மா.. என் கிட்ட சொல்ல மாட்டேங்குறார்... சஸ்பென்சா வருவார் போல... “ என்றாள் சற்று கடுப்பாகி...

பரிமளத்திற்கு அது ஏக்கமாக இருந்தது... இந்த  விழாவிற்காகவாது  தன் மாப்பிள்ளை வந்து விட வேண்டும் என்று வாயிலயே காலையில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறார்....

வளைகாப்பு ஆரம்பித்து  இருக்க, முதல் இரண்டு வயது முதிர்ந்த பெண்கள் அவளுக்கு சந்தனம் பூசி, வளையல் அடுக்கி, மஞ்சள் நீர் வைத்திருந்த அந்த சொம்பால் தலை சுத்தி அவளுக்கு வளையலை போட்டு அட்சதை தூவி ஆசிர்வதித்தனர்....

அந்த நேரம் வாயில் ஆழைப்பு மணி ஒலித்தது....

பரிமளம் ஆவலுடன் ஓடி சென்று  கதைவை திறக்க, வெளியில் நின்று  கொண்டிருந்தவனை  கண்டு ஆச்சர்யத்தில் உறைந்து நின்றார்...

பின் உள்புறம் திரும்பி

“தீக்சா... மாப்பிள்ளை வந்திட்டார்.... “ என்று சந்தோச கூச்சலிட்டார்... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!