பூங்கதவே தாழ் திறவாய்-3
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
இந்த வருடம் எல்லா வளமும், நலமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகள்🌹🌹🌹💐💐வாழ்க வளமுடன்🌹
இதழ்-3
அதிகாலை அலார்ம் அபாய சங்காக அலற, அதை சோம்பலுடன் கை
நீட்டி அனைத்தான் அபிநந்தன்...
பின்
கைகளை நீட்டி நெட்டி முறித்து மீண்டும் ஒரு குட்டி தூக்கத்தை போட்டவன் எழுந்து
குளியலறைக்கு சென்று ரிப்ரெஷ் ஆகி தன் ட்ராக் பாண்ட் ஐ மாட்டி கொண்டு காலை
ஓட்டத்தை துவக்கினான்...
அந்த
அதிகாலை தென்றல் ஜில்லென்று முகத்தில் தீண்ட, அந்த தீண்டல் அவனுக்கு ஏனோ எதையோ நினைவு படுத்தியது.. ஆனால் அது என்னவென்று
சரியாக தெரியவில்லை...
தன்
மூளையை கசக்கி யோசிக்க, அது ஒரு பெண்ணின்
மெல்லிய விரலின் ஸ்பரிசம் என புரிந்தது...
“ஆனால்
யாருடையது இந்த கை விரல் ?? அவனுக்குத்தான் பெண் நண்பிகளோ
இல்லை காதலியோ யாரும் இல்லையே.. ஒரு வேளை இது மாயாவோட விரல் தீண்டல் போல் இருக்குமோ?? “ என்று யோசித்தவன் மாயா
என்கவும் மெல்ல புன்னகை அரும்பியது அவன் முகத்தில்...
தென்றல்
தீண்டியதில் மனம் எல்லாம் சுகமாக இனிக்க, தன் ஓட்டத்தை தொடர்ந்தான் அங்கு
இருக்கும் காட்சிகளை ரசித்தவாறு...
தன்
ஓட்டத்தை முடித்து வீடு திரும்பியவன் மீண்டும்
தன் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று காலை
உடற்பயிற்சிகளை முடித்து தன் அறைக்கு சென்று குளித்து விட்டு அலுவலகம் செல்ல கிளம்பி
வந்திருந்தான்...
தன்
கையை மடித்து விட்டு கொண்டே மாடியில் இருந்து வேகமாக இறங்கி வந்தவன் ஒரு புகைபடத்தை
கண்டு அப்படியே நின்று விட்டான்...
அங்கு
இருந்த புகைபடத்தில் தன் அம்மா அப்பா இருவரின் தோள் மீதும் கை போட்டு அழகாக
சிரித்து கொண்டிருந்தான் அபிநந்தன்....
அவன்
பெற்றவர்களின் முகத்திலும் அப்படி ஒரு
பூரிப்பு தன் மகன் இவ்வளவு வளர்ந்து விட்டானே என்று.. மூவருமே மனம் விட்டு சிரித்து
கொண்டிருந்தனர் அந்த புகைபடத்தில்....
அதை
கண்டதும் அவன் மனம் வாடியது.. இன்று
அவர்கள் இருவருமே தன் அருகில் இல்லை என்று அவனாலயே நம்ப முடியவில்லை...
ஆனால்
வாழ்வின் துயரங்களையும் இழப்புகளையும் ஏற்று கொண்டுதான் ஆக வேண்டும் என்று தன் தந்தை போதித்திருக்க, தன்னை கட்டுபடுத்தி
கொண்டவன் அவர்களை பார்த்து புன்னகைத்து
“
குட் மார்னிங் பா... குட் மார்னிங் மா.... Have
a nice day… “ என்று சொல்லி
கீழிறங்கி சென்றான்...
இது
அவன் வழக்கம்.. தன் பெற்றோர்கள் தன்னுடன்
இல்லை என்ற பொழுதும் அவர்கள் தன்னுடனே இருப்பதாக பாவித்து சில நேரம் அவர்களுடன்
உரையாடுவான்... அது அவன் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுக்க, அதையே பின் பற்றுவான்
சில நேரங்களில்....
கீழிறங்கி
வந்தவன் நேராக உணவு மேசைக்கு செல்ல, அங்கு அமர்ந்திருந்த அந்த நடுத்தர வயது பெண்மணி எழுந்து
“குட்மார்னிங்
மாப்பிள்ளை... “ என்று எழுந்து நின்றார்
புன்னகைத்தவாறு...
“குட்மார்னிங்
அத்தை...” என்று அவனும் புன்னகைத்தவன்
“என்ன
அத்தை இது புது பழக்கம்??.. எனக்காக எழுந்து
நிக்கறீங்க.. உட்காருங்க அத்தை...”
“இருக்கட்டும்
மாப்பிள்ளை... முன்ன நான் வெறும் அத்தைதான்... ஆனால் இப்ப அப்படியா?? “ என்றார் சிரித்தவாறு...
“ஹ்ம்ம்ம்
இப்பவும் அப்படியே இருங்க... ஒன்னும் மாத்த வேண்டாம்... ஆமா மாயா எங்க?? “ ...
“உள்ள
ரெடியாகிட்டிருக்கா... இதோ வந்திடுவா மாப்பிள்ளை.. “ என்றவர் வாயிலை பார்க்க, அவளோ வந்த
பாடில்லை...
“சே..
இந்த பொண்ணுக்கு எத்தனை தரம் சொன்னாலும்
அறிவே இல்லை... இப்படியா இருப்பா? “ என்று உள்ளுக்குள் திட்டி கொண்டிருந்தவர் அவனுக்கு தட்டை எடுத்து
வைத்தார்...
அதே
நேரம்
“குட்மார்னிங்
டார்லிங்...” என்ற கொஞ்சலான குரலுடன் வேகமாக
உள்ளே வந்தாள் மாயா....
காலையிலயே
அதிசயமாக குளித்து ரெடியாகி மாடர்ன் ஸ்டைலில் ஒரு உடையை அணிந்திருந்தாள்..
கழுத்து
பகுதி கீழிறங்கி பார்ப்பவர்கள் இவ எப்ப கீழ குனிவாள் என்று ஆவலுடன்
எதிர்பார்க்கும் அளவில் கவர்ச்சியாக இருந்தது....
அவன்
பார்வையில் அது படவேண்டும் என்றே ஒயிலாக அவன் பார்வை படும் தொலைவில் நின்றாள்....
அவள்
மீது வெளிநாட்டு பெர்ப்யூம் வாசம் வேறு ஆளை கவிழ்ப்பதாக இருந்தது... அவளின்
ஆடையையும் அவள் மீதிருந்த வாசத்தையும் கண்டு முகத்தை சுழித்தவன்
“மாயா..
என்ன இது?? பெர்ப்யூம் லயே குளிச்சியா??... இவ்வளவு ஸ்ட்ராங்கா
இருக்கு..” என்று சிரித்தான்....
தான்
அணிந்திருக்கும் ஆடையை கண்டு ஆசையாக ஒரு
பார்வை பார்த்து கிறங்கி போய் விடுவான் என்று எண்ணி இருந்தவளுக்கு அவன் தன் ஆடையை
கண்டு கொள்ளாமல் அவள் மீதிருக்கும் பெர்ப்யூமை குறை சொல்லவும் முகம் தொங்கி விட்டது
அவளுக்கு....
ஆனாலும்
அதை வெளியில் காட்டி கொள்ளாமல்
“போ...
டார்லிங்.. உனக்காக நான் எவ்வளவு கஷ்டபட்டு ட்ரெஸ் பண்ணிகிட்டு வர்ரேன்... அது உன்
கண்ணுல தெரியலை.. இந்த வாசம் தான் தெரியுது..” என்று உதட்டை பிதுக்கி சிணுங்கினாள்...
“அடடா...
அத கவனிக்கலயே...” என்றவன் மேலிருந்து கீழ் வரை அவளை பார்வையிட்டவன்
“
ஓ சூப்பரா இருக்கு.. உனக்கு எல்லா ட்ரெஸ்மே அழகுதான் மாயா ... “ என்றான் சிரித்தவாறு...
“ஹா
ஹா ஹா தேங்க் யூ அபி டார்லிங்...இப்பதான் என் செல்ல அபி மாமா... “ என்று அவன் கன்னத்தை பிடித்து கொஞ்சி முத்தமிட்டாள்...
அவள்
கை அவன் கன்னத்தில் தீண்டவும் உடனே அவன் மனம் காலையில் அவன் அனுபவித்த அந்த பீல் உடன் ஒப்பிட அதுவில்லை இது என்று
புரிந்தது...
அப்படி
என்றால் அந்த தீண்டல் யாருடையதா இருக்கும்?? ஏற்கனவே அனுபவித்த மாதிரி அல்லவா இருந்தது?? “என்று யோசித்தான்..
அதற்குள்
அந்த மாயா அவனை ஒட்டி நின்று கொண்டு அவன்
தட்டில் காலை உணவை எடுத்து வைத்து கொண்டிருந்தாள்....
“ஹே
மாயா... விடு நானே எடுத்து வைக்கிறேன்... உனக்கு எதுக்கு சிரமம்??.. “ என்றான் அவசரமாக
“இதுல
என்ன சிரமம் டார்லிங்.. என் புருசனுக்கு நான் எடுத்து வைக்கிறேன்... “ என்று
மையலுடன் தலை சரித்து சிரித்தாள்...
அவனும்
சிரித்தவாறு தன் உணவை உண்டு முடித்து , எழுந்து கை கழுவ சென்றான் ...அவன் கூடவே சென்று அவன் கழுவிய பிறகு துடைக்க அவள் டவலை எடுத்து கொடுக்க,
“தேங்க்ஸ்
மாயா... “ என்றான்...
“அபி
டார்லிங்... நீங்க போகிறப்போ என்னையும் ட்ராப் பண்றீங்களா... உன் கூட வர்ரேன்...” என்றாள்
கொஞ்சலாக
“ஹ்ம்ம்
நீ எங்க போகணும்.. “ என்றான்..
அவள்
இடத்தை சொல்ல
“அடடா..
நான் அந்த பக்கம் போகலையே... நீ வேணா
இன்னொரு காரை எடுத்துகிட்டு போய்ட்டு வா... உனக்கு ஓட்ட கஷ்டமா இருந்தால் ட்ரைவர் அங்கிளை கூப்டுக்கோ....
ஓகே
பை... Have a nice day…
“ என்று அவள் கன்னம் தட்டி
சென்றான்...
அவன்
தீண்டலில் மெய் சிலிர்த்து போனாள் மாயா...
திரும்பி
தன் அன்னையை பார்த்து கட்டை விரலை நீட்டி எப்படி?? என்று
பார்வையால் கேட்க அவரும் வாயெல்லாம் பல்லாக தன் கட்டை விரலை உயர்த்தி காட்டி பிரமாதம் எஎன்று ஆக்சன் செய்தார் காஞ்சனா...
காஞ்சனா-
அபி நந்தனின் தந்தையின் ஒன்னு விட்ட சகோதரி.. புருசன் சரியில்லாமல் போக அப்பப்ப அபிநந்தனின் தந்தை கபிலனிடம் வந்து அழுது
புலம்புவார்....
கபிலனும்
அவருக்கு வேண்டிய உதவிகளை செய்வார்... மாயா காஞ்சனாவின் ஒரே செல்ல மகள்... அவள்
படிப்பையும் கபிலனே ஏற்று கொண்டார்...
பேஷன்
டிசைனிங் முடித்து விட்டு அவளுக்கு ஒரு மாடலாக வேண்டும் என்ற ஆசை...
அதற்குள்
அபிநந்தனின் பெற்றோர்கள் இறந்து விட, காஞ்சனா அவசரமாக ஒரு திட்டத்தை தீட்டி தன் மகளை அழைத்து கொண்டு வந்து
அபிநந்தனின் வீட்டிலயே தங்கி விட்டார்....
மாயாவும்
தன் அன்னை சொல்வதெல்லாம் வேதவாக்காக
எடுத்து கொண்டு அதன்படி ஆடி வருகிறாள்....
தன் காரை எடுத்து கிளம்பியவன் ரேடியோவை ஆன் பண்ணி தனக்கு
பிடித்த பாடலை கேட்டு கொண்டே காரை செலுத்தி கொண்டிருந்தான் அபி....
அன்றைய
அஜென்டாவை ஒரு முறை பார்த்து கொண்டான்.. பின் கார் ஒரு சிக்னலில் நிற்க எதேச்சையாக
திரும்பினான் ....
சற்று
தொலைவில் ஒடு பிங்க் கலர் ஸ்கூட்டி வந்து நிற்க அவன் பார்வை அந்த ஸ்கூட்டியின் மீதும் அதன் மீது அமர்ந்திருந்த
அந்த பெண்ணின் மீதும் படிந்தது...
அதே
பிங்க் கலர் சேலை கட்டி இருந்தாள் அதன் மீது அமர்ந்து இருந்தவள்.. கைகளுக்கு உரை
அணிந்திருக்க, அவன் பார்வை அந்த புடவையின் மீதும் அதை தாண்டி கிழ சென்றது..
அவன்
அவளின் இடப்புறம் இருந்ததால் அவன் பார்வை அவளின் இடையை தொட, அதை உணர்ந்தோ என்னவோ தன் கையால் விலகி இருந்த புடவையை இழுத்து
விட்டு இடை தெரியாமல் மூடி கொண்டாள்...
ஏனோ
சற்று ஏமாற்றமாக இருக்க, அவன் பார்வை இடைக்கும்
கீழ் சென்றது.. புடவை அணிந்து இருந்ததால் அது வண்டியில் மாட்டாமல் இருக்க என்று புடவையை
கொஞ்சம் தூக்கி சொருகியிருந்தாள்..
அதில்
அவள் கணுக்கால் தெரிய அதன் மீது மெல்லிய கொலுசு அவள் காலை தழுவியது.... வலுவலு வென்றிருந்த
அவள் காலை தழுவி கொண்டிருந்த அந்த கொலுசின்
மீது ஏனோ பொறாமை வந்தது அவனுக்கு...
அந்த
கணுக் காலையை யும் அதன் மீது கொஞ்சி விளையடிய கொலுசையும் ரசித்தவன் அவள் முகம் பார்க்க
எண்ணி தன் தலையை நிமிர்த்தினான்....
ஆனால்
பாவம்.. அவளின் தரிசனம் கிடைக்க வில்லை... முகத்தை துணியால் மூடியிருந்தாள்... அதை கண்டு ஏமாந்தவன்
மீண்டும் அவளை ஆழ்ந்து பார்த்தான்...
தலையில்
தலை கவசத்தை அணிந்திருக்க, பின்னால் தொங்கியது நீண்ட சடை.. அதில்
வைத்திருந்த மல்லிகை சரம் அவள் முதுகு வரை தொங்கி அவள் முதுகில் கோலம் மிட்டு
கொண்டிருந்தது....
அந்த
கொலுசை போலவே அவளின் வெண்ணிற முதுகை தடவி கொண்டிருந்த அந்த மல்லிகை பூவின் மீதும்
பொறாமை வந்தது அவனுக்கு......
ஒரு
ஏக்க பெருமூச்சை விட்டு அவளையே ரசித்து
பார்த்து கொண்டிருந்தவன், திடுக்கிட்டான்....
“என்னாச்சு
எனக்கு?? இதுவரை இந்த மாதிரி எந்த பெண்ணையும் ரசித்து பார்த்ததில்லை.. இந்த முகம் தெரியாத
பெண்ணை போய் இவ்வளவு நேரமாக ரசித்து
பர்க்கிறேன்....
“அவனுக்கு
உரிமையான அந்த மாயாவையே எல்லை தாண்டி பார்க்காதவன் இந்த பெண்ணின் மீது ஏன் இப்படி
ஒரு பார்வை?? “என்று தன் தலையில் கொட்டு வைத்து கொண்டு பார்வையை உடனே திருப்பி கொண்டான்...
அவன்
மனதை அடக்கினாலும் அவன் கண்கள் அவனுக்கு
அடங்க மறுத்தன.. மீண்டும் அவளையே பார்க்க முயல அவன் அதை அடக்க,
“ப்ளீஸ்.
ஒரே ஒரு முறை மட்டும்... “ என்று கண்கள் அவனிடம் கெஞ்ச
“சரி
போனா போகுது... ஒரே ஒரு முறை மட்டும் தான்.. அதற்கு பிறகு நோ.. “ என்று கண்டித்து தன் கண்களுக்கு பெர்மிசன் கொடுக்க, அவன் கண்களும்
ஆவலுடன் அந்த பக்கம் சென்றன...
ஆனால்
ஐயோ பாவம். அடுத்த நொடி அவை ஏமாந்து நின்றன... கிரீன் சிக்னல் வந்து இருக்க அவள் அந்த
இடத்தை விட்டு பறந்து இருந்தாள்....
ஏமாற்றம்
அடைந்த அவன் கண்கள் அவனை பார்த்து முறைக்க, அதே நேரம் பின்னால்
இருந்த வாகனங்கள் எரிச்சலுடன் ஹார்ன் பண்ண, அப்பொழுதுதான் நினைவு
வந்தது தன் காரை இன்னும் ஸ்டார்ட் பண்ண
வில்லை என்று....
மீண்டும்
தன்னை தானே திட்டி கொண்டு அவசரமாக காரை ஸ்டார்ட் பண்ணி கிளப்பி சென்றான்...
இன்று
அவனுக்கு அபி குரூப் ஆப் கம்பெனிசின்
தலைமை அலுவலகத்தில் வேலை இருப்பதால் அபி டிசைன்ஸ் அலுவலகத்திற்கு செல்ல நேரமில்லை
அவனுக்கு...
அங்கு
செய்ய வேண்டிய பணிகளை ஜெசி க்கு எற்கனவே மெயில் அனுப்பி இருந்தான்.. தான் மாலை வருவதாக
சொல்லி இருந்தான்..
நேற்று
லீவ் எடுத்து இருந்தவள் வந்தால் தனக்காக காத்திருக்க
சொல்லி இருந்தான்...
அதன்படி தன்னுடைய தலைமை அலுவலகத்திற்கு சென்று அவன் முடிக்க வேண்டிய பணிகளை முடித்து மாலை 6.30 மணிக்குத்தான் அபி டிசைன்ஸ் அலுவலகத்திற்கு வர முடிந்தது....
Comments
Post a Comment