பூங்கதவே தாழ் திறவாய்-4

 


இந்த நாவல் ஏற்கனவே ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. 

ஒலி வடிவில் கேட்டு மகிழ, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க...நன்றி!! அன்புடன் பத்மினி செல்வராஜ்.


பூங்கதவே தாழ் திறவாய் - ஆடியோ நாவல்..!



இதழ்-4

 

மாலை 6 மணிக்கு அபி டிசைன்ஸ் அலுவலகத்திற்கு வருவதாக சொல்லி இருந்தான் அபிநந்தன்...!

ஆனால் நேரம் தாண்டி இருக்க,  அபி டிசைன்ஸ் அலுவலகத்தை அடைந்தவன்  அவசரமாக காரை நிறுத்தியவன் வாலட் பார்க்கிங் ல் காரை விட்டுவிட்டு வேகமாக இறங்கி அந்த லிப்ட் ஐ  நோக்கி நடந்தான்...

லிப்ட் அப்பொழுதுதான் வந்திருக்க இவன் அது கிளம்பும் முன்னே உள்ளே நுழைந்திட எண்ணி வேகமாக உள்ளே நுழைய அதே நேரம் அந்த  லிப்டில் இருந்து ஒரு பெண் வெளியில் வந்தாள்..

இவன் வேகமாக  நுழைய இவனை பார்க்காமல் அந்த  பெண் வெளியில் வரவும் இவன் கால் மீது அவள் கால் பட்டு அவள் கால்  இடறி கீழ விழ போனாள்....

விழுந்துவிட  போகிறோம் என்று  திடுக்கிட்டவள் கண்ணை இறுக மூடி கொள்ள, அதற்குள் ஒரு வலிய கரம்  அவளை  தாங்கி கொண்டது...

அவள் இடையோடு சேர்த்து பிடித்திருந்தான் அபிநந்தன்...

சில விநாடிகளில் கண்ணை திறக்க, கீழ விழாமல் இருப்பதை உணர்ந்தவள் தன்னை காப்பாற்றியவனுக்கு மனதுக்குள் நன்றி சொல்லியபடி நிமிர்ந்து தன்னை தாங்கி கொண்டிருப்பவன் முகம் பார்த்தாள்....

அவனை கண்டதும் அவள் கண்ணில் அப்படி ஒரு மின்னல்..  ஒரு ஆவல் ஒரு ஏக்கம் என்ற ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு வந்து போனது...

ஆனால் அடுத்த நொடியே முன்பு வந்தது  பொய்யோ என்னும் அளவுக்கு அவள் முகம் கோபத்தில் கொப்புளிக்க அவனை ஒரு வெறித்த பார்வை பார்த்தாள் அந்த பெண்...

அவள் பார்வையை கண்டு அவன் கைகள் தானாக விலகின... அவளும் துள்ளி குதித்து விலகி மீண்டும் ஒரு வெறித்த வெற்று பார்வைய அவன் மீது செலுத்தி வேகமாக முன்னே  நடந்து சென்றாள்....

அபிநந்தனுக்கோ இன்னும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்...

“அவள் பார்வையில் இருந்தது என்ன ?? முதலில் ஏன்  என்னை அப்படி பார்த்தாள் ??.. அதன் பிறகு அவள் பார்வை ஏன் அப்படி மாறியது??

ஒரு வேளை நான் அவளை தாங்கி பிடித்ததற்கு என்னை வெறுத்த  பார்வை பார்த்தாளோ?? வாயை திறந்து  ஒரு வார்த்தை கூட அவனை திட்டவில்லை...

ஆனால் அவள் பார்வையில் அப்படி ஒரு தீட்சண்யம்...

பார்த்தால் திமிர் பிடித்தவள் போல இருக்கிறாள்... ஆமாம்... திமிர் பிடித்தவள் தான்.. இல்லையென்றால் நான் அவள்  கீழ  விழாமல்  பிடித்ததற்கு ஒரு நன்றியாவது சொல்லியிருப்பாள்...

சரியான திமிர் பிடித்தவள்... “  

என்று  அவளை திட்டி  கொண்டே லிப்ட் ல் ஏறி தன் அலுவலகத்திற்கு சென்றான்....

மீண்டும் அவள் மீது மோதியது நினைவு வர, அவள்  இடையை பற்றிய பொழுது ஏதோ வித்தியாசமாக இருந்ததாக இப்பொழுது உணர்ந்தான்...

பெண்களுக்கு இருக்கும்  மெல்லிய இடை போல இல்லாமல் தடிமனாகவும் இல்லாமல்  ஏதோ ஒரு வித்தியாசமாக இருந்தது....

இப்படி அடுத்த பெண்ணை பற்றி ஆராய்வது தப்பு என்று அவன் அறிவு இடித்துரைக்க   தன் ஆராய்ச்சியை அவசரமாக நிறுத்தினான்...

எதேச்சையாக அங்கு இருந்த சன்னல் வழியாக வெளியில் பார்க்க, காலையில் பார்த்த அதே ஸ்கூட்டி பெண் அந்த கட்டிடத்தை விட்டு வெளியில் தன் ஸ்கூட்டி யில் சென்று  கொண்டிருந்தாள்...

அவள் பின்புறம் பார்த்த பொழுது தான் அவனுக்கே அது உரைத்தது... அவளே தான்... சற்று ஆழ்ந்து யோசித்தவனுக்கு மீண்டும் ஒரு சாக் நியூஸ்...

சற்றுமுன் தடுக்கி விழுந்தவள் அவன் தாங்கி பிடித்தவள் இவளே தான்...

“அப்படி என்றால்??  காலையில் பார்த்த பெண் தான் இப்பொழுது பார்த்தவள்... அதுவும் அவன் மீது மோதி சரிந்து  நின்றவள்...

அவள் முகத்தை  இப்பொழுது நினைவில்  கொண்டு வர முயற்சி செய்ய அவள் முகம் மட்டும் தெளிவாக பதியவில்லை..

ஆனால் அவள் கண்கள்  மட்டுமே அவன் மனதில் வந்து நின்றது...

“என்னா கண்ணுடா சாமி அது...பார்வையாலே ஆளை எரித்து விடுவாள் போல இருக்கு.... அதே கண்கள் ஆசையாக பார்த்தால் எப்படி இருக்கும்??  “ என்று கற்பனை பண்ணியவன் மீண்டும் தன் எண்ணம் போகும் போக்கை கண்டு திடுக்கிட்டான்...

“டேய்... அபி..  நீ சரியில்லை.. அங்க வீட்ல உனக்காக ஒருத்தி காத்துகிட்டிருக்கா... அதை விட்டு மற்ற பெண்களை சைட் அடிக்கிறியா?? இது நல்லதுக்கில்லை... “ என்று எச்சரித்தது அவன் மனசாட்சி...

அவனும் அதற்கு பயந்து தன் எண்ணத்திற்கு கடிவாளம் இட்டு தன் அலுவலகத்தின் உள்ளே  விரைந்து சென்றான்...

அவனை கணடதும் அந்த  ரிசப்னிஸ்ட்  எழுந்து நிக்க, அவனும்  கை அசைத்து அமர சொல்லி வேகமாக தன் அறைக்கு சென்றான்...

அவன் சென்றதும் ஜெசியை அழைக்க, அவளும் இவன் அழைப்புக்காகவே காத்திருந்த மாதிரி வேகமாக உள்ளே வந்தாள்...

அன்றைய வேலைகளை சுருக்கமாக கேட்டு கொண்டவன் அந்த PA  வை அழைக்க, ஜெசி திருதிருவென்று முழித்தாள்..

“என்னாச்சு  ஜெசி?? ஏன் இப்படி முழிக்கறீங்க??  “ என்றான் இடுங்கிய கண்களுடன்..

“அது வந்து சார்.... தீக்சா இதுவரைக்கும் உங்களுக்காக வெய்ட் பண்ணிகிட்டிருந்தா... நீங்க வராததால இதுக்கு மேல காத்திருக்க முடியாது.. நீங்க கேட்ட டீடெய்ல்ஸ் எல்லாம் உங்களுக்கு ஈமெயில் அனுப்பி வைத்ததாக சொல்லி கிளம்பி போய்ட்டா சார்.. “ என்றாள் தயங்கியவாறு...

அதை  கேட்டு கடுப்பானான் அபி..

“என்ன ஒரு திமிர் ??.. அது எப்படி எம் டி.. நான் வர்ரேன் னு சொல்லியும் அவள் வெய்ட் பண்ணாமல் போயிருக்கா  என்றால்  எவ்வளவு திமிர்....

திமிர் என்றதும் சற்று முன் பார்த்த அந்த பெண்ணின்  முகம் ஞாபகம் வந்தது....

“சே.. இந்த  பொண்ணுங்களே இப்படித்தானோ?? சரியான திமிர் பிரிச்சவளுங்க... இந்த  அங்கிள் ஏன்தான் இப்படிபட்ட ஒருத்தியை வேலைக்கு வச்சிருக்காரோ?? “ என்று மனதுக்குள் திட்டி கொண்டான்...  

“ஓகே.. ஜெசி.. நீங்க போங்க.. நான் மெயில் செக் பண்ணிக்கறேன்.. ஆனால் இது மாதிரி  இனிமேல் நடக்க கூடாது னு சொல்லிடுங்க.. “ என்றான் சிடுசிடுத்தவாறு ..

“நானும் சொன்னேன் சார்...நீங்க வந்துடுவீங்க... கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணு என்று... ஆனால்  என்னை முறைச்சிட்டு போய்ட்டா சார்... எப்பவும் அப்படிதான் சார்..  எது  கேட்டாலும் பார்வையாலயே பதில் சொல்லுவா..  “ என்றாள் ஜெசி தன்னுடைய பழைய பகை எல்லாம் மனதில் வைத்து..

“ஹ்ம்ம்ம் நீங்க மேனேஜர் தான.. இந்த  மாதிரி இருக்கிற  எம்ப்ளாய்சை எப்படி கன்ட்ரோல் பண்றது னு தெரியாது?? “  என்று அவளை பார்த்து முறைத்தான்...

“முதல்ல ஒரு நல்ல மேனேஜர் னா எப்படி இருக்கணும்.. எப்படி நம்ம சொல்றதை கேட்க வைக்கிரது னு ட்ரெயினிங் எடுத்துக்கங்க.. சும்மா படிச்சுட்டா  மட்டும்  மேனேஜர் ஆகிவிட முடியாது.. “என்று எரிந்து விழுந்தான் அபி....

அதை கெட்டு அடிபட்டவளாகி போனாள் அந்த ஜெசி... அந்த தீக்சா மீது வெறுப்பை வர வைக்கலாம்னு பார்த்தா பூமரங்கு மாதிரி இவன் நம்மளை யே தாக்கறானே ... “ என்று  உள்ளுக்குள் நொந்து கொண்டவள் ஆனாலும் விடாமல்

“எல்லோரையும் கன்ட்ரோல் பண்ணிடுவேன் சார்.. ஆனால் இவ மட்டும் தான் வித்தியாசம்..

வேணும் னா நீங்களே நாளைக்கு பேசி பாருங்க.. எவ்வளவு திமிரா பேசுவா..  இல்லை பார்ப்பானு பாருங்க...

எல்லாம் தாமஸ் சார் அவளுக்கு கொடுத்து வச்சிருக்கிற இடம்.. நீங்கதான் அவளை அடக்கணும்... “ என்றவாறு தன் குறிப்பு நோட்டை எடுத்து கொண்டு  வெளியேறி  சென்றாள்...

ஹ்ம்ம்ம் தீக்சா.... பேரை பார்...இந்த ஜெசி சொல்வதை பார்த்தால்  திமிர் பிடித்தவள் தான் போலும்... சீக்கிரம் அவளை அடக்கி காண்பிக்கறேன்... “  என்றவன் தன்  ஈமெயிலை திறந்து பார்க்க அதில் ஜெசி,  தீக்சா அவளுக்கு  அனுப்பி இருந்த ஈமெயிலை பார்வார்ட் பண்ணியிருந்தாள்...

தானாக கண்கள் அவள் பெயரை பார்வையிட பிரதிக்சா என்று இருந்தது...

பிரதிக்சா... மீண்டும் ஒரு முறை சொல்லி பார்த்தான்... என்னவோ உள்ளுக்குள் விவரிக்க முடியாத, வித்தியாசமான  ஒரு உணர்வு பரவுவதை போல இருந்தது...

உடனே தன்னை கட்டுபடுத்திக்  கொண்டவன்

“அந்த  திமிர் பிடித்தவளை பற்றி நான் ஏன் நினைக்க வேண்டும்.. “ என்று  தன் மனதை  அடக்கியவன் அந்த மின்னஞ்சலை பார்வையிட்டான்..

நேற்று அவன் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு எல்லாம் விளக்கம் அளித்திருந்தாள் பிரதிக்சா... அதோடு கூடுதல் தகவலும் அதில் இருந்தது..

அவள் விளக்கி இருந்த விதத்தையும் அதை விளக்கியபின் அவனுக்கு எந்த மாதிரியான சந்தேகங்கள் வரலாம் என்று  முன்கூட்டியே யூகித்து அதற்கும் விளக்கம் அளித்திருந்த அவளுடைய புத்திசாலித் தனத்தை  மெச்சி கொண்டான் அவனையும் மீறி...

பின் சிறிது நேரம் அங்கு இருந்த வேலையில்  ஆழ்ந்தவன் பின் நாளை  செய்ய வேண்டிய பணிகளையும் ஜெசியிடம்  கேட்டறிந்து அதில் சில திருத்தங்களை சொல்லி கிளம்பி சென்றான்....

வீட்டை அடைந்ததும் காரை நிறுத்தியவன் வீட்டிற்கு  உள்ளே செல்ல,

டார்லிங் என்று மேல வந்து விழுந்து அவன் கழுத்தை கட்டி கொண்டு தொங்கினாள் மாயா....

“ஹே..  மாயா பேபி... நான் ரொம்ப டயர்டா இருக்கேன்... இரு நான் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வர்ரேன்.. அத்தை கிட்ட சொல்லி டின்னர் எடுத்து வைக்க சொல்வியாம்... “ என்று  அவளை விலக்கியவன் வேகமாக மாடி ஏறி சென்றான்...

மாயாவோ சிறிது ஏமாற்றத்துடன்  யோசனையாக டைனிங்  ஹாலுக்கு சென்றாள்...

அங்கு அவள் அன்னை  காஞ்சனா ஏற்கனவே எல்லாம் தயாராக எடுத்து வைத்து கொண்டிருந்தார்...முகத்தில் ஏதோ சிந்தனையுடன் வந்த தன் மகளை கண்ட காஞ்சனா

மாயா?? என்னாச்சு?? ஏன் டல்லா இருக்க?? “ என்றார்..

“ம்ச்.... இந்த அபி எதுவுமே கண்டுக்க மாட்டேங்கிறான் மா...நான் எவ்வளவு கிட்ட கிட்ட போனாலும்  அவன் என்னை விலக்கி எட்டி எட்டி போகிறான்...  

எனக்கு என்னவோ என்னை அவனுக்கு பிடிக்கலையோனு இருக்கு..” என்றாள் முகத்தை சுறுக்கி..

அதை  கேட்டு திடுக்கிட்டார் காஞ்சனா..

“என்ன இந்த பொண்ணு திடீர்னு இப்படி ப்ளேட் ஐ மாத்தறா?? அப்ப நான் போட்டு வைத்திருக்கிற  திட்டம் என்னாவதாம்?? ... இல்ல கூடாது.. சீக்கிரம் ஏதாவது செய்யணும்.. “ என்று  மனதுக்குள் அவசரமாக திட்ட மிட்டார்...

பின் தன் மகளிடம் சென்று  

“மாப்பிள்ளை டயர்டா  வந்திருப்பார் இல்ல மாயா கண்ணு.. அதான் உன்கிட்ட பேச நேரம் இல்லாமல் போய்ருப்பார்... உன் மேல அவருக்கும் ஆசைதான்.. நீதான் கொஞ்சம் காத்திருக்கணும்... விட்டு பிடிக்கலாம்... “ என்று சமாதானம் பண்ணினார்....

“ம்ச்.. “ என்று  மீண்டும் சலித்து கொண்டவள் ஏதோ சொல்ல வர, அதற்குள் அங்கு வந்திருந்தான் அபிநந்தன்.. அவனை  கண்டதும் தாயும் மகளும் உடனே அமைதியாகினர் ...

வழக்கம் போல அவனை ஒட்டி நின்ற படியே அவனுக்கு சாப்பாடு எடுத்து வைத்து அவன் அருகில் நெருங்கி அமர்ந்து அவனை தொட்டு தொட்டு உரசிய படி பேசி இல்லை கொஞ்சி கொண்டிருந்தாள் மாயா...

அவனும் அவளை கண்டு கொள்ளாமல் ஏதோ பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்து எழுந்து தன் அறைக்கு சென்றான்...

பின் ஏதோ தோண்ற, எழுந்து பால்கனிக்கு சென்று அங்கு மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு நடந்து கொண்டிருந்தான்...

அப்பொழுது மேல நிமிர்ந்து பார்க்க , அந்த பால் நிலா அழகாக சிரித்து கொண்டிருந்தது அவனை பார்த்து ...

ஏனோ அந்த குளிர்ந்த நிலவை கண்டதும் பார்வையால் சுட்டெரிக்கும் அந்த பெண்ணின் பார்வை ஞாபகம் வந்தது...

அதோடு முதலில் தன்னை கண்டதும் அவள்  முகத்தில் வந்து போன கலவையான் பாவணைகளும் கண் முன்னே வந்தது....அவளின் அந்த பார்வை அவன் உள்ளே என்னவோ செய்வதை போல இருந்தது...

அவளை  பற்றி சில நிமிடங்கள் யோசித்து கொண்டிருந்தவன் பின் அறைக்கு  உள்ளே வர அப்பொழுது மாயா கையில்  பால் டம்ளருடன் உள்ளே வந்தாள்...

முன்பு அணிந்திருந்த ஆடையை  மாற்றி இப்பொழுது இரவு உடையில் இருந்தாள்..

அதுவும் மெல்லியதாக அவள் அங்கங்களை எடுத்து  காட்டும் வகையில் படு கவர்ச்சியாக இருந்தது...

மேலும் அவனை சீண்டும் வகையில் போஸ் கொடுத்தவாறு அவன் முன்னே நின்று மையலுடன் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்....

அவன் பார்வையோ அவள் மீது பட்டும் ஏனோ  அவனுக்கு எதுவும் தோன்றவில்லை...

தப்பான ஒரு பார்வையும் அவள் மீதும் விழவில்லை... அவள் கையில் இருந்த பாலை எடுத்து கொண்டவள் பருகிய பின் மீண்டும் அவளிடம் கொடுத்து   பின் அவளுக்கு குட் நைட் சொல்லி படுத்து கொண்டான்....

மாயாவுக்கோ பத்தி கொண்டு வந்தது...

“சே.. இப்படி கிளாமரா ட்ரெஸ் பண்ணி இருந்தும் இந்த சாமியார் கண்டுக்கவே மாட்டேங்கிறானே.... “ என்று புலம்பியபடி அருகில் இருந்த தன் அறைக்கு சென்றாள் மாயா....

கட்டிலில் படுத்தவனுக்கோ நேற்று கேட்ட அதே குரல் மீண்டும் ஒலித்தது... அதே இனிமையில் இன்றும் உறங்கி போனான் அபிநந்தன்..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!