பூங்கதவே தாழ் திறவாய்-5

 


இதழ்-5

 

டுத்த நாளும் நேற்றை போலவே மற்றொரு அலுவலகத்துக்கு செல்ல வேண்டிய வேலை இருந்ததால் அபி டிசைன்ஸ் க்கு செல்லாமல் வேறு  அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தான்....

நேற்று அந்த  ஸ்கூட்டி பெண்ணை சந்தித்த அதே சிக்னலில் இன்றும் கார் நிக்க, கண்கள் தானாக நேற்று அவள் நின்று  கொண்டிருந்த இடத்திற்கு  தாவியது...

ஆனால் அவள் தான் அங்கு இல்லை... தானாக ஒரு வித ஏமாற்றம் பரவியது அவன் உள்ளே...

“ஒரு வேளை முன்னறே போயிருப்பாளோ??...எப்படி னாலும் அவள் அந்த பில்டிங்  ல் இருக்கும் ஏதோ ஒரு கம்பெனியில் தான் வேலை செய்ய வேண்டும்... கண்ணில் மீண்டும் படாமலா போய்விடுவாள்... “ என்று தன்னைத்தானே சமாதானம் செய்து கொண்டு  யோசனையுடன் கிளம்பி சென்றான்...

அன்று மாலையும் அவனுக்கு தாமதமாகி விட அவன் அபி டிசைன்ஸ்  வருமுன்னே இன்றும் அந்த தீக்சா அவனுக்காக காத்திருக்காமல் கிளம்பி சென்றிருந்தாள்...  

அதை கேட்டதும் அவனுக்கு கை முஷ்டி இறுகியது.... நாளை காலையிலயே வந்து அவளை பிடித்து நல்லா வாங்க வேண்டும் என்று  எண்ணி கொண்டு அடுத்த இரண்டு மணி நேரம் இருந்து அங்கு செய்ய வேண்டிய வேலைகளை முடித்து  கிளம்பி சென்றான்...

றுநாள் அந்த தீக்சாவை பார்க்க என்றே அபி டிசைன்ஸ் க்கு காலையிலயே  வந்திருந்தான்...

நேராக MD அறைக்கு சென்றவன் ஜெசி தயாராக  வைத்திருந்த சில  பைல்களில் கையெழுத்திட்டவன் கவனம் முழுவதும் அந்த  திமிர் பிடித்தவள்,  தீக்சாவை பார்ப்பதிலயே இருந்தது....

தனக்காக காத்திருந்த வேலைகளை முடித்தவன் ஜெசியை அழைத்தான்...  

“ஜெசி... அந்த தீக்சாவை கொஞ்சம் வர சொல்லுங்க.. “ என்றான்...

அடுத்த 5 வது நிமிடம்

May I come in??..” என்ற குரல் வெளியில் இருந்து ஒலித்தது.. அந்த குரலை  கேட்டதும் எங்கயோ கேட்ட குரல் மாதிரி இருந்தது... ஆனால்  எங்க??  எப்ப?? என்று   கண்டுபிடிக்க முடிய வில்லை..

அவசரமாக சுதாரித்தவன்

“Yes. Get in.. “ என்றான் அதிகாரமாக..

அவன் மனம் ஏனோ  எகிறி குதித்தது...

உள்ளே வந்தவள் அவன் முன்னே நின்று கொண்டிருக்க, வேண்டும் என்றே பைல்க்குள் தலையை  நுழைத்து கொண்டிருந்தான்...

அவளும் எதுவும் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருப்பது தெரிய கடைசியில் அவன் தான் தன் தலையை நிமிர்த்தி அவள் முகம் நோக்க வேண்டியதாயிற்று...

அவளின் முகத்தை கண்டவன் திடுக்கிட்டான்...

நேற்று முதல் நாள் அவன் தாங்கி பிடித்த அதே திமிர் பிடித்தவள் தான் எதிரில் நின்று கொண்டிருந்தாள்..

அவன் முகத்தில் அதிர்ச்சியை கண்டதாலோ என்னவோ அவள் முகத்தில் ஒரு வெறித்த பார்வை வந்திருந்தது... பின் நொடியில் மாற்றி கொண்டு

“Yes Mr அபிநந்தன்... How can I help you? “ என்றாள் எந்த ஒரு  பதற்றமும் இல்லாமல்...

அவன்  ஒரு மல்டி மில்லினர்.  பல நிறுவனங்களின் தலைவன் என்ற எந்த ஒரு பயமும் இல்லாமல் அவனை பெயரிட்டு அழைத்ததும் அதோடு திமிராக நேருக்கு நேர் நின்று பேசுவதும் கண்டு சில நொடிகள் வியந்துதான் போனான்....

ஆனால் அவள் தன்னை வெறித்து பார்த்ததும் தனக்காக காத்திருக்காமல் கடந்த இரண்டு நாட்களும் அவள் கிளம்பி சென்றதும்  நினைவு  வர, பற்றி கொண்டு வந்தது அபிக்கு...

தன்னை கட்டுபடுத்தியவன்

“ப்ளீஸ் பி சீட்டட் மிஸ் தீக்சா... “ என்றான்..

“சாரி.. என் பெயர் பிரதிக்சா... நீங்க அப்படியே கூப்பிடுங்க.. “ என்றாள் இன்னும் அதே அதிகார குரலில்...

இவள் என்ன எனக்கு அதிகாரம் பண்ணுவது என்று  உள்ளுக்குள் கொதித்தது அவனுக்கு.. அவளை எப்படி திட்டுவது என்று சந்தர்ப்பம் பார்த்து கொண்டிருந்தான்...

அவள் வேலையில் ஏதாவது குறை கண்டுபிடிக்கலாம் என்று பார்த்தால் எல்லாம் பக்காவாக வைத்திருந்தாள் ..

அவன் கேட்கும் சில கஷ்டமான கேள்விக்கும்  சலைக்காமல்  விளக்கம் அளிக்க அவனுக்குத்தான் என்ன  சொல்லி திட்டுவது  என்று குழம்பி போனான்...

கடைசியாக அவள் அவனுக்கு காத்திருக்காமல் சென்றது  நினைவு வந்தது

“தீக்சா... “ என்று  சொல்ல வந்தவன் அவள் முறைக்கவும்

“லுக் பிரதிக்சா.... கடந்த இரண்டு நாட்களாக ஏன் எனக்காக காத்திருக்கவில்லை?? நான் வருவேன் என்று சொல்லியும் நீ எனக்காக காத்திருக்காமல் எப்படி போகலாம்??  “ என்றான் வரவழைத்த கோபத்துடன்...

அதை கேட்டவள் கொஞ்சமும் அசராமல்

“லுக் மிஸ்டர் அபிநந்தன்...  ஆபிஸ் டைம் 9 டூ 6.. உங்கள் வசதிக்காக மாலை  6 மணிக்கு மேல் நீங்கள் வந்தால் அதுக்காக நான் காத்திருக்க முடியாது....

நீங்கள் கொடுக்கிற சம்பளத்துக்கு மாலை 6 மணி வரைதான் நீங்கள் சொல்லும் வேலையை செய்ய முடியும்.... அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட என்னை கன்ட்ரோல் பண்ண  உங்களுக்கு அதிகாரம் கிடையாது..” என்றாள் அதே மிடுக்குடன்...

அவன் ஏதோ சொல்ல வர,அவன் முன்னே கையை நீட்டி அடக்கினாள் அவனை..

இதை தவிர வேற எதுவும் பேச  இல்லை என்றால் நான் என் வேலையை பார்க்க போகிறேன் மிஸ்டர் அபிநந்தன்.... என்னுடைய நேரத்தை வீணாக்க வேண்டாம்...

இப்பவும் சொல்கிறேன்.... 6 மணி வரைக்கும் மட்டும்தான்  நீங்கள் சொல்லும்  வேலையை செய்ய முடியும்.....” என்றவள் அதற்குமேல் அங்கு நிக்காமல் அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல் எழுந்து  விடுவிடுவென்று விரைந்து வெளியில் சென்றாள்...

அபியோ அவள் பேசிய தோரணையையும் அவளின் மிடுக்கான தோற்றத்தையும் கண்டு  உறைந்து நின்றான்.. நேற்று ஜெசி சொன்னதன் அர்த்தம் இப்பொழுது புரிந்தது அவனுக்கு ...

“என்னை மதிக்காமல் திமிராக போகும் இவளை  நான் அடக்கி காட்டறேன்.. “   என்று உள்ளுக்குள்  சூளுரைத்தான்...

மாலை அலுவலகம் முடிய அவள் சொன்ன மாதிரி 6 மணிக்கு தன் பையை எடுத்து கொண்டு கிளம்பி விட்டாள் தீக்சா.... அன்று முழுவதுமே அபி அங்கயே தங்கி விட்டான்...

நிறைய பைல்களை ஆராய்ந்து அந்த நிறுவனத்தின் பொருளாதார நிலை எப்படி இருக்கு ??  அடுத்து எப்படி சமாளிப்பது?? என்று அங்கிருந்த சில சீனியர்களிடம்  கலந்தாலோசிக்க அதன்  குறிப்புகளை எல்லாம் தீக்சா வரிசை படுத்தி அவனுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள்...

அதை ஆராய்ந்து கொண்டிருந்தான் அபிநந்தன்.....அப்பொழுது அவன் பெர்சனல் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்தவன் , அதன் திரையில் மாயா என்ற பெயரை கண்டதும் உதட்டில் புன்முறுவல் பூத்தது...

அலைபேசியை காதில் வைத்தவன்

“ஆங் சொல்லு மாயா... “ என்றான்

“டார்லிங்... மணி 7 ஆயிருச்சு.. எப்ப வீட்டுக்கு வருவீங்க??... நாம் இரண்டு பேரும் வெளில போகலாமா?? வீட்ல பயங்கர போர் அடிக்குது.. “ என்றாள் கொஞ்சலாக...

அப்பொழுதுதான்  மணியை பார்த்தான்...இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்க,

“மாயா.... இன்னும் கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு.. நான் முடிச்சிட்டு வந்திடறேன்.. அதுவரைக்கும் நீ வேணா அத்தையை கூட்டிகிட்டு வெளில எங்கயாவது போய்ட்டு வா... “ என்றான்

“போங்க டார்லிங்.... தினமும் இதே கதைதான்....” என்று  சிணுங்கினாள்...

அவளை சமாதானம் படுத்திவிட்டு, மீதி பாக்கி இருக்கும் வேலையை   முடித்து விட்டு ஜெசியை அழைத்து  நாளைக்கு ஒரு மீட்டிங்  ஆர்கனைஸ்  பண்ண சொல்லி விட்டு வீட்டிற்கு  கிளம்பி சென்றான்....

சென்னையின் ஒதுக்குபுறமாக இருந்தது அந்த அப்பார்ட்மென்ட்.. சிறிய பட்ஜெட்  பில்டர் குறைந்த இடத்தில் 4 தளங்கள் மட்டும் வைத்து கொஞ்சம் வீடுகள் மட்டும் இருக்கும் வகையில் கட்டியிருந்தனர்...

நகரத்தின் பேருந்து இரைச்சல் எதுவும் இல்லாமல் அமைதியாக அதுவும் அந்த அப்பார்ட்மென்ட் ஐ ஒட்டியே பூங்காவும் இருக்க, காலை மற்றும் மாலை நேரங்களில் காலாற நடக்கவும் சுத்தமான காற்றை சுவாசிக்கவும் வசதியாக இருக்க, இந்த அப்பார்ட்மென்ட் ல் ஒரு ப்ளாட் ஐ வாங்கி இருந்தார் தீக்சாவின் தந்தை...   

அலுவலகத்தில் இருந்து கிளம்பியவள் தன் ஸ்கூட்டியை எடுத்து புதிதாக வந்திருக்கும் MD அபிநந்தனின் மீதிருந்த வெறுப்பை எல்லாம் அந்த வண்டியில் கொட்டி அதை  விரட்டினாள்...

தன் அப்பார்ட்மென்ட் உள்ளே நுழைந்ததும்  வண்டியை பார்க்கிங்  ல் நிறுத்தி  விட்டு மாடி ஏறி சென்றாள்..

அவள் வீடு இருந்தது இரண்டாவது தளம்... அந்த  அப்பார்ட்மென்டில் லிப்ட் வசதி இலலாததால் மாடி ஏறி வர மூச்சிரைத்தது அவளுக்கு....

வீட்டிற்கு உள்ளே சென்றதும் சோபாவில் அப்படியே தளர்ந்து உட்கார்ந்தாள்...

“அடடா..  வாடா தீக்சா... இப்பதான் உன்னை இன்னும் காணோமேனு  உனக்கு அழைக்கலாம்னு பார்த்து கிட்டிருந்தேன்.. நீயே வந்திட்ட.. “ என்றவாறு அவளுக்கு தண்ணீரை எடுத்து கொடுத்தார் அவள் அன்னை பரிமளம்...

அவளும் அதை வாங்கி குடித்து விட்டு தன் அன்னையை பார்த்து புன்னகைத்து பின் சோபாவின்  பின்னால் சாய்ந்து கொண்டு கண்ணை மூடிக் கொண்டாள்...

இரண்டு நாள் முன்பு அவன் அந்த அபிநந்தனை பார்த்ததில் இருந்தே அவள் உள்ளே ஏதோ பிசைந்து கொண்டே இருக்கிறது... அதுவும் அவன் தன் இடையை தாங்கி பிடிக்கவும் தன்னுள் சிலிர்த்துப்போய்  இன்னும் உடைந்து விட்டாள் தீக்சா....

அந்த நிகழ்வு மீண்டும் கண் முன்னே வர, முகத்தை சுளித்தாள் கண்களை மூடியவாறு...

அவளின் முகத்தில் இருந்த ஏதோ ஒன்றை கண்டு கொண்ட அவள் அன்னை

“என்னாச்சு தீக்சா?? ஏன் ஒரு மாதிரி இருக்க?? “ என்றவாறு காபியை அவள் கையில் கொடுத்தார் பரிமளம்...

அதை  வாங்கி கொண்டு  அதனை இரு கையிலும் பிடித்து கொண்டு  மெல்ல உறிஞ்சினாள்.. அவள் இருந்த மனநிலைக்கு அந்த சூடான பில்டர் காபி தேவையாகத்தான் இருந்தது...

பரிமளம் அதோடு நிறுத்தியிருக்கலாம்... அவள் மனநிலை தெரியாமல்

“மாப்பிள்ளை போன் பண்ணினாரா தீக்சா?? துபாயிலிருந்து எப்ப வர்ராராம்?? “ என்றார் ஆர்வமாக..

மாப்பிள்ளை என்ற பெயரை கேட்டதும்  கடுப்பானவள்

“மா.. எப்ப பார் மாப்பிள்ளையை பத்தியே கேட்டுகிட்டிருக்க... அவர் தான் வேலையில் பிசியா இருக்கார்.. நேரம் கிடைக்கிறப்போ தான் வர முடியும் னு எத்தன தரம் சொல்லிட்டேன் ....

நீயும் விடாமல் தினமும் இதையே கேட்டுகிட்டிருக்க.. கொஞ்ச நேரம் நிம்மதியா விடும்மா... “ என்று சுள்ளென்று எரிந்து விழுந்தாள் தன் அன்னையிடம்..

பின் வேகமாக எழுந்து தன் அறைக்கு சென்று கட்டிலில் பொத்தென்று விழுந்தாள்....அதுவரை  அடக்கி வைத்திருந்த கண்ணீர் அவளையும் மீறி வெளி வந்து  தலையணையை நனைத்தது..

பரிமளம் ஒன்றும் புரியாமல் முழித்து கொண்டிருந்தார்...

“இப்ப என்ன கேட்டேனு இவ இந்த குதி குதிக்கிறா?? ஒருவேளை ஆபிஸ்ல எதுவும் பிரச்சனையோ?? ஹ்ம்ம்ம் “ என்றவாறு பெருமூச்சை விட்டு தன் வேலையை பார்க்க சென்றார்...

ரவு 9 மணி அளவில் இன்னும் சாப்பிட வராமல் தன் அறையிலயே அடைந்து கிடந்த மகளை காண உள்ளே வந்தார் பரிமளம்...

அவள் சுருண்டு படுத்திருப்பதை கண்டு மனம் வலித்தது அவருக்கு.. தன் மகள் ஏதோ ஒரு வேதனையை மனதில் வைத்து கொண்டு மருகுவது  தெரிந்தது..

கடந்த இரண்டு நாளாகத்தான் இப்படி இருக்கிறாள்..

கடந்த ஆறு மாதம் முன்பு தன் கண்வனுக்கு திடீர் என்று  ஹார்ட் அட்டாக் வந்து இறந்ததில் இருந்தே இடிந்து போய் விட்டனர்  தாயும் மகளும்...

ஆனால் அப்ப கூட இரண்டே நாளில் தன் மனதை  தேற்றி கொண்டு தன் தாய்க்காக கவலையை துறந்து  வளைய வந்தவள்... பின் அவரையும் தேற்றி அந்த சூழலில் இருந்து மீட்டு கொண்டு வந்தவள்... 

வெளியில் சிரிக்காவிட்டாலும் முகத்தில் எந்த வேதனையும் இல்லாமல் ஒரு தெளிவுடன் தான் வளைய வந்து கொண்டிருந்தாள் தீக்சா..

ஆனால் கடந்த  இரண்டு நாளாகத்தான் ஒரு மாதிரி  வேதனையுடன் வளைய வருகிறாள்..

எது கேட்டாலும் எரிந்து விழுகிறாள்... ஆபிஸ் நிர்வாகம்  கை மாறுகிறது என்று  சொல்லியிருந்தாள்....

ஒரு வேளை  அதில் எதுவும் பிரச்சனையோ ?? எதுவானாலும் ஆண்டவா, என் குழந்தையை ரொம்ப சோதிக்காத..... அதுவும் இந்த நிலையில்.. “ என்று அந்த  ஆண்டவனிடம் வேண்டி கொண்டார் பரிமளம்....

பின் மெதுவாக கட்டிலின் அருகில் சென்றவர்

“தீக்சா.... “ என்று மெல்ல அழைத்தார்... தன் அன்னையின் குரலை கேட்டு மெல்ல கண் விழித்தாள் தீக்சா....

“சாப்பிட வாம்மா.. மணி 9 ஆச்சு பார்.. “ என்றார் கனிவுடன் அவள் தலையை வாஞ்சையுடன் வருடியவாறு..

“இல்ல மா... எனக்கு பசிக்கல...  நீங்க போய் சாப்பிட்டு படுங்க.. “ என்று சொல்லி மீண்டும் கண்ணை மூடி கொண்டாள்...

“அப்படி சொல்ல  கூடாது தீக்சா ... நீ இப்ப வாயும் வயிறுமா இருக்கிறவ.. நைட் சாப்பிடாம படுக்க கூடாது.. உன் வயித்துல இருக்கிற குழந்தைக்காவது கொஞ்சம் சாப்டிட்டு படு...

நீ சாப்பிடாமல் இருந்தால் அந்த குழந்தையும் உன்னோடு சேர்ந்து பட்டினி இருக்கும்... இரு நான் போய் சாப்பாடு பிசைந்து இங்கயே எடுத்துட்டு வர்ரேன்... “ என்றவாறு வெளியேறி சென்றார்...

அப்பொழுது தான் தன் நிலை உணர்ந்தாள் தீக்சா.. உடனே எழுந்து அமர்ந்தவள் தன் வயிற்றில் கை வைத்து கொண்டாள்....

ஆறு மாதம் ஆன வயிறு மெல்ல எட்டி பார்க்க ஆரம்பித்தது...

"சே.. என் கவலையில் இந்த குட்டியை கவனிக்காமல் விட்டுட்டனே.. “ என்றவாறு தன் கவலையை பின்னுக்கு தள்ளி தன் குழந்தையுடன் கொஞ்ச ஆரம்பித்தாள்...

“ஹலோ குட்டி.. உள்ள இருக்கிறது பையனா பொண்ணா? தெரியல... எதுவானாலும் நீங்க உங்கம்மா  மாதிரி தைர்யமா வளரணும்... இந்த உலகத்தை தைர்யமா பேஸ் பண்ணனும்... “ என்று ஏதேதோ பேசி கொண்டிருந்தாள்..

கையில் சாதத்தை எடுத்து கொண்டு வந்த பரிமளத்திற்கு சற்று  முன்பு வரை சுருண்டு படுத்திருந்த தன் மகள் இப்பொழுது அவள் குழந்தையுடன் கதை  அடித்து கொண்டிருப்பதை கண்டு மனம் நிம்மதி அடைந்தது..

"நல்ல பொண்ணு இவ...கொஞ்ச நேரத்துல என்னையே பயமுறுத்திட்டாளே... “ என்று  சொல்லி சிரித்துக் கொண்டே உள்ளே வந்தார்...

“என்ன சொல்றா என் பேத்தி??.. “ என்றார் சிரித்தவாறு...

“இந்த பாட்டி சமைக்கிறது நல்லா இல்லையாம்.. பாட்டிக்கு ரெஸ்ட் கொடுத்துட்டு  வேற நல்ல குக் ஆ  வைக்க சொல்றா... “ என்று சிரித்தாள்..

“ஹா ஹா ஹா .. இந்த  பாட்டி ரெஸ்ட் எடுத்து என்ன செய்ய போறேன் ??.. சமைக்கிறது மட்டும் தான் இப்ப நான் செய்யற ஒரே  வேலை.. அதுவும் வேண்டாமா?? நல்லா இருக்கே..” என்று  சிரித்தவாறே பிசைந்த சாதத்தை எடுத்து  தன் மகளுக்கு ஊட்டி விட்டார் பரிமளம்..

அவளும் அதை ஆசையாக வாங்கி கொண்டு ரசித்து உண்டாள்... இரண்டு வாய் சாப்பிட்ட பிறகு

“சாரி மா.. ஆபிஸ்ல கொஞ்சம் டென்சன்.. அதான் உன்கிட்ட கத்திட்டேன்...” என்று  மன்னிப்பு கோரினாள் வருத்தத்துடன்...

"இருக்கட்டும் தீக்சா.. நானும் அப்படிதான் ஏதாவது இருக்கும் னு நினைச்சேன்... என்ன பிரச்சனை?? "  என்று  கேட்க வந்தவர் இப்ப ஏன் அதை பற்றி கேட்கணும்  என்று  விட்டு விட்டார்....

"உங்க மாப்பிள்ளை போன் பண்ணினார் மா.. சீக்கிரம் வேலை எல்லாம் முடிச்சிட்டு உங்க பேத்தி பொறக்கறதுக்கு முன்னாடியே ஓடி வந்திடுவாராம்... இப்ப ஹேப்பியா?? “ என்று  தன் அன்னையின் கன்னத்தை பிடித்து கிள்ளி இரண்டு பக்கமும் ஆட்டினாள்...

“ஹ்ம்ம் ரொம்ப சந்தோசம் டீ.. சீக்கிரம் வந்திட்டு உன்னையும் கையோட அழைச்சிட்டு போய்ட்டா எனக்கு நிம்மதியா இருக்கும்....

என்னதான் நான் பொத்தி பொத்தி உன்னை பார்த்துகிட்டாலும் கல்யாணத்துக்கு பிறகு ஒரு பொண்ணு புருசனோட இருந்தாதான் அவளுக்கு மதிப்பு....

அதுவும் இல்லாம புருசன் பாத்துக்கிற  மாதிரி இருக்காது... “ என்றார் பரிமளம்..

அதை கேட்டு அவள் முகம் வேதனையில் சுறுங்கியது சில நொடிகள்.. அதற்குள் தன்னை சமாளித்து கொண்டாள்....

பின் தன் அன்னையிடம் அன்றைய நடப்புகளை பகிர்ந்து கொண்டு உண்டு முடித்தாள்..

எல்லாத்தையும் தன் அன்னையிடம் சொன்னவள் ஏனோ அபிநந்தனை பற்றி எதுவும் சொல்லவில்லை.. ஏனோ அவளுக்கு அவனை பற்றி  சொல்ல பிடிக்கவில்லை.... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!