பூங்கதவே தாழ் திறவாய்-6

 


இதழ்-6

 

ன்று சனிக்கிழமை...!  

தீக்சா பணிபுரியும் அந்த அலுவலகம் சனி ஞாயிறு இரண்டு நாட்களுமே விடுமுறை..

ஏதாவது முக்கிய வேலை இருக்கும் நாட்களில் மட்டும் தேவையானவர்கள் வந்து வேலை செய்வர்..

முன்னால் MD தாமஸ் பணத்தை பெரிதாக கருதாமல் அங்கு வேலை செய்தவர்களின் நலத்தில் அக்கறை எடுத்துக்  கொண்டதால் யாரையும் அதிக வேலையை செய்ய சொல்லி திணிக்க மாட்டார்...

வந்த வரைக்கும் போதும் என்ற மனநிலையில் அந்த அலுவலகத்தை நடத்தி வந்தார்...  

அதனாலயே  வாரம் இரண்டு நாளும் விடுமுறை அளித்திருந்தார்...

புது நிர்வாகம் எப்படி இருக்குமோ என்று  அனைவரும் பயந்து கொண்டிருக்க, புது  MD அபிநந்தனும் இப்போதைக்கு அந்த அலுவலகத்தின் வழக்கங்கள்  அப்படியே இருக்கட்டும்.. தேவை பட்டால் மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டான்...

அதனால் பெரும் நிம்மதி அங்கு வேலை செய்பவர்களுக்கு....

நேற்று இரவு தாமதமாக உறங்கிய தீக்சா காலையில் வெகு நேரம் கழித்தே எழுந்தாள்.. பரிமளம் ம்  அவளை  எழுப்பாமல் விட்டு விட்டார்...

காலையில் எழுந்தவள்  காலை கடன்களை  முடித்துவிட்டு பின் குளித்து தயாராகி வெளியில் வந்தாள்.. அன்று அவளுக்கு மாதாந்திர செக்கப்

மருத்துவமனைக்கு செல்வதற்காக தன் ரிப்போர்ட் ஐ எடுத்து கொண்டு தன் அறையை விட்டு வெளியில் வந்தாள் தீக்சா ...

தங்கத் தேர்  போல இருந்த தன் மகளையே இமைக்க மறந்து பார்த்தார் பரிமளம்...

இயல்பாகவே கொடி போன்ற உடலும் சந்தன நிற மேனியும் துறு துறு கண்ணும் ஆப்பிள் போன்ற கன்னமும் திரண்ட இதழும் கொண்டு பெண்ணின் அனைத்து இலட்சணங்களும் பொருந்தி இருப்பவள் தீக்சா..

இப்பொழுது தாய்மையின் அழகும் கூட இன்னும் அழகாக மிளிர்ந்தாள்... அவளையே இமைக்க மறந்து ரசித்து  பார்த்த தன் அன்னையை பார்த்து

“ என்ன மா அப்படி பார்க்கற?? “ என்று சிரித்தாள் தீக்சா.... சிரிக்கும் பொழுது கன்னத்தில் விழுந்த  குழி அவள் அழகை  இன்னும் தூக்கி காட்டியது...

“ஹ்ம்ம்ம் ரொம்ப அழகா இருக்க டா. என் கண்ணே பட்டுடும் போல இருக்கு.. இரு வர்ரேன்.. “என்றவாரு ஓடிப்போய்  கையில் மிளகாயும் கொஞ்சம்  உப்பும் எடுத்து கொண்டு வந்து அவள்  தலையை சுற்றி அவளை அதில் துப்ப வைத்து திருஷ்டி கழித்தார்...

“ஐயோ மா... என்ன  இதெல்லாம்??... “ என்று  அவரை கட்டி கொண்டு செல்லமாக கோவித்தாள் தீக்சா ...

“ஹ்ம்ம் என் மன திருப்திக்கு டி.. சரி.. நீ தனியா போய்டுவியா?? நானும் கூட வர்ரேனு சொன்னாலும் கேட்க மாட்டேங்குற  “ என்றார் வருத்தமாக..

“அதெல்லாம் போய்டுவேன் மா.. நான் என்ன வீக் ஆவா இருக்கேன்??.. இதெல்லாம் சமாளிச்சிடுவேன்.. “ என்று  சிரித்தாள்..

“சரி.. ஆட்டோலயாவது போடி.. உன் ஸ்கூட்டி வேண்டாம்.. “ என்றார்..

“ஹ்ம்ம்  தினமும் இந்த  ஸ்கூட்டியில தான போறேன்... அதெல்லாம் உன் பேத்திக்கு ஒன்னும் ஆகாது.. “ என்றாள்

“அது என்னடி வாய்க்கு வாய் பேத்தி னு சொல்ற?? ஏன் பேரனா இருந்துட்டா..” என்று  சிரித்தார் பரிமளம்...

“ஹ்ம்ம் இல்ல மா...  உன் மாப்பிள்ளைக்கு பொண்ணுதான் பிடிக்கும்...  பொண்ணுதான் பிறக்கணும், பிறக்கும் னு முன்னாடியே உறுதியா சொல்லியிருக்கார்... அதனால கண்டிப்பா பொண்ணுதான்.. “ என்றாள்..

அதோடு அவள் மனமும் அந்த நொடியை  தொட்டது...

தன் கணவன் மஞ்சத்தில் சாய்ந்து கொண்டு அவன் மீசையை பிடித்து இழுத்து கொண்டே ஏதோ பேசி கொண்டிருக்கும் பொழுது தங்களுக்கு பிறக்க போகும் குழந்தையை பற்றி பேச்சு வர,

ரதி பேபி.... எனக்கு பொண்ணுதான் பிடிக்கும்.. உன்னை மாதிரி க்யூட்டா துறுதுறு னு சுறுசுறுப்பா என்னை மாதிரி ஸ்மார்ட்டா நல்ல உயரமா வருவா என் மக..

.நீயெல்லாம் வேஸ்ட்.. அவ முன்னாடி நிக்க நீயெல்லாம் யோசிக்கணும்... எப்படி வளர்க்க போகிறேன் பார் என் பிரின்சசை.... ஊரே வாயில விரலை வச்சு பார்க்கும்...

நீ மட்டும் சீக்கிரம் என் பொண்ணை பெத்து கொடு டீ ....அப்புறம் பார்... ” என்று அவள் கன்னத்தை பிடித்து இரண்டு பக்கமும் ஆட்டியது நினைவு வர, கண்ணோரம் கரித்தது அவளுக்கு....

தன் அன்னை பார்க்குமுன்னே  அதை சுண்டி விட்டாள்..

பின் அவசரமாக செருப்பை மாட்டி கொண்டு வெளியேறினாள்..பார்க்கிங்  ஐ அடைந்து  தன் ரிப்போர்ட்  பைலை ஸ்கூட்டியின்  டிக்கியில் வைத்தவள் சேலையை  இலேசாக தூக்கி சொருகி  கொண்டு அதன் மீது அமர்ந்தாள்...

பின் தன் வயிற்றில் கை வைத்து

“ஹலோ ஜூனியர்... இப்ப நாம ஹாஸ்பிட்டல்க்கு போறோம்...அதுவரைக்கும் சமத்தா அம்மா  வயித்துக்குள்ள இருக்கணும்...

ஸ்கூட்டியில வச்சு உன்னை கூட்டிகிட்டு போகிறாளே என்று பயப்படக் கூடாது....போகலாமா?? “ என்று  சொல்லி  அந்த ஸ்கூட்டியை ஸ்டார்ட்  பண்ணினாள் தீக்சா...

அருகில் இருந்தவர் சிரித்து அவளை ஒரு மாதிரி பார்க்க, அவளும்  ஒரு அசட்டு  சிரிப்பை சிரித்து வைத்து வேகமாக தன் வண்டியை முறுக்கினாள்...

ந்த பிரமாண்ட மருத்துவமனையின் முன்னே தன் ஸ்கூட்டியை நிறுத்தியவள் டிக்கியை திறந்து தன் ரிப்போர்ட் ஐயும் பின் முன்னால் வைத்திருந்த  ஹேன்ட் பேக்கையும்  எடுத்து கொண்டாள்...

பின் வண்டியில் இருந்த சாவியை எடுத்து  ஸ்டைலாக சுழற்றி கொண்டு முன்னே நடந்தாள்...

அப்பொழுது அவள் அருகில் ஒரு கார் வந்து நிக்க அதில் இருந்து இறங்கிய  பெண்ணை இரண்டு பக்கமும்  ஒருத்தர் நின்று கொண்டு  அவளை மெல்ல கை தாங்களாக  அழைத்து வந்தனர்...

அந்த பெண்ணிற்கும் கிட்ட தட்ட ஆறு மாதம்  ஆகியிருக்கும்.. அவள் வயிறு கொஞ்சம் அதிகமாகவே வெளி வந்திருந்தது...

அவர்கள் அந்த பெண்ணை தனியாக நடக்க விடாமல்  தாங்கியதை  நினைத்து சிரித்து கொண்டு சாவியை சுழற்றிய படி மருத்துவமனையின்  உள்ளே சென்றாள்..

அவள் டோக்கன் எண் னை  சொல்லி கேட்க ஒரு 10 நிமிடம் காத்திருக்க சொன்னார்கள்..

காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள் தீக்சா...  

சுற்றிலும் கண்களை சுழல விட அந்த டாக்டர் மைதிலி  ஒரு பேமஸ் கைனிக் என்பதால் அங்கு காத்திருந்தவர்கள் எல்லோருமே அவளை போல தாய்மையுற்று இருந்தவர்கள்..

ஒவ்வொருவர் பக்கத்திலும் அவர்களுடைய கணவன்கள் அமர்ந்து அன்பாக தாங்கி கொண்டிருந்தனர்....

அந்த  பெண்களும் தாய்மையின் அவஸ்தையையும் தாண்டி தன் கணவனின் உயிரை, அவன் வாரிசை சுமக்கும் சிறு கர்வத்துடன் அமர்ந்து இருந்தனர்... 

இதையெல்லாம் பார்த்தவளுக்கு கொஞ்சம் ஏக்கமாக இருந்தது ..

தனக்கு இந்த கொடுப்பினை இல்லையே... என்று  வருந்தியவள் அடுத்த நொடி “சுய பச்சாதாபம் கூடாது... “என்று  சொல்லி தன் மனதை  அலைபாய விடாமல் கட்டி போட்டாள்..

அடுத்து அவளை அழைக்க, தீக்சாவும்  எழுந்து உள்ளே சென்றாள்...

டாக்டர் மைதிலி புன்னகைத்து அவளை  வரவேற்றார்..

“என்ன தீக்சா.. எப்படி இருக்க ??... என்று  விசாரித்தவாறு தன் பரிசோதனையை  ஆரம்பித்தார்...

ஸ்கேன் பண்ணி  பார்க்க என்று  அவளை படுக்க வைத்து அவர் ட்யூட்டியை செய்து கொண்டிருந்தார்...

“ஆமா..  எப்ப உன் ஹஸ்பன்ட் துபாய் ல இருந்து வர்ரார்?? “ என்றார் மைதிலி...

“சீக்கிரம் வந்திடறேனு சொல்லி இருக்கார்  டாக்டர்... “ என்று  சிரித்தாள் தீக்சா..

“இதையே தான் முதல் மாதம்  வந்ததில் இருந்து சொல்லிகிட்டிருக்க.. இந்த மாதிரி வாயும் வயிறுமா இருக்கிறப்ப புருசன் பக்கத்துல இருந்து அக்கறையா பார்த்துக்கிறதில்லையா?? “ என்றார் வருத்தமாக

“அவர் வேலை அப்படி டாக்டர்.. நாம என்ன  பண்ண முடியும்.. “ என்றாள் தன் வேதனையை மறைத்து கொண்டு..

“பரவாயில்லையே...  உன் புருசனை ஒன்னு சொல்ல விட மாட்டேங்குற.. கொடுத்து  வச்சவர் தான் .. “ என்று  சிரித்தார் மைதிலி....

தீக்சாவும் அவருடன் இணைந்து சிரித்தாள்...

பின் தீக்சாவுக்கு ஏதோ நினைவு வர, 

“டாக்டர்.. என் பிரண்ட் சொன்னா .. பேபி 5 மாசம் இருக்கும் பொழுதே  உள்ள அசைய ஆரம்பிக்குமாம்... ஆனால் எனக்கு இப்ப 6 மாதம் ஆகிடுச்சு.... இன்னும் அப்படி எதுவும் தெரியலையே.. “ என்றாள் கவலையாக

“ஹா ஹா ஹா ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் தீக்சா... உன் பேபி அம்மாவை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம் னு இன்னும் சமத்தா தூங்கி கிட்டிருக்காளோ என்னவோ?? “ என்று சிரித்தவர் பின் ஏதோ யோசித்து

“நீ பயங்கர சுறுசுறுப்பு.. உன் ஹஸ்பன்ட்  எப்படி??.. ஒரு வேளை அவர் கொஞ்சம் சோம்பேறியா இருந்தால் அவரை மாதிரி கூட உன் பேபியும்  கொஞ்சம் lazy ஆ இருக்கலாம்...” என்று சிரித்தார்...

உடனே இந்த குழந்தையின் தந்தையை நினைவுக்கு கொண்டு வந்தவள்

“இல்ல டாக்டர்.. அவர் பயங்கர ஆக்டிவ்.. ஒரு இடத்துல நிக்க மாட்டார்...24 மணி நேரம் பத்தாது அவருக்கு...  “ என்றாள் பெருமையாக

“ஹ்ம்ம்ம் அப்படீனா  உன் பேபியும் அப்படித் தான் இருப்பா... கொஞ்ச நாள் ஆகும்.. எதுக்கும் நீ மானிட்டர் பண்ணிகிட்டே இரு... தினமும் மூவ்மென்ட் இருக்கணும்..

இன்னும் ஒரு வாரம் பார்க்கலாம்.. அப்படி எதுவும் மூவ் ஆகலைனா இன்னொரு டெஸ்ட்  எடுத்து பார்க்கலாம்.. இப்ப டெஸ்ட் பண்ணி பார்த்தவரைக்கும் எதுவும் பிரச்சனை இல்லை...

நீ எதுவும் பயந்துக்காத..” என்று அவள் கன்னம் வருடினார் மைதிலி....

ஏனோ  தீக்சாவை அவருக்கு ரொம்ப பிடிக்கும்... இந்த குழந்தை உருவானதில் முதல் தரம் மட்டுமே தன் அன்னையுடன் வந்திருந்தாள்...

அடுத்து வந்த செக்கப் எல்லாமே அவள் தனியாகத்தான் வருவாள்.. மற்ற பெண்களை போல பயப்படாமல் தன் தாய்மையின் ஒவ்வொரு கட்டத்தையும் தைர்யமாக தாண்டி வந்திருக்கிறாள்...

அவளுடைய தைர்யத்தையும் நிமிர்வையும் கண்டு அதிசயித்து நிற்பார் மைதிலி...அதனாலயே என்னவோ அவளை ரொம்ப பிடித்து விட்டது அவருக்கு....

டாக்டர் சொன்ன அறிவுரைகளை கவனமாக கேட்டவள்

“ஸ்யூர்  டாக்டர்.. “ என்று  அவளும் சிரித்தாள்..

பின் அந்த திரையை  காட்டி அந்த குழந்தையின் வளர்ச்சியை காட்டினார்... பின் ஸ்டெதஸ் ஐ எடுத்து அவள் காதில் வைத்து  

“உன் பேபியோட ஹார்ட் பிட் ஐ கேள்.. “ என்று வைத்தார்...

அந்த குட்டி இதயம் துடிப்பதை கேட்டதும்

தன் கணவன்  மார்பில் படுத்துக் கொண்டிருக்கும் பொழுது அவன் நெஞ்சில் காதை வைத்து அவன் இதய துடிப்பை கேட்ட பொழுது எழுந்த அதே பரவசம் இன்று  அவன் உயிரின்,  அவன் மகளின் இதய துடிப்பை கேட்கும் பொழுதும்  எழுந்தது...

அதில் அப்படியே உருகி போனாள் தீக்சா...

“வாவ்... சூப்பரா இருக்கு டாக்டர்... “ என்றாள் மகிழ்ச்சியோடு..

“ஹ்ம்ம்ம் இனிமேல் நீ கொஞ்சம் கேர்புல்லா இரு தீக்சா... வண்டி ஓட்டும் பொழுது பார்த்து ஓட்டு... “ என்று  இன்னும் சில அறிவுரைகளை வழங்கினார்..

அவள் அதை கவனமாக கேட்டு கொண்டு பின் அவரிடம் விடை  பெற்று கிளம்பி  சென்றாள்...

அவள் மனம் நிறைந்து இருந்தது....அதுவும் அந்த ஹார்ட் பிட் இன்னும் அவள் காதில் ஒலிக்க, அதே மகிழ்ச்சியான மன நிலையுடன் தன் இல்லம் நோக்கி விரைந்தாள் தீக்சா...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!