பூங்கதவே தாழ் திறவாய்-7

 


இதழ்-7

 

திங்கள் கிழமை....

அந்த வார விடுமுறையின்  இரண்டு நாட்களும் ஆட்டம் போட்டு களித்தவர்கள் வேண்டா வெறுப்பாக இந்த திங்கள் கிழமை ஏன் வந்தது  என்று  திட்டி கொண்டே அலுவலகம் கிளம்பி சென்றனர்...

தீக்சாவும் கிளம்பி தன் அலுவலகத்தை அடைந்தாள்...

உள்ளே நுழைந்ததும் அவள் உடன் பணிபுரிபவர்களுக்கு காலை வணக்கம் சொல்லி புத்துணர்ச்சியுடன் அந்த நாளை  துவக்க அடுத்த நொடியே அவள் இன்டர்காம் அழைத்தது....அபிநந்தன்  தான் அழைத்திருந்தான்...

அவன் அழைப்பை ஏற்றதும்

“Come to my room “ என்று கட்டளையிட அவளும் அசராமல்  தன் தோளை குலுக்கி கையில் ஒரு நோட் புக்குடன் உள்ளே சென்றாள்...

அவளும் அவனுக்கு காலை வணக்கம் சொல்ல வில்லை.. அவனும் கண்டு கொள்ளவில்லை..

நேராக விசயத்திற்கு வந்தான்...

“தீக்சா... “ என்று ஆரம்பிக்க அவளோ “பிரதிக்சா.. “ என்று திருத்தினாள்..

“லுக்..  நீ தீக்சா வோ பிரதிக்சா வோ ?? அது எனக்கு முக்கியமில்லை.... எனக்கு என் கம்பெனிதான் முக்கியம்..

உன் பேரை  பிரதிக்சா னு நீட்டி முழக்க முடியாது.. சோ எனக்கு எப்படி புடிக்குதோ ஐ மீன் எப்படி வாயில வருதோ அப்படிதான் கூப்பிடுவேன்,.. “ என்றான் மிடுக்காக...

அதை கேட்டு அவனை முறைத்தவாறு நின்றாள் தீக்சா...

“ஓகே மிஸ்டர்.. அபிநந்தன்.. இப்ப எதுக்காக என்னை அழைத்தீர்கள்?? அதை விட்டு இப்படி என் பேரை ஆராய்ச்சி பண்ண வேண்டாம்.. இந்த சில நொடிகளில் உங்க கம்பெனியின் இலாபம் பல மடங்கு சரிந்திருக்குமே... “ என்றாள் உதட்டை வளைத்து நக்கலாக....

அவளின் அந்த வளைந்த உதட்டின் மீது சொக்கி நின்றது அவன் பார்வை...

அவளின் நிமிர்வும் எதற்கும் அஞ்சாமல் பதில் அளிக்கும் அவளின் திமிரும், ஏளனமாக வளைந்த அவள் இதழ்களும் கண்டு அவனுக்குள் என்னவோ புரண்டது....

அவளை அப்படியே இறுக்க அணைத்து ஏளனமாக வளைந்த அந்த திரண்ட இதழுக்கு தகுந்த தண்டனை கொடுக்க வேண்டும் போல துடித்தது அவன் இதழ்கள்...

அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான் சில நொடிகள்... அவன் பார்வையை கண்டு கொண்டவள் உள்ளேயும் சில்லிட்டது...அவள் உள்ளேயும் எதுவோ வேதியல் மாற்றம் நடப்பதை போல இருந்தது...

ஒரு நொடிதான்... அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள் அவனை ஒரு எரித்து விடும் பார்வை பார்த்து 

 “லுக் மிஸ்டர் அபிநந்தன்... என்னை சைட் அடிச்சது போதும்... நீங்கள் என்னை அழைத்த காரணத்தை சொல்றீங்களா?? “  என்றாள் வெறித்த பார்வையுடன்...

அதை கேட்டு திடுக்கிட்டான் அபிநந்தன்...

“சே.. இப்படியா இவளை பார்த்து வைப்பது ?? அதையும் அவள் கண்டு கொண்டு அதை வேற இப்படி ஓபனா சொல்றாளே... ரொம்பவும் தைர்யம்தான்... ஆனாலும் என் புத்தி வரவர ரொம்ப மோசமா போகுது...

ஆனால் அதெல்லாம் இவளை பார்த்தால் மட்டும் தான்....ஒரு வேளை சொக்கு பொடி னு சொல்லுவாங்களே .. அந்த மாதிரி எதுவும் எனக்கு போட்டுவிட்டாளா?? “ என்று  அவசரமாக ஆராய்ந்தவன் அவள் இன்னும் அவனையே முறைத்து பார்க்க, தன்னை சமாளித்து கொண்டவன்

“நான் சைட் அடிக்கும் அளவுக்கு நீ ஒன்னும் பெரிய ரதி இல்லை... “ என்றான் அவனும் ஏளனமாக உதட்டை வளைத்து...

அவனின் ரதி  என்ற பெயரை கேட்டதும் அவளுக்குள் ஆயிரம் ஆயிரம் பூக்கள் அவள் மீது கொட்டியதை போல இருந்தது...

ஆனால் அதற்குள் பழைய நினைவுகள் வர, உடனே இறுகி போனாள்... அவனை மீண்டும் ஒரு வெறித்த பார்வை பார்த்து

“நான் ரதியாக இருப்பதற்கு  நீங்கள் ஒன்றும் மன்மதன் இல்லை.... இப்ப வேலையை பார்க்கலாமா??  “ என்றாள் அதே வெறித்த பார்வையுடன்...

அதற்கு மேல் அவளிடம் விவாதிக்காமல் சென்ற வாரம் அவன் திட்டமிட்டிருந்த சில மாற்றங்களை அவளுக்கு விளக்கி அதை  எப்படி செயல் படுத்துவது  என்று  விளக்கினான்...

“இதையெல்லாம் சீக்கிரம் டைப் பண்ணி கொண்டு வா... அதோடு எனக்கு கடந்த மூன்றாண்டு பேலன்ஸ்  சீட் வேணும்.. அதையும் சீக்கிரம் கொண்டு வா.. “ என்று விரட்டினான்...

மதியம் உண்ணக்கூடா நேரமில்லாமல் படுத்தி எடுத்தான் அவளை வேண்டும் என்றே..

அவளும் அவன் கேட்ட விவரங்களை வேகமாக ரெடி பண்ணி  கொடுக்க, உடனே அடுத்த லிஸ்ட் தயாராக இருந்தது....

இதில் மதியம் பசி எடுக்க, அவசரமாக தன் டப்பாவை திறந்து அவள் டெஸ்க்கிலயே இரண்டு வாய் சாப்பிட்டு விட்டு தன் வேலையை தொடர்ந்தாள்....

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மாலை முழுவதுமே சில மீட்டிங் வைத்து அந்த கம்பெனியின் நிலையை அனைவருக்கும் விளக்கினான்....

தாமஸ் இருந்த வரை இலாபத்தை  பெரிதாக கருதவில்லை.. ஆனால் இப்படியே சென்றால் போட்டி நிறுவனங்கள் மேலே வந்து விடுவார்கள்..

நாம் இந்த அலுவலகத்தையே மூடும் நிலை வரும்.. “ என்று  அனைவருக்கும் விளக்கி அடுத்து என்ன செய்வது என்றும் தன் திட்டத்தை  விளக்கினான்...

அனைவரும் அவன் சொல்வது சரியாக இருக்க எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஒத்து கொண்டனர்.. அவர்கள் ஒத்து கொள்ளும் வகையில் டேட்டாவை கலெக்ட் பண்ணி அதை விளக்கி இருந்தான்...

அவனின் வேகத்தையும் திறமையையும்  கண்டு அதிசயித்தாள் தீக்சா தன்னையும் மறந்து......

 ரு வழியாக அவளை இங்கும் அங்கும் அலைக்கழித்து , விரட்டி கொண்டே இருந்தான் அந்த  நாள் முழுவதும்...

அவளும் சலைக்காமல் அவனுக்கு ஈடு கொடுத்து ஓட அவனுமே அவளின் வேகத்தை கண்டு மெச்சி கொண்டான்....

மாலை 6 மணி நெருங்கும் வேளையில் வேண்டும் என்றே அவளுக்கு முடிக்க சொல்லி இன்னும் கொஞ்சம் வேலையை கொடுக்க, அன்று  மாலை 6 மணிக்கு வழக்கம் போல அவள் கிளம்பி இருக்கவில்லை...

மாலை 6 மணி  தாண்டியும் தன் இடத்தில் அமர்ந்து சின்சியராக வேலை பார்த்து கொண்டிருந்தவளை கண்டதும்

“யெஸ்.... “ என்று தன் கையை மடக்கி பின்னால் இழுத்து குதித்து கொண்டான் சின்ன பையனாக..

“என்கிட்டயா சவால் விட்ட?.. மாலை 6 மணிக்கு மேல் இலட்சம் ரூபா கொடுத்தா கூடா வேலை செய்ய மாட்டேன் என்ற ரேஞ்சில்  என்ன திமிரா சொன்ன.. இப்ப பார்... உன்னை 6 மணிக்கு மேல வேலை செய்ய வச்சுட்டேன்...

யார் கிட்ட உன் திமிரை காட்டற ??.. இந்த அபினா சும்மா இல்லை... “  என்று அவனுக்குள்ளயே சொல்லி  மார் தட்டி கொண்டான்...

தீக்சாவும் அவன் கேட்டதை எல்லாம் ரெடி பண்ணி எடுத்து கொண்டு உள்ளே வந்தாள்...

வேண்டும் என்றே அவன் கடிகாரத்தை பார்த்தான்.. மணி 7 ஆகியிருந்ததை சுட்டி காட்டும் வகையில்...

அவன் முன்பு தான் 6 மணிக்கு மேல வேலை செய்ய மாட்டேன் என்று  சொன்னதைத் தான் நக்கலாக மறைமுகமாக சொல்லி காண்பிக்கிறான்  என்று  புரிந்து கொண்டவள்

“லுக் மிஸ்டர் அபிநந்தன்... நீங்கள் கேட்டது எவ்வளவு முக்கியமான மேட்டர்.. அது இந்த கம்பெனிக்கு எப்படி உதவ போகிறது னு தெரிஞ்சதால தான் நானே  முன் வந்து இதை 6 மணிக்கு மேல இருந்து முடித்து கொடுத்தேன்...

இதுவே இம்பார்ட்டன்ட் இல்லாத வேலையாக இருந்தால் இந்த தீக்சா ஒரு நொடி கூட இருந்திருக்க மாட்டாள்...

பெருசா என்னை  ஜெயித்து விட்டதாக மார் தட்டி கொள்ளாதிர்கள்.. இது நானா பார்த்து உங்களுக்கு கொடுத்த வெற்றியாக்கும்.... பை.. “  

என்றவள் வேகமாக வெளியேறினாள் அவன் பதிலுக்கு கூட காத்திருக்காமல்....

அவள் சென்ற திசையையே பார்த்து இருந்தான் சில நொடிகள்.. அலை அடித்து ஓய்ந்த மாதிரி  இருந்தது.... ஆனாலும் அவளின் அந்த திமிரும் நேருக்கு நேர் நின்று ஓபனாக பேசும் அவளின் குணமும் அவனுக்கு பிடித்து இருந்தது....

“Interesting girl… “ என்று தனக்குள் சொல்லி சிரித்து கொண்டான்..

அதே நேரம் மாயாவிடம் இருந்து அழைப்பு வந்திருக்க, அதை கண்டு திடுக்கிட்டான்...

“நான் எப்படி அடுத்த பெண்ணின் மீது ஆர்வமாக , அவளை ரசிக்க ஆரம்பித்து விட்டேன்?? .. இல்லை இது தப்பு.. இது நான் மாயாவுக்கு செய்யும் துரோகம்...

இந்த தீக்சாவை வீழ்த்தறேன் என்று  அவள் விரித்த வலையில் நான் விழுந்து விடக் கூடாது... இனிமேல் இவளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் இருக்கணும்..”  என்று  முடிவு செய்து கொண்டான் அபிநந்தன்...

முடிவு செய்வது என்பது என்னவோ சுலபம் தான்... ஆனால்  அதை நடைமுறை படுத்துவானா??

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!