பூங்கதவே தாழ் திறவாய்-8
இதழ்-8
மறுநாள் காலையிலயே தன் அலுவலகத்திற்கு வந்து விட்டான்
அபிநந்தன்...
இன்று
அதே சிக்னலில் நிற்க, அவன் கண்கள் தானாக முன்பு அவள் இருந்த இடத்திற்கு சென்றது....
இன்று
அவனை ஆச்சர்யபடுத்தும் விதத்தில் அதே இடத்தில் அவள் இருந்தாள்.. இன்றும் புடவைதான்
கட்டி இருந்தாள்...
அவன்
கண்கள் அவனையும் மீறி அவள் இடைக்கு தாவி சென்றது...இலேசாக மேடிட்டிருந்த அவள்
வயிற்றின் மீதே அவன் பார்வை நிலைத்து இருந்தது...
ஏனோ
அவள் வயிற்றை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் போல இருந்தது....
அதற்குள்
கிரீன் சிக்னல் வந்திருக்க, அவள் உடனே வேகமாக பறந்து விட்டாள்... அவள் ஸ்கூட்டி ஓட்டும் அழகையே
பின்னால் இருந்து ரசித்தவாறே தன் காரை செலுத்தி கொண்டிருந்தான் அபிநந்தன்...
அலுவலகம்
அடைந்ததும் தன் அறைக்கு வந்தவன் அன்றைய அஜென்டாவை ஒரு முறை நினைவு படுத்தி
கொண்டான்... ஜெசியை அழைத்து அன்றைய சில வேலைகளை பட்டியலிட்டான்...
பின்
தீக்சாவை தன் அறைக்கு அழைத்தவன், அவள் உள்ளே வர, அவன் பார்வையோ அவள் இடைக்கு
மீண்டும் தாவி சென்றது...
அவன்
பார்வை போகும் இடத்தை கண்டு கொண்டவள் தன் சேலையை இழுத்து விட்டு கொண்டு அவனை
பார்த்து முறைத்தாள்... அதற்குள் தன்னை சமாளித்தவன்
“லுக்
தீக்சா.... நமக்கு ஒரு பெரிய ஆர்டர் கிடைக்க
வாய்ப்பிருக்கு... இது என்னோட அபி கன்ஸ்ட்ரக்சன் ல செய்யற ப்ராஜெக்ட்..
இவ்வளவு
நாளா இன்டீரியருக்கு கஸ்டமரே வேற யார்கிட்டயாவது
கொடுக்க சொல்லிடுவோம்... இன்டீரியர் வொர்க் நம்ம கன்ஸ்ட்ரக்சன் ல வராது...பில்டிங்
முடித்து கொடுப்பது மட்டும்தான் நம்மளோட பொறுப்பு....
இப்ப
நம்ம கம்பெனியே இன்டீரியர் பீல்ட் லயும் இருக்கிறதால நாமளும் கஸ்டமரை அப்ரோச் பண்ணலாம் இன்டீரியருக்கு.
இந்த
புராஜெக்ட் எப்படியாவது நமக்கு கிடைச்சாகணும்... அப்பதான் இந்த கம்பெனியை நாம
காப்பாத்த முடியும்...
சோ..
என்ன பண்ற... நீ என் கூட கிளம்பி வர்ர.. அந்த இடத்தை நாம் இரண்டு பேரும் நேர்ல பார்த்துட்டு அப்புறம் சில இன்டீரியர் டிசைன்ஸ் ரெடி பண்ணி
ஒவ்வொன்னுக்கும் தனித்தனியா கொடேசன் ரெடி
பண்ணனும் ... என்ன புரிஞ்சுதா?? “ என்றான் ஆராயும் பார்வையுடன்...
அவன் சொன்னதை கவனமாக கேட்டு கொண்டவள்
“ஸ்யூர் மிஸ்டர் அபிநந்தன்...” என்றாள்...
“சரி.. அப்ப கிளம்பு.. இப்பயே போகணும்... “
என்றான் மீண்டும் அதே ஆராயும் பார்வையுடன்..
“ஐம் ரெடி மிஸ்டர் அபிநந்தன்..லெட்ஸ்
கோ... “ என்றவள் அவன் அறையை விட்டு வெளியில் வந்தாள்... தன் டெஸ்க்கிற்கு சென்று
தன் ஹேண்ட் பேக்கை எடுத்து கொண்டு அவன் முன்னே நடந்தாள்...
அவனுக்கு நம்பவே முடியவில்லை... அவளை
தன்னுடன் வெளியில் வர சொன்னால் அவள் மறுப்பாள்...
அதை வைத்து அவளை திட்டலாம் என்று இரண்டு நாளாக யோசித்து திட்டம் தீட்டியிருக்க அதை
இப்படி பல்ப் வாங்க வச்சிட்டாளே...
அவன் கேட்டதும் உடனேயே தன்னுடன் வர
ஒத்து கொண்டாளே... “ என்று
அதிசயித்தான்..
அவள் தன் ஹேன்ட்பேக்கை எடுத்து கொண்டு
வெளியில் நிற்பது தெரிய அவனும் எழுந்து அவளுடன் நடந்தான்....
அவர்கள் இருவரும் ஒன்றாக வெளியில்
கிளம்புவதை கண்டு ஜெசியின் வயிறு எரிந்தது....
“சே... இவனை எப்படியாவது மடக்கி நம்ம
கைகுள்ள போட்டுக்கலாம்னு இருந்தால் இந்த தீக்சா இப்ப குறுக்க வந்திட்டாளே...இவளை
எப்படி சரி கட்டுவது?? “ என்று அவசரமாக யோசித்தாள் ஜெசி...
இருவரும் லிப்ட் ஐ விட்டு வெளியில்
வந்து அவன் கார்க்காக காத்திருக்க, எதேச்சையாக் அவன்
பார்வை மீண்டும் அவள் வயிற்றுக்கு சென்றது... ஏதோ ஒன்று அவனை கட்டி இழுத்தது...
"அவள் முகத்தைவிட இந்த வயிற்று பகுதி
ஏன் இப்படி என்னை இழுக்குது??.. முதல் நாள் பார்த்தப்போ கூட அதுதான் அவனை சுண்டி இழுத்தது போலும்.."
என்று ஆராய்ந்தவாறே நின்று கொண்டிருந்தான்...
உடனே அவனுக்கு மாயா ஞாபகம் வர, உடனே தன் தலையை தட்டி கொண்டான்...
அப்பொழுது கார் வந்து நிக்க, தீக்சா எதுவும் யோசிக்காமல்
முன்னால் கதவை திறந்து கொண்டு அமர்ந்தாள்....
அபியும் ஓட்டுனர் பக்கம் இருந்த கதவை திறந்து
கொண்டு உள்ளே அமர்ந்து பின் காரை கிளப்பி சென்றான்...
அது
ஒரு பெரிய விஐபி ஓட பங்களா.. அபி கன்ஸ்ட்ரக்சன்ஸ் ல இருந்துதான் கட்டி கொண்டிருந்தார்கள்..
ஓரளவுக்கு எல்லா வேலையும் முடிந்து இருந்தது...
அந்த பங்களாவின் பிளானையும் டிசைனையும் கண்டு ஆச்சர்யபட்டாள் தீக்சா.. எந்த இடத்தையும் வேஸ்ட் பண்ணாமல் அனைத்து நவீன வசதிகளும்
பொருந்தி இருக்க பக்கவாக பிளான் பண்ணி இருந்தார்கள்..
“இந்த ப்ளான் கண்டிப்பா இவனோடதாதான் இருக்கும்.. பரவாயில்லை.. நல்லாதான் பண்ணி இருக்கான்.. “ என்று
உள்ளுக்குள் மெச்சி கொண்டாள்....
பின் இருவரும் காரை விட்டு இறங்கி அந்த பங்களாவின் உள்ளே சென்றனர்...
அந்த பங்களாவை சுற்றி காண்பித்து எந்த இடத்தில் எப்படி இன்டீரியர் டிசைன்
பண்ணலாம் என்று இருவரும் சிறிது நேரம்
விவாதித்தனர்....
காரில் வரும் பொழுது எதுவும் பேசாமல்
வாயில் பூட்டு போட்டிருந்தவள் தொழிலை பற்றி பேச ஆரம்பிக்கவும் பூட்டை திறந்து வைத்துவிட்டு சரளமாக அவனுடன் பேச ஆரம்பித்தாள்..
அவனுக்கே ஆச்சரியம் அவள் இத்தனை விசயங்களை
தெரிந்து வைத்திருக்கிறாள் என்று...
அதோடு கன்ஸ்ட்ரக்சன் பற்றியும் நிறைய
பாய்ன்ட்ஸ் சொன்னாள்...
அவளுக்கு இன்டீரியர் பற்றி ஒன்றும் தெரியாது...அவளை நேரில் அழைத்து வந்து
காண்பித்து அவளிடம் இன்டீரியர் டிசைன்ஸ் பற்றி கேட்டு அவள் ஒன்றும் தெரியாமல்
முழிப்பாள்...
அதை வைத்து அவளை மட்டம் தட்டலாம்..
" என்று போட்டிருந்த திட்டமும் பல்ப் வாங்க, அவளை ஒரு வித அதிசய பெண்ணாக பார்த்தான் அபிநந்தன்...
ஒரு வழியாக எல்லாத்தையும் சுற்றி பார்த்துவிட்டு தன்
குறிப்பேட்டில் குறித்து கொண்டாள் தீக்சா...
அவளுடைய் சின்சியாரிட்டியை கண்டவன்
"தாமஸ் அங்கிள் சரியான
ஆளைத்தான் செலக்ட் பண்ணி இருக்கிறார் போல.. " என்று மெச்சி
கொண்டான்...
பின் ட்யூப்லக்ஷ் மாடலில் இருந்த
அந்த பங்களாவில் முதல் தளத்தில் எல்லாம் சுற்றி பார்த்து பின் உள்ளே இருந்த அந்த மாடிப்படியில் கீழ இறங்க முயல, தீக்சா முதலாவதாக கீழ் இறங்கினாள்..
ஏதோ நினைப்பில் இருந்தவள் கால் இடறி
கீழ விழப் போக, அவள் பின்னால் நின்றிருந்த
அபி அனிச்சையாக அவள் இடையோடு சேர்த்து பிடித்து பின்னால் இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்...
இடையில் பட்ட அவன் கை அவள் வயிற்றில்
பதிந்திருக்க, அதுவரை உறங்கி
கொண்டிருந்த அந்த குட்டி விழித்து
கொண்டாள்...
உடனே துள்ளி எழுந்து குதிக்க
ஆரம்பித்தாள் தன் அன்னையின் வயிற்றில்....
அது தான் தீக்சாவுக்கும் முதல்
அனுபவம் என்பதால் ஆ வென்று கத்திவிட்டாள்...
அபிநந்தனுக்குமே அவள் வயிற்றில்
இருந்து ஏதோ ஒன்று உருள்வது அவன் கைகளுக்கு தெரிந்தது.. அவன் கைகள் குறுகுறுக்க
அவன் உடல் எல்லாம் இனம் புரியாத பரவசம் பரவியது....
சில நொடிகள் அந்த சுகத்தை அனுபவித்து தன்னை மறந்து நின்றான் அவளை
விலக்காமல்...
தீக்சாவுமே சில நொடிகள் தன்னை மறந்து
அவன் அணைப்பில் மயங்கி நின்று விட்டாள்..
பின் சுய நினைவுக்கு வந்தவள் அவனிடமிருந்து துள்ளி குதித்து விலகினாள்...
அப்பொழுது அவள் புடவை நன்றாக விலகி
இருந்தது..
விலகி இருந்த புடவை வழியாக அவளின்
இலேசாக மேடிட்டிருந்த அவள் வயிறு இப்பொழுது நன்றாக தெரிந்தது அவன் பார்வைக்கு...
அவன் பார்வையை கண்டவள் வேகமாக தன்
புடவையை சரியாக இழுத்து விட்டு கொண்டு அவனை பார்த்து முறைத்தாள் சிவந்த
முகத்துடன்....
அப்பொழுதுதான் அவனுக்கு உரைத்தது
அவள் பிரக்னன்ட் ஆக இருக்கிறாள் என்று... அதுதான் அவள் வயிறு வித்தியாசமாக இருந்ததோ...
அன்று முதல் நாள் அவன் அவளை தாங்கி பிடித்தபொழுதும் வேற மாதிரி உணர்வு வந்தது இப்பொழுது புரிந்தது...
“அப்படி என்றால் இவள் திருமணம் ஆனவளா?? என்று குனிந்து அவள் பாதத்தை
பார்க்க, அவள் கால் விரலில் இருந்த மெட்டி அவனை பார்த்து
சிரித்தது...
அன்று ஸ்கூட்டியில் பார்க்கும் பொழுது கணுக்காலுடன்
நிறுத்தி விட்டான் தன் பார்வையை.. .அந்த கொலுசு அவள் காலை கொஞ்சும் அழகை மட்டும்
ரசித்து விட்டு கீழ பார்க்க மறந்திருந்தான்...
அதே போல அவள் கண்ணை பார்த்தவன்
அதற்கு சற்று மேல் நெற்றி வகிட்டில் இலேசாக வைத்திருந்த குங்குமத்தை கவனிக்க தவறி இருந்தான்...
சாதரணமாக பார்த்தால் அவ்வளவு எளிதாக
தெரியாது அவள் வைத்திருந்த குங்குமம்...
இதையெல்லாம் வைத்து அவள் திருமணம் ஆனவள்
என்று உறுதியாகி விட ஏதோ ஒன்று அவன் உள்ளே உடைந்தது போல இருந்தது.. அவன் நெஞ்சில்
பாரம் வைத்து அழுத்தின மாதிரி ஒரு வலி....தனக்கு கிடைத்த ஏதோ ஒன்று கை நழுவி சென்ற
மாதிரி ஒரு வலி அவன் இதயத்தை கசக்கியது....
ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டு
“சாரி... “ என்றான் கீழ குனிந்தவாறு
அவள் அவனை எரித்து விடும் பார்வை பார்த்து பின் வேகமாக கீழிறங்கி
சென்றாள்..
“ஆங்.. இப்ப எதுக்கு இப்படி கோபமா போறா??... அவள் கீழ விழாம தான பிடிச்சேன்.. அதுக்கு போய் ஒரு நன்றி கூட
சொல்லாமல்?? “ என்று யோசித்தான்....
“ஹா ஹா ஹா அட மக்கு அபி... நீ கீழ
விழாமல் பிடிச்சது கரெக்ட்தான்.. ஆனா நீ கையை இல்ல பிடிச்சு நிறுத்தி
இருக்கணும்... அது என்ன எப்ப பார் அவள் இடையோடு புடிச்சு நிறுத்தறது.. அதான் கோபமா போய்ட்டா
போல... “ என்று சிரித்தது அவன் மனசாட்சி...
அவனுக்குமே அது ஆச்சரியம்தான்.. ஏனோ அவள் வயிற்றுக்குத்தான் தன் பார்வை அடிக்கடி செல்கிறது என்று புரிந்தது
இப்பொழுது... அது ஏன் என்றுதான் தெரியவில்லை.......
வேகமாக வெளியேறியவள் கார் அருகில் சென்று நின்றிருக்க, அவனும் நடந்து சென்று காரை அடைந்தான்.. ஏற்கனவே இருவரும் அனைத்தையும் சுற்றி
பார்த்து விட்டனர்..
அதனால்
காரை கிளப்பி சென்றான்...சிறிது தூரம்
சென்றதும் தீக்சாவின் பக்கம் திரும்பி
“சாரி
தீக்சா.. நீங்க பிரக்னென்ட் ஆ இருக்கறது எனக்கு தெரியாது..... இல்லைனா இவ்வளவு தூரம்
உன்னை அழைய வச்சிருக்க மாட்டேன்.. “ என்றான் உண்மையான வருத்தத்துடன்...
"பிரக்னென்சி
என்பது ஒரு டிசிஸ் இல்ல மிஸ்டர் அபிநந்தன்.. இந்த நேரத்துல பெண்கள் எல்லா வேலையும்
தாராளமா செய்யலாம் அவங்கவங்க பிசிக்கல் கண்டிசனை பொருத்து...
நான்
பிசிக்கலா ஆல்ரைட்.... அதனால் ஒரு பிரச்சனையும் இல்ல... “ என்றாள் அவனை தீர்க்கமாக பார்த்து..
"ஆனாலும்
எப்படி பேபியை வயித்துல வச்சுகிட்டு இவ்வளவு ஈசியா நடக்கற?? ஸ்கூட்டி ஓட்டற?? “ என்றான் ஆச்சர்யமாக..
"முன்ன
சொன்னது தான் இப்பவும்.. மனசுல தைர்யம் இருந்தால் எல்லாத்தையும் தைர்யமா
சமாளிக்கலாம்...
பாகிஸ்தான்
எக்ஸ் பிரைம் மினிஸ்டர் பெனசிர் பூட்டோ...
அவங்க டெலிவரி வரைக்குமே office வந்தாங்க.... அரசு அலுவலகத்துலதான் அவர்
முதல் குழந்தை Bakhtawar Bhutto
Zardari பிறந்தாள்...
அதே
மாதிரி சமீபத்தில் பிரபலமடைந்தவர் New
Zealand's Prime Minister Jacinda Ardern...
அர்டெர்ன்
அவர்களும் கர்ப்பகாலத்திலும் தன் அரசு அலுவல்களை டெலிவரி நாள் வரைக்குமே அலுவலகம் வந்து பார்த்து
கொண்டிருந்தார்.... அவருக்கு திடீரென்று வலி வர, அவர் குழந்தையும் அந்த ஆபிஸ்லயே
பிறந்ததாம்..” என்றாள் பெருமையாக...
“ஹ்ம்ம்
சூப்பர் தீக்சா.... உன்னை மாதிரிதான் பொண்ணுங்க தைர்யமா இருக்கணும்... “ என்று பாராட்டினான்
அபி...
“அப்புறம்
உன் ஹஸ்பன்ட் என்ன பண்றார்?? “ என்றான் ஆர்வமாக....
அதை
கேட்டு அவள் முகத்தில் உடனே வேதனை வந்து போனது
தெரிந்தது... அடுத்த நொடியே அதை மறைத்து
கொண்டு அவனை பார்த்து ஒரு வெறித்த பார்வை மட்டுமே செலுத்தினாள்...
“சாரி
மிஸ்டர் அபிநந்தன்... என் பெர்சனல் பத்தி யார்கிட்டயும் சேர் பண்றதில்லை..
அபீசியலா எதுவும் விளக்கம் வேணும்னா கேளுங்க.. “ என்றவள் தன் முகத்தை சன்னல் பக்கம் திருப்பி கொண்டாள்...
அவனும்
தோளை குலுக்கி கொண்டு சாலையை நோக்கி காரை ஓட்ட, அவன் மனம் சற்று முன் அவள் வயிற்றை தொட்ட பொழுது அனுபவித்த அந்த பரவசத்தை நினைத்து உள்ளுக்குள் சிலிர்த்தது...
மீண்டும்
அவன் பார்வை அவள் வயிற்று பகுதிக்கு செல்ல, ஏனோ அவன்
பார்வையை உணர்ந்து கொண்ட அவள் வயிற்றில்
இருந்த அந்த குட்டி மீண்டும் குதிக்க ஆரம்பித்தாள்...
தன்
வயிற்றில் இருக்கும் தன் குழந்தையின் மூவ்மென்ட் இப்பொழுது நன்றாக தெரிந்தது....
தன் வயிற்றில் எந்த அசைவும் இல்லையே என்றுதான் இத்தனை நாள் கவலை பட்டு
கொண்டிருந்தாள் தீக்சா...
அவன்
கை வயிற்றில் படவும் தெரிந்த முதல் அசைவு இப்பொழுது மீண்டும் தன் வயிற்றில் அசைவை
உணர்ந்தவள் அதன் மகிழ்ச்சியில் பூரித்து
போனாள்....
ஓரக் கண்ணால் அருகில் இருந்தவனை பார்க்க அவன்
இவளையே பார்ப்பதும் இவள் வயிற்றை ஆசையாக பார்ப்பதும் புரிந்தது... இப்பொழுது
புரிந்தது அந்த குழந்தையின் மகிழ்ச்சிக்கான காரணம்...
அது
தெரிந்ததும் ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் வேதனையாகவும் இருந்தது
தீக்சாவிற்கு...
உடனே
அப்பொழுதுதான் அவள் இன்னும் சாப்பிடவில்லை என்பது புரிய உடனே தன் ஹேன்ட் பேக்கை திறந்து அதில் இருந்த டிபன் பாக்சையும் வாட்டர்
பாட்டிலையும் எடுத்தாள்...
பின்
அபியின் பக்கம் திரும்பியவள்
“If you
don’t mind, I will have my lunch மிஸ்டர் அபிநந்தன்.. “ என்றவாறு அவன் அனுமதிக்கு கூட காத்திருக்காமல்
டப்பாவை திறந்து அதில் தன் அன்னை கட்டி கொடுத்திருந்த வெஜிடபுல் புலாவ் ஐ ஸ்பூனில்
எடுத்து சாப்பிட்டாள்...
“ஹே...
வெய்ட்.. நாம ஒரு நல்ல ஹோட்டல் க்கு போகலாம்... “ என்றான் அபி
“No
Thanks… நீங்க என்னை ஆபிஸ்ல இறக்கி விட்டுட்டு போய்ட்டு வாங்க..
இல்லையா என்னை இங்கயே இறக்கி விட்டுங்க..
நான் ஆட்டோ புடிச்சு ஆபிஸ் போய்க்கிறேன்... “ என்றாள்...
அதை
கேட்டு அவள் தன்னை அவாய்ட் பண்ணுகிறாள்
என்று புரிய கை முஷ்டி இறுகியது...
“ஹ்ம்ம்ம்
உன்னை தனியா அனுப்பின பாவம் எனக்கு
வேண்டாம்... நானே உன்னை ட்ராப் பண்றேன்... “ என்றான்.. அதை கேட்டு டக்கென்று திரும்பி அவனை பார்த்தவள் மீண்டும்
அதே வெறித்த பார்வை...
“இந்த
பார்வை இப்ப எதுக்கு?? எதுக்கு இப்படி அடிக்கடி முழிச்சு பார்க்கறா??” என்று
குழம்பி போனான்...
தீக்சாவோ
தன் உணவை ரசித்து உண்டு கொண்டிருந்தாள்.. அதன் மணம் அவன் நாசியை துளைக்க அவனுக்குமே
நாக்கில் எச்சில் ஊறியது..
“இராட்சசி...
ஒரு பார்மாலிடிக்காகாவாது சாப்பிடறியானு ஒரு வார்த்தை கேட்டாளா பார்... இப்படி கொட்டிக்கிறா?? “ என்று மனதுக்குள் புகைந்து கொண்டிருந்தான் அபிநந்தன்....
அவளோ
அதை கண்டு கொள்ளாமல் சாப்பிட்டு கொண்டிருக்க, அதுவரை தெரியாத பசி இப்பொழுது தெரிந்தது
அவனுக்கு..
அருகில்
இருந்த ஒரு ரெஸ்டாரண்டில் காரை நிறுத்தியவன் வா சாப்பிடலாம் என்று அழைக்க, அவளோ
“நீங்க
போய் சாப்ட்டிட்டு வாங்க... நான் இங்கயே இருக்கறேன்.... இல்லயா நான் தனியாகவே போய்க்கிறேன்.. “ என்றாள் பிடிவாதமாக...
ஏனோ
அவளை தனியாக காரில் விட்டு செல்ல மனம் வரவில்லை அவனுக்கு...
“சே...
“ என்று காரை மீண்டும் கிளப்பி சென்றான்...
சிறிது
தூரம் சென்றதும்
“If you
don’t mind, கொஞ்சம் சேர் பண்ணேன்.. உன் வீட்டு சமையல் எப்படி
இருக்குனு டேஸ்ட் பண்ணி பார்க்கறேன்..”
என்றான் பாவமாக..
அதை
மறுத்து ஏதோ சொல்ல வந்தவள் அவன் பாவமான முகத்தை கண்டதும் தன் மனதை மாற்றி கொண்டு அவனிடம் தன் பாக்சை நீட்டினாள் தன் ஸ்பூனை எடுத்து கொண்டு..
“ஸ்பூன்
?? “
என்றான் அவள் சாப்பிட்ட அந்த ஸ்பூனை பார்த்தவாறு...
“கையிலயே
சாப்பிடுங்க.. இது நான் சாப்பிட்டது..” என்றாள் முகத்தை சுழித்தவாறு..
“ஹே..
பரவாயில்லை...ஆபத்துக்கு பாவம் இல்ல.. நான்
அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.. அதை கொடு.. “ என்று அவள் கையில் இருந்த ஸ்பூனை பிடிங்கி காரை
ஒரு ஒரமாக நிறுத்தி விட்டு பலாவ் ஐ அள்ளி சாப்பிட்டான்..
அதன்
சுவை ருசியாக இருக்க, மீதி இருந்ததை எல்லாம் காலி பண்ணினான்...
“வாவ்...
சூப்பர் லன்ச்.. ஸ்டார் ஹோட்டல் ல சாப்பிட்டா
கூட இப்படி இருக்காது... தேங்க்ஷ்...ஆமா யார் சமைச்சா?? உன் மாமியாரா?? “ என்றான் ஆர்வமாக அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்..
அதை
கேட்டு அவனை முறைத்தாள் தீக்சா...
“ஓ...
ஏற்கனவே சொல்லியிருந்தாளே பெர்சனல் விசயத்தை ஷேர் பண்ண மாட்டேன் என்று... புலாவ் யார் செஞ்சானு
சொல்வது கூட அந்த சேர் பண்ணாத ஐடெம்ஸ் ல இருக்கும் போல... “ என்று தலையை குலுக்கி கொண்டான்...
பின்னர்
தான் ஞாபகம் வந்தது அவள் பிரக்னென்ட் ஆக இருப்பது
“ஓ
சாரி. இந்த நேரத்துல நீ தான் அதிகம் சாப்பிடணும்.. நான் உன்னோடதயும் புடுங்கி சாப்டிட்டேன்.. சோ சாரி.. “ என்றான்..
அவனை
ஒரு முறை முறைத்து விட்டு சன்னல் பக்கம் திரும்பி கொண்டாள்....
ஏனோ
அவள் மனம் நிறைந்து இருந்தது அவளையும் மீறி...
அலுவலகத்தை அடைந்ததும்
அவளுக்கு அலுவலக கேண்டினில் இருந்து சாப்பிட வாங்கி கொடுத்து அவளை கட்டாயபடுத்தி உண்ண வைத்தான்....
பின்
தீக்சா தான் எடுத்த குறிப்பை எல்லாம்
வைத்து மற்றவர்களுடன் டிஸ்கஸ் பண்ணி சில
இன்டீரியர் டிசைனை ரெடி பண்ண அதில் பிசியாகி போனாள்....
இரவு உணவிற்கு பிறகு படுக்கைக்கு சென்ற அபிநந்தனுக்கு ஏனோ
அவன் மனம் தீக்சாவிடமே சென்று நின்றது.. அவளை விட அவள் வயிற்றை தொட்ட பொழுது அவன்
உணர்ந்த அந்த குறுகுறுப்பு.. இப்பொழுது அதை நினைக்கும் பொழுதும் அவன் உடல் எல்லாம் சிலிர்த்தது....
அதே
சிலிர்ப்புடன் கண் அயர்ந்தான்..
படுக்கையில்
விழுந்த தீக்சாவுக்குமே என்ன சொல்வது என்று புரியவில்லை.. முதல் முதலாக தன் குழந்தையின் அசைவு... அது தந்த பரவசம்.. என்று
பூரித்து போனாள்..
அதன்
பிறகு மீண்டும் அந்த அசைவு வராதா?? என்று ஆர்வமாக பார்த்து கொண்டிருக்க அவள் குழந்தையோ அதன் பிறகு அசையவே
இல்லை....
படுக்கையில்
படுத்து கொண்டு தன் வயிற்றில் கை வைத்து கதை பேசி கொண்டே அதன் அசைவை நோட்ட மிட, ம்ஹூம் எந்த அசைவும்
இல்லை...
அவளும் ஏமாற்றத்துடனே சிறிது நேரத்தில் உறங்கி போனாள் தீக்சா...!
Please upload other episodes,eager to read
ReplyDeleteWill do pa! Thanks for your comments!
Delete