பூங்கதவே தாழ் திறவாய்-9

 



இதழ்-9

 

டுத்த நாள் அலுவலகத்திற்கு ஒரு வித துள்ளலுடன் வந்தான் அபிநந்தன்.. வந்ததும் இன்டெர்காம் ல் தீக்சாவை அழைத்தான் நேற்று  பார்த்து அந்த  ப்ராஜெக்ட் ஐ பற்றி  டிஸ்கஸ் பண்ண...

அவளும் ஏற்கனவே அதை தயாரித்து வைத்திருக்க , அந்த டிசனை அவள் கம்யூட்டரில் இருந்து  அவனுக்கு ஈமெயில் அனுப்பி விட்டு கையில் நோட்டுடன் அவன் அறை கதவை தட்டிவிட்டு உள்ளே சென்றாள்..

அவளை கண்டதும்

“குட் மார்னிங் தீக்சா... “ என்றான் உற்சாகமாக...

அதை கேட்டு முறைத்தவள்

“குட் மார்னிங் மிஸ்டர் அபிநந்தன்... “ என்றாள் முகத்தில் எதையும் காட்டாமல்...

அவனும் அதை ஏற்று கொண்டு

“சரி வா..  அந்த டிசைன்ஸ் எந்த அளவுக்கு  வந்திருக்கு ?? இதை கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன்  பண்ணு.... “ என்றான்...

அவளும் அவன் அறையில் இருந்த கம்ப்யூட்டரை இயக்கி அவன் ஏற்கனவே  டவுன்லோட் பண்ணி வச்சிருந்த அவள் அனுப்பி வச்சிருந்த அந்த டிசைனை ஓபன் பண்ணி காட்டினாள்...

அவள் இடப்புறம் அமர்ந்து கொண்டவன் அவள் விளக்க விளக்க அதை கவனித்தவன் பார்வை அவனையும் மிறி அவள் வயிற்றுக்கு சென்றது....

அவள் அந்த டிசைனை விளக்கும் மும்முரத்தில் இருக்க, அவனோ  அவள் வயிற்றையும்  அதன் உள்ளே இருந்த குழந்தையையும்  ஆசையாக பார்த்தான்...

ஏனோ  மீண்டும் ஒரு முறை அதை  தொட்டு பார்க்க வேண்டும் போல குறுகுறுத்தது....

“ஆனால் இவள் கிட்ட கேட்டால்  செருப்பை கழட்டி தான் அடிப்பா.. “  என்று  தன் மனதை கஷ்டபட்டு அடக்கியவன் மீண்டும்  அவளின் வயிற்றை ஏக்கமாக பார்க்க,  அவன் பார்வை புரிந்தோ என்னவோ அந்த குட்டி மீண்டும் குதிக்க ஆரம்பித்தாள்..

நேற்றிலிருந்து இந்த அசைவுக்காக காத்திருந்தவள் இப்பொழுது வயிற்றில் அசைவு தெரியவும் உள்ளுக்குள் துள்ளி குதித்தாள் தீக்சா..

பின் திடீரென்று ஏன் இப்படி உருளுறா என்று எண்ணியவள் ஓரக் கண்ணால் இடது புறம் பார்க்க , அங்கே அபி இவள் விளக்குவதை கேட்காமல் அவள் வயிற்றையே ஏக்கமாக பார்த்து கொண்டு இருப்பது தெரிந்தது..

“ஒரு வேளை  இவன் பார்வையை உணர்ந்து தான் தன் குழந்தை  வயிற்றுக்குள் உருளறாளோ?? “ என்றவள் வேகமாக தன் புடவையை இழுத்து விட்டு தன் லேசாக மேடிட்டிருந்த வயிற்றை மூடினாள்...

தான் அவள் வயிற்றை  பார்த்ததை அவள் கண்டு கொண்டதை அறிந்து அசட்டு சிரிப்பை சிரிக்க, அவளோ அவனை பார்த்து ஒரு அனல் கக்கும் பார்வை ஒன்றை செலுத்தினாள்..

“லுக் மிஸ்டர் அபிநந்தன்.. நீங்க ஒரு ஜென்டில் மேன் னு எல்லாரும் சொல்லிகிட்டு திரியறாங்க...

அந்த நல்ல பெயரை காப்பாத்துவீங்கனு நம்பறேன்..” என்று சொல்லி  விட்டு மீண்டும் தன் பார்வையை அந்த கம்யூட்டரில்  செலுத்தி மீண்டும் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தாள்...

அவள் சொல்லிய வார்த்தை,   சாட்டை அடி போல இருக்க, அதுவரை அலைபாய்ந்த தன் மனதை அடக்கியவன் அதன் பிறகு அவள் பக்கம் திரும்பவே இல்லை....

தீக்சாவும் ஓர கண்ணால் பார்த்து கொண்டெ விளக்க அவன் அதன் பிறகு அவள் புறம் திரும்பாமல் மானிட்டரையே பார்த்து கொண்டு  இருக்க, அதை கண்டவளுக்கு ஒரு பக்கம் நிம்மதியாகவும் இன்னொரு பக்கம் சிறு ஏமாற்றமும் சூழ்ந்து கொண்டது..

பின் இருவரும் வேலையில் மும்முரமாக கவனம் செலுத்தினர்... அவள் தயாரித்திருந்த டிசைனில்  சில சேஞ்சஸ் பண்ணி பின் சில டிசைன்களை முடிவு பண்ணி அதற்கான கொடேசனை அவளை  தயார் பண்ண சொல்லி விட்டு தன் மற்ற அலுவலகத்திற்கு கிளம்பி சென்றான் அபிநந்தன்...

அவன் சென்றதும் ஜெசி வந்து

“தீக்சா...  பாஸ் என்ன  சொன்னார்?? .. ரொம்ப நேரமா என்ன  பேசுனீங்க??” என்றாள் ஆராயும் பார்வையுடன்...

அவளை பார்த்து முறைத்து விட்டு தன் வேலையை தொடர்ந்தாள் தீக்சா...

ஜெசியும் “பாரேன்.. வாயை திறந்து ஏதாவது சொல்றாளானு.. சரியான அழுத்தக்காரி... “ என்று புலம்பி கொண்டே வெளியேறி சென்றாள்...

ன்று மதிய உணவு இடைவேளையில் கேப்டீரியாவில் அமர்ந்து இருந்தாள் தீக்சா...

கூடவே அந்த அலுவலகத்தில் பணி புரியும் புவனா ம் அமர்ந்து இருந்தாள்..

தீக்சா எல்லோரிடமும் இயல்பாக பழகுபவள் ஒரு காலத்தில்.. அவளை சுற்றிலும் ஒரு கேங்க் இருக்கும்...ஆரம்பத்தில் இந்த அலுவலகத்தில் சேர்ந்த பொழுதும் நிறைய நண்பர்கள் இருந்தார்கள்...

ஆனால் இந்த அலுவலகம் சரிய ஆரம்பிக்க, சிலர் வேற நிறுவனங்களுக்கு சென்று விட, இன்னும் சில தோழிகள் திருமணம் முடித்து வேலையை விட்டு நின்று விட, புவனா மட்டுமே இன்னும் அவளுடன் அதே தோழமையுடன் பழகி வருகிறாள்....

தீக்சாவின் கஷ்ட காலத்திலும் அவளுக்காக துணை நின்றவள் புவனா.. அதனால் தீக்சாவிற்கு புவனாவை ரொம்ப பிடிக்கும்... அவளிடம் மட்டுமே சிரித்து பேசும் அளவில் இருந்தாள்...

தோழிகள் இருவரும் ஏதோ கதை பேசி கொண்டே மதிய உணவை உண்டு கொண்டிருந்தார்கள்...

அப்பொழுது புவனாவின் பார்வை தீக்சாவின் வயிற்றுக்கு சென்றது... பின் ஏதோ யோசித்தவள்

“தீக்சா.. கேட்கறேனு தப்பா எடுத்துக்காதா... நீ பிரக்னென்ட் ஆ இருக்கியா?? உன் வயிறு கொஞ்சம் பெருசா தெரியுதே.. “ என்றாள் புவனா தயங்கியவாறு...

தீக்சா தன்னை பற்றி ஓரளவுக்கு புவனாவிடம் சொல்லி இருந்தாள்... அதனால் அவள் இன்று இப்படி கேட்கவும் கோபம் வரவில்லை...

தீக்சா வு ம் ஆமாம் என்று  புன்னகையுடன் தலை அசைத்தாள்...

“வாவ்...சூப்பர்... எத்தனை மாசம் ?? என்றாள் ஆச்சர்யமாக

“ஆறு மாசம்..”

“பாரேன்..  சொல்லவே இல்லை... நான் கூட ஒரு மூன்று  மாசம்னு நினைச்சுகிட்டி இருந்தேன்... 6 மாசம் ஆச்சா...  ஆமா உன் ஹஸ்பன்ட் என்ன பண்றார்??... “என்றாள் ஆர்வமாக

தீக்சாவுக்கு புவனா பத்தி நன்றாக தெரியும்.. அவள் வம்பு பேசுபவள் இல்லை... அடுத்தவங்க பிரச்சனை, பெர்சனல்  பத்தி பேசுபவள் இல்லை..

ஏதோ தன் மேல் இருக்கும் அக்கறையில் கேட்கிறாள் என்று புரிந்து கொண்டவள் இதுவரை தன் பெர்சனல் விசயத்தை யாரிடமும் பகிராதவள் முதல் முதாலக வாயை திறந்து “அவர்... அவர்...  துபாய் ல இருக்கார்.. “ என்றாள் தீக்சா தயங்கியவாறு....

“ஓ.. சூப்பர்... “ என்றவள்  மேலும் அவளை பற்றி நோண்டாமல் மற்ற கதைகளை பேசினாள்  புவனா...

தீக்சா சொன்னதை கேட்டு காதில் தேன் பாய்ந்தது போல இருந்தது  ஜெசிக்கு..

அவள் அந்த வழியாக வர,  புவனா தீக்சாவை பற்றி விசாரிக்க முதலில்  அவள் தீக்சா திருமணம் ஆனவள் என்பதே அவளுக்கு சந்தோசமாக இருந்தது....

அதைவிட சந்தோசம் அவள் பிரக்னென்ட் ஆக இருப்பது..

“அப்பாடா...  அப்ப இவ என் வழியில குறுக்க வரமாட்டா... எப்படியாவது நம்ம பாஸ் ஐ மடக்கி என் வழிக்கு கொண்டு வந்திட்டா  இத்தனை  சொத்துக்களோட,  ஒரு மல்ட்டி மில்லினர் ஓட வொய்ப் நானாகிடுவேன்..

இனிமேல் அதுக்கான வேலையை ஆரம்பிக்க வேண்டியது தான்.. வேற யாரும் முந்தி கொள்ளுமுன்னே  நான்  முந்திக்கணும்  “ என்று  அவசரமாக யோசித்தாள் ஜெசி....

ன்று இரவு வீடு திரும்பியவன் மீது வழக்கம் போல மாயா வந்து விழுந்து அவனை  கட்டி கொண்டு கொஞ்ச, ஏனோ அவளின் தீண்டல் அருவெறுப்பாக இருந்தது அவனுக்கு...

உடனே அவன் நினைவு தீக்சாவிடம் சென்றது...

தெரியாமல் சிறு கை பட்டாலும் அவனை எரித்து விடும் பார்வை நினைவு வர, ஏனோ அவளின் அருகாமைக்கு ஏங்கிய மனம் தனக்கு உரியவளின் அருகாமையை வெறுத்தது....

உடனேயே ஏதோ ஒரு காரணத்தை சொல்லி அவளை விலக்கி நிறுத்தினான்...

உணவு மேஜையிலும் அவனை உரசியபடி நின்றவளை கண்டு முகம் சுழித்து தள்ளி அமர்ந்து கொண்டான்...

இதையெல்லாம் கண்ட காஞ்சனாவிற்கு ஏதோ வித்தியாசமாக இருந்தது.. உடனேயே அவசரமாக யோசிக்க ஆரம்பித்தார்...!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!