என்னுயிர் கருவாச்சி-21



அத்தியாயம்-21

டுத்து மதிய இடைவேளைக்கு பிறகு அரை இறுதி ஆட்டத்தில்  விளையாட வேண்டும். அதில்  வெற்றி பெறுபவர்கள் இறுதி ஆட்டத்தில்  பங்கேற்க வேண்டும்

எல்லாரும் மதிய உணவிற்காக அந்த கல்லூரியின்  வளாகத்திலயே இருந்த  உணவகத்திற்கு சென்றிருந்தனர்.  

அப்பொழுது அவளின் தோழி சங்கீதா ஒரு கவரை கொண்டு வந்து பூங்கொடி இடம் கொடுத்தாள்.  

“என்னடி  இது? “ என்றாள் புரியாமல்.

“பிரிச்சு பருடி...” என்றாள் சங்கீதா புன்னகைத்தபடி.

பூங்கொடியும்  பிரித்துப் பார்க்க, அதன் உள்ளே ட்ராக்பான்ட் , டீஷர்ட் மற்றும் ஒரு ஷூம் இருந்தன.

அதைக்கண்டவள் அதிர்ந்து போய்

“என்னடி இது? யார் வாங்கினா? “ என்று கேட்க,

“ஹ்ம்ம் உன் வீட்டுக்காரார்...” என்றாள் சங்கீதா குறும்பாக சிரித்தபடி.

வீட்டுக்காராரா? “ என்று அதிர்ச்சியோடு பார்க்க,

ஐ மீன் உன் பக்கத்து வீட்டுக்காரர் டி. உன்னை இங்க கூட்டிகிட்டு வந்தார் இல்லை அவர் தான்  வாங்கி கொடுத்தார்.

உன் பாவாடை தடுக்கி கீழ விழுந்துட்ட இல்லையா?  செமி பைனல் ல அப்படி எதுவும்  ஆகிடாம இருக்க இதை  போட்டுக்கச் சொன்னார்...”  என்க பூங்கொடிக்கு  கோபம் பொங்கி வந்தது.

“இவன் யாரு எனக்கு வாங்கிக் கொடுக்க? “ என்று கொதித்தவள், தன் கோபத்தை மறைத்துக்கொண்டு

“இதெல்லாம் எனக்கு ஒன்னும் வேண்டாம் டி.  நீ கொண்டு போய் அவன் கிட்டயே கொடுத்துடு...”  என்று முறைத்தாள் பூங்கொடி .

“ஏன் டி வேண்டாங்கிற? உன் நல்லதுக்காகத்தான  வாங்கிக் கொடுத்தார். அதுவும் உனக்கு    தெரிஞ்சவங்க தானே.  இதுல என்ன இருக்கு? “  என்று சமாதான படுத்த  முயல,

“அதெல்லாம் போடாமலயே நான் நல்லாவே விளையாடுவேன் டி. அப்ப எப்படியோ கொஞ்சம் அசந்துட்டேன். அதனாலதான் விழுந்திட்டேன். இப்ப எல்லாம் அப்படி இல்ல.

நான் போட்டிருக்கிற பாவாடை தாவணியே எனக்கு வசதியாதான் இருக்கு...” என்று பிடிவாதமாக மறுத்தாள் பூங்கொடி.

அதைக்கேட்டு யோசனையானாள் சங்கீதா...

“ஏன் டி... உனக்கும் அவருக்கும் டிஸ்யூம்  டிஸ்யூம் ஆ? அவரை பற்றி சொல்றப்பயே உனக்கு கோபம் மூக்கு மேல வருது? வாட் ஈஸ் தி மேட்டர்? “ என்று குறுகுறுவென்று பார்க்க,

அடச்சி... டிஸ்யூம் டிஸ்யூம் எல்லாம் இல்லடி... “  என்று முறைத்தாள் பூங்கொடி.

“அப்படீனா லவ்ஸ் ஆ? “ என்று கண் சிமிட்டி சிரிக்க, இப்பொழுது இன்னுமாய் கொதித்தாள் பூங்கொடி.

“சீ..உன் வாயை பினாயில் ஊத்தி கழுவுடி...போயும் போயும் அந்த கருவாயன போய் யாராவது லவ் பண்ணுவாங்களா?  “ என்று முகத்தை அருவருப்பாக சுளிக்க,

“நீ மட்டும் என்ன உலக அழகியா?...நீயும் கருவாச்சி தான் டி...” என்று  நுனிநாக்கு வரை வந்ததை நாக்கை கடித்து அடக்கி கொண்டாள் சங்கீதா.

பின்ன... ஒருமுறை,  விளையாட்டுக்காக பூங்கொடியை கருவாச்சி என்று அழைக்க போய் அதுக்கு பூங்கொடி அவளை லெப்ட் அன்ட் ரைட் வாங்கியது இன்னும் மண்டைக்குள்ளே சுற்றிக்கொண்டு இருந்தது சங்கீதாவுக்கு.

அதிலிருந்து தப்பி தவறி கூட அவளை ஏன் யாரையுமே கருவாச்சினு கூப்பிடறதில்லை சங்கீதா.

இப்பொழுதும் ராசய்யாவை பற்றிய பூங்கொடியின் கேலிக்கு கொஞ்சம் கோபம் வந்தாலும் பூங்கொடியை வெறுப்பேற்ற எண்ணியவள்

“தேங்க் காட்...அப்படீனா உங்களுக்குள்ள ஒன்னும் இல்ல இல்லடி... இப்பதான் நிம்மதியா இருக்கு...” என்று நிம்மதி மூச்சு விட்டாள் சங்கீதா.

“எதுக்கு நிம்மதி? ஏன் நிம்மதி? “ என்று பூங்கொடி புரியாமல் சங்கீதாவை பார்க்க,

“ஹீ ஹீ ஹீ உன் கூட வந்திருக்கிறாரே...அவருக்கு அப்ளிகேசன் போடலாம்னுதான்...ஒருவேளை உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல வேற ஏதாவது ட்ராக் ஓடுச்சுனா, அது தெரியாம நான் அவரை ரூட் விட்டு வைக்க, அப்புறம் முக்கோண காதல் கதையாகிடும்.

அதனால்தான் முன்னெச்சரிக்கையா இப்பவே கேட்டுகிட்டேன்...உனக்கு அப்ஜெக்சன் இல்லைனா நான் வேணா அவருக்கு ரூட் விட ட்ரை பண்ணவா? “ என்று பூங்கொடியின் காதோரம் கிசுகிசுக்க,

“அடச்சீ...உன் டேஸ்ட் ஏன்டி இவ்வளவு மட்டமா இருக்கு.. நம்ம சீனியர் சுந்தர்.. பேருக்கேத்த மாதிரி எவ்வளவு சுந்தரமா, ஹேன்ட்ஸமா சூப்பரா இருக்கான்.

உன் பின்னாடி ஐ லவ் யூ னு சொல்லிகிட்டு லோ லோ னு சுத்திகிட்டு இருக்கான். அவனை விட்டுட்டு போயும் போயும் இந்த கருவாயனுக்கு ரூட் விடறேங்கிற? உன் புத்தி ஏன் டி இப்படி போகுது..” என்று எரிச்சலுடன் தன் தோழியை  முறைத்தாள் பூங்கொடி.

“ஹீ ஹீ ஹீ கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசம்... அந்த சுந்தர் பந்தர் எல்லாம் சுத்த வேஸ்ட் பெல்லோடி. வெள்ளை வெளேர்னு வெள்ளத்தோல் இருந்துட்டா ஹேன்ட்ஸமா?

ஆம்பளைங்களுக்கு அழகே வீரமும் தைர்யமும் நிமிர்வும் தான்டி...

பத்து பேர் சேர்ந்து வந்தாலும் ஒத்த ஆளா நின்னு அடிக்கணும்... “

“அப்ப நீ ரௌடியத்தான் கட்டிக்கணும்...” என்று சங்கீதா பேச்சின் இடையில் புகுந்து நக்கலாக சிரித்தாள் பூங்கொடி.

“பாத்தியா...பத்து பேர அடிக்கிறதுனா ரௌடியால் மட்டும்தான் முடியும்னு சொல்ற. அப்படீனா வீரமான தைர்யமான ஆம்பளைங்களே யாரும் இல்ல னு ஒத்துக்கறியா?

ஆனால் என் ஹீரோ அப்படி இல்லடி“ என்று வெட்கப்பட்டு சிரிக்க

“என்னாது ஹீரோவா? “ என்று பூங்கொடி அதிர்ச்சியில் வாயை பிளக்க,

“ஆமாம்...எனக்கு அவர்...உன் பக்கத்து வீட்டுக்காரர்... ஹீரோதான் டி. நீ தடுக்கி விழுந்ததும் உன்னை கேட்காமலயே உன் மேல அக்கறை பட்டு, சொந்தக்காசு போட்டு இந்த ட்ரெஸ் ஐ வாங்கி வந்து தந்தாரே...

அவ்வளவு ஏன்.. உனக்கு ஒன்னு தெரியுமா?  நீ கீழே விழுந்த போது, சுத்தி நின்ன   எல்லா பயலுகளும் உன்னை கிண்டல் அடிச்சு சிரிச்சுக்கிட்டு இருந்தானுங்க இல்ல.

அதுக்கப்புறம் அவனுங்களை ஆளை காணாம்  பார்த்தியா?  “ என்று கேள்வியாக பார்க்க, பூங்கொடிக்கு அப்பொழுதுதான் நினைவு வ்அந்தது.

அவள் விழுந்த பொழுது அவளை கிண்டல் அடித்து சிரித்தவர்கள் அதற்கு பிறகு அந்த மைதானத்திலயே இல்லை.

“ஆமாம் டி... சங்கி... அதுக்கப்புறம் அவனுங்களை காணாமே.. எங்க போயிட்டானுங்க? “  என்று யோசனையுடன் கேட்டாள் பூங்கொடி.  

“ஹ்ம்ம் எல்லாம்  என்  ஹீரோவோட வேலைதான். உன்னை கிண்டல் அடிச்ச  ஒருத்தனை புடிச்சு  கன்னத்துல பளார்னு ஒரு அறை விட்டார் பாரு.. அவன் அப்படியே 360 டிகிரில ஒரு சுத்து சுத்திதான் நின்னான்.

“பொண்ணுங்கன்னா உங்களுக்கெல்லாம் சைட்  அடிக்கிற போகப் பொருளா டா?  அந்தப் புள்ளைங்க எவ்வளவு கஷ்டப்பட்டு விளையாடுதுங்க. அதை பார்த்து உற்சாகப்படுத்தாம  அந்தப் புள்ளைங்கள சைட் அடிச்சுகிட்டு கிண்டல் பண்ணிகிட்டு இருக்கீங்க

ஒழுங்கா விளையாட்ட மட்டும் பார்க்கிற மாதிரி இருந்தா இங்க நில்லுங்க... இல்ல விளையாடற புள்ள ட்ரெஸ் எப்ப விலகும்னு பார்த்து கிண்டல் அடிச்சுகிட்டு இருந்திங்க தோலை உரிச்சுடுவேன்.  ஜாக்கிரதை...”

என்று மிரட்ட அவ்வளவுதான்.  அதுக்கப்புறம் எல்லா பயலுகளும் வாலை சுருட்டிகிட்டு அடங்கி போய்ட்டானுங்க...

அத்தனை பேர் சுத்தி நின்னு வேடிக்கை பார்த்த போதும் யாருக்காவது அந்த தடியன்களை மிரட்ட தைர்யம் இருந்ததா?  ஆனால் என் ஹீரோ செஞ்சார் டி...  

செம கட்ஸ் டி அவருக்கு.  அத்தனை பேர் இருந்தும் யாராலயும் அவனுங்களை தட்டி கேட்க முடியல.  இவர் மட்டும்தான் தட்டிக்கேட்டு அடக்கியும் வச்சார்...

இப்ப சொல்லு... இவர் தான ஹீரோ?  “ என்று வெட்கத்துடன் சிரிக்க, பூங்கொடிதான் எத்தனையோ முறை அவன் யாரையாவது போட்டு அடிப்பதை பார்த்து இருக்கிறாளே..

அவளுக்கு அதெல்லாம் புதுசு இல்லை. ஆனால் சங்கீதா முசிறியில் வசிப்பவள்.

வீடு   உண்டு காலேஜ் உண்டு என்று  வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பவள்.

அப்படிப்பட்டவள், இப்படி ஒரு வீரமான தைர்யமான ஆணை பார்க்கவும் அவளுக்கு ஏதோ காணததை கண்டதுபோல அதிசயித்து போகிறாள் என்று  புரிந்தது பூங்கொடிக்கு...

“சரி சரி...அவரு ஜீரோ... இல்ல இல்ல ஹீரோதான் ஒத்துக்கறேன்... இப்ப நீ என்ன செய்யற? இத கொண்டுபோய் உன் ஹீரோகிட்ட கொடுத்து எந்த கடையில் வாங்கினானோ அங்கயே திருப்பி கொடுத்துட சொல்லு. எனக்கு வேண்டாம்... “ என்றாள் மீண்டுமாய் முகத்தை சுளித்தபடி

“ஏன் டி பூவு... உனக்கு ட்ராக்பேன்ட் வேண்டாமா? இல்லை அவர் வாங்கி கொடுத்ததால் வேண்டாமா? “  என்று  பூங்கொடியை குறுகுறுவென்று பார்த்தாள்  சங்கீதா.

“அதெல்லாம் இல்லடி.  வெளி ஆட்கள்  வாங்கிக் கொடுப்பதை போட்டு   எனக்கு பழக்கம் இல்லை...”  என்று மறுக்க,

“இவர் ஒன்றும் தெரியாதவர் இல்லையே...  அவர் மேல் நம்பிக்கை வைத்து தானே இவ்வளவு தூரம் உன்னை தனியா அனுப்பி  வச்சிருக்கார் உன் அப்பா.

சரிடி .. உனக்கு அவர் வாங்கி கொடுத்த ட்ரெஸ் ஐ போட பிடிக்கலைனா நீ என் ட்ரெஸ் ஐ போட்டுக்க...நான் என் ஹீரோ வாங்கி கொடுத்த புது ட்ரெஸ் ஐ போட்டுக்கிறேன்...  

அப்படியே விளையாட்டு முடிஞ்சதும்  அந்த ட்ரஸ் ஐ  நான் என் வீட்டிற்கு எடுத்து கிட்டு போறேன். அவர் நியாபகமா  இது என்கிட்டயே இருக்கட்டும்...” என்று கண்களை படபடவென்று  கொட்டி ஒரு மாதிரி சிரித்தபடி சொல்ல, ஏனோ பூங்கொடிக்கு பற்றிக்கொண்டு வந்தது. தன்னை மறைத்துக்கொண்டு

“சீ சீ  உன் ட்ரெஸ் ஐ நான் எப்படி போடுவது? “ என்று சமாளிக்க,

“ஹோய்... எங்க ஊர் திருவிழாவுக்கு வந்திருந்தப்ப, என் வீட்ல தங்கினப்ப ,  என் ட்ரெஸ்ஐத்தானே  போட்டுக்கிட்டே.  இப்ப என்ன?”   என்று சங்கீதா முறைக்க

“ஹீ ஹீ ஹீ அது அப்போ...இப்ப நான் மாறிட்டேன்...” என்று  அசட்டு சிரிப்பை சிரிக்க,  அவளை வெட்டவா குத்தவா என்று முறைத்தாள் சங்கிதா.

பின் பூங்கொடியை எரிச்சலுடன் பார்த்தவள்

“முடிவா என்னதான் டி சொல்ற? நீ மட்டும் இப்ப இந்த புது ட்ராக்பேன்ட்  ஐ போட்டுக்கலைனா நானே எடுத்துக்கிறேன்...” என்று சொல்லி முடிக்கும் முன்னே  வெடுக் என்று  சங்கீதா கையில் இருந்த கவரை பிடுங்கி கொண்டாள் பூங்கொடி.

ஏனோ ராசய்யா வாங்கி வந்ததை சங்கீதாவிடம் கொடுக்க மனம் வரவில்லை. அதனாலயே அவளுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவளிடம் இருந்து பிடுங்கி கொண்டாள்.

“சரி சரி... நீ இவ்வளவு தூரம் கெஞ்சி கேட்கறதால  நானே இதை   போட்டுக்கிறேன்....”  என்று மொக்க காரணத்தை சொல்லிவிட்டு விடுவிடுவென்று  அங்கிருந்த ரெஸ்ட் ரூமிற்குள் சென்று அதை மாற்றிக் கொண்டு வெளியில் வந்தாள் பூங்கொடி.

*****

னிச்சையாய் பார்வையை சுழற்ற,  அந்த உணவகத்தின் வாயிலில் நின்று பி.டி மாஸ்டருடன் பேசிக்கொண்டிருந்தான் ராசய்யா.

அதற்குள் இருவரும் நண்பர்களாகி விட்டதை போல ஏதோ சிரித்து பேசிக்கொண்டிருந்தனர்.

அவன் உயரத்துக்கு அவன் தோள்வரைக்குமே இருந்த மாஸ்டர் அவனை  அண்ணாந்து பார்த்து தான் பேசிக் கொண்டிருந்தார்.

அதைக் கண்டதும் அவளையும் மறந்து சிரிப்பு வந்தது பூங்கொடிக்கு.

“பாரு.. நெட்ட கொக்கு மாதிரி  எம்புட்டு உசரம் வளர்ந்து இருக்கான்...ஆமாமா பெரிய ராசா... ஐயா... ராசய்யா இல்ல... எல்லாரும் அவனை அண்ணாந்து பார்த்து பேசோணும்னு கூட இப்படி வளர்ந்து நிப்பான்...

ஓசி சாப்பாடு சாப்டே இம்புட்ட்ய் உசரம் வளர்ந்திருக்கானா, இன்னும் இவன் ஆத்தா உசுரோட இருந்து இவனுக்கு வசிச்சுக் ஒட்டியிருந்தால் இன்னும் எம்புட்டு உசரம் வளர்ந்திருப்பான்...  என்று தனக்குள்ளே நக்கல் அடித்தவள் ஓரக் கண்ணால் அவனை நோட்டமிட்டாள்.

அவன் வழக்கமாக உடுத்தும் அழுக்கு கைலியில் இல்லாமல்,  வெள்ளை வெளேரென்று பளிச்சிட்ட வேஷ்டியும் ,   சந்தன கலரில் கட்டம்  போட்ட சட்டை அணிந்திருக்க,  அதன் கையை மேல் வரைக்கும் சுருட்டி விட்டு இருந்தான்.  

அதில் திரண்டிருந்த அவனின் வலிய புஜங்களும்,  அவ்வப்பொழுது பரந்து விரிந்த மார்பும், அவனின்  கட்டுமஸ்தான தேகத்தை காட்டியது.  சங்கீதா பிதற்றியதைப்போல  அவள் கண்ணுக்கு ஒன்றும் அவன் ஹீரோ மாதிரி தெரியவில்லை.

மாறாக

“உடம்பை பாரு.. ரௌடி மாதிரி ஜிம் பாடியா வளர்த்து வச்சிருக்கான். கட்டுமஸ்தான உடம்பு இருந்து என்ன பிரயோஜனம்?  பரட்டைத் தலையும் ஒழுங்கு படுத்தாத  தாடியும் மீசையும் பார்க்க அச்சு அசல் ரௌடி மாதிரி தான் இருக்கான்.

இவனைப் போய் ஹீரோ னு பிணாத்தறா அந்த அர லூசு... அந்த தலைமுடியை  சீவினால் தான்  என்னவாம்? பத்த வச்சா உடனே பத்திக்கும் பரட்டை தல... “  

என்று உள்ளுக்குள் அவனை திட்டிக்கொண்டே,  தன்னை மறந்து அவனை பார்த்து வைக்க,  இவளின் பார்வை உணர்ந்ததால் அனிச்சையாய் இவள்  பக்கம் திரும்பியவன் ஒரு நொடி ஸ்தம்பித்து நின்றான்.

இதுவரை பாவாடை சட்டையிலும், தாவணியிலுமாய் அவளை  பார்த்திருந்தவன்,   இப்பொழுது ட்ராக்பேன்ட்டிலும் கொஞ்சம் டைட்டான டீஷர்ட்டிலும் அவளை பார்க்க, அவனுக்கு மூச்சடைத்தது போல இருந்தது.

அதிலும் அந்த டீஷர்ட் அவளின் வனப்பான முன்அழகை  இன்னுமாய் எடுத்துக்காட்ட,  ஒரு நொடி இமைக்க மறந்து நின்று விட்டான் ராசய்யா.

அடுத்த நொடி தன்னை உலுக்கி கொண்டு தன் பார்வையை இயல்பாக்கி கொண்டவன் அவளை பார்த்து என்னவென்று  தன் ஒற்றை புருவத்தை உயர்த்தி  பார்வையால் வினவினான்.

அவள்தான் அவனையே பார்த்தபடி நின்றிருந்தாளே..!  அவன் பார்வையால் என்னவென்று கேட்க, அப்பொழுதுதான் அவனை பார்த்தபடி நின்றிருந்தது மண்டையில் உறைத்தது.

உடனே தன் கீழ் உதட்டை கடித்து சமாளித்து கொண்டு  தன் பார்வையை மாற்றிக் கொள்ள, ராசய்யாவின் இதழ்களிலோ  லேசான குறுநகை தவழ்ந்தது.

மீண்டும் அனிச்சயாய் திரும்பி அவனை பார்க்க, இந்த முறை அவன் பார்வைக்காகவே காத்திருந்தவன்,  பார்வையால் இந்த ட்ரெஸ் அவளுக்கு    சூப்பரா இருக்கு என்று  சொல்ல, அப்பொழுதுதான் குனிந்து அவளை பார்த்தாள்.

அடுத்த நொடி தூக்கி வாரிப்போட்டது.

முதன்முறையாக மாராப்பு இல்லாமல் இப்படி டைட்டான டீசர்ட்டை போட்டுக்கொண்டு அவன் முன்னால் நிற்பது  மண்டையில் உறைத்தது.  

அவள் ஊரில் எப்பொழுதும் பாவாடை சட்டையில் தான் சுற்றுவாள். ஆனால் சட்டை கொஞ்சம் லூசாக இருக்கும்.  அதோடு பெரும்பாலும் அவள் தந்தையின் சட்டையைத் தான் அணிந்து கொள்வாள். அதனால் வித்தியாசமாக எதுவும் தெரியாது.

இப்பொழுது டைட்டான டீசர்ட்டில் நிற்க,  ஏனோ கூச்சமாக இருத்தது.

அதோடு அப்பொழுதுதான் கவனித்தாள்.

அவளுக்கு போட்டு பார்த்து வாங்கியதை போல ட்ராக்பான்ட் ம்  டி-ஷர்ட்டும் அவ்வளவு பிட்டாக இருந்தது.  

“பரவாயில்லையே...  ஒழுங்கா தான் வாங்கி வந்து இருக்கான். என் சைஸ் தெரியாமல் எப்படி வாங்கினான்...” என்று ஏதோ யோசித்தவளுக்கு கன்னங்கள் சூடேறி போயின.

“சீ பொறுக்கி.. அப்ப என்னை எவ்வளவு தூரம் பார்த்து வச்சிருக்கான்...”  என்று அதுக்கும் அவனை திட்டியவள்  அதன் பிறகு அவன் புறம் திரும்பாமல் தன் தோழியிடம் வந்தவள்,  அவள் இருக்கையில் அமர்ந்து கொண்டு வளவளத்தாள்.

சங்கீதாவோ , பூங்கொடியிடம் பேசிக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருந்தாலும்,  அவளின் பார்வை என்னவோ நொடிக்கொருதரம் ராசய்யாவை சுற்றி வந்தது.

அதோடு ராசய்யாவை பற்றி நோண்டி நோண்டி விசாரித்து கொண்டிருந்தாள் சங்கீதா.

பூங்கொடி பேச்சை மாற்றினாலும்,   அவளோ ராசய்யா வை பற்றி விசாரிப்பதும்,  அவனை  புகழ்ந்து தள்ளுவதுமாய் இருக்க,  பூங்கொடிக்கு எண்ணை ஊற்றாமலயே பற்றிக்கொண்டு வந்தது.  

அதனாலயே சீக்கிரம் சாப்பிட்டு முடித்துவிட்டு மீண்டும் மைதானத்திற்கு திரும்பி விட்டாள் பூங்கொடி.

*****

திய உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் போட்டிகள் ஆரம்பித்திருக்க, அடுத்து முசிறி அணியும், உருமு தனலெக்ஷ்மி கல்லூரியும் அரை இறுதியில் மோதின.

இந்த முறையும் பூங்கொடியின் அணிக்கு ஓடுவது வந்திருக்க, பூங்கொடி தயாராக கோர்ட்டில் நின்றிருந்தாள்.

முதன் முதலாக அணிந்திருந்த டீசர்ட் வேறு அவளை இம்சித்தது.

பாவாடை தாவணியில் அசால்ட்டாக ஓடியவளால அந்த பழக்கமில்லாத ஆடையில் ஓட கொஞ்சம் அசௌகரியமாக இருந்தது.

எல்லாரும் அவளையே பார்ப்பதை போல குறுகுறுவென்று  இருந்தது.  கையை மார்புக்கு குறுக்கே வைத்து மறைத்து கொள்ள வேண்டும் போல இருந்தது.

அப்பொழுதுதான் ராசய்யா அந்த பசங்களுக்கு சொன்னதாய் சங்கீதா சொன்னது நினைவு வந்தது.

விளையாட வந்துவிட்டால் விளையாட்டில் மட்டும்தான் கவனம் செலுத்த வேண்டும். நம்மை யார் பார்க்கிறார்கள்... எப்படி பார்க்கிறார்கள் என்றெல்லாம் மண்டைக்குள் ஏத்திக்க கூடாது.   

பெண்கள் டென்னிஸ் விளையாடும்போது எத்தனையோ நபர்கள் அவர்கள் அணிந்திருக்கும் குட்டை கவுனை பற்றி கமெண்ட் சொல்லி இருக்கிறார்கள். விளையாட்டை ரசிக்க முக்கால்வாசி பேர் இருந்தாலும், கொஞ்சமாவது அவர்கள்  அணியும் ஆடையும்,  அது எப்பொழுது மேலே உயரும் என்று காத்திருக்கும் கயவர்கள்  எத்தனையோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.  

அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்,  தங்கள் விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தி ஆடுவதால் தான் அவர்களால் உலக சேம்பியன் ஆக முடிந்தது.  

அது போலத்தான் எனக்கும். இந்த ஆடை என்னுடைய வசதிக்காக...யார் எப்படி பார்த்தால் எனக்கென்ன வந்தது. ஐ டோன்ட் கேர்... என் கவனம் முழுவதும் விளையாட்டில் மட்டும்தான் இருக்க வேண்டும்...” 

என்று தனக்குள்ளே உறுதி செய்து கொண்டவள், சற்றுமுன் இருந்த கூச்சம், தயக்கம் விலகி,   இயல்பாய்,  ஜாலியாய் அந்த விளையாட்டை விளையாட  தயாரானாள் பூங்கொடி.

******

ந்த முறையும், போட்டி ஆரம்பிக்கும் முன்னே அனிச்சையாய் பார்வை ராசய்யாவிடம் செல்ல, இவள் பார்வைக்காகவே காத்திருந்தவன் கட்டை விரலை உயர்த்தி காட்டி மீண்டும் ஆல் தி பெஸ்ட் சொல்லி புன்னகைக்க, அவளும் லேசான புன்னகையுடன் தலை அசைத்து அவன் வாழ்த்தை ஏற்றுக்கொண்டு விளையாட ஆரம்பித்தாள்.

வழக்கம் போல ராசய்யாவும் கை தட்டி , விசில் அடித்து உற்சாக படுத்த,  இப்பொழுது மற்ற கல்லூரிகளும் முசிறி அரசு கல்லூரிக்கு தங்கள் ஆதரவை அளித்து மற்றவர்களும் உற்சாகப்படுத்தினர்.

பூங்கொடிக்கு பாவாடை தாவணியை விட இந்த ஆடை ரொம்பவும் வசதியாக இருக்க, இன்னுமே துள்ளலுடன் விளையாண்டாள்.  

அடுத்து என்ன?  எளிதாகவே செமி பைனலில் வெற்றி பெற்றிருந்தனர்.  

இடையில் பூங்கொடிக்கு வியர்வையை  துடைத்துக் கொள்ள டவல், அந்த பெண்கள் குடிப்பதற்கு என்று சில ஊட்டச்சத்து பானங்கள் என்று அந்த அணிக்குத் தேவையானதை,  அவள்  அணியினர் அனைவருக்குமே வாங்கிக் கொடுத்திருந்தான்  ராசய்யா.

அதுவரை மற்ற தனியார் கல்லூரிகளை போல தங்கள் அணியை உற்சாக படுத்த, இது மாதிரி வாங்கி கொடுக்க யாரும் இல்லாததால் வருத்தமாக, கொஞ்சம் ஏக்கமாக இருக்க, இப்பொழுது அந்த ஏக்கம் ராசய்யாவால் தீர்ந்து போனது.

தங்கள் அணிக்கும் சப்போர்ட்க்கு ஆள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே அதிக உற்சாகத்தை கொடுத்தது.  

எல்லாருக்குமே ராசய்யா    மீது நல்ல பிரியம் வந்துவிட்டது.  

அரை இறுதியில்  தள்ளி நின்று பார்த்தவன், இறுதி போட்டியில் அவர்கள்  உடனேயே சேர்ந்து நின்று கொண்டு, அந்த அணியினரை உற்சாகப் படுத்தினான்.  

போட்டி கடினமாக இருந்தது.

இறுதி போட்டி ஹோலி க்ராஸ் பெண்கள் அணியுடன்.  அவர்கள்தான் கடந்த ஐந்து வருடங்களாக  கோ-கோ வில் சாம்பியன் என்றதைக்கேட்டு கொஞ்சம் பயந்து தான் போனாள் பூங்கொடி.  

இப்பொழுது அவளருகே வந்த ராசய்யா  

“இங்கே பார் பூவு...  இத்தன வருஷமா  ஜெயிச்சாங்கனா அவங்களே எப்பவும் ஜெயிப்பாங்கனு என்ன இருக்கு?  வெற்றி தோல்வி என்பது எல்லாருக்கும் பொதுதான்.

ஒருத்தர் மட்டுமே எப்பவும் ஜெயிச்சுகிட்டே இருக்கவும் முடியாது. அவர்களை தோற்கடிக்க வந்தவர்களா உங்களை நினைச்சுக்கங்க..  

இத்தனை வருஷம் யாராலும் ஜெயிக்க முடியாதவங்களை , வீழ்த்த வந்தவங்க  நீங்கதான் என்று நினைச்சிக்கிட்டு விளையாடுங்க.  

உங்க காலேஜ் இதுதான் முதல் முறை இந்த போட்டியில் கலந்துக்குது.  நீங்க நல்லா விளையாண்டு கோப்பையை பெற்றால்  உங்க காலேஜ்க்கு பெருமை.  உங்க பி.டி  மாஸ்டருக்கும் ரொம்ப பெருமை. உங்க அப்பா அம்மாவு க்குமே  அது பெருமை அல்லவா

அதை முன்னிறுத்தி,  அவர்களும்  உங்களைப்போல சாதாரண பெண்கள்தான் என்று மனதில் இறுத்தி விளையாடு. வெற்றி நிச்சயம்..”  என்று இன்னும் சில பல அறிவுரைகளை வழங்கி  மோட்டிவேட் பண்ண,

அனுமனின் அருமை பெருமைகளை ராமபிரான் பட்டியல் இட இட கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து விண்ணைத்தொட்டு விடும் அளவுக்கு வளர்ந்து நின்ற அனுமனைப் போல,  பூங்கொடிக்கும் மனதிற்குள் யானை பலம் வந்தது.

கொஞ்சம் கொஞ்சமாம நிமிர்ந்து நின்றாள் பூங்கொடி..!

அவனின் வார்த்தைகள் அவளை இன்னுமாய்  உற்சாகம் கொள்ள வைக்க, கூடவே எல்லாரும் சுற்றி  நின்று உற்சாக படுத்த,   ரொம்பவே கஷ்டப்பட்டு கடினமாக போராடி இறுதி சுற்றில் வெற்றி பெற்றார்கள் பூங்கொடி அணியினர்.

அவ்வளவுதான்..!

அடுத்த கணம் உற்சாக கூக்குரல் அந்த மைதானம் முழுவதும் எதிரொலித்தது.

அதோடு முதன் முறையாக போட்டியில் பங்கேற்ற அணி,  இறுதி சுற்று வரை வந்து,  கோப்பையையும் கைப்பற்றியது கண்டு எல்லாருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

மற்ற அணியினர் எல்லாருமே முசிறி அணியினரை பாராட்டி தள்ளினர்.

இதற்கு ஒரு வகையில் பூங்கொடியும் அவளை உற்சாக படுத்திய ராசய்யாவும்தான் காரணம் என்று  புரிய

எல்லாருமே ராசய்யாவுக்கும் வாழ்த்துச் சொல்லி பாராட்டினர்.

ரௌடியாக இருந்தவன் அன்று பூங்கொடியை தவிர எல்லாருக்குமே ஹீரோவாகி போனான் ராசய்யா..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!