நிலவே என்னிடம் நெருங்காதே-44
அத்தியாயம்-44
அறைக்கு
வந்ததும் நிலா குளியலறைக்குள் சென்று நல்ல சுடுநீரில் குளிக்க, அந்த குளிருக்கு இதமாக
இருந்தது... உடம்பு கழுவி ஒரு தொழதொழப்பான
இரவு உடையை அணிந்து கொண்டு வந்தாள்..
இதுவரை அவளை புடவையிலும் சுடிதாரிலும்
பார்த்து இருந்தவன் இந்த மாதிரி பேண்ட் மற்றும் டாப்சில் பார்க்க அவன் உள்ளே புயல்
அடித்தது...
ஒரு நொடி அவளை விழுங்குபவனை போல ரசனையாக பார்த்தவன் அவள் பார்வை அவன் புறம் வர அவசரமாக
சென்று குளியலறைக்குள் புகுந்து கொண்டான்..
தன் உள்ளே சுழற்றி அடித்து கொண்டிருந்த புயல்
அடங்கும்வரை ஷவரில் நின்று குளித்து முடித்தவன்
ஒரு த்ரி போர்த் ட்ராயர் மட்டும் அணிந்து கொண்டு வெற்று மார்புடன் வெளியில் வர, அங்கு சோபாவில் அமர்ந்து
கொண்து டீவி பார்த்து கொண்டிருந்தவள் பார்வை எதேச்சையாக அங்கு செல்ல அப்படியே
ஸ்தம்பித்து நின்றாள்..
அவனின் உறுதியான தசை கோலங்களும் பரந்து
விரிந்த மார்பும் அவளை பாடாய் படுத்தியது.. உடனே பார்வையை மாற்றி கொண்டு டிவியில்
கவனத்தை செலுத்தினாள்..
அடுத்து எப்படி படுப்பது என்று கேள்வி வந்தது..
ஷோபா ஒருவர் மட்டுமே அமரும்படி இரண்டு ஷோபாக்கள் இருக்க அதில் படுக்க முடியாது என
தோன்ற அடுத்து தரையில் படுக்கலாம் என்றால் தரை சில்லென்று இருந்தது..
ஏற்கனவே நடுங்கி கொண்டிருந்தவளுக்கு
கண்டிப்பாக சில்லிட்டிருந்த தரையில் படுக்க முடியாது என தோன்றியது.. ஆனாலும் தயக்கத்துடன்
ஒரு தலையணையை எடுக்க,
“ஏய்.. இப்ப எதுக்கு அதை உருவற? “ என்றான் முறைத்தவாறு..
“இல்ல.. வந்து... நான் தரையில் படுத்து
கொள்கிறேன் .. “ என்றாள் மெல்ல இழுத்தவாறு..
“ஏன்? இது பெரிய கிங் சைஸ் பெட்தான்.. உன் ஒல்லிகுச்சி
உடம்புக்கு இந்த பெட் தாராளமா போதும்.. இதிலயே படுத்து கொள்.. “ என்றான் முறைத்தவாறு...
“இ இல்... இல்ல... வே வேண்டாம்..... “
என்றாள் தயக்கத்துடன்..
“ஏன் வேண்டாம் ? ஓ.. நீ தூங்கறப்ப உன்னை
இழுத்து அணைத்துக் கொள்வேன்..உன் மீது பாய்ந்து விடுவேன் என்ற பயமோ? பாயணும்னு நினைத்தால் இந்த
ஒரு அடி தூரத்தில் நீ விரிக்க இருக்கும் படுக்கைக்கு என்னால் வரமுடியாதா?
இல்லை இத்தனை நாட்கள் என்கூட தங்கி
இருந்தியே.. அப்ப பாய்ந்திருக்க மாட்டனா? “ என்றான் முறைத்தவாறு...
“அதான...இவனை பார்த்து எனக்கு என்ன பயம்..? அப்படியே பாய்ந்தாலும் என்
கை என்ன பூ பறிக்க போகுமா?
எனக்கும் கராத்தே குங்பூ எல்லாம் தெரியும்.” என்று மனதிற்குள் சொல்லி கொண்டவள்
அவனை மிடுக்குடன் முறைத்தவாறு கட்டிலின் ஓரத்தில் ஏறி அவனுக்கு முதுகு காட்டி
படுத்து கொண்டாள்..
அவனும் உள்ளுக்குள் சிரித்தவாறு மறுபக்கம்
படுத்து கொள்ள,
சிறிது நேரத்திலயே நன்றாக உறங்கிவிட்டாள் நிலா...
தூக்கத்தில் இவனை பார்த்தவாறு புரண்டு
படுத்தவள் உறக்கத்திலயே கனவில் ஏதோ நினைத்து கொண்டு இதழ் விரிய புன்னகைக்க, தூக்கம் வராமல் தன்
அலைபேசியை நோண்டி கொண்டிருந்த அதிரதன் எதேச்சையாக திரும்பி பார்க்க, அப்படியே ஸ்தம்பித்து
போனான்..
இதழ் விரிய புன்னகையும்,உறக்கத்தில் மூச்சு
விடும்பொழுது ஏறி இறங்கிய மார்புமாய் ஒரு பெண்ணை அதுவும் தன்னவளை, தனக்கு உரியவளை அவ்வளவு நெருக்கத்தில் காண அதுவரை
அடங்கி இருந்த சூறாவளி மீண்டும் வீறு கொண்டு எழுந்தது..
அவன் உள்ளே தகிக்க ஆரம்பித்தது...
இத்தனை நாட்களாக சற்றுமுன் அவன் சொல்லிய
ஒரு அடி தூரத்தில் தான் உறங்கி கொண்டிருந்தாள்..
“ஆனால் அப்பொழுது எல்லாம் அவனுள் எந்த
பாதிப்பும் இல்லையே..! இப்ப மட்டும் என்ன?
ஒருவேளை அவள் உடலுடன் ஒட்டி கொண்டு
வந்ததில் புத்தி கெட்டு போனதா?
சே... சற்றுமுன் தான் அவளுக்கு வாக்கு கொடுத்தேன்.. அதை மீறக்கூடாது.. “என்று தன்னை இறுக்கி கொண்டவன் அவளை பார்க்காதவாறு மறுபக்கம் திரும்பி படுத்து கொண்டு கண்ணை இறுக்க மூடி கொண்டு நீண்ட போராட்டத்திற்கு பிறகு கண் அயர்ந்தான் அதிரதன்..!
Comments
Post a Comment