நிலவே என்னிடம் நெருங்காதே-47

 


அத்தியாயம்-47

றுநாள் படகு பயணத்தை முடித்து கொண்டு அடுத்ததாக கோவளம் பீச்சிற்கு சென்றனர்...

கேரளாவின் புகழ்பெற்ற சுற்றுலா தளங்களில் முக்கியமானது கோவளம் பீச்.. பீச் அருகிலயே இருந்த ஒரு பைவ் ஸ்டார் ஹோட்டலில் இரண்டு அறைகளை முன் பதிவு செய்திருந்தான் அதிரதன்..

தங்கள் உடமைகளை தங்கள் அறையில் வைத்துவிட்டு அங்கயே மதிய உணவை முடித்தனர்.. அந்த ஹோட்டலிலயே ஆயுர்வேத மசாஜ் மையம் (Spa)  இருக்க, அதிரதன் , ஸ்டீபன் மற்றும் லியாவை அங்கு அழைத்து சென்று அவர்களை மசாஜ் செய்ய சொல்லி விட்டுவிட்டு மசாஜ் முடிந்ததும் பீச்சிற்கு செல்லுமாறு சொல்லி தனக்கு வேலை இருப்பதாக தன் அறைக்கு வந்துவிட்டான்..

நிலாவும் அவனுடனேயே அறைக்கு வந்துவிட்டாள்.. அவன் தன் அலுவலக வேலையை கவனிக்க அவளோ அந்த அறையின் பால்கனியில் நின்று கொண்டே அந்த கடலை ஆர்வத்துடன் ரசித்து கொண்டிருந்தாள்..

உச்சி வெய்யிலயே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது அந்த கடற்கரையில்.. நிறைய வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் டூ பீஸ் உடையில் சன் பாத் எடுத்து கொண்டிருந்தனர்..

ஒரு சிலர் அதை ஆர்வமாக நின்று வேடிக்கை பார்த்தும் அவர்களை புகைப்படம் எடுத்து கொண்டும் சென்றனர்.. மற்றவர்களோ கடல் நீரில் பொங்கி வரும் அலையில் உற்சாகமாக விளையாடி கொண்டிருந்தனர்,,,

அவர்களை பார்க்கும் பொழுது அவளுக்கும் இதுமாதிரி ஆடவேண்டும் என ஆசையாக இருந்தது.. அதையே ஏக்கமாக பார்த்து கொண்டு நின்றிருக்க,

“உனக்கும் அப்படி குளிக்கவேண்டும் போல இருக்கா?”  என்று வெகு அருகில் கேட்ட குரலால் திடுக்கிட்டவள் வேகமாக திரும்ப அவள் பின்னால் நெருக்கமாக நின்று கொண்டிருந்தவன் மார்பில் இடித்து கொண்டாள்...

உடனே சாரி என்று சொல்லி விலகி கொண்டவள் அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் விதமாக

“இல்லை.. சும்மா பார்த்துகிட்டு இருந்தேன்.. " என்றாள் சமாளித்தவாறு..

“பின்ன.. தண்ணியில் இறங்கி ஆடவேண்டும் என்று சொன்னால் இவன் முன்னால் ஈர உடையில் எப்படி ஆடுவதாம்? " என்று மனதுக்குள் முனகி கொண்டாள்..

“ஹே பட்டிக்காடு... பொய் சொல்லாத.. உன் கண்ணுலதான் தெரியுதே அத்தனை ஆசை ஏக்கம்.. சரி வா.. நாமளும் பீச்சுக்கு போகலாம்.. " என்றான் புன்னகைத்தவாறு..

"இல்ல.. வேண்டாம்... " என்றாள் தயக்கத்துடன்..

"ஏன்.. ? " என்றான் கண்கள் இடுங்க..

"எனக்கு தண்ணிய பார்த்தால் பயம்.. அலை வந்து அடிச்சுகிட்டு போய்டுச்சுனா? " என்றாள் தயக்கத்துடன்..

"ஹா ஹா ஹா.. தேவநாதன் ஜமீன்தார் வீட்டு மருமகளுக்கு இந்த அலையை பார்த்து அச்சமா? தண்ணிய பார்த்து பயமா? க்ரேட் ஜோக்..நீதான் புலியவே முறத்தால அடிச்சு விரட்டிய வீர தமிழச்சி பரம்பரையில வந்தவளாச்சே.. ஆப்ட்ரால் இந்த அலைக்கு போய் பயந்துக்கலாமா? " என்றான் அவளை சீண்ட எண்ணி..

அவன் எண்ணியதை போலவே அவளும் தன் தலையை சிலுப்பி கொண்டு

"ஹலோ ஜமீன்தாரே... .எனக்கு ஒன்னும் பயமில்லை.. இந்த அலை எல்லாம் எனக்கு ஜுஜுபி.. வாங்க போகலாம்... " என்று மிடுக்குடன் முன்னால் நடந்தாள்..

அவனும் உள்ளுக்குள் பொங்கிய சிரிப்பை அடக்கி கொண்டு தன் தோள்களை குலுக்கிய்வாறு அவளை பின் தொடர்ந்தான்..

பீச் ஐ அடைந்ததும் வேகமாக ஓடி சென்று அலை தொடும் இடத்தில் நின்று கொண்டாள் நிலா...

நீரில் புடவை நனைந்து விடாமல் இருக்க, தன் புடவையை கொஞ்சமாக மேலே தூக்கி கொள்ள அப்பொழுதுதான் கவனித்தான் அவள் தந்தம் போன்ற வெண்ணிற  காலும் அதை தழுவி இருந்த மெல்லிய கொலுசும்...

அவளின் அந்த கால்களையே இமைக்க மறந்து ரசித்து கொண்டிருக்க அவளோ அந்த அலைகளோடு விளையாண்டு கொண்டிருந்தாள்...

விளையாடும் அவளையே ரசித்தவன்

"ஹே மூன்.. வா.. இன்னும் கொஞ்சம் உள்ளே போகலாம்.. " என்று முன்னே சென்றான்.. அவளோ வர மறுக்க, அவன் அவள் கையை பிடித்து இழுத்து சென்றான்...

எதேச்சையாக குனிந்து நீரை எடுத்து அவன் மீது தெளிக்க, உடனே அவனும் திருப்பி கொடுக்க, இருவரும் சிறிது நேரம் அந்த நீரில் விளையாட ஆரம்பித்தார்கள்....

இருவருக்குமே இருந்த தயக்கம் விலகி நீண்ட நாட்கள் பழகியவர்களை போல ஒருவரை ஒருவர் சீண்டி விளையாட, அந்த அலைகளும் அவர்களின் விளையாட்டை  பார்த்து ரசித்து கொண்டிருந்தன்..

அவர்களின் இந்த விளையாட்டு சிறிது நேரத்தில் அந்த அலைகளுக்கு போரடித்துவிட, அவர்களை இன்னும் கொஞ்சம் சீண்டி பார்க்கும் விதமாய் ஒரு ராட்சத அலை திடீர் என்று வெகுண்டு எழுந்து வேகமாய் வந்து அவர்களை தழுவ, அதை எதிர்பாராத நிலா அப்படியே அந்த அலையில் இழுத்து செல்ல பட்டாள்...

நொடியில் நடந்த நிகழ்வால் ஸ்தம்பித்து நின்றான் அதிரதன்.. அடுத்த  நொடி பாய்ந்து சென்று அவளை தேட, அவளை காணவில்லை அங்கே..

உயிர்வரை தீண்டியது அவன் பயம்... அவசரமாக நாலா பக்கமும் தேட அப்பொழுது சற்று தொலைவில் ஒரு கை மட்டும் தெரிய பாய்ந்து சென்று அந்த கையை பற்றி தூக்க அவளேதான்..

அலையில் இழுத்த பயத்தில் கொஞ்சம் தள்ளி சென்றிருந்தாள் நிலா.. அவளை கண்டதும் அவளை அப்படியே அள்ளி அணைத்து கொண்டான்... அவளுமே பயந்து போய் இருந்ததால் அவனை கண்டதும் இறுக்கி கட்டி கொண்டு அவன் மார்பில் புதைத்து கொண்டாள்..

அவள் உடல் நடுங்குவது  அவனுக்கு புரிந்தது.. அவள் தலையை பரிவுடன் வருடியவன்

"ஒன்னும் இல்லடா... ரிலாக்ஸ்... இந்த அலை ஒன்னும் செய்யாது.. அது சும்மா உன்னுடன் விளையாடி பார்க்குது... " என்று மெதுவாக முனகினான்..

ஆனாலும் அந்த அலை இழுத்து சென்ற நொடி நினைவு வர, இன்னுமாய் அவன் உடன் ஒன்றி கொண்டாள்.

சிறிது நேரம் இருவரும் அப்படியே கட்டி பிடித்து நின்று கொண்டிருக்க, சற்று நேரத்தில் அவள் நடுக்கம் குறைந்திருக்க, அவளை அழைத்து கொண்டு தங்கள் அறைக்கு திரும்பி இருந்தனர்..

அவள் வேற ஆடையை மாற்றி கொண்டதும் சூடான காபியை வரவழைத்து குடிக்க வைக்க சிறிது நேரத்தில் நார்மல் ஆகி இருந்தாள் நிலா..

அப்பொழுதுதான் அவனுக்கு நிம்மதியாக இருந்தது.. அதே நேரம் அறைக்கதவை தட்டி விட்டு அதை திறந்து கொண்டு உள்ளே வந்தனர் ஸ்டீபன் மற்றும் லியா..

அவர்களை பார்த்து இருவரும் புன்னகைத்து இந்த நாள் எப்படி இருந்தது என்று வினவ,

ஸ்டீபன் அதியையும் லியா நிலாவையும் கட்டி அணைத்து கொண்டார்கள்..

"இட் வாஸ் அமேசிங்.. வி என்ஜாய்ட் லாட்.... எங்களை இங்கே அழைத்து வந்ததுக்கு ரொம்ப நன்றி.. “  என்று நெகிழ்ந்து போய் சொன்னவர்கள் பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு பின் இருவரையும் பார்த்தவர்கள்

"அதி அன்ட் மூன்.... எங்களுக்கு உதவி செய்ததுக்கு பரிசாக, நாங்கள் ஒரு பரிசு கொடுக்க வேண்டும்.. அதை மறக்காமல் ஏற்று கொள்ள வேண்டும்...” என்றனர்...

அதை கேட்டு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு பின்

“சொல்லுங்க.. “ என்றனர் இருவரும் புன்னகைத்தவாறு..

“இங்க நைட் ஒரு பார்ட்டி இருக்கு... நாங்க உங்களுக்காக கேண்டில் லைட் டின்னர் அரேஞ் பண்ணி இருக்கோம்.. இது எங்களுடைய கிப்ட்.. நீங்க மறக்காம ஒத்துக்கணும்.. “ என்றான் ஸ்டீபன்...

அதை கேட்டு இருவரும் மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு புருவம் உயர்த்தி பார்வையால் வினவியவர்கள் மீண்டும் அவர்கள் பக்கம் திரும்பி

“ஸ்யூர்.. கன்டிப்பா வர்ரோம்.. “ என்று ஒரே குரலில் சொல்ல, அவர்களுடைய பார்வையும் அதிலயே இருவரும் பேசி கொண்டதும் கண்டு வியந்த லியா

“வாவ்.. யூ ஆர் சோ ப்யூட்டிபுல் கபுல்.. எப்படி இப்படி பார்வையிலயே ஒருவர் மனதை ஒருவர் படித்து விடுகிறீர்கள்..?  “ என்று ஆச்சர்யமாக கேட்க இருவருமே ஒரே நேரத்தில் ஒரே விதமாக அசட்டு சிரிப்பை சிரித்து வைத்தனர்...

லியா வும் இணைந்து சிரித்தவள்

“அப்புறம் இன்னொரு ரிக்வெஸ்ட்.. இதுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்காதிங்க.. நான் சொல்லி முடிச்சிடறேன்.. “ என்று  சிரித்தவள்

“இந்த டின்னர்க்கு  நாங்க ரெண்டு பேரும் உங்க ஸ்டைல் ல ட்ரெஸ் பண்ண போறோம்.. நீங்க ரெண்டு பேரும் எங்க ஸ்டைல் ல ட்ரெஸ் பண்ணனும்.. ஐ மீன் வெஸ்டர்ன் ஸ்டைலில்.. “ என்று  கண் சிமிட்டி சிரிக்க அதை கேட்ட நிலா அதிர்ந்து போய்

“ஐயோ... வெஸ்டர்ன் ஸ்டைலா...?  எனக்கு போட வராது.. “ என்றாள் அலறியபடி..

“ஹீ ஹீ ஹீ.. நான் சொல்லி தர்றேன்.. மூன்.. இட்ஸ் ஈசி ஒன்லி.. கம்பர்ட்டபில் ஆதான் இருக்கும்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ஒத்துக்கோ. “ என்றாள் லியா  கெஞ்சல் மற்றும் கொஞ்சலுடன்...

“ஆங்... அது வந்து என்கிட்ட வெஸ்டர்ன் ட்ரெஸ் எதுவும் இல்லையே.. “ என்று அடுத்த காரணத்தை கண்டுபிடித்தாள்..

“என்கிட்ட இருக்கே.. ஆனா என்ன?  உன் ஹைட் க்கு கொஞ்சம் குட்டையா இருக்கும்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.. “ என்க நிலாவோ ஜெர்க் ஆனாள்..

“ஐயோ.. இந்த லிசா குட்டச்சி போடறதே குட்ட கவுன்... அவளுக்கே அது குட்டையா இருக்கும்.. அதை நான் போட்டா அப்புறம் டென்னிஸ் விளையாடறப்ப போடற குட்ட கவுன் மாதிரிதான் எனக்கு இருக்கும்.

அதை போட்டுகிட்டு இந்த ஜமீன்தார் முன்னாடி எப்படி வந்து நிப்பதாம்... ஐயோ முருகா என்னை காப்பாற்று... “ என்று  மனதுக்குள் புலம்ப அவள் மனதை கண்டு கொண்ட லியா

“ஹே மூன்.. இது நான் போடும் ஷார்ட் கவுன் இல்ல.. லாங் ஆ இருக்கிற பார்ட்டி கவுன்.. உனக்கு நல்லாவே சூட் ஆகும்..டோன்ட் வொர்ரி.. “  என்று சமாதானம் படுத்தினாள்..

“இல்ல.. வந்து... அது... நல்லா இருக்காது... “ என்று இன்னும் ஏதேதோ காரணம் சொல்ல அதிரதனுக்கும் சிரிப்பு பொத்து கொண்டு வந்தது..

இவள் அந்த வெஸ்டர்ன் ட்ரெஸ் ஐ போட்டு கொண்டு நெழிந்து நெழிந்து வந்தால் எப்படி இருக்கும்? என்று கற்பனை பண்ணி பார்த்தவனுக்கு காமெடியாக இருக்க

“எப்படியோ இன்னைக்கு இவள வச்சு செய்யறதுனு முடிவு பண்ணிட்டாங்க இந்த கபுல்..

நாமலும் கொஞ்சம் என்ஜாய் பண்ணிக்கலாம்.. இந்த பட்டிக்காடு மொக்க வாங்கறதை இன்ட்ரெஸ்ட் ஆ பார்க்கலாம்.. “  என்று மனதுக்குள் சொல்லி சிரிக்க, ஓரக்கண்ணால் அவனை கண்டவள் அவன் சிரிப்பை கண்டு கொண்டு அவனை முறைத்தாள்..

அவனோ சிரிப்பை அடக்க முடியாமல் மறுபக்கம் திரும்பி கொள்ள, அதில் ரோஷமான நிலா லியாவை பார்த்து

“ஒகே டன் லியா... நான் போட்டுக்கறேன்.. ஆனால் அந்த ட்ரெஸ் ல நான் நல்லா இல்லைனா நீங்க எல்லாம் கிண்டல் பண்ண கூடாது.. அதுக்கு நான் பொறுப்பல்ல.. டீல்.? “ என்று  சொல்ல

“டீல் மூன் டியர்.. ஐ பெட் யூ.. உனக்கு சூப்பரா இருக்கும்..நான் உனக்கு ட்ரெஸ் பண்ணி விடறேன்..  “ என்று லியா அவளை கட்டி கொண்டாள்..

ஸ்டீபன் நிலா அருகில் வந்து

“மூன்..அதே மாதிரி நீயும் லியாவுக்கு எங்க பர்ஸ்ட் நைட் அப்ப பண்ணிவிட்ட மாதிரி அலங்காரம் செஞ்சு விடு... எஸ்பெஸலி அந்த வைட் கலர் ப்ளவர்.. வாட்ஸ் தட் நேம்? “ என்று தலையை தட்டி யோசித்தவன்

“ஆங் ஜாஸ்மின்... அதை நீளமா வச்சு விடு.. தட் ப்ளவர் வாஸ் அமேசிங்.. இட் கிவ்ஸ் ப்ளசன்ட் அன்ட் டிபரன்ட் மூட்.. “  என்று கண் சிமிட்டி சிரிக்க, அன்றைய ஞாபகத்தில் லியாவும் கன்னம் சிவக்க, நிலாவோ ஆச்சர்யமாக பார்த்தாள்..

“சீ.. சோ நாட்டி ஸ்டீவ்... கீப் கொய்ட்.. “ என்று அருகில் நின்றிருந்தவன் வயிற்றில் தன் முழங்கையால் இடித்து அழகாக முறைத்தாள் லியா... அவனும் மலர்ந்து சிரித்து அவளை தன்னோடு சேர்த்து மெல்ல அணைத்து கொண்டான்..

நிலாவுக்கு அவர்களை பார்த்த பொழுது பொறாமையாகவும் கொஞ்சம் ஏக்கமாகவும் கொஞ்சம் ஆசையாகவும் இருந்தது.. .

அவளும் இது மாதிரி தன் கணவனுடன் அன்யோன்யமாக இருக்க வேண்டும் என்று ஆசையாக இருக்க அவள் பார்வை தானாக தன்னவன் பக்கம் சென்றது..

அதே நேரம் அவனும் இவள் பக்கம் பார்வையை திருப்பினான்.. இருவர் பார்வையும் ஒரு நொடி சந்தித்து மீண்டது.. ஆனால் என்ன பேசி கொண்டது என்று அவர்களுக்கே தெரியவில்லை.

“ஹலோ மூன்? என்ன அதுக்குள்ள் உன் ஹபி கூட ரொமாண்ஸ் பண்ண போய்ட்டியா? “ என்று அவளை பிடித்து உலுக்கினாள் லியா..

அவளும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவள்

“இங்க அந்த ப்ளவர் கிடைக்குமானு தெரியலை ப்ரோ.. ஐ வில் ட்ரை பார் தட் “ என்று கன்னம் குழிய சிரித்தாள் நிலா...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!