நிலவே என்னிடம் நெருங்காதே-48


 

அத்தியாயம்-48

தற்கு பிறகு லியா அதிரதனை ஸ்டீபன் உடன் தங்கள் அறைக்கு அனுப்பி விட்டு பெண்கள் இருவரும் அந்த அறையில் தங்கள் அலங்காரத்தை ஆரம்பித்தனர்..

நிலா  அந்த ஹோட்டல் ரிஷப்ஷனுக்கு அழைத்து மல்லிகை பூவை எங்கிருந்தாவது பிடித்து கொண்டு வர சொல்ல, அவர்களும் அதை வரவழைத்து இருந்தனர்..

லியா மெரூன் வண்ணத்தில் இருந்த பார்ட்டி கவுனை நிலாவுக்கு போட்டுவிட்டு அதற்கு பொருத்தமான ஆபரணங்களையும் அணிவித்து சிகை அலங்காரத்தையும் மாற்றி முகத்துக்கு லேசாக ஒப்பனை செய்து லிப்ஸ்டிக் போட்டுவிட்டு அவள் முகத்தை கண்ணாடியில் திருப்பி காட்ட நிலாவுக்கே ஆச்சர்யமாக இருந்தது தன்னை பார்த்து..

முற்றிலும் வேறாக மாறி இருந்தாள்..

கிராமத்து சாயல் போய் அவளும் மாடர்ன் யுவதியாக மாறி இருந்தாள்...

எழுந்து நிக்க வெட்கமாக இருந்தது.. நல்லவேளை அது ஸ்லிவ்லெஸ் கவுன் இல்லை என்றாலும் கை மிகவும் குட்டையாக இருந்தது... கழுத்தும் கொஞ்சம் கீழ இறங்கி இருந்தது..

ஆனால் அந்த கவுன் அவளுக்கே அளவெடுத்து தைத்ததை போல பிட் ஆக இருக்க, அவளின் அங்கங்களை அழகாக எடுத்து காட்டியது.

உடலை ஒட்டியதை போல இருந்த அந்த கவுனையும் அதுவும் மேலாடை எதுவும் இல்லாமல் நிக்க வேண்டும் என்க அவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது..

“லியா... இது வேண்டாமே... “ என்று இழுக்க

“கமான் மூன்.. யூ ஆர் லுக்கிங் சோ கார்ஜியஸ்.. அப்சரஸ் மாதிரி இருக்க.. இந்த ட்ரெஸ் ல அதி டார்லிங் உன்னை பார்த்தால் அந்த நொடியே ப்ளாட் ஆக போறார்...” என்று சிரிக்க, நிலாவுக்கோ வெட்கமாக இருந்தது...

மெல்ல எழுந்து நின்றவள்  நாணி கோணி நடக்க, அதை கண்ட லியா விழுந்து விழுந்து சிரித்தாள்..

நிலா அவளை முறைக்க,

“ஒகே ஒகே.. மூன்... உங்க புடவையை கட்டினால் எப்படி நடக்க வேண்டுமோ அதே போல இந்த ட்ரெஸ் ஐ போடும்பொழுதும் இதுக்கு தகுந்த மாதிரி நடக்க வேண்டும்..

இந்த  வீடியோவைப் பார்.. இப்படித்தான் ஸ்டைலாக நடக்கவேண்டும்.. “  என்று அந்த உடைக்கு தகுந்த மாதிரி காலணியை கொடுத்து போடச்சொல்லி தன் அலைபேசியில் ஒரு வீடியோவை காட்ட நிலாவும் அதை பார்த்து மனதில் இருத்தி கொண்டாள்..

“வேசம் போடறதுனு முடிவாய்டுச்சு.. அதை ஒலுங்காதான் செய்வோமே..!”  என்று தன்னைத்தானே தேற்றி கொண்டவள் அந்த வீடியோவில் இருந்த மாதிரி நடந்து பார்த்து சில நிமிடங்களிலயே பழகி கொண்டாள்..

“வாவ்.மூன்..  சீக்கிரமே இத க்ராஸ்ப் பண்ணிட்டியே.. சோ இன்டெலிஜென்ட்.. அதி சோ லக்கி.. இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்க.. “ என்று  அவள் கன்னத்தை செல்லமாக கிள்ளினாள்..

நிலாவும் ஒரு நொடி முகம் வாடினாலும் அதற்குள் தன்னை சமாளித்து கொண்டு லியாவுக்கு அலங்காரம் பண்ண ஆரம்பித்தாள்..

இரு பெண்களும் தங்கள் அலங்காரத்தை முடிக்கவும் ஆண்கள் இருவரையும் பார்ட்டி நடக்கும் ஹால் அருகில் வரச்சொல்லி அழைத்தனர்..

அவர்கள் முன்னதாக வந்து காத்திருக்க அதிரதன் ஸ்டீபனிடம் ஏதோ தொழில் சம்பந்தமாக பேசி கொண்டிருக்க எதேச்சையாக நிமிர்ந்த அதிரதன் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்..

சற்று தொலைவில் லியாவுடன் பேசியவாறு படு ஸ்டைலாக வந்து கொண்டிருந்தாள் நிலா..

இந்த வெஸ்டர்ன் உடையில் வெட்கபட்டு நெளிந்தவாறு வருவாள்.. அவளை வைத்து ஓட்டலாம் என்று  எண்ணி இருந்தவன் பல்ப் வாங்கினான்..

அவளோ எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் ஏதோ அந்த ட்ரெஸ் ஐ பலமுறை போட்ட மாதிரி படு கேசுவலாக நடந்து வர, அதை கண்டு மயக்கம் வந்தாலும்  அவளின் அந்த கெட்டப் ல் கிறங்கித்தான் போனான்..

அவளையே விழுங்கி விடுபவனை போல பார்த்திருந்தான்.. அவன் பார்வையை ஓரக்கண்ணால் கண்டவளுக்கோ வெட்கம் வந்து ஒட்டி கொண்டது..

ஒரு நொடி கன்னம் சிவந்தாலும் அதை சமாளித்து கொண்டு அவன் அருகில் வர, அந்த ஆடைக்கே உரித்தான வகையில் ஆங்கிலேயர் பாணியில் அதிரதன் கையை நீட்ட அவளும் தயங்காமல் அவன் கையை பற்றி கொண்டு அவனுடன் இணைந்து நடந்தாள்..

லியா ஸ்டீபன் அந்த ஜோடியை பார்த்து ஆச்சர்யமாக இருந்தது.. லியா அவர்களை புகழ்ந்து தள்ளி பல புகைப்படங்களை எடுத்து தள்ளினாள்..

இருவருக்கும் தனிமை கொடுத்து இருவருக்கு மட்டுமாய் ஒரு டேபிலை ஏற்பாடு செய்திருக்க, எந்த ஒரு விளக்கு வெளிச்சமும் இல்லாமல்  வெறும் கேண்டில் மட்டும் அந்த டேபிலில் அமர்ந்து இருக்க, அந்த வெளிச்சத்தில் இன்னும் ஜொலித்தாள் நிலா...

அந்த  வான் நிலாவே இறங்கி வந்து அவன் முன்னே அமர்ந்து இருப்பதை போல இருந்தது.. அவள்  கண்களில் மின்னிய நட்சத்திரங்களும் அவளுக்கு இன்னுமாய் அழகு சேர்த்தன...

அவன் பார்வை வீச்சை தாங்க முடியாதவள்

“ர த ன்........ “ என்று  மெல்ல அழைக்க, அந்த அழைப்பு கூட அவனுக்கு கிளர்ச்சியை தூண்டியது...

அந்த நொடியில் மொத்தமாக கவிழ்ந்து போனான் அந்த அழுத்தக்காரன்..

அதன் பிறகு என்ன சாப்பிட்டார்கள் என்ன பேசினார்கள் என்று  இருவருக்குமே தெரியவில்லை..

உணவின் முடிவில் மேற்கத்திய இசை ஒலிக்க, அங்கு அமர்ந்து இருந்த மற்ற ஜோடிகள் எல்லாம் எழுந்து நடனம் ஆட ஆரம்பித்தனர்..

லியாவும் வந்து அவர்கள் இருவரையும் கை பிடித்து இழுத்து சென்றாள்.. அங்கு ஸ்டீபன் மற்றும் லியா ஒருவரோடு ஒருவர் இழைந்து ஆட, இவர்களையும் ஆட சொல்லி சைகை செய்ய, அதிரதன் லாவகமாக அந்த இசைக்கு தகுந்த மாதிரி ஆட ஆரம்பித்தான்..

அதை கண்டு நிலா மயங்கி நிக்க, அவளின் கை பிடித்து சுண்டி இழுக்தான் அவள் கணவன்.. எதிர்பாராத இந்த இழுப்பில் அந்த பெண் நிலா அவன் மார்பின் மீது மெத்தென விழ, அவள் இடையில் கை போட்டு லாவகமாக அவளை ஆட்டுவித்தான்..

அந்த இசைக்கும் அவன்  இழுத்த இழுப்புக்கு  அவளும் வளைந்து கொடுக்கவும் பார்ப்பவர்களுக்கு  அவனோடு அவள் லயித்து ஆடுவதை போலவே இருந்தது..

இருவரும் தங்களை மறந்து நடனம் ஆட, மற்றவர்கள் இவர்களையே ரசித்து பார்த்து இருந்தனர்...

ஒரு கட்டத்தில் தன் கை அணைப்பில் இருந்தவள் முகம் அவன் முகத்துக்கு நேராக இருக்க அவளின் திரண்ட இதழ்கள் அவனை சுண்டி இழுக்க அவள் இதழ் நோக்கி குனிந்தான்... 

சரியாக அந்த நேரம் பாடல் முடியவும் மற்றவர்கள் கைதட்டி ஆரவரிக்கவும் மெல்ல சுதாரித்து கொண்டவர்கள் உடனே விலகி கொண்டனர். இருவர் முகத்திலும் சிறு வெட்கம்..

ஸ்டீபன் மற்றும் லியா அவர்களை கட்டி அணைத்து

“அமேசிங் டான்ஸ்... பெர்பெக்ட் கபுல் நீங்க.. “ என்று புகழ இருவரும் புன்னகைத்து வைத்தனர்...

ரு வழியாக அந்த டின்னர் முடிய இரு ஜோடிகளும் தங்கள் அறைக்கு திரும்பி வந்தனர்..

அதிரதன் நிலா உள்ளே வந்ததும் கதவை மூடி தாழிட்டவன் அடுத்த நொடி அவளை கைகளில் அள்ளி கொண்டான்..

நிலாவும் ஏற்கனவே அந்த நடனத்தின் பொழுது அவன் கை அணைப்பில் கிறங்கி இருந்தவள் முகம் செவ்வானமாய் சிவந்து போக தன் கைகளை தூக்கி அவன் கழுத்தில் மாலையாக போட்டு கொண்டாள்...

அவனுக்கு இன்னுமாய் கிறக்கத்தை கிளர்ச்சியை தூண்ட, தங்கள் படுக்கை அறைக்கு சென்று அவளை படுக்கையில் கிடத்தியவன் தாபத்துடன் அவள் இதழ் நோக்கி குனிந்தான்...

அவளோ வெட்கத்தில் கண்ணை மூடிக் கொள்ள, அந்த நொடி அவள் அறிவு விழித்து கொண்டது.. அவன் கொஞ்சும் முகம் தெரியாத அவன் நிலா பொண்ணு அவள் கண் முன்னே வந்து அவளை பார்த்து முறைத்தாள்..

அவ்வளவுதான்... அதுவரை கிறக்கத்தில் இருந்தவள் திடீரென்று விழித்து கொள்ள, அதே நேரம் அவன் இதழ்கள் அதன் இலக்கை நெருங்கி இருக்க, அதை அடுக்கும் விதமா டக் கென்று தன் கை கொண்டு அவன் இதழை மூடி அதன் பயணத்திற்கு தடை போட்டாள்....

கிறக்கத்தில் இருந்தவனோ அவள் கையை விலக்க முயல,

“ப்ளீஸ்...ர த ன்... வே... வே வேண்டாம்... “ என்றாள் மெல்ல முனகலுடன்...

“ப்ளீஸ்.. நிவி... ஐ நீட் யூ... ஐ நீட் யூ மேட்லி நௌ... என்னை தடுக்காத...” என்று தாபத்துடன் ஹஸ்கி வாய்சில் முனகியவன் மேலும் முன்னேற, எங்கிருந்து வந்ததோ அந்த துணிச்சல் நிலாவுக்கு....

தன் பலத்தை எல்லாம் திரட்டி அவன் மார்பில் கைவைத்து   அவனை பின்னுக்கு தள்ளியவள் அடுத்த நொடி துள்ளி குதித்து படுக்கையில் இருந்து இறங்கி தள்ளி நின்று கொண்டாள் நிலா...

அதை கண்ட அதிரதன் அதிர்ந்து போனான்...

அவன் அவள் மேல் கொண்ட கோபம், பழி தீர்க்கும் எண்ணம், அவன் காதல், அவன் நிலா பொண்ணு எல்லாம் மறந்து போனது அந்த நொடியில்..  

தன்னை ஒருத்தி விலக்கினாள்.. அதுவும் அவன் தொட்டு தாலி கட்டிய மனைவி அவன் ஆசைக்கு இணங்காமல் அவனை தள்ளி வைத்தாள் என அவசரமாக அவன் மண்டையில் உறைக்க, ஜிவ் என்ற ஆத்திரம் அவன் உடல் எல்லாம் பரவுகிறது...

ஏற்கனவே காமன் விட்ட அம்பால் அவன் உள்ளே தகித்து கொண்டிருந்த தீ இப்பொழுது தனக்கு உரியவள் அவனை விலக்கி தள்ளவும் இன்னுமாய் கொதிக்க ஆரம்பித்தது...

தள்ளி நின்றவள் கையை எட்டி பிடித்து சுண்டி இழுத்தவன் அவளை தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்தவன் அவள் பின்னங்கழுத்தில் அழுந்த முத்தமிட்டான்....

ஆனால் நிலாவோ இந்த முறை கிறங்கி விடாமல் அவன் இறுகிய பிடியில் இருந்து விடுபட முயன்றவள்

“வேண்டாம் ரதன்... விட்டுடுங்க.... “ என்று மறுத்தாள்...

அவனோ இன்னும் தன் பிடியை இறுக்கியவன்

“ஏய்...உன்னை அணைக்க எனக்கு எல்லாம் உரிமையும் இருக்கு.... “ என்றான் கோபத்தில்..

“அப்படியா? என்ன உரிமை அது ஜமீன்தாரே...” என்றாள் அவளும் விடாமல் தலை சரித்து நக்கலாக பார்த்தவாறு...

“ஹ்ம்ம்ம்ம் நீ நான் தாலி கட்டிய மனைவி...எனக்கு சொந்தமானவள்... உன்னை அணைக்க எல்லா உரிமையும் கொண்டவன்...உனக்கும் விருப்பம் தானே..

சும்மா சீன் போடாத..என்னுடன் அப்படி இழைந்து குழைந்து ஆடினாயே... இப்ப மட்டும் என்ன வந்ததாம்?  “ என்றான் சிறு எரிச்சலுடன் மற்றும் நக்கலாக பார்த்தவாறு..

அவன் பேசி கொண்டிருக்கையில் அவன் பிடி கொஞ்சம் தளர, அதை பயன்படுத்தி கொண்டு மீண்டும் தன் பலத்தை ஒன்று திரட்டி திமிறி கொண்டு அவன் இடமிருந்து விடுபட்டவள் தள்ளி நின்று கொண்டு

“மகிழ்ச்சி.... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி ஜமீன்தாரே... என்னை உங்க மனைவி.. நீங்க தொட்டு தாலி கட்டிய மனைவி னு ஒத்து கொண்டதுக்கு. அதையே உங்க மனதார ஒரு முறை சொல்லுங்க.. அடுத்த நொடி இந்த நிலா உங்களுக்கு..

உங்க காலடியில் கிடப்பா... வெறும் உணர்ச்சி வேகத்தில் வாய் வார்த்தையாக சும்மா இன்ஸ்டன்ட் கணவன் என்று சொல்லிவிட்டு என்னை நெருங்கினால் அதை ஒரு நாளும் அனுமதிக்க மாட்டாள் இந்த நிலா...”

என்று மிடுக்குடன் மொழிந்தவள் தன் முழு உயரத்துக்கும் நிமிர்ந்து நின்று கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி கொண்டு அவனை நேராக நிமிர்ந்து பார்த்தவள்

“சொல்லுங்க ஜமீன்தாரே... உங்க மனதில் இருந்து உங்க நிலா பொண்ணை தூக்கி போட்டுட்டிங்களா? என்னை உங்க மனைவியாய் மனதார ஏற்று கொண்டீர்களா? சற்றுமுன் சொன்ன உங்க உரிமை வெறும் வாய் வார்த்தையாய் இல்லாமல் உங்க மனதில் இருந்து வந்தது தானா? “ என்றாள் அவன் கண்களுக்குள் ஊடுருவி பார்த்து..

அவள் கேட்டதும் தான் தூக்கிவாரிப் போட்டது அதிரதனுக்கு... திடுக்கிட்டு அதிர்ந்து போய் தலை குனிந்தான் அதிரதன்..

அடுத்த நொடி அவன் உள்ளே சுழற்றி அடித்த சூறாவளி அடங்கி போனது அந்த கேள்வியாலும் அவளின் நேர் பார்வையாலும்..அவன் மனதில் பொங்கி கொண்டிருந்த அலை அப்படியே கரையை அடைந்ததை  போல அடங்கி போனது..

“எப்படி இது? எப்படி என்னால் என் நிலா பொண்ணை மறக்க முடிந்தது? அவளை விடுத்து இவளிடம் எப்படி என்னால் நெருங்க முடிந்தது? இவள் கேட்பதை போல என் நிலா பொண்ணை மறந்து விட முடியுமா? அப்படி என்றால் இவளை அணைக்கும் இந்த வேகம் எனக்கு எப்படி வந்தது?

என்று  பல விடை தெரியாத கேள்விகளை தனக்குள்ளே கேட்டு கொண்டவன் அவள் முகம் பார்க்க அவளோ இன்னுமாய் அவன் முகத்தை ஒரு ஆர்வத்துடனும் சிறு ஏக்கத்துடனும் பார்த்து  கொண்டு இருப்பது தெரிந்தது..

அதே நேரம் அவளின் நிமிர்வும் திமிர் பேச்சும் கண்ணில் பட, அவன் நிலா பொண்ணின் கொஞ்சல் முகம் கருத்தில் பட

“சே.... “ என்று தன் காலை தரையில் வேகமாக உதைத்தவன் உடல் விறைக்க விடுவிடுவென்று நடந்து பால்கனிக்கு சென்றவன் அந்த அறைகதவை அறைந்து சாத்தியவன் வெளியில் சென்று  நின்று கொண்டான்....

இது எதிர்பார்த்தது தான் என்றாலும் ஒரு சிறு நப்பாசை நிலாவுக்குள்... தன்னை மனைவியாக ஏற்று கொள்வான் என்று.. ஆனால் அது பொய்த்து போய்விட, அதுவரை தன்னை கட்டுபடுத்தி கொண்டு வெளியில் மிடுக்குடன் நின்றவள் கண்கள் அதன் வேலையை காட்ட ஆரம்பித்தது...

அவசரமாக குளியல் அறைக்குள் புகுந்து கொண்டு தன் முகத்தை இரு கையாலும் பொத்தி கொண்டு குலுங்கி அழ ஆரம்பித்தாள்...

தாபத்துடன்,  ஆசையுடன் தன்னை அணைக்க வந்த கணவனுக்கு இணங்காமல் போனதை எண்ணி அழுகிறாளா? இல்லை இவ்வளவு பழகியும் இன்னும் தன்னால் அவன் மனதில் இடம் பிடிக்க முடியவில்லையே என்ற ஆற்றாமையில் அழுகிறாளா?

இவ்வளவு தூரம் பழகியும் அவன் அந்த சாந்தினியை மறக்கவில்லையே.. அந்த அளவுக்கு ஆழமான காதலா என்ற ஏமாற்றத்தில் அழுகிறாளா??  

தெரியவில்லை அவளுக்கு..

ஆனாலும் ஒரு மூச்சு மனம் விட்டு வாய் விட்டு அழுது தீர்த்தாள்.. உள்ளே இருந்த ஏமாற்றம் ஏக்கம், ஆசை,  தவிப்பு என எல்லாம் அடித்து கொண்டு அவள் கண்ணீராய் வெளிவந்துவிட இப்பொழுது முகமும் மனதும் தெளிவானது.

முகத்தில் குளிர்ந்த நீரை வேகமாக அடித்து கழுவி அருகில் இருந்த டவலால் அழுந்த துடைத்தாள்...

“என்ன ஆனாலும் என் போராட்டத்தை கை விடக்கூடாது.... அவனுக்கு இருக்கும் மயக்கத்தை போக்கியே ஆகணும்..  அதுக்கு இது மாதிரி வலி வேதனையை தாங்கித்தான் ஆகணும்... தாங்குவாள் இந்த நிலா... “ என்று தனக்குள்ளே சொல்லி கொண்டு தன்னை மீண்டும் திடமாக்கி கொண்டாள் அந்த நிலா பொண்ணு...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!