நிலவே என்னிடம் நெருங்காதே-50

 


அத்தியாயம்-50

பூர்ணிமா சென்னையை சேர்ந்த ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவள்..கூடவே இவளை அடுத்து அவள் கூடி விளையாட ஒரு தம்பியும் தங்கையும்..

அவள் தந்தை ஒரு தனியார் நிறுவனத்தில் வாட்ச்மேனாக வேலை பார்த்தார்...

அவருக்கு இணையாக துணையாக குடும்ப பாரத்தை சேர்ந்து இழுக்க அவள் அன்னையும் இணைந்து கொண்டார்.. வீட்டிலயே தையல் மெசின் வைத்து அவர்கள் குடியிருந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தேவையான ஆடைகளை தைத்து கொடுத்து அதில் வரும் வருவாயில் குடும்ப வண்டியை ஓட்டினர்...

சிறு வயதிலயே பூர்ணிமாவுக்கு நிறைய படிக்க வேண்டும் என்ற ஆசை...அரசு பள்ளியில் படித்தாலும் எல்லா பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் பெற்று அவளே முதலாவதாக வருவாள்..

படிக்கும் நேரம் போக மீதி நேரங்களில் தன் அன்னைக்கு உதவுவாள்.. கொஞ்சம் பெரியவள் ஆனதும் அவளுமே தையல் பயிற்சி பெற்று தன் அன்னைக்கு உதவி வந்தாள்..

அவளுடைய கடின உழைப்பால் பன்னிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தாள்.. ஆனால் அதை கொண்டாடத்தான் அவளுக்கு கொடுத்து வைக்கவில்லை..

ரு நாள் ஞாயிற்று கிழமை இரவு நேரத்து ட்யூட்டியை முடித்து விட்டு அதிகாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார் அவள் தந்தை,

அன்று இரவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்களின் கார் ஒன்று அவர்களின் போதை மயக்கத்திலும்,  இரவெல்லாம் தூங்காமல் களியாட்டம் போட்டு உல்லாசமாக இருந்ததாலும் அந்த அதிகாலையில் அந்த காரை ஓட்டிவந்தவன் லேசாக கண் அயர்ந்துவிட, அது நிலை தடுமாறி எதிரில் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பூர்ணிமாவின் தந்தையின் மீது ஏறி விட்டது..

அது அதிகாலை நேரம் என்பதால் சாலையில் போக்குவரத்து அவ்வளவாக இல்லை.. இந்த ஆக்சிடெண்டில் அதிர்ந்து போன அந்த இளைஞர்கள் தங்கள் காரை நிறுத்தாமல் வேகமாக ரிவர்ஸ் எடுத்து பறந்து விட்டிருந்தனர்...

அந்த காலை வேளையில் அந்த பக்கமாக ஜாக்கிங் வந்த ஒரு பெரியவர் இரத்த வெள்ளத்தில் கிடந்தவரை பார்த்து அப்படியே விட்டு செல்லாமல் பதறிப்போய் ஆம்புலன்ஸ் க்கு அழைத்து சொல்ல, அவர்களும் வந்து அள்ளி சென்றனர்...

நல்ல வேளையாக அவர் உயிருக்கு ஒன்றும் ஆபத்தில்லை.. ஆனால் ஒரு கால் முற்றிலும் துண்டாகிவிட்டது..தகவல் அறிந்து பதறி அடித்து ஓடிவந்தனர்  பூர்ணிமாவும் அவள் அன்னையும்..

தன் கணவனை அப்படி பார்க்க, தாங்கவில்லை அவள் அன்னைக்கு.. வாயில் முந்தானையை வைத்து தன் மகளிடம் கதறி அழ, பூர்ணிமாதான் தன் அன்னையை தேற்றும்படி ஆனது..

அடுத்த இரண்டு வாரத்தில் அவரை டிஸ்சார்ஜ் செய்து அழைத்து வந்தனர்.. ஆனால் அவர் வேலைக்கு செல்ல முடியாது என்ற நிலை ஆகி போனது.. இதுவரை இருவர் வருமானம் வந்து கொண்டிருந்த நிலை மாறி ஒருவர் வருமானம் மட்டும்தான் என்று நின்றுவிட குடும்ப வண்டி பாரம் தாங்க முடியாமல் தள்ளாட ஆரம்பித்தது...

இதில் பூர்ணிமாவுக்கு அடுத்து பிறந்திருந்த அவள் தம்பி தங்கையின் படிப்பும் கேள்வி குறியாகி நின்றது..

தானாவது பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து விட்டோம்.. ஆனால் தன் தம்பி தங்கைகள் படிப்பு அதை கூட தாண்டாமல் போய்விடக் கூடாது என எண்ணிய பூர்ணிமா பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் மேல படிக்காமல் படிப்பை விட்டு விட்டு வேலை தேட ஆரம்பித்தாள்..

அவர்கள்  வசித்து வந்த ஐய்யப்பந்தாங்களிலயே ஒரு டைல்ஸ் கடையில் விற்பனை பிரிவில் வேலை கிடைத்தது..குறைந்த சம்பளமாக இருந்தாலும் சம்திங் இஸ் பெட்டர் தென் நத்திங் என்று தன் மனதை தேற்றி கொண்டு அந்த வேலையில் சேர்ந்து விட்டாள்..

சுறுசுறுப்பாகவும் பொறுப்பாகவும் வேலை செய்த பூர்ணிமாவை அந்த கடை முதலாளிக்கு பிடித்துவிட்டது..இரண்டு வருடங்களில் விற்பனை பிரிவில் இருந்து சூப்பர்வைசராகவும் பின் இரண்டு வருடங்களில் அக்கவுண்ட்ஸ் பார்க்கவும் நியமித்து அவளுக்கு சம்பளத்தையும் உயர்த்தினார்...

அவருடைய கடையும் நல்ல வளர்ச்சி பாதையில் செல்ல கடையை இன்னுமே பெரிதாக்கிவிட்டார் அந்த முதலாளி..

வாடிக்கையளரின் வரவு அதிகரிக்க, அந்த கடையிலயே வரவேற்பு பகுதி ஒன்றை அமைத்து அதற்கென்று ஒரு பெண்ணை நியமிக்க யோசித்த  பொழுது பூர்ணிமாதான் அவர் கண் முன்னே வந்தாள்...

ஏழை வீட்டு பெண் என்றாலும் அழகுக்கு பஞ்சமில்லை அவளிடத்தில்.. பருவத்துக்கே உரித்தான அழகில் அழகோவியமாக மிளிர்வாள்..

கூடவே தன் வீட்டில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அதை எல்லாம் வெளியில் காட்டி கொள்ளாமல் எல்லாரிடமும் இயல்பாக சிரித்த முகமாக பேசி சிரிப்பாள்..  

அதனால் அவர்  வெளியில் ஆள் தேடுவதை விட பூர்ணிமாவையே அந்த வேலைக்கு நியமித்தார்.. கூடுதல் சம்பளமும் வேறு... கடந்த எட்டு வருடங்களாக வேலை செய்ததாலும் தன் முதலாளியை பற்றி நன்கு அறிந்ததாலும் அவளும் அந்த வேலையை ஏற்று கொண்டாள்..

இந்த நிலையில் அவள் தங்கை கல்லூரி படிப்பை முடித்திருக்க அவளுக்கு நல்ல வரன் வரவே திருமணத்தை முடித்துவிட்டாள்..

அவள் அன்னைதான் பெரியவளுக்கு பண்ண வேண்டும் என்று மறுக்க பூர்ணிமா அதை மறுத்துவிட்டாள்..தன் தம்பி தங்கையை  செட்டில்  பண்ணிவிட்டு தான் தன் வாழ்க்கையை பற்றி யோசிக்க வேண்டும் என்று கறாராக கூறி முடித்து விட்டாள்..

ஒரு குடும்ப தலைவன் நிலையில் இருந்து அந்த குடும்பத்தை தாங்குபவளின் பேச்சை மற்றவர்களாலும் தட்ட முடியவில்லை.. அடுத்து அவள் தம்பியும் கல்லூரி படிப்பை முடித்து ஒரு வேலையில் சேர்ந்து விட அப்பொழுதுதான் கொஞ்சம் மூச்சு  விட முடிந்தது...

இந்த நிலையில் அவளுடைய திருமணத்தை பற்றி அவள் அன்னை நச்சரிக்க ஆரம்பித்தார்... ஏனோ கடிவாளம் இட்ட குதிரை போல தன் குடும்பத்தை தூக்கி நிறுத்த வேண்டும் என்ற அந்த குறிக்கோளிலயே ஓடி கொண்டிருந்தவளுக்கு  தனக்கு ஒரு குடும்பத்தை அமைத்து கொள்ளவேண்டும் என்று தோன்றவில்லை..

ஆனால் இன்று தன் தம்பி தங்கைகள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட, இனிமேல் அவள் தயவு அவர்களுக்கு தேவை இல்லாமல் போய்விட்டது.  

இப்பொழுது தான் அவள் தனித்து நிற்பதை போல இருந்தது.. தனக்கு என்று ஒரு குடும்பம் வேண்டும் போல இருந்தது.. ஆனால் காலம் கடந்துவிட்டதே.. இனிமேல் யார் தன்னை திருமணம் செய்து கொள்வார்கள் என்று அப்படியே விட்டுவிட, அப்பொழுது தான் சாரங்கன் அறிமுகம் கிடைத்தது..

சாரங்கன் வட மாநிலத்தை சேர்ந்தவன்..பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் அவன் மூதாதையர்கள் வட மாநிலத்தில் செட்டில் ஆகி இருந்தனர்.. அந்த வழியில் வந்த அவன் பேசுவது ஹிந்தி என்றாலும் தாய்மொழியாக தமிழையும் கற்று இருந்தான்...

அப்பொழுது டெல்லியில் வசித்து வந்தான்..டைல்ஸ் மற்றும் கிரானைட் தயாரிக்கும் ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிக்யூட்டிவ் ஆக பணியாற்றி வந்தான்..

தன் தொழில் நிமித்தமாக பூர்ணிமா வேலை செய்து வந்த டைல்ஸ் கடைக்கு வந்திருக்க வரவேற்பு பகுதியில் இருந்த பூர்ணிமாவை பார்த்ததும் முதல் பார்வையிலயே காதல் கொண்டான்...

முதல் இரண்டு சந்திப்புகள் வெறும் நட்பு பேச்சுடன் நின்றுவிட, அடுத்த சந்திப்பில் தன் மனதை வெளிபடுத்தினான்.. பூர்ணிமாவை மணந்து கொள்வதாக சொல்ல அவளோ முதலில் திகைத்தாள்...

தனக்கு என்று இனி ஒரு வாழ்க்கை இல்லை என்று எண்ணி இருந்தவளுக்கு சாரங்கனின் இந்த ப்ரபோசல் முதலில் அச்சத்தை கொடுத்தது.. கூடவே அவன் வட மாநிலத்தை சேர்ந்தவன்.. அவன் குடும்பத்தை பற்றி ஒன்றும் தெரியாது..

அவனுக்கு முன்பே திருமணம் ஆகி இருந்தால் ? இப்படி பல யோனைகள். அதனால் பயந்து கொண்டு முதலில் அவன் ப்ரபோசலை மறுத்துவிட்டாள்..

ஆனால் சாரங்கன் தன் முயற்சியை விடாமல் அந்த கடையின்  முதலாளியிடம் பேசி அவளிடம் சொல்ல சொல்லியும் அவள் வீட்டிற்கே சென்று அவள் அன்னையிடம் தன்னை பற்றி எடுத்து கூறி பூர்ணிமாவை மணக்க கேட்டான்..

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல எப்படியோ திரும்ப திரும்ப முயற்சித்து இறுதியில் பூர்ணிமாவை சம்மதிக்க வைத்து விட்டான்..

அடுத்த மாதத்தில் திருமணம் முடித்து டெல்லிக்கு சென்று விட்டாள் பூர்ணிமா.. ஆனாலும் உள்ளுக்குள் சிறு பயம்.. கதைகளில் படித்ததை போல தன்னை பயன்படுத்திவிட்டு கை கழுவி விட்டுவிடுவானோ என்று..

ஆனால் சாரங்கன்  அவள் மனதில் இருந்த பயத்தை புரிந்து கொண்டு இன்னுமாய் தன் மனைவியின் மீது அன்பையும் காதலையும் பொழிய கொஞ்சம் கொஞ்சமாக தன் பயத்தில் இருந்து வெளிவந்தாள் பூர்ணிமா.

அவளும் தன் கணவன் அன்பை புரிந்து கொண்டு இரு மடங்காய் திருப்பி செலுத்த அடுத்த வருடத்தில் தங்கள் அன்புக்கும் காதலுக்கும் அடையாளமாய் தன் மகளை பெற்றெடுத்தாள் பூர்ணிமா...

பிறக்கும் பொழுதே பிறை நிலவாய் முகத்தில் ஒளிர்வுடன் பிறந்த தன் மகளுக்கு சாந்தினி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தாள் பூர்ணிமா...

சாந்தினி வளர வளர அழகு தேவதையாக மிளிர்ந்தாள்..

ள்ளி செல்லும் வயது வந்ததும் பூர்ணிமாவுக்கு தான் படிக்க முடியாமல் போன படிப்பை தன் மகளுக்கு கொடுக்க வேண்டும் என்று ஆசைபட்டு அவளை டெல்லியில் இருந்த மிகவும் புகழ்பெற்ற பள்ளியில் சேர்த்து விட்டாள்..

அது மேல்தட்டு மக்களின் பிள்ளைகள் படிக்கும் பள்ளி

ஆனாலும் தான் ஏழ்மையில் பட்ட கஷ்டத்தை போல தன் மகள் படக்கூடாது என்று எண்ணி அந்த பள்ளியில் சேர்த்திருந்தாள்..

இதுவரை தன்னை போன்ற பிள்ளைகளுடன் கலந்து பழகிய சாந்தினிக்கு திடீர் என்று மேல்தட்டு மக்களின் பிள்ளைகளையும் அவர்களுடைய வித்தியாசமான பழக்க வழக்கங்களையும் கண்டு முதலில் மிரண்டு போனாள்..

அவர்கள் வாரம் ஒரு புது ஸ்கூல் பேக் விதவிதமான ஜாமென்டரி பாக்ஸ்,மதிய உணவும் மேல்தட்டு வகையில் இருக்க முதலில் அதை  பார்த்து மிரண்டவள் கொஞ்சம் கொஞ்சமாக அதை பார்த்து ஆசைப்பட ஆரம்பித்தாள்..

இந்த நிலையில் அவள் இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அவள் வகுப்பு தோழி ஒருத்தியின் பிறந்த நாள் விழாவிற்கு அவளை அழைத்திருக்க, தன் பெற்றொர்களுடன் அங்கு சென்றிருந்தாள் சாந்தினி..

பெரிய சொகுசு பங்களாவில் ஃபேரி டால் மாதிரி உடை அணிந்து அந்த பங்களாவின் மாடியின் மேலிருந்து அவள் தோழி அழகாக தன் கவுனை தூக்கி பிடித்து கொண்டு நடந்து வருவதை கண்டதும் அவளுக்கு பொறாமையாக இருந்தது..

தானும் அது போல உடை அணிந்து இவ்வளவு பெரிய பங்களாவில் வசிக்க வேண்டும் என்ற ஆசை அந்த சிறுவயதில் அவள் மனதில் பதிந்துவிட்டது..

அதற்கு பிறகு அவள் குணத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் வந்தது.

தன் உடைகளை தானே தேர்வு செய்வாள்... விலை குறைந்த ஆடைகளை வாங்க மாட்டாள்.. தன்னையும் பெரிய இடத்து பெண்ணாக காட்டி கொள்ளவேண்டும் என்று அடம்பிடித்து விலை உயர்ந்த பெரிய இடத்து பிள்ளைகள் அணியும் ஆடைகளை போல வாங்கி போட்டு பார்த்து மகிழ்வாள்..

அவள் பெற்றோர்களும் ஒரே செல்ல மகள் ஆசைப்படுகிறாளே என்று அவளுக்கு தடை சொல்லவில்லை.. இன்னும் கொஞ்சம் வளர்ந்தால் மாறிவிடுவாள் என்று விட்டுவிட்டனர்..

ஆனால் பள்ளியை முடித்து கல்லூரிக்கு சென்றதும் இந்த குணம் இன்னும் ஆலமரமாய் வளர்ந்து நின்றது..

ன்னிரெண்டாம் வகுப்பில் சாந்தினி நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருக்க, டெல்லியிலயே பெரிய பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது அவளுக்கு.. அதை கண்டு பூர்ணிமா பூரித்து போனாள்..

தன் மகள் ஒரு இன்ஜினியர் ஆகப்போகிறாள்.. தான் பட்ட கஷ்டம் எல்லாம் அவளுக்கு இல்லை..அவள் ராஜகுமாரியாக பெரிய படிப்பு படிக்க போகிறாள்  என்று பூரித்திருக்க, சாந்தினியும் துள்ளலுடன் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தாள்..

ஆனால் இங்கயும் சில மேல் தட்டு மாணவிகள் இருந்தனர்.. அவர்களின் பகட்டான ஆடையிலும் ஸ்டைலாக உலா வரும் நடையிலும் சாந்தினிக்குள் தாழ்வு மனப்பான்மை வந்தது..

கூடவே அவள் துறை மாணவர்களும் அந்த பெண்களையே சுத்தி வருவதும், அப்பப்ப ஏதாவது பரிசினை வாங்கி அவர்களுக்கு கொடுப்பதையும் கண்டவளுக்கு உள்ளுக்குள் கொதித்தது..

தன்னிடம் யாருமே திரும்பி கூட பார்க்க மாட்டேங்கிறாங்களே என்று குமைந்தவள் எப்படியோ முதல் இரண்டு வருடங்களை ஓட்டிவிட்டாள்..

மூன்றாம் வருடத்தில் அவள் பிரிவு தோழி ஒருத்தி ப்யூட்டி பார்லருக்கு செல்லும் பொழுது துணைக்கு அவளையும் அழைத்து சென்றாள்.. அதுவரை இது மாதிரி அலங்காரங்கள் எல்லாம் செய்து அவள் பார்த்ததில்லை..

டெல்லியில் இருந்தாலும் பூர்ணிமா அவளை தமிழ் பெண்ணாகத்தான் வளர்த்து இருந்தாள்..

தன் உடன் வந்த தோழி ஃபேசியல், மேனிக்யூர்,பெடிக்யூர், வாக்சின் என்று எதை எதையோ செய்து வெளிவரும்பொழுது பளபளவென்று இருப்பதை பார்த்தவளுக்கு  தானும் அதுமாதிரி அலங்கரித்துகொள்ளவேண்டும் என்ற ஆசை வந்தது...

உடனே தன் அன்னையிடம் நச்சரித்து ஒரு தொகையை வாங்கி கொண்டு அலகு நிலையத்திற்கு சென்றவள் அலங்காரத்தை செய்து கொள்ள, அதை முடித்து தன்னை பார்த்தவளுக்கு அடையாளமே தெரியவில்லை..

ஏற்கனவே நல்ல அழகியாக இருப்பவள் இத்தனை நாட்கள் அதை சரியாக எடுத்து காட்ட தெரியாமல் அது மறைந்து கிடக்க, அதை எல்லாம் இன்று தூசி தட்டி துலக்கவும் வெண்கல சிலை போல மிளிர்ந்தாள் சாந்தினி..

அவள் பெற்றோருக்கே நம்பமுடியவில்லை அவளை அப்படி பார்க்க.... பூர்ணிமா தன் மகளுக்கு திருஷ்டி சுத்தினாலும் அடி மனதில் மகள் ஏதோ தப்பான பாதைக்கு சென்று விடுவாளோ  என்று கலக்கமாகவும் அச்சமாகவும் இருந்தது...

ஒரு தாயாக அவளுக்கு அறிவுரையும் சொல்ல தவறவில்லை..

டுத்த நாள் கல்லூரியில் சாந்தினியை பார்த்தவர்கள் அசந்து நின்றனர்.. அவள் கல்லூரி மாணவர்கள் எல்லாரும் திடீரென்று இப்படி மாடல் அழகியாக மாறி போன சாந்தினியை ஆச்சர்யமாக பார்க்க அந்த மேல்தட்டு பெண்களோ இவளை பொறாமையுடன் பார்த்தனர்..

இதையெல்லாம் ஓரக்கண்ணால் கண்ட சாந்தினிக்கு உள்ளம் துள்ளி குதித்தது..

“இனிமேல் இப்படித்தான் ட்ரெஸ் பண்ணனும்.. எல்லாரும் என் பின்னால் சுத்தணும்.. “ என்று உள்ளுக்குள் சொல்லி கொண்டவள் அன்றிலிருந்து தன் அலங்காரத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கொள்ள ஆரம்பித்தாள்..

என்னதான் மாணவர்கள் இவள் பின்னால் சுற்றினாலும் எல்லாரையுமே ஒரு எல்லைக்குள் நிறுத்தி வைத்திருந்தாள்...

எப்படியோ இப்ப கொஞ்சம் மனதுக்கு சந்தோஷமாக இருக்க அதே நேரம் படிப்பையும் கோட்டை விட்டு விட வில்லை..

இறுதியாண்டில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க, பெங்களூரில் இருந்த ஒரு மென்பொருள் நிறுவனத்தில் அவளுக்கு கேம்பசில் வேலை கிடைத்தது....

பூர்ணிமா மகிழ்ந்து போய் தன் மகளை பெங்களூருக்கு அனுப்பி வைத்தாள்.. கூடவே சென்னையில் தான் அவள் சொந்தங்கள் இருக்க, தன் மகளை சென்று  அவர்களை பார்த்து வருமாறு சொல்லி அனுப்பி வைத்தாள்..

வேலையில் சேர்ந்த அடுத்த மாதம் தன் அன்னையின் நச்சு தாங்காமல் சென்னைக்கு சென்றாள் சாந்தினி..

வீட்டு முகவரியை கண்டு பிடித்து செல்ல, சாதாரன் சீட் வீட்டில் வசித்த அவள் தாத்தா பாட்டியை கண்டதும் அருவருப்பில் முகத்தை சுளித்தாள்..

தன் அக்கா மகள் என்று ஆசையாக அணைக்க வந்த சித்தியையும் மாமனையும் தடுத்து தள்ளி நின்று கொண்டாள்..

அவள் தோற்றமும் அவள் ஒரு பணக்காரியை போல எடுத்து காட்ட அவர்களும் அதற்குமேல் அவளை நெருங்க முயலவில்லை..

அன்று பேருக்காக அவர்களை பார்த்துவிட்டு வந்தவள்தான்.. அதன்பின் அந்த பக்கம் தலை வைத்தும் பார்க்கவில்லை..

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!