நிலவே என்னிடம் நெருங்காதே-51

 


அத்தியாயம்-51

பிறந்ததில் இருந்து டெல்லியில் வளர்ந்தவளுக்கு குளிர்காலத்தில் கடும் குளிராகவும் கோடை காலத்தில் கடும் வெய்யிலாகவும் இருக்கும் டெல்லியை விட பெங்களூரின் க்ளைமேட் ம் இங்கிருக்கும் கலாச்சாரமும் ரொம்பவுமே பிடித்துவிட்டது...

வேலையும் அவள் மனதுக்கு பிடித்ததாக அமைந்து விட உற்சாகத்துடன் தன் அலுவலகத்துக்கு சென்று வந்தாள்..  

உற்சாகத்துடனும் துள்ளளுடனும் வளைய வந்தவளுக்கு அடுத்து ஒரு சோதனையாக வந்தது அந்த பார்ட்டி..

அவள் நிறுவனத்தில் ஆண்டுவிழா கொண்டாட்டத்துக்காக அந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்தனர்..

அதில் மாடர்னாக அலங்காரம் செய்து கொண்டு கலந்து கொண்டவள் பார்ட்டியின் முடிவில் எல்லாரும் நடனமாட அவளோ தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள்..

எல்லாரும் இவளை பார்த்து நக்கலாக சிரிப்பதை போல இருந்தது..

உடனே அடுத்த நாளில் இருந்து சல்சா நடன வகுப்பில் சேர்ந்து விட்டாள்...

உடலை வளைத்து அழகாக ஆடும் அந்த நடன்ம் அவளுக்கு பிடித்துவிட ஆர்வத்துடன் கற்று கொண்டவள் அதை ஆடி பார்க்கவேண்டும் என்று தானாகவே சில ஹோட்டலில் நடக்கும்  பார்ட்டிகளில் கலந்து கொண்டு முகம் தெரியாதவர்களுடனும் நடனம் ஆட ஆரம்பித்தாள்..

அதுவே அவளுக்கு பின்னாலில்  ஹாப்பியாக மாறிவிட்டது...

பெற்றோர்களின் கண்டிப்பு இல்லாமல் தனியாக அதுவும் கை நிறைய சம்பளமும் வந்து கொண்டிருக்க, தனக்கு பிடித்தமான வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஆரம்பித்தாள் சாந்தினி..

மூன்று வருடத்திற்கு பிறகு அவள் வேலை செய்த நிறுவனத்தை ஒரு பெரிய நிறுவனம் வாங்கி விட, பெங்களூர் அலுவலகத்தில் பணிபுரிந்த முக்கியமானவர்களை சென்னை கிளைக்கு மாற்றினர்..

அதில் சாந்தினியும் ஒன்று..

சென்னை என்றதும் முதலில் முகத்தை சுளித்தாள்.. ஆனாலும் அது ஒரு பெரிய நிறுவனம்.. சம்பளமும் நிறைய கிடைக்கும் இன்னும் ஜாலியாக வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று சென்னைக்கு வந்து விட்டாள்..

இங்கு வந்து ஒரு வருடம் ஆகி இருக்க, அப்பொழுது தான் அந்த துயரம் நேர்ந்தது.. டெல்லியில் ஒரு சாலை விபத்தில் அவள் பெற்றோர்கள் இருவருமே சம்பவ இடத்திலயே இறந்து போயினர்..

அதை கேட்டு இடிந்து போய் டெல்லிக்கு விரைந்தாள்...ஒரே மகளாய் பெற்றவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டு மீண்டும் சென்னைக்கு வந்து விட்டாள்..

பெற்றோர்களின் இழப்பு முதலில் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது

கடந்த சில வருடங்களாகவே அவர்களை விட்டு பிரிந்து இருந்ததால் விரைவிலயே அதில் இருந்து வெளிவந்துவிட்டாள்..

தன்  பெற்றொர்களின் சேமிப்பையும் மற்றும் வங்கியில் கிடைத்த லோனையும் கொண்டு பெரிய வி.ஐ.பிக்கள் வசிக்கும் பகுதியில் சொந்தமாக ஒரு சொகுசு அப்பார்மென்ட் ஐ வாங்கி கொண்டு குடியேறினாள் சாந்தினி...

முன்பாவது அவள் அன்னை பூர்ணிமா அப்பப்ப ஏதாவது அட்வைஸ் பண்ணி கொண்டிருப்பாள்.. இப்பொழுது கண்டிக்க யாரும் இல்லாமல் கூடவே கை நிறைய பணமும் இருக்க, தன் மனம் விரும்பிய வாழ்க்கையை வாழ ஆரம்பித்தாள்...

ஆனால் பூர்ணிமா அவள் சிறுவயதில் இருந்தே நம் கலாச்சாரத்தை சொல்லி வளர்த்து இருந்ததால் ஒரு எல்லை தாண்டி யாருடனும் அவளால் பழக இயலவில்லை...

ஊர் சுற்றுவது, தன்னை நன்றாக அழகு படுத்தி கொள்வது, நாலு பேர் அவளை திரும்பி பார்த்து ஜொல்லு விடுவதை மனதுக்குள் ரசிப்பது, உல்லாசமாக பார்ட்டியில் டான்ஸ் ஆடுவது  இதுதான் அவள் வாழ்க்கையாக இருந்தது...

ஓரளவுக்கு சிறுவயதில் அவள் வாழ நினைத்த வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட்டாள்....

ஆனால் சிறுவயதில் தன் மனதில் பதித்து வைத்திருந்த தன் தோழியின் அந்த பெரிய பங்களா? அரண்மனை மாதிரி பங்களாவின் மாடிப்படியில் இருந்து ஒயிலாக பிரின்சஸ் மாதிரி இறங்கி வருவது?

அந்த கனவு,  ஆசை இன்னும் நிறைவேறவில்லையே.. அது ஒரு மூலையில் பாணக துரும்பாய் உறுத்திகொண்டே இருந்தது..

கூடவே தன் அன்னை திரும்ப திரும்ப அறிவுறுத்தியபடி  சீக்கிரம் யாரையாவது திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடவேண்டும் என்ற எண்ணமும் அடிக்கடி வந்து போய் கொண்டிருந்தது...

எத்தனையோ பேர் அவளிடம் ப்ரபோஸ் பண்ணி இருந்தாலும் ஏனோ மனம் அவர்களிடம் ஒட்டவில்லை.. அவள் ஆழ்மனதில் இருந்த பெரிய பங்களாவும் ராணி மாதிரி வாழ்க்கையுமே கண் முன்னே வந்து வந்து போகும்.. அதனாலயே நாசுக்காக அதை எல்லாம் மறுத்துவிட்டாள்..

ந்த நிலையில் தான்  ஒரு நாள் பார்ட்டியில் அதிரதனை பார்த்தாள்...

ஏனோ பார்த்ததுமே அவனை அவளுக்கு பிடித்துவிட்டது.. மற்ற ஆண்களை போல அவளிடம் வந்து வழிந்து நிற்காமல் ஆனால் அவளை ஓரக்கண்ணால் பார்த்து ரசித்த அவனை பிடித்துவிட்டது..

அதுவும் பார்ப்பதற்கு ஒரு போர் வீரனாய் அரசகுமரனாய் அவ்வளவு கம்பீரத்துடனும் ஆளுமையுடனும் ஆணிற்கான அத்தனை அம்சங்களும் அம்சமாய் பொருந்தி இருக்க பெண்ணவளுக்கு அவனை விட்டு கண்ணை எடுக்க இயலவில்லை...

சிறிது நேரம் மற்றவர்களுடன் பேசி கொண்டிருந்தவள் தானாக சென்று அவன் அருகில் இருந்த அவன் நண்பர்களிடம் பேசினாள் அதிரதன் கவனத்தை கவர்வதற்காக

அவர்களும் அதிரதனை அறிமுகபடுத்தி வைக்க, அதுவும் அவன் ஜமீன்தாரின் வாரிசு என சொல்ல உடனே சாந்தினியின் மூளையில் மின்னல் வெட்டியது...

அவள் கனவு கண்ட அந்த அரண்மனை, மாளிகை,  அதில் ராணியாக இறங்கி வருவது கண்முன்னே வர, உடனேயே அவள் மனதில் முடிவு செய்துவிட்டாள் இவன் தான் தன் எதிர்காலம் என்று..

அவளுக்கு அதிக சிரமம் வைக்காமல் அதிரனும் அவளிடம் மயங்கி விட, அதுவும் இருவரும் பார்த்த அன்றே நெருக்கமாக நடனம் ஆடி இருக்க, இருவருக்குமே அது பிடித்து போனது...

அடுத்த வாரத்திலயே அவளே அவனிடம் ப்ரபோஸ் பண்ண அவனும் அதை மறுக்காமல் ஏற்று கொண்டான்..அதை கண்டு துள்ளி குதித்தாள் சாந்தினி..  

இதுவரை தனி ஆளாய் பார்ட்டிகளில் சுற்றி கொண்டிருந்தவள் இப்பொழுது அதிரதனையும் சேர்த்து கொண்டாள்..

தன்னை பார்த்து தன் அழகை பார்த்து வாய் பிளந்தவர்கள் இப்பொழுது தனக்கு இணையாக அதிரதன் கை பிடித்து உரிமையுடன் அந்த பார்ட்டிக்கு செல்ல அதிரதனின் கம்பீரத்தையும் இருவரின் ஜோடி  பொருத்தத்தையும் பார்த்து எல்லாரும் இன்னுமாய் வாயை பிளந்தனர்...

நிறைய பெண்கள் இவளை ஒரு வித பொறாமையுடன் பார்த்தனர்... அதை எல்லாம் காண காண சாந்தினிக்கு திகட்டவில்லை... உள்ளுக்குள் உற்சாகம் பொங்கி பெருகியது.. அந்த சந்தோஷத்திலயே அவனுடன் இன்னுமாய் நெருங்கி நடனம் ஆடினாள்..

அவனும் அவளுக்கு இணையாக இழைந்து ஆட, அதுவே சொர்க்கமாக இருந்தது அவளுக்கு

டுத்து அவளுக்கு அவனின் ஜமீன் மாளிகையை பார்க்க வேண்டும் போல ஆசையாக இருந்தது..

ஒருவேளை அவன் ஜமீன் வாரிசு என்று சொல்லி விட்டு வெறும் பெயரளவில் வாரிசாகவும் இருந்து ஜமீன் சொத்துக்கள் எதுவும் இல்லாமல் போய்விட்டால் என்று சிறு அச்சம்...

அதனாலயே அதிரதனை நச்சரித்து அவளை ஜமீனுக்கு அழைத்து செல்ல வைத்தாள்...

அங்கு சென்றவளுக்கோ அந்த ஜமீன் மாளிகையை பார்த்ததும் அப்படியே அவள் கனவில் கண்ட அரண்மனை போல இருக்க துள்ளி குதித்தாள்..கூடவே மனோகரி அணிந்திருந்த கண்ணை பறித்த அந்த ஜமீன் பாரம்பரிய நகைகளும் அவள் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தன..  

உற்சாகமாய் அந்த மாளிகையை சுற்றி வந்தாள்.. அவள் விரும்பியபடி ஒரு நாள் பட்டுபுடவை கட்டி கொண்டு ராணி மாதிரி அலங்காரம் செய்து கொண்டு அந்த படிகளில் ஒயிலாக இறங்கியும் பார்த்துவிட்டாள்..

“இது எல்லாம் எனக்கே எனக்காக ஆக போகிறது .. நான்தான் இந்த அரண்மனையின் ராணி...”  என்று உள்ளுக்குள் சந்தோஷ கூச்சல் இட்டாள் அந்த பேதைப்பெண்..

அவளுக்கு இன்னொரு அதிர்ஷடம்.. அந்த ஜமீனில் அனைவருக்கும் அவளை பிடித்து போனது. எல்லாருமே அவளை வருங்கால மருமகளாக ஏற்று கொண்டனர்..

அதுவும் எப்பொழுதும் மீசையை முறுக்கி கொண்டு கிழட்டு சிங்கமாய் வலம் வந்த அந்த ஜமீன்தார் தாத்தா கூட அதிரதன் அவளை தன் வருங்கால மனைவி என்று அவரிடம் அறிமுகபடுத்தியபொழுது சிரித்து கொண்டே சென்றது அவளுக்கு அத்தனை மகிழ்ச்சி..

எங்கே அவர் தன் பேரனின் காதலை மறுத்து அவனை வீட்டை விட்டு துரத்தி விடுவாரோ என்ற சிறு அச்சம் அவள் மனதில்.. ஆனால் அவர் இயல்பாக அவளை ஏற்று கொள்ள கூடவே அவளுடன் ஜாலியாக பேசி சிரித்து விளையாண்டதையும் கண்டு உள்ளம் பூரித்தாள்..

இனிமேல் தனக்கு எந்த தடையும் இல்லை.... அதிரதன் தனக்குத்தான் அதைவிட அந்த ஜமீன், அதன் பாரம்பரிய நகைகள் , ஜமீன் வாழ்க்கை எல்லாம் தனக்குத்தான் என்று உற்சாகமாய் வளைய வந்தாள்..

அதோடு அதிரதன் தன் கை விட்டு போய்விடக்கூடாதே என்று எப்பொழுதும் அவனை தன் அருகில் வைத்து கொள்ள முயன்றாள்..

வேலை நேரங்களில் போன் பண்ணுவது அவனுக்கு பிடிக்காது என்பதால் இரவு நேரங்களில் அவனுடன் உரையாடும் வழக்கத்தை வைத்து கொண்டாள்..

எப்பொழுதும் இருவருமே இரவு உணவை முடித்த பிறகு உல்லாசமாக பேசி கொண்டிருப்பர்.. பாதி நேரம் சாந்தினி அவனை கொஞ்சுவதும் முத்தமிட்டு கொள்வதும் கட்டி அணைப்பதுமாய் அவனை அவள் மீது ஒரு வித மயக்கத்திலும் கிறக்கத்திலுமாய் வைத்து கொண்டாள்...

ஆனால் ஏனோ சமீபமாக அவன் தன்னை விட்டு விலகி போவதை போல இருக்க, இன்னுமாய் அவனை நெருங்கி அவனை தன் மீது  பைத்தியமாக இருத்தி கொள்ள முயன்றாள்..

கூடவே சீக்கிரம் தங்கள் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்ற எண்ணமும் அடிக்கடி வர ஆரம்பித்தது...அதனாலயே அவனை விட்டு பிரிந்து இருக்க முடியவில்லை என்று அடிக்கடி மறைமுகமாக சொல்லி விரைவில் அவளை மணந்து கொள்ள சொல்லி வந்தாள்..

எல்லாத்தையும் திட்டமிட்டு செய்தவள் தன் அழகையும் கவர்ச்சியையும் காட்டி ஒரு ஆண்மகனை ரொம்ப நாள் பிடித்து வைக்க முடியாது என்ற உண்மையை அறிய மறந்திருந்தாள் அந்த பேதைப்பெண்..!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!