நிலவே என்னிடம் நெருங்காதே-52

 


அத்தியாயம்-52

ன் படுக்கை அறையில் அந்த சொகுசு மெத்தையில் சுகமாக உறங்கி கொண்டிருந்தாள் சாந்தினி...

வழக்கம் போல இன்றும் கனவில் அவள் மகாராணியாய் அந்த ஜமீன் மாளிகையில் உலா வருவதை போல இருக்க இன்னும் பெருமையுடன் முகம் விகாசிக்க அந்த கனவை ரசித்துகொண்டு இருந்தாள்..

அவளின் ஏகாந்த மனநிலையை கலைப்பதை போல காதில் ஒலித்தது அழைப்பு மணி...

தன்னை யார் இந்த நேரத்தில் அழைக்க போகிறார்கள்.. இது பக்கத்து விட்டு அழைப்பு மணியாக இருக்கும் என்று அசட்டை செய்தவள் மீண்டும் அருகில் இருந்த தலையணையை எடுத்து அணைத்து கொண்டு சுருட்டி படுத்து கொண்டு தன் கனவை தொடர முயல அதை தொடரவிடாமல் மீண்டும் நாரசமாய் ஒலித்தது அதே அழைப்பு மணி..

இப்பொழுது அழைப்பது தன் வீட்டில்தான் என்று உரைக்க, தலையை நிமிர்ந்து மணியை பார்க்க அதிகாலை ஐந்து மணி என்று காட்டியது..

இந்த நேரத்தில் தன் வீட்டிற்கு வந்திருப்பது யார்?  என்ற எரிச்சலுடன் எழுந்து கண்ணை கசக்கி கொண்டே வாயிலுக்கு வந்தவள் கதவில் இருந்த துவாரத்தின் வழியாக வெளியில் பார்க்க வெளியில் நின்றிருந்தவனை கண்டு அதிர்ந்து போனாள்..

அப்பொழுது தான் அவள் கோலம் உரைத்தது... இந்த நிலையில் எப்படி கதவை திறப்பது என்று யோசித்து கொண்டிருக்க அவளை மேலும் யோசிக்க விடாமல் மீண்டும் அழைப்பு மணியை வேகமாக அழுத்தினான் வெளியில் இருந்தவன்..

உடனே கை தானாக கதவை திறந்து விட, வெளியில் நின்றவனை கண்டதும் இன்னுமே நடுங்கி போனாள்..

உடல் விறைக்க, முகம் இறுகி கண்கள் இரண்டும் இரத்த சிவப்பாய் சிவந்து கிடக்க ஒரு மாதிரி ஆவேசத்துடன் நிற்பவனை போல நின்றிருந்தவனை கண்டதும் நடுநடுங்கி போனாள் சாந்தினி...

இப்படி ஒரு நாளும் அவனை பார்த்ததில்லை சாந்தினி.. அதனாலயே அதிர்ந்து போய் நின்றிருக்க, அவனோ அவளை தள்ளி கொண்டு உள்ளே வந்தான்....

“சாரி... நிலா.... உன் தூக்கத்தில் தொந்தரவு பண்ணிட்டனா? என் போன் சார்ஜ் இல்லாமல் ஆப் ஆகிடுச்சு.. அதான் உன்னை அழைக்க முடியவில்லை.. காலிங் பெல்லை அடிக்க வேண்டியதாய்டுச்சு.. சாரி மா... “ என்றவாறு அவளை நிமிர்ந்து பார்த்தான் அதிரதன்...

அவள் முகத்தை பார்த்தவன் ஒரு நொடி திகைத்து போனான்..

எப்பொழுதும் பளிச்சென்ற முகத்தில் கண்கள் படபடக்க இதழ்கள் கதை பேச ஒரு மாதிரி மையலுடன் அவனை பார்க்கும் கண்கள் இன்று அழகின்றி கண்ணில் அப்பி இருந்த மை கரைந்து முகம் எல்லாம் ஈசி கொண்டிருக்க, தலை முடி எல்லாம் திரிதிரியாக பறந்து முன்னால் வந்து அலங்கோலமாக விழுந்து கிடக்க, முகத்திலும் எப்பொழுது பார்த்து ரசிக்கும்  அந்த பளபளப்பு இல்லை....

அவன் நிலாதான் இவளா என்று ஒரு நொடி உற்று பார்த்தான்.. அதே நேரம் இரவிலும் எந்த ஒப்பனையும் இல்லாமல் அதிகாலையிலும் புத்துணர்ச்சியுடன் ஜொலித்த நிலவினியின் முகம் அவன் கண் முன்னே வந்தது...

ஆனால் அடுத்த நொடி அவன் தாத்தாவின் நாடகமும் அதற்கு அவள் துணை போனதும் நினைவு வர, உடல் விறைத்தது...

கை முஷ்டியை இறுக்கி கொண்டு உள்ளே செல்ல, அவன் எதற்கு அவ்வளவு கோபமாக இருக்கிறான் என்று புரியாமல் குழம்பியவளோ தன்னை விட்டு முன்னால் நடந்திருந்தவனை பின்னால் இருந்து கட்டி கொண்டு  

“ஹாய் பேபி... வாட் அ சர்ப்ரைஸ்...! இந்த நேரத்தில் வந்திருக்கிங்க.. “ என்றவாறு அவன் பரந்த முதுகில் முகம் புதைத்து கொண்டாள்..

எப்பொழுதும் அவள் இப்படி செய்தால் கிறங்கி அவளை முன்புறமாக இழுத்து அணைத்து கொண்டு முத்தமிடுபவன் இன்று ஏனோ அப்படி செய்யாமல் தன் மீது அட்டையாக ஒட்டி இருந்தவளை விலக்கி நிறுத்தியவன்

“நிலா.... நான் கொஞ்சம் டயர்ட் ஆ இருக்கேன்... கொஞ்ச நேரம் படுத்து தூங்கணும்..எல்லாம் அப்புறம் சொல்றேன்.. ப்ளீஸ் என்னை தொந்தரவு பண்ணாத.. என்றவன் அவள் பதிலுக்கு காத்திராமல் விடுவிடுவென்று அவள் படுக்கை அறைக்கு சென்றவன் தொப்பென்று படுக்கையில் விழுந்தவன் அடுத்த நொடி அப்படியே உறங்கி போனான்...

சாந்தினியோ திருதிருவென்று முழித்து கொண்டிருந்தாள்.. கூடவே கொஞ்சம் அதிர்ச்சியும் தான்...

“என்னாச்சு இவனுக்கு? தாத்தாக்கு உடம்பு சரியில்லை.. அங்கு தொழிலை கொஞ்ச நாட்கள் பார்த்து கொள்ளவேண்டும் என்றுதானே சென்றிருந்தான்... அதுவும் அவன் இங்கு திரும்பி வருவதை போல எதுவும் சொல்லவில்லையே..

சென்னை வருவதற்கு இன்னும் கொஞ்சம் நாள் ஆகும்.. தாத்தா முழுவதும் குணம் ஆன பிறகுதான் சென்னைக்கு திரும்பி வர முடியும் என்றுதானே சொல்லி இருந்தான்..

இப்பொழுது என்னவாயிற்று? ஒருவேளை தாத்தாவிடம் எதுவும் சண்டை போட்டு கொண்டானோ? அவர் எதுவும் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு சொல்லிவிட்டாரோ.. ? ஐயோ! அப்படி என்றால் ஜமீன் சொத்து? அந்த மாளிகை? ஜமீன் பாரம்பரிய வைர நகைகள்? “ என்று திடுக்கிட்டு போனாள்..

“சே.. சே.. அப்படி எல்லாம் அந்த தாத்தா விட்டுவிட மாட்டார்.. ஒரே பேரன் வேறு.. எப்படி இருந்தாலும் அந்த சொத்தெல்லாம் அத்தூ பேபிக்குத்தான் வரும்.. “

என்று தன்னைத்தானே தேற்றி கொண்டவள் அவசரமாக குளியலறைக்குள் புகுந்து குளித்து முடித்து தன் வழக்கமான அலங்காரத்தை பண்ணி கொண்டு மையல் கொஞ்சும் முகத்துடன் அவன் விழிப்பதற்காக காத்து கொண்டிருந்தாள் சாந்தினி...

ணி ஒன்பது அளவில் சாந்தினியின் அலைபேசி ஒலித்தது.. அதை எடுத்து பார்க்க அதிரதன் நண்பன் அபிதான் அழைத்திருந்தான்...

“சது... அதி அங்க இருக்கானா? “ என்றான் கொஞ்சம் பதற்றத்துடன்...

"யெஸ் அபி... காலையில் வந்தார்... இப்ப நல்லா தூங்கி கிட்டு இருக்காரே... என்னாச்சுனு தெரியலை.. ரொம்பவும் டென்ஷனா இருக்கிற மாதிரி இருந்தார்.. என்னாச்சு அபி? உனக்கு எதுவும் தெரியுமா?’  என்றாள் கலக்கத்துடன்..

"ப்ச்.. எனக்கு எதுவும் தெரியல சது... இன்னைக்கு பத்து மணிக்கு ஒரு க்ளைன்ட் மீட்டிங் இருக்கு.. அதி தான் அதை ப்ரெசென்ட் பண்ணனும்.. அதுக்குத்தான் அவனை அழைத்தேன்.. அவன் மொபைல் நாட் ரீச்சபிள் ஆக இருந்தது..

ஊருக்கு அவன் தாத்தாவுக்கு அழைத்தாலும் அதுவும் அணைக்கபட்டிருக்கிறது... சரி உனக்கு எதுவும் தெரியுமா என்றுதான் உனக்கு அழைத்தேன்... சது.. அவனை கொஞ்சம் எழுப்பறியா? கொஞ்சம் அர்ஜென்ட்.. " என்றான் அவசரமாக..

"ஹ்ம்ம்ம் சரி அபி.. எழுப்பி பார்க்கிறேன்.. " என்றவள் படுக்கைக்கு சென்று அவனை எழுப்ப, அவனோ இன்னுமாய் விறைத்து கொண்டு உறங்க, மீண்டுமாய் அவன் தோளை தொட்டு தட்டி எழுப்பினாள்..

அதில் விழித்து கொண்டவன் அவளை முறைக்க

“ப்ளீஸ் அத்தூ... ஏதோ அர்ஜென்ட் ஆபிஸ் வொர்க் ஆம்.. அபி லைன்ல இருக்கார்.. ப்ளீஸ் பேசுங்க.. “ என்று தன் அலைபேசியை அவனிடம் கொடுத்தாள் அவசரமாக..

அப்பொழுதுதான் அன்றைய மீட்டிங் மற்றும் அவன் முடிக்கவேண்டிய சில வேலைகள் நினைவு வர, அவசரமாக அந்த அலைபேசியை காதில் வைத்தவன்

“சாரி டா அபி.. கொஞ்சம் டென்ஷன்ல இந்த மீட்டிங் பற்றி மறந்துட்டேன்.. “ என்றான் குற்ற உணர்வுடன்..

“இட்ஸ் ஓகே டா... இந்நேரம் நீ ஆன்லைன்ல இருக்கணும்.. உன்னை காணவில்லை என்றதும் அழைத்து பார்த்தேன்.. சரி நீ எப்ப சென்னைக்கு வந்த? என்கிட்ட சொல்லவே இல்லை.. நான் வந்து உன்னை பிக்கப் பண்ணிகிட்டு வந்திருப்பேன் இல்ல..

தாத்தாகூட திரும்பவும் எதுவும் பிரச்சனையாடா? “ என்றான் குரலை தாழ்த்தி..

“ஆமா.. எப்ப அவர் கூட நான் கொஞ்சி குலாவி இருக்கேன்.. இப்ப பிரச்சனை பண்ண.. எப்பவுமே எனக்கு பிரச்சனை தலைவலி எல்லாம் அந்த ஜமீன்தாரால் தான்.. “ என்று பல்லை கடித்தவன் அப்பொழுது தான் நினைவு வந்தது வரும் அவசரத்தில் அவன் லேப்டாப் ஐ அங்கயே விட்டுட்டு  வந்தது..

“அத விடு அபி... என் லேப்டாப் ஐ எடுத்து வரவில்லை.. நான் நேற்று அனுப்பின டாக்குமென்ட் உன்கிட்ட இருக்கு இல்ல.. அதை வச்சு இந்த மீட்டிங் ஐ முடிச்சிடலாம்..

இப் யூ டோன்ட் மைன்ட் இங்க நிலா வீட்டுக்கு வருகிறாயா? உன் கார்லயே நான் வந்திடறேன்.. அப்படியே மீட்டிங் க்கு இன்னும் கொஞ்சம் பிரிப்பேர் பண்ண வசதியா இருக்கும்? “ என்க அபியும் ஒத்து கொண்டான்..

அடுத்த அரை மணி நேரத்தில் காலை கடனை முடித்து குளித்து முடித்து வேகமாக அவன் அணிந்திருந்த அதே ஆடையை அணிந்து கொண்டு வரவேற்பறைக்கு வர, அங்கு சாந்தினி அவசரமாக ப்ரேக் பாஸ்ட் ஐ ரெடி பண்ணி தயாராக வைத்திருந்தாள்...

அங்கு சென்று அமர்ந்தவன் ஒரு வாய் எடுத்து வைக்க, அடுத்த நொடி முகத்தை சுளித்தான்..

அதே நேரம் கடந்த சில நாட்களாக அவன் நாக்கு சுவை கண்டிருந்த நிலவினியின் கை மணத்தை திரும்பி பார்த்தது...

உடனே தன் தலையில் ஒரு குட்டு வைத்து அவள் பக்கம் செல்லாமல் தன் நினைவை இழுத்து பிடித்து கொண்டவன்,  அடுத்த வாய் கஷ்டபட்டு உள்ளே தள்ள, இன்னுமாய் முகம் சுளித்தான்..

அவன் முகம் போன போக்கை கண்டு அதிர்ந்தவள்

“என்னாச்சு பேபி... நல்லா இல்லையா? “ என்றாள் கொஞ்சலுடன்..  

என்ன சொல்வது என்று முழித்தவன்

“ஹாங்... நல்லாதான் இருக்கு நிலா... ஆனால் எனக்கு இப்ப டைம் ஆச்சு.. அபி வந்து கேட் ல் வெய்ட் பண்ணிக்கிட்டிருப்பான்.. நான் கிளம்பறேன்.. “ என்றவன் அவசரமாக எழுந்து நிக்க, அவளோ ஏமாற்றம் மற்றும் ஏக்கத்துடன் அவனையே பார்த்து கொண்டிருக்க,

அவளின் அந்த ஏக்க பார்வையை கண்டவனுக்கு சிறு குற்ற உணர்வாக இருந்தது..

உடனே மெல்ல குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன்

“சாரி டியர்.. இப்ப கொஞ்சம் அவசரமா கிளம்பணும்...பேச நேரமில்லை..  ஈவ்னிங் சீக்கிரம் வந்திடறேன்.. இன்னைக்கு நைட் இங்கதான் தங்க போறேன்...

நீயும் ஆபிஸ் ல இருந்து சீக்கிரம் வந்திடு.. நிறைய பேசலாம்...இன்னைக்கு நமக்கு ஸ்பெஷல் நைட்.. “ என்று கண் சிமிட்ட,  அதுவரை வாடி இருந்த அவள் முகம் செந்தாமரையாக மலர்ந்தது...

“ஸ்யூர்  அத்தூ... ஐ லவ் யூ.. “ என்று எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட, அவனுக்கோ அது கிளர்ச்சியை தூண்டவில்லை.. மெல்ல புன்னகைத்தவாறு அவள் கன்னம் தட்டி திரும்பி வாயிலை நோக்கி வேகமாக நடந்தான்...

அவன் செல்வதையே பார்த்திருந்த சாந்தினிக்கோ ஒரு வித பயம் வந்து அப்பி கொண்டது..

சென்ற வாரம் இருந்தவன் இல்லை இந்த அதிரதன்.. அவனிடம் ஏதோ ஒரு மாற்றம் தெரிந்தது அவளுக்கு..

“என்ன அது? ஒருவேளை என்னை விட்டு விலகி செல்கிறானா? வேற எந்த பெண்ணிடமாவது மயங்கி விட்டானா? அப்படி விடக்கூடாதே... “ என்று அவசரமாக சோஷியல் மீடியாவுக்குள் சென்று அவனுக்கு வேற எந்த பெண்ணிடமாவது தொடர்பு இருக்கிறதா என்று ஆராய்ந்தாள்..

அதிரதன்   சோஷியல் மீடியாவில் அந்த அளவு விருப்பம் இல்லாதவன்.. அன்றாடம் தங்கள் வாழ்வில் நடப்பதை எல்லாம் வெளிப்படையாக எல்லாரிடமும் தெரிவித்து கொள்ள பிடிக்காதவன்..

அதனால் அவனை பற்றிய எந்த ஒரு தப்பான கருத்தும் எதுவும் அவள் கண்ணுக்கு தட்டுபடவில்லை... ஒரு வித நிம்மதியுடனும் கூடவே கொஞ்சம் பயத்துடனுமே அலுவலகம் கிளம்பி சென்றாள் சாந்தினி..!  

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!