நிலவே என்னிடம் நெருங்காதே-53

 


இந்த நாவல் ஏற்கனவே ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. 

ஒலி வடிவில் கேட்டு மகிழ, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க...நன்றி!! அன்புடன் பத்மினி செல்வராஜ்.


நிலவே என்னிடம் நெருங்காதே - ஆடியோ நாவல்..!


மற்ற அத்தியாயங்களை படிக்க  கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க.


நிலவே என்னிடம் நெருங்காதே - All Episodes



அத்தியாயம்-53

ன்று மாலை ஏழு மணி அளவில் அதிரதன் தன் அலுவலக வேலையில் மும்முரமாக இருந்தான்..

காலையில் நடந்த அந்த க்ளைன்ட் மீட்டிங் வெற்றிகரமாகவே முடிந்தது..

அது அந்த எட்வின் ப்ராஜெக்ட் தான்...அந்த எட்வின் உடன் உரையாடும் பொழுதெல்லாம் அவன் மனம் அவனையும் அறியாமல் அந்த சதிகாரியிடம் சென்று நின்றது..

அவள் மட்டும் அன்று விளக்கி சொல்லி இருக்காவிட்டால் இந்த ப்ராஜெக்ட் ஐ தனக்கு நஷ்டமாக கருதி அன்றே கை விட்டிருப்பான்...இன்று இந்த எட்வின் உடன் இவ்வளவு உற்சாகமாக பேசி கொண்டு இருந்திருக்க மாட்டான்.. .

அதை எண்ணி மனதுக்குள் அவளுக்கு நன்றி சொன்னாலும் அடுத்து அவன் தாத்தாவின் குள்ளநரித்தனம் நினைவு வர உடல் விறைத்து போனது..

அந்த கேரளா பயணத்தில் அவள் தன்னுடன் நடந்து கொண்டதெல்லாம் வெறும் நடிப்பு என்று அவள் மேல் இல்லாத கோபத்தை இழுத்து வைத்து கொண்டான்...

ஆனால் அந்த கோபம் எல்லாம் அடுத்து பத்து நிமிடங்கள் தான்.. மீண்டும் ஏதாவது ஒரு செய்கையில் அவளின் குறும்பு மின்னும் கண்களும் வாய் நிறைய சிரிப்பும் ஜமீன்தாரே என்று இழுத்து பேசும் அவளின் வேடிக்கை பேச்சுமே மீண்டும் மனதில் ஆடும்..

உடனே தலையை உலுக்கி கொண்டு அவளை பின் தள்ளி தன் வேலையில் தன் கவனத்தை செலுத்தினான்..

காலையில் அவனுடைய அலுவலக வேலையை முடித்தவன் மாலையில் அவன் தாத்தாவிற்கு சொந்தமான  டெக்ஸ்டைல் பிசினஸ் சம்பந்தமான வேலையை பார்த்தான்..

என்னதான் தாத்தாவிடம் கோவித்து கொண்டு வந்திருந்தாலும் கடந்த ஒரு வாரமாக அவன் பார்த்து வந்த தொழிலை உரிய முறையில் அவரிடம் ஒப்படைக்காமல் விட்டு விட முடியாதே..

சொந்த வாழ்வில் ஆயிரம் பிரச்சனை இருந்தாலும் அதை தொழில் உடன் சம்பந்த படுத்த கூடாது என்று அவன் தாத்தா கற்று கொடுத்த பாடம்..

அதனாலயே அவன் பார்த்த வேலை மற்றும் அடுத்து செய்ய வேண்டிய சில பணிகளை பட்டியலிட்டு அதற்கான விவரங்களையும் அட்டாச் பண்ணி அவன் தாத்தாவிற்கு மின்அஞ்சலை தயார் பண்ணி கொண்டிருந்தான்..

அந்த நேரம் உள்ளே வந்த அபி,

டேய் அதி.. சது உன்கிட்ட பேசணுமாம்.. உன் மொபைல் இன்னுமா ஆன் பண்ணலை? “ என்றவாறு உள்ளே வந்தான்..

அப்பொழுதுதான் நினைவு வந்தது..

வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது தன் அலைபேசியை அணைத்துவிட்டான்.. இல்லையென்றால் அவன் அன்னையோ அவன் தங்கையோ அவனை அழைத்து திரும்பவும் வீட்டிற்கு வரும்படி சொல்லி நச்சரிப்பர்...

அவர்கள் பேச்சை தட்டும்படி ஆகிவிடும் என்று தன் அலைபேசியை அணைத்துவிட்டான்..

இன்னுமே அதை ஆன் பண்ணி இருக்கவில்லை.. அதை ஆன் பண்ணவும் பிடிக்கவில்லை..

“அபி.. உன் போனை கொடு.. “ என்று வாங்கி தன் நண்பன் அலைபேசியில் இருந்து சாந்தினியை அழைத்தான்..

முதலில் அபி என்று தயங்கி  சாதாரணமாக பேச ஆரம்பித்தவள் மறுமுனையில் இருப்பவன் அதிரதன் என தெரியவும் தன் கொஞ்சல் பேச்சை ஆரம்பிக்க, அதிரதனுக்கு அந்த நொடி அவள் நடிக்கிறாளோ என்று தோன்றியது...

நொடியில் குரலை மாற்றி கொண்டு எப்படி இப்படி கொஞ்சி பேச முடிகிறது ? என உள்ளுக்குள் சிறு யோசனை.. ஆனால் அவனை மேலும் யோசிக்க விடாமல் அவள் கொஞ்சி பேசி சீக்கிரம் அவனை வீட்டிற்கு வருமாறு அழைக்க, அவனும் தன் வேலையை முடித்துவிட்டு வருவதாக சொல்லி வைத்தான்..

அதன்படி வேகமாக தன் மின் அஞ்சலை அனுப்பிவிட்டு கிளம்பி சாந்தினியின் இல்லம் நோக்கி உற்சாகத்துடன் காரை செலுத்தினான்...

கைகள் தானாக ஸ்டியரிங் கை சுற்றினாலும் கால்கள் பிரேக் ஐயும் ஆக்சிலேட்டரையும் மாறி மாறி மிதித்து தனக்கு இட்ட பணியை செய்து கொண்டிருந்தாலும் பார்வை சாலையை நேராக பார்த்திருந்தாலும் மனம் மட்டும் அங்கு இல்லாமல் எங்கோ சென்றிருந்தது அதிரதனுக்கு....

அமைதியாக காரை ஓட்டி கொண்டிருந்தவன் கைகள் சென்று அந்த காரில் இருந்த எப்.எம் ஐ தட்டி விட, அவன் மனநிலைக்கு தகுந்த மாதிரி அந்த பாடலும் ஒலித்தது...

நிலவே என்னிடம் நெருங்காதே

நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

மலரே என்னிடம் மயங்காதே

நீ மயங்கும் வகையில் நானில்லை

 

 

அந்த வரிகளை கேட்டதும் தானாக நிலவினியின் முகம் கண் முன்னே வந்து அவனை பார்த்து கண் சிமிட்டி சிரித்தது.. அதை கண்டதும் பட்டென்று அந்த எப்.எம் ஐ அணைத்தான்..

“சதிகாரி.. அவள் எங்க என்கிட்ட நெருங்கி வந்தா? என்னை அல்லவா ஒரு நொடி அவள் மீது பைத்தியம் மாதிரி ஆக்கிவிட்டாள்.. நாடகக்காரி. அன்று மட்டும் அவள் விலகி செல்லாமல் இருந்திருந்தால்??”  

அன்று அவன் இருந்த நிலையில் கண்டிப்பாக எல்லை மீறிதான் நடந்திருப்பான்.. அப்படி எதுவும் நடந்திருந்தால் அது பெரும் குற்ற உணர்வை கொடுத்திருக்கும் அவனுக்கு..

மனதில் அவன் நிலா பொண்ணை வைத்து கொண்டு இன்னொருத்தியிடம் தவறாக நடந்து கொள்வது தவறல்லவா? அது அவன் அணைத்தவளுக்கும் அவன் மனதில் இருப்பவளுக்கும் செய்யும் துரோகம் அல்லவா?

அப்படி ஒரு துரோகத்தை செய்திருந்தால் வாழ்நாளுக்கும் அது அவன் மனதை அரித்துகொண்டே இருந்திருக்கும்...

“நல்லவேளை என்னை அப்படி ஒரு இக்கட்டில் சிக்க வைக்காமல் என்னை காப்பாற்றி விட்டாள்.. ஒருவேளை இதற்காகத்தான் அன்று என்னை தடுத்து நிறுத்தினாளா? “ என்று எண்ண உடனே திடுக்கிட்டு போனான்...

“நான் ஏன் அவள் செய்த செயலுக்கு நல்லவிதமாக யோசித்து கொண்டிருக்கிறேன்...?  இல்லை.. இல்லை.. அவளுக்கு என்னை பற்றி எல்லாம் கவலை இல்லை... நல்லவள் போல நாடகம் ஆடி இருக்கிறாள். அவள் அழகை காட்டி என்னை என் நிலாவிடம் இருந்து பிரிக்க பார்த்திருக்கிறாள்..

அதனால்தான் நான் இழுத்த இழுப்புக்கு எல்லாம் என்னுடன் இழைந்து ஆடியவள் எனக்கு சூடு ஏற்றி என்னை அவள் மீது மோகம் கொள்ள வைத்து அந்த நேரத்தில் என் நிலா பொண்ணை என் மனதில் இருந்து விலக்கி விட்டேன் என்று என் வாயால் சொல்ல வைத்து அவள் காரியத்தை சாதிக்க திட்டமிட்டிருக்கிறாள்..

அதுக்குத்தான் ஆசையை காட்டி என்னை சும்மா பேருக்காக தள்ளி வைக்க பார்த்திருக்கிறாள்.. எப்படியும் நான் அவள் காலடியில் விழுந்து அவளே சரணம் என்று துதி பாடி அவளை ஆராதனை பண்ணி ஆலிங்கனம் செய்வேன் என்று திட்டமிட்டிருப்பாள்..

ஆனால் நான் அதிரதன்.. யாருக்கும் அடங்காதவன்..நொடியில் அவளின் தந்திரம் புரிந்து விலகி விட்டேனே... அவளுக்கும் அந்த கிழட்டு சிங்கத்திற்கும் தகுந்த பதிலடி கொடுக்கவேண்டும்...கொடுப்பான் இந்த அதிரதன்.. “  என்று உள்ளுக்குள் சூளுரைத்தான்...

அவன் உள்ளே கொதித்து கொண்டிருந்தாலும் மனம் என்னவோ அவனையும் அறியாமல் கடந்த ஒரு வாரத்தையே சுற்றி சுற்றி வந்தது..

அதுவும் கடந்த மூன்று நாட்களாக அவளுடனேயே சுற்றி திரிந்த நாட்களையே திரும்ப திரும்ப நாடியது...

அந்த மூன்று நாட்களும் இதுபோலத்தான் காரை ஓட்டி கொண்டிருப்பான்.. அவன் ஓரப் பார்வை மட்டும் அடிக்கடி அவன் பக்கத்தில் அமர்ந்திருப்பவளிடம் சென்று நிக்கும்..

அதை எல்லாம் இன்று யோசிக்க அடுத்த நொடி அவனையும் அறியாமல் அவன் ஓரப்பார்வை இப்பொழுதும் அவன் அருகில் சென்றது..

அங்கு சென்றதும் அப்படியே அதிர்ந்து போனான்...

அவன் அருகில் முகத்தில் குறும்பு பரவி கிடக்க  கண்களில் சிரிப்பு அலையாட, “என்ன ஜமீன்தாரே! “ என்று குறும்பாக இதழ் திறந்து கண் சிமிட்டி சிரித்தான் நிலவினி....

அவனையும் மீறி அவன் இதழ்கள் புன்முறுவலித்தன.. அடுத்த நொடி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவளை முறைத்து பார்த்தான்.. அவனின் கோபப் பார்வையை தாங்காமல் அடுத்த நொடி மறைந்து விட்டாள்..

இவனோ அதிர்ந்து போய் மீண்டும் கண்களை தேய்த்து கொண்டு நன்றாக உற்று பார்க்க அங்கு இல்லை அவள்..

“சே.. அவளை விட்டு விலகி வந்தாலும் இப்படி படுத்தறாளே பிசாசு... ராட்சஷி... “ என்று தன் ஸ்டியரிங் ஐ ஓங்கி குத்தியவன் தன் உடலையும் மனதையும் இறுக்கி கொண்டு விறைப்புடன் காரை செலுத்தினான்...

“ஹாய் பேபி.... கம்... கம்...கம்..ஐம் வெயிட்டிங் பார் யூ. ” என்று உள்ளே வந்தவனை ஓடி வந்து கட்டி கொண்டாள் சாந்தினி....

அவளின் மலர்ந்த சிரிப்பிலும் கண்ணில் மின்னிய காதலிலும் அதுவரை உள்ளே பொங்கிய கோபம் ஆத்திரம் எல்லாம் வடிந்துவிட, அவனும் முகம் இலகுவாகிட

“ஹாய் ஹனி... ஹௌவ் ஆர் யூ ? ஐ மிஸ்ட் யூ சோ மச்.. “ என்று அவளை அணைத்தவாறு உள்ளே சென்றான்..

“ஐ டூ அத்தூ... “ என்று கொஞ்சியவாறு அவனுடன் அட்டையாக ஒட்டியபடி அவனுடன் இணைந்து நடந்தாள்..உள்ளே சென்றவன்  

“ஒன் மினிட் ஹனி..  பேஸ் வாஷ் பண்ணிட்டு வந்துடறேன்.. “  என்றவன்  குளியலறைக்கு  சென்று விட்டான்..

அதற்குள் சாந்தினி இரவு உணவை எடுத்து வைத்திருந்தாள்..

அன்று முன்னதாகவே அலுவலகத்தில் இருந்து  வந்திருந்தவள்  வீட்டை கொஞ்சம் அழகாக மாற்றி அமைத்தாள்..

காலையில் அவள் செய்திருந்த ப்ரேக்பாஸ்ட் ஐ அவன் சாப்பிட முடியாமல் முகம் சுளிக்கவும் இந்த முறை நன்றாக செய்ய வேண்டும் என்று எண்ணி சிலபல ரெசிபிகளை யூட்யூபில் தேடி அலசி ஆராய்ந்து புது மாதிரியாக சமைத்திருந்தாள்..

அதையெல்லாம் எடுத்து டைனிங் டேபிளில் வைத்து விட்டு கூடவே இரண்டு மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தாள்..

அவன் குளியலறையிலிருந்து வெளிவருவது தெரியவும் உடனே வரவேற்பறையில் இருந்த விளக்கை எல்லாம் அணைத்து ஒரு விடிவிளக்கை மட்டும் ஆன் பண்ணி வைத்தாள்..

டைனிங் டேபிளில் மட்டும் இரண்டு மெழுகுவர்த்திகள் அழகாக எரிந்து கொண்டிருந்தன... குளியலறையில் இருந்து வெளிவந்த அதிரதன் அந்த சூழலை பார்த்து திகைத்துப் போனான்..

உடனே சாந்தினி அவனிடம் ஓடி வந்தவள்

பேபி.... இன்னைக்கு கேண்டில் லைட் டின்னர்.. நானே எல்லாமே பார்த்து பார்த்து செய்து இருக்கிறேன்.. “ என்று ஒயிலாக நின்று கொண்டு இமைகளை படபடவென்று கொட்டி தலை சரித்து மையலுடன் சிரித்தாள்..

அப்பொழுது தான் அவளை முழுவதுமாக பார்த்தான் அதிரதன்..  எப்பொழுதும் போல் இல்லாமல் இன்று அவள் வித்தியாசமாக இருப்பதை போல தோன்றியது..

அவனுக்கு அவள் சேலை கட்டினால் பிடிக்கும் என்பதால் ஒரு வெள்ளை நிறத்தினாலான நெட்டட் சேலை அணிந்திருந்தாள்..

ஆனாலும் அவள் மறைக்க வேண்டிய பாகங்கள் எல்லாம் வேண்டுமென்றே மறைக்காமல் விட்ட மாதிரி நேர்த்தியாக அந்த புடவையை கட்டியிருந்தாள்..

கூடவே அவளின் அபாயகரமான வளைவுகள் அவன் பார்வையில் படுமாறு ஒயிலாக நின்றிருந்தாள்.. அதைக் கண்டதும் அவனுக்கோ உள்ளுக்குள் புயல் அடிக்க ஆரம்பித்தது..

அவன் பார்வை அங்கேயே நிலைத்து நிற்க,  அதை ஓரக் கண்ணால் கண்டவளோ  உள்ளுக்குள் துள்ளிக் குதித்தாள்..  

ஆனாலும் தன்னை மறைத்துக்கொண்டு

“வாங்க பேபி..சாப்பிடலாம்.. “  என்று  கொஞ்சியவாறு அவன் கைபிடித்து இழுத்துச் சென்றாள் டைனிங் டேபிளை நோக்கி..

அவனும் மந்திரத்துக்கு கட்டுண்டவன் போல அவள் பின்னால் செல்ல அவனுக்கான இருக்கையை நகர்த்தி வைத்து அவனை அமரச் சொல்லி உபசரித்தவள் அவளும் அவன் எதிரில் அமர்ந்து கொண்டாள்..

பின் இருவருக்குமே தட்டை எடுத்து வைத்து அவள் சமைத்து வைத்ததை எல்லாம் ஆசையாக எடுத்து வைத்தாள்..

அதிரதன் அதை எடுத்து உண்ண அதன் சுவை எதுவும் அவன் நாவிலும் மனதிலும் ஒட்டவில்லை..

சாந்தினி அவனை பிரிந்து இருந்த கடந்த ஒரு வாரத்து கதையை எல்லாம் பேசிக் கொண்டிருந்தாள்.. அவனும் அந்த மெல்லிய விளக்கு ஒளியில் ஜொலித்தவளை அள்ளி  பருகியவாறு தட்டில் இருந்ததை வாய்க்கு செலுத்திக் கொண்டிருந்தான்..

அன்று கேரளாவில் நிலவினி உடன் சாப்பிட்ட அந்த கேண்டில் லைட் டின்னர் கண் முன்னே வர, இதே மாதிரி ஜொலித்த அவள் முகம் மனத்திரையில் ஓடிவந்து நிக்க, அன்று அவன் உள்ளே பரவிய அதே பரவசம் இன்றும் பரவ ஆரம்பித்தது...   

ஓரக்கண்ணால் அடிக்கடி அவனை பார்த்தவள் அவனின் பார்வை சென்ற இடத்தை கண்டதும் இன்னுமாய் துள்ளி குதித்தாள்..

வேண்டுமென்றே குனிந்து நிமிர்ந்து எதை எதையோ எடுத்து வைத்து சிலதை அவன் பக்கம் நகர்த்தி வைத்து தன் மாராப்பை சரிய விட்டு அவள் பெண்ணழகை அவன் பார்வையில் நன்றாக படுமாறு கட்டிக்கொண்டாள்..

ஏற்கனவே தடுமாறிப்போய் இருந்தவன் அவளின் இந்த தோற்றத்தில் இன்னுமாய் தடுமாறி விட அவளை தாபத்துடன் பார்த்தவாறு எப்படியோ உண்டு முடித்தான்..  

எழுந்து சென்று வாஷ்பேஷனில் கை கழுவ அவளும் கூடவே வந்து தன் முந்தானையை எடுத்துக் கொடுத்தாள் அவன் கை துடைக்க அது நெட்டட் சேரி என்பதையும் மறந்து..போனசாக மையல் பார்வை வேறு..

அந்த பார்வையே அவனுக்கு அழைப்பு விடுக்க அதற்கு மேல் ஒரு ஆண்மகன் எப்படி தன்னை கட்டுப்படுத்த முடியுமாம்?  

அவள் நீட்டிய முந்தானையில் கை துடைத்தவன் அவனே எதிர்பாராமல் அடுத்த நொடி அப்படியே அவளை அள்ளிக் கொண்டான்.. கூடவே அன்று நிலவினி அவனை விலக்கி நிறுத்தியதும், நேற்று இரவு அவன் தாத்தாவிடம் கூறி வந்த சபதமும் நினைவு வந்தது....

தன்னை விலக்கி நிறுத்தியவளுக்கு தக்க தண்டனை கொடுக்கவும் தன் தாத்தாவிடம் கர்ஜித்து விட்ட சபதத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வெகுண்டவன் உடனே அவன் செயலில் இன்னும் தீவிரமானான்...

கையில் அள்ளி கொண்டவளை நேராக படுக்கை அறைக்கு தூக்கிச் சென்றான்.. அவளும் இதற்காகவே காத்திருந்தார் போல அவள் கையை உயர்த்தி அவன் கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு இன்னுமே மையலுடன் சிரித்தாள்..

கட்டிலை அடைந்ததும் அவளை கட்டிலில் கிடத்தியவன் தாபத்துடன் அவள் இதழ் நோக்கி குனிந்தான்.. அவளுமே கண் திறந்து அவனையே தாபத்துடன் நேராக பார்த்திருந்தாள்..

அந்தப் பார்வை இன்னுமாய் அவனுள் கிறக்கத்தை தூண்ட அவளை நோக்கி இன்னுமே வேகத்துடன் குனிந்தான்... அவன் இதழ்கள் அதன் இலக்கை அடைய முயல அந்த நேரம் அவன் கண் முன்னே வந்தாள் அவள், நிலவினி..

இப்படித்தானே அன்றும் அவளை நோக்கி குனிந்து இருந்தான்.. ஆனால் அவளோ குவளை மலர் போல் குடை போன்ற தன் இமை தாழ்த்தி இவனை பார்க்க முடியாமல் வெட்கம் மேலிட  கன்னங்கள் சிவந்து போக நாணத்துடன் அவள் கண்களை இறுக்க மூடியிருந்தாள்..

அந்த முகம் அவளின் செந்தாமரை முகம் பால் நிலா முகம் இப்பொழுது அச்சு பிசகாமல் அவன் கண் முன்னே வர இமை தட்டி மீண்டும் தன் முன்னே இருந்தவளை பார்த்தான்..  

உடனேயே அவன் மனம் கூச்சலிட்டது அவள்  இவள் இல்லை என்று

இங்கிருப்பவளோ வெட்கம் என்றாள் என்னவென்று தெரியாமல் அவனை கண்டதும் சிவந்து போகாமல் நேருக்கு நேராக அவனை பார்த்து அவன் அணைப்புக்காக இதழ் ஒற்றுதலுக்காக காத்திருந்தாள்..

ஏனோ அந்த நொடி அவள்  கண்களில் காதலுக்கு பதிலாக காமம் மட்டுமே அவன் கண்முன்னே தெரிந்தது...

அவனை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற ஒரு தீவிரம்  மட்டுமே அவள் கண்களில் தெரிந்தது..

அவசரமாக அவன் மனம் இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்க அடுத்த நொடி திடுக்கிட்டு தன்னையே திட்டிக்கொண்டான்...  

“அவள் நாடகக்காரி.. இவள்தான் உனக்காக உன் அன்புக்காக,  அணைப்புக்காக உன் காதலுக்காக ஏங்கி கிடப்பவள்.. தாத்தாவிடம் போட்ட சவால் நிறைவேற வேண்டுமென்றால் நீ இப்படி தயங்கக் கூடாது.. “  என்று தனக்குத் தானே சொல்லிக்கொண்டு மீண்டும் அவளை நோக்கி முன்னேற ஆரம்பித்தான்..

நல்ல வேளையாக இப்பொழுது அந்த சதிகாரி முகம் கண் முன்னே வரவில்லை.. ஒருவித நிம்மதியுடன் அவன் இதழ்கள் அதன் பயணத்தை தொடங்க, அவளை நெருங்க முயல,  அடுத்த நொடி  அவன் கண் முன்னே  வந்து குதித்தது அது...

இப்ப என்ன?  என்று எரிச்சலுடன் அதை உற்றுப்பார்க்க,  அக்னி சாட்சியாய் அத்தனை பேர் ஆசியுடன் அவன் நிலவினிக்கு கட்டிய தாலியும் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அவன் அவள் பொற்பாதம் பிடித்து  போட்டுவிட்ட மெட்டியும் அவனைப் பார்த்து முறைத்தன்..  

“எங்களை மறந்து விட்டாயே? என்று அவனுடன் யுத்தத்திற்கு தயாராகின..

அதை கண்டதும் திடுக்கிட்டவன் அப்பொழுது தான் அந்த வெள்ளையர்   தம்பதிகளின் திருமணத்தின்போது அவனும் கூடவே உச்சரித்த மந்திரங்கள் திருமணத்தின் பொழுது அவன் சொன்ன உறுதிமொழிகள் அவன் மண்டையில் உரைத்தது..

“எனக்கு மனைவியானவளை தவிர வேற எந்த பெண்ணையும் ஏறெடுத்து  பார்க்க மாட்டேன்.. இன்ப துன்பங்கள் எதுவாக இருந்தாலும் ஒருவருக்கு ஒருவராய் இருவரும் துணை நின்று கடைசிவரை இல்லறத்தை காப்போம்..”   என்று அவன் சொல்லி கட்டிய அந்த  மாங்கல்யம் அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தது...

“வெளிநாடுகளில் இருப்பவர்கள் எல்லாம் நம்ம கலாச்சாரத்தை மதித்து அதன் படி நடக்க முயல, நீயோ நம்ம கலாச்சாரத்தில் வளர்ந்தவன்.. இப்படி அவசரபட்டு அறிவை அடகு வைக்கலாமா?  மடையா.. “  என்று அவன் தலையில் ஓங்கி குட்டு வைத்தது அவன் அணிவித்த அவன் கால் மெட்டி..

“இல்லை.. எனக்கு அதெல்லாம் முக்கியமில்லை.. இப்பொழுதெல்லாம் யார் இந்த கலாச்சாரம் கன்றாவதி எல்லாம் மதிக்கிறார்கள் ?  லிவ்விங் டுகெதர் கல்ச்சர் தான் பெரும்பாலும் இப்பொழுது..

நானும் அப்படி வாழ்வதில் ஒன்றும் தப்பில்லை.. அதுவும் என்னை ஏமாற்றியவர்களுக்கு நான் கொடுக்கும் தண்டனைக்காகத்தான்..  அவர்கள் தங்கள் தவறை உணர வேண்டும்..  

நான் காதலித்தவளை என்னிடமிருந்து பிரிக்க முயன்றது எவ்வளவு பெரிய பாதகம் என்று அவர்கள் உணர வேண்டும்.. அதற்கு இதுதான் ஆயுதம்.. நான் என் நிலா பொண்ணுடன் சேர்ந்து வாழ்வதை பார்த்து அவர்கள் துடித்து போகணும்..

அந்த சதிகாரி அவளாகவே என்னை விட்டு பிரிந்து போகணும்.. என்னை எப்பொழுதும் அந்த சதிகாரி நிலா நெருங்க கூடாது..  எனக்குச் சொந்தமானவள் என் நிலா இவள் மட்டும் தான்.. “  என்று மீண்டும் தனக்குத் தானே உறுதி செய்து கொண்டவன் மீண்டும் தன் பயணத்தை தொடர்ந்தான்..

தன்னை கட்டிலில் கிடத்தியவன் இன்னுமே தன்னை நெருங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருப்பதை கண்ட சாந்தினியோ உள்ளுக்குள் திடுக்கிட்டாள்..  

அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்

“என்னாச்சு பேபி?  ஏன் தயங்கறிங்க? இந்த நிலா உங்களுக்குத்தான் எடுத்துக்கோங்க.. “  என்று  மீண்டுமாய் மையலுடன் சிரித்தவள் தன் கையை உயர்த்தி அவனை   அழைக்க அந்த நொடி மீண்டுமாய் கண் முன்னே வந்தது அவன் உரிமையானவளின் விலக்கம்..  

அன்று தனக்கு உரியவளை ஆசையாக நெருங்கியவனை தன் கரம் கொண்டு தடுத்து நிறுத்தியவள் துள்ளிக் குதித்து இறங்கி நின்றது இப்பொழுது அவனையும் மீறி கண் முன்னே வர இந்த இவளோ அவன் மனைவி என்ற உரிமை கிடைக்கும் முன்னே தாராளமாக அள்ளி வழங்க காத்திருப்பவளை கண்டதும் ஏனோ அவனையும் மீறி குமட்டி கொண்டு வந்தது...

அடுத்த நொடி அவன் உள்ளே எழுந்த கிளர்ச்சி எல்லாம் அப்படியே அடங்கிப் போனது.. அவன்  உள்ளே எழுந்த புயல் கரையை அடைந்ததை போல நீர்த்துப் போனது..

இப்பொழுது மீண்டுமாய் அவள் புறம் திரும்ப சற்றுமுன் அவனை பாடாய் படுத்திய அவளுடைய அபாயகரமான வளைவுகளும் போதை ஏற்றிய அவள் பெண்மையும் இப்பொழுது காண சகிக்கவில்லை..

அவனையும் மீறி ஒரு அருவருப்பான பார்வை வந்து நின்றது..

அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த சாந்தினிக்கு அவன் முகத்தில் வந்த இந்த பார்வை கொஞ்சம் ஏமாற்றத்தை கொடுத்தது

ஆனாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போக விடக்கூடாது என்றவள்

“என்னாச்சு பேபி? என்று எழுந்தவள்  அவனை தானாக அணைக்க முயல அவள் கை தீண்டிய அந்த நொடி அவனுக்கு தீச்சுட்டார் போல இருந்தது..

உடனே அவளை நோக்கி குனிந்து கொண்டிருந்தவன் வேகமாக தலையை நிமிர்த்திக் கொண்டான்.. தன்னை அணைக்க வந்தவளை விலக்கி நிறுத்தி கட்டிலில் தள்ளியவன்

“சாரி சது... இப்ப வேண்டாம்.. “  என்று எங்கோ பார்த்து சொல்லியவன்  நான் கிளம்பறேன் என்றும் சொல்லிவிட்டு அவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் புயலென கிளம்பிச் சென்றான் 

சாந்தினிக்கோ அதிர்ச்சியாக  இருந்தது.. இன்னுமே அவளால் நம்ப முடியவில்லை..

தன் கண் பார்வைக்காக எத்தனையோ ஆண்கள் காத்து கொண்டிருக்க, இவன் என்னடாவென்றால் தானே முன் வந்து நின்றாலும் முதலில் மயங்கி அணைக்க வந்தவன் பாதியில் விட்டு சென்றது ஏன் ? என்று குழப்பமாக இருந்தது.

கொஞ்ச நாட்களாகவே அவன் அவளை விட்டு விலகுவதை போல இருந்தது.. அதற்கு பயந்து அவனை எப்படியாவது தன்னிடமே பிடித்து வைத்து கொள்ள வேண்டும் என்றுதான் தன் அன்னை சொல்லி சொல்லி வளர்த்திருந்த கலாச்சாரத்தையும் கஷ்டபட்டு மீறி தன் மனதை கல்லாக்கி கொண்டுதான் இன்று அவனுக்காக தன்னை கொஞ்சம் வித்தியாசமாக அலங்கரித்து கொண்டு காத்திருந்தாள்..

அதுவும் அவ்வளவு சுலபமாக அவளால் தயாராகிவிட முடியவில்லை... அவள் ஆசை பட்ட அந்த ஜமீன் மாளிகையா இல்லை நம்ம வெத்து கலாச்சாராமா என்று பட்டி மன்றம் நடத்த, ஜமீன் மாளிகையே என்று முடிவு வந்தது..

கூடவே  எப்படியும் தன் கணவனாக போகிறவன் தானே.. அவனிடம் கொஞ்சம் தாராளம் காட்டி  இப்படி நடந்து கொண்டால் ஒன்னும் தப்பில்லை என்று தன் மனதை தேற்றி கொண்டுதான் அவன் முன்னே ஒயிலாக நின்றதும் அவன் கவனத்தை கவர்ந்ததும் அவன் உணர்ச்சிகளை தூண்டியதும்...

அவள் போட்ட திட்டம் எல்லாம் நன்றாகத்தான் போய்கொண்டிருந்தது.. அவனும் அவளிடம் மயங்கி அவளை அள்ளி கொண்டான் தான்..

ஆனால் விளையாட்டு ஆரம்பிக்கும் முன்னே கேம் ஓவர் போட்ட மாதிரி இப்படி அவளை விலக்கி விட்டு செல்லவும் அவளுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது..

அப்படியே திகைத்து அதிர்ந்து ஏமாற்றத்துடன் கட்டிலில் கிடந்தவள் மனமோ என்னென்னவோ எண்ணி கலங்கியது..

“ஏன் அப்படி செய்தான்?  என்னை பிடிக்கவில்லையா? இல்லை வேற பெண்ணிடம் அவன் மனம் சென்று விட்டதா? எப்படி அவனை தக்க வைத்து கொள்வது? என்ற பல யோசனைகளுடன் உறக்கம் இன்றி கொட்ட கொட்ட விழித்திருந்தாள் சாந்தினி...!


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!