பூங்கதவே தாழ் திறவாய்-12

 


இந்த நாவல் ஏற்கனவே ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. 

ஒலி வடிவில் கேட்டு மகிழ, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க...நன்றி!! அன்புடன் பத்மினி செல்வராஜ்.


பூங்கதவே தாழ் திறவாய் - ஆடியோ நாவல்..!

இதழ்-12

 

றடி உயரத்தில்,  கம்பீரமாக,  சிரிக்கும் கண்களும், உதட்டில் மிளிரும் குறும்பு புன்னகையுடன் நின்று கொண்டிருந்த அந்த நெடியவனை கண்டதும் பரிமளத்திற்கு எல்லையில்லா மகிழ்ச்சி....

தன் மாப்பிள்ளைதான் வந்து விட்டார் என்று எண்ணி  

 “தீக்சா... மாப்பிள்ளை வந்திட்டார்.... “ என்று சந்தோச கூச்சலிட்டார்...

உடனே தன்னை சமாளித்து கொண்டு

“வாங்க மாப்பிள்ளை.. சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்கீங்க... இப்பதான் விழா ஆரம்பிச்சோம்... “ என்று வாயெல்லாம் பல்லாக அந்த நெடியவனை  வரவேற்றார்...

அதே வேகத்தில் உள்ளே வந்தவர்

"தீக்சா.. மாப்பிள்ளை வந்திட்டார்.... நீ சொன்ன மாதிரியே சஸ்பென்சாதான் வந்திருக்கார்.. “ என்று பூரித்து போனார் பரிமளம்...

தன் அன்னை  சொன்னதை கேட்டு தீக்சாவிற்கு தலை சுற்றியது....

"இது எப்படி சாத்தியம் ?? "  என்று  யோசித்து கொண்டே வாயிலை பார்த்தாள்...   

அதற்குள் காலில் அணிந்திருந்த ஷுவை கழற்றிவிட்டு உதட்டில் புன்னகையுடன்  உள்ளே வந்தான் அந்த நெடியவன் ..

அவனை கண்டதும் தீக்சாவின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி, சந்தோஷம், பூரிப்பு, ஆசை,  ஏக்கம் என்ற அதே கலவையான உணர்ச்சிகள் வந்தன...

ஓடிப்போய் அவனை இறுக்கி அணைத்து கொள்ள துடித்தன அவள் கரங்கள்...  ஆனால் அடுத்த நொடியே அவன் முகம் நோக்கியவள் அப்படியே இறுகி போனாள்...

அவளின் வழக்கமான அந்த வெறித்த வெற்று பார்வையும் தானாக ஓடி வந்து சேர்ந்து கொண்டது...

தன் உதட்டை கடித்து கொண்டு தலையை குனிந்து கொண்டாள் தீக்சா...

கண்ணோரம் கரித்து கொண்டு வந்தது...

பரிமளம் மாப்பிள்ளை என்கவும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் அந்த நெடியவனையே ஆவலாக பார்த்தனர்...

தீக்சாவின் அருகில் நின்றிருந்த புவனா வும் ஆவலுடன் அவனை காண, உடனே திடுக்கிட்டாள்... ஆனாலும் தன்னை சமாளித்து கொண்டு  

“சா... சார்... நீங்க எங்க சார் இங்க??.. வாங்க சார்.... “ என்று  அவசரமாக முன்னே  வந்து அவனை  வரவேற்றாள்...

அவள் சார் என்று  சொல்லவும் பரிமளம் புரியாமல் புவனாவை  பார்க்க

“ஆன்ட்டி.. இவர்தான் எங்க ஆபிஸ் MD. பெயர் அபிநந்தன்.. “ என்று அறிமுக படுத்த அவன் அங்கிருந்தவர்களுக்கு கை கூப்பி வணக்கம் சொன்னான்...

அதை கண்டு பரிமளம் முகத்தில் வந்திருந்த உற்சாகம் காற்று போன பலூனை போல புஸ் என்றானது..

தன் மாப்பிள்ளை எப்படியும் இந்த  வளைகாப்பிற்காக வந்து விடுவார் என்று  வழிமேல் விழி வைத்து காத்திருக்க, கடைசியில்  வந்து விட்டார் என்று  நம்பி மகிழ்ந்திருக்க,  இப்படி ஆகி விட்டதே என்று ஏமாற்றமடைந்தார்...

ஆனாலும் தன்னை  மறைத்து கொண்டு “வாங்க தம்பி.. “ என்று  வரவேற்றார்...

தீக்சாவோ தலையை குனிந்து கொண்டவள் நிமிர்ந்தும் அவனை பார்க்கவில்லை... அவள் விழியோரம் கோர்த்திருந்த நீரை உள்ளிழுத்து கொண்டாள்...

அபியும்  புன்னகைத்தவாறு உள்ளே வந்து அங்கு இருந்த நாற்காலியில் அமர்ந்தான்... 

அந்த வரவேற்பறையின் நடுவில் வளைகாப்பிற்கான மங்கள பொருட்கள் அடுக்கி வைக்கபட்டிருக்க, அதன் ஓரத்தில் தீக்சா அமர்ந்து இருந்தாள்...

மற்றொரு பெண்மணி  அப்பொழுது அவளுக்கு வளையல் அடுக்க வர, அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள் நிமிர்ந்து அவரை பார்த்து புன்னகைத்தாள்...

அவரும் சிரித்து கொண்டே அவளுக்கு  கன்னத்தில் சந்தனம் பூசி தலையில் அட்சதையை தூவினார்...

எதிரில் அமர்ந்திருந்தவன் தீக்சாவின் கன்னத்தில் பூசிய சந்தனத்துடன் அவளை  பார்க்க அவனுக்கே மெய் சிலிர்த்தது....

பிங்க் நிற பட்டு புடவையில் தலை நிறைய மல்லிகை சூடி கன்னத்தில் மிளிரும் சந்தனத்துடன்  தாய்மையின் அழகும் சேர தேவதையாக ஜொலித்தாள்...

அவளையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான்....

எதேச்சையாக நிமிர்ந்தவள் அவனை பார்க்க, அவன் பார்வையை கண்டு கொண்டவளுக்கும் உள்ளுக்குள் சிலிர்த்தது...அவள் கன்னங்கள் தானாக சிவந்தன...

அதற்குள் தன்னை கட்டுபடுத்தியவள்

"இவன் எப்படி இங்கு வந்தான்?? நான் இவனை அழைக்கவில்லையே... " என்று  யோசித்து கொண்டிருந்தாள்....

அபியோ அவளுக்கு நடக்கும் சடங்குகளை  தன் அலைபேசியில் பதிந்து கொண்டிருந்தான்... அதை கண்டு அவள் முறைக்க, அவனோ அதை சட்டை செய்யாமல் மேலும் சில புகைப்படங்கள் எடுத்து கொண்டான்....

அனைவரும் வளையல் அடுக்கி முடிக்க, தன் இருக்கையில் இருந்து  எழுந்தவன் பரிமளத்திடம்

"ஆன்ட்டி... நானும் தீக்சா க்கு  சந்தனம்  பூசவா?? "  என்றான் ஆவலாக ....

அதை கேட்டு அவர் திகைத்து நிக்க, அதையே சம்மதம்  என்று  எடுத்து கொண்டு முன்னால்  வந்தவன் கின்னத்தில் இருந்த சந்தனத்தை எடுத்து அவள் கன்னத்தில் இரு பக்கமும் பூசி விட்டான்....

ஏனோ  இருவருக்குமே சிலிர்த்தது அந்த நொடி...

அவள் கன்னத்தை அப்படியே தன்  கையில் ஏந்தி அவள் நெற்றியில் முத்தமிட தவித்தது அவன் மனம்...

ஆனாலும் அதை அடக்கி கொண்டவன் அவளுக்கு அட்சதையை தூவி அவன் கொண்டு வந்திருந்த அந்த குழந்தைக்கான தொட்டிலை பரிசாக கொடுத்தான்...

அவளும் இலேசாக புன்னகைத்து நன்றி சொல்லி அதை வாங்கி கொண்டாள்... 

பரிமளம் மனமும் குளிர்ந்து போனது... தன் மாப்பிள்ளை வரவில்லை என்ற குறை மனதின் ஓரத்தில் இருந்தாலும் தன் மகளுக்கு நல்ல படியாக இந்த விழாவை நடத்தி பார்த்த திருப்தி அவருக்கு...

பின் விருந்து ஆரம்பமானது...

சில பேரை  மட்டுமே அழைத்திருந்ததால், பரிமளம் தன் கையாலயே  எல்லா  ஐட்டங்களையும் சமைத்திருந்தார்... 

தரையில் பாய் போட்டு அனைவரும் அமர, அபிநந்தன் புவனாவுடன் இணைந்து அனைவருக்கும் பரிமாறினான்...

அதை  பார்க்க தீக்சாவிற்கு ஏதோ மனம் நிறைந்து இருந்தது...

அவளையும் உண்ண சொல்ல, தீக்சாவும் கீழ அமர்ந்து கொண்டாள்...

மூன்று பேர் வேண்டும் என்று ஒரு பெண்மணி சொல்ல, புவனா சென்று  தீக்சாவின் ஒரு பக்கம் அமர்ந்து கொண்டாள்.., மறுபக்கம் காலியாக இருக்க, டக்குனு அபி சென்று  அவளின் மறுபக்கம் அமர்ந்து கொண்டான்...

அங்கிருந்தவர்களும் சிரித்து கொண்டே மூவருக்கும் பரிமாறினர்... தீக்சா யாருக்கும் தெரியாமல் அபியை பார்த்து முறைக்க, அவனோ கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான்...

பரிமளத்தின் சமையல் சுவையாக இருக்க, அவன் புவனாவுடன் கதை அடித்து கொண்டே ரசித்து உண்டான்....

காலையில் இருந்து வந்த அழுத்தம் நீங்கி நெஞ்சில் ஏதோ ஒரு நிம்மதி பரவியது அவனுக்கு...

பின் சாப்பிட்டு முடித்து பக்கத்து வீட்டினர் கிளம்பி செல்ல, புவனாவும் விடைபெற்று சென்றாள்...

பரிமளம் பக்கத்து வீட்டிற்கு மீதி இருக்கும் பதார்த்தங்களை  கொடுக்க சென்றிருந்தார்....

அபியும் தீக்சாவும் மட்டும் அங்கு  இருக்க, தீக்சா அவனை பிடித்து கொண்டாள்

“ரொம்ப தேங்க்ஸ் மிஸ்டர் அபிநந்தன்.. இப்படி கூப்பிடாமலே வந்து கூட உதவி செய்ததற்கு.. “ என்று நன்றி சொல்லி கூட ஒரு கொட்டும் வைத்தாள்...

ஆனால் அவனோ  அதை எல்லாம் கண்டு கொள்ளவில்லை..

அவளையே ஆர்வமாக பார்த்தவன் அவளுடன் இணைந்து  ஒரு செல்பி எடுத்துக்கவா என்றான்...அவள் வேண்டாம் என்று  மறுக்க அதை கேட்காமல் அவளுடன் இணைந்து ஒட்டி நின்று ஒரு செல்பி எடுத்து கொண்டான்....

பின் மீண்டும் அவன் ஏக்கமாக தீக்சாவை பார்க்க, தன் புருவங்களை மேலே உயர்த்தி என்ன?? என்று  கேட்டாள் பார்வையாலயே...

கேட்கலாமா ??  வேண்டாமா?? என்று சிறிது யோசித்தவன் பின் தைர்யத்தை வர வழைத்துக் கொண்டு,  

“தீக்சா... If you don’t mind, shall I touch your baby… வேற எதுவும் தப்பான எண்ணத்தில் இல்லை... எனக்கு என்னவோ அந்த குழந்தையை தொட்டு பார்க்கணும் போல  சின்ன ஆசை... ப்ளீஸ்...allow me.. “ என்று கெஞ்சினான்.....

அவன் முகத்தில் என்னத்தை  கண்டாளோ, மறுக்க மனம் வரவில்லை அவளுக்கு...

உடனே தன் புடவையை விலக்கி வயிற்றை காண்பிக்க, அவன் கைகள் நடுங்க பளபளக்கும் அவள் வயிற்றை தொட்டான்...

அதுவரை அமைதியாய் இருந்த அந்த குட்டி இவன் கை பட்டதும் இப்பொழுது குதிக்க ஆரம்பித்தாள்... அவள் உள்ளே அந்த குட்டி தேவதை அசைவது இவன் கைகளுக்கு தெரிந்தது...

தீக்சாவுக்குமே இவ்வளவு  நேரம் அமைதியாக இருந்தவள் இப்பொழுது ஆட, ஆச்சர்யமாக இருந்தது....

அபிநந்தனுக்கோ அந்த குழந்தையை தொட தொட அவன் உள்ளே இனம் புரியாத பரவசம்..

அப்படியே தொட்டு ரசித்து நின்றவன் வெகு அருகில் தீக்சாவை காண அவன் மனம் எகிறி குதித்தது....

அவளையும் தன்னோடு சேர்த்து அணைத்து கொள்ள துடித்தது அவன் மனம்....

ஆனால் அதற்கு கடிவாளம் இட்டு அவள் அனுமதி அளித்த குழந்தையை மட்டும் தொட்டு பார்த்தான்...

தீக்சாவுமே அவனின் தொடுகையில் தன்னை மறந்து உருகி நின்றாள்...அவள் உள்ளேயும் இனம் புரியாத பரவசம்...   

அதற்குள் யாரோ  வரும் அரவம் கேட்க, உடனே அவனை விட்டு விலகி தள்ளி நின்று கொண்டாள்...

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவன்,

“ரொம்ப தேங்க்ஷ் தீக்சா.....ரியலி எ கிரேட் பீல்... இந்த மாதிரி லைப்ல நான் என்ஜாய் பண்ணியதே இல்லை...

என்னவோ உன் குழந்தையை பார்க்கும் பொழுது எனக்குள் ஒரு இனம் புரியாத பரவசம்.... ஆனா ஏன் எதுக்குனு சொல்ல தெரியலை.. don’t mistake me…

டேக் கேர் யுவர் பேபி... “ என்றான் தழுதழுத்தவாறு...

அதை கேட்டு அவள் முகத்தில் அதே வெறித்த பார்வை வந்து போனது...

“இட்ஸ் ஒகே மிஸ்டர் அபிநந்தன்... “ என்றாள் ஆழ்ந்த குரலில்...

அப்பொழுது பரிமளம் வந்துவிட, அவரிடம் சொல்லி விட்டு, தீக்சாவிடம் விடை பெற்று மீண்டும் அவள் வயிற்றை ஆசையாக பார்த்து விட்டு கிளம்பி சென்றான் அபிநந்தன்..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!