பூங்கதவே தாழ் திறவாய்-13

 


இதழ்-13

 

றுநாள் காலை உற்சாகத்துடன் அலுவகம் கிளம்பி வந்தாள் தீக்சா...

நேற்றைய விழா அவளுக்கு மகிழ்ச்சியூட்டியிருந்தது...

அதுவும் அழைக்காமல் தன் இல்லம் தேடி வந்து திடீரென்று அனைவர் முன்னும் தன் கன்னத்தில் சந்தனத்தை பூசி ஆசி வழங்கிய அபிநந்தனை நினைத்து பூரித்திருந்தாள்....

அதை தொடர்ந்து அவன்  தன் குழந்தையை தொட்டு பார்த்ததும் அதில் தான் சிலிர்த்து போனதும் இப்ப நினைத்தாலும் அவள் உள்ளே பரவசம்...

அதே மகிழ்ச்சியோடு அலுவலகம் வந்தவள் ஏனோ அவனை பார்க்க வேண்டும் போல இருக்க அவன் அழைக்காமலயே முதல் முறையாக அவன் அறைக்கு தானே தேடி சென்றாள்...  

 அவன் அறையை அடைந்ததும் அறை கதவை தயக்கத்துடன்  மெல்ல திறக்க, அங்கு நிகழ்ந்த  காட்சியை கண்டு அப்படியே ஷாக் ஆகி நின்றாள்....

மீண்டும் தன் கண்களை கசக்கி கொண்டு உற்று பார்க்க, அங்கு ஜெசி அவனை அணைத்தபடி நின்று கொண்டிருந்தாள்...

அதை கண்டதும் தீக்சாவின்  முகம் சிவந்து போனது..

“சீ....” என்று முகத்தை சுழித்து அடுத்த நொடியே வேகமாக சென்றவள் தன் இடத்தில் சென்று அமர்ந்து பெருசு பெருசாக மூச்சை எடுத்து விட்டு கொண்டாள்...

மீண்டும் அவள் கண்ட காட்சி கண் முன்னே வர, உள்ளுக்குள் கொதித்தது அவளுக்கு...

பின் சிறிது நேரத்தில் உள்ளே இருந்து ஜெசி தன் புடவையை  சரி செய்தபடியே முகத்தில் சிவந்த வெக்கத்துடன் நமட்டு சிரிப்புடன் வெளியில் வந்தாள்...

அதை கண்டதும் உடல் எல்லாம் பற்றி எரிந்தது தீக்சா விற்கு...

அதோடு நேற்று அவன் தன் வயிற்றை தொட்டு பார்த்ததும் நினைவு வர குமட்டி கொண்டு வந்தது அவளுக்கு....

“சீ....இவ்வளவு மோசமானவனா இவன்?? என்று உள்ளுக்குள் பொருமினாள்...  

சிறிது நேரத்தில் அபி அவளை தன் அறைக்கு அழைக்க, மீண்டும் பற்றி கொண்டு வந்தது அவளுக்கு....

“என்னால் அங்கு வரமுடியாது... என்ன வேலை என்றாலும் போனில் சொல்லுங்கள்... “ என்று அவன் அறைக்கு செல்ல மறுத்து விட்டாள்...

ஏனோ அவன் அந்த ஜெசியுடன் உல்லாசமாக இருந்த அந்த அறைக்குள் நுழைய அவளுக்கு பிடிக்கவில்லை...

அபியும் அவள் எழுந்து நடக்க முடியாமல் சொல்கிறாள் என்று புரிந்து கொண்டு போன் மூலமாகவே சில தகவல்களை கேட்டான்.. அவளும் அதை எல்லாம் ரெடி பண்ணி அவனுக்கு  மின்அஞ்சல் அனுப்பி வைத்தாள்... 

மதிய உணவு இடைவேளையின் பொழுது தீக்சா சரியாகவே சாப்பிடவில்லை...

உண்ண பிடிக்காமல் கொரித்து கொண்டிருந்தாள்...

எப்பொழுதும் ஏதாவது கதை பேசி கொண்டே சாப்பிடும் தீக்சா இன்று அமைதியாக அதுவும் எதையோ பறி கொடுத்த மாதிரி இருப்பதை கண்டு யோசித்தாள் புவனா....

பின் தீக்சாவின் கையை பற்றி

“தீக்சா.. என்னாச்சு?? ஏன் டல்லா இருக்க?? “ என்றாள் புவனா அக்கறையுடன்....

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள்

“ஒன்னும் இல்லையே... நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்... “ என்று சமாளித்து சிரித்தாள் தீக்சா....

“ம்ஹூம்.... இது நான் எப்பவும் பார்க்கும் தீக்சா இல்ல... சொல்லு என்ன பிரச்சனை??...

ஒரு வேளை இந்த குட்டியோட அப்பா உன் டெலிவரிக்கு வருவாரா  வரமாட்டாரானு கவலையா  இருக்கா??.. அதெல்லாம் ஒன்னும்  கவலைப் படாத தீக்சா...உன் டெலிவரிக்கு டான் னு வந்து நிற்பார் பார்...

அவர்தான் உன்னை கூட இருந்து பார்த்துக்க போறார்.... “ என்று சிரித்தாள் புவனா....

அதை கேட்டு

“ம்ச்.... “ என்று  பெருமூச்சு விட்டாள் தீக்சா.. அவள் முகத்தில் அதே பழைய வேதனையும் அதை தொடர்ந்து அந்த வெற்று பார்வையும் வந்து போனது...

புவனாவுக்குமே அவளை கண்டு வருத்தமாக இருந்தது...

தீக்சா மனதில் எதையோ வைத்து கொண்டு மறைக்கிறாள்.... என்று  புரிந்தது.. ஆனாலும் தன் எல்லையை தாண்டி அவள் சொந்த விசயத்தில் தலையிட தயக்கமாக இருந்தது புவனாவுக்கு...

தீக்சாவே மனம் திறந்து சொல்லாதப்போ நான் என்ன செய்வது என்று  அமைதியாகி விட்டாள்....

பின் தீக்சா புவனாவுக்காக வரவழைத்த புன்னகையுடன் ஏதோ பேசி கொண்டிருக்க, அவள் மனம் அங்கு இல்லை என்று தெளிவாக தெரிந்தது....

புவனாவும் மேலும் நோண்டாமல் அவளை டைவர்ட் பண்ண என்று சில ஜோக்குகளை சொல்லி அவளை சிரிக்க வைத்தாள்...

புவனாவின் எண்ணம் புரிந்து தீக்சாவும் அவளுக்காக சிரித்து வைத்தாள்...

பின் இரு பெண்களும் தங்கள் உணவை முடித்து தங்கள் இருக்கைக்கு திரும்பி வர, அங்கிருந்த அனைவரும் ஆர்வமாக எதையோ பார்த்து கொண்டிருந்தனர்....

அப்படி என்னத்தை  பார்க்கிறார்கள் என்று  அந்த  இரு பெண்களும் அவர்கள் பார்த்த திசையையே பார்த்தனர்.....

அங்கு ஒரு நவநாகரிக யுகதி ஒருத்தி அபிநந்தனை உரசியபடி நின்று கொண்டு அவனிடம் எதையோ கொஞ்சி பேசி கொண்டிருந்தாள்...

அவள் ஆடையோ படு கவர்ச்சியாக இருந்தது.. மேக்கப் ஐ உடல் முழுவதும் வாரி இறைத்திருந்தாள்...தோற்றத்தில் பணக்கார கலை தெரிந்தது..

அவள் மீது இருந்த அந்த வெளிநாட்டு பெர்ப்யூம் வாசம் தொலைவில் இருந்த அவர்களின் நாசியில் பட்டு அதன் வாசத்தில் முகத்தை சுழிக்க வைத்தது...

அவள் அவனிடம் ஏதோ கொஞ்சி குழைந்து கொண்டிருக்க, அபிநந்தன் அவளுக்கு எதையோ எடுத்து சொல்லி கொண்டிருந்தான்....

பின் இருவரும் கிளம்பி வெளியில் செல்ல, அவளோ அவனை உரசியபடி அவனை அணைத்து கொண்டே கொஞ்சியபடி நடந்தாள்...

புவனா அவள் யாரென்று  பக்கத்து இருக்கையில் இருந்த பெண்ணிடம் விசாரிக்க

“இவள் தான் நம்ம எம்டி யோட வுட்பி..பேர் மாயா...  இவளைத்தான் எம்டி கல்யாணம் பண்ணிக போறாராம்... நிச்சயம் எல்லாம் முடிஞ்சிருச்சாம்... இன்னும் இரண்டு மாசத்துல கல்யாணமாம்... “ என்று  அவளுக்கு கிடைத்த தகவலை புவனாவிடம் பகிர்ந்து கொண்டாள்....

அதை கேட்ட தீக்சா திடுக்கிட்டாள்... அவள் முகத்தில் ஒரு வேதனையும் கசப்பும் வந்து போனது...

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவள் அதே வெறித்த  பார்வையை செலுத்தி தன் இருக்கையில் அமர்ந்து தன் வேலையை தொடர்ந்தாள் தீக்சா...! 


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!