பூங்கதவே தாழ் திறவாய்-14
இதழ்-14
அன்று மாலை எல்லாரும் அலுவலகம் முடிந்து கிளம்பி சென்றிருக்க
தீக்சா மட்டும் அன்று முடிக்க வேண்டிய டிசைனை சரி பார்த்து கொண்டிருந்தாள்...
மாயாவுடன்
வெளியில் சென்றவன் அவளை அனுப்பி விட்டு மீண்டும் அலுவலகத்திற்கு திரும்பி
வந்திருந்தான் சில வேலைகள் பாக்கி இருக்க..
தீக்சா
மட்டும் தனியாக இருப்பதை கண்டு அவள் அருகில் சென்றான் அபிநந்தன்..
“என்ன
தீக்சா ??.. வீட்டுக்கு போகலை.. நேரம் ஆகுது பார்.. “ என்றான் கனிந்த குரலில்
“ரொம்பத்தான்
அக்கறை.. “ என்று முகத்தை நொடித்தாள் அவனை
ஏளனமாக பார்வை பார்த்தாள் தீக்சா..
“என்னாச்சு
தீக்சா... ஏன் ஒரு மாதிரி பேசற?? “ என்றான் புரியாமல்...
“லுக்
மிஸ்டர் அபிநந்தன்... நான் முடிக்க வேண்டிய வேலை பாக்கி இருக்கு.. அதை முடிச்சிட்டு நான் கிளம்பணும்..
நீங்கள் கொஞ்சம் என் வேலையை செய்ய விடறீங்களா??
வேற
எவளாவது ப்ரியா இருந்தால் அவளை உங்கள் அறைக்கு அழைத்து உங்கள் உல்லாசத்தை
தொடருங்கள்....“ என்றாள் ஏளனமாக உதட்டை வளைத்து அதே வெறித்த பார்வையுடன்...
இந்த
மாதிரி அவனை அவள் ஏளனமாக பார்த்ததில்லை... வெறித்து பார்த்திருக்கிறாள்.. கோபமாக
முறைத்திருக்கிறாள்... ஆனால் இப்படி அவனை கீழ் தரமாக பார்த்ததில்லை....
“தீக்சா...
என்ன உளற?? “ என்றான் கோபத்தில்....
“நான்
ஒன்னும் உளறல மிஸ்டர் அபிநந்தன்.. நீங்கள் காலையில் அந்த ஜெசியுடன் கட்டி அணைத்து உல்லாசமாக
இருந்ததை என் கண்ணால பார்த்து தொலைச்சிட்டேன்... “ என்றாள் அவளும் கோபமாக
“ஏய்...
நீ என்னத்த பார்த்த?? என்ன நடந்ததுனு புரியாமல் பேசாத... ஜெசி கால் தவறி கீழ விழ போனா... அவள்
விழாமல் இருக்கத்தான் தாங்கி பிடிச்சேன்.. அப்பதான் நீ பார்த்திருப்ப...” என்று
உருமினான்...
அபிநந்தன் சொன்ன மாதிரி ரொம்ப நாளாக திட்ட மிட்ட ஜெசி
அன்று தான் தன் நாடகத்தை ஆரம்பித்து
இருந்தாள்...
முதல்
கட்டமாக அபிநந்தனுக்கும் அவளுக்கும் தொடர்பு இருக்கிற மாதிரி வெளியில் காட்டி கொள்ள எண்ணி, இன்று தீக்சா அலுவலகம் வந்ததும் அவள் அவன் அறையை நோக்கி வருவது
தெரிந்து அவசரமாக அவன் அறைக்கு உள்ளே
சென்றவள் கால் இடறி விழுவதை போல சரிந்தாள்....
அவள்
எதிர்பார்த்த மாதிரி அபிநந்தன் அவளை தாங்கி பிடிக்க, அதை சாக்காக வைத்து கொண்டு அவனை
அணைத்தவாறு நின்று கொண்டாள் ஜெசி...
அதே
நேரம் தீக்சாவும் கதவை திறக்க அவள் பார்வையில் இருவரும் நெருங்கி அணைத்து நிற்பதை
போல இருந்தது....
தீக்சா
வெறுப்புடன் கதவை மூடிவிட்டு சென்றதை ஓரகண்ணால் கண்ட ஜெசி, உடனே பதறி
“சாரி
சார்.. தெரியாமல் விழுந்திட்டேன்... “ என்று சமாளித்தாள்...
அவனும்
“இட்ஸ்
ஓகே.. இனிமேல் கவனமா இரு... “ என்று எச்சரித்தான்...
பின்
அவள் வேண்டுமென்றே இன்றைய அஜென்டாவை விளக்கி அவளுக்கு சந்தேகம் என்று சில தேவையில்லாத விசயங்களையும் இழுத்து நேரத்தை
கடத்தினாள்....
பின்
சிறிது நேரம் ஆனதும் அவனிடம் மீண்டும் சாரி சொல்லி, கதவை திறந்து கொண்டு வெளி வருகையில் வேண்டும் என்றே தன்
கசங்கி இருந்த புடவையை சரி செய்வது போல ஆக்சன் பண்ணி கூடவே வெக்கத்தையும் வரவழைத்து
கொண்டு நமட்டு சிரிப்புடன் வெளியில் வந்தாள்...
அதை
கண்டு தீக்சா இன்னும் அருவெறுப்பாக முகம் சுழிக்க, ஜெசிக்கு குசியாக இருந்தது...
“எப்படியோ
தீக்சாவை நம்ப வச்சாச்சு.. இந்த மாதிரி இன்னும் சில முக்கிய நபர்களையும் நம்ப வைத்து
விட்டால் பின்னால் நான் போடும் ட்ராமாவிற்கு அது உதவியாக இருக்கும்.. “ என்று
உள்ளுக்குள் சிரித்து கொண்டாள்...
அவள்
திட்டத்தை அறியாத தீக்சா தன் கோபத்தை அபிநந்தன் மேல் காட்டி அவனை ஏளனமாக
பார்த்தாள்...
கடைசியாக
அபிநந்தன் சொன்ன விளக்கத்தை கேட்டவள்
“ஹா
ஹா ஹா.. அது எப்படி மிஸ்டர் அபிநந்தன்.. உலகத்துல் எந்த பொண்ணு கால் இடறி
விழுந்தாலும் காப்பாத்த பறந்து வந்திடறீங்க... அதுவும் எப்பவும் இடையோடு சேர்த்து
பிடிக்க...
இதுக்கு
எதுவும் ஸ்பெஷலா ட்ரெயினிங் எடுத்து கிட்டீங்களா?? “ என்றாள் மீண்டும் அதே ஏளன
பார்வையுடன்...
அதை
கேட்டு அவன் கை முஷ்டி இறுக,
“ஏய்...”
என்று அவளை அடிக்க கை ஓங்கவும் அந்த நேரம்
திடீரென்று அடிவயிற்றில் வலி எடுத்தது
அவளுக்கு...
அம்மா..
என்றவாறு அவள் அலற, அவனுக்கு திக் என்றது..
உடனே
ஓங்கிய கையை இறக்கி கொண்டவன் அவளை பார்க்க அவளோ வலியால் துடிக்க ஆரம்பித்து
இருந்தாள்....
அவள்
முகத்தில் வலியின் வேதனை தெரிய, அதை சமாளிக்க எட்டி அவன் சட்டையை பற்றி கொண்டாள் தீக்சா...
அதை
கண்டு பயந்து போனவன், என்ன செய்வது என்று புரியாமல்
முழித்தான் சில நொடிகள்....
அவள்
அருகில் இருக்கும் ஹாஸ்பிட்டல் பெயரை சொல்லி அங்க கூட்டிகிட்டு போங்க என்றாள்
தீக்சா...
அடுத்து
அவளை எப்படி கூட்டிகிட்டு போக என்று யோசித்தவன் அடுத்த நொடி எதுவும் யோசிக்காமல்
அவளை அப்படியே கைகளில் அள்ளி கொண்டான்...
அவன்
திடகாத்திரத்துக்கு அவளை எளிதாக தூக்கி கொள்ள முடிந்தது...
வேகமாக
லிப்ட் ஐ அடைந்து கீழ் தளத்திற்கு சென்றான்...
அவளை
கையில் வைத்து கொண்டே தன் கார் கீயை தூக்கி போட்டு தன் காரை எடுத்து வர சொல்லி, கார் வந்ததும் அவளை உள்ளே அமர வைத்து
வேகமாக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை விரட்டினான் அந்த மருத்துவமனைக்கு...
அவளோ
வலியில் துடித்து கொண்டிருந்தாள்... அதை கண்டவன் மனதை பிசைந்தது...
“ஒன்னும்
இல்ல தீக்சா... கொஞ்சம் பொருத்துக்கோ.... சீக்கிரம்
போய்டலாம்... “என்றவாறு ஒரு கையால் அவள் கையை பிடித்து ஆறுதல் அளித்தவாறு மறு கையால்
ஸ்டியரிங்கை சுத்தி கொண்டிருந்தான்...
காரை
ஓட்டி கொண்டே மருத்துவமனைக்கு போன் பண்ணி எமர்ஜென்சி என்று சொல்லி எல்லாம் தயாராக வைத்திருக்க சொன்னான்..
கார்
வேகமாக மருத்துவமனையை அடைந்ததும் அதை நிறுத்தியவன் வேகமாக கீழிறங்கி அவளை மீண்டும்
தன் கையால் தூக்கி அங்கு தயாராக இருந்த ஸ்ட்ரெக்சரில்
படுக்க வைக்க, அங்கிருந்த உதவியாளர்கள் உடனே உள்ளே எடுத்து சென்றனர்..
லேபர்
வார்ட்க்கு அவளை அழைத்து செல்லவும் அவனுக்கு
திக் திக் என்று இருந்தது...
சிறிது
நேரம் கழித்து வெளி வந்த நர்ஸ் தீக்சாவிற்கு நார்மல் டெலிவரி சிக்கலாக இருக்க சிசேரியன் பண்ணனும் என்று சொல்லி சில பார்ம்களை
அவனிடம் கொடுத்து கையெழுத்து இட சொன்னாள்....
அவனும்
அவள் நீட்டிய இடத்தில் எல்லாம் வேகமாக கையொப்பமிட்டு கொடுத்தான்...
“ப்ளீஸ்....
அவளை எப்படியாவது காப்பாத்திடுங்க... “ என்று
கையெடுத்து கும்பிட்டான் அந்த நர்சிடம்...
அவளும்
சிரித்து கொண்டே
உங்க
வொய்ப் க்கு அதெல்லாம் ஒன்னும் ஆகாது சார்...மைதிலி மேடம் இருக்காங்க.. எவ்வளவு
சிக்கலான கேஸ் எல்லாம் கூட வெற்றிகரமாக ஹேன்டில் பண்ணி இருக்காங்க..
நீங்க
டென்சன் இல்லாமல் இங்க உட்காருங்க... “ என்று
சொல்லி நகர்ந்தாள்..
அவன்
இருந்த பதட்டத்தில் தீக்சாவை அவன் மனைவி என்று சொல்லியதை கவனிக்கவில்லை...
அவளை
எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று துடித்தான் உள்ளுக்குள்..
“சே...
இவ பாட்டுக்கு வேலைக்கு வராமல் வீட்டிலயே இருந்திருந்தால் இவ்வளவு தொல்லை
இருந்திருக்காது...
எல்லாம்
அவனால்...அவ புருசனால்.. அவன் மட்டும் வந்து அவ கூடவே இருந்திருந்தால் இப்படி
சிக்கல் ல வந்து நிக்க வேண்டி இருக்காது... “ என்று அந்த முகம் தெரியாத அவள் கணவன் மீது சென்றது
அவன் கோபம்..
“அவன்
மட்டும் என் கையில கிடைச்சான்?? “ என்று பல்லை கடித்தான் அபி....
அதற்குள்
தீக்சாவின் அலைபேசியில் இருந்து அவளுடைய தாயாருக்கு தகவல் சொல்லி
“ஒன்னும்
பிரச்சனை இல்லை ஆன்ட்டி... நானே பார்த்து
கொள்கிறேன்.. நீங்கள் பொருமையாக வாருங்கள்..” என்று சொல்லி வைத்தான்..
அதற்குள்
மீண்டும் வெளி வந்த நர்ஸ் ஒரு பேப்பரை அவன் கையில் கொடுத்து அதில்
இருக்கும் பொருட்களை வாங்கி வர சொல்ல, அபியும் வேகமாக அந்த
மெடிக்கல் ஸ்டோர்க்கு ஓடினான்...
பின்
மீண்டும் ஏதோ கேட்க, ஒவ்வொன்னுக்கும் அந்த மெடிக்கல் ஸ்டோர்க்கும் லேபர் வார்ட்க்கும் அழைந்து
கொண்டிருந்தான்....
"கூடவே
அவளுக்கு எதுவும் ஆகி விடக்கூடாது.. நல்ல
படியாக அவள் பிழைத்து வர வேண்டும்.. "என்று
மனதுக்குள் பிரார்த்தித்து கொண்டே இருந்தான்...
நீண்ட நேர
போராட்டத்திற்கு பிறகு வீல் என்ற அலறல் கேட்டது...
அதை
கேட்டு சில நொடிகள் அவன் இதயம் நின்று விட்டது....
தன்னை
சமாளித்து கொள்ள சில நிமிடங்கள் ஆனது... பின் அந்த லேபர் வார்டின் கதவை பயத்துடன்
பார்த்து கொண்டிருக்க
அதற்குள்
அந்த நர்ஸ் ஒரு டவலில் சுற்றி பூகுவியலாக
இருந்த குழந்தையை கொண்டு வந்து அவன் கையில் கொடுத்து
"வாழ்த்துக்கள்
சார்... உங்களுக்கு பொண்ணு பொறந்திருக்கா... தாயும் சேயும் நலம்.. உங்க வொய்ப்
இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க..
இனிமேலாவது
டென்சன் இல்லாமல் பிரியா இருங்க... " என்று சொல்லி புன்னகைத்தவாறு உள்ளே சென்றாள்...
அபிநந்தனோ
இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உறைந்து
நின்றான்...
அவன்
கையில் இருந்த குட்டி தேவதையை பார்க்க, அவளோ அப்பொழுதுதான் தன் கண்களை சுறுக்கி இந்த உலகத்தை பார்க்கும் ஆவலில்
மெல்ல கண்ணை திறந்தாள்....
எதிரில்
அபிநந்தனின் முகத்தை கண்டதும் அழகாக புன்னகைத்த மாதிரி இருந்தது அவனுக்கு...
இவனை
பார்த்து நாக்கை மெல்ல சுழற்றினாள்....அதை பார்க்க பார்க்க இன்னும் ஆச்சர்யமாக இருந்தது
அவனுக்கு...
"இந்த
குட்டி தேவதைதான் தினமும் என்னை பார்த்து சிரித்தவள்...வயிற்றுக்குள்
இருக்கும்பொழுதே எனக்கு இனம் புரியாத உணர்வை கொடுத்தவள்..." என்று பூரித்து
போனான்...
அவன்
கையில் தவழும் அந்த ரோஜா மலரை காண காண திகட்டவில்லை அவனுக்கு..
அதுவும்
அவளின் செப்பு வாயும் செக்க சிவந்த பாதமும், சாட்டையாக நீண்டிருந்த குட்டி விரல்களும் கறுகறுவென்றிருந்த அடர்ந்த முடியையும் கண்டு
பரவசமானான்...
இதுவரை
இந்த மாதிரி குழந்தையை தூக்கியதில்லை.. ஆனால்
ஏனோ ரொம்ப நாள் பழகியதை போல இலாவகமாக அவளை தயக்கமின்றி தூக்கி கொள்ள முடிந்தது...
அந்த
குட்டி தேவதையை தன் நெஞ்சோடு அணைத்து கொண்டு நின்றான் கண் மூடி...
அப்பொழுது
தீக்சாவை மருத்துவம் செய்த டாக்டர் மைதிலி அவன் அருகில் வந்து குழந்தையை உற்று
பார்த்து
"உங்க
பொண்ணு அப்படியே உங்களையே உரிச்சு வச்சு பிறந்திருக்கா சார்...நீங்க பக்கத்துல
இல்லைனாலும் அப்படியே உங்கள மாதிரியே பிறந்திருக்கா பாருங்க...
ஆமா
ஏன் இத்தனை நாள் வரலை.. அட்லீஸ்ட் தீக்சா டெலிவரிக்காவது வந்து சேர்ந்தீங்களே... இனிமேலாவது
அவளை கஷ்ட படுத்தாமல் பார்த்துக்கங்க.. “என்று
சொல்லி சிரித்தவாறு நகர்ந்தார்...
அவர்
சொல்லியதை கேட்டதும் தான் தன் நிலை உணர்ந்தான் அபிநந்தன்....
இது
என் குழந்தை இல்லை என்ற உண்மையே அவனால் ஏற்று கொள்ள முடியவில்லை...
இவ்வளவு
நேரம் இது என் குழந்தை என்றல்லவா எண்ணியிருந்தேன்.. அதே போல தீக்சா படும் வேதனையை
கண்ட பொழுது என் மனைவி படும் வேதனை போலல்லவா இருந்தது..
அப்படி
என்றால் இதெல்லாம் வெறும் என் கற்பனைகளா??? இதுக்கெல்லாம் சொந்தக்காரன் வேற ஒருவனா??
" என்று நினைக்கும் பொழுதே நெஞ்சில்
பாரத்தை வைத்து அழுத்தியதை போல வலித்தது
அவனுக்கு......
ஆனால்
அடுத்த நொடியே கண்ணை சுறுக்கி கையையும் காலையும்
ஆட்டிய அந்த குட்டி தேவதையை கண்டதும் அவனுக்கு எல்லாம் மறந்து விட்டது...
அவள்
கையை மெல்ல தொட்டு பார்க்க அவன் உள்ளே பரவசமானது....
அப்பொழுதுதான்
மைதிலி சொன்னது நினைவு வர, அந்த தேவதையை உற்று பார்க்க அச்சு அசல் அவன் ஜாடையில் இருந்தாள்...
"இது
எப்படி??
" என்று யோசித்து கொண்டிருக்க , அப்பொழுது அந்த நர்ஸ் வந்து
“சார்...
உங்க வைப் கண் முழிச்சிட்டாங்க.. நார்மல் டெலிவரிதான்.. கடைசி நேரத்துல நார்மல்
டெலிவரி ஆய்டுச்சு....இப்ப நல்லா இருக்காங்க...அந்த அறையில இருக்காங்க... ” என்றாள் சிரித்தவாறு...
“ரொம்ப
தேங்க்ஷ் சிஸ்டர்.. நான் அவளை பார்க்கலாமா...” என்றான் ஆர்வமாக..
"ஸ்யூர்
சார்..போய் பாருங்க.. “ என்று
நகர்ந்தாள்..
கையில்
அந்த ரோஜா குவியலுடன் முகத்தில் பரவசத்துடன் ஒருவித கர்வத்துடனும் தீக்சா இருந்த
அறைக்கு உள்ளே வந்தான் அபிநந்தன்....
அவனையும்
அவனின் இலகிய நிலையும் முகத்தில் தெரிந்த பூரிப்பையும் அதோடு அவன் கையில் இருந்த குழந்தையையும் கண்டவளுக்கு பெரும்
நிம்மதி வந்து சேர்ந்தது....
மெல்ல
புன்னகைத்தாள் அவனை பார்த்து...
துவண்டு
கிடந்த அந்த கொடியாகியவளிடம் இருந்து வந்த மெல்லிய புன்னகை அந்த நிலையிலும் அவனுக்குள் ஊடுருவி உயிர் வரை
பாய்ந்து சென்று பரவியது...
அவன்
அருகில் வரவும்
“என்ன உங்களுக்கு இப்ப சந்தோசமா
நந்தன்?? நீங்க கேட்ட மாதிரியே பொண்ணை பெத்து
கொடுத்திட்டேன்.. ஹேப்பி?? “ என்று குறும்பாக சிரித்தவாறு கண்
சிமிட்டினாள் தீக்சா.....
அதை
கேட்டு அதிசயித்து நின்றான் அபிநந்தன்...
"இவளுக்கு
இப்படி எல்லாம் கூட பேச வருமா?? அதோடு இவள் என்ன சொல்கிறாள்?? " என்று புரியாமல் குழம்பி
போனவன் அவளை யோசனையாக பார்த்தான்...
அதற்குள்
அவன் முகத்தில் தெரிந்த குழப்ப ரேகைகளை கண்டு கொண்டவளுக்கு அப்பொழுது தான் தன் தவறு புரிந்தது....
உடனே
தன் முகத்தை கல்லாக்கி கொண்டு
“ரொம்ப
தேங்க்ஷ் மிஸ்டர் அபிநந்தன்... நீங்க இல்லைனா ரொம்ப கஷ்டமாயிருக்கும்...” என்றாள்
தீர்க்கமான குரலில் அதே வெற்று பார்வையுடன்....
அதை
கண்டவன் இன்னும் திகைத்து போனான் அவன்...
முன்பு
வேற குரலில் பேசியவள் நொடியில் இப்பொழுது
முற்றிலும் மாறிவிட்டாளே...
இதுதான்
அவன் பார்த்து பழகிய தீக்சா.. அப்ப முன்னால் பார்த்த முகம், குரல்??
அபிக்கும்
இன்னும் குழப்பம் அதிகமானது...
"ஒருவேளை
அது என்னுடைய கற்பனையோ?? இல்லையே அவள் சொன்ன வார்த்தைகள் இன்னும் செவியில் ஒலித்து
கொண்டிருக்கிறதே.. ஆனால் ஏன் அப்படி சொன்னாள்.. பின் மாற்றி விட்டாள் ?? " என்று குழம்பியவன் தன்
குழப்பத்தை மறைத்து கொண்டு அவள் சொன்ன நன்றிக்கு பதிலாக
“Its my
pleasure.. தீக்சா... எப்படியோ நல்ல படியா டெலிவரி முடிஞ்சு
வந்திட்டியே அதுவே போதும்... “ என்று புன்னகைத்தான்....
ஏனோ
அவன் புன்னகை அவளுக்கு இன்னும் வெறுப்பூட்டுவதாக இருந்தது..
ஏதோ
யோசித்த அபி
"
தீக்சா..,நான் முதல்ல அறைக்கு உள்ளே வந்த பொழுது ஏதாவது சொன்னியா?" என்றான் ஆர்வமாக...
அதற்குள்
தன்னை சமாளித்து கொண்டவள்
“இல்லை
.." என தலையை மட்டும் அசைத்தாள்..
“ஹ்ம்ம்ம்
இல்லையே நீ என்னவோ சொன்ன மாதிரி
இருந்தது... “ என்று யோசித்து கொண்டிருந்தான்..
அப்பொழுது
நர்ஸ் உள்ளே வந்து
"சார்...
நீங்க கொஞ்சம் வெளில இருங்க.. குழந்தைக்கு பால் ஊட்ட பழக்கணும்...” என்றாள்..
ஏனோ
மனமே இல்லாமல் அந்த குழந்தையை அந்த நர்சிடம் கொடுத்தவன் மீண்டும் ஒரு முறை ஆசையாக பார்த்து பின்
தீக்சாவையும் பார்த்து விட்டு வெளியில் வந்தான்...
பின்
அங்கிருந்த கேன்டின் சென்று ஸ்ட்ராங்கான ஒரு காபியை குடிக்க, அதுவரை இருந்த களைப்பு மறைந்து புத்துணர்ச்சி
வந்தது....
"சே..
எப்படி பயமுறுத்திட்டா கொஞ்ச நேரத்துல....உயிர் போய் உயிர் வந்த மாதிரி இருக்கு...
நல்ல வேளை... " என்று அந்த கடவுளுக்கு நன்றி சொன்னான் மனதுக்குள்...
பின்
டாக்டர் வாங்கி வர சொல்லி இருந்த சில மருந்துகளை வாங்கி கொண்டு, அறைக்கு திரும்பி வந்தான்....
அறைக்குள்
வரவும்
"அடடா
.. வாங்க மாப்பிள்ளை... இப்பயாவது
வரணும்னு தோணிச்சே.. எங்க தீக்சா டெலிவரிக்கு கூட வராமல் போய்டுவீங்கனு நினைச்சு கவலை
பட்டுகிட்டிருந்தேன்...
இப்பதான்
நர்ஸ் சொன்னா உங்க மாப்பிள்ளை தான் இங்க
கூட்டி வந்திருந்தார் னு ...
அதை
கேட்ட பின்னாடி தான் போன உயிர் திரும்பி வந்தது... “ என்றவாறு பரிமளம் படபட வென்று
சந்தோசத்தில் பேசி கொண்டிருக்க, தலையை குனிந்தவாறு தன் ஷூவை கழட்டி கொண்டிருந்த அபிநந்தன் ஒன்றும்
புரியாமல் திகைத்து போனான்....
தலையை
நிமிர்ந்து அவரை பார்க்க, அதற்குள் பரிமளம்
தன் கண்ணை சுறுக்கி அவனை பார்த்தார்...
அதற்குள்
தீக்சா
“மா..
இவர் இல்லை உங்க மாப்பிள்ளை... இவர் எங்க எம்டி.. அன்னைக்கு வீட்டுக்கு
வந்திருந்தாரே அவர்...
இவர்தான்
என்னை ஹாஸ்பிட்டல் கொண்டு வந்து சேர்த்தார்....”
என்றாள் அதே வெறித்த பார்வையுடன்...
அதை
கேட்ட உடனே பரிமளத்தின் முகம் வாடிப் போனது...
அன்றும்
இதே மாதிரிதான்... தன் மறுமகனை எதிர்பார்த்து இருக்க இவன் வந்து நின்றான்.. இப்பொழுதும்
அதே மாதிரிதான் என்க அவர் முகம் வாடிவிட்டது....
அவரின்
ஏக்கத்தையும் தீக்சாவின் நிலையையும் கண்டவனுக்கு அந்த முகம் தெரியாதவன் மீது
கோபமும் பொறாமையும் ஒன்றாக சேர்ந்து வந்தது...
"இப்படி
பட்ட ஒரு குடும்பத்தை விட்டு காசுக்காக ஏன் தான் இப்படி வேலை தேடி வெளிநாடு போகிறார்களோ ?? " என்று கோபமாக இருந்தது அவனுக்கு...
"சாரி
தம்பி... தப்பா சொல்லிட்டேன்..." என்றார் பரிமாளம் வருத்ததுடன்..
"இருக்கட்டும்
ஆன்ட்டி.. இந்தாங்க இதெல்லாம் டாக்டர் வாங்கி வர சொன்னது.. “என்று அந்த கவரை கொடுத்தான்...
அவனுக்கு
நன்றி சொல்லி அதை வாங்கி கொண்டார் பரிமளம்..
தீக்சா
அவனை பார்த்து
"ஓகே
மிஸ்டர் அபிநந்தன்... அம்மா வந்திட்டாங்க.. இனிமேல் அவங்க பார்த்துப்பாங்க...
நீங்க கிளம்புங்க... உங்க உதவிக்கு ரொம்ப நன்றி... “ என்று கை குவித்தாள்.....
அவனை
விரட்டுகிறாள் என்று புரிந்தது...
அவனுக்கு அந்த குழந்தையை விட்டு பிரிந்து செல்ல மனம் வரவில்லை... பால் குடித்த
பின் தொட்டிலில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள்
அந்த குட்டி தேவதை...
அவள்
தலையை மெல்ல வருடியவன் தீக்சாவிடம்
திரும்பி
"டேக்
கேர் தீக்சா... ஏதாவது உதவி வேணும்னா தயங்காமல் கேள்...” என்றான்..
அவளும் வெறித்த பார்வையுடன் தலை அசைக்க, பின் விடைபெற்று கிளம்பி சென்றான் அபிநந்தன்....!
Comments
Post a Comment