பூங்கதவே தாழ் திறவாய்-15
இதழ்-15
மருத்துவமனையில் இருந்து மனமே இல்லாமல் கிளம்பி தன்
வீட்டை அடைந்தான் அபிநந்தன்... இரவு உணவின் பொழுதும் ஏதோ யோசனையாகவே முடித்தான்...
தன்
அறைக்கு வந்து கட்டிலில் படுத்தவனுக்கு இத்தனை நாள் தீக்சா வயிற்றில் இருந்து
சிரித்த அந்த குட்டி இப்பொழுது நேராகவே வந்துவிட அவளின் பஞ்சு போன்ற மென்மையான
பாதமும் குட்டி கைகளும் அவன் கண் முன்னே வந்து இம்சித்தது....
“அந்த குட்டியை பார்த்த உடன் அது என் குழந்தையை போல பீல் ஆவது
ஏன்?? அதோடு
எப்படி அப்படியே என்னை மாதிரி இருக்கிறாள்?? எனக்கும் இந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம்?? “ என்று
யோசித்தவாறு உறங்கிவிட்டான்...
மறுநாள் காலை சீக்கிரம் எழுந்து தன் காலை ஓட்டத்தை கூட
தவிர்த்து அவசரமாக கிளம்பியவன் கார் நேராக அந்த மருத்துவமனைக்கு சென்று நின்றது....
காரில்
இருந்து இறங்கியவன் துள்ளலுடன் படிகளில் தாவி ஏறினான் ...
தீக்சாவின்
அறையை அடைந்து கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றவன் அங்கு கண்ட காட்சியை கண்டு திகைத்து
நின்றான்....
தீக்சா
அந்த குட்டி இளவரசியை நெஞ்சோடு அணைத்து பால் ஊட்டி கொண்டிருந்தாள்....அதன் தலையை
வருடியவாறு ஏதோ மெல்லிய குரலில் கதை சொல்லி கொண்டிருந்தாள்...
அவள்
முகத்தில் இருந்த இலகிய தாய்மையின் நிலையை கண்டவனுக்கு அந்த காட்சி அப்படியே
மனதில் பதிந்து போனது...அவளையே ரசித்து பார்த்து கொண்டிருந்தான்...
எதேச்சையாக
இந்த பக்கம் திரும்பியவள் அபிநந்தன் அவளையே ரசித்து பார்த்து கொண்டிருப்பது தெரிய, உடனே அருகில் இருந்த
போர்வையை இழுத்து தன் மேல் மூடி கொண்டாள்...
அப்பொழுதுதான்
அவனுக்குமே தன் தவறு உறைத்தது.... அவள் அருகில் சென்றான்..
“அறைக்குள்ள
வரும் பொழுது கதைவை தட்டிட்டு வரணும்னு
மேனர்ஸ் கூட தெரியலை.. “ என்று சிடுசிடுத்தாள்....
“சாரி..
தீக்சா... நான் எதுவும் தப்பா பார்க்கலை... உன் இந்த தாய்மையுடனான முகம்
வித்தியாசமா இருந்தது.. அதான் என்னையும்
மறந்து ரசிச்சிட்டு நின்னுட்டேன்... “ என்று உண்மையை சொன்னான்....
“ஹ்ம்ம்
சரி.. இப்ப எதுக்கு வந்திருக்கீங்க?? “ என்றாள் அதே
வெறித்த பார்வையுடன்...
“பேபி
எப்படி இருக்கானு பார்க்க வந்தேன்.. “ என்றான் தயங்கியவாறு...
“லுக்
மிஸ்டர் அபிநந்தன்... என்னை ஒரு ஆபத்துல காப்பாற்றி இங்க கொண்டு வந்து சேர்த்திங்க... அந்த அளவில் உதவி செஞ்சதுக்கு நன்றி.. அதையே சாக்கா
வச்சுகிட்டு அடிக்கடி இங்க வராதிங்க... “ என்று எரிந்து விழுந்தாள்....
“ஹ்ஹ்ம்ம்ம்
நீ சொல்றது புரியுது தீக்சா... ஆனால் ஏனோ இந்த
குட்டி என்னை கட்டி இழுக்கிறா. உன் வயித்துல இருந்த பொழுதும் அதன் பிறகு அவளை கையில தூக்கின பொழுதும் என்னை அறியாமலயே
எனக்குள் ஒரு பரவசம்.. ஆனால் அது ஏன் னுதான் தெரியல....
ஒரு
வேளை போன ஜென்மத்து தொடர்போ....
ஆனால்
இவளை பார்க்கும் பொழுது I’m
completely lost… (உன்னை பார்க்கும் பொழுதும் தான்... “ என்பதை மட்டும்
மனதுக்குள் சொல்லி கொண்டான்....)
“லுக்
மிஸ்டர் அபிநந்தன்... சின்ன குழந்தையை பார்க்கிறப்போ எல்லோருக்கும் வரும் அதே உணர்வு
தான் உங்களுக்கு வருது.. அதுக்காக அதை சாக்கா வச்சு கிட்டு அடிக்கடி இங்க
வராதிங்க... அது தப்பா போகும்..” என்றாள் அதே சிடுசிடு குரலில்..
அவள்
என்ன சொல்ல வருகிறாள் என்று புரிந்தது அவனுக்கு...
“ஓகே
தீக்சா....இனிமேல் வரலை.. சரி உன் ஹஸ்பன்ட்
கிட்ட சொல்லிட்டியா?? எப்ப வர்ரார் ??.. அவர் கான்டாக்ட் நம்பர் இருந்தா கொடேன்... நாலு வாங்கு வாங்கறேன்..
இப்படி உன்னை தவிக்க விட்டுட்டு போய்ட்டான்
னு ” என்றான் இறுகிய முகத்துடன்...
அவன்
கோபம் கண்டு ஆச்சர்யபட்டவள் உடனேயே ஒரு வெறித்த பார்வையை அவன் மீது செலுத்தினாள் எதுவும்
சொல்லாமல்..
“சொல்லு
தீக்சா... “ என்று மீண்டும் கேட்க
“மிஸ்டர்
அபிநந்தன்... நான் ஏற்கனவே சொன்னது தான்.. என் பெர்சனல் விசயத்தை யார்கிட்டயும்
சேர் பண்ணிக்க மாட்டேன்.. உங்களையும்
சேர்த்துத்தான்... “ என்று முறைத்தாள்...
“ஆகா
.. அந்த பழைய அந்நியன் இல்லை லேடி அந்நியன் திரும்பவும் வந்திட்டா.. இனிமேல் இவ கிட்ட பேசி
ஒன்னும் புரயோஜனமில்லை.. “என்று எண்ணி
கொண்டிருக்க பரிமளம் உள்ளே வந்தார்...
“வாங்க
தம்பி.. “என்று வரவேற்று தீக்சாவிற்று
காலையில் கொடுக்க உணவு வாங்கி வந்தேன்.. “
என்றார்...
“அப்புறம்
தீக்சா இன்னைக்கு மாலையிலயே டிஸ்சார்ஜ் ஆகிடலாம்னு சொல்லிட்டாங்க.... நீ பணத்தையெல்லாம்
கட்டிட்டதா சொன்னாங்க.. அப்ப மாலையில் கிளம்பிடலாம்.. “ என்றார்....
அதை
கேட்டு யோசித்த தீக்சா
அபியை
பார்த்து அடிக்குரலில்
“நீங்க
பணம் கட்டினிங்களா?? என்றாள் தன் அன்னைக்கு கேட்காதவாறு...
“வந்து...
ஆமாம்.... “ என்று தலையை ஆட்டினான் அபி
அதற்குள்
பரிமளம் வெளியில் சென்றிருக்க
“என்ன நினைச்சு கிட்டிருக்கீங்க உங்க மனசுல ??..
நீங்க யார் சார் எனக்கு பணம் கட்ட??.. அதே மாதிர் பார்ம் ல
என் ஹஸ்பன்ட் னு போட்டிருக்கீங்க..
இங்க
இருக்கிறவங்க எல்லாம் உங்களை என் ஹஸ்பன்ட் னு சொல்றாங்க.... இதெல்லாம் தேவையா?? என்னை இங்க கொண்டு
வந்து சேர்த்திங்க.. அதோட விட வேண்டியதுதான..
இன்னும்
ஏன் இப்படி தொல்லை கொடுக்கறீங்க.. உங்களை யார் அப்படி சைன் பண்ண சொன்னா?? “ என்று எரிந்து விழுந்தாள்...
“சாரி
தீக்சா. அவசரத்துல என்ன பில் பண்றேனு தெரியாம பண்ணிட்டேன்.. “ என்றான் தலையை குனிந்தவாறு...
“என்ன
தெரியாமா?? பெரிய பிசினஸ் மேன் னு பேர்... தெரியாம இப்படித்தான் சை பண்ணுவீங்களா?? “ என்று இன்னும் ஏதோ திட்ட வர
அந்த சத்தத்தில் அந்த குட்டி அழ ஆரம்பித்தாள்..
அதை
கண்டு தன் சண்டையை நிறுத்திக் கொண்டவள்
“இல்லடா..
ஒன்னும் இல்லடா குட்டி...... மம்மி பேட்
மம்மி இல்ல கொஞ்சம் குட் மம்மிதான்.. “என்று தன் குழந்தையை மார்போடு அணைத்து
கொண்டு சிரித்தாள் அதன் தலையை வாஞ்சையுடன்
தடவியவாறு....
அந்த
குட்டியும் தன் அழுகையை அடக்கி கொள்ள, பின் அந்த குழந்தையை எடுத்து அதன் செப்பு வாயை அருகில் இருந்த துணியால் துடைத்தாள்..
அவளும்
நாக்கை சுழற்றியவாறு கண்ணை உருட்ட, அருகில் நின்று கொண்டிருந்த அபியை கண்டு கொண்டதும் கை காலை அசைத்தாள் அவனை கண்ட சந்தோசத்தில்....
அதை
கண்ட அபிநந்தனுக்கு அதுவரை தீக்சா தன்னை
திட்டியது எல்லாம் மறந்து போனது... ஆசையாக அந்த குழந்தையை பார்த்தவன்
“தீக்சா...
இந்த குட்டியை என்கிட்ட கொஞ்சம் கொடேன்...??” என்றான் ஆர்வமாக..
அவளும்
மறுத்து சொல்ல எண்ணி, பின் தன் குழந்தையின் மகிழ்ச்சியை கண்டதும் அவனை முறைத்தவாறே அவனிடம்
கொடுத்தாள்..
அதை
வாங்கியவன் தன் நெஞ்சோடு அணைத்து கொண்டான்..
அதன்
பால் வாசம் மிகுந்த அந்த குட்டி கன்னத்தில் முத்தமிட்டான்.....
சிறிது
நேரம் கழித்து
“தீக்சா...
இந்த இளவரசியை எனக்கு கொடுத்திடேன்... நான்
நல்லபடியா பார்த்துக்கறேன்... எனக்கு ஏனோ இவளை விட்டு பிரிய மனமே இல்லை... “ என்றான் ஏக்கமாக
அதை
கேட்டு வெறித்த பார்வையும் பின் ஒரு கோப பார்வையும் அவன் மீது வீசினாள்...
“உங்களுக்கு
குழந்தை வேணும்னா உங்களுக்காக காத்துகிட்டிருக்கிற மாயா வை கல்யாணம்
பண்ணிக்கோங்க.. அவளும் இதைவிட அழகான குழந்தையா பெத்து தருவா...
அப்படி
இல்லைனாலும் அதான் ஜெசி இருக்காளே... “ என்று ஏளனமாக உதட்டை வளைத்து ஏதோ சொல்ல வர
“Will you
please shut up..” என்று கத்தினான் அபி....
அதை
கண்டு அந்த குட்டி அவன் முகம் பார்க்க,
பின்
தன் குரலை தணித்து கொண்டு
“அன்னைக்கு
நீ பார்த்தது எதுவும் நிஜமில்லை.. அந்த ஜெசி தான் வந்து கீழ விழறபோ பேலன்ஸ் பண்றதுக்காக என்னை கட்டிபிடிச்சா...ஒரு அறை விட்டு
அவளுக்கு வார்ன் பண்ணி அனுப்பி வச்சிட்டேன்..
மாயாவும்
எங்கப்பா அம்மா பார்த்து நிச்சயம் பண்ணினவ தான்....எனக்கு அவ மேல ஒரு விருப்பமும்
இல்லை...“ என்று விளக்கம் அளித்தான்..
அவனுக்கே
ஆச்சர்யமாக இருந்தது.. இவ கிட்ட எதுக்கு நான் என்னை பற்றி விளக்கி கொண்டிருக்கிறேன் என்று...
“நீங்க
எப்படியோ போய் தொலைங்க... என் குழந்தையை விட்டுடுங்க.. இனிமேல் இங்க வராதிங்க..
அப்புறம் நீங்க கட்டின பணத்தை மாதா மாதம் என் சம்பளத்துல இருந்து புடிச்சுக்கங்க...
இலலையா
நான் திருப்பி கொடுத்திடறேன்... இப்ப குழந்தையை கொடுத்திட்டு கிளம்புங்க... “
என்றாள் முகத்தை திருப்பி கொண்டு...
“இதுக்கு
மேல் இருக்க முடியாது... கழுத்தை புடிச்சு தள்ளினாலும் தள்ளுவா.. இராட்சசி.... “ என்று உள்ளுக்குள் அவளை திட்டி கொண்டே அந்த
குட்டியின் நெற்றியில் முத்தமிட்டு அவளிடம் கொடுத்தான்...
மீண்டும்
ஒரு முறை அந்த குட்டியை ஏக்கமாக பார்த்து
விட்டு அலுவலகம் கிளம்பி சென்றான்...
கார் ஓட்டும்பொழுதும் அந்த குழந்தையின் ஞாபகமே.. அவன்
செல்போனில் எடுத்து வைத்திருந்த அந்த குட்டியின் போட்டோ வை எடுத்து பார்க்க
பார்க்கும் பொழுதே சிலிர்த்தது அவனுக்கு...
அதே
மன நிலையுடன் அலுவலகம் சென்றான்.. இன்று ஹெட் ஆபிஸ்க்கு சென்று அவன் கையெழுத்திட வேண்டிய சில பைல்களை மேலோட்டமாக
புரட்டினான்....
எப்பவும்
ஆழ்ந்து படித்து கையெழுத்து இடுபவன் இன்று
ஏனோ யோசனையுடன் இருக்க, மேலோட்டமாக பார்த்து
கையெழுத்திட்டான்..
அவனுடைய
PA ஆச்சர்யமாக
பார்த்தாள்.. இதுவரை இந்த மாதிரி இருந்ததில்லை..
எப்பவும்
ஒரு துள்ளளுடன் சுறுசுறுப்புடன் இருப்பவன் இன்று டல்லடித்து இருக்க
“சார்..
எனி ப்ராப்ளம்?? ரொம்ப டல்லா இருக்கீங்களே..”என்றாள் அக்கறையாக
“மைன்ட்
யுவர் பிசினஸ் ... என்னை பத்தி ஆராய்ச்சி பண்ற வேலை வேண்டாம்... “என்று எரிந்து விழுந்தான்...
உடனே
அந்த பெண்ணின் முகம் வாடிவிட்டது... வேகமாக வெளியேறி சென்றாள்
அவனுக்கே
கஷ்டமாக இருந்தது.. தான் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று..
“சே...
எல்லாம் அந்த தீக்சாவால் வந்தது... அவளும் அவள் குழந்தையும் என் வாழ்க்கையையே
இப்படி ஆட்டி வைக்கிறாங்க...
“நான்
ஏன் அவங்க மேல இப்படி பைத்தியமா திரியறேன்.. அதுவும் எனக்கு சம்பந்தமே இல்லாத அந்த
குழந்தை மீது ஏன் எனக்கு இப்படி ஒரு கண்மூடித்தனமான பாசம்... “” என்று தலையை பிய்த்து கொண்டான்...
அப்பொழுது
கதைவை தட்டிவிட்டு
“ஹாய்
டா.. “ என்றவாறு உள்ளே வந்தான் அவன் நண்பன் ஆனந்த்....
அவனை
கண்டதும் புன்னகைத்து எழுந்து சென்று அவனை கட்டி கொண்டான் அபி...
“வாடா
ஆனந்த்... எப்படி இருக்க?? என்ன லண்டன் லயே செட்டில்
ஆய்ட்டியா?? ஆளையே பார்க்க முடியலை?? “
என்றான் அபி தன் கவலையை மறைத்து கொண்டு..
“ஹா
ஹா ஹா... என்னதான் லண்டன் போனாலும் நம்ம ஊர் போல வருமா?? ஆமா நீ எப்படி
இருக்க மச்சான்?? பயங்கர பிசினு கேள்வி பட்டேன்..“ என்று அவனை
பற்றி விசாரித்தான்...
பின்
இருவரும் சிறிது நேரம் தங்கள் தொழிலை
பற்றி பேசி கொண்டிந்தனர்..
ஆனந்த்
எதேச்சையாக அந்த டேபிலின் மீதிருந்த அபி குரூப் ஆப் கம்பெனிஸ் உடைய அந்த வருட ஆண்டு மலரை புரட்டினான்..
ஒரு
புகைபடத்தில் அவன் பார்வை பட்டு நின்றது...
“ஹே...
மச்சான்.. தீக்சா உன் ஆபிஸ்க்கே வந்திட்டாளா?? “ என்றான் ஆர்வமாக...
தீக்சா
என்றதும் விழித்துக் கொண்டான் அபி..
“நீ
யாரை டா சொல்ற?? “ என்று மீண்டும் கேட்டான் அபி..
அந்த
மேகசின் ல் அபி டிசைன்ஸ் அலுவலகத்தின் முக்கிய ஊழியர்கள் ஒன்றாக நின்று எடுத்து
கொண்ட புகைப்படம் இருந்தது... அதில் இருந்த தீக்சாவை சுட்டி காட்டி இவதான் என்றான் ஆனந்த்...
“ஹே...
இவளை தெரியுமா?? “ என்றான் ஆர்வமாக
அபி
“தெரியுமாவா?? ஏன்டா மச்சான்... நாமெல்லாம்
தான் டா ஒன்னா சுத்தினோமே.. எங்களை விட நீங்க இரண்டு பேரும் தான் ரொம்ப குளோசா
இருந்தீங்களே..” என்றான் ஆனந்த் ஆச்சர்யமாக.
“என்னது?? நாங்க இரண்டு பேரும் குளோசா இருந்தோமா?? என்னடா சொல்ற?? கொஞ்சம் புரியற மாதிரி சொல்லித் தொலை..”என்றான்
அபி டென்சனுடன்..
“என்னடா
மச்சான் ஆச்சு உனக்கு?? நாமெல்லம் ஒரு கான்பிரன்ஸ்க்காக டெல்லி போயிருந்தோம் இல்ல.. அங்கதான்
தீக்சாவை பார்த்தது... உடனே அவளும் நம்ம கேங்க் உடன் ஜாயின் பண்ணிகிட்டா...
எவ்வளவு ஜாலியான பொண்ணு தெரியுமா??...
அந்த
கான்ப்ரன்ஸ் ஒன் வீக் ஓடினதே தெரியலை.. எப்பவும் கலகலனு இருக்கும் நம்ம கேங்...
எங்களை விட நீதான் அவ கூட ரொம்ப ஒட்டிகிட்ட..
ஒருநாள்
கான்ப்ரன்ஸ் கட் பண்ணிட்டு கூட இரண்டு பேரும் ஊர் சுத்தினீங்களே?? ஏன்டா எதுவும்
ஞாபகம் இல்லையா?? “ என்றான் ஆனந்த் யோசனையாக
“இல்லையே
டா....எனக்கு அந்த கான்ப்ரன்ஸ்.. தீக்சா யாருமே ஞாபகம் இல்லையே.. நான் தீக்சாவை என்
ஆபிஸ் ல தான் முதல் முதலா பார்த்தேன்.. “ என்றான் குழப்பமாக...பின் ஆனந்த் ஐ
பார்த்து
“டேய்..
நீ ஏதாவது போட்டோ வச்சிருக்கியா?? “ என்றான் பரபரப்பாக
“ம்ச்
இல்லடா... எல்லாம் உன்னோட ஐ-போன்லதான் எடுத்தோம்...
உன் கிட்ட இருக்கும் பார்.. “ என்றான் ஆனந்த்..
“ஐ
போனா ??..
அது கூட நினைவில் இல்லையே...” என்றான் அபி
“ஆமா..
தீக்சா இப்ப எப்படி இருக்கா??.. நல்லா இருக்காளா? “ என்றான் ஆனந்த்
“ஹ்ம்ம்
பைன் டா.. கல்யாணம் ஆகிடுச்சு.. குழந்தை கூட இருக்கு.. “ என்றான்..
“வாவ்..
கன்கிராட்ஸ் டா மச்சான்... பாரேன்.. நீ
அப்பா ஆன விசயத்தை எங்ககிட்ட கூட
சொல்லலை.. “என்று அபியின் கையை பிடித்து
குலுக்கினான் ஆனந்த்....
“டேய்..
நீ என்ன சொல்ற??.. கல்யாணம் ஆனது தீக்சாவிற்கு.. எனக்கு இல்ல..” என்றான் வெறித்த பார்வையுடன்...
“வாட்??” என்று
அதிர்ந்தான் ஆனந்த்..
“
ஆமான்டா.. அவ புருசன் துபாய் ல இருக்கானாம்.. ஆனா அவ டெலிவரிக்கு கூட வராம என்ன தான்
சம்பாதிக்கிறானோ?? .. “ என்று அவனை திட்டினான் அபி..
அதை
கேட்டு குழம்பி போனான் ஆனந்த்... மனதுக்குள்
எதையோ யோசித்தவன்
“இல்லடா
மச்சான்.. கண்டிப்பா அப்படி எதுவும் இருக்காது.. “ என்றான் உறுதியாக..
“என்னடா
சொல்ற?? “ என்றான் அபி
“ஆமான்
டா மச்சான்.... தீக்சாவும் நீயும் சின்சியரா லவ் பண்ணிங்க... “ என்றான்
“வாட்...
லவ் ஆ??
“ என்று அதிர்ந்தான் அபி
“ஆமான்
டா.. நீங்க இரண்டு பேருமே ஒருத்தருக் கொருத்தர் லவ் பண்ணீங்க.. ஆனா எங்ககிட்ட
சொல்லலை...நாங்களும் கண்டுக்காம சைலன்ட் ஆ வாட்ச் பண்ணிகிட்டிருந்தோம்..
உன்னை
பார்க்கும் பொழுதெல்லாம் தீக்சா கண்ணுல அப்படி ஒரு ஒளி தெரியும்.. அதே மாதிரி தான் நீயும்... அவளை பார்க்கிறப்போ அப்படியே உன் முகம்
டாலடிக்கும்...
அப்படி
பட்ட உன்னை விட்டுட்டு வேற ஒருத்தனை அதுவும் இவ்வளவு சீக்கிரத்தில கல்யாணம்
பண்ணியிருக்க சான்சே இல்லை.. ஏதோ தப்பாயிருக்கு... நீ சரியா விசாரிச்சு பார்....
கண்டிப்பா
நீங்க இரண்டு பேரும் தான் கல்யாணம் பண்ணிக்க போறீங்கனு நினைச்சோம்... எதுக்கும்
நல்லா விசாரிச்சு பார்.... தீக்சா கண்டிப்பா உன்னை மறந்து வேற ஒருவனை கல்யாணம்
பண்ணியிருக்க வாய்ப்பே இல்லை...
சரி
டா .. நான் வர்ரேன்... வேற ஒரு பிரண்ட் ஐ பார்க்கணும்... டேக் கேர் டா.. தீக்சாவை
கேட்டதா சொல்...”
“டேய்..
எனக்கு அந்த கான்ப்ரன்ஸ் பத்தின டீடெய்ல்ஸ் கொடுக்கறியா??”
“ஹ்ம்ம்
கண்டிப்பாடா.. நான் டீடெய்ல உனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பறேன்.. நீ எதுக்கும் நல்லா
விசாரி..
கண்டிப்ப
தீக்சா உன்னை மறந்து வேற ஒருத்தனை மணந்திருக்க முடியாது.... “ என்று சொல்லி விடை
பெற்று சென்றான் ஆனந்த்..
ஏற்கனவே
குழம்பி கொண்டிருந்தவனுக்கு அவன் நண்பன் மேலும் குழப்பி விட்டிருந்தான்....
பின்
தீக்சா வை அவன் சந்தித்தலில் இருந்து எல்லா நிகழ்ச்சிகளையும் திரும்பி ரிவைண்ட்
பண்ணி பார்த்தான் அபி.. அவனை முதலில் கண்டதும்
அவள் முகத்தில் தெரிந்த அந்த ஒளி ??.. இதுதான் ஆனந்த் சொன்னானோ??
ஆனால்
அடுத்த நொடியே மாறிய வெறித்த பார்வை?? ஒரு வேளை அந்த பார்வை, தான் அவளை ஏமாற்றி விட்டதை போலல்லவா இருந்தது...
ஒவ்வொரு
முறை அவனை பார்க்கும் பொழுதும் அவளின்
பார்வை எதையோ சொல்ல துடித்தது இப்பொழுது புரிந்தது..
ஆனால் அவனால் தான் அதை அப்பொழுது புரிந்து கொள்ள முடியவில்லை...
பரிமளம்
சொன்னதில் இருந்து தீக்சாவின் கணவன் இதுவரை
வந்ததில்லை என்ற செய்தியும் யோசனையை கூட்டியது..
துபாய்
ஒன்றும் தொலைவில் இருக்கும் நாடு அல்ல.. 3.30 மணி நேரத்தில் சென்னை வந்து விடலாம்..
அப்படி இருக்க தன் மனைவியை பார்க்க அவன் ஒரு முறை கூட வரவில்லை என்றால் ?? .. அவள் கணவன் என்பதே
கற்பனையோ??
அப்படி
என்றால்....?????
அவள்
டெலிவரி முடிந்ததும் அவனை பார்த்து அவள் சொன்ன
வார்த்தை மீண்டும் ஞாபகம் வந்தது....
என்ன
உங்களுக்கு இப்ப சந்தோசமா நந்தன்?? நீங்க கேட்ட
மாதிரியே பொண்ணை பெத்து கொடுத்திட்டேன்.. ஹேப்பி?? என்று குறும்பாக சிரித்தவாறு கண் சிமிட்டினாளே தீக்சா..
நந்தன்.....
இதுதான் அவள் என்னை அன்று அழைத்தது.. இந்த
பெயர்தான் அவன் கனவில் முன்பு அடிக்கடி வந்தது....
உடனே
தன் அலைபேசியை எடுத்து ஆனந்த் ஐ அழைத்து
“டேய்..
ஆனந்த்... தீக்சா எப்படி என்னை கூப்பிடுவா?? "என்றான்
ஆர்வமாக
"நந்தன்
னு.. கூப்பிடுவா டா.. நாங்களே கிண்டல் பண்ணுவோம்.. நாங்க எல்லோரும் அபி னு கூப்பிடறப்போ
நீ மட்டும் ஏன் நந்தன் னு கூப்பிடற னு...
“நான்
நந்தனுக்கு எப்பவும் ஸ்பெஷலா இருக்கணும்..
அதான்.. "என்று குறும்பாக
கண்ணடித்தாள் அப்பொழுது.. அப்பயே நாங்க கண்டு கொண்டோம் உங்களுக்குள் சம்திங்
சம்திங் னு ... "என்று சிரித்தான் ஆனந்த்....
இப்ப
புரிந்தது அபிக்கு
நந்தன்
என் நாதன்
என்று அவன் காதில் அடிக்கடி ஒலித்தது தீக்சாவின்
குரல் தான்...
“அப்ப
அந்த கான்பிரன்ஸ் பற்றி எனக்கு ஏன் எதுவும் தெரியல?? என்று யோசித்தவன் தன் செல்ப்பை திறந்து
ஏதாவது இருக்கிறதா என்று ஆராய அப்பொழுது அவனுடைய குழந்தையாக இருந்த போட்டோ ஒன்று
கீழ விழுந்தது...
அவன்
குழந்தையாக இருக்கும் பொழுது எடுத்தது அந்த புகைப்படம்.. அவன் தந்தை அதை
அலுவலகத்தில் வைத்திருந்தார் போல...
அந்த
போட்டோவை கண்டதும் மின்னல் வெட்டியது அவன் உள்ளே....
உடனே
தன் அலைபேசியில் இருந்த தீக்சாவின் குழந்தை போட்டோவை எடுத்து தன் புகைப்படத்துடன்
ஒப்பிட்டு பார்க்க, எந்த ஒரு வித்தியாசம் இன்றி
பெர்பெக்ட் மேட்சாக இருந்தது இரண்டு புகைப்படங்களும்...
அவனே
பெண்ணாக பிறந்திருந்தால் எப்படி இருக்குமோ அதே மாதிரி உரிச்சு வச்சு அவனை மாதிரியே
இருந்தாள் அந்த குட்டி தேவதை...
“அப்படி
என்றால் அவள் என் குழந்தை..!!! அந்த
குட்டி தேவதை என் இரத்தம்...என் உயிரில் ஜனித்தவள்.... மை பிரின்சஸ்....
அப்ப
தீக்சா??...
தீக்சா... என் மனைவி............!!!.
" என்று உள்ளுக்குள் சொல்லி பூரித்து
போனான் அபிநந்தன்...!
Comments
Post a Comment