பூங்கதவே தாழ் திறவாய்-16
இதழ்-16
பத்து
மாதங்கள் முன்பு:
“ஹலோ...
திஸ் ஈஸ் தீக்சா ஸ்பீக்கிங்... “ என்று கனீரென்று ஒலித்த குரலை கேட்டு காதில்
வைத்திருந்த தன் அலைபேசியை விலக்கி நிமிர்ந்து அந்த குரல் வந்த திசையை பார்த்தான்
அபிநந்தன்...
அழகிய
பிங்க் நிற புடவையில் இருந்தாள்.... அதை புரபசனலாக கட்டி கொஞ்சம் கூட இடை தெரியாமல்
விட்டிருந்தாள்... கற்றை முடி முன்னால் வந்து விழ, அதை ஸ்டைலாக ஒதுக்கியவாறு தன் அலைபேசியை
காதில் வைத்து கொண்டு பேசியவாறு படிகளின் மேல ஏறி வந்து கொண்டிருந்தாள் அவள்...
அவர்கள்
நின்று கொண்டிருந்தது டெல்லியின் புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டல்..
அந்த
ஆளுயர்ந்த ஹோட்டலின் முன்னால் நுழை
வாயிலில் தான் அபிநந்தன் நின்று அலைபேசியில் பேசி கொண்டிருந்தான்... அந்த கனீர் குரல் பெண்ணவளும்
கீழிருந்து கொஞ்சமாக அமைத்து இருந்த படிகளின் வழியாக கீழிருந்து மேல ஏறி வந்து கொண்டிருந்தாள்...
அவள்
பேசும் பொழுது சிரித்த கன்னங் குழிய சிரிப்பும், அழகிய வில்லாக வளைந்திருந்த
புருவங்களும் அதன் மத்தியில் சிறிய பொட்டு
ஒன்றும் வைத்து ஒயிலாக மேல நடந்து வந்து கொண்டிருந்தாள்...
அவளை
கண்டதுமே அவன் உள்ளுக்குள் சிலிர்க்க, தென்றல் வீச, பல்ப் எரிந்து மணி அடித்தது.. அவன்
இதயம் வேகமாக எகிறியது.. அவள் மேல ஏறி வர வர அவன் இதயம் அவள் பக்கம் சாய்ந்தது..
அவள்
அவனை கடந்து செல்ல, இன்னும் எகிறி குதித்தது அவன் இதயம் ... பின்னால் விரித்து விட்டிருந்த
நீண்ட கருங்கூந்தல் அலை அலையாக ஆட அதை நேர்த்தியாக பராமரித்து அழகாக தொங்க
விட்டிருந்தாள்....
அவனை
கடக்கும்பொழுது அவள் விட்டு சென்ற சேலையின் முந்தானி காற்றில் பறக்க அது நேராக
அபிநந்தனை தேடி வந்து அவன் முகத்தில் பட்டு மென்மையாக வருடியது..
அந்த
சுகத்தை கண் மூடி அனுபவித்து கொண்டிருக்க, யாரோ அவனை முன்னால்
இழுப்பதை போல இருந்தது...
திடுக்கிட்டு
விழித்தவன் முன்னால் பார்க்க, தன்னை கடந்து சில அடிகள்
முன்னால் சென்றிருந்தவள் முந்தி வந்து அவன் அணிந்திருந்த கோட்டில் இருந்த மேல் பட்டனில்
மாட்டி கொண்டிருந்தது..
அதைத்தான்
இழுத்து கொண்டிருந்தாள் முன்னால் இருந்த தென்றலவள்...
அதுவும்
வரமாட்டேன் என்று அடம்பிடிக்க, பின் யோசித்து அவன் பக்கம் அவனை நோக்கி வந்தாள்...
“ஓ..
சாரி.... “ என்றவாறு அவள் முந்தானையை பிடித்து இழுத்தாள் அவன் முன்னால் வந்து நின்று....
கிட்டதட்ட
அவனுக்கு வெகு அருகில் நெருக்கமாக நின்றவள் அவன் பட்டனில் இருந்த அந்த முந்தியை
இன்னுமே பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள்...
கொடி
போன்ற அவள் இடை வெகு அருகில் இருக்க, அவள் மீது இருந்து வந்த அந்த மெல்லிய பெண்மையின் வாசம் அவனை அப்படியே
கட்டி இழுத்தது...
அந்த
மெல்லியலின் மெல்லிய இடையை தன்னோடு சேர்த்து அணைத்து கொள்ள அவன் கைகள்
பரபரத்தன.....
ஆனால்
தன்னை கட்டு படுத்தியவன் அவள் இன்னும் முகம் சுறுக்கி அந்த முந்தியுடன் போராடி
கொண்டிருபபதை கண்டு மனமே இலலாமல்
“ஒன்
செகண்ட்... “ என்று சொல்லி அவனாகவே அதை
பிரித்து அவள் முந்தானையை எடுத்து விட்டான்..
அவள்
புடவையை தொடும் பொழுது அவளையே தீண்டிய உற்சாகம் அவன் கையில் அப்படி ஒரு பரவசம்....
மீண்டும் அதை இன்பமாய் அனுபவிக்க
அவளோ
தன் கொஞ்சும் குரலில்
“தேங்க்
யூ.. ரியலி சாரி.... “ என்றவாறு முன்னால் வேகமாக நகர்ந்து சென்றாள்....
அவள்
செல்வதையே இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தான் அபி...
சில
நிமிடங்கள் கழித்து தான் அவன் அலைபேசியில் பேசி கொண்டிருந்தது நினைவு வந்தது... மறுமுனையில்
இன்னும் கத்தி கொண்டிருக்க தன் தலையை உலுக்கியவாறு தன் அலைபேசியை மீண்டும் காதில் வைத்தான்...
மறுமுனையில்
கேட்டதற்கு ஏதோ சொல்லி மீண்டும் அவள் சென்ற திசையை பார்க்க அவள் அங்கு இல்லை...
மாயமாக மறைந்திருந்தாள்..
“சே...
மிஸ் பண்ணிட்டனே... “ என்று ஒரு ஏக்க பெருமூச்சை விட்டு அவனும் தன் உரையை முடித்து அந்த ஹோட்டல் உள்ளே சென்றான்...
உள்ளே
சென்றதும் அங்கு இருந்த ஒரு கான்பிரன்ஸ் அறைக்குள் நுழைய அவனுக்காக் காத்து கொண்டிருந்த அவனுடைய
நண்பர்கள் அவனை சூழ்ந்து கொண்டனர்...
“டேய்
மச்சான்.. இவ்வளவு நேரம் எங்கடா போயிருந்த?? ஏன் இவ்வளவு நேரம்??..” என்க அவர்களை எல்லாம் ஏதோ சொல்லி
சமாளித்தாலும் அவன் கண்கள் என்னவோ யாரையோ தேடியது....
அவனுக்கு
அதிக சிரமத்தை கொடுக்காமல் விரைவிலேயே கண்டு பிடித்து விட்டான் அவளை... முன்னால்
இருந்த வரிசைக்கு இரண்டு வரிசை தள்ளிதான் அமர்ந்திருந்தாள் அவள்...
அது ஒரு கட்டுமான துறைக்கான கான்பிரன்ஸ்... அந்த துறையை பற்றி தெரிந்து கொள்ளவும் அதன்
தற்போதைய நிலை என்ன, என்னென்ன நவீன கருவிகள் வந்துள்ள, எதிர்காலத்தில் இந்த துறை எப்படி இருக்கும், அதை எப்படி திட்டமிட்டு
நடத்துவது என்பன போன்ற விசயங்களை விளக்குவதற்காக இந்த கான்பிரன்ஸ் ஐ ஏற்பாடு
செய்திருந்தனர்....
நாடு
முழுவதும் இருந்த கட்டுமான துறையில்
முன்னனி வகிக்கும் பல நிறுவனங்களில் இருந்து கலந்து கொண்டனர்...
அபிநந்தன்
அபி கன்ஸ்ட்ரக்சன்ஸ் சார்பாக இந்த கான்பிரன்சில் கலந்து கொள்ள வந்திருந்தான்...
அதோடு
இந்த கான்பிரன்சின் முடிவில் இந்த வருடத்திற்கான கட்டுமான துறையில் சிறந்த இளம் தொழிலதிபருக்கான விருது அவனுக்கு
வழங்குவதாக இருக்க அதை வாங்கி செல்லவும் வந்திருந்தான்...
தீக்சாவும்
அதில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து வந்திருந்தாள்...
அவள்
முன்னால் அமர்ந்து இருப்பதை கண்டு தன் நண்பர்களை வேறு பக்கம் அனுப்பி விட்டு
அவளுக்கு பின் வரிசையில் சென்று அமர்ந்து கொண்டு அவளையே ரசித்து கொண்டிருந்தான்
அபி....
அந்த
கான்பிரன்ஸ் ஆரம்பிக்கவும் அதை அவள் கவனமாக பார்த்து குறிப்புகளை எடுத்து கொண்டிருக்க, அவனோ அவளை மட்டுமே
ரசித்து கொண்டிருந்தான்...
சத்தியமாக
அந்த கான்பிரன்சில் என்ன விளக்கினார்கள் என்று அவனுக்கு தெரியவில்லை.. அருகில் அமர்ந்திருந்தவர்
எதையோ அவனிடம் கேட்க, ஏதோ பதில் சொன்னான்...
அவரும் இவனை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தார்...
காலை
செஸ்ஸன் முடியவும் உணவு இடைவேளை விட்டு கலைந்து சென்றனர்...மதிய உணவு அங்கயே
ஏற்பாடு செய்திருக்க, தீக்சாவும் எழுந்து அந்த உணவு கூடத்திற்கு சென்றாள்..
பப்பே
முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.. ஒரு தட்டை எடுத்து கொண்டு அங்கிருந்த சில உணவு
வகைகளை தட்டில் எடுத்து வைத்து கொண்டு சாப்பிட்டு கொண்டிருந்தாள்...
அவளுக்கு
இங்கு யாரும் தெரிந்தவர்கள் இல்லை போலும் தனியாகத்தான் நின்றிருந்தாள்....
அபியினுடைய
நண்பர்களும் அங்கு வந்திருந்த மற்றொரு பெண் அவர்களை பார்த்து சிரித்து வைக்க உடனே அவளுடன் கடலை போட
ஆரம்பித்து விட்டனர்....
அபி
மட்டும் தனியாக இருக்க, இதுதான் சமயம்..அவளிடம் சென்று பேசலாம்
என்று முடிவு செய்து அவளை நோக்கி சென்றான்..
அதே
நேரம் காலையில் அந்த கான்பிரன்ஸ் ல் ஒரு டாபிக் ஐ பற்றி விளக்கிய ஒரு வயது
முதிர்ந்த தொழிலதிபரை கண்டவள் நேராக அவரிடம் சென்று தன்னை அறிமுக படுத்தி கொண்டு
ஏதோ பேச ஆரம்பித்தாள்...
அவள்
பேசும்பொழுது தெரிந்த அந்த தொழில் ஆர்வத்தையும் அலைபாயாத கண்களையும் அவள் முடியை
கோதி விட்ட அழகையும் கண்டு மயங்கி நின்றான்... ஒரு ஓரமாக நின்று அவளையே ரசித்து கொண்டிருந்தான்....
பின்
சில பேரிடம் சென்று பேசியவள் தன் உணவை
முடித்து டெஸர்ட் இருந்த பகுதிக்கு வந்தவள் ஒரு கப் ல் ஐஸ்கிரீமை எடுத்து அதில்
அருகில் இருந்த சில பழங்களையும் நறுக்கி போட்டு தனியாக சுவைக்க, அதற்கு மேல் காத்திருக்க
முடியாமல் அபி நேராக அவளிடம் சென்றான்....
“ஹாய்...ஐம்
அபி... அபிநந்தன்... அபி குரூப் ஆப் கம்பெனிஸ் MD..” என்று கையை நீட்டினான்...
அவளும்
ஹாய் என்று அவன் கையை பிடித்து குலுக்க, அவனுக்குள்
சில்லென்று பனிமழை பொழிந்தது .... தென்றல் வந்து வருடுவதை போல சிலிர்த்து போனான்....
உயிர்வரை
தீண்டிய அந்த கரங்களின் ஸ்பரிசத்தை விட்டு விட மனமில்லாமல் பிடித்து கொண்டு நிக்க, அவளோ தன் கையை
வேகமாக இழுத்து கொண்டாள்....
உடனே
தன்னை சுதாரித்தவன்
“நீங்க?? “ என்றான் அவளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்...
அவளுமே
அப்பொழுதுதான் உணர்ந்தாள் தன்னை பற்றி அறிமுகம் செய்து கொள்ளவில்லை என்று...
“சாரி...
ஐம் தீக்சா... பிரதிக்சா... தாமஸ் இன்டீரியர்ஸ் அன்ட் டிசைன்ஸ் ல வொர்க்
பண்றேன்.... “ என்று கன்னம் குழிய சிரித்தாள்...
அந்த
குழியை ரசித்து பார்த்தவன் அப்பொழுது தான் அவள் சொன்ன பெயர் ஸ்ட்ரைக் ஆக
“வாட்?? தாமஸ்
இன்டீரியர்ஸ் அன்ட் டிசைன்ஸ் ஆ?? அது என்னோட அங்கில், ஐ மீன் மை டாட் ஓட குளோஸ் பிரண்ட் கம்பெனிதான்... தாமஸ் அங்கில் எனக்கு ரொம்ப
நல்லா தெரியும்....ரொம்ப நல்ல டைப்... “
என்று சிரித்தான்... ...
“ஓ..
ஐ சீ...யா ஹீ ஈஸ் சச் அ நைஸ் பெர்சன்...” என்று அவரை பற்றி புகழ்ந்து பேசினாள்..
இடையில்
அவளுடைய ஐஸ்கிரீமையும் சுவைத்து கொண்டே...
அவள்
இதழில் வழுக்கி கொண்டு உள்ளே சென்ற அந்த ஐஸ்கிரீம் மீது பொறாமையாக இருந்தது
அவனுக்கு.... அதோடு ஐஸ்கிரீமில நனைந்த அவளின் இதழ்கள் இன்னும் அவனை சுண்டி இழுத்தன...
அந்த
இதழை அப்படியே தன் வசமாக்கி கொள்ள துடித்த தன் மனதை அடக்க பெரும் பாடு பட்டான் அபி.....
அவள்
இதழ்களை தீண்ட நீண்ட தன் கையை இழுத்து தன் பேன்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்து சிறை
செய்தான்...
ஏதோ
பேசியவள் அவனுடைய கம்பெனியை பற்றி கேட்க, அவனும் தன்னை சமாளித்து கொண்டு தன் நிறுவனத்தை பற்றி எடுத்து கூறினான்...
அவளும்
ஆர்வமாக கேட்டு கொண்டாள்....
அவன்
அவ்வளவு பெரிய ஆள் என்று தெரிந்த பொழுதும் எதுவும் வழிந்து பேசாமல் அளவோடு பேசிய
அதுவும் அவன் மீது அலைபாயாதா அவள் கண்கள் , நேரான பார்வை, தொழில் மட்டுமே விருப்பம் என்பது போல அவனிடம் காட்டிய ஒதுக்கம் எல்லாமே
அவளை மற்ற பெண்களிடமிருந்து வேறு படுத்தி காட்டியது....
இதுவரை
எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறான்... ஏன் அவன் US ல் Standford University ல் MBA படித்தபொழுதும்
அவன் மீது வந்து விழாத பெண்கள் இல்லை..
“அத்தனை
பேரையும் என் பார்வையால் விலக்கி நிறுத்திய நான் இவளிடம் மட்டும் ஏனோ வழிந்து
நிக்கிறேன்..
இதெல்லாம்
நான் இதுவரை யாரிடமும் பேசியதில்லை... இப்படி என்னையே தொலைய வச்சுட்டாளே...” என்று சிரித்து கொண்டான்
உள்ளுக்குள்...
பின்
மதியம் செஸ்ஸன் ஆரம்பிக்க, காலை மாதிரியே அவள் முன்னால் சென்று அமர்ந்து கொண்டாள்.. அவனும் அவள் பின்னால் அமர்ந்து கொண்டு அவன் வேலையை
கவனமாக செய்தான்... அதுதாங்க அவன் ஹீரோயினை சைட் அடிக்கிறது....
பின்
தேநீர் இடைவேளை விட அவள் எழுந்து வாஷ்ரூம் சென்று திரும்பி வந்தாள்.. அந்த வழியிலயே
காரிடரில் நின்று கொண்டிருந்தவன் அவளை கண்டதும்
“ஹாய்
தீக்சா.... “ என்று அவளுடன் இணைந்து நடந்தான்.. அவளும் அவனை பார்த்து புன்னகைத்து
செஸ்ஸன் எப்படி இருந்தது என்று கேட்க
“ம்ஹூம்..
அதை யார் கவனிச்சா?? நீ எத்தனை தரம் தலையை கோதின?? எத்தனை தரம் பக்கதில
திரும்பினனு கேள்.. கரெக்டா சொல்றேன்...”
என்றான் நேரடியாக...
“வாட்?? “ என்று அவள் விழி விரிக்க ,அதில் மீதி இருந்த கொஞ்சமும்
மறந்து அவள் விழிகளில் தொலைந்தே போனான்...பின் சமாளித்து கொண்டு
“ஹீ
ஹீ ஹீ .. என்று அசட்டு சிரிப்பை சிரித்து
“தீக்சா..
எனக்கு இந்த இன்டீரியர் டிசைன்ஸ் பற்றி அவ்வளவா தெரியாது.. மற்ற எல்லா துறையுமே எனக்கு அத்துபடி.. இதை பற்றி எனக்கு கொஞ்சம்
விளக்கறீங்களா... .உங்களுக்கு நேரம் கிடைக்கிறப்போ..” என்றான்...
அவனுடன்
நடந்து கொண்டிருந்தவள் நின்று அவனை நேராக பார்த்து
“அதை
நீங்க தாமஸ் அங்கில் கிட்டயே கத்துக்கங்க... என்னை விட அவர் தான் இதில்
எக்ஷ்பர்ட்.. நான் சும்மா கத்து குட்டிதான்... “ என்றாள்...
“ஹீ
ஹீ ஹீ அவர் முந்தைய ஜெனரேசன்.. நீங்கதான் லேட்டஸ்ட் ல இருப்பீங்க... உங்களை மாதிரி
ஆளுங்க சொல்லி கொடுத்தா டக்குனு புரிஞ்சிடும்... “ என்றான் அவனும் விடாமல்....
மீண்டும்
அவனை ஒரு ஆழ்ந்த பார்வை பார்த்தவள் அவன் கண்ணை நேராக பார்த்து
“இதெல்லாம்
எதுக்கு?? என் பிரண்ட்ஷிப் க்காகவா?? “ என்று தன் புருவங்களை உயர்த்தினாள்
மிடுக்காக...
அதை
கண்டு அவனுக்கு இன்னும் ஆச்சர்யம் கூடி போனது... அவன் கேட்ட உடனே அவள் சம்மதித்து விடுவாள்
என்று எண்ணியிருக்க, அவள் நேராகவே அவனுடைய
எண்ணைத்தை பற்றி கேட்க சில நொடிகள் ஆச்சர்யத்தில் விழுந்தவன் சுதாரித்து கொண்டு
“ஹா
ஹா ஹா கரெக்டா கண்டுபிடிச்சிட்டியே.. யூ
ஆர் சோ ஸ்மார்ட்... பட் ஒரு சின்ன கரெக்சன்.... உன் பிரண்ட்ஷிப் க்காக இல்லை...
உன் காதலுக்காக...
யெஸ்
தீக்சா... ஐம் இன் லவ் வித் யூ... நாம இரண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?? இங்கயே.. இப்பயே.. இந்த நொடியே....
என்னடா
இவன் கிறுக்கன் மாதிரி உளறானே னு பார்க்காதா.. காலையில் உன்னை முதல் முதலா பார்த்த
பொழுதே உன்கிட்ட ப்ளாட் ஆகிட்டேன்... எனக்கானவள் நீதான் னு என் ஹார்ட் கன்பார்ம் பண்ணிடுச்சு....
அதை
டெஸ்ட் பண்ணத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன் ....
காலையில்
இருந்தே உன்னை தவிர வேற எதுவும் எனக்கு தெரியலை... அப்பதான் முடிவு பண்ணினேன்..
நீதான் எனக்கானவள்... யூ ஆர் மை ஹார்ட்... யூ ஆர் பார்ட் ஆப் மை லைப்... ஐ லவ் யூ... “ என்றான்
அவள் முன்னே மண்டியிட்டு...
அதிர்ந்து
தான் போனாள் அந்த பெண்ணவள்...
திடீரென்று
ஒருத்தன் வந்து இப்படி பிதற்றுவான் என்று அவள் எண்ணியிருக்கவில்லை.. ஆமாம் அவன்
பேசியது எல்லாம் அவளுக்கு பிதற்றலாக தான் தெரிந்தது...
ஆனால்
ஏனோ அவளுக்கு கோபம் வரவில்லை.. மாறாக இதழ்களில் புன்னகை தவழ்ந்தது... அவசரமாக
சுற்றிலும் பார்க்க யாரும் இவர்களை கவனித்து இருக்கவில்லை...
“ஹப்பாடா...”
என்ற நிம்மதி மூச்சு விட்டவள் அவன்
இன்னும் மண்டியிட்டு இருக்க,
“ப்ளீஸ்...பர்ஸ்ட் கெட் அப் மிஸ்டர் நந்தன்... இது என்ன
காலேஜ் ஸ்டூடன்ட் மாதிரி இப்படி பிஹேவ் பண்றீங்க?? “ என்று சிரித்தாள்....
அவள் தன்னை அறைவாள் அட்லீஸ்ட் திட்டுவாள்
என்று எதிர்பார்த்தவனுக்கு அவள் சிரிக்க ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தது...
அவள் கையை பிடித்த படியே எழுந்து
நின்றவன்
“ஹா ஹா ஹா லவ் னு வந்திட்டா அதில
வயசு என்ன பேபி... எல்லாருக்கும் அந்த பீல் ஒரே மாதிரிதான் இருக்கும் னு இப்பதான் நான் புரிஞ்சுகிட்டேன்... “ என்றான்
கண் சிமிட்டி...
“ஹே... ஆர் யூ கிரேசி?? இதெல்லாம் நம்ப முடியலை... “ என்று சிரித்தாள் தீக்சா...
“யெஸ் பேபி.. நானும் கூடத்தான் இந்த காதலில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் இருந்தேன்..
லவ் பண்ற என் பிரண்ட்ஸ் எத்தனையோ பேர்
காதலை பற்றி புகழ்ந்து சொல்ல எல்லாரையும் கலாய்ச்சிருக்கேன்..
ஆனால் அதே பீல் எனக்கு வந்த பொழுது
தான் அவன்கள் சொன்னது எத்தனை சத்தியமான வார்த்தை என்று புரிந்தது..... யெஸ்..
யூ ஆர் மேக்கிங் மீ கிரேசி ஆன் யூ.... “ என்றான் கண்ணில் ததும்பும் காதலுடன்.....
“ஹா ஹா ஹா.. தி ஈஸ் ஸ்டுப்பிட்... ஐ கான்ட் பிலிவ் இட்...
காலையில் பார்த்து மாலையில் கல்யாணம்
பண்ணிக்கலாமா னு சொன்னா என்ன சொல்வாங்களாம்??
அதெல்லாம் சினிமாவுக்குத்தான்
சரிப்பட்டு வரும் மிஸ்டர் நந்தன்.... கிட்டிஸ் ஆ இருக்கு நீங்க பிகேவ் பண்றது...
டேக் கேர்... ட்ரை பார் பெட்டர் கேர்ள்.. குட் லக்... “ என்று மீண்டும் கன்னம் குழிய சிரித்தவள் வேகமாக
அவனை தாண்டி சென்றாள்....
“நோ பேபி.. நான் சொல்வது எல்லாம்
உண்மை...யூ ஆர் மை ஹார்ட்... “ என்று பின்னால்
இருந்து கத்தினான் அவளுக்கு மட்டும் கேட்கும் வகையில்....
அவளும் தன் தலையை இரு பக்கமும் ஆட்டி கொண்டே
“ஸ்டுபிட் பெல்லோ... “ என்று சிரித்தவாறே
அந்த கான்பிரன்ஸ் அறைக்குள் நுழைந்தாள்....
அபியும் தன் தலையை ஸ்டைலாக தடவியவாறு
பான்ட் பாக்கெட்டில் கை விட்டு கொண்டே உதட்டோரம் சின்ன வெக்கத்துடன் துள்ளலுடன் நடந்தான்...
அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது.. அவள்
சொன்ன மாதிரி கிட்டிஸ் ஆகத்தான்
இருக்கு...
ஒரு
மல்ட்டி மில்லினர் இப்படி ஒரு காரிடரில் ஒரு பெண் முன்னாடி மண்டியிட்டு அவள் காதலை
யாசித்து நின்றான் என்று நினைக்கையில்
அவனுக்கே வெக்கமாக இருந்தது....
செல்லிட்டேனே என் காதல...
செல்லும் போதே சுகம் தாலல...
இது போல் ஒரு வார்த்தையே
யாரிடமும் செல்ல தோனல...
இனி வேரேறு வார்த்தையே
பேசிடவும் என்னம் கூடல...
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கு ஈடே இல்லை
யேதும்... யேதும்...!!!
என்று
மனதிற்குள் பாடி கொண்டே அதையே விசில்
அடித்தபடி அந்த கான்பிரன்ஸ் அறைக்குள் நுழைந்தான் அபிநந்தன்...
கான்பிரன்ஸ்
அறையின் முன் பக்க வாயில் வழியாக வந்தவன் அவளை தாண்டிதான் பின்னால் செல்ல வேண்டும்...
அவளை
கடக்கையில் அவள் எதேச்சையாக அவனை பார்க்க , அவனோ அவளை பார்த்து கண் சிமிட்டி
உதடு குவித்து அவளுக்கு காற்றில் முத்தமிட, அதை கண்டவள் கன்னம் சிவந்து தன் கை விரலை நீட்டி “கொன்னுடுவேன் .. “ என்று மிரட்டினாள் செல்லமாக முறைத்து...
அவளின்
அந்த ஆக்சன் இன்னும் அவன் மனதை அள்ளியது...
அந்த
முறைத்த இதழ்களை இழுத்து தன் வசப் படுத்தி கொள்ள துடித்தன அவன் இதழ்கள்....
ஆனால்
தன்னை கட்டுபடுத்தி கொண்டு புன்னகைத்தவாறு
அவள் பின்னே சென்று அமர்ந்தவன் கான்பிரன்ஸ்
ல ஒருவர் விளக்கி கொண்டிருக்க , அதை கவனிக்க முயன்றான்...
ஆனால்
அதில் மனம் செல்லாமல் மீண்டும் அவன் முன்னே அமர்ந்திருந்தவளையே சைட் அடிக்க ஆரம்பித்தான்...
காலையில்
கான்பிரன்ஸ் ல் இருந்த செஸ்ஸனில் கவனமாக இருந்தவள்
இப்பொழுது தன் பின்னே அவன் அமர்ந்திருப்பதும் அதுவும் தன்னையே நேராக பார்த்து
கொண்டிருப்பதை ஓரக்கண்ணால் கண்டவளுக்கு வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன...
ஒரு
மாதிரி ரெஸ்ட்லெஸ்ஸாக இருக்க, அவளால் அந்த கான்பிரன்சில் கவனம் செலுத்த முடியவில்லை...
அவளின்
நிலை பின்னால் இருந்து அவளையே பார்த்து கொண்டிருந்த அபிக்கு புரிய
“யெஸ்.....
“ என்று தன் கையை மடக்கி பின்னால் இழுத்தவன்
உள்ளுக்குள் குத்தாட்டம் போட்டான்....
மாலை அந்த கான்பிரன்ஸ் முடிய எழுந்தவள் கண்கள் தானாக பின்
இருக்கைக்கு செல்ல பலத்த ஏமாற்றம்.. அவன் அமர்ந்திருந்த இருக்கை காலியாக இருந்தது...
“எங்க
போய்ட்டான்?? “ என்று கண்கள் தானாக தேட, இவள் தேட வேண்டும் என்றே எழுந்து சென்றவன் மறைந்து நின்று கொண்டு அவள் தேடுவதையே
ரசித்தான்...
சிறிது
நேரம் தேடியவள் பின் அந்த அறையில் இருந்து வெளியேறி சென்றாள்...
சிறிது
நேரம் மறைந்து நின்றவன் பின் வெளி வந்து வேகமாக அவள் சென்ற பக்கம் சென்று அவளை தேட இப்பொழுது ஏமாந்து போவது அவன்
முறையாச்சு..
அவள்
அங்கு காணவில்லை.. ஒரு வேளை தன்னைப் போலவே அவளும் மறைந்து நின்று கண்ணாமூச்சி ஆடுகிறாளோ ?? என்று தேடியவன் அவளை
எங்கும் காணாமல்
“சே...
ரொம்ப ஓவரா ஆடிட்டமோ.. அதுக்குள்ள போய்ட்டாளே.. “ என்று தன்னையே நொந்து கொண்டிருக்க, அவன் முதுகில் யாரோ
தட்டினார்கள்...
திடுக்கிட்டு
ஆவலுடன் திரும்ப , அவன் நண்பன் ஆனந்த்
நின்று கொண்டிருந்தான்....
“என்னடா
மச்சான்?? யாரை ரொம்ப நேரமா தேடிகிட்டிருக்க?? “ என்றான் சிரித்தவாறு
“உ
உ உன்னைத் தான் டா... எங்க போய் தொலஞ்ச?? “ என்றான் தன்னை மறைந்து கொண்டு
“ஹ்ம்ம்ம்ம்
அப்படியா?? நம்பிட்டேன் டா.... எனக்கு எங்க அப்பா அம்மா ஒரு வயசுலயே காது குத்தி கடுக்கன் போட்டு இப்ப அது தூந்தும் போச்சு... என்னை தேடினதா சொல்லி எனக்கு மீண்டும் காது குத்தாத... “ என்றான் நக்கலாக
சிரித்தவாறு...
“ஹீ
ஹீ ஹீ நிஜமாலும் உன்னைத்தான் டா தேடினேன்.. “ என்றான் அபியும் விடாமல்....
“ஆங்..
அப்ப ஏன்டா உன் கண் முன்னாடியே நின்னுகிட்டிருந்த என்னை கண்டுக்காமல் தாண்டி சென்று அங்க யாரையோ தேடின?? “ என்றான் குறும்பாக..
“ஆங்..
நீ இங்கயா நின்ன?? .. அப்ப ஏன் டா என்னை கூப்பிடல?? “என்று அசட்டு சிரிப்பை சிரித்தான்
அபி..
அவன்
முதுகில் மீண்டும் அடித்தவன் சரி வா போகலாம் என்று அழைத்து சென்றான்...
தங்கள் அறைக்கு சென்றவர்கள் ரெப்ரெஷ் ஆகி மீண்டும் இரவு அந்த டெல்லியை சுற்றி பார்த்தனர்...
இரவில்
நம் நாட்டின் தலைநகரில் பெரிய பெரிய கட்டிடங்களில் வண்ண விளக்குகள் ஜொலிக்க, எந்த ஒரு இறைச்சலும்
இல்லாமல் அமைதியான ஒரு சூழலில் அந்த
ஜொலிக்கும் விளக்குகளை பார்ப்பது ரம்மியமாக
இருந்தது...
ஒரு
பாலத்தில் நின்றவன் தன் கையை இருபக்கமும் ஊன்றி குனிந்து அந்த நகரின் அழகை ரசிக்க, டெல்லி குளிர் தென்றல்
அவன் உள்ளே ஊடுருவி சென்றது....
குளிர்
எனவும் காலையில் அவன் மீது மோதி சென்ற அவளின் புடவை முந்தானி ஞாபகம் வர , அடுத்த நொடி அவள் முகம் கண் முன்னே வந்தது...
இந்நேரம்
அவள் என் அருகில் இருந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணி திரும்பி பார்க்க அடுத்த நொடியே அவன் அருகில் அவனை நெருங்கி
நின்று கொண்டு அவனை மாதிரியே கையை முன்னால் ஊன்றி பார்வையை இவன் பக்கம் திருப்பி
குறும்பாக கண் சிமிட்டினாள் தீக்சா....
அப்படியே
அதிசயித்து உறைந்து நின்றான் அபி...
அந்த
பனியில் சில்லிட்டிருந்த அவள் குண்டு கன்னங்களை
பிடித்து அதில் முத்தமிட துடித்த தன் உதட்டை அடக்கியவன் ஆசையாக அவளை நோக்க அடுத்த நொடி
மறைந்து இருந்தாள் அந்த இடத்தை விட்டு....
மீண்டும்
கண்ணை கசக்கியவன் உற்று பார்க்க
ம்ஹூம்..
அவள் இல்லை அங்கு ... தொலைதூரம் பார்வையால் தேடி ஏமாந்தான்
“சே..
இவ்வளவு நேரம் இங்கதான இருந்தாள்.. அதுக்குள்ள எங்க போய்ட்டா?? “ என்று யோசித்து கொண்டிருக்க,
அவன் முன்னே கை விரலால் சொடக்கு போட்டவன்
“என்ன
மச்சான்?? இப்பவும் என்னைத்தான தேடின?? “ என்றான் ஆனந்த் குறும்பாக
சிரித்தவாறு...
அவன்
குரலை கேட்டு திடுக்கிட்டவன்
“ஹீ
ஹீ ஹீ.. ஆமான் டா மச்சான்... உன்னைனைத்தாதாதான்
தேடினேன்.... “ என்று இழுத்தான்...
அவன்
முதுகில் மீண்டும் மொத்தியவன் 5 நிமிசமா உன் முன்னாடி நின்னு உன்னையே
பார்த்துகிட்டிருக்கேன்... நீ என்னடான்னா என்னை கண்டுக்கவே இல்லை...
தானா
சிரிக்கிற.. தானா திடீர்னு திரும்பி பார்க்கிற.. அப்புறம் யாரையோ தேடற...
என்னடா ஆச்சு உனக்கு??
நேற்று
சென்னையில் இருந்து வரும்பொழுது நல்லாதானே இருந்த... இங்க டெல்லியில் எதுவும்
காத்து கருப்பு அடிச்சிடுச்சோ....
சே....
இங்க போய் எங்க வேப்பிலை அடிக்கிறதுனு வேற
தெரியலையே.... சரி விடு .. நம்ம ஊர் பூசாரி கிட்ட சொல்லி ஸ்கைப்
லயே வேப்பிலை அடிக்க வச்சிடலாம்.. “என்று சிரித்தான்
ஆனந்த்...
அபி
அவனை பார்த்து முறைக்க
“ஹா
ஹா ஹா... என்னாச்சுடா மச்சான்?? ஏதாவது பொண்ணுகிட்ட
விழுந்திட்டியா?? “ என்றான் கண் சிமிட்டி..
அதை
கண்டு அபியின் முகத்தில் இலேசாக வெக்கம் வந்து போக உடனே அதை மறைத்து கொண்டு
“சீ
போடா.. எப்ப பார் பொண்ணுங்களை பத்தியே பேசற.. அதான் காலையில் இருந்து கடலை
போட்டுகிட்டிருந்தியே... அது இன்னும் பத்தலையா?? “ என்று பேச்சை மாற்றினான் அபி ...
“
ஹ்ம்ம்ம் எங்களை மாதிரி ஓபனா சைட் அடிக்கிறவங்களை எல்லாம் நம்பிடலாம் மச்சான்.. உன்னை மாதிரி நல்ல பையன் மாதிரி வேசம் போடறவனுங்களை தான் நம்ப கூடாதுடா.. வெளில தெரியாம பெரிய பெரிய
வேலை எல்லாம் பண்ணுவானுங்களாம்.. “
என்றான் ஆனந்த் சிரித்தவாறு..
அதற்குள்
மற்ற நண்பர்களும் வந்துவிட, அதற்கு பிறகு பேச்சுலர்ஸ்க்கே உரித்தான கிண்டல் கேலி என நேரம் பறந்து
ஓடியது....
பின்
இரவு உணவை வெளியில் முடித்து அறைக்கு திரும்ப, அபி மட்டும் ஒரு ஹோட்டலில் தங்கி இருக்க
மற்றவர்களுக்கு அறை இல்லை என்பதால் மற்றொரு ஹோட்டலில் தங்கி இருந்தனர்...
அதனால்
அபியை அவன் ஹோட்டல் முன்னால் இறக்கி விட்டு கை அசைத்து விடை பெற்று சென்றனர்....
அவனும்
சிரித்து கொண்டே தன் அறைக்கு வந்தவன் இரவு உடைக்கு மாறி கட்டிலில் விழ, மீண்டும் அவள் முகமே நினைவு வந்தது...
“சே...
இன்னும் இரண்டு நாளைக்கு அவளை பார்க்க முடியாதே
.அவள் நம்பர் கூட வாங்க வில்லை.. கேட்டிருந்தாலும்
கொடுத்திருக்க மாட்டாள்..
ம்ம்ம்
இரண்டு நாளை எப்படி ஓட்டுவது?? “ என்று யோசித்து கொண்டே
கண்ணை மூடி தன் கண்மணியுடன் டூயட்
பாடியபடி வெகுநேரம் கழித்து உறங்கி போனான்...!
Comments
Post a Comment