பூங்கதவே தாழ் திறவாய்-17
இந்த நாவல் ஏற்கனவே ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது.
ஒலி வடிவில் கேட்டு மகிழ, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க...நன்றி!! அன்புடன் பத்மினி செல்வராஜ்.
இதழ்-17
காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னை
காணும் வரை
உள்ளுக்குள் காதல் பூத்தது உன்னால்…
பட்டினத்தார் பாடல் மட்டும் பாடம் செய்து ஒப்பித்தேன்
கண்ணே நான் உன்னை நான் முன்னாள்…
என் ஆசை மூங்கில் வெடிக்க வைத்தாய்
என் ஆண்மை எனக்கே விளங்க வைத்தாய்…
நான் தொட்டுக்கொள்ள கிட்டே வந்தால்
திட்டி திட்டி தித்திதாய் !!!
என்று
அவன் மனதில் இருப்பது அவன் அலைபேசி வழியாக அவன் செவிகளில் ஒலிக்க அதை ரசித்த படியே புரண்டு படுத்தான் உதட்டில் புன்னகையுடன் அபிநந்தன்...
மீண்டும்
அதே பாடல் திரும்ப ஒலிக்க அப்பொழுதுதான் நினைவு வந்தது அது அவன் அலைபேசிக்கு செட் பண்ணி வைத்திருந்த ரிங் டோன் என்பது...
உடனே கண் விழித்தவன் கையை நீட்டி அந்த அலைபேசியை எடுத்து காதில் வைத்தான் அபி...உடனே
“ஏன்டா
எருமை.. இன்னும் எழுந்திருக்கலையா?? மணி என்னாகுது பார்??... “ என்று கத்தினான் ஆனந்த் மறுமுனையில்...
அப்பொழுது
அலைபேசியில் மணியை பார்க்க, அது 8 என காட்டியது
“ஓ...
சாரி டா மச்சான்... கொஞ்சம் தூங்கிட்டேன்..
அதான்... “ என்றான்..
“தூங்கினியா?? இல்லை உன் கேர்ள்
பிரண்ட் ஓட டூயட் பாடினியா?? “ என்று அபி மனதில் உள்ளதை சொல்ல திக் என்றது அவனுக்கு
இது
எப்படி தெரிந்தது என்று விழித்தவன்
“நான்
என்ன நீயாடா?? தினமும் ஒரு கேர்ள் பிரண்ட் ஓட டூயட் பாட. “ என்று சமாளித்தான்...
“சரி
சரி உன் வெட்டி விளக்கத்தை அப்புறம் வச்சுக்க.. சீக்கிரம் கிளம்பி உன் ஹோட்டல்
முன்னால் வந்து இரு.. நாங்க இன்னும் 10
நிமிசத்துல கிளம்பிடுவோம்..
“எங்கடா?? “ என்றான் அபி
புரியாமல்...
“டேய்...
காலையிலயே என்னை கடுப்பேத்தாதா... இன்னைக்கு புல்லா ஜாலி மூட்ல இருக்கணும்னு
பிளான் பண்ணி வச்சிருக்கேன்.. அதை காலையிலயே கெடுத்துடாதா...
நாம
எல்லாம் இங்க பக்கத்துல இருக்கிற ஒரு hill
station* க்கு போகலாம்னு நீதான சொன்ன... மேல சீனரிஸ் சூப்பரா இருக்கும்...ஈவ்னிங் பார்க்க குளிரா
செமயா இருக்கும் னு சொல்லி இன்னைக்கு அங்க
போகலாம்னு பிளான் போட்டது நீ...
(*
இதில் வரும் மலை குன்று ஒரு கற்பனையான
மலைபிரதேசம்)
அப்புறம்
நீதான் டா சொன்ன 8 மணிக்கு கிளம்பினால் தான் சீக்கிரம் மேல போக முடியும்..
என்று .. இப்ப நீயே இப்படி குறட்டை விட்டு தூங்கினா ?? சீக்கிரம் வாடா... “ என்று திட்டி கொண்டே போனை
வைத்தான் ஆனந்த்...
அபியும்
அதை உணர்ந்து பின் வேகமாக எழுந்து அவசரமாக குளித்து ரெடியாகி தன் பேக் பேக்கை
எடுத்து கொண்டு ஹோட்டலின் வாசலுக்கு வந்தான்....
ஆனந்த்
கார்க்காக காத்து கொண்டிருக்க, எதேச்சையாக திரும்பியவன் அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்து
நின்றான்...
அந்த
ஹோட்டலின் நுழைவு வாயில் கதவை திறந்து கொண்டு
வெளி வந்தாள் அவன் இதய தேவதை...
நேற்றைக்கு
இன்று முற்றிலும் வேறாக தெரிந்தாள்...
ஜீன்ஸ்
ம் அதற்கு மேல் கண்ணை உறுத்தாத டாப் ம் அணிந்து
கழுத்தில் ஒரு மப்ளர் மாதிரி சுற்றி இருந்தாள்... நேற்று விரித்து விட்டிருந்த கூந்தலை
பின்னி ஜடையாக்கி விட்டிருந்தாள்...
கண்ணில்
கூலரை அப்பொழுதுதான் அணிந்து கொண்டு கையில் கேன்ட் பேக்கை மாட்டியபடி வேகமாக நடந்து வந்தாள்....
ஜீன்ஸ்
அன்ட் டீ சர்ட்ல் அதுவும் ஆபாசமாக இல்லாமல்
ஆனால் பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைக்கும் பெண்மையுடன் அம்சமாக வந்தவளை
இமைக்க மறந்து ரசித்து கொண்டிருந்தான் அபி....
இவனை
கவனிக்காமல் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ
மெசேஜ் பண்ணி கொண்டே வந்தவள் இவன் அவள் அழகாக நடந்து வருவதையே ரசித்து கொண்டிருக்க, நேராக வந்தவள் அவன்
மீது முட்டி கொண்டு சரிய இருக்க, அனிச்சையாக அவள் இடையோடு தாங்கி
பிடித்தான் அபி...
அவளும்
விழுந்து விடாமல் இருக்க அவன் கையை பற்றி கொண்டாள்...
சில
விநாடிகள் இருவர் விழிகளும் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டு நின்றது...
அதற்குள்
தன்னை சாமாளித்து கொண்டவள்
“ஹாய்
மிஸ்டர் அபிநந்தன்.. என்ன நைட் அடிச்ச சரக்கு இன்னும் தெளியலையா?? இப்படி ஆள் வருவது
கூட கண்ணுக்கு தெரியலையா? ஒதுங்கி நிக்க வேண்டியது தான?? “ என்றாள் அவனை குறும்பாக பார்த்தவாறு....
“ஹா
ஹா ஹா... சரக்கு எல்லாம் தேவை இல்லை பேபி... என் பொண்டாட்டி இதழை பார்த்து கொண்டிருந்தாலே போதும்... தானாக போதை தலைக்கு
ஏறும்... “ என்று அவள் இதழ்களையே ஆசையோடும் காதலோடும் பார்க்க அவன் பார்வை சென்ற
இடத்தையும் அவன் கூறிய வார்த்தையையும் கேட்டு கன்னம் சிவந்தாள் தீக்சா....
அடுத்த
நொடியே தன்னை மறைத்துக் கொண்டவள்
“ஆங்..
நினைப்பு தான்... இனிமேல் இப்படி ஏதாவது உளறீனீங்க கொன்னுடுவேன் நந்தன்.. ஜாக்கிரதை..
“ என்று விரல் நீட்டி மிரட்டினாள்..
ஆனால்
உதட்டில் மட்டும் அந்த புன்னகை குறையவே இல்லை அவளுக்கு ...
“தேங்ஸ்
பேபி.. இப்படி சிரிச்சுகிட்டே
மிரட்டற பொண்டாட்டி கிடைச்சதுக்கு நான்
ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்... “ என்று
மீண்டும் கண் சிமிட்டினான் குறும்பாக
சிரித்தவாறு...
அவள்
திரும்ப ஏதோ சொல்ல வர, அவர்கள் முன் ஒரு சொகுசு கார் வந்து நிக்க,
அதிலிருந்து ஹார்ன் பண்ணினார்கள்...
அதை
கேட்டு இருவரும் திரும்பி காரில்
இருந்தவனை பார்த்து இருவருமே கை அசைத்தனர்...
பின்
ஒருவரை ஒருவர் கேள்வியாக பார்த்து கொண்டு முன்னே நடக்க, அதற்குள் காரில்
இருந்து இறங்கி இருந்தான் ஆனந்த்....
“ஹாய்
தீக்சா .. ஹாய் டா.. என்ன இரண்டு பேருக்கும்
முன்னயே தெரியுமா?? “என்றான் ஆச்சர்யமாக...
“இல்லை..
ஜஸ்ட் பார்த்துகிட்டோம்..” என்றான் அபி அவசரமாக,. தன் கதை அவன் நண்பனுக்கு தெரிய வேண்டாம் என்று மறைக்கும் விதத்தில்...
தீக்சாவும்
அதை புரிந்து கொண்டு சரியான திருடன் என்று மனதுக்குள் சொல்லி சிரித்து கொண்டாள்..
அபி, இவ தீக்சா... என்னோட
பிரண்ட்.. தீக்சா இவன் அபி.. அபி குரூப்
ஆப் கம்பெனீஸ் ஓட MD..
பக்கா
ஜென்டில்மேன்.. உடம்பு பூராவும் பிசினஸ் மூளை.. பிசினஸ் ல புலி... ஆனா பொண்ணுங்களை பார்த்தா மட்டும் பதுங்கற
எலி... திரும்பி கூட பார்க்க மாட்டான்... “ என்று புகழ்ந்தான் தன் நண்பனை..
அதை
கேட்டு
“அப்படியா
மிஸ்டர் அபிநந்தன்?? “ என்று நக்கலாக சிரித்தாள்
தீக்சா...
“ஹீ
ஹீ ஹீ சும்மா என்னை புகழாதடா.. எனக்கு வெக்கமா இருக்கு... “ என்று ஆனந்த் ன் சட்டை
பட்டனை திருகினான் வெக்கத்துடன் அசட்டு
சிரிப்பை சிரித்தவாறு ...
அதை
கண்டு அனைவரும் சிரித்தனர்...
பின்
“ஆமா..
உனக்கு தீக்சாவை எப்படி தெரியும் என்றான் ?? “ ஆனந்த் ஐ பார்த்து..
“தீக்சா
நம்ம கான்பிரன்ச்க்குத்தான் வந்திருக்கா
டா .. நேற்று மாலை நான் இந்த மலைக்கு ட்ரிப் போறத பத்தி மற்றவனுங்க
கிட்ட பேசிகிட்டிருந்தேன்..
அப்ப
என்று நேற்று நடந்த ப்ளாஷ் பேக்கை சொன்னான்...
ஆனந்த
தன் நண்பர்களிடம் பேசி கொண்டிருக்க,,
“எக்ஸ்க்யூஸ்
மீ... நீங்க சென்னையா?? “ என்ற ஒரு தேன் ஒழுகும் குரல்
கேட்டது....
“இது
யார் டா.. நம்மளையும் மதித்து கூப்பிடறா?? அதுவும்பெண் வாய்ஸ்...” என்று ஆர்வமாக
திரும்பியவன் அங்கு அழகான பெண் ஒருத்தி நின்று கொண்டிருக்க, தலை சுற்றி கீழ விழ போனான் ஆனந்த்..
அவன்
நண்பர்கள் அவனை தாங்கி கொள்ள, அவளோ அனைவரையும் பார்த்து
“ஹாய்..
ஐம் தீக்சா.. பிரம் சென்னை... “ என்று அறிமுக
படுத்த மற்ற நால்வரும்
“ஹாய்......
“ என்று அசடு வழிந்தனர்....
“சாரி..
நீங்க பேசிகிட்டிருக்கப்ப டிஸ்டர்ப் பண்ணிட்டனா?? “ என்றாள் வருத்தமாக
“சே..
சே..அதெல்லாம் இல்லங்க.. உங்கள மாதிரி அழகான பொண்ணுங்க எங்கள தேடி வந்து பேசறது னா ஆது போய் டிஸ்டர்ப் ஆகுமா?? அது ஒரு வரம் ங்க “ என்றான் ஆனந்த்
சிரித்தவாறு...
அவளும்
புன்னகைத்து
“நீங்க
நாளைக்கு ஏதோ ப்ரோகிராம் ப்ளான் பண்ணிகிட்டிருந்தீங்க
இல்ல...
If you
don’t mind, நானும் உங்க கூட ஜாயின் பண்ணிக்கலாமா??
எனக்கு
இங்க யாரையும் தெரியாது.. தனியா போகணும்னால் போர் அடிக்கும்... எனக்கு ஏதாவது ஹில்
ஸ்டேசன் மாதிரி போகணும்னு ரொம்ப ஆசை...
அதான்
உங்கள மாதிரி பிரண்ட்ஸ் கூட போனா ஜாலியா இருக்கும்.. என்ன நான் உங்க கூட வர ஓகே வா?? “ என்றாள்..
அதை
கேட்டு மயங்கி விழாத குறைதான் அந்த நால்வருக்கும்...
இதுவரைக்கும்
அவங்கள் தான் எந்த பொண்ணையும் தேடி போய் அழைத்திருக்கிறார்கள்..
ஆனால் இந்த மாதிரி ஒரு பொண்ணே தங்களை தேடி வந்து வருகிறேன் என்று சொல்லவும் அவர்களால் நம்ப முடியவில்லை...
ஒரு
வேளை அந்த மாதிரி பொண்ணோ என்று கேள்வியாக அவளை உற்று பார்க்க அவள் கண்ணில் தெரிந்த ஒடு தீட்சண்யமும்
முகத்தில் தெரிந்த தெளிவும் யாரையும் தள்ளி வைக்கும் பார்வையும் கண்டவர்களுக்கு அவளை தப்பாக பார்க்க முடியவில்லை..
பார்த்த
உடனே ஒரு நட்பு பாராட்டும் மிடுக்குடன் யாரும் தன்னிடம் எல்லை மீறி நடக்க முடியாது
என்ற கெத்துடன் துணிந்து நிமிர்ந்து நின்றவளை
கண்டதும் தானாக அவர்களுக்கு நண்பியாக்கி கொண்டனர்....
அவளுடைய
எண்ணை வாங்கி கொண்டு எப்ப கிளம்புவது என்று
சொல்வதாக முடிக்க அதற்குள் அவளுடைய கார்
வந்து நிக்க அவர்களுக்கு கை அசைத்து விடை பெற்று சென்றாள் தீக்சா...
அதன்
பிறகு ஆனந்த் அபியை தேடி பிடித்து மீண்டும் ஐவரும் திட்டமிட்டு நாளை புரோகிராமை பற்றி மு டிவு செய்தனர்...
காலை
8 மணிக்கு இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று சொல்லி இருந்தான் அபி... அவர்கள்
திட்டத்தை தீக்சாவிற்கு வாட்ஸ்அப் பண்ணினான் ஆனந்த்.. அவளும் சரியென்று சொல்ல இதோ
கிளம்பி வந்து விட்டாள்...
ஆனந்த்
சொன்ன கதையை கேட்டவன்
“இதை
ஏன்டா நேற்று என் கிட்ட சொல்லல?? “ என்று ஆனந்த் காதை கடித்தான் அபி...
“ஆமா..
சொல்லிட்டாலும்.. நீ உடனே பொண்ணுங்க யாரும் வேண்டாம்... இது நாம்ப மட்டும் என்ஜாய்
பண்ற டிரிப்.. அது இது னு சொல்லி என் மனசை
மாத்திருவ.. அதான் உனக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு
உன்கிட்ட சொல்லலை.. “ என்றான்...
அபியும் அசடு வழிந்து பின் இருவரையும் பார்த்து
"சரி வாங்க போகலாம்.. “ என்று சொல்லி, காரை நோக்கி சென்றான்..
Comments
Post a Comment