பூங்கதவே தாழ் திறவாய்-18

 


இதழ்-18

 

பார்த்த உடன் தன் மனதில் குடியேறி சிம்மாசன இட்டு அமர்ந்து கொண்ட தன் இதய தேவதையின் அலைபேசி எண்ணை வாங்க வில்லையே...

அவளை இன்னும் இரண்டு நாட்களுக்கு பார்க்க முடியாதே என்று ஏங்கி கொண்டிருந்தவனுக்கு, அந்த தேவதையே நேரில் வந்து இன்று முழுவதும் உன் கூடத்தான் இருக்க போகிறேன் என்று சொல்ல, அந்த உற்சாகத்தில் துள்ளி குதித்தான் உள்ளுக்குள் அபிநந்தன்....

மூவரும் முன்னே நடந்து காரை அடைந்தனர்...

அபி ஏற்கனவே மலைப்பாதையில் கார் ஓட்டியிருப்பதால் அவர்கள் அங்கு ஒரு சொகுசு காரை வாடகைக்கு எடுத்திருந்தனர்... அபியே கார் ஓட்டுவதாக சொல்லி இருக்க, அவன் ஓட்டுனர் இருக்கைக்கு செல்ல, இன்னொரு நண்பன் முன்னால் வந்து அபியுடன் அமர்ந்து கொள்ள தீக்சா பின்னால் அமர்ந்து கொண்டாள்..

ஆன்ந்த் ம் மற்ற இரண்டு நண்பர்களும் பின்னால் அமர்ந்து கொள்ள அவர்களுடன் சகஜமாக பேசி சிரித்து  கொண்டு வந்தாள் தீக்சா...

அதை கண்ட அபிக்கு காதில் புகை வந்தது..

“சே.. பேசாம எனக்கு ஓட்ட தெரியாதுனு சொல்லி இருந்திருக்கலாம்.. இப்ப பார் அவள் அருகில் அமர்ந்து அவளுடன் அரட்டை அடிக்கும்  வாய்ப்பு இல்லாமல் போச்சே...

இப்படி பக்கத்தில இருந்தும்  அவள் அருகில் அமர வாய்ப்பு இல்லையே.. “ என்று  புலம்பியவாறு தன் காரை  ஓட்டி கொண்டிருந்தான்....

அருகில் அமர முடியாவிட்டால் என்ன??.. அவளை ஆசை தீர பார்த்து கொண்டே வரலாம் என்று சிரித்தவன்  முன்னால் இருந்த கண்ணாடியை நன்றாக திருப்பி அவள் முகம் தெரியுமாறு வைத்து கொண்டான்...

பின்னால் அமர்ந்திருந்த மூவருமே நல்ல காமெடியாக பேச  தீக்சா விழுந்து விழுந்து சிரித்தாள்..

முன்னால் அமர்ந்திருந்த மற்ற ஒரு நண்பனும்  அப்பப்ப திரும்பி கமெண்ட் பண்ண, அந்த  நால்வரும்  தீக்சாவுடன் சகஜமாக பேசி கொண்டு வர அபி மட்டும் மனதுக்குள் அவன் நண்பர்களை திட்டிக் கொண்டே அமைதியாக காரை ஓட்டிக் கொண்டு வந்தான்....

“ஆமா.. உங்க பிரண்ட் பேச மாட்டாரா?? “ என்று அபியை சுட்டி காட்டி   வம்பு இழுத்தாள்...

“நீ வேற தீக்சா... நீ வருவனு நைட் சொல்லி இருந்தால் உன்னை கூட்டி வரக்கூடாதுனு தடா போட்டிருப்பான்.. அதான் அவன் கிட்ட சொல்லலை..

அந்த  அளவுக்கு பொண்ணுங்கனா ஒதுங்கி இருப்பான்... கொஞ்சம் கூச்ச சுபாவம் உள்ளவன்... “  என்று சிரித்தான் ஆனந்த்..

அபி திரும்பி பார்த்து அவனை முறைத்து தன் பல்லை கடிக்க, திக்சா வோ விழுந்து சிரித்தாள்

“அப்படியா மிஸ்டர் நந்தன?? அவ்ளோ நல்லவராராரா நீங்ககக...” என்று இழுத்தாள்...

அவனும் அவளை முன்னால் இருந்த கண்ணாடி வழியாக பார்த்து குறும்பாக கண் சிமிட்ட, வாயடைத்து போனாள் தீக்சா...

அதன் பிறகு அவன பக்கமே திரும்ப வில்லை...

வழியில் ஒரு இடத்தில் நின்று  காலை உணவை முடிக்க, அந்த மலை குன்றின் அடிவாரத்தில் குளிர ஆரம்பித்தது ..

அப்பொதுது தான் தெரிந்தது அவள்  ஸ்வெட்டர் எடுத்து வராதது...

தன்  கைகளை  நன்றாக  தேய்த்து விட்டு கொண்டாள்...

காலை உணவை கலகலப்பாக முடிய அபியும் அவர்களுடன் கிண்டல் பேச்சில்  இணைந்து கொள்ள ரொம்ப நாள் பழக்கம் போல தீக்சாவும் அந்த ஐவருடன் ஒட்டி கொண்டாள்...

மற்றவர்கள் அவளுடன் நட்புடன் பழகினர்... ஆனால் அபியின் பார்வை மட்டும் அப்பப்ப காதலுடன் அவளை தழுவி சென்றது..

அதை  ஓரக்கண்ணால் கண்டாலும் அவள் எதுவும் கண்டு கொள்ளவில்லை...

மீண்டும் பயணத்தை ஆரம்பிக்க, இப்பொழுது சில விளையாட்டுக்களை ஆட ஆரம்பித்தனர்.. கார்ட்ஸ் ஆட ஆரம்பித்தனர்.. அதை  கண்டதும் சின்ன  குழந்தையாக துள்ளி குதித்தாள் தீக்சா..

“ஐ... ரொம்ப நாளாச்சு இது மாதிரி விளையாண்டு.. வீட்டில் அப்பா  அம்மா கூட் சேர்ந்து விளையாடியது...  இபப கொஞ்சம் பிசியில டச்சே விட்டு போச்சு..” என்று  சிரித்தவாறு அவர்களுக்கு இணையாக அவளும் ஆடினாள்...

ஆனந்த் ஒரு சீட்டை  ஒளித்து வைக்க அதை கண்டவள் அவன் முதுகில் செல்லமாக அடித்தாள்...

அதை  கண்டு  ஏனோ  அபிக்கு பொறாமை  எதுவும் வரவில்லை. அவளின் கள்ளம் கபடமற்ற அந்த நட்பு மட்டுமே தெரிந்தது..

ஆனந்த் ம் மற்ற நண்பர்களும்  மற்ற பெண்களிடம் கடலை போடுவதை போல இல்லாமல் ஒரு உண்மையான நட்புடன் அவளுடன்  பழக, அந்த பயணம் வெகு அருமையாக இருந்தது அனைவருக்கும்....

தியம் அந்த மலையின் உச்சியை அடைந்தனர்... காரை நிறுத்தி  விட்டு இறங்கினர் ...

அந்த மலையின் அழகை கண்டு வாயடைத்து நின்றாள் தீக்சா...சிறு பிள்ளையாக இங்கும் அங்கும் ஓடினாள்..

அவளின் குதூகலத்தை கண்டு அந்த நண்பர்கள் எல்லாருமே உற்சாகமானார்கள்.. ஒருவரை ஒருவர் துரத்தி விளையாண்டும்  கிண்டல் பண்ணி சிரித்து மகிழ்ந்தனர்...  பின் போட்டோ எடுக்க என்று நேரம் பறந்தது..

அபிதான் அங்கு இருந்தவர்களில்  உயரமாக இருக்க, இரண்டு நாள் முன்பு புதிதாக வாங்கி இருந்த  அவனுடைய ஐபோனில் செல்பி எடுத்து கொண்டனர்...

விதவிதமான போஸ்களில் எடுக்க, சில படங்கள் மட்டும் தீக்சா தனியாக இருக்கும் பொழொதும் அந்த இயற்கையை கொஞ்சி விளையாடும் பொழுதும் அவள் அறியாமல்  எடுத்திருந்தான்...

அதோடு அவளுடன் நின்று  கொண்டிருக்கும் பொழுது தாங்கள் இருவர் மட்டும் வைத்து  அவள் அறியாமல் செல்பி எடுத்து கொண்டான்..

மதிய உணவு கீழ இருந்து வாங்கி சென்றிருக்க, அதை  உண்டவர்கள்  மேலும் சுற்றி பார்த்தனர்...

மாலை நான்கு மணி ஆகியிருக்க, அந்த நால்வரில் ஒருத்தன் நெழிந்தான்.. மற்றொருவன் கண்ணால் ஏதோ ஜாடை காட்டினான்... ஆனந்த மறுப்பு சொல்லி தீக்சாவை காட்டி  கண்ணால் ஜாடை செய்தான்...

அதை கண்டு கொண்டவள்

“என்னாச்சு பிரண்ட்ஸ்?? எனி பிராப்ளம்?? “  என்றாள்...

அதில் ஒருவன் ஹீ ஹீ ஹீ என்று இழுத்தவாறு அபியை பார்க்க அவனும் அவர்களை பார்த்து  முறைத்தான்..

“ஐயோ.. என்னானு  சொல்லுங்களேன்.. இப்படி ஒருத்தரை  ஒருத்தர்  பார்த்து முழிச்சு கிட்டி ருக்கீங்க??.. “  என்றாள் சிறு கடுப்புடன்...

ஆனந்த் தான் ஆரம்பித்தான்..

“வந்து தீக்சா. பசங்க இந்த மாதிரி  மலையில குளிருக்கு சரக்கு அடிச்சா சூப்பரா இருக்கும் னு சரக்கு வாங்கி வந்திருக்காங்க.. அதன் உன் முன்னாடி எப்படி அடிக்கிறது??? நீ எதுவும் தப்ப எடுத்துக்குவியோனு  தயங்கறானுங்க?  “ என்றான் தலையை சொரிந்தவாறு..

அதை கேட்டு அபி கடுப்பானான்

“டேய்.. நேற்றே சொன்னேன் இல்ல அதெல்லாம் இங்க கூடாதுனு.. வந்து ஜாலியா சுத்தி பாருங்க... இந்த கிளைமேட் எஞ்சாய் பண்ணுங்கடானா சரக்கு வேணுமாம்.. “ என்று  திட்டினான்...

“டேய் மச்சான்.. இந்த மலைக்கும், இங்க இருக்கிற குளிருக்கும்  சரக்கு அடிச்சா தான்டா  செட் ஆகும்....

இதுல கிடைக்கிற  ஒரு சுகம் இருக்கே .. சான்சே  இல்லை.. உனக்கு எங்க அதெலாம் தெரிய போகுது.. நீதான் பாட்டிலை  கண்டாலே 1 கிலோ மீட்டர் ஓடுவியே... “ என்றான் மற்றொருவன்....

அதை கேட்டு அபி இன்னும் அவனை முறைத்தவாறு ஏதோ சொல்ல வர அதற்குள் குறுக்கிட்ட தீக்சா

சே.... இவ்வளவு தானா ?? இதுக்கு போய் எதுக்கு இவ்வளவு யோசிக்கறீக்க??... நீங்க தாராளமா தண்ணி அடிங்க... நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்..

எனக்கு உங்க கூட கம்பெனி கொடுக்க ஆசைதான்.. ஆனால் இதெல்லாம் எனக்கு பழக்கமில்லை...

அடுத்த முறை பார்க்கிறப்ப பழகிக்கறேன்... ” என்று குறும்பாக சிரித்து  கண் சிமிட்டினாள்..   

“வாவ்.. சூப்பர் தீக்சா... உன் புருசன் ரொம்ப கொடுத்து வச்சவன்.. இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்க... “  என்றான் ஆனந்த் சிரித்தவாறு...

அவள் பார்வை எதேச்சையாக அபியிடம் செல்ல அவனுமே இவளையே தான் பார்த்து கொண்டிருந்தான்.. இவள் பார்வையை சந்தித்தவன் குறும்பாக கண் சிமிட்டி தன் இல்லாத காலரை தூக்கி விட்டு கொண்டான்...  

அதை கண்டு கன்னம் சிவந்து தன் பார்வையை மாற்றி  கொண்டாள்...

பின் அவர்கள் ஹோட்டலில் இருந்து எடுத்து வந்திருந்த பெரிய பெட்ஷீட்டை விரித்து போட்டு காரில் டிக்கியில் இருந்த சரக்கு பாட்டில்களையும் அதற்கு பொருத்தமான சைடிஸ்  ஐட்டங்களையும் கொண்டு வந்து கடை பரப்பினர் அந்த நண்பர்கள்...

அதை கண்ட தீக்சா வாயை பிளந்தாள்..

“5 பேருக்கு இவ்வளவா?? “ என்றாள்.

“5 பேர் இல்லை தீக்சா 4 பேர் மட்டும் தான்.. அபி மச்சான் இதெல்லாம் தொட மாட்டான்... ரொம்பபபப நல்லலலலவன்.... “ என்று  இழுத்தான் ஆனந்த்...

“அச்சோ.. அப்ப அவருக்கு வரப்போற பொண்டாட்டி பாவம்.. இப்படி ஒரு நல்லவரை கட்டி கிட்டு எந்த கஷ்டத்தையும் அனுபவிக்காமல் கஷ்ட படப் போறா.. “ என்று அபியை பார்த்து கண்ணடித்தாள் தீக்சா...

அவளின் குறும்பை ரசித்தவன் அழகாக புன்னகைத்தான்..

ஏனோ அந்த புன்னகை அவளை  கட்டி இழுத்தது.... ரகசியமாக அதை தன் மனதுக்குள் படம் பிடித்தாள்...

அவர்கள் தண்ணி அடிப்பதை தன் அலைபேசியில் பதிவு செய்து கொண்டாள்..

அவர்கள் அழகாக அந்த பாட்டிலை ஓபன் பண்ணுவதும் பின் அதை மிக்ஷ் பண்ணி டம்ளரில் ஊற்ற அந்து பொங்கி வரும் அழகையும் கண்டு அதிசயித்தாள்..

“சே.. உங்கள பார்த்தால் எனக்கும் கூட சேர்ந்து அடிக்கணும் போல இருக்கு... “ என்றாள் சிரித்தவாறு..

“வேணும்னா நீயும் ட்ரை பண்ணு தீக்சா.. “ என்று இழித்தான் ஒருத்தன்...

அவனை முறைத்த அபி

“டேய்.. உங்க நாலு பேரை நான் கூட்டிட்டு  போய் சேர்ப்பதே பெருசு.. இதுல இவ வேறயா ??.. வேணாம் டா... நீங்க எஞ்சாய் பண்ணுங்க..

ரொம்ப லிமிட் தாண்டாமல்  பார்த்துக்கங்க.. நாங்க போய் மீதி இருக்கிற இடத்தை எல்லாம் சுத்தி பார்த்திட்டு வர்ரோம்..  நீ வா தீக்சா.. “ என்று  கை பிடித்து இழுத்து சென்றான்..

எங்கே இவளும் அவனுங்க ஜோதியில் ஐக்கியம் ஆய்டுவாளோ  என்று பயந்து...

“ஹீ ஹீ ஹீ மச்சான் நீ நல்லாலாலா  சுத்தி பார்.. நாங்க லிமிட் தாண்டவே மாட்டோம்.. “ என்றவாறு அவர்கள் உலகத்திற்குள் செல்ல ஆரம்பித்து இருந்தனர்....

வள் கை பிடித்து இழுத்து சென்றவன் சிறிது தூரம் சென்றதும் அவள் கையை விட மனம் இல்லாமல் அந்த கையை பிடித்து கொண்டே இருந்தான்....

அந்த இயற்கை அழகை மீண்டு ரசிக்க,  அவன் அருகில் இருந்தவள் கையை பிடித்திருந்த அவன் கை தானாக கீழிறங்கி அவள் விரல்களுடன் இணைய முயல, அதற்குள் தன் கையை இழுத்துக் கொண்டாள் தீக்சா....

அவனோ  ஏமாற்றத்துடன் அவளை பார்த்து

“ஏன் பொண்டாட்டி.. நான் உன் விரலை தொட பிடிக்கலையா?? “ என்றான் ஏக்கத்துடன்....

“லுக் மிஸ்டர் அபிநந்தன்.. நேற்று தான் ஏதோ உளறீனீங்கனு விட்டுட்டேன்.. திரும்பியும் இந்த பேச்சை ஆரம்பிக்காதிந்க்க..

உங்க பிரண்ட்ஸ்  எல்லாம் உங்களை  எவ்வளவு நல்லவர் னு சர்டிபிகேட் கொடுக்கறாங்க... ஆனா நீங்க?? “ என்று செல்லமாக முறைத்தாள் தீக்சா..

“ஹா ஹா ஹா .. நான் நல்லவன்.. ரொம்ப நல்லவன் தான்... எப்பவும் என் லிமிட்டிற்குள் இருப்பவன் தான் பேபி...

ஆனா என் பொண்டாட்டி கிட்ட மட்டும் கொஞ்சம் கெட்டவன்... என் லிமிட் தாண்டி அவளை சீண்டுபவன்.. என்ன செய்ய ?? அவளை பார்த்தாலே அவள் என்னை கெட்டவனா மாத்திடறா !!! “ என்று குறும்பாக சிரித்து  கண்ணடித்தான்...

“இது என்ன பொண்டாட்டி னு சொல்லி கிட்டு.. உங்களுக்கு அந்த ரைட்ஸ்  யார் கொடுத்தாங்களாம்?? “ என்றாள் மிடுக்காக

“ஹா ஹா ஹா என் பொண்டாட்டி கிட்ட நான் ஏன் பெர்மிசன் கேட்கணும்??... ஏற்கனவே அவள் என்னுள் கலந்து விட்டாள்.. இனி நான் வேறு அவள் வேறு இல்லை... “ என்றான் இலகிய நிலையில் கண் மூடி...

அவன் நிலையை கண்டு அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது..

“இப்படி கூட பார்த்த உடனே காதல் வருமா?? அதுவும் இந்த அளவுக்கு ??  அவன் உருகும் அளவுக்கு அப்படி என்ன இருக்கிறது ?? “ என்று அவசரமாக ஆராய்ந்தாள் தீக்சா...

ஆராய்ந்து புரிவது அல்ல காதல்.. அது அனுபவித்து உணர வேண்டும்... என்பதை அந்த நொடியில் மறந்து  இருந்தாள்...

“நந்தன்.. திரும்பவும் இப்படி ஏதாவது உளறினீங்க நான் திரும்ப போய் உங்க பிரண்ட்ஸ்  கூட ஐக்கியம் ஆய்டுவேன்...பி கேர்புல்... “ என்று விரல் நீட்டி மிரட்ட. அவனும் சிரித்து கொண்டே

“ஓகே ஒகே.. சரி வா.. இந்த  இடத்தை சுத்தி பார்க்கலாம்... “ என்று முன்னே சென்றனர்....

ஒவ்வொரு இடமாக நின்று ஒவ்வொரு காட்சியையும் ரசித்து  பார்த்தனர்....

தலைக்கு மேல் தொட்டு சென்ற மேகங்களும் உடலை தீண்டி உயிர் வரை பரவிய இலேசான குளிரும் பக்கத்தில் அவன் மனம் கவர்ந்தவள் அவனை ஒட்டி நிற்க, அபியின் மனம் அப்படி ஒரு பரவசம் அடைந்தது...

தீக்சாவிற்கோ இந்த மாதிரி உயரமான மலைபிரதேசத்திற்கு வந்திருப்பது இதுதான் முதல் முறை என்பதால் துள்ளி குதித்தாள்....

ஒவ்வொரு பகுதியும் மனதை அள்ளியது அவளுக்கு ..

“பச்சை பசேல் என்று எங்கு பார்த்தாலும் வானுயர்ந்த மரங்கள்.. அருகில் கொட்டும் அருவி.. அமைதியான அந்த சூழலில் கூடவே இலேசாக குளிர ஆரம்பித்து இருந்த குளிர் என்று அவளுக்கும் அந்த நொடி  ரம்மியமாக இருந்தது....

அந்த இடத்தை சுற்றி வந்தவர்கள் அங்கு ஒரு சின்ன கோயில் போல இருக்க

“அட...  நம்ம ஆளுங்க இந்த மலையையும் கூட  விட்டு வைக்கலை போல.. இங்கயும்  ஒரு கல்லை வச்சு  சாமியாக்கிட்டாங்க போல... “ என்று  கிண்டலுடன் அதற்குள் நுழைந்தான் அபி...

தீக்சாவும் அதன் உள்ளே செல்ல, சிறிய கோவில் அது...சிலை போல ஏதோ ஒரு கல் இருந்தது அங்கே..

எப்பயோ பூஜை பண்ணியதற்கான அடையாளமும் எப்பயாவது யரோ இங்கு வருவார்கள் போல இருக்க, அந்த சாமி மாதிரி இருந்ததை  கண்டு பழக்க தோசத்தில் கண் மூடி நின்றாள் தீக்சா...

ஏனோ..  அந்த ஒரு இயற்கை சூழலில்  அவள் மனம்  ஒரு பரவச நிலையில் இருந்தது....

“இதுவரை என் வாழ்வில் எல்லாம் நான் நினைத்த மாதிரி தான் நடந்திருக்கு.. இனி வரும் வாழ்வும் அதே மாதிரி அமையட்டும்...  மகிழ்ச்சியும் சந்தோசமும் நிறைந்து இருக்கட்டும்... “ என்று  கண் மூடி பிரார்த்தித்தவள் விழி விரித்து பார்க்க அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் தீக்சா...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!