பூங்கதவே தாழ் திறவாய்-19

 


இந்த நாவல் ஏற்கனவே ஆடியோ நாவலாக வெளிவந்துள்ளது. 

ஒலி வடிவில் கேட்டு மகிழ, கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க...நன்றி!! அன்புடன் பத்மினி செல்வராஜ்.


பூங்கதவே தாழ் திறவாய் - ஆடியோ நாவல்..!


மற்ற அத்தியாயங்களை படிக்க  கீழ உள்ள லிங் ஐ கிளிக் பண்ணுங்க.


பூங்கதவே தாழ் திறவாய் - All Episodes


இதழ்-19

 

ண் மூடி பிரார்த்தித்தவள் கண் விழிக்க, எதிரில் வெகு அருகில் நின்று அவள் கழுத்தில எதையோ போட்டிருந்தான் அபிநந்தன்...

திடுக்கிட்டவள் என்னவென்று  குனிந்து பார்க்க,  அபிநந்தன் போட்டோ வைத்து லாக்கெட் உடன் இருந்த தங்க செயின் ஒன்று அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்தது...

அவன் கழுத்தில் அணிந்து  இருந்த அந்த  செயினை  கழற்றி அவள் கழுத்தில் அணிவித்திருந்தான்... 

என்னவென்று  புரியாமல் தீக்சா முழிக்க, அவனோ  தன் கையில் இருந்த குங்குமத்தை எடுத்து அவள் வகிட்டில் வைத்து

"இந்த இயற்கை சாட்சியாக, இந்த தென்றல் சாட்சியாக, இந்த அருவி சாட்சியாக, அந்த ஆதவன் சாட்சியாக உன்னை என்னவளாக்கி கொண்டேன் கண்மணி...

நான் உன் கழுத்தில் போட்டது  வெறும் செயின் மட்டும் அல்ல.. அது என் உயிர்... என் உயிரையே உன்னிடம் ஒப்படைத்து விட்டேன்.. அதை பத்திரமாக பார்த்துக் கொள்...

 திருமணத்தில் போடும் மங்கல்யத்திற்கு இணையானது இது...

இப்ப நமக்கு நடந்தது  திருமணம்....

இன்றிலிருந்து இந்த நொடியில் இருந்து  நீ என் மனைவி... என்னவள்.. இந்த அபிநந்தனின் மூச்சு, உயிர்.. எல்லாம் நீதான்.... "  என்றான் காதலுடன் இலகிய நிலையில்...

தீக்சா வோ இன்னும் அதிர்ச்சி விலகாமல் ஆணி அடித்த மாதிரி இல்ல இல்ல வேர் பிடித்த மாதிரி நின்று  கொண்டிருந்தாள்....

"ரதி.... இது உனக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும் என்று  தெரியும்..

ஆனால் என்னை கட்டு படுத்த முடிய வில்லை.. நேற்றே சொன்ன மாதிரி உன்னை இப்பயே என்னவளாக்க்கி கொள்ள துடித்தது  என் இதயம்.. அதன் கட்டளையை என்னால் மீற முடிய வில்லை..

இது வெறும் உடற்கவர்ச்சியால்  ஆன காதல் இல்லை.. உன்னை உணர்ந்த பொழுது உன்னில் என்னை  கண்ட பொழுதே நீதான் என்னவள் என்று முடிவு செய்து விட்டேன்...  

எத்தனை நாட்கள் ஆனாலும் நீதான் என் துணைவி.. அதற்கு சாட்சியாகத்தான் இந்த திடீர் கல்யாணம்....

ப்ளீஸ் .. என்ன மன்னிச்சிடு.. என் காதலை,  என்னை புஞ்சுக்கோ... " என்று  இறைஞ்சினான் அபிநந்தன்.... 

அவள் இன்னும் அப்படியே நிக்க ஏதோ நினைவு வந்தவன் தன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த அந்த சிறிய  பெட்டியை திறந்து அதில் இருந்த மோதிரத்தை எடுத்து

“முன்பு சொன்ன மாதிரி இந்த இயற்கை சாட்சியாக சத்தியம் செய்கிறேன்... உன்னை எப்பொழுதும் கண் கலங்காமல் உன் பெற்றோர்  எப்படி உன்னை  பார்த்து கொண்டார்களோ அதுக்கு மேல் உன்னை என் கண்ணுக்குள் வைத்து  பார்த்துக் கொள்வேன் கண்மணி....

ஐ லவ் யூ மேட்லி.... நீ எனக்கானவள்...  என்னிடம் வந்துவிடு... " என்று கூறி அவள் முன் மண்டி இட்டு அந்த மோதிரத்தை  அவள் விரல் பிடித்து அணிவித்து பின் மெல்ல தன் இதழால் முத்தமிட்டான் அவள் மெல்லிய கைக்கு...

இன்னுமே அதிர்ந்து தான்  போனாள் பெண்ணவள்...

எப்படி ரியாக்ட் பண்ணுவது என்று புரியாமல் அந்த பெண்ணவள் குழம்பி நின்றாள்...

அவளின் மனநிலையை புரிந்து கொண்டவன் மெல்ல எழுந்து, அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்து கொண்டவன்

"ப்ளீஸ் ரதி .. என்ன திட்டறதனாலும் என்னை திட்டி விடு.. இப்படி மனசுக்குள்ள வச்சுக்காத... என் மனசுல இருக்கிறதை எல்லாம் உன் கிட்ட கொட்டிட்டேன்...

இந்த கெட்டவனை, பொறுக்கியை கொஞ்சம் மனசு இறங்கி மன்னித்து விடேன்.... என் காதலை புரிஞ்சுக்கோயேன்.... " என்றான் கெஞ்சலாக.....

அதில்,  அவன் அணைப்பில் ஓரளவுக்கு தெளிவுக்கு  வந்தவள்

"யூ...  சீட்டர்.. பிராட்... இடியட்.. ஸ்டுப்பிட்.. ராஸ்கல்... " என்று  அவன் மார்பில் குத்தியவள் பின் புன்னகைத்தவாறு அவன் மார்பில் சாய்ந்து கொண்டு அவனில் புதைத்து கொண்டாள் விழியோரம் சிறு  துளி நீருடன்....

அவ்வளவுதான் அபிக்கு .. அந்த இமயத்தின் உயர்ந்த சிகரமான  அந்த எவரெஸ்ட் ஐ யே தொட்டுவிட்ட மாதிரி இருந்தது.. அப்படியே துள்ளி குதித்தான் மனதுக்குள் ...

தன் மார்பில் புதைந்திருந்தவளை அப்படியே இறுக்கி அணைத்து கொண்டான் ..

இருவருமே மோன நிலையில் தங்களை  மறந்து ஒருவரில் ஒருவரக கலந்து கொண்டிருந்தனர்...

அதை பொருக்காமல் ஒரு அணில் கீச் என்று சத்தமிட  அதில் தன்  சுய உணர்வுக்கு வந்தாள் தீக்சா....

உடனே தன் நிலை புரிந்து துள்ளி குதித்து அவனிடமிருந்து விலகினாள்...

சிறிது தள்ளி நின்று கொண்டவள் அப்பொழுதுதான் நடந்தது புரிய

What is this non-sense மிச்டர் அபிநந்தன் ?? “ என்றாள் முகத்தில் கோபம் கொப்புளிக்க..

இதுவரை இந்த மாதிரி ஒரு கோபத்தை  அவள் முகத்தில் கண்டதில்லை அவன்...

அவள் மீது மோதிய போதும் அவன் காதலை நேற்று  சொல்லிய போதும் கூட புன்னகைத்தே  சென்றவள் இன்று  முகம் செந்தனலாக ஜொலித்தது....

ஆனால் அபிநந்தனோ  அதை கண்டு கொள்ளாமல் குளிர் நிலவாக தன் மார்புக்கு குறுக்காக கைகளை கட்டி கொண்டு

“ஹா ஹா ஹா non-sense இல்ல ரதி பேபி ...  இதுதான் sense .. “ என்று குறும்பாக சிரித்தான்...

What sense ?? இப்படித்தான் செய்வீங்களா?? என்ன நினைச்சுகிட்டிருக்கிங்க உங்க மனசுல?? “ என்றாள் இன்னும் அதே கோபம் கொப்புளிக்கும் குரலில் அவனை முறைத்தவாறு..

“ஹா ஹா ஹா நான் என்ன  நினைச்சுகிட்டிருக்கேனு தான் முன்னாடியே சொல்லிட்டேனே  பேபி... அதை  செஞ்சும்  காட்டிடேன்..

ஓ இன்னொரு தரம் என் வாயால சொல்லணுமா?? ஸ்யூர்   சொல்லிட்டா போச்சு.... “

“ஐ லவ் யூ கண்மணி...இந்த இயற்கை சாட்சியாக....  “ என்று மீண்டும் தன் காதல் வசனத்தை ஆரம்பிக்க,

அவள் கையை வேகமாக முன்னே  நீட்டி போதும் என்ற பொசிசனில் வைத்தவள்

“இது என்ன பைத்தியக் காரத்தனம்.. யாரை கேட்டு இப்படி செஞ்சீஙக?? “ என்றாள் குரலில் கொஞ்சம் ஸ்ருதி இறங்கி....

“ஹ்ம்ம் பைத்தியம் தான் பேபி.. உன்னை பார்த்ததில் இருந்தே உன் மேல் பைத்தியமாதான் சுத்தி கிட்டிருக்கேன்... அப்புறம் யாரை கேட்டு செஞ்சீங்கனு தான கேட்ட...

என் பொண்டாட்டிய கேட்டுத்தான் செஞ்சேன்.. அவ மனசு சொன்னதை வச்சுதான் இப்படி செஞ்சேன்... வேண்டும் என்றால் இன்னோரு தரம் அவள் மனசை கேட்டு சொல்லவா?? “ என்றான் மார்பின் குறுக்காக கைகளை கட்டி கொண்டு அதே குறும்பு சிரிப்புடன்....

“அதெல்லாம் ஒன்னுமில்லை.. அவ மனசுல எதுவும் இல்லை.... நீங்க வீணா எதுவும் உளறாதிங்க... “ என்றாள் இன்னும் கொஞ்சம் ஸ்ருதி இறங்கி....

“அடடா...  உண்மை தெரிஞ்ச உடனே என் பொண்டாட்டி குரல் ல ஸ்ருதி இறங்கிடுச்சே.. என்று மீண்டும் சிரித்தான்...

“என்ன உண்மை?? “ என்றாள் மிடுக்காக வராத கோபத்தை வரவழைத்து கொண்டு....

“ஹ்ம்ம்ம் அதை நீதான் சொல்லணும்... உன் மனதில் இருப்பதை .. உன் இதயத்தில் இந்த  அபிநந்தன் குடியேறி அசைக்க முடியாமல் அமர்ந்து விட்ட உண்மையை நீதான் சொல்லணும்  ரதி பேபி... “ என்றான் அதே குறும்பு மாறாமல்....

“திரும்ப திரும்ப உளறாதிங்க.. அப்படி எதுவும் இல்லை.. “ என்றாள் தரையை பார்த்தவாறு...

“சரி அப்படியா ??... அப்ப என் கண்ணை பார்த்து சொல்.. உனக்கு என் மேல் விருப்பம் இல்லை?? ... உனக்கு என்னை பிடிக்கவில்லை?? .. உன் இதயத்தில் நான் இல்லை என்று ... “ என்றான் கொஞ்சம் சீரியசாக....

“எனக்கு என்ன இப்பவே சொல்வேன்... “ என்றவள் மிடுக்காக அவன் கண் நோக்க, அந்த கண்ணில் தெரிந்த காதலும் அவள் மீதிருந்த பாசம் ஏக்கம் என்ற என்னத்தை கண்டாளோ அப்படியே வாயடைத்து நின்றாள் ...

“எனக்கு உங்களை பிடி... “ என்று  சொலல  வந்து அதற்கு மேல் முடியாமல் நிலம் பார்த்தாள் கண்ணின் ஓரம் இலேசான ஈரத்துடன்....

“ஹா ஹா ஹா... என்னாச்சு என் பொண்டாட்டிக்கு வார்த்தை வரவில்லையோ... நான் வேணா பில்லப் பண்ணவா... எனக்கு உங்களை  பிடிக்கும்...  உங்களை மட்டும் தான் பிடிக்கும்... இதுதான சொல்ல வந்த?? “ என்றான் மீண்டும் குறும்பாக சிரித்தவாறு...

தன் தோல்வியை ஒத்து கொள்ள முடியாமல் உதட்டை கடித்து கொண்டு  மீண்டும் நிலம் பார்த்தாள்....

“ரதி... உன்கிட்ட பிடித்ததே நீ உன் மனசுல இருக்கிறதை  பட்டுனு வெளில சொல்லிடறது தான்.. அதுவும் யாருக்கும் அஞ்சாமல் தைர்யமாக முகத்துக்கு நேராக பார்த்து சொல்வியே அந்த  குணம்தான்....

நேற்று உன்கிட்ட நான் வழிஞ்சு நின்னப்போ எப்படி பட்டுனு கேட்ட.. அதே மாதிரி இப்ப உன் மனசில இருக்கிறதையும் தைர்யமா சொல்.. எதுக்கு பயம்??

சரி... நீ வாய் திறந்து சொல்ல வேண்டாம் .. உன் கண் அசைவு போதும் உன் சம்மதத்தை நான் வெளிப்படையாக தெரிந்து கொள்ள...

இப்ப நல்ல பிள்ளையா என்  செல்ல பொண்டாட்டியா என் கிட்ட ஓடி வருவியாம்... “ என்று அவன் கை நீட்டி அழைக்க, அதற்கு மேல் தாங்க முடியாமல் ஓடி வந்து அவன் கைகளுக்குள் புகுந்து அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் தீக்சா...

அவனும் அவளை இறுக்கி அணைத்து கொண்டான்...

அவளை அப்படியே தன்னுள் புதைத்து கொள்ள துடிக்கும் வேகம் அந்த அணைப்பில்....

அதில் இன்னும் நெகிழ்ந்தவள் அவன்  மார்பில் வாகாக சாய்ந்து கொண்டாள்.. சில நிமிடங்கள் கழித்து மெல்ல தன் தலையை  தூக்கி அவன் முகம் பார்த்தவள்

“எப்படி கண்டுபிடிச்சிங்க நந்தன்?? “ என்றாள் ஆர்வமாக

“ஹா ஹா ஹா இதை  கண்டுபிடிக்கிறது  கஷ்டமா?? நான் தான் உன் மனசுக்குள்ள இருக்கேனே ..

நீ என்ன நினைக்கிற என்பதெல்லாம் தானா இங்க ட்ரான்ஸ்பர் ஆகிடும் ரதி பேபி.. “ என்று அவன்  இதயத்தை  தொட்டு காண்பித்தான்....

“ஐய... இந்த கதையெல்லாம் வேண்டாம்.. நானும் நிறைய தமிழ் படம் பார்த்திருக்கேன்.. உண்மையை சொல்லுங்க.. எப்படி கண்டு பிடிச்சீங்க?” என்று அவன் மார்பில் செல்லமாக குத்தினாள்...

“ஹா ஹா ஹா...ஸ்மார்ட்  பொண்டாட்டி....” என்று  சிரித்தவன் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு கொண்டு

“ஹ்ம்ம்ம் உன் கண்தான் காட்டி கொடுத்துச்சு பேபி.. நான் நேற்று ஐ லவ் யூ சொன்னப்போ உன் கண்ணுல தெரிஞ்சுது உனக்கும் என் மேல் ஆர்வம் இருக்கிறத...

அப்புறம் இன்று  காலையில் என்னை பார்த்ததும் மீண்டும் ஒரு முறை உன் கண் டாலடித்தது...

“அது சும்மா கூட இருக்கலாம் இல்லை?? என்றாள் வேண்டுமென்றே..

“ஹா ஹா ஹா அதே கண்ணு  சும்மா கூட ஆனந்த் பக்கம் பார்த்து டாலடிக்கலையே... அப்புறம் காரில் வரும்பொழுது நீ என்னையே சைட் அடிச்சதை பார்த்துட்டேன்..

நான் பார்க்காத நேரம் ஓரகண்ணால நீ என்னையே ரசித்து  பார்த்ததை நான் பார்த்துட்டேன்.. அப்பயே தெரிஞ்சிடுச்சு.. நீயும் என்னை விரும்பறனு... ஆனால் உன்னால அதை வெளில சொல்ல முடியலை...

எவ்வளவு பெரிய வீராதி வீராங்கனை...இந்த காதலை சொல்வதற்கு ஏன் தான் இப்படி தயங்கினியோ ?? “ என்றான் சிரித்தவாறு...

அவனை முறைத்தவள்

“நீங்க பெரிய வீரர்தான்.. நேத்து பார்த்து அடுத்த நாளே காதலை சொல்லிய மாவீரர்தான்... அதுக்குனு இப்படியா?? கழுத்துல எதுக்கு செயின் எல்லாம் போட்டீங்க?? என்றாள் கொஞ்சலாக

“இது வெறும் செயின் இல்லை...உன்னை நான் மனதார என் மனைவியாக ஏற்று கொண்டதற்கான அடையாளம் அது...   

உன்னை பார்த்த உடன் நீதான் எனக்கானவள் என்று முடிவு செய்த பிறகு அந்த  கல்யாணத்தை ஊரை கூட்டி சொன்னா என்ன??  இல்லை இப்படி இயற்கையை  சாட்சியா வைத்து உன்னை என்னவளாக்கி கொண்டால் என்ன??  எனக்கு இரண்டுமே ஒன்றுதான்...

முன்பே சொன்ன மாதிரி எனக்கு இப்பயே உன்னை என்னவளாக்கி  கொள்ளனும் னு துடித்தது... அதான் இப்படி பண்ணினேன்...

சரி நீ சொல்.. எப்ப இருந்து என்  மீது உனக்கு  காதல் வந்தது??.. “  

இருவரும் அருகில் இருந்த தரையில்  அமர்ந்து கொண்டு அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டே கேட்டான் அபிநந்தன்...

அவளும் உரிமையுடன் அவன் தோள் மீது  சாய்ந்து கொண்டு  சிறிது யோசித்தவள்  

“நீங்க எப்படி என்னை பார்த்ததும் ஒரு பார்வையில் பிளாட் ஆனீங்களோ அதே மாதிரிதன் நானும் உங்களை பார்த்ததும் அந்த நொடியே தொலைந்து போய்ட்டேன்...

நான் அந்த படிகளில் ஏறி வரும்பொழுது நீங்கள் ஸ்டைலாக நின்னதும் ஒரு அசால்ட்டான  நேர்மையான பார்வை இன்னும் என்னென்னவோ ..

உங்களை பார்த்த  உடனே ஏதோ நீங்க எனக்கு ரொம்ப நாள் தெரிஞ்சவர்  மாதிரி இருந்தது....

உங்களை கடந்து  செல்லும்பொழுது நீங்கதான் எனக்கானவர் என்னவர் னு என் இதயம் அடித்து கொண்டது....

ஆனால் நீங்க அபி குரூப் ஆப் கம்பெனிஸ்  MD னு சொன்னதும் அந்த கம்பெனி பற்றி எனக்கு தெரியும்.. அப்பதான் உறைத்தது நீங்க எவ்வளவு பெரிய இடம்..

உங்களுக்கெல்லாம் காதல் என்பது டைம் பாசா கூட இருக்கலாம்.. அதனால்தான் நான் எச்சரிக்கையா உங்களை விட்டு தள்ளி நின்னு கிட்டேன்...

ஆனாலும் நீங்க விடாம என்னையே சுத்தி வந்தது  மனதுக்குள் குறுகுறு னு ஒரு இனம் புரியாத பரவசம்..

நிறைய பேர் காதலிக்கறேனு சொல்லி  என்கிட்ட  லவ் லெட்டர்ஸ்  நீட்டி இருக்காங்க.. ஆனல் அப்பல்லாம் எனக்கு ஒரு பீல் ம் தோணாது... அவர்களை பார்த்து சிரிப்புதான் வரும்..

ஏனோ  உங்களை  பார்த்த பிறகுதான் அதெல்லாம் உண்மை.. காதல் என்பது எவ்வளவு பெரிய பீல் என புரிந்து கொண்டேன்...

ஆனால் அதை வெளிப்படையாக் சொல்ல மனம் வரவில்லை... உங்களுடைய ஸ்டேட்டஸ் என்னை தள்ளி நிறுத்தி விட்டது...

கடைசியில் திருடன் நீங்க கண்டுபிடிச்சிட்டீங்க.. “ என்று  அவன் குண்டு கன்னத்தை பிடித்து கிள்ளினாள்...

அவள் கையை இழுத்து முத்தமிட்டவன்

”ரொம்ப தேங்க்ஸ் டா ரதி பேபி.. என்னை  புரிஞ்சுகிட்டதுக்கு.. என் காதலை ஏற்று  கொண்டதற்கு... “ என்று நெகிழ்ந்தான்...

“ஹ்ம்ம்ம் நந்தன் உங்க வீடல் என்னை ஏத்துப்பாங்களா ??  நீங்க எவ்வளவு  பெரிய ஆள்.. நான் ஏணி வச்சாலும் எட்டாது..அவ்வளவு உயரம்.... என்னை எப்படி?? ” என்றாள் சிறு கவலையுடன்..

“ஏணி எட்டலை னா ராக்கெட் வச்சுக்கலாமா என்னை தொட?? என்று  கிண்டலடித்தவன் பின் சீரியசாகி

“உன் மாமியார் மாமனாருக்கு ரொம்ப சந்தோசமாதான் இருக்கும் ரதி... நான் எப்ப கல்யாணம் பண்ணுவேனு காத்துகிட்டிருக்காங்க.. நான் யாரை கை காட்டினாலும்  அவங்களுக்கு சம்மதம் தான்....”

அங்க எபபடி?? “ என்றான்..

“ஹ்ம்ம்ம் எங்கப்பா  அம்மாவும் லவ் மேரேஜ் தான்.. அதனால் ஒன்னும் பிரச்சனை இல்லை...புரிஞ்சுப்பாங்க.. “ என்றாள்.

“பார்டா...என் மாமனார் என்னை விட பாஸ்டா  இருந்திருக்கார் .. அந்த காலத்துலயே லவ் மேரேஜ் பண்ணியிருக்காரே.. “ என்று சிரித்தான்...

பின் இருவரும் தங்களை பற்றி பகிர்ந்து கொள்ள நேரம் இனிமையாக கடந்து சென்றது..

அவர்களின் காதல் காவியத்தை தொடர்ந்து பார்க்க அந்த கதிரவனுக்கும் ஆசைதான்..ஆனால் அவன் கடமையை செய்ய வேண்டுமே.. அதனால் மனமே இல்லாமல் கீழிறங்க ஆரம்பித்திருந்தான்...

வெளிச்சம் குறைய ஆரம்பிக்க அப்பொழுதுதான் அந்த சூழ்நிலை புரிந்தது இருவருக்கும்...

அவர்கள் இருப்பது மலை மீது.. இன்னும் நன்றாக இருட்டுவதற்குள்  கீழிறங்கி செல்ல வேண்டும்..

மெதுவாக எழுந்தவர்கள் மீண்டும் அந்த கோவிலை விட்டு வெளியில் வந்து பார்க்க, அந்த ஆதவன் அப்பொழுதுதான் மறைந்து கொண்டிருந்தான் .. அந்தி மாலை  மஞ்சள் ஒளி அந்த மலை மீது பட்டு அந்த  பிரதேசமே பொன்னிறமாக காட்சி அளித்தது...

தன்னவளை தன்னுடன் சேர்த்து மெல்ல அணைத்து கொண்டு அந்த காட்சியை அனு அனுவாக ரசித்தனர்  இருவரும்....

என்ன தோண்றியதோ, திடீரென்று அவள் முகத்தை கையில் ஏந்தியவன்

“இந்த இயற்கை சாட்சியாக நான் கொடுக்கும் முதல் காதல் பரிசு இது கண்மணி... மறுக்காதே... “ என்றவன் அவள் செவ்விதழை சிறை பிடித்து அழுந்த முத்தமிட்டான்....

அழுந்த அழுந்த முத்தமிட்டான்...

அந்த முத்தத்திலயே அவன் காதலை எல்லாம் அவளிடம் கொட்டிவிட துடித்தது புரிந்தது அவளுக்கு....

அவளும் அவன் முத்தத்தை ரசித்தவாறு கிறங்கி போய் அவன் சட்டையை இறுக்கி பிடித்து கொண்டாள்....

அந்த ஆதவனும் அந்த காதல் காட்சியை கண்டு வெக்கி சிவந்து வேகமாக மறைந்தான்....

அப்படியே மெய் மறந்து இருந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று மனமே இல்லாமல் அவளை விலக்கினான்...

அவளும் வெக்கி சிவந்து அவனை விட்டு தள்ளி நின்றாள்...

அவளையே குறும்பாக பார்த்தவன் இருள் சூழ ஆரம்பித்து இருக்க

“ஓகே ரதி.. நாம் இப்ப கிளம்பினால் தான் சரியா இருக்கும்.. இன்னும் அவனுங்க வேறு  எந்த நிலையில் இருக்கானுங்களோ.. வா போகலாம்..

அப்புறம் நம்ம விசயம் நமக்குள்ளயே இருக்கட்டும். .அவனுங்களுக்கு தெரிந்தால் என்னை ஓட்டி எடுத்துடுவானுங்க..

நாம் சென்னைக்கு போய்ட்டு உடனேயே நம் திருமணத்தை எல்லாருக்கும் சொல்லிடலாம்.. “என்றான்...

அவனை பொருத்த வரை அவன் திருமணம் முடிந்து விட்டது.. இப்பொழுது அவள் அவன் மனைவி.. இந்த இயற்கைதான் அதற்கு சாட்சி..”  என்று  நம்பினான்..

தீக்சாவுமே அவன் காதலை  நினைத்து பூரித்து போனாள்..

“இப்படி ஒரு கணவன் காதலன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும்.. “என்று  எண்ணி சிலாகித்துப் போனாள்..

பின் இருவரும் வேகமாக ஆனந்த் இருந்த இடத்திற்கு வர, அபி எதிர்பார்த்த மாதிரியே நால்வரும் மட்டை ஆகி இருந்தனர்...

“இதுக்குத்தான் இவனுங்களை  இதை எடுத்துட்டு வர வேண்டாம்னு  சொன்னேன்... இப்ப பார் எப்படி மட்டை ஆகி கிடக்கறானுங்க... “ என்று திட்டியவாறு காரின் கதைவை திறந்து ஒவ்வொருவராக இழுத்து கொண்டு காரின் உள்ளே போட்டான்...

அவன் பலத்தை கண்டு வியந்து போனாள்....அவனுடைய திடகாத்திரமான உடலும் வலிமையான கரங்களாலும் எளிதாக அவர்களை  இழுக்க முடிந்தது..

நால்வரையும் பின் இருக்கையில்  அமர வைத்து ஒருவர் மீது மற்றவனை  படுக்க வைத்து பின் தீக்சாவை முன்னால் அமர வைத்தான்...

அவளும் முன் இருக்கையில் அமர்ந்து கொள்ள அவன் காரை கிளப்பினான்...

சிறிது துரம் சென்றதும் அதுவரை தெரியாத குளிர் இப்பொழுது தெரிய அரம்பித்தது... கைகளை தேய்த்து கொண்டாள்...

அவள் நடுங்குவதை கண்டு

“ஹோய்.. பொண்டாட்டி.. அதான் குளிருது இல்ல.. என் கிட்ட வந்து உட்கார்.. குளிர் காணாம போய்டும்.. “ என்று கண்ணடித்தான்...  

“ஐய...  நினைப்புதான்... “ என்று அவனுக்கு பழிப்பு காட்ட அவளின் திரண்ட இதழில் அவன் பார்வை சொக்கி நின்றது....

அவன் பார்வையை கண்டு கொண்டவள் கன்னம் சிவக்க, நொடியில் தன்னை மறைத்து கொண்டு

“ஐயோ... நந்தன் அப்புறம் என்னை சைட் அடிக்கலாம்.. முதல்ல ரோட் ஐ பார்த்து காரை ஓட்டுங்க.. “ என்று அவன் முகத்தை சாலையின் பக்கம் திருப்பினாள்..

அவளின் முதல் தொடுகையில்,  மெய் தீண்டலில் உள்ளே  அதிர்ந்து போனான்..

அவளுக்குமே அப்பொழுதுதான் புரிந்தது அவன் முகத்தை தன் கையால்  தொட்டு பேசியது.....

உடனே வெக்கத்தில் கன்னம் சிவக்க, அவளின் கன்ன சிவப்பை கண்டு கொண்டவன் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தினான்...

உடனே அவளை  தன் அருகில் இழுத்து வெக்கத்தில் சிவந்திருந்த அவள் கன்னத்தை தன் இதழால் அழுந்த முத்தமிட்டான்....

அவன் செயலில் திகைத்தவள் அதில் கிறங்கியிருக்க, மனமே இல்லாமல் அவள் முகத்தை விட்டான் சில நிமிடங்கள் பிறகு....

உடனே அவள் இன்னும் நாணி  அவனை விட்டு தள்ளி அமர முயல ,

“ஹோய்.. இன்னும் என்னடி வெக்கம்??.. என் கிட்ட உட்கார்..” என்று அவளை இழுத்து தன் பக்கத்திலயே அமர வைத்து கொண்டு அவள் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டு மறு கையால் காரை இயக்கினான்....

சிறிது தூரம் சென்றதும் இன்னும் அவள் உடல் நடுங்க அரம்பித்தது..

மீண்டும் காரை ஓரமாக நிறுத்தியவன் அவன் அணிந்திருந்த அந்த மொத்தமான டீசர்ட் ஐ கழற்றி அவளை போட்டுக்க சொல்லி கொடுத்தான்...

அவளோ வேண்டாம் என்று  மறுக்க அவன் மிரட்ட பின் வாங்கி அணிந்து கொண்டாள்.. உடலின் குளிர் அடங்கி விட்டது தான்...

ஆனால் சட்டையில்லாமல் வெற்று மார்புடன் இருக்கும் தன் கணவனை காணவும் உள்ளுக்குள் கொதிக்க ஆரம்பித்தது...

தினமும் உடற்பயிற்சி செய்வதால் திரண்டிருந்த வலிய புஜங்களும், கட்டான உடலும் பரந்து விரிந்திருத மார்பும் அவளை கட்டி இழுத்தது...

அவனையே இமைக்க மறந்து ஓரக் கண்ணால் பார்த்தாள் தீக்சா....

“ஹோய் பொண்டாட்டி.. ஓரக் கண்ணால் எல்லாம் என்னை  பார்த்து சைட்  அடிக்க வேண்டாம்.. நேராகவே என்னை சைட் அடிக்கலாம்....

உனக்கு எல்லா உரிமையும் இருக்கு... என்ன??  பார்க்கற மாதிரி சுமாரா இருக்கேனா?? “ என்று கண்ணடித்தான்..

“சீ போங்க நந்தன்..” என்று சிணுங்கியவாறு அவன் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்...

அதில் இன்னும் கிறங்கி போனான் அபிநந்தன்.... பின் மெதுவாக கார் கீழிறங்கி நகருக்குள்  நுழைந்து இருந்தது....

அவளுக்கு பசிக்கிறதா என்று கேட்க அவளோ சந்தோசத்தில் திக்கு முக்காடி போய் இருக்க பசி இல்லை என்று விட்டாள்..

நேராக காரை ஆனந்த் தங்கி இருந்த ஹோட்டலுக்கு செலுத்தினான்... அதற்குள் தண்ணிரை எடுத்து அவர்கள் முகத்தில் அடித்து கொஞ்சம் போதை தெளிய வைத்திருந்தான்....

ஒரளவுக்கு குளிர் அடங்கியிருக்க, தீக்சா அவன்  டீசர்ட் ஐ  கழற்றி கொடுக்க, அவனும் அதை அணிந்து கொண்டு ஹோட்டல் முன்னால் காரை நிறுத்தினான்...

பின் அந்த ஹோட்டல் பணியாள் ஒருவரின் உதவியுடன் ஒவ்வொருவராக அவர்கள் அறையில் கொண்டு போய் சேர்த்து விட்டு மீண்டும் காருக்கு வந்தான்...

பின் தன் காரை கிளப்பி அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றவன்  காரை நிறுத்தி விட்டு கீழிறங்கி இருவரும் உள்ளே சென்றனர்....அவள் கையை தன் கையுடன்  கோர்த்து பிடித்து கொண்டான் அபி...

அவளுடைய அறை எண் எது என கேட்க அவன் அறைக்கு அடுத்தது தான் அவளுடையது...

அந்த தளத்தை அடைந்து இருவரும் ஒன்றாக இணைந்து நடக்க,  பிரிய வேண்டுமே என்று மெது மெதுவாக நடந்தனர் இருவரும்.... அப்படியும்  முதலில் இருந்த அவன் அறை வந்துவிட்டது...

அவள் அவனுக்கு குட் நைட் சொல்லி அவள் அறைக்கு செல்ல முயல எட்டி அவள் கையை பிடித்து கொண்டான் அபி....

“ரதி பேபி... என் கூடவே இருந்திடேன்.. அதான் நமக்கு கல்யாணம் ஆகிடுச்சு இல்ல... ஏனோ உன்னை விட்டு ஒரு நொடி கூட என்னால் பிரிய முடியாது போல இருக்கு பேபி... “ என்றான் ஏக்கமாக

அவளுக்குமே அதே எண்ணம் தான்.. அவனை பிரிந்து எப்படி இருப்பது??.. அவன் கூடவே அவன் கைகளுக்குள்ளயே இருந்திட ஆசைதான்...

இப்ப என்ன செய்வது என்று குழம்பி தவித்து கொண்டிருக்க, அவளை மேலும் தவிக்க விடாமல் குனிந்து  அவளை தன் கைகளில்  அள்ளி கொண்டு அவன் அறைக்குள் சென்று  கதவை மூடினான் அபிநந்தன்..! 


Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!