பூங்கதவே தாழ் திறவாய்-21
இதழ்-21
தன் கணவனின் அணைப்பில் சொர்க்கத்தை கண்டவள்
கலைத்திருந்தாள்...
மீண்டும்
கண் விழித்து மணியை பார்க்க, அது மதியம் 12 என காட்டியது....
அருகில்
பார்க்க,
அவள் கணவனோ தன் நாடகத்தை அறங்கேற்றிய களைப்பில் மீண்டும் அசந்து உறங்கி கொண்டிருந்தான்....
“நந்தன்..
எழுந்திருங்க .. மதியம் மணி 12 ஆச்சு...பசிக்குது எனக்கு..” என்று தன் கணவனை தட்டி
எழுப்பினாள் தீக்சா...
மெல்ல
கண் விழித்தவன் மீண்டும் அவளை அணைத்து கொள்ள முயல அவளோ அவன் கைக்கு சிக்காமல்
நழுவினாள்....
“நந்தன்...
விளையாண்டது போதும்...நான் குளிக்க போகிறேன்... என் ட்ரெஸ் எல்லாம் என் அறையில் இருக்கு..
ப்ளீஸ் போய் எடுத்து வாங்களேன் ..“ என்றாள் கொஞ்சலாக…
பின்
மீண்டும் ஏதாவது அவன் வம்பு செய்வான் என்று குளியல் அறைக்குள் புகுந்து
கொண்டாள்....
அவனும்
சிரித்து கொண்டே எழுந்து ரெப்ரெஸ் ஆகினான்..
பின்
தீக்சாவின் அறையை காலி பண்ணி விட்டு அவள் பொருட்களை எல்லாம் தன் அறைக்கு மாற்றி
வந்தான்.. தீக்சாவும் குளித்து விட்டு வர, மதிய உணவை அறைக்கே ஆர்டர் பண்ணி உணடனர்...
சாப்பிட்டு
முடித்ததும் மீண்டும் இருவரும் தங்களை பற்றி பேச ஆரம்பித்தனர்...
கல்லூரி
நாட்கள் , கனவு, இலட்சியம் என்று எல்லாவற்றையும் அந்த நாளில்
பேசினர்... இடையிடையே தன் கணவனின் காதல்
லீலைகளும் சேர்ந்து கொள்ள இருவருக்குமே அந்த நாள் சொர்க்கமாக இருந்தது....
மாலை 5 மணி அளவில் ஆனந்த் கால் பண்ணி இருக்க ஸ்பீக்கரில்
போட்டான் அபி..
“டேய்
மச்சான்... வெளில போகலாம் வர்ரியா?? “ என்றான்..
“
ஏன்டா படுபாவி.... நேற்று அடித்த சரக்கு இப்பதான் இறங்குச்சா.. 5 மணிக்கு போன் பண்ற?? “ என்றான் அபி சிரித்து கொண்டே
“ஹீ
ஹீ ஹீ எப்படி மச்சான் கரெக்டா கண்டு
பிடிச்சிட்ட?? .. நல்ல பாரின் சரக்கு போல .. அந்த கிளைமேட் வேற சூப்பரா இருக்க லிமிட்
இல்லாம குடிச்சிட்டோம்.. தேங்க்ஸ் டா
மச்சான்.. எங்களை பொறுப்பா கொண்டு வந்து சேர்த்ததற்கு... “
ஆமா
தீக்சா பார்த்துட்டாளா?? “ என்றான் ஆனந்த்
“பார்த்தாளாவா?? இனிமேல் இந்த மாதிரி
தண்ணி வண்டி பிரண்ட்ஸ் கூட எல்லாம் வெளில போகக் கூடாதுனு புலம்பி கிட்டே வந்தா...
அவதான் உன்னைய தூக்க ஹெல்ப் பண்ணினதே.. “ என்றான் தீக்சாவை பார்த்து சிரித்து
கொண்டே
“ஹீ
ஹீ ஹீ.. சாரி டா மச்சான்.. இனிமேல் இது மாதிரி நடக்காது... “
“ஆஹா...
இதையே தான் போனவாரம் சென்னையில ஒரு
பார்ட்டியில குடிச்சிட்டு மட்டையானப்ப சொன்ன ?? “
“
ஹீ ஹீ ஹீ அது சென்னை.. இது டெல்லி.. சென்னை பிராமிஸ் சென்னையில மட்டும்தான்
செல்லுபடியாகும்... சோ.. இது டெல்லியோட பிராமிஸ்... டெல்லியில் இது மாதிரி
நடக்காது... “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தான்
ஆனந்த்..
“என்னமோ...
எப்பதான் திருந்த போறியோ?? “ என்று அலுத்துகொண்டான்
“திருந்தறதா?? அதெல்லாம் சான்சே இல்ல மச்சான்... சரிடா..
என்ன வர்ரியா?? ஒரு
ரவுண்ட்ஸ் போய் சுத்திட்டு வரலாம்.. “
“இல்லடா....
நான் வரலை..டயர்டா இருக்கு... நீங்க போய்ட்டு
வாங்க.. “
“என்னது
டயர்டா இருக்கா??...அப்படி என்ன வெட்டி முறிக்கிற வேலை செஞ்ச மச்சான்?? “ என்றான் ஆனந்த்...
“ஹீ
ஹீ ஹீ அதெல்லாம் வெளில சொல்ல முடியாது டா... நீ கிளம்பு .. “ என்று தீக்சாவை
பார்த்து கண் சிமிட்டினான்...
“சரி
நீ வராட்டி போ.. நான் தீக்சாவை கூப்பிடறேன்.. “
“ஹா
ஹா அவளும் வரமாட்டா.. அவளும் டயர்டா இருக்கா... “ என்றான் அபி
“ஹே...
அவ வரமாட்டா, அவ டயர்டா இருக்கானு நீ எப்படி சொல்ற?? “ என்றான் ஆனந்த் சந்தேகமாக
தன்
நாக்கை கடித்து கொண்ட அபி,
“ஹீ
ஹீ மதியம் லஞ்ச் ல பார்த்தேன் டா.. நேற்று நம்ம கூட சுத்தினதில டயர்டா ஆய்ட்டாளம்.
அதனால் வெளில போகலைனு சொல்லிட்டா... “ என்று சொல்லி சமாளித்தான்...
“ஹ்ம்ம்
சரி டா.. அப்ப நாங்க போய்ட்டு வர்ரோம்.. டேக் கேர்... “ “ என்றவாறு போனை வைத்தான்...
பின் இருவரும் தங்கள் பேச்சை தொடர, 7 மணி அளவில் கிளம்பி வெளியில் வாக் சென்றனர்...
அந்த
இரவு வெளிச்சத்தில் தீக்சா தேவதையாக ஜொலிக்க அவளுடன் கை கோர்த்து அந்த சாலையில்
நடப்பதே சுகமாக இருந்தது அபிநந்தனுக்கு...
ஒரு
இடத்தில் நின்றவன் அவள் கையை எடுத்து அவன் கன்னத்தில் வைத்து கொண்டு
“ரதி
பேபி.. இந்த உலகத்துலயே ரொம்ப சந்தோசமனவன் னா அது நான் தான்.. ரொம்ப ரொம்ப சந்தோசமா
இருக்கேன்.. ஐ லவ் யூ.. தேங்க் யூ சோ மச்... என் வாழ்வில இப்படி ஒரு வசந்தத்தை
காட்டியதற்கு.... “ என்று அந்த இரவிலும் அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அபிநந்தன்..!
Comments
Post a Comment