பூங்கதவே தாழ் திறவாய்-22
இதழ்-22
அடுத்த நாள் திங்கள்
கிழமை கான்பிரன்ஸ்க்கு இருவரும் ஒன்றாக வர, ஆனந்த் அவர்களை ஒரு
மாதிரியாக பார்த்தான்....
“என்ன
டா அப்படி பார்க்கற??” என்றான் அபி சிரித்துகொண்டே
“டேய்
மச்சான்.. உன்கிட்ட ஏதோ ஒரு மாற்றம் தெரியுதுடா .. திடீர்னு ஒரே நாள்ல குடும்பஸ்தன்
ஆகிட்ட மாதிரி இருக்க?? “ என்றான் சந்தேகமாக
அதை
கேட்டு அபிக்கு புரை ஏற தீக்சாவோ வாயை முடிகொண்டு கிழ குனிந்து கொண்டு சிரித்தாள்
அபி
அவனை பார்த்து முறைக்க
“ஆங்
கண்டு பிடிச்சிட்டேன்.... பொண்ணுங்களை கண்டாலே எட்டு அடி தூரம் தள்ளி நிக்கிறவன் இன்னைக்கு தீக்சா வை
கூட்டிகிட்டு வந்திருக்கிறனா எங்கயோ இடிக்குதே... “ என்றான் கன்னத்தில் கை வைத்து
யோசித்தவாறு..
“ஹ்ம்ம்ம்
எங்கயும் இடிக்கலை.. நீ வா கான்ப்ரன்ஸ் ஸ்டார்ட் ஆக போகுது..”
என்றவாறு அவனை அதிகம் யோசிக்க விடாமல் உள்ளே
தள்ளி கொண்டு சென்றான் அபி...
இப்பொழுது
அனைவரும் பழகியவர்கள் என்பதால் அவர்கள் கேங்க் மட்டும் ஒரு வரிசையில் அமர்ந்து கொண்டனர்...
அபி
தீக்சாவின் கையை பிடித்து தன் அருகிலயே அமர்த்தி கொணடான் யாருக்கும் தெரியாமல்...
கான்பிரன்ஸ்
நடக்கும் பொழுதும் தீக்சா கவனமாக கவனித்து கொண்டிருக்க, அபியோ அவள் கையை பிடித்து
விளையாண்டு கொண்டிருந்தான்..அவள் திரும்பி முறைக்க, கண்
சிமிட்டி அவளை மேலும் சிவக்க வைத்தான்....
இப்படியாக இரண்டு நாட்கள் ஓடியிருந்தன.. அபி தன் காதல் + அன்பு
மழையால் தீக்சாவை திக்கு முக்காட வைத்திருந்தான்...
கான்பிரன்ஸ்
முடிந்து அறைக்கு திரும்பியதும் ஆரம்பித்து விடுவான் தன் ஆட்டத்தை... தன்
கணவனின் சீண்டலை சமாளிக்க முடியாமல்
திணறினாள்...அவன் குறும்புகளை எல்லாம் ரசிக்கவும் செய்தாள்....
தேனிலவு
தம்பதிகளை போன்று அவர்கள் இருவரும் தங்களின் திருமணத்தையும் கொண்டாடி வந்தனர்...
அன்று
இரவு தீக்சா தாஜ்மஹால் பார்க்க வேண்டும் என்று சொல்ல, இருவரும் அடுத்த
நாள் கான்பிரன்ஸ் ஐ கட் பண்ணிவிட்டு ஆக்ரா சென்றனர்...
அந்த தாஜ்மகாலின் பிரமாண்டத்தை இருவரும் ஒருவரோடு ஒருவர் கை கோர்த்து ரசித்து பார்க்க இருவருக்குமே ஒரு மாதிரி இருந்தது...
தன்
மனைவிக்காக இவ்வளவு பெரிய கல்லறையை ஷாஜகான் கட்டியிருக்கிறான் என்றால் தன் மனைவியை
அவன் எவ்வளவு காதலித்து இருக்க வேண்டும் என்று புரிந்தது...
முன்பென்றால்
காதல் என்றால் சிரித்திருப்பர் இருவருமே..
“காதலுக்காக
யாரும் இவ்வளவு செய்வார்களா?? அது சும்மா பொய்.. “என்று
பரிகாசம் செய்திருப்பார்கள் இருவரும்...
ஆனால்
இன்று இருவருமே காதல் வயபட்டிருக்க இப்பொழுதுதான் புரிந்தது காதல் என்பது எவ்வளவு பெரிய சக்தி..
அந்த
காதல் ஒருவரை எந்த அளவுக்கு ஆட்டி
வைக்கும் என்பதை இருவருமே உணர்ந்து
அனுபவித்து வருகின்றனர்..
அப்படியே
அந்த தாஜ்மஹாலை நீண்ட நேரம் ரசித்து
இருந்தவர்கள் பின் ஒன்றாக இணைந்து செல்பி எடுத்து கொண்டனர்...
அதை
பார்த்து முடித்ததும் ஆக்ராவின் இன்னும் சில இடங்களையும் பார்த்து விட்டு டெல்லி
திரும்பினர்...
திரும்பும்
வழியில் அந்த கோகுலத்து நந்த கோபாலன் பிறந்த மதுராவிற்கும் சென்றனர்....
எங்கு பார்த்தாலும் அந்த நந்த கோபாலனின் சிறு வயதை
எடுத்து காட்டும்
பல கோவில்கள், ஒவ்வொரு கோவிலிலும் கோபாலனின் சிறுவயது
சித்திரங்கள், எங்கும் சுற்றி திரியும் மாடுகள் என இன்னுமே அந்த
கண்ணன் அங்கு இருப்பதை போன்ற பிரம்மிப்பை தூண்டியது...
அங்கிருந்த
ராதா கிருஷ்ணா கோவிலுக்கு சென்றவர்கள்
அங்கு இருந்த
நந்த
கோபாலனையும் ராதா வையும் பார்த்த பொழுது
இருவருக்குமே ஒரு மாதிரி பிரமிப்பாக இருந்தது....
கண்ணன்
மீது கொண்ட ராதாவின் காதல், அவர்கள் இருவரும் காதல் வயபட்டு இருப்பது அந்த சிலைகளை பார்க்கும் பொழுது தெரிந்தது....
அந்த
நந்தன் ராதாவை போலவே தங்கள் காதலும் அவர்கள் வாழ்க்கை முழுவதும் நிறைந்து ஒருத்தரை
விட்டு ஒருத்தர் பிரியாமல் இருக்க வேண்டும் என்று உள்ளுக்குள் வேண்டி கொண்டனர்...
மதுராவை விட்டு வெளி வரும்பொழுது இருவர் மனமும் நிறைந்து இருந்தது...
நந்தன்
தனியாக கார் எடுத்து சென்று இருந்ததால் ஆங்காங்கே
நிறுத்தி முக்கிய இடங்களை பார்வை இட்டு
வந்தனர்...
திரும்பும்
பொழுது நன்றாக இருட்டி இருக்க, தீக்சா அவன் அருகில் நெருங்கி அமர்ந்து அவன் கைக்குள் தன் கையை வைத்து
கொண்டு அவன் தோள் மீது சாய்ந்து கொண்டாள்....
அபிக்குமே
அவளின் அந்த செயல் ரொம்ப பிடித்திருக்க, அந்த இரவு வெளிச்சத்தையும் தன் மனைவியையும்
ரசித்தவாறு மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் டெல்லியை நோக்கி விரைந்து
கொண்டிருந்தான்...
இரவு டெல்லியை அடைந்ததும், இரவு உணவை முடித்து தங்கள் அறைக்கு திரும்பினர்...
ஏனோ
தீக்சாவிற்கு மனம் பாரமாக இருந்தது அந்த
தாஜ்மஹாலை பார்த்ததில் இருந்தே...
அவளின்
வாட்டத்தை கண்டு கொண்டவன் அதை பற்றி கேட்க
“நந்தன்...
நீங்க எப்பவும் என் கூடவே இருக்கணும்... என்னை விட்டு பிரிஞ்சுட மாட்டீங்க இல்ல..”
என்றாள் அவன் மார்பில் சாய்ந்து கொண்டு
“மாட்டேன்
கண்மனி.. அப்படி பிரிஞ்சேன் என்றால் அது என் உயிர் இந்த மண்ணைவிட்டு போகும் நாள்தான்..” என்றான்
தழுதழுத்தவாறு...
அவன்
வாயை தன் விரல் கொண்டு மூடினாள் அவள் கண்களின் ஓரமும் நீர் திரண்டு இருந்தது ...
அந்த
சூழ்நிலையை மாற்றி அவளை இயல்பாக்க எண்ணியவன்
“ஆமா...
அது என்ன என்னை நந்தன் னு கூப்பிடற?? “ என்றான் சிரித்தவாறு...
“ஹா
ஹா ஹா.. அபி எல்லாரும் கூப்பிடுவது...அந்த ராதாவின் நந்த கோபாலன் மாதிரி இந்த தீக்சாவின் நந்தன்
நீங்க... நந்தன் என் நாதன்... அதான்.. “
என்றாள் கண் சிமிட்டி சிரித்தவாறு...
“சோ
ஸ்வீட் ஆப் யூ ரதி பேபி... “ என்று அவளை அணைத்து கொண்டான்...
“ஆமா...
நீங்க ஏன் என்னை ரதி னு கூப்பிடறீங்க?? “ என்று அவன் மார்பில்
கோலமிட்டாள்...
“ஹா
ஹா ஹா பிரதிக்சா ல இருக்கிற ரதி தான் எனக்கு ஸ்பெஷல்...அதோடு எந்த பொண்ணையும்
ஏறெடுத்தும் பார்க்காத என்னையும் மன்மதனாக மாற்றிய என் ரதி நீ... அதான்... “ என்று
கண் சிமிட்டி சிரித்தான்...
அவளும்
இணைந்து சிரித்தாள்...
பின்
தன் எதிர்கால கனவுகளை பற்றி சொல்ல, அப்பொழுதுதான் குழந்தை பற்றி பேச்சு வந்தது...
“ரதி
பேபி.... எனக்கு பொண்ணுதான் பிடிக்கும்.. உன்னை மாதிரி க்யூட்டா துறுதுறு னு
சுறுசுறுப்பா என்னை மாதிரி ஸ்மார்ட்டா நல்ல உயரமா வருவா என் மக..
.நீயெல்லாம்
வேஸ்ட். அவ முன்னாடி நிக்க நீயெல்லாம் யோசிக்கணும்... எப்படி வளர்க்க போகிறேன்
பார் என் பிரின்சசை.... ஊரே வாயில விரலை வச்சு பார்க்கும்...
நீ
மட்டும் சீக்கிரம் என் பொண்ணை பெத்து கொடு டீ ....அப்புறம் பார்... ” என்று அவள்
கன்னத்தை பிடித்து இரண்டு பக்கமும்
ஆட்டினான் அபிநந்தன்....
அவனையே
இமைக்காமல் பார்த்திருந்தாள் காதலுடன் தீக்சா....
திடீரென்று குழந்தையின் அழுகுரல் கேட்கவும் திடுக்கிட்டு
விழித்தாள் தீக்சா... பழைய நினைனவுகளில் இருந்து மீண்டவள் பசிக்காக அழும் தன் மகளை
அள்ளி மார்போடு அணைத்தவாறு அவளுக்கு பாலூட்டினாள்....
தன்
மகளின் தலையை வருடியபடியே
“எப்படி
நந்தன் உங்களால என்னை மறக்க முடிந்தது?? கடைசி வரைக்கும் என் கூடவே இருப்பேன் னு சொல்லிட்டு ஒரு வாரத்துல என்னை விட்டுட்டு போய்ட்டீங்களே??
இதுக்குத்தான்
அவ்வளவு அவசர அவசரமா காதலித்து கல்யாணம் பண்ணி எல்லாம் நடந்து அதே அவசரத்தோடயே
என்னையும் மறந்துட்டீங்களே... எப்படி உங்களால முடிந்தது?? “ என்று மருகினாள் மனதுக்குள்...
ஆனால்
வெளியில் எதுவும் காட்டி கொள்ளமல் கண்ணோரம் கரித்த நீரை கூட உள்ளிலுத்து கொண்டு
தன் மகளை , தன் காதல் கணவனின் உயிரை ஆசையோடு பார்த்தாள்...
“நீங்க
மாறினாலும் நான் மாறலை நந்தன்.. நீங்க கேட்ட மாதிரியே உங்கள மாதிரியே உங்க பொண்ணை
பெத்துட்டேன்... “ என்று விரக்தியாக
சிரித்து கொண்டாள் தீக்சா...
Comments
Post a Comment